வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.
(may contain spoilers, so read, at your own risk :) )
ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை.
வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.
ஒரு மகனுக்கு தந்தையிடமிருந்து கிட்டும், பாஸிடிவ் உந்துதல்களை படம் பிடித்திருக்கும் முயற்சி பாராட்டியே ஆகணும். கௌதம் தன் அப்பாவுக்கு இந்தப் படத்தை 'சமர்ப்பிக்கும்' விதமாய் எடுத்திருக்கிறார். தன் சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளை திரைக்கதையா அமச்சிருக்காரோ என்னமோ. அதனாலேயே, படத்தின் நீளத்தை குறைக்க முடியாமல் ரொம்பவே திண்டாடிப் போயிருக்கார் போல. நம்மையும் சில நேரங்களில் திண்டாட வச்சிடறாரு.
காஷ்மீரில் மேஜர் சூர்யாவாக ஒரு மிஷனுக்கு தன் குழுவுடன், ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும்போது, தந்தை மறைந்துவிட்டதாக தொலைபேசி வருகிறது. அப்பொழுது, தன் தந்தையின் அருமை பெருமைகள் அவர் மனதில் அசைபோடும்போது, ஃப்ளாஷ்பேக்கி, நமக்கும் கதை சொல்றாங்க.
அப்பாவும் சூர்யா. அம்மா சிம்ரன்.
'டாடி டாடி' என்ற பாசமான ஸ்கூல் பையனும் சூர்யா.
ஒரு தங்கை.
அழகான குடும்பம். ஆனா, ரொம்ப ஆங்கிலத்தனமான குடும்பம்.
ஏதோ ஆங்கிலோ இண்டியன்ஸ் குடும்பம் மாதிரி குடும்பத்தினர் அனைவரும், ரொம்பவே பீட்டர் விடுவது செம எரிச்சல் தந்தது. நிஜத்தில் சில குடும்பங்கள் அப்படி இருந்தாலும், டமில் படத்தில் அப்படியே அதை காட்டுவது ரொம்ப ஓவர்டோஸா இருந்தது.
அப்பா சூர்யா, அம்மா சிம்ரனின், ஃப்ளாஷ் பேக், நல்லா படம்பிடிக்கப் பட்டிருந்தது. ஆனா, சிம்ரன், காலேஜ் உடையில், சகிக்கலை. சிம்ரனுக்கும் வயசாகும் என்பது, திகிலான உண்மை.
அப்பா சூர்யாவுக்கும், பையன் சூர்யாவுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பைதான் படத்தின் மையமா சொல்ல ட்ரை பண்ணியிருக்காரு கௌதம். ஆனா, அதுக்குண்டான அழுத்தமான, மனதை பிசையும் காட்சிகள்னு படத்தில் எதையும் சொருகல.
அப்பா சூர்யா, அடிக்கடி, 'life has to go on' தத்துவத்தில், பையன் சூர்யாவுக்கு புத்திமதிகள் அள்ளிவீசுவாரு. சில நேரம் நல்லா இருந்தது. ஆனா, இதுவும் ஓவர்-டோஸ்.
* "டாடி, என்ன அவன் அடிச்சுட்டான் டாடி"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, நீயும் ஒடம்ப வளத்து வச்சிருக்கல்ல, திருப்பி அடின்னு அட்வைஸு.
* "டாடி, I love மேக்னா daddy"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, அவளை தேடிப் பிடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு ஒரு அட்வைஸு.
* "டாடி, அவ அமெரிக்கா படிக்கப் போயிட்டா. நான் அமெரிக்கா போய் அவள கூட்டிட்டு வரணும்"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, சரிடா மவனே உடனே போன்னு வாழ்த்தி அனுப்பறாரு.
* "டாடி, அவ செத்துட்டா டாடின்னு" அழுது அலப்பரை பண்ணும் போது, 'life has to go on', திரும்ப வாடான்னு சொல்றாரு.
* "டாடி, I want to join armed forces"னு திரும்ப வந்து நிக்கும்போதும், சரிடா மவனே, இஷ்டப்படி செய்னு திரும்பவும் அனுப்பறாரு.
* "டாடி, I love குத்து ரம்யா"ன்னு வந்து நிக்கும்போதும், அதே ஆமோதித்தல்.
etc.. etc..
ஒரே ஆறுதலான விஷயம், போதைப் பழக்கத்தில் விழும் சூர்யாவுக்கு புத்தி மதிகள் சொல்லுமிடம்.
சூர்யா - அசத்தலோ அசத்தல்!
என்னமா உழைச்சிருக்காரு. கலக்கல் ரகம்.
ஸ்கூல் பையனா வரும்போது, உண்மையாவே சின்னப் பையனா தெரியராரு.
காலேஜ் பையனா கிட்டார் தூக்கிட்டு அலையும்போதும் அம்சமா இருக்காரு.
முதல் காதலி 'மேக்னா' (சமீரா ரெட்டி) கிட்ட ரயிலில் காதலை சொல்லுமிடத்திலும் அசத்தியிருக்காரு. அதுவும், அந்த கிட்டாரில், 'என் இனிய பொன்நிலாவே'ன்னு வாசிச்சுக்கிட்டு அலப்பரை பண்ற காட்சிகளில், துள்ளல் சூர்யா.
காதலியை தேடிக்கிட்டு அமெரிக்கா போயி, அங்கே ஆடல் பாடல் காட்சிகளிலெல்லாம் அமக்களம்.
6-pack சூர்யாவும் மிரட்டறாரு. தாடி வச்ச சூர்யா, மேஜர் சூர்யான்னு பலப் பல பரிணாமங்களில் தன் உழைப்பை அனாயாசமா காட்டியிருக்காரு.
அப்பா சூர்யாவும் ஓ.கே. மேக்கப் உதவியில்லாமல் நல்லாவே சமாளிச்சிருக்காரு.
ஆங்கில டயலாக் தான் நெருடல்.
ஹீரோயின் மேக்னா (sameera reddy) முதல் காட்சியில் பாக்கும்போது, "வேர ஹீரோயினே கிடைக்கலியா இவங்களுக்குன்னு" தோணிச்சு. ஆனா, தொடர்ந்து வரும் காட்சிகளில், ஸ்டைலிஷ்ஷா நடிச்சு அசத்திடறாங்க. நம்மளையும் வசீகரிச்சிடறாங்க. நல்ல ஸ்மைல்.
ஆனா, சூர்யா பக்கத்தில் நிக்கும்போது மட்டும், அரேபிய குதிரை கணக்கான், கில்மாவா இருக்காங்க. இவங்க பக்கத்தில் சூர்யா, 'சோட்டாவா' தெரியறாரு.
இரண்டாவது ஹீரோயின், 'குத்து' ரம்யா, குத்து வாங்கிய ரம்யா மாதிரி இருக்காங்க. பொல்லாதவன் படத்தில் பார்த்த, 'நச்' மிஸ்ஸிங். குறிப்பா, க்ளோஸ்-அப் காட்சிகளில், வசீகரமே இல்லாதிருந்தது. ஆனா, அலட்டிக்காம நடிச்சிருக்காங்க.
முதல் பாதி வரை, ஸ்கூல், காலேஜ், வாழ்க்கையில் முன்னேறுதல், மேக்னா, அமெரிக்கான்னு, படம் சூப்பரா பயணிச்சுது.
ஹாரிஸின் இசையும், ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் படத்தை ஒரு லெவலுக்கு கொண்டு போயிடுச்சு.
ஹாரிஸ் பின்னி எடுக்கறாரு.
"அடியே கொல்லுதே", "ஓ சாந்தி சாந்தி" (SPB சரனுக்கு நிறைய பாட்டு கொடுங்கைய்யா சாமிகளா. கலக்கறாரு), "நெச்சுக்குள் பெய்திடும்", "அணல் மேலே பனித்துளி" (
இந்த வரிசையில் ஒரு பெரிய 'அழுக்கு', ஒரு டண்டனக்கா குத்துப் பாட்டு.
அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த தெளிந்த நீரோடையில் ஒரு கல்லப் போட்ட மாதிரி அந்த பாட்டு.
இடைவேளை வரை தாலாட்டிய காட்சியமைப்புகள், இடைவேளைக்குப் பிறகு, இந்தக் குத்துப் பாட்டுக்கப்பரம் தடம் புரள ஆரம்பிச்சது.
காதலியை இழந்த சூர்யா, குடிக்க ஆரம்பிக்கறாரு. அதிலிருந்து மீள, டெல்லி, காஷ்மீர்னு சுத்தறாராம். இடையில் ஒரு கிட்னாப்பு, ஆர்மீல சேறராருன்ன், செகண்ட் காதலின்னு ஜவ்வ்வா இழுத்திருக்காங்க.
போதைப் பழக்கத்திலிருந்து மீள, ஒரு பாஸிடிவ் விஷயத்தில் நேரத்தை செலவு பண்ணனும்னு ஒரு நல்ல விஷயம் சொல்லியிருந்தாலும், அந்த நல்ல விஷயத்தை, 'நறுக்'னு முடிச்சிருக்கலாம்.
படத்தில் ஒரு 30 நிமிஷம் ஈஸியா குறைச்ச்சிருக்கலாம். குறைச்சிருந்தா, கௌதமின், மற்ற படங்களைப் போல இத்தையும், டிவிடி வாங்கி வச்சு அடிக்கடி பாத்திருக்கலாம்.
பட், விதி வலியது. அவரு 30 நிமிஷத்தை கட் பண்ணலை. நமக்கும் டிவிடி செலவு மிச்சம்.
முப்பது நிமிஷத்தை எப்படி குறைச்சிருக்கலாம்? ( கௌதம் சார், அதிகப் பிரசிங்கத்தனத்தை மன்னிக்க :) )
சீன்1: சூர்யா காஷ்மீர்ல அந்த ஆப்புரேஷன், டிஷ்ஷூம் டிஷ்ஷூம்னு, முடிக்கறாரு ( இதை படத்தின் கடைசியில் வச்சது சொதப்பல். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் முதலில் இப்படி தொடங்கியிருக்கலாம் ) - 15 நிமிஷம்
சீன்2: சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு வந்ததும், அப்பா சூர்யா, இறந்திட்டாருன்னு சேதி வருது. ஃப்ளைட்ல ஊருக்கு திரும்ப வராரு. அப்பா ஃப்ளாஷ்பேக் தொடங்குது - 5 நிமிஷம்
சீன்3: அப்பா சூர்யா, அம்மா சிம்ரன் காட்சிகள், குடும்பம், பாசம், நல்ல அப்பா - 20 நிமிஷம்
சீன்4: பையன் சூர்யா, மொதல் காதலி மேக்னா, பாடல், அட்வைஸு கேட்பது, அமெரிக்கா - 45 நிமிஷம்
இடைவேளை
சீன்5: சோகமான சூர்யா, போதை, அப்பா அட்வைஸு, வழிப் படுத்தல் (கிட்னாப் எல்லாம் தேவையில்லாத சொறுகல்) - 15 நிமிஷம்
சீன்6: 'குத்து' ரம்யாவுடன் செகண்ட் இனிங்க்ஸ், கூட்டுக் குடும்பம், ஜாலிகள், அப்பா பையன் பேரன் பாசக் காட்சிகள் (இதெல்லாம் படத்துல மிஸ்ஸிங். இதனால் தான் அழுத்தம் கம்மி) - 20 நிமிஷம்
சீன்7: அப்பா சூர்யா செத்துப் போயிடறாரு. சீன்2ல் யோசிக்கும் சூர்யா வீட்டுக்கு வந்திடறாரு. ஒரு டச்சிங் சோகப் பாட்டு. முற்றும் - 15 நிமிஷம்.
ஸோ, மொத்தத்தில்,
வாரணம் ஆயிரம் -- 500 சூப்பர்! 300 ஓ.கே! 100 சுமார்! 100 இழுவை!
நீங்க பாத்தாச்சா? வாக்குங்க! (பொட்டி தெரியலன்னா இங்க க்ளிக்கி வாக்குங்க)
கருத்த சொல்லுங்க. தமிழ்மண டூல்பார்ல, வாக்கும் போட மறக்காதிங்க, படிச்சது பிடிச்சிருந்தா ;)
32 comments:
படத்தை பலரும் நல்லால்லன்னு சொல்லியிருப்பதை பார்த்தேன்.
நம்பாதீங்க ;)
படம் இ....ழு.....வை தானே... நானும் விமர்சனம் எழுதி இருக்கேன்
கோவி, அப்படியெல்லம் சொல்லி ஒதுக்கிட முடியலை.
முதல் பாதி, இதமா இருந்தது.
இரண்டாம் பாதியும் போரெல்லாம் அடிக்கலை. கொஞ்சம், கொறச்சிருக்கலாம்.
இசையும், ஒளிப்பதிவும், படத்தை போரடிக்காம வச்சிடுச்சு, என்னைப் பொறுத்தவரை ;)
//"அனல் மேலே பனித்துளி" (பாம்பே ஜெயஸ்ரி//
தல, இந்த பாட்டு பாடினது சுதா ரகுநாதன்.
அப்படியே...எனக்கு படம் பிடித்திருந்ததுன்னு சொல்லிட்டு அப்பீட்டு
கப்பி,
நன்றி. திருத்திட்டேன்.
சூப்பர் பாட்டு அது.
சிலருக்கு படம் பிடிக்கலன்னு சொல்ரது ஆச்சரியமா கீது. பெத்தயா இருந்துச்சு, ஆனாலும், தூக்கம் வராத இழுவைதான் படம் ;)
// சிம்ரனுக்கும் வயசாகும் என்பது, திகிலான உண்மை//
//டாடி, I love குத்து ரம்யா//
:-))
கப்பி, பாட்டை திரும்பக் கேட்டேன்.
சுதா குரல் கொஞ்சம் கூட தெரியலியே?
எல்லாரும், ஹஸ்கியா பாடரதால, ஒரே மாதிரி இருக்கு :)
சூப்பர் பாட்டு ஆனா.
என் டாப்-1, ஓ சாந்தி சாந்தி.
டாப்-2, அனல் மேலே
டாப்-3, அடியே கொல்லுதே
:)
சரவணகுமாரன்,
:)
எல்லாருக்கும் நிஜ வாழ்வில், அப்பா ஃப்ரெண்ட்லியா இருக்கணும்னு தோணுது.
ஆனா, படத்துல அப்படி ஒரு அப்பாவ பாத்தா பிடிக்கமாட்ரது ;)
சர்வேசன்
சுதாதான்.
இங்கே பாருங்க!
http://en.wikipedia.org/wiki/Vaaranam_Aayiram
Annal Maele Sudha Raghunathan 5:22 Filmed on Surya and Divya when Surya finally falls in love with Priya.
படம் எனக்கு புடிச்சிருந்தது. இழுவையா இருக்கலாம். ஆனா, எனக்கு புடிக்கவே செய்தது.
ஒரு சந்தேகம்.
சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.
அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு. அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு. அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு. Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு. அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.
குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, "உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது" அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.
வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?
இந்த ஊருல ஆங்கில படம் மற்றும் ஹிந்தி படங்களுக்கு மட்டும் தான் ட்ரேய்லர் போடுவாங்க. நேத்து மட்டும் புதுசா தமிழ் படத்துக்கு ட்ரேய்லர். K.பாலசந்தர் வழங்கும் னு ஆரம்பிச்சானுங்க. அயங்கரன் பேரு வேர போட்டாங்க. அயங்கரன் தான் எங்க ஊருல எல்லம் படத்துக்கும் distribution. இயந்திரன் படம் கூட இவங்க தான் part production. சரி இவ்ளோ பேரு போட்றாங்கனு பாத்தேன். அர்ஜுன் படம். வந்த சீன் எல்லாம் எங்கயோ ஏற்கனவே பாத்த எஃபெக்டு. நெறய பாட்டு, ஃபைட்டு.
படம் பேரு திருவண்ணாமலை.
கடைசி சீன்ல நம்ம பேரரசு கைல ஆரத்தியோட மொரச்சிக்கிட்டு வராரு. அவரு வந்த உடனே, தியேட்டர் முழுக்க குபீர் சிரிப்பு.
இந்த படம் முதல் நாள் முதல் ஷோ பாத்தே ஆகனும்னு முடிவெடுத்தாச்சு.
பி.கு. சிவாஜி, தசாவதாரம் போன்ற படத்துக்குக் கூட ட்ரேய்லர் போட்டதில்ல. :)
அண்ணாத்த, படத்துல மற்ற படங்களோட பாதிப்பு பற்றி நீங்க எழுதாதது ஆச்சரியமா இருக்கு... இல்ல மறந்துட்டீங்களா?? முடிஞ்சா என் blog review படிச்சிருங்க...
எனக்கு படம் சுமார்தான்... ஆனா மோசம் இல்ல...முதல் நாள் பார்த்தால fulla பார்க்கமுடிஞ்சிது.. இப்ப 20 நிமிஷம் கட் பண்ணிட்டாங்க....
படம் சூப்பர்.. கொஞ்சம் இளுத்தா மாதிரி இருந்தாலும் ரொம்பவே நல்லாயிருந்தது..
இப்போ 2nd half கொஞ்சம் கட் பண்ணிட்டாங்களாம்... தியேட்டர் வரைக்கும் வந்து படத்த முழுசாப் பார்க்க நேரமில்லாத நிறைய பேருக்கு இப்போ பிடிக்கும்னு நினைக்கிறேன்..
முத நாளே, முழுசா பார்த்ததுல கொஞ்சம் சந்தோஷம் தான்..
நல்ல விமர்சனம்.. நீங்க சொன்ன மாதிரி எடுத்திருந்தா கொஞ்சம் நல்லாயிருந்திருக்குமோனு தோனுது..
ஆனா முதல் சீன்ல fight வச்சா, தல/ள படம் மாதிரி ஆகிடும்மோனு தோனுதுங்க...
அப்புறம் அந்த டெல்லி காட்சியையும் எடுத்திறலாம்.. ஆனா ஹீரோ ஆர்மில சேர்வதற்க்கு அது ஒரு காரணமா இருக்கே?? அந்த சண்டைக் காட்சி்ல கூட நிறைய சினிமாதனம் இருந்த மாதிரி தெரியலையே..வில்லன் கிட்ட இருந்து தப்பித்து ஓடி வர மாதிரி தான் காட்டிருக்காரு (மறுபடியும் 'தளபதி/தல' படங்கள நினச்சுப் பாருங்க)..
இந்த படத்த பார்க்க முடியாதவங்களுக்கு, 'குருவி' மற்றும் 'ஏகன்' போன்றக் காவியங்கள நூறு தரம் போட்டு காண்பிக்கனும்னு ஆசையா இருக்கே.. என்னங்க பண்ணலாம்??
யாருங்க இந்த truth ... என்னமா யோசிக்கறாங்கப்பா... உங்களுக்கும் ஒரு வணக்கம்!
@நாடோடி - and ellarukkum
//அப்புறம் அந்த டெல்லி காட்சியையும் எடுத்திறலாம்..//
now they've removed it frm the movie wit the director's approval...
mor over 20 mins (whole kidnap episode) of the main film has been edited...after surya visits kashmir, "CUT PANNA NAMMA HERO ARMYLA IRUKKARU"...
in b, c centers, they hav chopped some 30 mins without dir's consideration. it includes that "anal mele panithuli" song... [:(]
திவா, நன்றி. நானும் திரும்பக் கேட்டேன். சுதாதான். ஆனா, பாம்பே.ஜெ மாதிரியே பாடி இருக்காங்க.
truth,
////தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?////
:)))
அவங்களுக்கு கல்யாணம் ஆகலன்னும் சொல்லலியே.
விட்டா, அந்த ஹெலிகாப்டர்ல கூட இருந்தவங்க, பஸ்ல கூட போனவங்க, ஹிஸ்டரி ஜாக்ரஃபி எல்லாம் கேப்பீங்க போல ;))))
truth,
////படம் பேரு திருவண்ணாமலை.
கடைசி சீன்ல நம்ம பேரரசு கைல ஆரத்தியோட மொரச்சிக்கிட்டு வராரு.////
good luck!
இதையெல்லாம் பாக்க ரொம்ப மனோதைரியம் வேணும். வாழ்த்துக்கள்! :)))
karthick,
உங்க ரெவ்யூ படிச்சேன். நல்லா இருந்தது.
20 நிமிஷம் கொறச்சது, நல்ல விஷயம். இனி நச்னு இருக்கும் படம் ;)
மற்ற எந்தப் படத்தின் நினைவும் எனக்கு வரல, இத்த பாக்கும்போது.
bala,
:))
just read your compilations. you only possible :)
நாடோடி,
////தியேட்டர் வரைக்கும் வந்து படத்த முழுசாப் பார்க்க நேரமில்லாத நிறைய பேருக்கு இப்போ பிடிக்கும்னு நினைக்கிறேன்..///
எனக்கும் அதுதாங்க ஆச்சரியம். படம் இழுத்தாலும், போரடிக்காத இழுவைதான். சகிச்சு பாத்திருக்கலாம் எல்லாரும்.
இப்ப கட் பண்னிட்டாங்க. 'அனல் மேலே' பாட்டு தூக்கிட்டா, பெருத்த நட்டம் ரசிகர்களுக்குத்தான் ;)
/////இந்த படத்த பார்க்க முடியாதவங்களுக்கு, 'குருவி' மற்றும் 'ஏகன்' போன்றக் காவியங்கள நூறு தரம் போட்டு காண்பிக்கனும்னு ஆசையா இருக்கே.. என்னங்க பண்ணலாம்??
//////
கண்டிப்பா செய்யணும். :)))
கௌதம் மாதிரி ஆளுங்க இன்னும் பெருசா ஏமாத்திடலை.
karthick,
//in b, c centers, they hav chopped some 30 mins without dir's consideration. it includes that "anal mele panithuli" song... [:(]
//
hm. too bad. that song was amazingly done! :(
karthick,
///now they've removed it frm the movie wit the director's approval...
////
so, our suggestions are really valid then. kewl! :)
திகிலான உண்மை...
குபீர் சிரிப்பு வரவழைத்த உவமை :)))))))
//குபீர் சிரிப்பு வரவழைத்த உவமை :)))))))//
Danks! idhudhaan Uvamayaa? :)
//அரேபிய குதிரை கணக்கான், கில்மாவா இருக்காங்க.//
அவ்வ்வ்வ் உங்கள் பார்வையும் என் பார்வையும் ஒத்துபோகிறது இந்த இடத்தில், படம் பார்த்ததும் அண்ணாச்சியிடம் இதைதான் வார்தை மாறாமல் சொன்னேன் அருகில் மனைவி இருப்பதை மறந்து:((
அடியே கொல்லுதே பாட்டு பாடினது மலேசியா வாசுதேவனு நெனச்சேன். wiki பாத்தா Shruti Haasan அப்டீனு போட்டிருக்காங்க. மேக்னாக்கு மேட்ச் ஆகற மாதிறி தெரில. மலேசியா வாசுதேவனே பாடியிருக்கலாம். :)
குசும்பன்,
//அவ்வ்வ்வ் உங்கள் பார்வையும் என் பார்வையும் ஒத்துபோகிறது இந்த இடத்தில், படம் பார்த்ததும் அண்ணாச்சியிடம் இதைதான் வார்தை மாறாமல் சொன்னேன் அருகில் மனைவி இருப்பதை மறந்து:((
///
;)
truth,
///மலேசியா வாசுதேவனே பாடியிருக்கலாம். :)///
:) Shruthi has sung really well. nice 'new' voice.
if anyone has seen the 'edited' version of the movie, pls review :)
sexy & the other chinese dude,
i am delighted to see you liked my review ;)
花蓮吉安慶修院,花蓮景點,花蓮旅遊,花蓮,鯉魚潭,花蓮太魯閣,砂卡礑,合歡山,九曲洞,七星柴魚博物館,花蓮碼頭,瑞穗牧場,台東景點,安通溫泉,花蓮旅遊景點,立川漁場,太魯閣,太魯閣豁然亭,台東旅遊景點,七星潭,花蓮海洋公園,新光兆豐農場,磯崎海水浴場,鯉魚潭,太魯閣,七星潭,六十石山,松園別館,秀姑巒溪泛舟,馬太鞍,南安瀑布,知卡宣,牛山,林田山
Teu ngarti pisan bahasana, sakali" mah ngajieun artikel teh nu ku bahasa sunda atuh lah, meh bisa rada nyambung ngomentaran na, ulah kieu terus
Mengenal Ciri-Ciri Kanker Payudara Stadium 1
Cara Mengobati Gondokan
Cara Mengobati Infeksi Jamur Pada Miss V dan Area Selangkangan
Cara Alami untuk Menghilangkan Kutil
Obat Herbal untuk Menyembuhkan Usus Buntu
Cara Menghilangkan Rasa nyeri Pada Sendi Lutut
Biaya Operasi Usus Buntu dengan Laparoskopi
Salep / Obat Oles Penghilang Gatal Di Selangkangan & Sekitar Kemaluan
Perbedaan Benjolan Di Payudara Karena Kanker & Non Kanker
Cara Menghilangkan Koreng
Post a Comment