ஏகன் திரைப்பார்வைய படிச்சுட்டு, பலரும் வந்து கும்மிட்டாங்க.
குறிப்பா, 'கமல்'னு ஒரு பதிவர், "நெஞ்சத்தொட்டு சொல்லுங்க, ஏகன், குரிவியை விட குப்பையா?"ன்னு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுட்டாரு. :)
அவருக்கு சொன்னதை, இங்கையும் சொல்றேன்.
"கமல், நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது. எப்போமே, மனசுல தோணறது, தட்டச்சி வெளீல வுடறேன். அம்புடுதேன் ;)".
இனி, குசேலன் பற்றிய எனது கண்ணோட்டத்தைச் சொல்றேன்.
ஏற்கனவே சொன்ன மாதிரி, ஓசிப் பட வரிசையில், இது ரெண்டாவது படம்.
நேத்து, "ஏகன் = 2 x குருவி"க்கு அர்த்தம், குருவியை விட ஏகன், ரெண்டு மடங்கு மட்டம்.
இன்னிக்கு, சொல்றது, சந்திரமுகியை விட, குசேலன், இரண்டு மடங்கு பெட்டர்.
அந்த சந்திரமுகி எப்படிதான், அப்படி ஓடுச்சோ (ஒட்னாங்களோ?) தெரீல, எனக்கு பயங்கர அறுவையா தெரிஞ்சுது அந்த படம். ரஜினியின், யதார்த்தமற்ற நடிப்பு எனக்கு பெரும் எரிச்சலை தந்தது, சந்திரமுகியில். பிரபுவும், வடிவேலுவும் பண்ண அலப்பரையும் தாங்க முடியலை அதுல.
குசேலனை, மக்கள், தேவையில்லாம போட்டு வாட்டி எடுத்துட்டாங்கன்னு நெனைக்கறேன்.
ஓவர், பில்டப் கொடுத்ததால் வந்த வினை இது. தேவைதான்.
படத்தை பொறுத்தவரை, நல்ல, போரடிக்காத படம் ( மொத நாள், ஏகன் பாத்துட்டு, எத்த பாத்தாலும், அப்படித்தான் இருந்திருக்குமோ? ;) ).
பசுபதியின் நடிப்பும், ரஜினியின் அசால்ட்டாக வந்து போகலும், நெருடாத காட்சியமைப்பு.
எல்லாரும், ஓவரா பந்தாடின, வடிவேலுவின் காமெடி கூட, எனக்கு மட்டமா தெரியலை.
அவரு, எல்லாரையும் திருட்டு போலிசு வச்சு, இழுத்துக்கிட்டு வந்து, மயக்க மருந்து போட்டு, மொட்டை அடிக்கும் காட்சிகள், நல்ல சிரிப்பு.
ஒட்டாதது - மீனா. தட்டினா கீழ விழுந்துடர குடிசையில் இருக்காங்களாம். ஆனா, பளிச்னு, மேக்கப்பும், திருத்திய புருவமும், புது சாரியும், சுத்தமா ஒட்டலை.
படம் எடுக்கும்போது, யாருக்குமே இந்த மேட்டர் எப்படி கண்ணுல படாம இருந்திருக்கு? ரொம்பக் கேவலம்!
ரஜினி, ஆர்.சுந்தர்ராஜனுக்கு கொடுத்த பேட்டி கூட நல்லாதான் இருந்துச்சு. படத்துல சொல்லறதையெல்லாம் ஏண்டா உண்மைன்னு நம்பிட்டு, உங்க பொழப்ப கெடுத்தக்கறீங்கன்னு, தைரியமா ரஜினி சொன்னது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
க்ளைமாக்ஸில் ரஜினி கலக்கியிருக்காரு. ( மம்முட்டி இதைவிட நூறு மடங்கு கலக்கியிருப்பாருங்கரது, தனிக்கதை ). ரஜினி, அழுதா நமக்கு பிடிக்கமாட்டேங்குது போல! ;)
பசுபதி இருக்கர ஊரு அமக்களமா படம் பிடிச்சிருக்காங்க.
என்ன ஊருங்க அது? குறிப்பா, அந்த பெரிய ஏரி? எங்க இருக்கு அது?
கிராஃபிக்ஸ் - தேவையில்லாம சொறுகியிருக்காங்க. டால்ஃபின் அந்த ஏரியில் குதிப்பது அழகான கற்பனை. ஆனா, ஏரிக்கு மேலே பெரிய நீர்வீழ்ச்சி வரவச்சதெல்லாம் கொடுமைடா சாமி! இப்ப, எது உண்மையிலேயே இயற்கை அழகு, எது கிராஃபிக்ஸ் பூச்சுற்றல்னு கொழப்பம் வந்துடுச்சு.
"ஓ சாரரே சாரே சாரே, போக்கிரி பையன் தாண்டா பொல்லாதவன் நீ" பாட்டுக்கு செட்டிங்கும், கிராபிக்ஸும் செம கலக்கல். சிவாஜி தோத்துது போங்க!
மொத்தத்தில், ஒரு தடவ, நார்மல் படங்களுக்கு கொடுக்கும் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடிய, நார்மலான படம்!
குசேலன், கற்பித்த பாடங்கள்:
* அதிகமான பில்டப், கன்னா பின்னான்னு, பேக் ஃபையர் ஆகும்.
* மட்டமான படத்துக்கு (ஏகன்) அப்பால, சுமாரான படம் (குசே) பாத்தாலும், சூப்பர் படம் மாதிரி ஃபீல் கொடுக்கும்.
* ரஜினி படமே ஆனாலும், சில மாசம் கழிச்சு ஒரு படத்தை தியேட்டர்ல பாத்தா, எல்லாரும் ரொம்ப நல்ல பசங்களா சமத்தா விசில் எல்லாம் அடிக்காம, அகிரா குரோசோவா படம் பாக்கர மாதிரி ரொம்பவே சீரியஸா பாக்கறாங்க. குட்!
பி.கு: ராமலக்ஷ்மியின் அட்டகாசமான கவிதை இங்கே
18 comments:
பாபாஜி சர்வேசனை நீங்க தான் காப்பாத்தனும் :-))))
கிரி, நல்ல வாக்குதான சொல்லிருக்கேன். இதுக்கு ஏன் கும்மப் போறாங்க?
இருந்தாலும், ஹெல்மெட் போட்டுக்கறேன் ;)
ராமலக்ஷ்மியின் கவிதை இங்கே. படிங்க!
btw, ஓசிப்பட வரிசையில் இன்னொரு படம் இருக்கு. அது நாளை வரும், இன்ஷா அல்லாஹ்! ;)
நீங்க ஆழ்வார் பாத்திட்டு ஏகன் பார்த்திருந்தீங்கன்னா சூப்பர்'ன்னு சொல்லியிருப்பீங்க...
சரவணகுமரன்,
//நீங்க ஆழ்வார் பாத்திட்டு ஏகன் பார்த்திருந்தீங்கன்னா சூப்பர்'ன்னு சொல்லியிருப்பீங்க...//
;) தகவலுக்கு நன்றி. ஆழ்வார் டி.வி.டி கிடைக்கிர பக்கம், தல வச்சு கூட படுக்க மாட்டேன் ;)
//SurveySan said...
கிரி, நல்ல வாக்குதான சொல்லிருக்கேன். இதுக்கு ஏன் கும்மப் போறாங்க? //
பிரச்சனையே அது தான் :-)
//SurveySan said...
ராமலக்ஷ்மியின் கவிதை இங்கே. படிங்க!//
நாங்க படித்து கமெண்ட் ம் போட்டு விட்டோம் :-)
உங்களுக்கு என்னமோ ஆயிருச்சு..
my review
http://creativetty.blogspot.com/2008/08/kuselan-eriya-eriya-review.html
வேணும்னா ஒரு ரெண்டு மாசம் முந்தி, நீங்க படிச்சு கமெண்ட் போட்ட பதிவு இன்னொரு முறை படிச்சிருங்க
இதோ வந்துட்டேன்.
நானும் ரெண்டு படமும் பாத்தேன். எனக்கென்னமோ
குசேலன் = சந்திரமுகி னு தான் சொல்லுவேன்
ரெண்டு படத்தலயும், நல்ல கதைய படுக் கேவலமா எடித்திருப்பாங்க.
சந்திரமுகி எல்லாம் எப்டி தான் ஓடிச்சோ...
ஆனா, குசேலன நல்லா எடுத்திருந்தா நல்லா ஓடியிருக்கும். ஓவர் பில்டு அப்பு ஒரு ஆப்பு. மத்த படி குசேலன்ல quality ரொம்ப கம்மி. ரஜினியோட lipstick கூட தனியா தெரிஞ்சிது. சகிக்கல.
நிங்க கத பறயும்போல் பாத்திருக்கலாம். மூனாவது படம் என்னத்த பாத்து தொலச்சீங்க? மத்த படி இது வரைக்கும் ஒரு நல்ல படம் கூட பாக்கல. ஒரு வேள அதுனால தான் free-a போட்டாய்ங்களோ? :)
I didnt watch kuselan but i have watched Chandramukhi. One more crap movie. I wud say the hindi version "bhool bhuliya" was better. Its all because of the over acting of Rajini, and his image.
Also You sud note one thing in the story, Acording to chandramuki (the character) the king(vettayan) is villian against her love. Now how come Rajini=vettayan, it should be her hubby prabhu, rite?.
Can any 1 tell me how to type in tamil here?
பின் குறிப்புக்கு நன்றி:)!
//நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது//
What a Punch Dialog ? :D
Neraya padam paathaa effectaa ?
//nathas said...
//நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது//
What a Punch Dialog ? :D
Neraya padam paathaa effectaa ?
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
karthick, எதிர்பாப்பு இல்லாம பாத்தா நல்லா இருந்திருக்கும் :)
truth,
///நிங்க கத பறயும்போல் பாத்திருக்கலாம். மூனாவது படம் என்னத்த பாத்து தொலச்சீங்க?///
எரடுதினால ஹேள்தினி ;)
truth,
///நிங்க கத பறயும்போல் பாத்திருக்கலாம். மூனாவது படம் என்னத்த பாத்து தொலச்சீங்க?///
எரடுதினால ஹேள்தினி ;)
ethi, ரொம்ப கூர்பா கவனிக்கறீங்க போல. :)
//Can any 1 tell me how to type in tamil here?//
google for e-kalappai
நாதஸ், இதெல்லாம் தானா வருது இப்ப ;)
truth,
///நிங்க கத பறயும்போல் பாத்திருக்கலாம். மூனாவது படம் என்னத்த பாத்து தொலச்சீங்க?///
எரடுதினால ஹேள்தினி ;)
என்னது? ஏற்னதால கால் வலியா?
மலையாள படமா?
அந்த லிங்க இப்போப் பாத்தேன். வாரணம் ஆயிரம் எல்லாம் ஃப்ரீயா போட்றதா சொல்றாங்க... என்னய்யா நடக்குது?
Post a Comment