recent posts...

Friday, December 29, 2006

சதாம் தூக்கிலிடப்பட்டார் - அவசர சர்வே



சதாம் உசேன் Friday 10pm EST மணி அளவில் தூக்கிலடப்பட்டார்.

மேலும் விவரங்கள் இங்கே: Click here to read the news

என்னதான் அவன் ஒரு சர்வாதிகாரி என்று தெரிந்தாலும், பல உயிர்களை கொன்றவன் என்று தெரிந்தாலும், அவனை தூக்கிலிட்ட செய்தி ஒரு துக்கம் கலந்த பயம் கலந்த ஒரு கன நிலையை தந்தது. சந்தோஷம் வரவில்லை.
இதே சதாம் நமது இனத்தவரை கொன்று குவித்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நாளை ஈரான் அதிபருக்கும் இன்னும் மற்ற அமெரிக்க அரசை அடிவருடாத புரட்சி தலைவர்களுக்கும் இதே நிலை வரும் என்பதில் ஐயம் இல்லை.

சதாம் தூக்கிலிடப்பட்டது கண்டனுத்துக்குரியதோ? atleaast, extradict செய்திருக்கலாமோ?

உங்களுக்கு மனநிலை எப்படி இருக்கு?

அதுவே இன்றைய அவசர சர்வே!

Wednesday, December 27, 2006

2006ன் சிறந்த பதிவர் முடிவுகள். வெற்றி பெற்றவர்...

Finally, 2006ன் சிறந்த பதிவருக்கான இறுதி கட்ட வாக்கெடுப்பு முடிவடைந்தது.

(ட்ரம்ஸ் sound effect இன் த பேக்கிரவுண்ட்.. டம் டம் டம் டம்..)

வாக்கில் வெற்றி பெற்று சர்வே-சனின் '2006 சிறந்த பதிவர் பதக்கம் பெறுபவர்':
1. வெட்டிப்பயல் (http://vettipaiyal.blogspot.com)
இவர் 28% வாக்குகள் பெற்றிருக்கிறார்.

வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் என்ற 'பாலாஜி மனோகரன்'.

பல க்ரூப்ஸ் அடங்கிய நம் பதிவுலகில், பல க்ரூப்புகளாலும் ரசிக்கப் படுவது ரொம்ப பெரிய விஷயம். You are being widely-read and widely-appreciated.
So, இன்றை போலே என்றும் பல்சுவையுடன், உங்கள் படைப்புகள் தொடரட்டும்.
2007ல் வெட்டியாக சிலவும், பிரயோஜனமாக பலவும் கொடுங்கள்.

பரிசுப் பணமான $100, வெட்டிப்பயல் பாலாஜி மனோகரனின் சம்மதத்துடன் உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பப் பட்டள்ளது.

தற்சமயம் இந்த 'virtual' பதக்கம் உங்களுக்காக:



இவருக்கு அடுத்த படியாக 24% வாக்குகள் பெற்று இருப்பவர்:
2. சந்தோஷ பக்கங்கள் (http://santhoshpakkangal.blogspot.com)
உங்களுக்கான பதக்கம் இதோ:



மூன்றாவதாக, 20% வாக்குகள் பெற்று இருப்பவர்:
3. செந்தழல் ரவி (http://tedujobs.blogspot.com)
உங்களுக்கான பதக்கம் இதோ:



வாழ்த்துக்கள் சந்தோஷ், ரவி.

டாப்-6ல் இடம் பெற்ற நண்பர்கள் WeThePeople, குமரன், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.



வாக்களித்த நெஞ்சங்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் சீரியலில் நேர விரையம் செய்த அன்பர்களுக்கும் நன்றீஸ் :)

Tuesday, December 26, 2006

மாதவன் கலக்கல்ஸ்

அமெரிக்க வாழ் NRI சுட்டிப்பயல் மாதவன், U.S state capitals ஐ, டாண் டாண் என்று சொல்லும் குறும்படம் கீழே.

இந்த வயசுலயே கலக்கரான் மாதவன்.

Note: Dear மாதவனின் Dad,
அப்படியே, பையனுக்கு திருக்குறள், இந்தியா state capitals இதையும் சொல்லிக் கொடுத்து ஒரு குறும்படம் ஏத்திடுங்க சார்:)



பி.கு:
1. இதை பார்க்கும் மற்ற பெற்றோர்கள், தங்கள் மாதவன்களையும், மாதவிகளையும் ரெடி பண்ணுங்கோ. அமெரிக்க ஸ்கூல்ஸ்ல நம்ம பயலுவல்ஸ் ராஜ்ஜியம் தான்னு நண்பன் சொல்லிக் கேட்ட ஞாபகம். படம் பாத்தா, கண்டிப்பா அப்படித்தான் தெரியுது.

2. வந்தது வந்தீங்க, அப்படியே 2006 சிறந்த பதிவர்க்கு ஓட்டு போடலன்னா போட்டுட்டு போயிடுங்க. ரிஸல்ட்ஸ் கூடிய விரைவில்: Click here

நன்றி!

Saturday, December 23, 2006

2006ன் சிறந்த திரைப்படம் சர்வே!!









Happy Holidays





வாங்க மக்கள்ஸ்.

கீழ கட்டம் கட்டி, 2006ல் வந்த சில நல்ல படங்களை, ஏத்தி வச்சிருக்கேன்.

இவற்றுள் உங்கள் மனதுக்கு சிறந்தது எது என்று யோசித்து, சூஸ் செய்து, க்ளிக்கவும்.

நம்ம ரசனை எப்படி இருக்குன்னு பாப்போம்.

ஏதாவது நல்ல படம் லிஸ்ட்ல மிஸ்ஸிங்னா பின்னூட்டத்துல சொல்லுங்க.

இந்த வருட படங்களில் என் மனதுக்கு பிடித்தது - ஈ, வே.வி, இ.அ.23.பு, சி.பே, சி.ஒ.கா...

ஓ.கே. உங்களுக்கு எப்படி?

ரெடி, ஜூட்!



படங்கள் ஸ்பான்ஸர்: IndiaGlitz

மெrry Christமஸ் & எ ஹாppy New யிar!

பி.கு:
2006ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. வாக்களிக்க கடைசி நாள்: 28-Dec-06 8.00 AM IST. இங்கே க்ளிக்கி வாக்களிக்கலாம்.

Friday, December 22, 2006

தமிழுக்கு தினம் தினம் எத்தனை நிமிடங்கள்?



நண்பர் இலவசகொத்தனார் அவரின் Bye Bye பதிவில், 24 மணி நேரமும் தமிழ் மணமே கதி என்று இருப்பதாக கூறி இருந்தார்.

பதிவு எழுதுவதும், அதை படிப்பதும், சிலருக்கு 'வியாதி' போலவே ஆகி விட்டது (நான் உள்பட).
தமிழ் வளர்ச்சிக்கு இது நல்ல விஷயம் என்றாலும், நம் சொந்த வாழ்க்கையில் செய்ய வேண்டிய மற்ற விஷயங்களுக்கு இரண்டாம் நிலை கவனிப்பு தான் கொடுக்கப்படுமோ?

என்னை பொருத்த வரை ஒரு நாளில் வீட்டில் இருக்கும் பொழுது சராசரி 1 to 2 hours செலவாவுது. அலுவலக நேரத்திலும் 1 hour இதில் செலுத்தப் படுகிறது.

எல்லாரும் இப்படிதானா?

இந்த திடீர் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே இன்றைய சர்வே :)

க்ளிக்குங்கோ...




பி.கு:
உயிருக்கு போராடும் குட்டிச் சிறுமிக்கு உதவ இங்கே க்ளிக்குங்கள். புத்தாண்டை ஒரு நல்ல காரியம் செய்து இனிதே துவக்குங்கள். Make a Difference!!!

Click here to vote - 2006ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்கெடுப்பு

Click here to read சர்வேஸனின் குறும்பிய காலங்கள்

Merry Christmas and Happy New Year!

Thursday, December 21, 2006

2006'ன் சிறந்த பதிவர் - இறுதி கட்ட சர்வே ( Tamil Blogger of the year FINALS )



நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த "2006'ன் சிறந்த பதிவர்" சர்வேயின், இறுதி கட்ட வாக்கெடுப்பு (FINALE) விவரங்கள் கீழே.

முதல் கட்ட வாக்கெடுப்பு விவரங்கள் காண இங்கே சொடுக்கலாம்: சர்வே - I

ஐந்து பிரிவாக பிரித்து வாக்கெடுப்பு நடத்தியதில், ஒவ்வொரு பிரிவிலும் ஏறத்தாழ 350 வாக்குகள் பதிவாயின.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த பதிவர்களை, சூஸி, கீழே FINALs சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. (அடைப்புகுறியில் இருப்பது அந்த பிரிவில் அவர்கள் பெற்ற வாக்கின் % )

அ. வெட்டிப்பயல், சந்தோஷ பக்கம் ( தலா 32% )
ஆ. பெனாத்தல் சுரேஷ் (37%)
இ. குமரன் (30%)
ஈ. செந்தழல் ரவி (39%)
உ. WeThePeople (33%)

மேலே உள்ள top-6 பதிவர்களுக்கும், முதல் கட்ட பதிவில் இடம்பெற்ற மற்ற பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள். கள்ள ஓட்டு போட்ட ரசிகர் படைக்கும் நன்றிகள். (தேர்தல் அதிகாரி 60+ கள்ள ஒட்டுக்களை களை எடுத்ததாகச் சொன்னார் :) ). முதல் கட்ட வாக்கெடுப்பு நடத்த உதவிய மூவர் குழுவுக்கும் நன்றி!

வாக்கெடுப்பு பற்றி விளம்பரம் கொடுத்து பாப்புலர் ஆக்கிய பொன்ஸ், புலிகேஸி, அ.மு.க விர்க்கும் நன்றீஸ் :)

2006'ன் சிறந்த பதிவரை தேர்ந்தெடுக்க கீழே சொடுக்கி உங்கள் வாக்கை பதியுங்கள்.

Happy Christmas and a very prosperous New Year every one!
இந்த புத்தாண்டு நீங்கள் விரும்பியதை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஆமென்!

//வாக்கெடுப்பு முடிந்தது - விவரங்கள் இங்கே - Click here//

[ மேல் கட்டத்தில் இல்லாத ஒரு பதிவர்தான் சிறந்த பதிவர் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அந்த பதிவரின் பெயரை பின்னூடுங்கள். மக்கள்-ஸ் choice அவார்ட், தனியா ஒண்ணு கொடுத்திடலாம் :) ]

Top-6'ல் உள்ள வெட்டிப் பயல், சந்தோஷ பக்கம், பெனாத்தல் சுரேஷ், குமரன், செந்தழல் ரவி, Wethepeople கீழே உள்ள பதக்கத்தையும், இந்த பக்கத்திர்க்கான லிங்கையும் உங்கள் template'ல் ஏற்றிக் கொண்டு ( template இடமளித்தால் ) இந்த சர்வேக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் எழுத்துப் பணி இந்த வருடம் போல் இனி வரும் வருடங்களிலும் தொடர வாழ்த்துக்கள்!!!



Top-25ல் இடம் பெற்ற நண்பர்கள் கீழே உள்ள பதக்கத்தை அவர்கள் பதிவில் போடுங்கள் (மனமிருந்தால், இடமிருந்தால்).




பி.கு:

உயிருக்கு போராடும் குட்டிச் சிறுமிக்கு உதவ இங்கே க்ளிக்குங்கள். புத்தாண்டை ஒரு நல்ல காரியம் செய்து இனிதே துவக்குங்கள். Make a Difference!!!

Click here to read சர்வேஸனின் குறும்பிய காலங்கள்

Click here to read ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடித்தது?

அப்பாடா, ஒரு பெரிய பொறுப்பு முடிந்த மாதிரி இருக்கு. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் 28-Dec-06 8.00 AM IST அன்று அறிவிக்கப்படும்.

Happy Clicking!!!

Tuesday, December 19, 2006

சர்வே-சனின் - குறும்பிய காலங்களும், அதர்க்கான சர்வே-யும்...

குறும்பு என்றவுடன் நினைவுக்கு வருவது பள்ளிக் காலம் தாங்க.

ஒன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்போது பெரிதாக குறும்பு செய்த ஞாபகம் ஒன்றும் இல்லை.
மிஞ்சி மிஞ்சி போனா, பக்கத்து பென்ச் கனகராஜ், 'முச்சா' போக வெளியில் போனால், அவன் ஸ்லேட்டில் எச்சை துப்பி துடைத்து பளிச்சாக்கி ஒரு குரங்கு வரைந்து கீழே அவன் பேரை எழுதுவது ஒன்றே நினைவுக்கு வருகிறது.

ஆறாவது, ஏழாவது படிக்கும்போது குறும்பு ஒரு படி மேலே போய் physical attack லெவலுக்கு வளந்தது. எதிர் பெஞ்ச் கனகராஜ், டீச்சர் கேள்வி கேட்க்கும்போது எழுந்து நின்று கை கட்டி பவ்யமா பதில் சொல்வான். அவன் உட்காரும் முன், அவன் பெஞ்சில் சாக்பீசால் கிறுக்கி வைத்து விடுவோம். உட்கார்ந்தவுடன் அவன் நீல நிஜாரில், நாங்கள் போட்ட map ஒட்டிக் கொள்ளும். எதையோ சாதித்ததை மாதிரி, கடைசி பென்சில் நானும், ரமணியும், ஜானும் புளகாங்கிதம் அடைவோம்.

எட்டாவது, ஒம்பதாவது படிக்கும்போது அறும்பு மீசையுடன் திரிந்த காலம். சிவகாமியையும், வித்யாவையும், நிர்மலாவையும் கவர கடைசி பென்ச் கோஷ்டிகள் என்னென்னவோ செய்த காலம். சேஷ்டைகள் அதிகம் செய்த காலம் இதுதானோ?
pant போட தொடங்கிய காலம்.
tuck-in எல்லாம் பண்ணி, ஷூ, பெல்ட் எல்லாம் போட்டு வளைந்து வரும் முதல் பென்ச் கோஷ்டி un-fair advantage உடன் பெண்டு பிள்ளைகளை வசீகரம் செய்த காலம்.
அப்பெல்லாம் பெண்டுகளை attract பண்ண நம்மால முடிந்தது சில 'வில்லன்' ஐடம்ஸ் செய்வதுதான்.
Science வாத்தியார் கேள்வி கேட்டால் முன் பென்சு சுந்தரம் எழுந்து பதில் சொல்வான். அவன் பதில் சொல்லி முடிப்பதர்க்குள், கடைசி பென்ச் வில்லன்ஸ் ஆகிய என் கோஷ்டி, பேப்பர் ஒன்றை பெரிசா கிழித்து வால் செய்து, அதை சுந்தரின் belt loop'ல் மாட்டி விடுவோம்.
வகுப்பு முடிந்ததும், சுந்தரம் வாலுடன் திரியும் அந்த சில நிமிடம், சாதனையாளர்களாகிய எங்கள் மேல் சில பெண்டுகள் பார்வை விழும்.
ஹ்ம்ம். அதெல்லாம் நல்ல நாட்கள்.

தமிழ் சுட்டு போட்டாலும் வராது. தமிழ் ஆசிரியை, கடைசி பென்ச் வாசிகளை, எருமை, நாயே, பண்ணி, கழுதை, எருமை, நாயே, பண்ணி என்று மாறி மாறி பாசத்துடன் விளித்த காலம்.
கணக்கு வாத்தியார், க்ளாஸில் குறும்பு அதிகம் செய்தால், வகுப்பின் முன்னால் வரவழைத்து, குனியச் சொல்லி பத்து சாத்து சாத்துவார். ஆனால், வலிக்காது. அடி வாங்கும்போது, குனிந்த நிலையில் பெண்டுகளை பார்த்து ஒரு Rambo சிரிப்பு சிரித்து, 'இதெல்லாம் எம்மாத்திரம்' என்ற ரேஞ்சில் திரிந்த காலங்கள்.

பத்தாவதில், படிப்பு மேல் கொஞ்சம் பயம் வந்த காலம். பத்தாவது பெயில் ஆன சில கேசுகள், தற்கொலை செய்து கொண்டதாக ஷோபனா-ரவி சொல்லிக்கேட்ட காலம். ஒரு கிலியுடன் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க முயன்ற காலம்.
குறும்பு செய்வது கொஞ்சம் மறந்து, படிப்பிலும், விளையாட்டிலும் முழு கவனம் செலுத்திய காலம்.
கப்பில் மாதிரி போலிங்கும், ஸ்ரீகாந்த் மாதிரி பேட்டிங்கும், மரடோனா மாதிரி கோலும் போட முயன்ற காலம். பெக்கரும், ஸ்டெபியும் பாட புத்தகத்தின் அட்டையை அலங்கரித்த காலம். Laos, Burkina Faso stamps முதல் பென்ச் கோஷ்டீஸ் கலெக்ட் செய்த காலம்.
சில பெண்டுகளும் அதை செய்யும்.
பெண்டுகளிடம் இல்லாத burkina faso வும், laos வும், பயலுவளிடம் இருந்து exchange-offerல் வாங்கி இனாமாக பெண்டுகளுக்கு கொடுத்த காலம். exchange-offerல் கைமாறுவது நைனாவிடம் முதல் நாள் அடம்பிடித்து, அடிவாங்கி அழுது வாங்கிய கலர் பென்சில், காம்பெஸ் (compass), டிவைடர் (divider), ஸ்கேல் (scale) இந்த மாதிரி ஏதாவது ஒரு ஐடம்.

பத்தாவது எப்படியோ பாஸ் பண்ணி (அதுவும் distinctionல), டாக்டர் எல்லாம் ஆக வேணாம்னு முடிவு பண்ணி ( :) ), பயாலஜியை புறம்தள்ளி, MPC (math, physics, chemistry) எடுத்த காலம்.

+1 வாழ்க்கை சொர்கம் தாங்க. முகப்பரு மறைக்க clearasil/fair & lovely கம்பெனியை பணக்காரராக்கிய காலம்.
மணிரத்தினமும், சத்யா கமலும், 007ம், SPB யும் பிடித்த காலம்.
இளையராஜா பாடல்கள் கேட்டால் என்னென்னமோ ஆன காலம். கஷ்டப்பட்டு சேத்த 5 ரூபாய பழைய TDK/Sony cassetteல ராஜா பாட்டு record பண்ண வைத்த காலம்.(MP3 songs எல்லாம் இல்லீங்க அப்ப).

முதல் மீசை, முதல் காதல் (first love, ஹ்ம்ம்ம்), முதல் சண்டை, முதல் மரணம் எல்லாம் அரங்கேறிய காலம்.

சக மாணவர்கள் சிலர், சுரேஷ்/நதியா ரேஞ்சில் சுற்றிய காலம்.
அதை எல்லாம் கண்டு பொறாமையில் கொதித்த காலம்.

ஆற்றாமையை, சுரேஷ்/நதியாவின் சைகிள் டயரில் காற்றை பிடுங்கி விட்டு, காட்டிய காலம்.
(சைகிள்ல காத்து இல்லன்னா சுரேஷுக்கு கொண்டாட்டம் தான். காலார நடந்து ரோடெல்லாம் வறுப்பானே. கடங்காரன் :) )

இந்த வயசில் செய்த குறும்பில், எடுத்துச் சொல்லும்படியான பெருமைக்குரிய ஒரே குறும்பு - science lab sessionக்கு எல்லாரும் batch batchஆ கிளம்புவாங்க.
கடைசி பென்ச் கோஷ்டியாகிய நாங்கள் வழக்கம் போல் இதிலும் கடைசிதான்.
குரங்கு கையில் பூமாலை கணக்கா, சக மாணவக் கண்மணிகளின், சோத்து மூட்டை எங்கள் கையில் கிடைக்கும் பொன்னான நாட்கள் அவை. கண்மணிகள் எல்லாம் lab முடிந்து திரும்ப வருவதர்க்குள், ஐயர் ஆத்து தயிர் சாதம் முதல், செட்டியார் வீட்டு கட்டு சாதம் வரை ஒரு பிடி பிடித்து, சமத்தா ஒன்றும் தெரியாத நல்லவர்கள் போல் எழுந்து lab'ல் சில buretம், pipetteம் உடைக்க கிளம்பிடுவோம்.
(Chemistry labல் செய்யும் குறும்புக்கு தனி பதிவே போடலாம். அதெல்லாம் இங்க வேணாம் :) )

Class கட் அடித்து, சினிமா பார்த்த காலமும் இதுதான். அப்படியாக +1 முடிந்தது.

+2 படிக்கும்போது குறும்பா? அப்படீன்னா? என்னும் அளவுக்கு மாறி, முட்டி மோதி படித்தது தான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்துக்கும் ஒரு ட்யூஷன், படிப்பதர்க்கே நேரம் பத்தல, குறும்புவது எங்கே நடப்பது.
ஆனால், சுரேஷ்களும்/நதியாக்களும் தங்கள் பணியை செவ்வனே செய்த காலம்.
டச் விட்டு போயிடக் கூடாதுன்னு அப்பப்ப சைக்கிளில் காத்து எறக்கிவிட்டும், வூட்டுக்கு தெரியாம சினிமா பார்ப்பதும் மட்டும் தொடர்ந்தது.

இது தாங்க நம்ம பள்ளிக் குறும்பு.
இப்ப படிக்கர பசங்கள மாதிரி cell phone, digital camera இதெல்லாம் இல்லாத காலம். இதெல்லாம் கையில இருந்திருந்தா குறும்பு வேற மாதிரி போயிருக்குமோ?

college குறும்பும், office குறும்பும் ஒரு தனி பதிவா அடுத்த வருஷம் போடறேன்.

அது சரி, இதிலென்ன சர்வே எடுப்பது என்று யோசித்த போது தோன்றியவை கீழே உள்ள ரெண்டு சர்வே-ஸ்.
உங்கள் சாய்ஸ், சூஸி, தனித் தனியா க்ளிக்குங்க :)

பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.

பொறுமையுடன் படித்த உள்ளங்களுக்கு நன்றி!!!




--------------------------------------------------------
2006'ன் சிறந்த பதிவருக்கு ஓட்டு போடாதவங்க இங்கே சொடுக்கி போடுங்க: 2006'ன் சிறந்த பதிவர் - முதல் கட்ட வாக்கெடுப்பு
மேலே உள்ள link ஐ, உங்கள் பதிவில் போட்டீங்கன்னா, நல்லா இருக்கும். நன்றி!

முன்னணியில் இதுவரை: வெட்டிப்பயல், பெனாத்தல் சுரேஷ், குமரன், செந்தழலார், Wethepeople ஆகியோர் இருக்காங்க.
உங்களுக்கு பிடித்த பதிவரை தேர்ந்தெடுக்கள். இதுவரை 220+ ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
நன்றி! நன்றி! நன்றி!
--------------------------------------------------------

Sunday, December 17, 2006

சுற்றுலா (கலைக் கண்ணோட்டத்துடன் எடுத்த) புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு...

கேமரா வாங்கும் புதிதில் பார்ப்பதை எல்லாம் ( இலை, தழை, பூ, நாய், எருமை, மரம், செடி, கொடி, .... ) க்ளிக்கும் நோய் நம்மில் பலருக்கும் உண்டு என்று நினைக்கிறேன்.

Digital Camera எல்லாம் வருவதர்க்கு முன் 35mm Nikon கொண்டு க்ளிக்கித் தள்ளுவேன்.
24 படம் எடுத்தா ஒண்ணு ரெண்டு நல்லா வரும்.

Digital camera வந்த பிறகு ஒவ்வொரு க்ளிக்குக்கும் செலவு கம்மியாச்சு.
ஒரு இடத்துக்கு போனா குறைந்தது 500 க்ளிக்காவது க்ளிக்குவேன்.

500ல் ஐந்து படமாவது ஓரளவுக்கு பார்க்கும்படி தேறும்.

சமீபத்தில் சென்ற சுற்றுப் பயணத்தின் போது க்ளிக்கியவை.

எந்த இடம்னு யாருக்காவது தெரிஞ்சா கரீட்டா சொல்லுங்க பாப்போம்.

(எந்த போடோ நல்லாருக்குன்னு சர்வே போட்டிருக்கலாம். ஆனால், சர்வே என்றால் குண்டு எறியப்படும்னு மடல் வந்ததால், இப்போதைக்கு வேணாம் :) )

-------- + -------- + -------- + -------- + -------- + -------- +
அது சரி, 2006'ன் சிறந்த வாக்குப் பதிவர்க்கு ஓட்டு போட்டுட்டீங்களா? வாக்கை வீணாக்காதீர்கள்.
வாக்களிக்க கடைசி நாள் December 22 8.00 AM IST.
இங்கே க்ளிக்கி வாக்களித்து/முன்னணியில் யாரென்று பாருங்கள்
-------- + -------- + -------- + -------- + -------- + -------- +




(படத்தின் மேல் சொடுக்கினால் படம் பெரிசா தெரியும்)


























Friday, December 15, 2006

இன்றைய சர்வே - ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடிப்பது?



திவ்யா அவர்களின் பெண்களை கவர்வது எப்படி??? என்ற பதிவு படித்தேன். நாட்டுக்கு ரொம்ப தேவையான விஷயங்களை அலசி ஆராய்ந்திருந்தார்.

பயலுவ முடி, நடை, உதாரு, நிஜாரு - இவற்றில் எதைக் கண்டு அம்மணிகளை ஈர்கலாம் என்று விளக்கம் தந்திருந்தார்.

(நம்மில் சிலரை போல்) எல்லா விஷயத்திலும் full-marks smart ஆளுங்களுக்கு இதெல்லாம் ப்ரச்சனை இல்லைதான். =)
ஆனால், சாமானியர்களும் நம் கூட்டத்தில் இருப்பாங்க இல்லியா, அவங்களுக்கு உதவும் வகையில் இந்த சர்வே.

so, பெண்களே, நன்னா யோசிச்சு, கீழே உள்ள வாக்குப் பொட்டியில் "ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடிப்பது - முகத் தோற்றம், உடை அலங்காரம், உடல் தோற்றம், பேச்சுத் திரன்" - ஏதாவது ஒன்ன க்ளிக்கி வாக்குங்கள் ப்ளீஸ்.

பயலுவ, please stay away from voting. Just view results by clicking 'அனுப்பு' without clicking any of the options.

(திவ்யா, royalty எம்புட்டு. எங்க அனுப்பி வைக்க?)



ஹலோ, 2006'ன் சிறந்த வாக்குப் பதிவர்க்கு ஓட்டு போட்டுட்டீங்களா? வாக்கை வீணாக்காதீர்கள்.
வாக்களிக்க கடைசி நாள் December 22 8.00 AM IST.
இங்கே க்ளிக்கி வாக்களித்து/முன்னணியில் யாரென்று பாருங்கள்

என்னது, இல்லியா.. என்ன இல்ல? பேரில்லியா? யாரு பேரு? என்னது? கத்திப் பேசுய்யா! உன் தலைவரு பேரில்லியா? எல்லார் பேரும் போட்டா அது பேர் சர்வே இல்லப்பா.. பொதுக் கூட்டம்.. சரியா? இருக்கரவங்கள்ள யாருக்காவது ஓட்ட போடுங்கய்யா, இல்லாதவங்க யாருன்னு பின்னூட்டுங்க. 'மக்கள்ஸ் choice'னு ஒரு சர்வே போட்டு பின்னூட்டல்ல வர பேர வச்சு போட்டுடுவோம்.. சரியா? என்னது? நான் wasteஆ? அது சரி... எல்லாருக்கும் நல்லவனா இருக்கரது கஷ்டந்தான் லே. :)


சர்வே-சன் :)

Wednesday, December 13, 2006

2006'ன் சிறந்த பதிவர் - முதல் கட்ட வாக்கெடுப்பு

+ --------- + --------- + --------- + --------- +
அறிவிப்பு: முதல் கட்ட வாக்கெடுப்பு 22nd December 8.00 AM IST அன்று நிறுத்தப்பட்டு, இறுதி கட்ட வாக்கெடுப்பு அன்றே வெளியிடப்படும்.

15-Dec: 10.45 am IST: இதுவரை 207 ஓட்டு பதிவாயிருக்கு ஒவ்வொரு பிரிவிலும்.

மொத்தம் எம்புட்டு பேர் இருக்கோம் நம்ம கூட்டத்துல ?
எம்புட்டு பேர்னு தோராயமா தெரிஞ்சாதான், இத்தினி விழுக்காடு பதிவாயிருக்கு, இத்தினி விழுக்காடு ஓட்டு சாவடிக்கு வராம சீரியல் பாக்குதுன்னு சொல்ல முடியும் :).

+ --------- + --------- + --------- + --------- +
பின்னூட்டுவதில் பிரச்சனை இருந்தால், OTHER option உபயோகித்து ஊட்டவும்.
Thanks for the support!
+ --------- + --------- + --------- + --------- +

வணக்கம்.
இதுவரை சிபாரிசு செய்யப்பட்ட நூறுக்கும் மேலான பதிவர்கள் பெயரை, மூவர் குழு (பெயர் வெளியிட விரும்பாத) ஒன்று அலசி, ஆராய்ந்து, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி வாக்கெடுப்புக்கு சேர்க்க வேண்டிய பெயர்களை அளித்து விட்டார்கள்.
ஆபாசம், தனிமனித தாக்குதல், copy & paste மட்டுமே கொண்ட பதிவுகளை consider செய்யவில்லையாம்.

பதிவர்களை அரசியல், சமூக-அக்கறை, பல்சுவை, ஆன்மீகம் என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 5 பதிவரை தேர்ந்தெடுத்து வாக்கெடுக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
எந்த ஒரு பதிவரும் ஒரு பிரிவில் 100% fit ஆகலையாம். மேலோட்டமாக பார்த்து அவர் மிகுதியாக எதைப்பற்றி எழுதுகிறார் என்று அலசியதை வைத்து அந்தந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்சுவை பிரிவில் பலர் பொருந்தியதால், 5க்கு பதிலாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கவிதை, நகைச்சுவை என்ற பிரிவுகள் சேர்க்க முடியாததில் வருத்தமே.

என்னது? பேசினது போதுமா? ஓட்டுப் பெட்டி எங்கய்யா இருக்கா? இதோ கீழே.

கீழே கலர் கலரா ஐந்து ஓட்டுப் பெட்டி உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உங்களுக்கு பிடித்த ஒருவரை க்ளிக்கி, 'அனுப்பு + முடிவுகள் இதுவரை' லிங்கை சொடுக்கி உங்கள் ஓட்டை பதியவும். (மறவாமல் ஒவ்வொரு பெட்டியிலும் உங்களுக்கு பிடித்த ஒருவரை க்ளிக்கி, 'அனுப்பு'வை சொடுக்கவும். ஒவ்வொரு பிரிவிலும், தனித்தனியாக ஒட்டு போடணும்)

ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்கு பெறும் பதிவர்களை சேர்த்து இறுதி கட்ட தேர்தல் 22nd December அன்று நடைபெறும்.

Please vote. Thanks for the மூவர் குழு, and for everyone else for sending the suggestions.
இதில் பல குறைகள் இருக்கலாம். தெரியப்படுத்துங்கள். அடுத்த முறை குறையை களைந்து விடலாம்.
(கள்ள ஓட்டு கண்டு பிடித்து, கணக்கில் இருந்து கழிக்கவும் ஒரு எற்பாடு செய்தாயிற்று. கள்ள ஓட்டு போட முயற்சித்தால். எலியை அமுக்கும் பொத்தானில் ஷாக் அடிக்கும் :) )

(கீழே கலர் கலர் பெட்டி தெரியலன்னா, தேர்தல் அதிகாரி வரலன்னு அர்த்தம். கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் ட்ரை பண்ணினா வந்திடுவாரு)

Start the mujikkkkk.

=============== =============== =============== =============== ===============
21-Dec-06: வாக்கெடுப்பு முடிவடைந்தது. பதிவான வாக்குகளின் விவரங்கள் கீழே:

(வாக்களித்து வெற்றிறிறிறிறிறி அடைய செய்த உள்ளங்களுக்கு நன்றிறிறிறிறிறி!)
இறுதி வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு தனி பதிவில் இங்கே:
=============== =============== =============== =============== ===============















=============== =============== =============== =============== ===============



இந்த Survey பற்றிய விளம்பரம் உங்கள் பதிவில் போட்டால் ரொம்ப நல்லாருக்கும். இந்த பக்கத்திர்க்கு லிங்க் கொடுக்கவும்.

Survey-san

Sunday, December 10, 2006

2006'ன் சிறந்த Blog பதிவர் யார்?

வாக்கெடுப்பு நடைபெறுகிறது - இங்கே சொடுக்கவும்

========= + ======== + ======== + =======
அறிவிப்பு: இதுவரை வந்த சிபாரிசெல்லாம் சேர்த்து கீழே 'இதுவரை கோர்தது' என்ற பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. top-5 லிஸ்ட்ஸ் கொண்ட சர்வே இதிலிருந்துதான் கொடுக்கப்படும். இன்னும் பதிவர் பெயர்களை அளிப்பவர்கள், இந்த conditions மேட்ச் ஆகிறதானு பாத்துட்டு add பண்ணுங்க. நன்றி!.
1) ஆபாசம், தனி மனித தாக்குதல், just copy and paste இல்லாத பதிவா இருக்கணும்.
========= + ======== + ======== + =======

2006'ன் சிறந்த ப்ளாக் பதிவர் ( நம் வட்டத்தில் ) யார் என்பதை கணிப்பதே அடுத்த சர்வே.

நான் இந்த பதிவுலகிர்க்கு புதியவன். எல்லார் எழுத்தையும் இன்னும் படிக்காதவன். So, Top-5 ஆளுங்கள நானே யோசிச்சு போட்டா சரி வராது.

ஆகவே, சர்வேயில் பங்கு பெற வேண்டிய ஐந்து பதிவாளர்களின் பேரை சிபாரிசு செய்யும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் 2006'ல் சிறந்த பதிவுகள் அளித்தவர் பெயர்களை (with URL) பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். (உங்களுக்கு பிடித்த எல்லா பதிவரின் பெயரையும் பின்னூட்டுங்கள். அதிலிருந்து top-5 க்கு வேண்டிய பெயரை, based on others choices, நானே எடுத்துக் கொள்கிறேன்).

வரும் பின்னூட்டங்களில் வரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஐந்து பதிவர்களை கோர்த்து ஒரு சர்வே ரெடி செய்து வரும் வெள்ளி அன்று வழங்குகிறேன்.

Please keep your suggestions coming,

நன்றி! நன்றி! நன்றி!

(சர்வேயில் வெல்பவர் 25% க்கும் மேல் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றால், அவருக்கு ஒரு சிறு பரிசு என் சார்பில் அனுப்பி வைக்கப்படும் :) )

Updates:
13-Dec-06 7.31 am IST
இன்னும் சிபாரிசுகள் வருகிறதா என்று வழிமேல் விழிவைத்து...
சர்வே-சன்


12-Dec-06 7.00 am IST
பல்சுவை, ஆன்மீகம், அரசியல், சமூக-அக்கரை ஆகிய பிரிவுகளில் டாப்-ஐந்து பேரை போட்டிக்கு தேர்ந்தெடுத்தாச்சு. பல்சுவை பிரிவில் மட்டும் 10 பேர் சேர்த்திருக்கு. so, மொத்தம் 25 பதிவர்கள் களத்தில்.
Groups A to E, FIFA styleல் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை survey அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கடைசியாக ஐந்து பேர் கொண்ட finals நடத்த முடிவு.


12-Dec-06 7.30 am IST
பெயர்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது. நடுவர் குழு மார்க்கெல்லாம் போட்டு ஒரு அளவுகோல் வைத்து வரிசைப்படுத்துகிறார்கள். நல்லாவே நடக்குது வேலை...

11-Dec-06 6.00 pm IST
பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று நடுநிலை பதிவர்கள்/வாசகர்கள், groups'ல் போட வேண்டிய பதிவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். :)

11-Dec-06 5.00 pm IST
வந்துள்ள சிபாரிசுகளில் GROUPS ஆக பதிவர்களை பிரித்து (உ.ம் சமூக அக்கரை, ஆன்மீகம், பல்சுவை, செய்தி ..) ஒவ்வொரு group'ல் ஐந்து ஐந்து பேரை நடுவர் குழு தேர்ந்தெடுத்து GROUP A , GROUP B ஆக FIFA style'ல் பிரித்து சர்வே எடுத்து, அதில் வெற்றி பெற்று வரும் பதிவர்களை, டாப்-5 finals சர்வேயில் போட்டு, கணக்கெடுப்பது என்று முடிவு.
Groups விவரம், அதில் இடம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களும் இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்.


11-Dec-06 12.00 noon IST
பதிவர் பெயர்களின் பரிந்துரைகள் வந்துக்குனே இருக்கு.

11-Dec-06 8.00 AM IST
சர்வே பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது



இதுவரை கோர்தவை:
============ + =============== +
1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
123 - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.com

Wednesday, December 06, 2006

தமிழ்மணம் 'கருத்து' சுதந்திரம் தடைகிறதா?

-------------- -------------- -------------- --------------
வாக்கெடுப்பு முடிந்தது.

"தமிழ்மணம் 'கருத்து' சுதந்திரம் தடைகிறதா?" என்ற கேள்விக்கு "இல்லை (பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்)" என்ற பதிலே பெருவாரியாக பதியப் பட்டது.

% விவரங்கள் கீழே:
ஆமாம் (என்ன வேண்டுமானாலும் எழுதுவது அவரவர் விருப்பம்)(23%)
இல்லை (பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்) (69%)
கருத்தில்லை (5%)
கவலை இல்லை (3%)

so, தீர்ப்பு: "இல்லை - பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்"

.



-------------- -------------- -------------- --------------

ச ச ச. இந்த பொறுப்பான பதவி வகித்தாலே தொல்லைதான்.
நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை பற்றி எல்லோரும் நினைப்பது என்ன என்று கருத்துக் கணிப்பு நடத்தும் இந்த 'சர்வே-சன்' பதிவி ரொம்ப பேஜார்.

மீட்டிங் போலாம்னு கிளம்பினா, நண்பரின் அவசர 'தந்தி'.

"சர்வேசா, தமிழ்மணத்தில் சலசலப்பு. பதிவர் ஒருவர் துரத்தப்பட்டார். கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து. காப்பாத்து. எல்லார் கருத்தையும் கணித்துக் கூறு"

அட என்னப்பா இது என்று, சற்றே சலிப்புடன் கீழே உள்ள இன்றைய சர்வே. யோசித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும். நன்றி ;)
(seriously, What is your take on this?)

;);););););););););)

இதுவரை எடுத்த சர்வே-ஸின் தொகுப்பு

இது வரை எடுத்த சர்வேக்களின் தொகுப்பும், அவற்றின் முடிவுகளும் உங்கள் பார்வைக்காக.

சர்வேயில் இதுவரை வாக்களிக்கவில்லை என்றால், சர்வேயின் தலைப்பை க்ளிக்கி வாக்களிக்கலாம்.

புதிய சர்வே எடுக்க நல்ல நல்ல interesting ideas இருப்பவர்கள், பின்னூட்டமிடுங்கள். நன்றி!

கலர் கலராய் சர்வே-க்கள் கீழே...
36. SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்?


35. 2040ல திமுக தலைவரு யாரு - நேயர் விருப்ப சர்வே


34. சற்றுமுன் - ஒரு தீவிர அலசல்




33.சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா


32. சிவாஜி படத்துக்கு $$வரிவிலக்கு$$ கொடுக்கணுமா?


31. வியர்டுக்கெல்லாம் வியர்டு எது?


30. கொஞ்சம் வில்லங்கமான % சர்வே %


29. 'மேட் இன் பாக்கிஸ்தான்' - ஓ.கே?


28. சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல்


27. கிரிக்கெட்டு - உலகக் கோப்பை 2007 -- சர்வே


26. 30+ limit தேவையா? உம்மை பாதிக்குமா?


25. அடுத்த போட்டி என்ன வைக்கலாம்?


24. சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி - வாக்கெடுப்பு!


23. சர்வே - கலப்புத் திருமணம் - ஊருக்கு உபதேசமா இல்ல உண்மைச் சம்பவமா?


22. சாய்பாபா கருணாநிதி சந்திப்புக்கு பிறகு உங்களின் மனநிலை?


21. சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்?


21. சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்?


19. கடவுள் இருக்காருன்னு நம்பறீங்ளா?


18. திருட்டு CD/VCD/DVD/MP3 வியாதியும், நமது மூதாதையரும்.


17. GURU Movie Review


16. உங்களால் இனி விலங்கினங்களுக்கு தொல்லை வருமா?


15. ஊருக்கு திரும்ப (மொத்தமாக) வருவீர்களா?


14. நம் கலாச்சார அடையாளங்கள் அழிகிறதா?


13. சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி உங்களை..?


12. 2006ன் சிறந்த திரைப்படம் சர்வே!!


11. தமிழ் பதிவுலகில் ( தினசரி ) சராசரி செலவிடும் நேரம்?


10. 2006'ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்கெடுப்பு (FINALS)


9. உங்கள் பள்ளிப் பருவத்தில் செய்த பெரிய குறும்பு?


8. ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடித்தது?


7. தமிழ்மணம் 'கருத்து' சுதந்திரம் தடைகிறதா?


6. 2006 ன் சிறந்த நடிகை யார்?


5. 2006 ன் சிறந்த ஹீரோ நடிகர் யார்?


4. தேன்கூடு போட்டி முடிவுகள் கணக்கிடும் முறை ?


3. அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகலாமா?


2. சதாம் உசேனை என்ன செய்யலாம்...?


1. பெண்களிடம் ஆண்கள் அதிகம் விரும்புவது?

Monday, December 04, 2006

சர்வேசனின் சர்வே - 2006 ன் சிறந்த நடிகை யார்?

-------------- -------------- -------------- --------------
2006 ன் சிறந்த நடிகை சர்வேயில் வெற்றி பெற்றது: நடிகை ஜோதிகா.
சர்வே முடிவுற்றது.
-------------- -------------- -------------- --------------

வழக்கம் போல் மூளையை கசக்கிப் பிழிந்து 2006ல் வந்த படங்களின் நாயகிகள் ஐந்து பேரை லிஸ்ட் போட்டாச்சு.
(நமீதா பேர் போடலன்னா, வீட்டுக்குள் குண்டு வீசப்படும், என்ற அனானி மிரட்டலுக்கெல்லாம் பயந்து நமீதா பேர் போடவில்லை. சாவித்ரிக்கு பிறகு, நமீதாதான் நடிகையர் திலகம் என்று சிலர் பச்சைக்குதிரை படம் பார்த்து உணர்சிவசப் பட்டதாலேயே அவங்களுக்கு பட்டியலில் இடம்).

என் ஓட்டு எப்பவும் ஜோதிகாவுக்குத்தான். ( தற்போதைய நிலவரப்படி சிறந்த நடிகருக்கான வரிசையில் சூர்யா பின் தங்கி உள்ளார். இங்கயாவது இவங்க வராங்களானு பாப்போம் ).

அடிச்சு ஆடுங்க. வெற்றி பெறும் நடிகைக்கு குழு சார்பா 'பாஸ்கர்' அவார்ட் அனுப்பி வைக்கப்படும்.



பி.கு: பின்னூட்டம் போட்டா மட்டும் பத்தாது. மேலே உள்ள பேரை க்ளிக்கி, அனுப்பு பொத்தானையும் க்ளிக்கணும்.

நன்றி!..

Friday, December 01, 2006

வலைப்பதிவு எழுதி $$ பணம் $$ பண்ணுவது எப்படி?

வலைப்பதிவு எழுதுபவர்கள், அதுவும் பிரமலமா இருப்பவர்கள் (என்ன மாதிரி :)), சிறு முயற்சி செய்தால், உங்கள் வலைப்பதிவில் விளம்பரங்கள் ஏற்றுவதன் மூலம் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்க வழி வகையுண்டு.

ரொம்ப ஆசையெல்லாம் படக்கூடாது.
மாதத்திர்க்கு இதன் மூலம் பலருக்கு சில நயா பைசாக்கள் மட்டுமே கிட்டும்.
பிரபலங்களுக்கு சில ஆயிரம் வரை கிட்டும் வாய்ப்பு உண்டு. (லட்சங்கள் சம்பாதிப்பவரும் நம் கூட்டத்தில் உண்டு).
உங்கள் பதிவை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து கிடைக்கும் $$$ மாறும்.

பைசா மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தால், கொஞ்ச நாளில், உங்கள் ரசிகர் கூட்டம் குறைந்து விடும். அப்பறம் இருக்கரதும் போச்சுன்னு ஒக்கார வேண்டியதுதான்.
குறிப்பா, வாசகர் கூட்டம் அதிகரிக்க வேண்டி, controversial topics வேண்டுமென்றோ எழுதுவதோ, ஆபாசம் புகுத்துவதோ செய்யாதிருத்தல் நலம்.

நீங்க செய்யும் வேலையை (பதிவு எழுதுவதை) இன்று போல் என்றுமே, நல்ல தரத்துடன் தர வேண்டும்.

கண்ணுக்கு உருத்தாத சின்ன 'உபயோகமான விளம்பரங்கள்' பதிவின் ஓரத்தில் இருந்தால், அதன் மூலம் ஈர்க்கப்பட்டு அதை உங்கள் வாசகர்கள் க்ளிக்கும் போது, உங்கள் கணக்கில் சில சில்லரைகள் சேரும்.

என்னைக் கேட்டா எல்லாரும் இத பண்ணலாம். பண ஆசை இல்லாதவர்களும் இதை செய்து, கிட்டும் பணத்தை நன்கொடை வழங்கலாம்.

இப்படி விளம்பரம் உங்கள் பதிவில் ஏற்ற வகை செய்யும் பல நிறுவனங்கள் உண்டு (google, yahoo, clickads, etc..).
இவற்றுள், உபயோகிக்க மிக எளிதும், வேலை செய்வதில் கில்லாடியுமானது google மட்டுமே.

STEP1: கீழே உள்ள google படத்தை க்ளிக் செய்தால் வரும் பக்கத்தில், 'Click here to apply' க்ளிக்கி, முதலில் ஒரு கணக்கு தொடங்க வேணும். (பெயர், முகவரி எல்லாம் கேக்கும். சரியான முகவரி எல்லாம் கொடுத்தாதான் துட்டு கரீட்டா வூட்டுக்கு வரும்)
STEP2: கணக்கு பதிவு செய்தவுடன், login செய்து, 'Adsense for Content' பக்கத்துக்கு போனால், மற்றதை Google சாமி சொல்லும்.
STEP3: Google சாமி தரும் script ஐ உங்கள் பதிவிலோ, template லோ சேர்த்து விட்டால், விளம்பரம் அழகாய் வரத்தொடங்கி வ்டும்.
STEP4: தடங்கினால், தயங்காமல் surveysan2005 at yahoo.com, முகவரிக்கு ஈமெயில் அனுப்புங்கோ. சட்டுனு உதவி, பட்டுனு கிடைக்கும்.



tamil movies review tamil mp3 songs tamil nadu rajinikanth kamalhassan manirathnam ar rahman ilayaraja


இந்த மாதிரிதான் விளம்பரம் இருக்கும்:





வாழ்த்துக்கள்!


சர்வே-சன் (Survey - san)