recent posts...
Monday, January 05, 2009
Slumdog Millionaire - திரைப் பார்வை
விகாஸ் ஸ்வரூப்பின் Q&A என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஹிந்தி-லீஷ்' படம், Slumdog Millionaire. இங்க அமெரிக்கால, நல்லா ஓடுது படம்.
8 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் கிடைக்காம, 11 மணிக்கு போனேன்னா பாத்துக்கங்க.
'கோன் பனேகா க்ரோர்பதி'ன்னு டி.வியில் அமிதாப் நடத்துவாரே ஒரு க்விஸ் போட்டி, அதை கருக்களமா கொண்டது படம்.
மும்பையில் ஒரு சேரியில் பிறந்து வளர்ந்த ஜமால் எப்ப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, முதல் பரிசை வெல்லராரா இல்லியான்னு சொல்லும் விதமாய் அமைந்த படம்.
கரு ரொம்ப சிம்பிளா இருக்குல்ல? ஆனா, திரைக்கதை அமைத்த விதமும், சில காட்சி அமைப்புகளும், படத்தை அட்டகாசமா ஒவ்வொரு நிமிடமும் முன்னேத்துது.
மும்பையின் நடுவில் இருக்கும் ஒரு செம கலீஜான சேரியில் வளர்கிறார்கள் ஜமாலும் அவன் அண்ணன் சலீமும். சின்ன வயது ஜமால் செம க்யூட்டா இருக்கான். ஆனா, மும்பையின் 'சேரி' வாழ்க்கையின் யதார்தத்தை காட்டுகிறேன் என்று, நம் இந்திய இமேஜை டோட்டல் டாமேஜ் பண்ணியிருக்காங்க.
முன்னரெல்லாம், இந்த மாதிரி படங்களிலோ டாக்குமெண்ட்ரிக்களிலோ, இந்தியாவின் அழுக்கை அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டுவதை பாக்கும்போது, செம கடுப்பு வரும். ஏண்டா இந்த மாதிரி நெகடிவ் பப்ளிசிட்டி தரீங்க. வேர நல்ல விஷயமே கண்ணுல படலையா உங்களுக்குன்ன்னு எரிச்சல் வரும். நம்ம சாக்கடைகளை வெளியில் காட்டி இவனுங்க பணம் சம்பாதிச்சுக்கராங்களேன்னு கடுப்பும் வரும்.
ஆனா பாருங்க, இதுதான் உண்மை. இந்தியாவில் 70% இன்னும் இப்படித்தான் இருக்கு.
தலைக்கு மேல் கூரைன்னு சொல்லிக்க ஒரு இத்துப் போன ஓலை குடிசை. குடிசையை ஒட்டியமாதிரி தேங்கி நிற்கும் நாற்றம் நிறைந்த சாக்கடை. குப்பைக் கூளங்களையும் மற்றவர்களின் எச்சில்களையும் குத்திக் கிளறி அதிலிருந்து கிடைக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்று சம்பாதிக்கும் கேவலமான வேலை. அதுவும் இல்லை என்றால், பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டிய கட்டாயம். 70% மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாம இன்னும் இப்படித்தான இருக்காங்க?
உண்மையை வெளியில் காட்டினா ஏன் கசக்கணும்?
atleast, இந்த அவலங்களை யாராச்சும் வெளியூர் காரன் பாத்து, ஐயோ பாவம், இவங்களுக்கு ஒதவணும்னு களத்தில் எறங்கினான்னா நமக்கு நல்லதுதான். ஏன்னா, உள்ளூர் காரன் ஒருத்தனும் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண மாட்டான்.
மும்பை slumல் ஒவ்வொரு கலீஜ் காட்சியை காட்டும்போதும், பக்கத்து சீட்டு வெள்ளைக்கார அம்மா, முகம் சுளிப்பதும், yikesனு தலையை குனிந்து கண்களை மூடிக் கொள்ளும்போதும், எனக்கும் உள்ளூர கூசியது.
Slumல் காலைக் கடனைக் கழிக்க அடிப்படை வசதி கூட இருக்காது. பாத்ரூம் என்ற பெயரில் ஒரு குட்டி அறை. அறைக்குக் கீழே இருக்கும் பெரிய பள்ளம்தான கழிவறை.
ஹ்ம். இதெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அம்புட்டு கலீஜ்.
பாக்கரதுக்கும் சொல்ரதுக்குமே இப்படி கூசுது, தினம் தினம் இதையே வாழ்க்கையா வாழரவங்கள நெனச்ச்சா நெஞ்சு கனக்குது.
அம்பானிகளும், பச்சன்களும் ஒரு புரம் 40 மாடி வீடுகள் கட்டிக் கொண்டிருக்க, இந்த மாதிரி அவலங்களும் அவங்களுக்கு ரொம்ப பக்கத்துலையே நடக்குது. இது யார் தப்புன்னுதான் புரியல்ல.
உழைப்பால் உயர்ந்த அம்பானியும், பச்சனையும் குறை சொல்ல முடியாதுன்னே தோணுது.
sorry, i digress.
இப்படியாக, இளம் வயது ஜமால், இவ்ளோ 'கலீஜ்'லையும், நண்பர்கள் புடை சூழ ஜாலியாவே வளற்றான். ஆனா, அதுலையும் ஆப்பு வச்சிடறாங்க. மும்பையில் நடந்த மதக் கலவரங்களில், தாயை பறி கொடுக்கிறான்.
அப்பரம், அவனும் அவன் அண்ணன் சலீமும், இன்னொரு குட்டி பொண்ணும் ஊரை விட்டுத் தப்பி ஓடறாங்க.
படத்தின் மையமான, கோன் பனேகா க்ரோர்பதியில் கேட்கப்படும் கேள்விக்கும், ஜமாலின் வாழ்க்கையில் நடந்து முடிந்த விஷயங்களுக்கும், அதிர்ஷ்டவசமா தொடர்பு இருப்பதால் ஜமால் கேள்விகளுக்கு பதிலை சரியா அளிக்க முடியுதுங்கர மாதிரி காட்ட, ஒவ்வொரு கேள்விக்கும், ஃப்ளாஷ்பாக் காட்சிகள் அருமையா சொருகியிருக்காங்க.
சேரி நிகழ்வுகளுக்குப் பிறகு, அடுத்த குபீர் அதிர்வை தந்தது, ஜமால் மற்ற இருவருடன் ஒரு அநாதை விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அங்கு நடக்கும் மற்ற நிகழ்வுகள்.
சிறுவர் சிறுமியரை ஊர் ஊராக சுற்றித் திரிந்து 'சேகரிக்கும்' ஒரு வில்லன், அவர்களை பிச்சை எடுக்க பயன்படுத்தறான்.
அதிலும், சிறுவர்களுக்கு ஓரளவுக்கு பாடத் தெரிந்தால், அவர்களின் கண்ணை குருடாக்கும் விதமும், அவர்களை பாட வைத்துப் பிச்சை எடுக்க வைக்கும் கோரமும் போட்டு உலுக்கி எடுத்திடுச்சு.
நம்ம ஊரு ரயில்களிலும், தெரு ஓரங்களிலும் பிச்சை எடுக்கும், கண் பார்வை இழந்த குழந்தைகளை நினைத்துப் பார்த்தால், திகிலாய் இருக்கிறது.
யப்பா, இப்படியெல்லாம் கூடவா ஆளுங்க இருப்பானுங்க? சின்னப் பசங்களோட, கண்ணை நோண்டி எடுக்கும் அளவுக்கு ஒரு மனுஷனின் மனசு பாராங்கல்லா இருக்குமா?
இதுவரைக்கு செய்தியில் எங்கையும், 'குழந்தைகளின் கண்ணை நோண்டி பிச்சை எடுக்க அனுப்பியவன் பிடிபட்டான்'னு படிச்சதா ஞாபகமே இல்லியே?
அப்ப, யாரும், இதைப் பத்தி புகார் கொடுக்கலியா? இல்ல, எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி கேடிகளை 'மால்' வாங்கிக்கிட்டு லூஸ்ல விட்டுட்டாங்களா?
என்ன கொடுமைங்க இதெல்லாம்?
இனி யாராவது பிச்சை எடுக்கும் சிறுவனையோ சிறுமியையோ பாத்தா, ஒரு வார்த்தை அவங்ககிட்ட பேசி அவங்க நிஜக் கதையை விசாரிங்க.
ரொம்ப கொடுமைங்க இதெல்லாம்.
சிறுவர்களுக்கு இந்த நெலமைன்னா, சிறுமிகள் வளர்க்கப்பட்டு என்னத்துக்கு விற்கப்படுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்.
தலை சுத்துது எனக்கு.
இந்த மாதிரி கழுதைகளை எல்லாம் எப்படி திருத்த முடியும்? அரசு போலீசெல்லாம் என்னா பண்ணறாங்க? நாம என்ன பண்ணறோம்?
எவ்ளோ கோடி குழந்தைகள் இப்படி தினம் தினம் கேட்பார் இல்லாமல் அல்லோலப் படறாங்க?
என்னமோ போங்க.
again, sorry, I digress.
ஜமால் எப்படியோ, கண் குருடாக்கப்படாமல் தப்பிச்சடறான். ஆனா, பின்னாளில், குருடாக்கப்பட்ட பழைய நண்பனை பார்த்துப் பேசும் காட்சி உலுக்கிடுது. அவன் சொல்வான், 'ஜமால், நீ அதிர்ஷ்டக்காரன்டா'ன்னு. :(
இப்படியாக ஜமால் வளர்ந்து முடிஞ்சு, கேக்கர கேள்வி ஒவ்வொண்ணுக்கும் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் உதவியால் பதில் சொல்லிக்கிட்டே வாரான்.
நிகழ்ச்சிக்கான நேரம் முடிஞ்சதும், கடைசி கேள்வியை கேட்பது ஒரு நாள் தள்ளி போயிடுது.
அதுக்குள்ள, இவன் ஏதோ ஃப்ராடு பண்ணீதான் விடையை சொல்றான்னு, நிகழ்ச்சி அமைப்பாளர் அனீல் கப்பூர் இவனை போலீஸ்ல விசாரிக்க சொல்ராரு.
அவனுங்களும், ஒண்ணாம் கிளாஸ் கூட ஒழுங்கா படிக்காத ஜமாலுக்கு எப்படி இவ்ளோ பதில்கள் தெரியுதுன்னு முட்டிக்கு முட்டி தட்டி, ஷாக்கெல்லாம் கொடுத்து விசாரிக்கறாங்க.
விசாரணை முடிஞ்சு, மீண்டும் போட்டிக்கு வரானா, பரிசு வெல்றானான்னு ஓடுது கதை.
இடையில் ஒரு குட்டி லவ் ஸ்டோரியும் இருக்கு. சின்ன வயதில் சந்திக்கும் சிறுமியிடம் லவ்வாகி, அவ பின்னாலையும் சில நிமிடங்கள் பயணிக்குது படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீஜிக். கஜினி மாதிரி மிரட்டலை. ரொம்ப இரைச்சலா இருந்தது எனக்கு.
கேமரா, எடிட்டிங் அமக்களம்.
குறிப்பா, அந்த குப்பைக் கூளமும், பெரிய சாக்கடை சீனும்.
மொத்தத்தில், ஆகா ஓகோன்னு இல்லன்னாலும், நம் சேரிகளின் யதார்த்த வாழ்கை வளத்தை 70mmல் பாக்கணும்னா போயி படத்தைப் பாருங்க.
நல்லாருங்க!
ஸ்ஸ்ஸ்! ஸாரி, நானும் கொழம்பி உங்களையும் கொழப்பிட்டேன் :(
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
குழந்தைகளின் கை காலை உடைத்து பிச்சை எடுக்க விடுவது,கைகுழந்தைகளை பிச்சை எடுக்க வாடகைக்கு கொடுப்பது என்று இங்கு சகலமும் நடக்கிறது.
இதெல்லாம் நடக்குதா அப்படின்னு ஆச்சர்யபடறேப்பவே தெரியுது நீங்க தமிழ் பேப்பர் எல்லாம் சரியா படிக்கறது இல்லைன்னு.
Babu,
I do read tamil papers. but, i have never seen news about somebody getting arrested for forcing kids into begging.
this is sad :(
இந்த வாரம் பாக்கலாம்னு இருக்கேன்...
for the noisy music , US critics have awarded AR Rahman Best Composer award. -:)
http://www.telegraph.co.uk/culture/film/4205787/Slumdog-Millionaire-scoops-US-critics-award.html
Aalavandhan, paathuttu sollunga.
mayavi, yes. and he got the golden globe too. :)
music wasnt catchy in my view.
but still, Congrats to ARR. Kalakkittaaru.
பாத்தாச்சு(நேத்து) பதிவும் போட்டாச்சு
Defn i should respect your view, but the thing is its not loud... as u mentioned, because i viewd the movie and was fascinated by his music in this particular movie. hope u have the listened to the sound track of slumdog millionaire.AR Rahman is not a genius in BGM as illayaraj, but deefn he hass done a good job in this movie and its a well deserved Golden Globe Award. first Indian to acheive this, we all should be proud fo that.
mayavi, ///Defn i should respect your view,////
Thanks!
its hard to find people like you, in our blog world, who respect others views :)
I am going to watch it one more time just for ARR. ;)
/குழந்தைகளின் கை காலை உடைத்து பிச்சை எடுக்க விடுவது,கைகுழந்தைகளை பிச்சை எடுக்க வாடகைக்கு கொடுப்பது என்று இங்கு சகலமும் நடக்கிறது.//
-இத தாங்க நம்ம 'தல' வில்லன் படத்துல காமிச்சாரு...
அவார்டுக்கு அப்புறம்,உங்க பதிவும் பார்த்தப்பறம் படம் பார்த்த தாக்கமோ என்னவோ ஏ.ஆர்.ரகுமான் இசைதான் கதையோட படத்துக்கு உயிர்நாடி.
ராஜ நடராஜன்,
நானும் ரெண்டாவது தடவ பாக்கலாம்னு இருக்கேன்.
இந்த முறை காதை கூர்ப்பாக்கிட்டுப் போறேன்.
கோல்டன் க்ளோப் கொடுத்திருக்காங்க, கண்டிப்பா
விஷயம் இல்லாம இருக்காது.
மேன் மக்கள் மேன் மக்களே. :)
ஷாஜி,
//இத தாங்க நம்ம 'தல' வில்லன் படத்துல காமிச்சாரு...//
அவரு காமிச்சதுக்கும், இவங்க காமிக்கரதுக்கும் நெம்ப வித்யாசம் இருக்குங்க ;)
தங்கள் இடுகைக்கு பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து தனி இடுகையாகவே இட்டு விட்டேன்.
நன்றி
Thanks Kabeer Anban.
naanum unga padhiva padichu, angaye badhil pottutten :)
இன்று பார்க்கப் போகிறேன்.
ramalakshmi, good luck.
oru 10 minutes,mugam sulikka vaikkum, maththabadi OK.
mukkiyamaa, titles podumbodhu Jai-Ho paattu muzhusaa paarunga. sema beat.
if possible, listen to the song before u goto the movie :)
பார்த்தாச்சு. நல்ல படம். உங்க பதிவையே வழிமொழிய வேண்டியதுதான்:)! குறிப்பா,
//திரைக்கதை அமைத்த விதமும், சில காட்சி அமைப்புகளும், படத்தை அட்டகாசமா ஒவ்வொரு நிமிடமும் முன்னேத்துது.//
அப்புறம்..
//இந்தியாவில் 70% இன்னும் இப்படித்தான் இருக்கு.//
அடிப்படை வசதியற்ற சேரிகள் மும்பையில் மட்டுமல்ல இந்தியா எங்கும் விரவித்தான் இருக்கிறது. 4,5 வருடங்கள் முன் வரை பெங்களூரின் பிரதான இடமான கண்டோன்மெண்ட் அருகிலேயே இப்படி ஒரு சிறிய குடியிருப்பு இருந்தது. இப்போது சாலை அகலப் படுத்துதலில் வேறிடம் பெயர்ந்திருக்க வேண்டும். இந்தியாவை இப்படிக் காட்டி விட்டார்களே என்பதை விட இப்படிக் காட்டிய பிறகாவது இந்நிலையைக் களைய வேண்டும் எனும் சிந்தனை வந்தால் நல்லதுதானே?
//எவ்ளோ கோடி குழந்தைகள் இப்படி தினம் தினம் கேட்பார் இல்லாமல் அல்லோலப் படறாங்க?//
உண்மை. சிக்னலில் நான் சந்திக்க நேரும் சிறுவர்கள் ஒவ்வொருவர் பின்னும் என்னென்ன கதைகளோ என நினைக்கையில்..:(!
//mukkiyamaa, titles podumbodhu Jai-Ho paattu muzhusaa paarunga. sema beat.
if possible, listen to the song before u goto the movie :)//
முன்னரே கேட்க வாய்க்கவில்லை என்றால் ட்ராஃபிக்கில் சரியா டைட்டில் முடிந்து படம் ஆரம்பிக்கையில்தான் சீட்டைப் புடிக்க முடிந்தது. அடடா, மிஸ் பண்ணிட்டமோ என நினைத்திருந்தேன். ஆனால் படம் முடிந்து மறுபடி முழுதாக அந்தப் பாட்டு காண்பிக்கப் பட்ட போது [வழக்கமா படம் முடிந்ததுமே கலைய ஆரம்பிப்பது நம்ம மக்கள் வழக்கம் அல்லவா:)?] வெகுசிலரைத் தவிர மற்றவர் அசையாமல் அமர்ந்து ரசித்ததும் குறிப்பிடத் தக்கது. சூப்பர் பீட்!
Ramalakshmi,
title song kidayaadhu adhu, end credits song. so, you didnt miss anything. sorry for my typo ;)
மக்கள் விருப்பமாக்கும்.பதிவு ரெண்டாவது சுத்து வந்துடுச்சு:)
ராஜ நடராஜன் said...
//மக்கள் விருப்பமாக்கும்.பதிவு ரெண்டாவது சுத்து வந்துடுச்சு:)//
இதோ விடப் போகிறேன் மூன்றாவது சுற்றுக்கும்:)!
SurveySan said...
//Ramalakshmi,
title song kidayaadhu adhu, end credits song. so, you didnt miss anything//
அதானே பார்த்தேன்:)! குறுந்தகடு வாங்கிப் பாடலை இப்போ பலமுறை கேட்டு ரசித்தாயிற்று:)! அத்தோடு நின்றிடாமல் நானாகவே கொடுத்துள்ளேன் ஒரு ஆஸ்காரும். நேரம் இருக்கையில் இங்கே பாருங்க.
இன்று தான் படம் பார்த்தேன் படம் அருமை :-)
நீங்கள்:
//எவ்ளோ கோடி குழந்தைகள் இப்படி தினம் தினம் கேட்பார் இல்லாமல் அல்லோலப் படறாங்க?//
பதிலுக்கு நான்:
//உண்மை. சிக்னலில் நான் சந்திக்க நேரும் சிறுவர்கள் ஒவ்வொருவர் பின்னும் என்னென்ன கதைகளோ என நினைக்கையில்..:(!//
துளிர் விட்டது என்னுள் ஒரு பொறி.
மொட்டு விட்டது செந்தாமரை.
விரிந்தது இன்று யூத்ஃபுல் விகடன் விகடன் குட் ப்ளாக்ஸ் பரிந்துரையில்.
ஈழம், 26/11 இவற்றைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக உங்கள் பதிவிலிருந்து கிடைத்த பொறியில் படைத்த கவிதை. தொடரும் பாராட்டுக்கள். நன்றி.
உங்கள் எழுத்தின் ரசிகையாக,
அன்புடன்
ராமலக்ஷ்மி
//ஈழம், 26/11 இவற்றைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக உங்கள் பதிவிலிருந்து கிடைத்த பொறியில் படைத்த கவிதை. தொடரும் பாராட்டுக்கள். நன்றி.
உங்கள் எழுத்தின் ரசிகையாக,//
தன்யனானேன்! நன்றீஸ்! :)
Post a Comment