recent posts...

Wednesday, October 01, 2008

வலைப்பதிவாளர் பயோஉல்ட்டா: கோ.கண்ணன்பெயர்: கோ.கண்ணன்

புனைப் பெயர்: கோவியார்

வயது: சிங்கைப் பதிவர்கள் அனைவரும் (வடுவூர்காரரைத் தவிர), அண்ணான்னோ, சார்னோ கூப்பிடர வயசு.

தொழில்: பதிவு எழுதுவது

துணைத் தொழில்: கொஞ்சூண்டு ஆணி பிடுங்கல்.

அண்மைய சாதனை: ஒரே மாதத்தில் ஐம்பது மொக்ககளைப் மொத்தமாய் போட்டது.

நீண்ட நாளைய சாதனை: எல்லா பதிவுகளையும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே படிப்பது. ஏழை பாலகன் சிலம்பரசன், சிரமப் பட்டு, மூணு மணிக்கு எழுந்து பேப்பர் விநியோகம் செய்து முடித்து, மாசம் 400ரூ சம்பாதித்து, தந்தைக்கு உபயோகமாய் இருந்து, பள்ளிக்கும் சென்று, டாக்டராய்டுவேன் சார்னு, ஒரு தன்நம்பிக்கையோடும் இருப்பவனைப் பற்றிய பதிவில், சிலம்பரசனுக்கு சாதி சர்டிஃபிகேட் கொடுத்தது, நீண்ட கால சாதனையின் மையத்தை தொட்ட நிகழ்வு.

வசிக்கும் இடம்: வாஸ்து படி சரியாக கட்டப்பட்ட வீடு

நீண்ட நாள் எரிச்சல்: விநாயக சதுர்த்திக்கு சிங்கையில் லீவு விடாதது.

மிகவும் பிடித்த கவிஞர்: ஆண்டாள்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர்: ஞானி

மிகவும் பிடித்த அரசியல் தலைவர்: மோடி

சிறப்பு குணம்: எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது :)

பிடித்த உடை: கறுப்புகலர் சட்டையும் கறுப்பு கலர் வேட்டியும். ஐயப்ப சீசனில் விரும்பிக் கட்டுவது.

பிடித்த சாமியார்: ஜெயேந்திரர்

பிடித்த சுற்றுலாத்தலம்: குடும்பத்தாருடன் திருப்பதி

பதிவுகள்:
சொந்தப் பெயரில்: கோலம்
வேறு புனைப் பெயர்களில்: நாராயணின் மகிமை, திருவெம்பாவை, ஐயப்பன்மகிமை


மீ, த எஸ்கேப் ;)

பி.கு: கோவியார், அனுமதிச்சா, அவரு ரீஜண்ட்டு புகைப்படத்தையும், பதிவுல போடலாம்னு இருக்கேன். மனது வைப்பாரா கோவி? :)
மேல இருக்கரதுல எது உடான்ஸு, எது ரியலுன்னு, கோவியார்தான் சொல்லோணும்.

23 comments:

கோவி.கண்ணன் said...

//மீ, த எஸ்கேப் ;)

பி.கு: கோவியார், அனுமதிச்சா, அவரு ரீஜண்ட்டு புகைப்படத்தையும், பதிவுல போடலாம்னு இருக்கேன். மனது வைப்பாரா கோவி? :)
மேல இருக்கரதுல எது உடான்ஸு, எது ரியலுன்னு, கோவியார்தான் சொல்லோணும்.//

:)

என் புகைப்படம் போடுவதற்கு அனுமதி தேவை இல்லை. நாடறிஞ்ச பார்பனருக்கு பூணூல் எதுக்குன்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டது இல்லையா ? என்னிடமும் பூணூல் இல்லை.

:))))))

கோவி.கண்ணன் said...

email முகவரியைக் கொடுங்கள் நானே ஒரு படம் அனுப்பி வைக்கிறேன்

SurveySan said...

கோவி, உங்களுக்கு அந்த சிரமமே வேணாம்.
போட்டுட்டேன்.
சரியா இருக்கான்னு சொல்லுங்க ;)

பி.கு:மாத்தணும்னா வேர படம் சர்வேசன்2005 அட் யாஹூக்கு அனுப்பி வைங்கோ ;)

SurveySan said...

கோவி,

jokes apart, சிலம்பரசன் பதிவுல, நீங்க அந்த கேள்வி கேட்டது ஞாயமான்னு ஒரு பதிவப் போட்டீங்கன்னா, நன்னாருக்கும் ;)

குறிப்பா, அதுல இதெல்லாம்ம் அலசுங்க:
* பொருளாதார அடிப்படையில் கிருமிகளை கடைந்தெடுத்தால் என்ன?
* சிலம்பரசன் மாதிரி ஆளுங்களுக்கு, ஒதுக்கீடு அவசியமா, படிக்க பண உதவி அவசியமா,
* பல சிலம்பரசரர்கள், நாம தூங்கர நேரத்துல, இவ்ளோ கஷ்டப் படராங்களே, இதுக்கெல்லாம் யார் காரணம், விடுவு என்ன, எப்போ எப்படி வரும் இவங்களுக்கு?

ஜோசப் பால்ராஜ் said...

//பிடித்த உடை: கறுப்புகலர் சட்டையும் கறுப்பு கலர் வேட்டியும். ஐயப்ப சீசனில் விரும்பிக் கட்டுவது. //

சிங்கையின் சீனியர் சிங்கத்தைப் பற்றி தவறான தகவல் அளித்தமைக்கு கடுமையான கண்டணங்கள்.

அவருக்கு பிடித்த உடை : முக்கா டவுசர் & டி‍சர்ட்.

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
கோவி, உங்களுக்கு அந்த சிரமமே வேணாம்.
போட்டுட்டேன்.
சரியா இருக்கான்னு சொல்லுங்க ;)

பி.கு:மாத்தணும்னா வேர படம் சர்வேசன்2005 அட் யாஹூக்கு அனுப்பி வைங்கோ ;)
//

இதுவே நல்லா தான் இருக்கு 1993 வரை அப்படித்தான் இருந்தேன், அதன் பிறகு தான் 'பிரம்ம ஞானம்' கிடைத்து பட்டைக்கு விடை கொடுத்தேன்.

:)))

SurveySan said...

:)

btw,
/////சிறப்பு குணம்: எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது :)////

நீங்க எஸ்.கேக்கு போட்டட்து, உங்களுக்கு சரியாவே பொறுந்த்து ;))))

ஹாப்பி. காந்தி ஜயந்தி.

'கடவுள் என்பது' படிங்க/கேளுங்க ;)

SurveySan said...

ஜோசப்,

///அவருக்கு பிடித்த உடை : முக்கா டவுசர் & டி‍சர்ட்.//

அதெல்லாம், வெளீல டிவி சீரியல் நடீகைகளை பாக்க வரும்போதுதான். வீட்டுக்குள்ள, பக்திப் பழம்னு நெம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து சேதி ;))

SurveySan said...

மீ த ஸ்லீப்பிங்.

குட்.நைட்!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் said...

//SurveySan said...
கோவி,

jokes apart, சிலம்பரசன் பதிவுல, நீங்க அந்த கேள்வி கேட்டது ஞாயமான்னு ஒரு பதிவப் போட்டீங்கன்னா, நன்னாருக்கும் ;)

குறிப்பா, அதுல இதெல்லாம்ம் அலசுங்க:
* பொருளாதார அடிப்படையில் கிருமிகளை கடைந்தெடுத்தால் என்ன?
* சிலம்பரசன் மாதிரி ஆளுங்களுக்கு, ஒதுக்கீடு அவசியமா, படிக்க பண உதவி அவசியமா,
* பல சிலம்பரசரர்கள், நாம தூங்கர நேரத்துல, இவ்ளோ கஷ்டப் படராங்களே, இதுக்கெல்லாம் யார் காரணம், விடுவு என்ன, எப்போ எப்படி வரும் இவங்களுக்கு?
//

இதுபற்றியெல்லாம் எவ்வளவோ எழுதியாச்சு.

மதிப்பெண் குறைவுக்கும் சரி, படிப்பில் கவனமின்னைக்கும் சரி விழிப்புணர்வு இன்மையே காரணம், நம்ம 'சாதி'க்காரங்களுக்கு படிப்பு சரியாக வராது என்று அவர்களே நினைப்பதைவிட, 'பறையனுக்கு படிப்பு' வராது என்று ஆசிரியர்கள் கூட அவர்களை சீண்டுவதைப் பார்த்து இருக்கிறேன். அவர்களும் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள், அதிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை, வெறும் சொற்பொழிவோ, ஒரு விழிப்புணர்வு திரைப்படமோ அதனை செய்துவிட முடியாது, அவனுக்கு கிடைக்கும் பதிவிதான் அதைப்பற்றி அவனது சந்ததிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும், படித்தால் பொருளாதார, சமூக நிலை உயரும் என்கிற நம்பிக்கையை தருவது பதவி தான்.

பதவி படிப்பின் மூலம் தான் கிடைக்கும், படிப்பு ? மற்றவர்களுடன் போட்டி இட முடிகிற அளவுக்கு மதிப்பெண் எடுக்கும் விழிப்புணர்வு அவர்களுக்கு குறைவாக இருப்பதால் தான் அவர்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ற சலுகை வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஓடும் ஆற்றல் குறைவாக இருப்பதால் இவர்களுடன் ஓடுபவர்கள் காலை உடைத்துக் கொண்டு ஓடச் சொல்வது அல்ல இட ஒதுக்கீடு. இவர்களின் சந்ததிகளை எதிர்காலத்தில் அனைவருடன் சேர்ந்து ஓடச் செய்வதற்கான ஓரு ஏற்பாடுதான்.

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பார்பனர்களின் நிலை கீழாகவும், தாழ்வுமனப்பாண்மையுடனும் பிற சமூகத்துடன் போட்டி இட முடியாமல் போனால் அப்போது அவர்களையும் இவ்வாறே தூக்கிவிட வேண்டும் என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள், அது ஞாயமும் கூட.

செந்தழல் ரவி said...

படம் சூப்பர் !!!

ஜோதிபாரதி said...

என்ன கொடுமை அய்யா இது?


யாரைக் கேட்டுக் கொண்டு பட்டை போட்டீர்கள்?|நாமம் அல்லவா போட்டிருக்கவேண்டும். நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

SurveySan said...

Ravi, Danks!

Jothibharathi, Danks! Naamam, pottu, thanip padhivu poottudavendiyadhudhaan. edhayum thaangum singam avar ;)

SurveySan said...

Kovi, neenga solradhellaam padikka nallaadhaan irukku.
aanaaaaa...?

SurveySan said...

If some families have already gotten the 'padhavies' and benefited, they should be moved away from the LIST.

is that also not acceptable according to your plans?

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
If some families have already gotten the 'padhavies' and benefited, they should be moved away from the LIST.

is that also not acceptable according to your plans?

5:19 PM, October 02, 2008
//

ஓபன் காம்பெட்டிசனிலும் இந்த நிலைமை தானே இருக்கு.

படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்ட பணக்கார மாணவன், மற்றொரு ஏழை உயர்வகுப்பு மாணவனுக்கு போட்டியாக இருந்து அவனுக்கு கிடைக்க வேண்டிய இடத்தை அரை சத அதிக வேறுபாட்டில் தட்டிச் சென்று விடுகிறானே, அது பரவாயில்லை ஏழையாகப் பிறந்த அந்த உயர்வகுப்பு மாணவனின் தலையெழுத்து என்பீர்களா ?

SurveySan said...

கோவி,

ஒண்ணு, நீங்க சொல்ரது எனக்குப் புரீல, இல்ல நான் சொல்ரது உங்களுக்குப் புரீல.

பொருளாதார அடிப்படையில், ஒதுக்கீட்டினா, ஏழைக்கு தான் சிட்டு கெடைச்சுடுமே, அப்பரம் எங்க அவன் அரை சதத்தால் பாதிக்கப் படப் போறான்?

ஏழைக்கு, படிக்க பணம் கொடுக்கணும். கொஞ்ச காலத்துக்கு ஒதுக்கீடும் கொடுக்கணும்.

பணம் இருக்கரவனுக்கு, சாதி,மதமெல்லாம் பாக்காம, மார்க் அடிப்படையில் சீட்டு கொடுக்கணும்.

லக்கிலுக் said...

நல்ல பதிவு. கோவி படம் கார்ட்டூன் மாதிரி இருக்கிறது. என்னிடம் சொல்லி இருந்தால் நேச்சுரலாக தயார் செய்து தந்திருப்பேன் :-)

SurveySan said...

லக்கி, இப்பவும் ஒண்ணும் கெட்டுடல.

நல்ல மேக்-அப் போட்டு ஒரு படம் ஏற்பாடு பண்ணி அனுப்புங்க.

சூடாக்கிடறேன்.

'கோவியார் அடிகளிடம் கேள்வி பதில்'னு ஒரு பதிவு ரெடி பண்ணிடலாம்.
இல்லன்னா
'கோவியார் அழைக்கிறார்'னும் போடலாம் ;)

SurveySan said...

btw,

////சிறப்பு குணம்: எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது :)////

எல்லாம் இதை நம்பிதான் சொல்றேன் ;)

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
btw,

எல்லாம் இதை நம்பிதான் சொல்றேன் ;)
//

என்னை நம்புங்கள் என்று நானாக யாரிடமும் சொல்வதில்லை. ஒருவர் மீதான நம்பிக்கை எப்பொழுதும் தன்னால், செயலால் ஏற்படும் ஒன்று தான், வலிந்து ஏற்படுத்துவது அல்ல. ஏற்படுத்த முயலும் நம்பிக்கை எப்பவும் பெயிலியர் ஆகிடும்.


ஒன்னு புரிந்து கொள்ளுங்கள் யாரும் ரொம்ப நாளைக்கு நடிக்க முடியாது. அது ரொம்ப கஷ்டமும் கூட.
:)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.............................................................................................................
..................