recent posts...

Sunday, October 05, 2008

கவர்னர் Sarah Palinம் முதல்வர் கருணாநிதியும்




விட்டா நம்ம ஜார்ஜ் புஷ்ஷையே விஞ்சிவிடுவார் போல் தெரிகிறது, Sarah Palin. ( அமெரிக்காவின் republican பார்ட்டியில், John Mccain உடன் Vice President ஆக, தேர்தல் களத்தில் உள்ளார்.) இவரின் சமீப கால பேட்டிகள், சொற்பொழிவுகளே இதற்கு சாட்சி.

தசாவதாரத்தில், NaClக்கு புருவத்தை உயர்த்தி, கமல் கூட புஷ்ஷை கிண்டல் செய்தாயிற்று.

இங்க, புஷ்ஷின் அறியாமையை, எல்லா காமெடி நிகழ்ச்சியிலும், அக்கு வேறு ஆணி வேரா புடுங்கி காயப் போட்டுட்டாங்க.

இப்போ, சாரா பெயிலின் பேசரத பாத்தா, புஷ்ஷை தூக்கிப் போட்டு மிதிச்சிடுவாங்க போலருக்கு. அவ்ளோ அறியாமையும், பேதமையும்(?), அனுபவமின்மையும், முட்டாள்தனங்களும் தலைவிரிச்சு ஆடுது.

Satuday Night Liveனு இங்க தொலைக்காட்சி காமெடி ப்ரோக்ராம் ஒண்ணு, க்ளிண்டன், புஷ் வகையராக்கள் மாதிரியே impersonators வச்சு, அவங்கள கிண்டல் பண்ணுவாங்க.

போன வாரம், சாரா பெயிலின் மாதிரியே ஒருவர், சாரா பெயிலினின் நிஜப் பேட்டியை அப்படியே திரும்ப செய்து காட்டினார். காமெடி ஸ்க்ரிப்ட் எழுதி கிண்டல் பண்ணியிருந்தா கூட அவ்ளோ சிரிப்பு வந்திருக்காது. அவங்க பேட்டியில் சொன்னதை அப்படியே கேட்டா, குபீர் சிரிப்பு வருது.

கிண்டலின் ஒரு துண்டு இங்க க்ளிக்கி பாக்கலாம்.

nuclearஐ, nul-cearனு சொன்னது...
Russia கிட்டே இவங்க வீடு (Alaska) இருப்பதால், இவங்களுக்கு international relations, foregin policy எல்லாம் அத்துப்படியாம்...
Afghanistan, இவங்களின் neighborஆம்...
எதையோ கேட்டா, என்னென்னமோ பதில் சொல்றது... (இதைக் கேட்டுப் பாருங்க, ஏதாச்சும் புரிஞ்சா பின்னூட்டத்தலு சொல்லுங்க.)
... இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

சமீப காலமா, தமிழ் நாட்டு நிலவரமும் கிட்டத்தட்ட்ட இப்படி ஆகிக்கிட்டு இருக்கு.
சாரா பெலின் அனுபவமற்றவர், இப்படியெல்லாம் 'slip'ஆவது ஓ.கே.

ஆனா, அறுவது வருட அரசியல் அனுபவம் மிக்க முதல்வர் கருணாநிதி, இப்படி 'slip'ரது, தாங்க முடியல்ல.

மின்சாரத் தடை அடிக்கடி இருக்கே அதுக்கென்ன வழின்னு கேட்டா - இங்க மட்டுமா இருக்கு, குஜராத்ல போயி கேளு, பீஹர்ல போய் கேளுங்கராரு.

மீனவர்கள் நடுக்கடலில் சுடப்பட்டு சாகராங்களேன்னு கேட்டா - ஒரு நாள் பந்தல் போட்டு எல்லாரும் 'டயட்'ல (உண்ணாவிரதம்) இருக்கலாங்கராரு.

தமிழினத் தலைவராச்சே நீங்க, சிங்களத்தார்கள் நம்மாளுங்கள அநியாயத்துக்கு போட்டுத் தாக்கறாங்களே, இதுக்கு ஏதாச்சும் செய்யுங்களேன்னா - நாட்டு மக்கள் எல்லாரும், சிங்குக்கு தந்தி அடிங்கங்கராரு.

சிங்கு, புஷ் பேச்சை கேட்டுக்கிட்டு, எங்க கையெழுத்துப் போடணும்னு ஒரு பக்கம் சுத்திக்கிட்டிருக்காரு. சிங் என்னிக்கு தந்தியப் படிச்சு புரிஞ்சுக்கிட்டு, என்னிக்கு முடிவெடுத்து, என்னிக்கு இதுக்கெல்லாம் முடிவு கட்டரது?

மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், ஆள மாத்திக்கிட்டே இருந்தாலும், ஊருக்கு ஒரு மாற்றமும் கிட்டாமல், எல்லா ஆட்சியும், same-pinch மாதிரி வெளையாடிக்கிட்டே இருக்காங்க.

என்ன கொடுமைங்க இது?

6 comments:

கா.கி said...

வெள்ளக்காரன் மத்தியிலயும் படிப்பறிவில்லாதவன் இருப்பான்னு இங்க (இந்தியாவுல) பொதுவா யாருக்கும் தோணவேமாட்டேங்குது... inglieesh துரைமாறுங்க எல்லாம் படிப்பரிவுள்ளவங்க இல்லன்னு மறுபடியும் தெரியுது. ...அங்க கக்கூஸ் கழுவறவன் கூட இங்கிலீஷ் தான் பேசுவான்...இந்த வீடியோவ இங்க உள்ள தமிழ் சேனல் எல்லாத்துலயும் போட்டு காமிச்சி, "பாருங்கையா, ஏதோ நம்ம ஊர்லதான் இப்படின்னு பெருமைபடாதீங்க. அவங்க ஊர் அரசியல்"வியாதியும்" இந்த லட்சணம்தான், " அப்படின்னு சொல்லணும்...

p.s.did u c tat vdo???

SurveySan said...

//p.s.did u c tat vdo???//

if you are refering to the debate of Sarah Palin, yes.

SurveySan said...

related

http://www.hindu.com/2008/10/06/stories/2008100656980100.htm

கா.கி said...

//p.s.did u c tat vdo???//

நான் சொன்னது அந்த AL Pacino video

SurveySan said...

oh, the alpacino one. that ofcourse i did.

amazing acting by my all time favorite pacino.

luckily, i didnt go that explosive in my court ;)


i recommend this for my readers :)
http://in.youtube.com/watch?v=JjCA3I-V9WA&feature=related

ராஜ நடராஜன் said...

சர்வே!கோழி பிடிக்கிற பதிவுக்கு வந்தபோது சாரா பாலின் பேரும் கண்ணுல பட்டுத் தொலைஞ்சிருச்சு.காலைல ஒரு பதிவில அமெரிக்கா 2008 பற்றி படிக்கப் போய் அது சாரா பாலின் டி சர்ட்டுல கொண்டு போய் விட்டுருச்சு.நம்மாலுகளுக்கும் இந்த டிசர்ட் டெக்னிக் கொஞ்சம் அறிமுகப் படுத்தினா தேர்தல் நேரம் எப்படியெல்லாம் களைகட்டும்:)))))