recent posts...

Thursday, October 30, 2008

OBAMA வந்தா இந்தியாவுக்கு கேடா?

அரசியல்வாதிங்க வுடர வாக்குறுதிகள் எல்லாம், பெரும்பாலும் வுடான்ஸாதான் இருக்கும்.
நமது பொன்னான வாக்குகளைப் பெற அளந்து அளந்து விடுவாங்க.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை பொன்னாடாக மாற்றுவோம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை ஐந்தே ஆண்டில் வல்லரசாக மாற்றுவோம்"
"எங்கள் ஆட்சியில் விவசாயிகள் முதலாளிகள் ஆவார்கள்"
"எங்கள் ஆட்சியில் எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்கப்படும்"
"எங்கள் ஆட்சியில் ப்ளா ப்ளா ப்ளா"ன்னு இப்படி பலப் பல, வுடான்ஸுகள் நமக்கு கேட்டு கேட்டு புளிச்சு போயிடுச்சு.

நாம பாக்காத வாக்குறுதிகளா?

இங்கே அமெரிக்கால, இவனுங்க, நமக்கு மேல வூடு கட்டி ஆடறாங்க.

பதவிக்காக, என்னென்னமோ டகால்ஜி வேலையெல்லாம் செய்யறாங்க.

ஒபாமா, தேர்தல் ப்ரசாரத்திற்காக செலவு செய்ய, பலப் பல கோடி, நன்கொடைகளாக வாங்கியிருக்காரு.
வாங்கின காசையெல்லாம் எப்படி செலவு செய்யரதுன்னே தெரியாம, இப்ப, இங்கிருக்கும் தொலைக்காட்சிகளி, 30 நிமிடம், விளம்பரம் கொடுக்கறாரு.
30 நிமிஷத்து கிட்டத்தட்ட 15 கோடி ரூவா எடுத்து விட்டுருக்காராம்.

இதுல கொடுமை என்னென்னா, இவருக்கு, நன்கொடை கொடுத்த பெருந்தகைகள், பலப் பல hidden agendaஸோடதான் அலைவானுங்க.
இவரு, தப்பித் தவரி ஜனாதிபதி ஆயிட்டா, இந்தப் பெருந்தகைகள், தங்களூக்கு வேண்டிய பல விஷயங்களை கமுக்கமா முடிச்சுக்க அலைவானுங்க.

எல்லாம், நம்ம ஊர்ல நடக்கர, அதேமாதிரி கீழ்தர, தரகு அரசியல் தான் இங்கையும்.

என்னமோ போங்க.

ஒபாமாவின், 30 நிமிட விளம்பரம் காண இங்கே சொடுக்கலாம்.

இதுல இந்தியாவுக்கு எங்கேருந்து கேடு வந்துச்சுங்கறீங்களா?

ஒபாமா அளந்து விடர ரெண்டு வாக்குறுதிகள் இங்கே:


அதாவது,
உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உற்பத்தி செய்தால், சலுகைகள்.
இந்தியாமாதிரி வெளிநாட்டுக்கு, வேலையை outsource செய்யாதிருந்தால், சலுகைகள்.

இது ஒண்ணும், உடனே பாதிப்பை தராது. ஆனா,.....?



தெரிஞ்சவங்க சொல்லுங்க. ;)

ஹாப்பி வெள்ளி!

பி.கு: வலப்பக்க வாக்குப் பெட்டியில், ஒபாமா 76% வாங்கி முன்னிலையில் இருக்காரு. நம்மாளுங்களுக்கு ஒபாமாதான் புடிச்சிருக்கு?

Thursday, October 23, 2008

Shoot 'em Up! ~ ராதாவுக்காக

ராதா ஸ்ரீராமின் அழைப்பை ஏற்று இந்தப் பதிவு. சினிமா தொடர் விளையாட்டு.
கம்ப்யூட்டர் படிக்கலன்னா, கலை உலகத்தில் ஏதாச்சும் வேல தேடியிருப்பேன். போஸ்டர் ஒட்டரது மாதிரி ஏதாச்சும். தியேட்டர்ல ஃபிலிம் ஓட்டர வேல கூட செஞ்சிருப்பேன்.
சினிமான்னா அவ்ளோ பிடிக்கும்.
யாருக்கு பிடிக்காதுங்கறீங்களா? நம்ம ஊர்ல இருக்கர ஒரே 'சீப்' பொழுதுபோக்கா எல்லாரும் அணுகும் வகையில் இருக்கரதால, நம்மாளுகள்ள 99%க்கு, 'பிடித்த பொழுதுபோக்கா' சினிமாவத்தான் சொல்லுவாங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர, மலையாளம், ஹிந்தி, இரானியன், ஃப்ரென்ச், சீன மொழிப் படமெல்லாம், சப் டைட்டில் இருந்தா பாப்பேன். கைல கெடைக்கர எல்லா படமும் பாப்பேன்.
ரொம்ப 'தாக்கிய' உலக மொழி படம், நிறையவே இருக்கு.
சட்டுனு ஞாபகம் வரது,
மனதை தாக்கிய படம், 'saving private ryan'ன் கடைசி அஞ்சு நிமிஷம்,
வயிறை தாக்கிய படம், Jim Carreyன் 'Dumb & Dumber',
சகலத்தையும் தாக்கிய படம், 'Children of heaven',
இதயத்தை தாக்கிய படம், ஆகாசதூது,
இப்படி சொல்லிக்கினே போலாம்....

ஆனா, மாரடோனா, ஃபுட்பால கால்ல தூக்கி அடிச்சு, ஸிஸர் கட் அடிச்சு, பொடீர்னு கோல்ல அடிப்பாரே, அப்படி போட்டு தாக்கின ஒரு படம், இந்த வாரம் பாத்த, Shoot 'em Up!
இந்த 'dark comedy'ன்னு சொல்லுவாங்களே, அதாவது, சிரிப்பு வரும், ஆனா, வாய் விட்டு சிரிக்க முடியாம, மூஞ்சிய சுளிச்சுக்கிட்டே சிரிக்கர மாதிரி காமெடி வகை இது. Dark comedyயிலும், Dark Action Comedy வேர. படத்தின் பேருக்கு ஏத்தா மாதிரி, படம் முழுக்க டுமீல் டுமீல் டூமீல்னு 200 வகையான துப்பாக்கிகளின் ரீங்காரம்தான்.
இதில் விசேஷம் என்னான்னா, இந்தப் படத்தை, அப்படியே, விஜய்காந்த் வச்சு, ரீ-மேக் பண்ணக் கூடிய அளவுக்கு, பல 'நச்' சீன்கள் உள்ளன.
சில விஜய்காந்த் ஸ்டைல் சீன்கள் கீழே:

  • படத்தின் மொத சீன், ஏதோ ஒரு பொண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். வில்லனுங்க தொறத்திக்கிட்டே வருவானுங்க. இதுல பொண்ணு நிறை மாச கற்பம் வேர. ஹீரோ கைதாங்கலா கூட்டிக்கிட்டு ஓடுவார். பொண்ணுக்கு ப்ரசவ வலி வந்ததும், இவரே ப்ரசவம் பாப்பாரு. ப்ரசவம் ஒரு கையால பாக்கும்போது, இன்னொரு கையால், துப்பாக்கியில் சுத்தி இருக்கரவங்கள டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல்னு சுட்டுக்கினே இருப்பாரு.
    கொழந்த பொறக்கும்.
    இங்கதான் டைரக்டர் வச்சாரு ஒரு 'பன்ச்'. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடிய ஹீரோ பாப்பாரா. இவரு என்ன் டாக்டரா, அதை கத்தியால் வெட்ட? நமுட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டே, துப்பாக்கியால் டுமீலுவாரு.
    அதுவரைக்கும், லாப்-டாப்பையும் டிவியையும் மாத்தி மாத்தி பாத்திட்டிருந்தவன், லாப்-டாப்பை சடார்னு, மூடி வச்சு, டிவிய முழுசா கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். என்னமா யோசிக்கறாங்கய்யா ஹாலிவுட்ல. :)

  • இன்னொரு காட்சி. டுமீல் டுமீல் டுமீல் டுமீல்னு சுட்டுக்கினே இருப்பாரு. திடீர்னு குண்டு காலியாயிடும். வில்லன், அந்த நேரம் பாத்து, கேரட் சாப்பிட்டுக்கினு இருப்பான். டக்னு, கிட்டப் போய், காரெட்டுக்கு ஒரு குத்து விடுவார். காரெட், வாய்ல குத்தி, மண்ட வழியா வெளில வந்து, வில்லன் சாவான். ஸ்ஸ்ஸ் :)

  • வில்லனை விமானத்தில் சந்தித்து விட்டு, பாராசூட்ல கீழ குதிச்சு, உடன் குதிக்கும் வில்லன்களை, பறந்து பறந்து ஹீரோ சுடுவாரு.

  • இதுக்கெல்லாம் சிகரம் வச்சா மாதிரி ஒரு மேட்டரு. வில்லன் கிட்ட மாட்டிப்பாரு ஹீரோ. வில்லன், ஹீரோவோட, எல்லா வெரலையும், டபக் டபக்னு ஒடச்சிடுவாரு. வளைஞ்சு கொழைஞ்சு போன வெரல வச்சுக்கிட்டு, க்ளைமாக்ஸ்ல வில்லன எப்படி சுடரது? சுடாம சாகடிச்சா, தெய்வ குத்தம் ஆயிடுமே. அதனால, ஹீரோ என்னா பண்ணுவாருன்னா, துப்பாக்கியிலிருந்து புல்லட்டை எடுத்து, அஞ்சு விரலிடுக்கிலும் சொறுகிப்பாரு. அப்பாலிக்கா, மெதுவா நகந்து நகந்து, அங்க எரியர ஒரு நெருப்பு கிட்ட கைய கொண்டு போவாரு. புல்லட் பத்திக்கிட்டு, துப்பாக்கியிலிருந்து போவது போல், விர்ர்ர்ர்னு பறந்து போய் வில்லன போட்டுத் தாக்கிடும்.

    இப்படிப் பட்ட, ஜெகஜால சீன்கள் நிறந்த படத்தை, அண்ணன் விஜயகாந்தை வைச்சு யாராச்சும் சீக்கிரம், ரீ.மேக் பண்ணி,யூ.ட்யூப்ல போட்டா பாக்கலாம் ;)

    சரி, இனி, மத்த கேள்விகளை, டக் டக்னு பாக்கலாம் ;)
    1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
    ஓரளவுக்கு ஞாபகம் இருக்கரது, நாலாங்கிளாஸ் படிக்கர போது, பாபு-கோபுன்னு ஒரு படத்துக்கு, பல்லாவரம், லக்ஷ்மி தியேட்டருக்கு, ஸ்கூல்ல கூட்டிக்கிட்டு போய் காட்டினாங்க.. அண்ணாநகர் டவர்ல, பாபுவும்-கோபுவும் சர்ர்னு, பைக்ல கீழ எறங்கர சீன் ஞாபகம் இருக்கு. பம்மல், ஷண்முகா டாக்கீஸில், மண் தரையில் அமர்ந்து பாத்த, 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', நாலாவது படிக்கும் போது பாத்தது, லேசா ஞாபகம் இருக்கு. 50 காசு டிக்கெட்டும், அந்த 'சில்' மணலின், ஸ்பரிசமும் இன்னும் ஞாபகம் இருக்கு.
    ஒண்ணும் 'உணர்ந்த'தா ஞாபகம் இல்லை. 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'ல வர பாட்டெல்லாம் ரொம்ப பிடிச்சதா, அப்பவே அதெல்லாம் முணுமுணுத்த ஞாபகம் இருக்கு. படத்தை விட, பாட்டில் ஈர்ப்பு இருந்துச்சுன்னு நெனைக்கறேன்.

    அப்பரம், அஞ்ஞாவது படிக்கும்போது, நானே நடிச்ச அன்புள்ள ரஜினிகாந்த் பாத்ததெல்லாம், சொன்னா, ஓவர் தம்பட்டம் ஆயிடுமோ?

    'ராஜா சின்ன ரோஜா, பூந்தளிரே, இன்பக் கனியே'ன்னு அந்த அம்மா, ஆவியா பையன் பின்னால பாடிக்கிட்டே போனது, இன்னும் பசுமையா ஞாபகம் இருக்கு.

    2). கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

    பலரைப் போலவே, நானும், சரோஜா தான்.

    3). கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    ஒரு வாரத்துல, எப்படியும், மூணிலிருந்து, ஆறு படம் வரைக்கும் பாத்துடுவேன். இதில், பாதி தமிழ்படம் தான்.
    போன் வீக்-எண்ட் பாத்தது, தாம்-தூம்.
    செம போர். விறு விறுப்பா எடுக்கணும்னு நெனச்சு, சூடு போட்டுக்கிட்ட மாதிரி இருந்துச்சு. ஆனா, விஷுவலா, கலக்கலா இருந்தது. ஜீவாவுக்கு சொல்லித் தரணுமா, எல்லா காட்சியூம் கண்ணுல ஒத்திக்கர மாதிரி இருந்தது.
    கல்யாணம் நிச்சயம் ஆன, ஹீரோ, நைட் க்ளப்புக்கு போய் கண்டவுள்டன் ஆடிய பின், ஆபத்தில் மாட்டிக் கொண்டதால், நமக்கு பெரிய அனுதாபம் எல்லாம் வரலை.

    4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

    கமலின் 'சத்யா'வைச் சொல்லலாம். ஜாலியான ஸ்கூல் வயசில் பாத்ததால் இருக்கலாம். அந்த தாடிக் கமலை, மறக்கவே முடியாது. பஸ்ல, அவரு ஃபுட்போர்டு போன அழகே, பல மாசம், என் கும்பலை, 'தாக்கியது' :)

    5அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

    'டமில்'ல பேரு வச்சா, இனாம் தரோம்னதும், எல்லா பரதேசிகளும், தேடி ஆராஞ்சு, டமீல்ல பேரு வெக்கர கேவலமும்.
    டமில் மொழிய, தாங்கிப் பிடிக்க, இந்த மாதிரியெல்லாம் திட்டம் போட்டாதான் உண்டுன்னு நெனைக்கர அரசியல் கேவலமும்.

    5ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

    இதயத்தை திருடாதே படம் +1 படிக்கறேன்னு நெனைக்கறேன். நண்பர்கள் 20 பேரு, ஒரே வரிசையில் ஒக்காந்துக்கிட்டு பாக்கறோம்.
    ஒரு சீன்ல, நாகார்ஜுன், ஜன்னல்ல வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரூ.
    நாயகி, கதவை திறப்பாங்க.
    கதவின் வழியாக, பனிப்புகை படர்ந்து போய், ஹீரோவின் காலை வருடும். அப்ப, ஹீரோ திரும்பிப் பாப்பாரு.
    பி.சி.ஸ்ரீராம் என்ற ஸ்டார் சினிமாட்டோகிராஃபர் செஞ்ச மாயாஜாலம், போட்டுத் தாக்கிச்சு.
    அதே படத்தில், ஷூவிலிருந்து, தண்ணி சொர் சொர்னு வருமே? ஆஹா, மறக்கவே மூடியாத தாக்கு அது!

    6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

    யெஸ்! அடிக்கடி!

    7.தமிழ்ச்சினிமா இசை?

    Ofcourse! ராஜாவின், பரம வெறியன். ஏ.ஆர்.ரஹ்மானின், வெற்றியை ஒத்துக் கொள்ளவே மனசில்லாமல், சமீபத்தில்தான், 'நல்ல இசை எங்கேருந்து வந்தாலும் ஏத்துக்கணும்'னு ஒரு முடிவுக்க வந்தேன் ;)
    'காதல்' படத்தில் வரும், 'உனக்கென இருப்பேன்' பாட்டுக்கு, கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன். கெரகம் புடிச்ச ராகத்த பாடத்தான் முடியலை. அவ்ளோ 'சங்கதி' இருக்கு இந்த பாட்டுல.
    சின்ன வயசுல, MSV சிவாஜிக்கு போட்ட பாட்டெல்லாம், 'அறுவை'ன்னு ஒதுக்கி இருந்தேன். வேலைக்கு போக ஆரம்பிச்சப்பரம்தான், MSV பாடல்களின் ஆளுமையும், qualityம் புரிகிறது. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டு மாதிரி ஒரு pathos, இனி வராது. பாரதியாரின் வரியில் ஆரம்பித்து, கண்ணதாசன் தீட்டிய கவிதைக்கு, அந்த சோக கீதம் தந்தது, இப்ப கேட்டாலும் இனிக்குது. Simply Superb!

    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

    ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
    வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

    முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்
    பிள்ளைக் குலமடியோ பேதமை செய்ததடி


    9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

    க்க்க்ம்! (அன்புள்ள ரஜினிகாந்த்தில்) 'நடித்த' அனுபவம் உண்டுன்னு, எவ்வளவு தடவதான் அலப்பரை பண்றது :)
    ஆணி புடுங்கர வேலை போதும்னு முடிவு பண்ணிட்டா, அது, அட்லீஸ்ட், ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராபராவது ஆகமுடியுமான்னு பாக்கணும்.
    நட்பு வட்டாரத்தில், 'இவனோடு ஃப்ரெண்டு' அஸிஸ்டெண்ட்டு டைரக்டர், அவனோட ஃப்ரெண்டு டைரக்டர்னு பேச்சு அடிப்படும்.
    ஒரு 'பாப்புலர் டைரக்டர்' என் நண்பனுக்கு நண்பன். ஆனா, அவருக்கு என்ன தெரியுமான்னு தெரீல.
    இன்னொருத்தர், ஒரு படம் டைரக்ட் பண்றாரு, அடுத்த மாசம் ரிலீஸாம்.
    நெறைய பேர் இருக்காங்க. ஆனா, பலருக்கும் என்னை தெரியாது ;)

    பிற்சேர்க்கை: "நீங்க ஏன் தொடர்ந்து நடிக்கலைன்னு", சேட்டிலும், ஈமெயிலிலும் கேட்ட அன்பு உள்ளங்கள்ளுக்கு இந்த பதில்:

    ரஜினி பாக்கதான் நல்லவரா தெரியறாரு. சக நடிகர்களை வளர்த்து விடும் பக்குவம் அவருக்கு இல்லை. எங்கே நான் அவரை பின்னுக்கு தள்ள்ளிவிடுவேனோ என்ற எண்ணத்தில் எனக்கு சரியான காஸ்ட்யூம் கூட கொடுக்கலை படத்துல.
    ப்ளாஸ்டிக் கண்ணாடியில், மை தடவி, கூலிங்கிளாஸ் மாதிரி போட்டுக்கச் சொன்ன கொடுமை எல்லாம் கூட எனக்கு நடந்தது.
    நாலாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த எனக்கு, ரஜினியின் அரசியல் அப்ப புரீல.
    ஒரு நல்ல நடிகனை, தமிழ் திரையுலகம் இழந்தது.
    வேறென்ன சொல்ல?


    10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    50 மொக்கை வந்தா, ஒரு நல்லது வருது. இந்த ரேஷியோ மாறும் வரைக்கும், கமல், மணி, பாலாவை நம்பி மட்டும்தான் இருக்கு நம்ம உலகம். சமீபத்தில் மில்ட்டன் ரொம்பவே கவர்ந்தாரு. அப்பரம், 'காதல்' பாலாஜி சக்திவேல்.

    11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

    தமிழர்களுக்கு நல்லதா இருக்கலாம். என் கதி அதோ கதிதான்! இப்பவே கண்ண கட்டுதே.
    சினிமா இல்லன்னா, வெட்டி நேரத்தை என்னாதான் பண்றது?
    ;)

    தொடர்ந்திழுக்க யாரக் கூப்பிடலாம்னு யோசிச்சு தமிழ் மண முகப்பில் பாத்தப்ப, சட்டுனு மாட்ன அஞ்சு பேரு:
    1. வாத்தியார் - எந்திரன் ஓடுமா வாத்தியார்? நல்ல நேரத்துல ஆரம்பிச்சிருக்காங்களா படப்பிடிப்பை? :)
    2. கிரி - பின்னூட்டத்தில் காட்டும் கொலை வெறியை, வேர எங்கையாவது காட்டினா, இவரு பெரிய ஆளா வருவாரு :)
    3. அமல் - நல்லா படம் பிடிப்பீங்கன்னு தெரியும். படம் பாப்பீங்களா?
    4. ஷ்யாமளி அத்தை - "Jeeves, PiTல் இருக்கர, படங்களை தொடச்சு தொங்கப் போடுங்கன்னா", ஷ்யாமளி அத்தைக்கு ஸ்டெனோ வேல பாத்துக்கிட்டு இருக்காரு. :)
    5. செந்தழல் 'ஷர்லாக் ஹோம்ஸ்' ரவி - ரெண்டு பதிவர்கள் ஃப்ரெண்டிலியா இருந்துடக் கூடாது, அதுக்குள்ள ஸ்ப்லிட் பர்சனாலிட்டி அது இதுன்னு, கொண்டைய தேடிப் போயிடறீங்களேய்யா? என்ன நியாயம் இது? ;)

    6. வேர யாராவது எழுத ஆசப் பட்டீங்கன்னா சொல்லுங்க, பேர சேத்துடறேன். ;)

    ஹாப்பி வெள்ளி!

    ;)
  • Tuesday, October 21, 2008

    Chandrayaan-1 - Indias mission to MOON

    சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா ஏவுகணையாகும்..
    more info on this in tamil wikipedia here...

    கீழே, சந்திராயன் ஏவப்படும் காட்சி.

    ரொம்ப மகிழ்ச்சி தரும் செய்தி இது.
    விஞ்ஞானிகளிக்கு வாழ்த்துக்கள்.

    2025ல் மனிதனை நிலவுக்கு அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் திட்டம் வைத்துள்ளார்களாம்.

    பி.கு: இதுக்குள்ள நெலால ஏக்கர் கணக்குல நெலம் விக்கராங்களாம். அத வாங்கவும் கூட்டம் அலமோதுதாம். கிர்ர்ர் :).



    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்க!

    Monday, October 20, 2008

    சாருவுக்கு ஒரு குட்டும், சரோஜாவுக்கு ஒரு தட்டும்...

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதிய சாருவும் என் CEOவும் பதிவில் போட்ட சர்வே முடிவுகள் கீழே.
    மக்களில், 160 பேருக்கு மேல், சாருவை குட்டியிருக்காங்க.


    சரோஜா படம் பத்தி, என்னதான் ஈ-அடிச்சான் காப்பின்னெல்லாம் பதிவுகள் வந்தாலும், மக்களுக்கு பெருவாரியா படம் புடிச்சிருக்கு.
    ரொட்டீனான படங்களுக்கு நடுவில் வித்யாசமான கதை அம்சத்துடனும், நச் திரைக்கதை நகர்த்தலாலும், நம்மில் பலரை கவர்ந்திருக்கு.
    காப்பி ஆத்தியதால், வெ.பிரபுவுக்கு லேசான ஒரு தட்டு.
    நல்ல படம் தந்ததால் ஒரு ஷொட்டு!


    வாக்களித்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

    எமது வாக்கெடுப்பின் தரத்தில் நம்பிக்கை கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெருவார்கள் என்ற கருத்துக் கணிப்பை நம்மை நடத்தச் சொல்லி, அமெரிக்க நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
    அவங்க நடத்தும் தேர்தல் முடிவுகள், தெளிவா வரலன்னா, நம்ம சர்வே ரிசல்ட்டை எடுத்துக்கிட்டு, ஜனாதிபதி யாருன்னு முடிவு பண்ணுவாங்களாம்.
    ஸோ, யோசிச்சு அமெரிக்க ஜனாதிபதியா யாரு வரணும்னு, க்ளிக்குங்க


    ;)

    Sunday, October 19, 2008

    OBAMA it is?

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாளே உள்ள நிலையில், இன்னும் பலருக்கு யாருக்கு வாக்களிக்கணுங்கர தெளிவு இல்லியாம்.

    ஜான் மெக்கெயின் பாக்க, ரொம்ப கண்டிப்பான, திடமான ஆசாமி மாதிரி தெரிந்ததால், ஜனாதிபதி வேலைக்கு 'சரியான' ஆள் மாதிரி இருந்தது.

    ஆனா, சென்ற வாரம் இவரு, டேவிட் லெட்டர்மென் கிட்ட‌, வழிஞ்ச வழிசலைப் பாத்தா, ரொம்ப சொத்தையா தெரிஞ்சாரு.

    அதைத் தவிர, சாரா பாலின், ஒரு பெரிய நெகட்டிவ்!

    இந்தப் பக்கம் ஒபாமா பாத்தா, பேசரதெல்லாம், ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆசாமி மாதிரி தெரியல. ஹாலிவுட் தனமாதான் இருக்கு பேச்செல்லாம்.

    இப்ப, காலின் பவல், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கரது ஒரு பெரிய விஷயமா படுது.

    எட்டு வருஷம், இரண்டு போரும், பல பில்லியன் செலவும், லட்சக் கணக்கில் உயிர் சேதமும் செய்த கட்சி,மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாதுன்னே பட்சி சொல்லுது.

    இங்க, இப்பெல்லாம் ரெண்டு பேர் சேந்தாலே, எலெக்ஷன் பத்தின பேச்சுதான். நமக்குதான் அரசியல் அறிவும், வரலாற்று அறிவும் கெம்மியாச்சே. யூ.ட்யூப் அறிவை வச்சு இப்படி அப்படி சமாளிச்சிக்கிட்டு வாரேன்.
    பலரும், எந்தப் பக்கம் வோட்டுப் போடுவாங்கன்னு திடமா முடிவு எடுக்கல. யோசிக்கிட்டு இருக்காங்களாம்.
    இவங்க, அலசி, ஆராஞ்சு, யோசிச்சு ஓட்டுப் போடரது ஆச்சரியமா இருக்கு.

    எம்.ஜி.ஆரு, கத்தி சண்டை போட்டு, வில்லனை அடிச்சதாலும், கருணாநிதி கோர்வையா, உடன்பிறப்புக்கு எழுதர லெட்டராலும், அம்மாவின் பாலுள்ள ஈர்ப்பாலும், இலவச டிவி அரிசி வேட்டி நிலம் மின்சாரம் தொ.காட்சியாலும்தான நாமெல்லாம் யாருக்கு ஓட்டு போடணும்னு முடிவு பண்ணுவோம்.

    இப்படி ஆராஞ்சு, ஓட்டுப் போடர இந்த ஊரு மக்களை நெனச்சா பாவமா இருக்கு. ;)

    யாராவது (பா.பாலா?) விஷயம் தெரிஞ்சவங்க, ஒரு அட்டவனை போட்டு, இவரு இத சொல்றாரு, அவரு அத சொல்றாரு.
    இவரு வந்தா இவங்களுக்கு நல்லது;
    அவரு வந்தா அவங்களுக்கு நல்லதுன்னு ஒரு அட்டவனை போட்டா, மனப்பாடம் பண்ணி, இந்த கும்பல்களில் பேசி சமாளிக்க உதவியா இருக்கும்.

    மனது வைப்பார்களா, பா.பாலா கோஷ்டிகள்? ;)

    something like this:


    யாரு ஜெயிக்கணும்னு நீங்க நெனைக்கறீங்க?
    ( வாக்குப் பெட்டி தெரியலன்னா, இங்க க்ளிக்கிப் போடுங்க‌ )

    Thursday, October 16, 2008

    277 கமெண்ட்டா? இதெல்லாம் நல்லால்லப்பா...

    என்னங்கய்யா நடக்குது அங்க. இப்படி அநியாயம் பண்ணா நானெல்லாம் என்னா பண்றது?
    எங்கையாவது போய்ரவா? கேக்க ஆளில்லையா?

    நான் இங்க Warren Buffet கணக்கா, கோடீஸ்வரன் ஆரதுக்கான இலவச அட்வைஸு அள்ளி வீசுனா, அத்த புடிச்சுக்கினு போயி, எனக்கு சம்பாதிக்கரதுல ஒரு நயா பைசா தராம, அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்டாவது போட்டுத் தொலையலாமில்ல?

    இந்தப் பக்கம் என்னடான்னா, vettiaapiser rapp பக்கத்துல, 277 கமெண்ட்டு போட்டு தாக்கிக்கிட்டு இருக்காங்க. 300 கொண்டு போவணுமான்னு கேக்கறாங்க.
    இன்னா விசுவாசம், இன்னா அக்கர, இன்னா team work, இன்னா நட்பு, இன்னா மஜா.



    என் ரசிகப் பெருமக்களே, வெக்கமா இல்லையா உங்களுக்கு? பொங்கி எழ வேணாமா நீங்க? அட்லீஸ்ட், என் பேரக் காப்பாத்த, ஒரு ஏழெட்டு கமெண்ட்டாவது போட்டுத் தொலைய வேணாமா?

    ஸ்ஸ்ஸ்.

    ஹ்ம். நல்லாருங்க!

    ;) ஹாப்பி வெள்ளி!

    பி.கு: ("யோவ், நீ எழுதிக் கிழிக்கர அறுவைக்கு, உன்னை தமிழ்மணட்த்துல வச்சிருக்கரதே பெருசு. பேசாம் கெட"ன்னு முணு முணுக்கரது யாருங்க? ;) )

    பங்குச் சந்தை கோயிந்த்சாமி

    மேலே போரது எல்லாம் கீழ வந்துதான் ஆகணுங்கரது சின்ன புள்ளைக்கு கூட தெரியும். வளந்து கெட்ட நமக்குதான் தெரியமாட்ரது.

    எவ்ளோ பட்டாலும் புத்தியும் வரமாட்டேங்குது. இதுதான் பெரிய அதிசயம்.

    பங்கு வணிகம் ஒரு போதை தரும் சூதாட்டம். இதுல வெளையாட, பெரிய அறிவாளியா எல்லாம் இருக்க வேணாம்.
    இன்ஃபாக்ட், கொஞ்சம் முட்டாளா இருந்தா பெட்டர்.

    கொஞ்சம் பணமும், அதைப் போட்டு வெளையாட தெகிரியமும் இருந்தா போதும்.

    அமெரிக்க பங்கு சந்தையில் விளையாட எதுவுமே வோணாம். துட்டு மட்டும் போதும். அப்பப்ப, துட்ட எடுத்து சந்தையில் போட்டு, அது எரிஞ்சு போரத பாக்க, ஆணி அதிகம் இல்லாத வேலை இருந்தா போதும்.

    சில மாசமா, இங்க வங்கிகள் பல ஆட்டம் கண்டதால், வரிசையா ஒவ்வொரு நிறுவனமா ஆடிக்கிட்டே இருக்குது.

    பங்குச் சந்தையும் சரக்கடிச்ச கோயிந்த்சாமி பல்லாவரம் ரோட்டுல சைக்கிள்ள போவர மாதிரி, மேலையும் கீழையும், வலப்பக்கமும் பீச்சாங்கய் பக்கமும் சுவாய்ங் சுவாய்ங்க்னு போவுது.

    பங்குச் சண்டையில் வெளையாடும் அசகாய சூரர்களாகிய நானும் என் சகாக்களும், சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கணக்கா, "விட்டது பிடிக்கலாம் மச்சி"ன்னு, ஆயிரம் ஆயிரமாயிரமா உள்ள எடுத்து எடுத்து விட்டுக்கினு இருக்கோம்.
    ஆரம்ப காலத்துல, கொஞ்சம் பக்னு இருக்கும், ஆயிரம் டாலர் பஸ்மமா போவரத பாக்க. ஆனா, மெதுவா, தைரியம் வரும். பணத்தை ஒரு துச்சமா மதிக்கும் மனப்பான்மை வந்துடும். கிட்டத்தட்ட ஒரு ஞானி லெவலுக்கு வந்துடுவோம்.

    ஆயிரம் போட்டமே, ஆயிரம் ஆயிரத்தி இருநூறு ஆச்சே, அத்த வித்தமா, லாபம் பாத்தமான்னு இருப்பமா?
    ஹ்ம்ஹூம்! இருநூறெல்லாம் பத்தாதே.
    இன்னும் மேலப் போவும்டான்னு, வாயப் பொளந்துக்கிட்டு, 'refresh' அடிச்சுக்கிட்டே இருப்போம்.
    ஒரு மீட்டிங்க் போயிட்டு வரதுகுள்ள, இருநூறு, நூறாயிடும்.
    "டேய் எறங்குதுடா, வித்துடலாமா"ன்னு உள்ளூரத் தோணும்.
    "ச, அதுதான் இருநூறு போச்சே, திரும்ப மேல போவும். அப்ப, ரொம்ப ஆசப் படாம, ஒடனே வித்துடலாம்"னும் தோணும்.
    "டேய்ய்ய். வாங்குன வெலைக்கே திரும்ப வந்துடுச்சு. நட்டமாரதுக்குள்ள வித்துடலாமா"ன்னும் தோணும்.
    "ச.ச. இத்த வாங்கரதுக்கு செலவு பண்ண 20 டாலர் கமிஷனாவது வந்தாதான் விக்கணும். நாளைக்கு மேல போயிடும். அப்ப சமத்தா வித்தடலாம்"னும் தோணும்.
    "டேய் டேய் 150 டாலர் நட்டம்டா. கொம்பேனி சரியா போகலியாம். சீக்கிரம் வித்து, நட்டத்தையாவது கொறைடா"ன்னும் தோணும்.
    "ஐயே! நஷ்டத்துக்கெல்லாம் விக்கக் கூடாது. அப்படியே அத்த, long-term வச்சுக்கிட்டா, திரும்ப அடுத்த மூணு மாசத்துல, டபுலாயிடும். அப்ப வித்துக்கலாம்"னும் தோணும்.

    இப்படியே நெருப்புக் கோழி கணக்கா, மண்ணுக்குள்ள தலைய விட்டுக்கிட்டு, தன்னை சுத்தி ஒண்ணுமே நடக்கலங்கர கணக்கா, ஆயிரம் டாலரு அப்படியே முட்டையாயிடும்.

    இந்த ஆட்டையில், துட்டு பண்றதுக்கு ஒரே வழி, சில சுய நெறிமுறைகளுடன், கட்டுப்பாட்டுடன், பேராசை இல்லாமல் செயல் படரதுதான்.

    > ஆயிரம் போட்டமா,

    > ஆயிரம் ஆயிரத்தி நூறாச்சா - வந்த வரைக்கும் போதும். வித்துடணும்

    > ஆயிரம் தொள்ளாயிரத்து அம்பது ஆச்சா - அம்பது டாலர் நட்டம். பரவால்ல, அதுக்குக் கீழ போரதுக்குள்ள வித்துடணும்.

    > அவன் சொல்றான், இவன் சொல்றான்னு எத்தையும் வாங்கக் கூடாது

    > ஒரு கொம்பேனியின் பங்கை வாங்கரதுக்கு முன்னாடி, அந்த பங்கு பத்தி, ஒரு மூணு மாசமாவது அலசி, அதன் ஏற்ற இறக்கம் எப்படி. நல்ல சேதி வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுது, கெட்ட சேதி வந்தா என்ன பண்ணுது. ஊர்ல நடக்கர நல்ல கெட்ட விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுதுன்னெல்லாம் அலசி, ஒரு அட்டவனை போட்டு, அந்த பங்கை நல்லா 'பரிச்சயம்' பண்ணிக்கங்க.

    > ரெண்டோ மூணோ பங்கை மட்டும், அலசி வாங்கி விக்கணும். ஊர்ல இருக்கரது மேலையெல்லாம் கண்ண வச்சுக்கிட்டு, கண்டதையும் வாங்கி, கண்டதையும் விக்கறேன்னு அலப்பரை எல்லாம் பண்ணக் கூடாது.
    > call/put optionsன்னு ஒண்ணு இருக்கு. இது சூதாட்டத்திலும் பெரிய சூதாட்டம். இதெல்லாம் முழுசா புரியலன்னா உள்ள போவாதீங்க. சுண்டி இழூத்து, ஆளக் கவுத்துடும். எல்லாமே 'சீப்பா' இருக்குதேன்னு, ஆரம்பிச்சீங்கன்னா, அங்க ஆயிரமாயிரமா போரது, இங்க நூறு நூறா போகும். ஒரே வித்யாசம், அங்க சில ஆயிரம் போனா சுதாரிச்சிடலாம். இங்க கொஞ்சமா போறதால, வெளீலயும் வர மனசில்லாம, மொத்த போண்டி ஆரவரைக்கும் உள்ளக் கெடக்க வேண்டி வரும்.

    * Discipline,
    * 0% Greed (பேராசை/Greedக்கு antonym இன்னாப்பா?),

    இது ரெண்டும் தான் வெற்றிக்கான சூட்சமம்!

    நீங்க எப்படி?

    லாபமா?
    பெருத்த லாபமா?
    நட்டமா?
    பெருத்த நட்டமா?
    நெருப்புக் கோழியா?

    ஹாப்பி வெள்ளி! பாத்து விளையாடுங்க. வாழ்க்கை வாழ்வதர்க்கே!

    பி.கு: Mittal Steelன்னு ஒரு கொம்பேனி இருக்கு. $90, $100 எல்லாம் பாத்த பங்கு. இப்ப கீழ சுவாய்ங்க்னு போயி $29ல நிக்குது. இத்த இப்ப வாங்கி, சில மாசம் வச்சுக்கிட்டீங்கன்னா, மூணு மடங்காகலாம்.
    ( இப்படி சந்தைல கண்டதையும் சொல்லுவானூங்க. இத்தயெல்லாம் கேட்டு நீங்க வாங்க ஆரம்பிச்சீங்கன்னா, ஆப்புதான் ) நாராயண நாராயண!


    ;)

    Wednesday, October 15, 2008

    அனானிகளும் முகமூடிகளும் ஜாக்கிரதை!

    கொஞ்ச நாளா ஆர்க்குட்டில் தீவிரமாக இயங்கி வருகிறேன். அங்கு சந்தித்த பள்ளி கால நண்பர்களைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன்.
    ரொம்ப ஜாலியா போயிக்கிட்டு இருக்கு, ஆர்குட் வாழ்க்கை.
    இங்க செலவு செய்ர நேரத்தை அங்க செலவு செஞ்சா, மனசு லேசாகுது.

    ஆனா, இங்க அறிவு வளருது, வரலாறு புரியுது, அரசியல் வெளங்குது (அது சரி:) )

    ஆர்குட்ல சொந்தப் பேர்ல கணக்கு வச்சு கும்மியடிப்பதால், அப்பப்ப, ப்ரவுஸர்ல, அந்த கூகிள் கணக்கே, லாகின் ஆகியிருக்கும். தமிழ் பதிவுகள்ள, பின்னூட்டம் போடும் போது, இத கவனிக்க சில சமயம் மறந்து, சொந்தப் பேர்லயே பின்னூட்டும் அபாயம் இருக்கு. ( சில முறை பின்னூட்டவும் ஊட்டியாச்சு ).

    இந்த, விபத்தை தவிர்த்து, தமிழில் அனானி/முகமூடியாகவும், ஆர்குட் மாதிரி தளங்களில், சொந்தப் பெயரிலும் இயங்கணும்னா, 'submit' அடிக்கரதுக்கு முன்னாடி, கண்ணுல வெளக்கெண்ண விட்டு, எந்தப் பேர்ல போடரோம்னு நிதானிச்சு கவனிக்கணும்.

    ஆனா, ஐஸாக் நியூட்டனை, விஞ்சும், கருத்தெல்லாம், பின்னூட்டத்தில் தட்டச்சிவிட்டு, அதை உலக மக்களுக்கு ஒரு நற்செய்தியா சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இந்த நிதானம் எல்லாம் இருக்காது.

    ஸோ, முகமூடி கிழிய, 80% சான்ஸ் இருக்கு.

    இதிலிருந்து, முழுசா தப்பிக்கணும்னா, சிம்பிளான ஒரே வழி, ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு ப்ரவுஸரை உபயோகிப்பதுதான்.

    ஆர்குட்டுக்கு, நெருப்பு நரியும்,
    தமிழ்மணத்துக்கு, I.Eயும் வெச்சுக்கிட்டா, இந்த ப்ராப்ளம் வராமல் தப்பிக்கலாம்.

    இன்னும் ஒரே ஒரு வழி, பின்னூட்டத்தில், உங்க பெயரை தட்டச்சாமல், பொத்தாம் பொதுவா அடிக்கும் முறை. ஆனா, நம்ம அடிக்கர பாஷைலயே, மோப்பம் புடிச்சுடுவாங்க, கெரகம் புடிச்சவங்க ;)

    சாக்கிரதையா இருங்க, ஃபெலோ அனானீஸ் & முகமூடீஸ் & மை டியர் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ், என்ற அறிவுரையுடன், உங்களிடமிருந்து, விடை பெறுவது,

    உங்கள் நண்பன்,

    சர்வேசன்!

    பி.கு: சென்னை மாநகராட்சி, ஆன்லைன்ல, பிறப்பு இறப்பு சர்டிபிகேட் தராங்களாம். ஆனா, யார் வேணா, யார் பிறப்பு/இறப்பு சர்ட்டிபிகேட்ட வேணா, ஈசியா வாங்கிடலாம் போலருக்கு.
    Ganesanனு அடிச்சு, searchனா, ஊர்ல இருக்கர மொத்த கணேசனும் வராங்க்ய. இது நல்லதா கெட்டதா? பிறப்பு தேதி, இறப்பு தேதிய, கட்டாயமா வாங்கணும், அந்த பக்கத்துல, இல்லன்னா, கண்ட கண்ட ப்ரச்சனையெல்லாம் வரும் வாய்ப்பிருக்கு. உஷாரு! மாநகராட்சியில் ஆணி பிடிங்கும் யாராவது இதை கவனிப்பார்களா?

    Tuesday, October 14, 2008

    நாத்திகத்துக்கு ஒரு விளம்பரம்

    இம்மாத PiT போட்டித் தலைப்பு விளம்பரம்/advertisement.

    இதுவரை வந்த படங்களில் சில 'மிரள' வைத்தன.

    பாத்திருப்பீங்க!. பயங்கரமான தெறமைய உள்ளுக்குள்ள வச்சிருக்காங்க, சில பேரு.
    அவங்க எடுத்து போட்டிக்கு அனுப்பர படமெல்லாம் பாக்கும்போது, பேசாம, என் படப் பொட்டிய மூட்ட கட்டி வச்சிடலாமான்னு தோணுது.
    எவ்வளவு குனிஞ்சு நிமிந்து எடுத்தாலும், ஒரு 'நச்' படம் வரவைக்க, ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கு.

    'விளம்பரத்துக்காக' டச்சுக்கு டச்சுக்குன்னு எடுத்து பாத்தும், பளிச்னு ஒண்ணும் தேறல.
    (போட்டிக்கு வந்த 'மிரள' வைக்கும் படங்களைப் பாத்தப்பரம் வந்த complexஆன்னு தெரீல ;))

    இப்ப எடுத்த படம், சுடச் சுட உங்கள் பார்வைக்கு!
    விமர்சுங்க, ப்ளீஸ்!

    நாத்திகம்? ( க்ளிக்கி பெருசா பாக்கலாம் )


    இது லுளூலுளுவாய்க்கு 'Diamond Matches' (இந்தப் படம் சரியா வராத கடுப்புலதான் நாத்தீக சிந்தனைகள் ஊத்தெடுக்குதோ? ;))


    :)

    Sunday, October 12, 2008

    பாஸ்டன் பாலா அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார்?...

    அமெரிக்க News3 Channelல் பாஸ்டன் பாலாவின் தேர்தல் பங்கேற்பு பற்றி வந்த செய்தி!

    கீழே வீடியோ தெரியாதவர்கள், இங்கே க்ளிக்கியும் பார்க்கலாம்.

    தயவு செய்து வீடியோவை முழுதும் பார்த்து, கடைசியில் இருக்கும் சர்வேயில் வாக்களித்து, அவருக்கு உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நம்மில் இருந்து ஒரு பதிவர், பொது வாழ்வில் இணைவது, மகிழ்ச்சியைத் தருகிறது.

    Thursday, October 09, 2008

    Mixture - கமாண்டர் சுவாமிஜி, தற்கொலை

    வணக்கம் நண்பர்களே! ஹாப்பி வெள்ளி!

    அமெரிக்க அட்லாண்டாவில் ஒரு சுவாமிஜி இருக்காரு. ஆள் பாக்கவே சூப்பரா டி.வி சீரியல் ஹீரோ மாதிரி இருப்பாரு. இந்த ஊர்ல கிடைக்கிர எந்த பத்திரிகை பாத்தாலும், ஸ்டைலா சிரிச்சுகிட்டே ஆசீர்வாதம் பண்ற போஸ்ல இருப்பாரு.
    குடும்ப பிரச்சனைகள்,மன உளைச்சல்கள் மாதிரி ப்ரச்சனைகளுக்கும், கேன்ஸர் மாதிரி உடல் ரீதியான கோளாறுகளுக்கும், இவரிடம் சென்றால் 'குணம்' கிடைக்கும்னு, அந்த விளம்பரங்கள் எல்லாம் முழுப்பக்கத்துல, நல்ல காமெடியா இருக்கும் படிக்க.
    மேலும் இருபத்தி நாலு மணி நேரமும், பக்தகோடிகளுக்காக தொலைபேசி வழி customer serviceம் இருக்கிறதாம்.
    பல கோடி ரூபாயில், இவர் சொந்த செலவில் ஒரு சர்ச்சை வாங்கி, அதை கோயில் ஆக்கியிருந்தாராம்.
    புதிய காருக்கு பூஜை, புதிய வீட்டுக்கு பூஜை, அதுக்கு பூஜை, இதுக்கு பூஜை, என, எல்லாத்துக்கும் ஒரு ஃபிக்ஸட் கட்டணத்துக்கு இவரின் 'கோயிலில்' சேவை உண்டு.
    வீட்டுக்கே, ஃப்ளையிங் விஸிட் அடித்து ஸ்பெஷல் பூஜை செய்யவும், இவரின் கோயில் பூசாரிகள், எப்பொழுதும், தயார் நிலையில் இருப்பர்.

    இப்பேர்பட்ட கமாண்டருக்கு வந்தது சோதனை.
    இவரின் serviceஐ உபயோகிக்கும் பக்த கோடிகள் கொடுக்கும், க்ரெடிட் கார்டை, அடிக்கடி தேய்த்து, அதிலிருந்து பணத்தை உருவுவாராம்.
    இதை யாரோ, ஜார்ஜியாவில் இருக்கும் பக்தர், உள்ளூர் தொலைக்காட்சிக்கு போட்டுக் கொடுக்க, அவங்க நிருபரும், தான் படித்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸத்தை பரீட்சனை செய்து பார்க்க, குட்டிக் கேமராவுடன், மாறுவேஷத்தில், சுவாமிஜியை பாக்க போயி சுவாமிஜியின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்திவிட்டுட்டாரு.
    பேட்டியின் போது, கோயிலின் ஹாலை, ஒரு பார்ட்டிக்கு வாடகை கேட்டிருக்காரு. பார்ட்டியில் சரக்கடிப்போம் பரவாயில்லையான்னு கேட்டதுக்கு, அதெல்லாம் பரவால்லன்னுருக்காரு. சுவாமிஜி.
    துட்டு வந்தா போதும் போல.
    ஒவ்வொரு பார்ட்டி முடிந்ததும், பியர் பாட்டில்களும், நான்-வெஜிடேரியன் உணவு வகைகளும் பரவலாய்க் காணக் கிடைக்குமாம்.
    சுவாமிஜியின் வீடு மில்லியன் டாலர் பெருமானம் உள்ளதாம்.
    இப்படி, அடுக்கிக்கிட்டே போராங்க.

    அட்லாண்டா வாசிகளே, உஷாரு!

    சுவாமி, தூண்லயும் இருக்கார், துரும்புலயும் இருக்காரு, மறக்காதீங்க.
    கோயிலுக்கு போயே ஆகணும்னா, போயிட்டு, ஃப்ரீ சாப்பாடு சாப்பிட்டுட்டு, உண்டியல்ல, $1 போட்டுட்டு திரும்ப வந்துருங்க. க்ரெடிட் கார்டெல்லாம் கொண்டு போவாதீங்க ;)

    அமெரிக்கால மட்டுமில்லை, உலகம் முழுவதும், சாமிய காட்டி, காசு சம்பாதிக்கரது ஜாஸ்தி ஆகிட்டே வருது.

    ___/\___ ___/\___ ___/\___ ___/\___

    உயிரோட ஆரோக்யமா இருக்கரவங்க யாரும் சாவுக்கு பயப்பட மாட்டாங்க. ஆனா, சாவின் விளிம்புல நிக்கும்போது, கன்னாபின்னான்னு பயம் வரும்.
    பஸ்ல ஒருதடவ ஃபுட்போர்டுல தொங்கிக்கிட்டு போவும்போது, கை வழுக்க ஆரம்பிச்சு, இப்ப விழுவேனா அப்ப விழுவேனான்ற நெலம. பஸ் ஃபுல் ஸ்பீட்ல போவுது.
    "அண்ணா, கை வழுக்குதுண்ணா, கையப் புடிங்கண்ணா. பஸ்ஸ நிறுத்த சொல்லுங்கணா"ன்னெல்லாம் கத்த, தன்மானம் இடம் கொடுக்காத தளிர் மீசை வயசு அது.
    நெஞ்சு பக் பக் பக்குனு அடிச்சுது.
    அதுதான் முதலும், கடைசியுமா வந்த மரண பயம்.

    இப்பேர்பட்ட மரண பயத்தை, துச்சமா மதிச்சு, தற்கொலை பண்ணிக்கரவங்கள நெனச்சா வியப்பாவும் குழப்பமாவும் இருக்கு.

    தற்கொலை, கிட்டத்தில் அனுபவித்தது, சில வருஷத்துக்கு முன்னாடி, அலுவலக நண்பர் ஒருவர் (அமெரிக்கர்) தற்கொலை செய்து கொண்ட போது.
    ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். குடும்பம் குட்டியெல்லாம் இருந்தது. எங்க கும்பலோட ரொம்ப நல்லா பழகுவாரு. என் நண்பனின் திருமணத்துக்கு சென்னைக்கு வந்து, டான்ஸெல்லாம் ஆடி, இலையில் சோத்த போட்டு, கையால பிசைந்து சாப்பிட்டாருன்னா பாத்துக்கங்களேன். தங்கமான ஆளு.

    தற்கொலை செய்து கொண்ட ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட என் கிட்ட ரொம்ப சாதாரணமா சிரிச்சிக்கிட்டேதான் பேசினாரு.
    என்ன காரணமோ தெரீல, அன்னிக்கு காத்தால, துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பல காரணங்கள் சொல்லப்பட்டது.
    ஆனா, அப்பேர்பட்ட அமைதியான நல்ல மனுஷனுக்கெப்படி துப்பாக்கியெல்லாம் எடுத்து, இந்த முடிவு எடுக்க முடிஞ்சுதுன்னு, எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியலை.
    ஒவ்வொரு முறை செய்தியில், தற்கொலைங்கர வார்த்தைய பாக்கும்போதும், அவரின் முகம் நினைவில் வந்து போகும்.

    என்ன தேவை இவங்களுக்கு? சுத்தியிருக்கரவங்ககிட்ட மனம் விட்டு பேசினா, எந்தப் ப்ரச்சனையாயிருந்தாலும் தீத்து வச்சிருக்க மாட்டாங்களா என்ன?

    மூணு நாளைக்கு முன்னாடி, லாஸ் ஏஞ்சல்ஸில், ஒரு நடுத்தர வயது, இந்தியத் தந்தை, தன்னை தானே சுட்டுக் கொண்டதோடில்லாமல், தன் மூன்று குழந்தைகள்,மனைவி, மாமியார், எல்லாரையும் மொத்தமா சாகடிச்சிட்டாராம்.
    பண நெருக்கடி காரணமாய் சொல்லப் படுகிறது. சில மாதங்கள் வேலை கிடைக்காமல் இருந்தாராம். இத்தனைக்கும், இவரு அமெரிக்கால வந்து 20 வருஷத்துக்கும் மேல ஆச்சாம். வாழரது, பணக்காரர்கள் புழங்கும் ஊரில். மூத்த பையனுக்கு 19 வயது. பெரிய படிப்பு படித்த, கெட்டிக்காரச் சிறுவன்.

    சில நாட்களாவே, இதை யோசித்து செயல் படுத்தியிருக்காராம். தான் மட்டும் தற்கொலை செய்து கொள்ளலாமா, இல்லை குடும்பத்தில் எல்லோரையும் கொன்ற பின், தற்கோலை செய்யலாமான்னெல்லாம் யோசிச்சதில், குடும்பத்தையும் பலியிடுவதுன்னு முடிவு பண்ணாராம். தார்மீக ரீதியில் அதுதான் சரின்னு பட்டுதாம் அவருக்கு. எல்லாம் விலாவாரியா கடிதத்தில் எழுதி வச்சுட்டு போயிருக்காரம்.

    இங்கையும், இவரின் நண்பர்கள் வட்டத்தில், யாருக்கும் எந்த் அறிகுறியும் தெரியலையாம். அன்பான குடும்பம், நல்ல மனுஷன்னுதான் எல்லாரும் சொல்றாங்களாம்.

    நான் நெனைக்கறேன், இந்த 'அன்பான நல்ல அமைதியான' மனுஷன்னாலே, உள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருக்கும்னு. வெளீல, தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்க முடியாத ஏதோ ஒரு 'ஷெல்' இவங்களூக்கு இருக்கு. புழுங்கி புழுங்கி, இந்த மாதிரி முடிவு எடுத்துடராங்க.

    மக்களே, எல்லா கஷ்டத்துக்கும் ஒரு வழியிருக்கு.
    கலகலப்பா இருங்க!
    வாழ்க்கை வாழ்வதர்க்கே!

    ___/\___ ___/\___ ___/\___ ___/\___

    இதுக்கு மேல எழுத இன்னிக்கு மூடில்லை. ஸோ, அப்பீட்டு!

    ஹாப்பி வெள்ளி!

    ___/\___ ___/\___ ___/\___ ___/\___

    பி.கு: வ.கலிப்போரினியா வாசகர்களுக்கு - வரும் சனி 6 PMக்கு, hariprasad chaurasia, guitar prasanna, habih khan ஆகியோரின் "Do you Feel?", Polio ஒழிப்புக்கான, Rotary Club சார்பில் நடக்கும், வாத்திய விருந்து இருக்கு. $20, $35, $100 டிக்கெட்டுகளின் விலையாம். கண்டிப்பா நல்லா இருக்கும். ஏரியால இருந்தா போய் பாருங்க.
    Hariprasad Chaurasia யாரு தெரியும்ல? நம்ம ராசாவின் nothing but wind வாசித்த, புல்லாங்குழல் maestro!
    கிட்டார் ப்ரசன்னா தெரியும்ல? ஜூலை மாசம் வந்தால் ஜோடி சேரும் மனசு பாட்டுல ஒரு கிட்டார் பிட்டு வருமே, அதை வாசிச்ச தில்லாலங்கடி இவரு.
    விளம்பரம்: ( guitar prasanna பேரு சொல்லலையே விளம்பரத்துல. வர மாட்டாரா?)

    Monday, October 06, 2008

    சாரு வும் என் CEO வும்

    ஹிஹி. வாய்ப்பு கெடச்சா விடக் கூடாதுல்ல. அதான் தொபுக்கடீர்னு குதிச்சுட்டேன்.

    வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்திச்சாம்.
    அதுக்கு லக்கி "சாரு நிவேதிதா" என்ற எழுத்தாளரை, சாட்ல புடிச்சு, வரீங்களான்னு கேட்டாராம்.
    "சாரு நிவேதிதா" அதைப் பாத்து, அங்கையே, வரமுடியாதுன்னோ வரமுடியும்னோ சொல்லாம, தனிப் பதிவா போட்டு, "இப்படியா ஒரு எழுத்தாளரை அழைப்பது", அது இதுன்னு போட்டுத் தாக்கிட்டாரு.

    நான் பெரிய ஆளு, என்னை இப்படியெல்லாம் தராதரம் இல்லாம கூப்பிட்டா சரிப்படாதுன்னு எப்ப ஒரு பெரிய மனுஷன் நெனைக்கறாரோ, அப்பவே, அவர் என் பார்வையில் சிறுசா ஆயிடறாரு.

    "சாரு நிவேதிதா" யார், எப்படிப்பட்ட எழுத்தாளர்னெல்லாம் எனக்குத் தெரியாது.
    புத்தகங்களுக்கும் எனக்கும், அன்னிக்கும் ஒத்துவரலை, இன்னிக்கும் அப்படியேதான் இருக்கு.

    எப்பவாச்சும், "for dummies" படிக்கரது உண்டு.
    டாக்டரைப் பாக்கப் போனா, அவங்க வெயிட்டிங் ரூமுல இருக்கர, readers digest படிப்பேன்.
    National Geography வீட்டுக்கு வருது, அதுல படம் மட்டும் பாப்பேன்.

    மத்தபடி, ஆன்லைன்ல, பதிவுகள், செய்திகள், தினகரன், ஹிந்து - இத்தோட என் இலக்கிய அறிவு நின்னு போயிடுது ;)
    ஸோ, மொத்தத்தில் நான் ஞானசூன்யம்!

    லக்கிக்கு சாரு நிவேதிதா என்பவர்,
    எனக்கு, என் CEO மாதிரின்னு வச்சுக்கலாமா?

    என் CEO இலக்கியவாதியெல்லாம் கிடையாது. ஆனா, பெரிய அறிவாளி. பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர். உலகத்துக்குத் தேவையான பல விஷயங்களை உருவாக்கியவர். பல குடும்பங்கள் இவரின் நிர்வாகத் திறமையால் வளமாய் வாழ்கிறார்கள். ரொம்ப நல்லவர். வல்லவர். etc... etc...

    நல்ல ஒப்புமைதானே இது?

    இப்போ, சப்போஸ், இந்த வீக் எண்டுக்கு, நானும், என் நண்பர்கள் அஞ்சு பேரும் சேந்து, இங்க பக்கத்துல இருக்கர காட்டுக்கு கோழி பிடிக்கப் போறோம்னு வச்சுப்போம்.
    CEO சாட்ல வராரு. நானும், ஏதேச்சையா பாக்கறேன்.

    சரி, சாரும் வராரான்னு சும்மா கேட்டுப் பாக்கலாமே, வந்தா, நான் கூப்பிட்டுதான் அவரு வந்தாருன்னு ஒரு கெத்தா இருக்கலாமே. அதைத் தவிர என் ஆதர்ஷ புருஷராச்சே அவரு, அவருகூட சில நிமிஷங்கள் கோழி பிடிச்சாலும், வாழ்நாள்ள மறக்க முடியாத அனுபவமா இருக்குமேன்னெல்லாம் மின்னல் மாதிரி தோணுது. சரின்னு, சாட்டரேன் அவரு கிட்ட, "hey John, if you are free over the weekend, could you join us for கோழி புடிக்க?"ன்னு கேட்டு வைக்கறேன்.

    அப்படி கேட்டா, John என் கொம்பேனியின் மொத்த தொழிலாளிகளுக்கும், ஒரு பெரிய மடல் அனுப்பிச்சு, "How dare this guy surveysan invites me for கோழி புடிக்க on a chat?"ன்னு கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டாரு. சாட்லயே, என் கிட்ட, "No dude. you carry on. I have already committed for ஆடு புடிக்க. Bring me the catch, deep fried"ன்னு வேணா சொல்லியிருப்பாரு.

    சாரு நிவேதிதா, அந்தப் பதிவைப் போட பல காரணம் இருக்கலாம். ஆனா, என் மனசுக்கு அது சரியாப் படலை.

    சரியாப் படலன்னா, ஏன்யா பதிவப் போட்டு உயிர வாங்கறேங்கறீங்களா?

    விஷயம் இல்லாம செய்வேனா?

    நீங்க என்ன நெனைக்கறீங்க. சொலிட்டுப் போங்க! :)

    btw, சாருவின் நல்ல கதைகளைப் பரிந்துரை செய்யுங்கள், பின்னூட்டத்தில்.

    1) பொடியன் Sanjai பரிந்துரை - http://www.charuonline.com/sep08/KuttiKathaigal108(47).html (Adults only?)
    2)
    3)
    4)
    5)
    6)
    7)
    8)
    9)
    10)


    பி.கு: லக்கியின் லேட்டஸ்ட் 'பம்மல்' -
    'அழைப்பின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம். அழைக்கப்படுபவரின் வயது, தகுதிக்கேற்ப அழைப்பின் தன்மை மாறுபடும். ஸ்ரீகாந்த் குறுஞ்செய்தி அனுப்பி கனகசுப்புவை திருமணத்துக்கு அழைத்திருந்தால் அது பச்சை அயோக்கியத்தனம் :-)' - அழைப்பு, படிக்கத் தவறாதீர்கள் ;)

    Sunday, October 05, 2008

    கவர்னர் Sarah Palinம் முதல்வர் கருணாநிதியும்




    விட்டா நம்ம ஜார்ஜ் புஷ்ஷையே விஞ்சிவிடுவார் போல் தெரிகிறது, Sarah Palin. ( அமெரிக்காவின் republican பார்ட்டியில், John Mccain உடன் Vice President ஆக, தேர்தல் களத்தில் உள்ளார்.) இவரின் சமீப கால பேட்டிகள், சொற்பொழிவுகளே இதற்கு சாட்சி.

    தசாவதாரத்தில், NaClக்கு புருவத்தை உயர்த்தி, கமல் கூட புஷ்ஷை கிண்டல் செய்தாயிற்று.

    இங்க, புஷ்ஷின் அறியாமையை, எல்லா காமெடி நிகழ்ச்சியிலும், அக்கு வேறு ஆணி வேரா புடுங்கி காயப் போட்டுட்டாங்க.

    இப்போ, சாரா பெயிலின் பேசரத பாத்தா, புஷ்ஷை தூக்கிப் போட்டு மிதிச்சிடுவாங்க போலருக்கு. அவ்ளோ அறியாமையும், பேதமையும்(?), அனுபவமின்மையும், முட்டாள்தனங்களும் தலைவிரிச்சு ஆடுது.

    Satuday Night Liveனு இங்க தொலைக்காட்சி காமெடி ப்ரோக்ராம் ஒண்ணு, க்ளிண்டன், புஷ் வகையராக்கள் மாதிரியே impersonators வச்சு, அவங்கள கிண்டல் பண்ணுவாங்க.

    போன வாரம், சாரா பெயிலின் மாதிரியே ஒருவர், சாரா பெயிலினின் நிஜப் பேட்டியை அப்படியே திரும்ப செய்து காட்டினார். காமெடி ஸ்க்ரிப்ட் எழுதி கிண்டல் பண்ணியிருந்தா கூட அவ்ளோ சிரிப்பு வந்திருக்காது. அவங்க பேட்டியில் சொன்னதை அப்படியே கேட்டா, குபீர் சிரிப்பு வருது.

    கிண்டலின் ஒரு துண்டு இங்க க்ளிக்கி பாக்கலாம்.

    nuclearஐ, nul-cearனு சொன்னது...
    Russia கிட்டே இவங்க வீடு (Alaska) இருப்பதால், இவங்களுக்கு international relations, foregin policy எல்லாம் அத்துப்படியாம்...
    Afghanistan, இவங்களின் neighborஆம்...
    எதையோ கேட்டா, என்னென்னமோ பதில் சொல்றது... (இதைக் கேட்டுப் பாருங்க, ஏதாச்சும் புரிஞ்சா பின்னூட்டத்தலு சொல்லுங்க.)
    ... இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

    சமீப காலமா, தமிழ் நாட்டு நிலவரமும் கிட்டத்தட்ட்ட இப்படி ஆகிக்கிட்டு இருக்கு.
    சாரா பெலின் அனுபவமற்றவர், இப்படியெல்லாம் 'slip'ஆவது ஓ.கே.

    ஆனா, அறுவது வருட அரசியல் அனுபவம் மிக்க முதல்வர் கருணாநிதி, இப்படி 'slip'ரது, தாங்க முடியல்ல.

    மின்சாரத் தடை அடிக்கடி இருக்கே அதுக்கென்ன வழின்னு கேட்டா - இங்க மட்டுமா இருக்கு, குஜராத்ல போயி கேளு, பீஹர்ல போய் கேளுங்கராரு.

    மீனவர்கள் நடுக்கடலில் சுடப்பட்டு சாகராங்களேன்னு கேட்டா - ஒரு நாள் பந்தல் போட்டு எல்லாரும் 'டயட்'ல (உண்ணாவிரதம்) இருக்கலாங்கராரு.

    தமிழினத் தலைவராச்சே நீங்க, சிங்களத்தார்கள் நம்மாளுங்கள அநியாயத்துக்கு போட்டுத் தாக்கறாங்களே, இதுக்கு ஏதாச்சும் செய்யுங்களேன்னா - நாட்டு மக்கள் எல்லாரும், சிங்குக்கு தந்தி அடிங்கங்கராரு.

    சிங்கு, புஷ் பேச்சை கேட்டுக்கிட்டு, எங்க கையெழுத்துப் போடணும்னு ஒரு பக்கம் சுத்திக்கிட்டிருக்காரு. சிங் என்னிக்கு தந்தியப் படிச்சு புரிஞ்சுக்கிட்டு, என்னிக்கு முடிவெடுத்து, என்னிக்கு இதுக்கெல்லாம் முடிவு கட்டரது?

    மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், ஆள மாத்திக்கிட்டே இருந்தாலும், ஊருக்கு ஒரு மாற்றமும் கிட்டாமல், எல்லா ஆட்சியும், same-pinch மாதிரி வெளையாடிக்கிட்டே இருக்காங்க.

    என்ன கொடுமைங்க இது?

    அமெரிக்க நீதிமன்றத்தில் நானு - Judgement!

    முதல் பாகம் படிக்காதவங்க படிச்சுட்டு வந்திடுங்க.

    அழகான வக்கீலம்மாவும், நானும் கோர்ட் ரூமுக்கு வெளியில் இருந்த பென்ச்சில் போய் அமர்ந்தோம்.
    "இதப் பாரு 'சர்வேசா', நான் இந்த அபார்ட்மெண்ட்டுக்கு பதினஞ்சு வருஷமா வேல செய்யறேன். நீ என்னதான் ஞாய அநியாயம் பேசினாலும், உன் சைடுல பெரிசா சொல்லிக்கர மாதிரி புரூஃப் ஒண்ணும் இல்ல. பேசாத, நான் உனக்கு $100 திருப்பித் தரேன், நீ தர வேண்டிய $500ம் தரவேணாம், அப்படியே ரெண்டு போரும் போயி பொழப்பப் பாக்கலாம்" அப்படின்னாங்க வக்கீலம்மா.

    $1500க்கு, பதிலா, திடுதிப்புனு $900ல வந்து நிக்கறாங்க, என் சைடுல தான் கேஸு ஸ்ட்ராங்கா இருக்குன்னு எனக்குப் புரிஞ்சுது.
    அதுவும், இவ்ளோ நேரம் செலவு செஞ்சாச்சு. இவ்ளோ தூரம் வந்துட்டு, நீதிபதி முன்னாடி நின்னு, 'வாதிடலன்னா' அப்பரம், இந்த நிகழ்வே சப்புன்னு முடிஞ்சுடும்.
    ஜட்ஜு எனக்கு எதிரா தீர்ப்ப சொன்னாலும், இந்த எக்ஸ்பீரியன்ஸ் திரும்பக் கிடைக்காதுன்னு பட்சி சொல்லிச்சு.

    "Your honour. I am Surveysan and I represent myself"ன்னெல்லாம் கார்ல வரும்போது, சிவாஜியை மனசுல நெனச்சுக்கிட்டு சொல்லிப்பாத்த டைலாக்கெல்லாம் வீணாய்ப் போயிடுமேன்னு கவலை ஆயிடுச்சு.

    வக்கீலம்மாகிட்ட, $100 எல்லாம் சரிப்படாது, $500 திரும்பக் கொடுக்கரதா இருந்தா, சமாதானம் பத்தி பேசலாம், இல்லன்னா, 'meet me in the court room'ன்னு அடிச்சு சொல்லிட்டேன்.

    அவங்க கிட்ட, மொத்த செலவுக்கும், ரசீது இருப்பதாவும், அபார்ட்மெண்ட்டின் புகைப்படங்கள் எல்லாம் ஒரு சி.டியில் கொண்டு வந்திருப்பதையும் காட்டி, சிரித்துக் கொண்டே 'மிரட்டிப்' பார்த்தார். "I might pull my dirty tricks on you"ன்னு வில்லத்தனமா ஒரு டைலாக் வேர. உள்ளூர கொஞ்சம் டென்ஷனாயிடுச்சு, பேசாம $100 வாங்கி எஸ்கேப் ஆயிருக்கலாமோன்னு.

    எப்படியும் நான் படியாததால், திரும்ப கோர்ட் ரூமுக்கு உள் போனோம். bailiff 'சர்வேசன் pls approach the desk'னு சொன்னாரு. நானும் வக்கீலம்மாவும், எங்களுக்குண்டான இடத்தில் ஜட்ஜுக்கு முன்னாடி போய் நின்னோம்.

    சினிமால காட்டர மாதிரி பெரிய கோர்ட் ரூம். ஜட்ஜு உயரத்தில் ஒக்காந்திட்டி இருந்தாங்க. கொஞ்ச வயசான பெண்மணி. ஜட்ஜுக்கு ரெண்டு படிக்கட்டுக்குக் கீழ, கோர்ட் bailiff. வலது ஓரத்தில் ஒரு போலீஸ் காரர். நூறு நாற்காலிகளில், ஒரு இருபது பேர் வேடிக்கை பாக்க ஒக்காந்துட்டு இருந்தாங்க. இவங்கள் எல்லாரும், அவங்கவங்க கேஸுக்காக வந்தவங்க. Juryஸ்க்கான இருக்கைகள் காலியா இருந்தது. பெரிய வழக்குகளுக்குத்தான jurors எல்லாம் இருப்பாங்க.

    நான், அபார்ட்மெண்ட்டு ஆசாமிகளுக்கு அனுப்பிய நாலைந்து கடிதமும், அதற்கான பதில் கடிதங்களும், லீஸ் பேப்பரும், எந்தெந்த விஷயங்கள் முன்னரே 'உடைந்திருந்தது' என்பதற்கான செக்-லிஸ்டும் சேர்த்து, கொத்தாக ஒரு காப்பியை ஜட்ஜுக்குக் கொடுத்தேன்.

    ஜட்ஜு, மூக்குக் கண்னாடியை நன்றாகப் பொறுத்தி விட்டு, என்னைய உத்துப் பாத்து, "உன் தரப்பு வாதத்தை சொல்லுப்பா"ன்னாங்க. அவங்க நேருக்கு நேர் பாத்ததுல, நான் மனசுல நெனச்சிருந்த, சிவாஜி டயலாக்கெல்லாம், காத்துல கரஞ்சு போச்சு. கபாளமே காலி ஆன மாதிரி ஆயிடுச்சு. எவ்வளவோ பாத்துட்டோம், இத சமாலிச்சிட மாட்டோமான்னு, டக்குனு சுதாரிச்சு, என் தரப்பு விஷயங்களை எடுத்துச் சொன்னேன்.
    குறிப்பா, $1000 டெப்பாஸிட், $1500 இவனுங்க கேக்கராங்க. இவங்க செலவு செஞ்ச பல விஷயங்கள் ஏற்கனவே உடைந்திருந்த விஷயங்கள். ஸோ, எனக்கு $500 திரும்ப வேணும்னு சொன்னேன்.

    வக்கீலம்மா முறை வந்ததும், அவங்க தரப்புக்கு, $1500 நியாயமான செலவுதான். அபார்ட்மெண்ட் ரொம்ப மோசமாயிருந்தது. கார்ப்பெட்ல பல இடங்களில் கறை இருந்துச்சு. ஜன்னல் ஓரங்களில் அழுக்கு இருந்தது, பாத்ரூம் டப் அழுக்கா இருந்தது, ரூமில் 'indian curry' ஸ்மெல் இருந்துச்சு (dirty trick?), அது இருந்துச்சு, இது இருந்துச்சுன்னு அளந்தாங்க.

    'indian curry' ஸ்மெல் எங்க இருந்துச்சுன்னு நான் கேட்டதுக்கு, ஜன்னல் திரைச் சீலையில் இருந்துச்சுன்னாங்க. திரைச்சீலை, plastic blinds அதுல எப்படி வாசனை இருக்கும்னு கேக்க, ஜட்ஜோட சேந்து அவங்களும் சிரிச்சு மழுப்பினாங்க.
    அப்பாலிக்கா, வக்கீலம்மா கொண்டு வந்திருந்த சி.டி படங்களைப் பாத்தோம்.
    ஜட்ஜும் கீழ இறங்கி வந்து, எங்க கூட நின்னுக்கிட்டாங்க.
    ஏழெட்டு படங்களில், முக்கால் வாசி, கார்ப்பெட் அழுக்கு படங்கள்.
    ஜட்ஜு, என்னைப் பாத்து, இதப் பத்தி என்ன சொல்றன்னாங்க.
    நானும், இது ஏற்கனவே இருந்ததுன்னு என் லீஸ் செக்-லிஸ்ட்ல குறிச்சிருக்கேன்னேன்.

    ஜன்னல் ஓர அழுக்குப் படம் வந்துச்சு. பட்டையா, fungus கொஞ்சம் இருந்துச்சு. அதப் பத்திக் கேட்ட்துக்கு, ஆமா, அது மழைத் தண்ணி கசிவால் வந்த பாசி, எவ்ளோ தொடச்சும் போகலன்னேன்.

    இப்படியே எல்லா புகைப்படத்துக்கும் விளக்கம் வாங்கிக்கிட்டாங்க. பாத்ரூம் டப் கொஞ்சம் ஓவரா அழுக்கா இருந்தது (dirty trick?). என் டப் மாதிரி இல்லை அது. ஆனாலும், அதைச் சொல்லலை ஜட்ஜுகிட்ட. நான், ஒரு ஃப்ரொஃபனல் க்ளீனரை வச்செல்லாம் க்ளீன் பண்ணலை, நான் காலி செய்ததும், என்னால் இயன்றவரை க்ளீன் பண்ணிட்டேன்னேன்.

    வேற ஏதாவது சொல்ல ஆசப்படறியான்னதுக்கு, ஏற்கனவே உடைந்து/அழுக்காய் போன விஷயங்கள், கார்பெட்டும், திரைச்சீலைகளும், அதுக்கு என்னால் பணம் தர முடியாது. அபார்ட்மெண்ட்டை ப்ரொஃபெஷனல் க்ளீனிங் செய்யவும், அந்த ஜன்னல் பாசியை பெயிண்ட் அடிக்கவும் ஆன செலவெல்லாம் நான் கொடுக்கத் தயார்னேன். அந்த அடிப்படையில் தான் $500 திரும்ப வேணும்னேன்.

    வக்கீலம்மா கிட்ட சில கேள்விகள் கேட்டாங்க. கார்ப்பெட் எவ்ளோ வருஷமாச்சு மாத்தி? பெயிண்ட்டிங் உங்க கடமையாச்சே, அதுக்கு ஏன் வாடகை இருப்பவர்களிடம் காசு வாங்கறீங்க? கார்பெட்டில் ஏற்கனவே கறை இருந்ததால், இவங்க கிட்ட ஏன் எக்ஸ்ட்ரா வாங்கினீங்க? திரைச்சீலை ஏற்கனவே உடைந்திருந்திச்சின்னா இவங்க கிட்ட ஏன் எக்ஸ்ட்ரா வாங்கினீங்க? இப்படி, ஞாயமான கேள்விகள். வக்கீலம்மா, பாதி கேள்விக்கு சிரிச்சிக்கிட்டே மழுப்பினாங்க.

    "$500 திரும்பக் கேக்கறியே, க்ளீனிங்குக்கு வெறும் $500தான் ஆகும்னு எப்படி கணக்குப் போட்ட"ன்னு என்ன பாத்து கேட்டாங்க. எனக்கு சட்டுன்னு என்ன சொல்லணும்னு தெரியல. இந்த ஊர்ல சில பல வருஷமா இருக்கேன். ஒரு வீட்டை ப்ரொஃபெஷனலா சுத்தம் செய்யணும்னா, அவ்ளோ தான் ஆகும்னேன். ஜட்ஜம்மா முகத்தைப் பாத்ததில், அந்த பதில் ஏற்புடையான பதில் மாதிரி தெரியல.

    அப்பரம் ஜட்ஜம்மா பேச ஆரம்பிச்சாங்க.



    "கார்பெட் மாத்தினது, திரைச்சீலை மாத்தினது, ஜன்னலுக்கு பெயிண்ட் அடிச்சது, இந்த செலவுக்கெல்லாம் கண்டிப்பா 'சர்வேசன்' பொறுப்பாக முடியாது.
    அதே சமயத்தில், பல மாதங்கள் தங்கிய வீட்டை காலி செய்யும்போது, ப்ரொஃபெஷனல் க்ளீனிங் செய்வது, தார்மீகக் கடமை. அதை சர்வேசன் செய்யாததால், அதற்கான செலவை அபார்ட்மெண்ட்டுக்கு கொடுத்துதான் ஆகணும். அபார்ட்மெண்ட் தரப்பில், அதற்கான ரசீது இருப்பதால், அந்தத் தொகையை வைத்துத் தான் கணக்கு போட முடியும்.
    ஸோ, க்ளீனிங் செலவு, சுவர்களுக்கான பெயிண்டிங், கிட்சன், பாத்ரூம் பராமரிப்பு இதையெல்லாம், கூட்டி கழிச்சு பாத்தா, $1000 செலவாயிருக்கும்னே தோணுது.
    அபார்ட்மெண்ட் காரங்க $1500 ஆகியிருக்குன்னு சொல்றாங்க. அது தப்பு.

    செக்யூரிட்டி டெப்பாஸிட், $1000 என்பதால், அபார்ட்மெண்ட் சர்வேசனுக்கு, அவர் கேட்பதைப் போல் $500 திருப்பித் தரவேண்டாம்.
    அதே போல், அபார்ட்மெண்ட், சர்வேசனிடம் அதிகப் படியாய் கேட்கும் $500ஐ சர்வேசன் கொடுக்க வேண்டாம்."


    இதக் கேட்டதும், அடடா, வக்கீலம்மா தந்த $100 வாங்கிக்கிட்டு சைலண்டா எஸ்கேப் ஆகியிருக்கலாமோன்னு, லேசா தோணிச்சு. ஆனா, அடுத்த கணமே, பரவால்ல, நியாயம்னு பட்டதை, சட்ட ரீதியா எடுத்து சொல்லி, ஓரளவுக்காவது வெற்றி கெடச்சதேன்னு ஒரு சந்தோஷம் படரவும் செஞ்சது.

    ஆனா,....

    ஜட்ஜு, அவங்க ஜட்ஜ்மெண்ட்டை சொல்லி, மர சுத்தியை மேசையில் அடிச்ச உடன். "Your Honor. I did not file a counter claim for the $500 that the plaintiff owes us"ன்னு வக்கீலம்மா சொன்னாங்க.

    இது என்னடா புதுக்கதைன்னு புருவத்தை உயர்த்தினேன். அவங்க என்னா சொல்றாங்கன்னா, இந்த கேஸு போட்டிருப்பது, சர்வேசன். எதுக்கு போட்டிருக்கேன்னா, அபார்ட்மெண்ட்டிடம், $500 திரும்பப் பெறுவதற்காக போட்டிருக்கேன்.
    அதுக்கான தீர்ப்பு என்னான்னா, "அபார்ட்மெண்ட் $500ஐ சர்வேசனுக்குத் திரும்பத் தரவேண்டாம்" என்பது.

    இதின் இரண்டாம் பாகம் என்னான்னா, நான் அபார்ட்மெண்ட்டுக்கு தரவேண்டிய அதிகப்படியான $500 (அபார்ட்மெண்ட் செயததாய் சொல்லும் செலவு $1500, டெபாஸிட் தொகை $1000).
    "நான் அபார்ட்மெண்ட்டுக்கு அதிகப்படியா எந்தத் தொகையும் தரவேண்டாம்னு" ஜட்ஜு தீர்ப்பு சொல்லணும்னா, அபார்ட்மெண்ட்டு மக்கள், என் மீது, வழக்கு தொடரணுமாம். அதுதான், வக்கீலம்மா சொல்லும், "counter claim".

    அதைக் கேட்டதும், "oh. you have plans to work for us?"ன்னு வக்கீலம்மாவை பாத்து நமுட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டே கேட்டுட்டு (அதாவது, வக்கீலம்மா பெரிய புத்திசாலியாமாம் :( ), bailiff கிட்ட, ரெண்டாவது சொன்ன ஜட்ஜுமெண்ட்டு தப்பு, மொதல் சொன்னது மட்டும், கோப்புல சேத்துடு, அம்புடுதான்னு சொல்லிட்டாங்க.

    எனக்கிதெல்லாம், ரூமுக்குள்ள இருக்கும்போது புரியல. வெளீல நானும் வக்கீலம்மாவும் நடந்து வந்தப்பரம், "ஒழுங்கா நான் கொடுத்த $100ஐ வாங்கிக்கிட்டு போயிருக்கலாம். இப்பப் பாரு, நீ, இன்னும் $500 தரணும் எனக்கு"ன்னாங்க.

    இது என்ன கொடுமையா இருக்கு? Counter Claim இல்லாததால், அபார்ட்மெண்ட்ட், அந்த $500ஐ கேட்டுக்கிட்டு என் பின்னாடி வரலாம்னா, அது இந்த small claim சட்டத்தில் உள்ள பெரிய ஓட்டையாச்சேன்னே.

    "I told you I have been doing this for 15 years. I will send the invoice for $500. Pay it." blah blah blahன்னாங்க.

    ஸோ, அந்த $500ஐ நான் கட்டாம இருக்கணும்னா, அபார்ட்மெண்ட் என் மேல் கேஸு போட்டு, திரும்ப ஜட்ஜு முன்னாடி நின்னு, திரும்ப கணக்கெல்லாம் சொன்னா, இந்த இரண்டாம் பாகத்துக்கு, அப்பதான் தீர்ப்பு சொல்லுவாங்களாம்.

    counter claim போட்டா என்னாகும்னு, வக்கீலம்மாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அதனாலதான் உஷாரா அதை ஃப்பைல் பண்ணலை அவங்க. ஸோ, எனக்குத் தெரிஞ்சு, $500 வாங்க, அவங்க கோர்ட்டுக்கு போகமாட்டாங்க. Collections agency மாதிரி யார்கிட்டையாவது போவாங்க.

    "You send me the invoice, but I have no intentions to pay. I will see you later when you file the counter claim"ன்னு சொல்லிட்டு, தலைவர் ஸ்டைல்ல, திரும்பிப் பாக்காம நடந்து போயிக்கிட்டே இருந்தேன்.

    கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த மொத்த பொதுமக்களும், நான் ஸ்டைலாக ஸ்லோ மோஷனில் நடந்து செல்வதை பார்த்து, கைதட்டி ஆர்பரித்து, சர்வேசா சர்வேசான்னு பாட்ஷா ஸ்டைலில் அலரியதெல்லாம், என் கற்பனையோன்னு ஒரு டவுட்டு வருது. நேர்ல பாத்தவங்க யாராச்சும் இருக்கீங்களா? ;)

    Friday, October 03, 2008

    வியப்பூட்டும் மனித எந்திரன்



    சமீபத்தில் ஒரு டாக்குமெண்ட்டரி பாத்தேன். 'Incredible Human Machine'னு National Geographyன் டாக்குமெண்ட்டரி அது. நான் சொல்ல வேண்டியதில்லை, வீட்டுக் கிட்ட இருக்கும், ஓ.சி லைப்ரரில எடுத்ததுதான் ;)

    ஒரு மனுஷ ஒடம்புல ஒவ்வொரு பாகமும், எப்படி வேலை செய்யுதுன்னு புட்டு புட்டு வெச்சிருக்காங்க.
    அதுவும், குறிப்பா, சின்ன காமெராவை, ஒடம்புக்குள்ள அங்கங்க விட்டு, கன்னா பின்னான்னு விஷுவலா காட்டறாங்க.
    வாய்ல சாப்பாட போட்டா, அது எப்படி, கடிக்கப் படுது, அது எப்படி தொண்டை வழியா உள்ள போகுது, சிறு குடல்ல, அமிலம் சுரந்து, உணவு எப்படி ஜீரணம் ஆகுது, எல்லாம், லைவா, குட்டிக் காமெரால எடுத்திருக்காங்க.

    AeroSmithனு ஒரு rock பாடகர் இருக்காரு. அலறு அலறுன்னு அலறுவாரு. அவருக்கு, தொண்டைல ஏதோ கரகரப்பு. உடனே, மருத்துவ வித்தகர்கள், அவரு தொண்டைக்குள்ள காமெராவ விட்டு, அவரா அலர சொல்லி, அத வீடியோ பிடிச்சு, அவருக்கு தேவையான சிகிச்சையை அஞ்சு நிமிஷத்துல, லேசர் கருவி மூலமா சரி செய்யராங்க.
    ஏரோஸ்மித், பாடும் போது, தொண்டைக் குழிக்குள்ள ஏற்படும், அதிர்வு, எப்படி குரல் வெளீல வருதுன்னெல்லாம், கலக்கலா காட்டராங்க. அம்மாடியோவ், ஒரு மனுஷ ஒடம்புக்குள்ள எவ்ளோ மேட்டர் இருக்கு?

    அப்பரம், மூக்கு, வாய், தோல், இருதயம், லிவரு, வயிறு, குடல், லங்க்ஸ், காலு,கை, மூளைன்னு பின்னிப் பெடலெடுத்துட்டாங்க. இத ஒவ்வொண்ணப் பத்தியும் தனித் தனிப் பதிவா போடலாம், அவ்ளோ மேட்டரு காமிக்கரான்.

    காதைப் பத்தி காட்டிய விஷயங்கள், சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துடுச்சு.
    நமக்கெல்லாம், சின்ன வயசுல இருந்தே தெரிஞ்ச விஷயம், காதுக்குள்ள ஒரு ஜவ்வு இருக்கு, அது ஒலியின் அதிர்வினால், vibrate ஆகி, அது எப்படியோ, நரம்புகள் வழி, மூளைக்குச் சென்று, யார் யார் என்ன சொன்னாங்கன்னு, நமக்கு புரிய வைக்கும்னு.
    ( வைப்ரேஷன், எப்படிய்யா மூளைக்குப் புரிஞ்சுதுன்னு என் மண்டைக்கு இன்னி வரைக்கும் புரியாதது தனிக் கதை. அப்பரம், ஃபோன் எப்படி வேலை செய்யுது, இதெல்லாம் புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டப் படலை. புரிஞ்சு என்னா ஆகப் போவுது? வேல செய்துல்ல? )

    காதில் சில பாகங்கள், நம்மை சம நிலையில் (balance) நிற்க வைக்கவும் உதவுது. விர்ர்னு சைக்கிளில் போகவும், நடக்கும்போது, ஒரு பக்கமாய் சாய்ந்து வீழ்ந்து விடாமல் இருக்கவும், இந்த பாகம்தான் உதவுது.
    cochleaன்னு பேரு இதுக்கு, ரெண்டு காதுலையும் இருக்கு, குட்டி எலும்பு இது.
    இந்த எலும்புக்குள்ள கொஞ்சூண்டு நீரும் இருக்கும்.

    ஆசாரி எல்லாம், சமதளத்தைப் பாக்க, மெர்கூரி இருக்கர இண்டிகேட்டர் வச்சிருப்பாரே பாத்திருக்கீங்களா, அந்த மாதிரியான வேலையைதான் இந்த cochleaவும், அதனுள் இருக்கும் நீரும் செய்யுது. இதன் வேலைப்பாடெல்லாம் நெனச்சாலே, புல்லரிக்குது.

    இது இப்படி இருக்க, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சிலர், இந்த cochleaவை பத்தி, ஆராஞ்சு, பிச்சு மேஞ்சிருக்காங்க.
    ஒரு ஹெட்ஃபோனை கண்டு பிடிச்சு, ஒரு மனுஷனுக்கு அதை மாட்டி விட்டு, அதன் மூலம், மனுஷனின், cochleaக்கு, சின்னதா கரெண்ட்டு பாச்சி, அதனுள் இருக்கும், நீரின் அளவை லேசா மாத்தி அமச்சு, மனுஷனின், சம நிலையையே மாத்திக் காட்டறாங்க.

    அதாவது, அந்த ஹெட்ஃபோனை ஒருத்தர் மாட்டிப்பாரு.
    இன்னொருத்தர், ஒரு ரிமோட் கண்ட்ரோலை வச்சுக்கிட்டு, இடது, வலது சுச்ச அமுக்கினா, ஹெட்ஃபோனை மாட்டிய மனுஷன் காதுல, அதுக்கு ஏத்த மாதிரி குட்டிக் கரெண்ட்டு, பாஞ்சு, மனுஷனை, லெஃட்டுக்கும், ரைட்டுக்கும், தானா சாய வைக்குது.

    இந்த ஆராய்சி முடிஞ்சதும், இதை, வீடியோ கேம்களில், இந்த டெக்னிக்கை கொண்டு வந்து, நம்மை ஆட்டி வைக்கப் போறாங்களாம்.

    simply amazing!

    டாக்குமெண்ட்டரியில் இது மட்டுமல்ல, இன்னும் பலப் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இருந்தது.
    மத்ததெல்லாம் பொறுமையா அப்பாலிக்கா பாக்கலாம்.

    இப்போதைக்கு, கீழே உள்ள வீடியோவில், 6:00ஆம் நிமிடத்தில் இருந்து பாத்தா, நான் மேல சொன்ன மேட்டரைப் பாக்கலாம் ;)

    வீடியோ வேலை செய்யலன்னா, மூலப் பக்கம் இங்க:



    யூ.ட்யூபில், முழு வீடியோவும், பிட்டு பிட்டா போட்டிருக்காங்க. நேரம் இருந்தா முழுசும் பாருங்க. அமக்களமா இருக்கு!

    Thursday, October 02, 2008

    ICICI - புரளிகளை நம்ப வேண்டாம்

    வெளிச்சத்தை விட வேகமாய் பயணிக்கக் கூடியது, நம்மாளுங்க கெளப்பி விடர புரளி.

    புள்ளையார் பால் குடிச்ச வெவரம், 'சுவாமி'ஜி கெளப்பி விட்ட, ஆறு மணி நேரத்துக்குள்ள, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, பக்த கோடிகளை அல்லோலப்படுத்தியது.

    1996/97ல், ஒரு சில ஃபைனான்ஸ் கம்பேனி காரர்கள், ஊரை ஏய்த்ததால், எல்லாரும் அப்படிதான்னு, கெளப்பி விட்ட கதையால், மக்களாகிய நாம் கொதிச்சுப் போய், மொத்த பணத்தையும் ஒரே நாள்ள திருப்பிக் கேட்டு, எல்லா ஃபைனான்ஸ் கொம்பேனியர்களையும் கல்லா கட்டி திவாலாக்க வைத்தோம்.

    கொஞ்ச வாரத்துக்கு முன்னாடி, ICICI ATMல் பணமெடுக்கப் போன ஒரு குடிமகன், அந்த ATMல் பணமில்லைன்னு வந்த மெசேஜைப் படித்து, திகிலுற்று, மோத்த ICICI வங்கியிலும் பணமில்லைன்னு, புரளியக் கெளப்பி விட்டுட்டான்னு எங்கையோ படிச்சேன்.

    எப்பேர்பட்ட வங்கியானாலும், ஒரே நாள்ள, எல்லாரும் போய் நின்னு, அவங்கவங்க பணத்தை குடுய்யான்னு கேட்டா, வங்கி திக்குமுக்காடிப் போய் திவாலாயிடும்.

    நல்ல வேளையா, ICICI, உடனே சுதாரிச்சு, எல்லாருக்கு, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி, சமாளிச்சிருக்காங்க. அதனால தப்பிச்சுது.

    இன்னிக்கு, அவங்க வங்கியின் பக்கத்தில், இதில் கண்ணில் பட்டது. RBIயே, ப்ரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க. புரளிகளை புறந்தள்ளுவோம்!
    சரிதானே?

    ஹாப்பி வெள்ளி!

    September 30, 2008
    RBI Statement on ICICI Bank's Financial Position

    There are reports in some sections of the media that based on rumours regarding the
    financial strength of ICICI Bank, depositors are withdrawing cash at its ATMs and branches in some locations.

    It is clarified that the ICICI Bank has sufficient liquidity, including in its current account

    with the Reserve Bank of India, to meet the requirements of its depositors. The Reserve Bank of India is monitoring the developments and has arranged to provide adequate cash to ICICI Bank to meet the demands of its customers at its branches/ ATMs.

    The ICICI Bank and its subsidiary banks abroad are well capitalised.

    Alpana Killawala
    Chief General Manager

    வெளம்பரம்:
    அ. அமெரிக்க நீதிமன்றத்தில் நானு.. நியாயத்துக்காக போராட்டம்
    ஆ. தசாவதாரம் - டிவிடி பார்வை
    இ. விடியலை அறிவிக்கிறான் சிலம்பரசன்
    ஃ. 'குறும்' போட்டி - Rehearsal!

    அமெரிக்க நீதிமன்றத்தில் நானு.. நியாயத்துக்காக போராட்டம்...

    அன்பே சிவம் படத்துல மாதவன், 'பாங்கு' எனும் போதை உருண்டையை சாப்பிட்ட பிறகு, இப்பெல்லாம் அடிக்கடி சிரிப்பும் அழுகையும் வருதுன்னு ஒரு டயலாக் சொல்லுவாரு. பாங்கு, மனதை இளக்கி விட்டுடுது போல :)
    எனக்கு, இப்பெல்லாம், அடிக்கடி எரிச்சல் வருது. வயசாவரதால இருக்குமோ?
    குறிப்பா, நம்மூருக்கு லீவுல போகும்போது, NRIக்கே உண்டான, தார்மீகக் கோபம் நெறய வருது. என்னடா, ரோட்டப் போடாம, சாக்கடைய தேங்கவிட்டுக்கிட்டு, தண்ணி வராம, எதை எடுத்தாலும், லஞ்சத்தைக்க் கேட்டுக்கிட்டு, etc.. etc.. உங்களில் பல பேரும், same pitchவீங்கன்னு தெரியும் ;)

    அமெரிக்காவுக்கு வந்து, சில பல காலமாயிடுச்சு. இங்க, நம்மூருல இருக்கர மாதிரி சாமான்யனுக்கு லஞ்சப் ப்ரச்சனையெல்லாம் கிடையாது. எல்லாமே, clock work மாதிரி வரிசையா நடக்கும். சில பல நேரங்களில் மட்டும், சில தனியார் இயந்திரங்களுடன், டீல் பண்ணும் போது, லேசா மண்ட காயும். ஆனா, அதிலும், பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம், இயன்றவரை, கஸ்டமருக்கு தொல்லை தராத மாதிரி, வளஞ்சு நெளிஞ்சு அனுசரிச்சு போவாங்க.

    இங்க வந்த சில வருஷங்களில், silicon valleyயில்தான் என் பெரும்பான்மை நாட்கள் செலவிடப்பட்டன. நடூல, லாஸ் ஏஞ்சல்ஸில் சில காலம் இருந்திருக்கிறேன்.
    நடுவில், சில வருடங்கள், கொம்பேனியார் செலவில் ஓ.சி வீடு கிடைத்ததால், சொந்தமா வீடு வாங்கணுங்கர எண்ணம் உதிக்காமயே போயிடுச்சு. இப்ப இருக்கர சருக்கல் மார்க்கெட்ட்டில், ஒரு விதத்தில், அது நல்ல விஷயமாவே அமஞ்சுடுச்சு.

    சமீபத்தில், ஒரு வருஷம் தங்கியிருந்த, apartmentஐ விட்டு, புதிய வீட்டுக்கு மாறினோம்.
    இங்க, வாடகைக்கு ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு (flat) போவதர்க்கு முன், பெரிய lease எல்லாம் கையெழுத்து போட்டு, security depositஆ ஒரு தொகையும் கொடுக்கணும்.
    நானும், கடந்த வருடம், அந்த அபார்ட்மெண்ட்டுக்கு, $1000 காப்பீடாக கொடுத்திருந்தேன்.

    சாதாரணமா, என் சிலப் பல வருடகால lease அனுபவத்தில், வீட்டைக் காலி செய்யும்போது, இந்தத் தொகையில், ஒரு $500 கிட்ட கழித்துக் கொண்டு, மிச்சத்தை கொடுத்திடுவாங்க.

    ஆனா, இந்த முறை, நான் கொடுத்திருந்த, $1000 பத்தலை, இன்னும் $500 அதிகப்படியா வேணும்னு நோட்டிஸ் வந்திருந்தது. அதுக்கான, கணக்கெல்லாம் போட்டு அனுப்பியிருந்தாங்க. அதன் விவரங்களைப் படிக்கும்போதே, ஆஹா, இது பணம் கறக்கும் ஏற்பாடு. இளிச்சவாயனுக்கு, மிளகாய் அரைக்கும் ஏற்பாடுன்னு புரிஞ்சது.

    குறிப்பா, நான் அந்த வீட்டுக்கு குடிபுகும் முன், சில விஷயங்கள், அந்த வீட்டுக்குள் சரியில்லை என்று, leaseல் தெரியப் படுத்தியிருந்தேன். அதாவது, கார்ப்பெட்ல, அழுக்கு இருக்கு, ஜன்னல் ஸ்க்ரீன் லேசா கிழீஞ்சிருக்கு, இந்த மாதிரி விஷயங்கள்.
    அவங்களும், அதையெல்லாம் வாங்கி, ஃபைல் பண்ணி வச்சுக்கிட்டாங்க.

    இப்ப, கொடுத்த நோட்டீசில், அந்த விஷயமெல்லாம், என்னமோ நான் வந்தப்பரம் ஒடச்சதாகவும், அதுக்கெல்லாம் நான் தான் காசு கொடுக்கணும்னும் போட்டிருக்குது.

    அநீதிக்கு வளஞ்சு கொடுக்கரதான்னு, எனக்கு தார்மீகக் கோபம் பொசுக்குன்னு வந்துடுச்சு.
    300 வீடுகளுக்கு மேல் உள்ள பெரிய கொம்பேனி அது. ஏரியாவில், இதைத் தவிர, வேறு பலப் பல குடியிருப்புகளும் இவர்களுக்கு உண்டு.

    கண்டிப்பா, அவங்க கேட்கும் அதிகத் தொகையை கொடுக்கப் போவதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அதைத் தவிர, அவங்க கிட்டயிருந்து, ஞாயமா, எனக்குத் தான், $500 திரும்பக் கிட்டணும்னும் தோணிச்சு.

    இங்க தான் எல்லாத்துக்கும், கச்சிதமா சிஸ்டம் செஞ்சு வச்சிருக்காங்களே. ஞாயத்தை எடுத்தச் சொல்ல சுலபமா ஏதாவது வழியிருக்கும்னு நெனச்சேன். இணையத்தில் தேடியதில், அது உண்மைன்னே தெரிஞ்சது.
    Project Sentinel னு ஒரு தன்னார்வ நிறுவனம் இருப்பது தெரிந்தது. இவங்க, இந்த மாதிரி லடாய்களில், நடுவில் புகுந்து, இரு தரப்பிலும் பேசி, சுமுகமாய் தீர்த்து வைக்க முயல்வார்கள்.

    நான் அவங்கள் கூப்பிட்டு சங்கதி சொல்ல, அவங்களும், அபார்ட்மெண்ட் ஆளுங்கள கூப்பிட்டு பேசிப் பாத்தாங்க, ஆனா, எதுவும் படியலை.

    Sentinelமூலமா தெரிஞ்ச விஷயம், $7500 கீழே உள்ள லடாய்களை தீர்த்துக் கொள்ள, small dispute நீதிமன்றங்களை அணுகலாம் என்பது. ஒவ்வொரு நகரத்திலும் ஒரு நீதிமன்றம் இருக்கு.

    அங்க போய், $30 கட்டி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவங்க கிட்ட கொடுத்திடணும்.
    அவங்க, அதை அபார்ட்மெண்ட்டின் மேனேஜருக்கு அனுப்பி, ஒரு தேதியில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகணும்னு சொல்லிடுவாங்க.

    மேட்டர் சிம்பிளா இருக்கேன்னு, நானும் கோதால எறங்கிட்டேன்.

    ஆகஸ்ட் 15ல், சமத்தா போய், விண்ணப்பமெல்லாம் கொடுத்துட்டு வந்தாச்சு.
    நீதிமன்றமும், அக்டோபர் 2ஆம் தேதி, விசாரணைக்கு குறிச்சுக்கிட்டாங்க. அபார்ட்மெண்ட்டுக்கும் ஆணையை அனுப்பிட்டாங்க.

    இந்த மாதிரி வழக்கு விசாரணைகளுக்கு, வக்கீல்கள் எல்லாம் வேணாம், நாமே நமது பக்க நியாயத்தை, ஆதாரங்களுடன், எடுத்துக் கூறலாம்,
    நீதிபதி, இருபக்க நியாயத்தையும் கேட்டு, அதே நாள், தீர்ப்பை வழங்கி விடுவார்.

    ஆகஸ்ட் 15 - புகார் அளித்த் நாள்
    October 2 - விசாரணைக்கான நாள்னு, அமஞ்சது, பெரிய co-incidence தான்.
    வாய்மையே வெல்லும்னு உள்ளூர ஒரு இது இருந்தது.

    என்னிடம், பெருசா, proofனு ஒண்ணும் இல்லை. அபார்ட்மெண்ட்டுக்குள் போனது, ஃபோட்டோ வெல்லாம் எடுத்து வச்சுக்கல. என் கிட்ட இருந்ததெல்லாம், அந்த lease check listதான்.

    எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இன்னிக்கு கோர்ட் வாசப்படியை மிதித்தேன்.
    ஒரு மணிக்கு வரச் சொல்லியிருந்தாங்க. 12:00 மணிக்கே நான் ஆஜர். வேர, யாருமே இல்ல. 12:45க்கு தான் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க.

    ஏழு வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளதாக, bailiff கூறினார். ஒவ்வொருவரையும் அழைத்து, ஒரூ ஃபாரத்தில் கையெழுத்து இடச்சொன்னார்.

    நானும், அபார்ட்மெண்ட் சார்பா, யாரு வராங்கன்னு பாக்க ஒரு எதிர்பார்ப்புடன் எழுந்து போனேன்.
    அழகான, ஒரு இளவயது, (1/2 சைனாக்கார?),அழகான, வக்கீலம்மா, ஹை சொல்லிக்கிட்டே என் கூட நடந்து வந்தாங்க.

    bailif: (வக்கீலம்மாவிடம்) oh,you came fully prepared (அவங்க, எல்லா ஃபாரமும் ஏற்கனவே ஃபில் அப் பண்ணி கொண்டு வந்துட்டாங்களாம்)
    வக்கீலம்மா: oh yeah, i have been doing this for 15 years (என்னப் பாத்து நெக்குலா ஒரூ சிரிப்பு வேர)

    ரெண்டு பேரும், கையெழுத்து போட்டதும், bailiff, எங்களைப் பாத்து, நீதிபதி வருவதர்க்குள், நாங்களே பேசித் தீத்துக்க முடிஞ்சா ப்ரச்சனைய தீத்துக்கலாம்னு சொன்னாரு.
    மீடியேட்டர்ஸ் ரெண்டு பேரு, ஃப்ரீயா உபயோகிச்சுக்கலாம்னு கை காமிச்சு விட்டாங்க.

    சரின்னு, நானும், வக்கீலம்மாவும், கோர்ட் ரூமை விட்டு வெளீல போய் ஹாயா ஒக்காந்து பேச ஆரம்பிச்சோம்..

    -தொடர்ச்சி இங்கே

    Wednesday, October 01, 2008

    வலைப்பதிவாளர் பயோஉல்ட்டா: கோ.கண்ணன்



    பெயர்: கோ.கண்ணன்

    புனைப் பெயர்: கோவியார்

    வயது: சிங்கைப் பதிவர்கள் அனைவரும் (வடுவூர்காரரைத் தவிர), அண்ணான்னோ, சார்னோ கூப்பிடர வயசு.

    தொழில்: பதிவு எழுதுவது

    துணைத் தொழில்: கொஞ்சூண்டு ஆணி பிடுங்கல்.

    அண்மைய சாதனை: ஒரே மாதத்தில் ஐம்பது மொக்ககளைப் மொத்தமாய் போட்டது.

    நீண்ட நாளைய சாதனை: எல்லா பதிவுகளையும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே படிப்பது. ஏழை பாலகன் சிலம்பரசன், சிரமப் பட்டு, மூணு மணிக்கு எழுந்து பேப்பர் விநியோகம் செய்து முடித்து, மாசம் 400ரூ சம்பாதித்து, தந்தைக்கு உபயோகமாய் இருந்து, பள்ளிக்கும் சென்று, டாக்டராய்டுவேன் சார்னு, ஒரு தன்நம்பிக்கையோடும் இருப்பவனைப் பற்றிய பதிவில், சிலம்பரசனுக்கு சாதி சர்டிஃபிகேட் கொடுத்தது, நீண்ட கால சாதனையின் மையத்தை தொட்ட நிகழ்வு.

    வசிக்கும் இடம்: வாஸ்து படி சரியாக கட்டப்பட்ட வீடு

    நீண்ட நாள் எரிச்சல்: விநாயக சதுர்த்திக்கு சிங்கையில் லீவு விடாதது.

    மிகவும் பிடித்த கவிஞர்: ஆண்டாள்

    மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர்: ஞானி

    மிகவும் பிடித்த அரசியல் தலைவர்: மோடி

    சிறப்பு குணம்: எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது :)

    பிடித்த உடை: கறுப்புகலர் சட்டையும் கறுப்பு கலர் வேட்டியும். ஐயப்ப சீசனில் விரும்பிக் கட்டுவது.

    பிடித்த சாமியார்: ஜெயேந்திரர்

    பிடித்த சுற்றுலாத்தலம்: குடும்பத்தாருடன் திருப்பதி

    பதிவுகள்:
    சொந்தப் பெயரில்: கோலம்
    வேறு புனைப் பெயர்களில்: நாராயணின் மகிமை, திருவெம்பாவை, ஐயப்பன்மகிமை


    மீ, த எஸ்கேப் ;)

    பி.கு: கோவியார், அனுமதிச்சா, அவரு ரீஜண்ட்டு புகைப்படத்தையும், பதிவுல போடலாம்னு இருக்கேன். மனது வைப்பாரா கோவி? :)
    மேல இருக்கரதுல எது உடான்ஸு, எது ரியலுன்னு, கோவியார்தான் சொல்லோணும்.