recent posts...

Thursday, October 30, 2008

OBAMA வந்தா இந்தியாவுக்கு கேடா?

அரசியல்வாதிங்க வுடர வாக்குறுதிகள் எல்லாம், பெரும்பாலும் வுடான்ஸாதான் இருக்கும்.
நமது பொன்னான வாக்குகளைப் பெற அளந்து அளந்து விடுவாங்க.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை பொன்னாடாக மாற்றுவோம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை ஐந்தே ஆண்டில் வல்லரசாக மாற்றுவோம்"
"எங்கள் ஆட்சியில் விவசாயிகள் முதலாளிகள் ஆவார்கள்"
"எங்கள் ஆட்சியில் எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்கப்படும்"
"எங்கள் ஆட்சியில் ப்ளா ப்ளா ப்ளா"ன்னு இப்படி பலப் பல, வுடான்ஸுகள் நமக்கு கேட்டு கேட்டு புளிச்சு போயிடுச்சு.

நாம பாக்காத வாக்குறுதிகளா?

இங்கே அமெரிக்கால, இவனுங்க, நமக்கு மேல வூடு கட்டி ஆடறாங்க.

பதவிக்காக, என்னென்னமோ டகால்ஜி வேலையெல்லாம் செய்யறாங்க.

ஒபாமா, தேர்தல் ப்ரசாரத்திற்காக செலவு செய்ய, பலப் பல கோடி, நன்கொடைகளாக வாங்கியிருக்காரு.
வாங்கின காசையெல்லாம் எப்படி செலவு செய்யரதுன்னே தெரியாம, இப்ப, இங்கிருக்கும் தொலைக்காட்சிகளி, 30 நிமிடம், விளம்பரம் கொடுக்கறாரு.
30 நிமிஷத்து கிட்டத்தட்ட 15 கோடி ரூவா எடுத்து விட்டுருக்காராம்.

இதுல கொடுமை என்னென்னா, இவருக்கு, நன்கொடை கொடுத்த பெருந்தகைகள், பலப் பல hidden agendaஸோடதான் அலைவானுங்க.
இவரு, தப்பித் தவரி ஜனாதிபதி ஆயிட்டா, இந்தப் பெருந்தகைகள், தங்களூக்கு வேண்டிய பல விஷயங்களை கமுக்கமா முடிச்சுக்க அலைவானுங்க.

எல்லாம், நம்ம ஊர்ல நடக்கர, அதேமாதிரி கீழ்தர, தரகு அரசியல் தான் இங்கையும்.

என்னமோ போங்க.

ஒபாமாவின், 30 நிமிட விளம்பரம் காண இங்கே சொடுக்கலாம்.

இதுல இந்தியாவுக்கு எங்கேருந்து கேடு வந்துச்சுங்கறீங்களா?

ஒபாமா அளந்து விடர ரெண்டு வாக்குறுதிகள் இங்கே:


அதாவது,
உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உற்பத்தி செய்தால், சலுகைகள்.
இந்தியாமாதிரி வெளிநாட்டுக்கு, வேலையை outsource செய்யாதிருந்தால், சலுகைகள்.

இது ஒண்ணும், உடனே பாதிப்பை தராது. ஆனா,.....?



தெரிஞ்சவங்க சொல்லுங்க. ;)

ஹாப்பி வெள்ளி!

பி.கு: வலப்பக்க வாக்குப் பெட்டியில், ஒபாமா 76% வாங்கி முன்னிலையில் இருக்காரு. நம்மாளுங்களுக்கு ஒபாமாதான் புடிச்சிருக்கு?

2 comments:

Arizona penn said...

ஒபாமா வந்தா இந்தியாவுக்கு கேடில்லை. நல்லதுதான். எப்படின்னு கேக்கறீங்களா? நீங்க ரொம்ப புகழற அவுட் சோர்சிங் என்பது நமது கண்ணுக்கு பெரிய பொருளாதார முன்னேற்றம் மாதிரி தெரிஞ்சாலும், அது செய்யும் பொருளாதார, சமூகவியல் கேடுகள் ரொம்ப அதிகம். கட்டுக்கடங்காம ஒரு சிறு பிரிவினர் மட்டும் பொருளாதார மேன்மை அடையறதும் அதனால பெரும்பான்மையான நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டில் & வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் மேலும் மேலும் கீழ் நிலை நோக்கி செல்வதும் எந்த நாட்டுக்கும் நல்லதல்ல...அதுவும் நம் இந்தியா போன்ற நாட்டுக்கு நல்லதே இல்லை. சமூக ஏற்றத்தாழ்வு மிக மிக அதிகமாக ஆனால் அமெரிக்கா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை இந்தியாவும் சந்திக்கும்....அதனால், ஒபாமா நிஜமாக தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினால் அது எல்லாருக்கும் நன்மை தான்.

SurveySan said...

selwilki,

interesting point.

so, in other words, you dont want anybody to improve? :)

There is certainly indirect benefit to other groups when IT improves.