recent posts...

Tuesday, January 31, 2012

GOOGLE செய்யும் சதி?

இந்திய அரசாங்கம், கூகிளாரையும், முகபுத்தகத்தாரையும், யாஹூவர்களையும் கூப்பிட்டு மிரட்டி அனுப்பியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நம் ஊருக்கு ஒவ்வாத contentஐ சென்ஸார் செய்ய வேண்டும் என்ற மிரட்டல் அது.

ஓ.சில கெடைக்குது, அனானி பெயரும் இருக்குன்னு, பலரும் ஃப்ரீயா, பலப் பல கருத்துக்களை அள்ளி வீசிக்கிட்டு வரோம். சில, அரசாங்கத்துக்கும், கட்சி நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வாத விஷயமாய் அமைந்துவிடுகிறது.

Google.com போனால், உங்க ஊருக்கு ஏத்த மாதிரி, Google.in, Google.sg போன்ற தளங்களுக்கு தானாய் ரீ-டைரக்ட்டு ஆகும். அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி personalized content கொடுப்பதற்க்கு ஏதுவாய் இருந்தது இம்முறை.

ஆனா, blogspot.com சமீபத்தில் blogspot.inக்கு ரீ-டைரக்ட்டு செய்யப்படுவதாய் செவிவழி செய்தி வந்தது.

google.com, google.inக்கு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அமெரிக்காகாரன் super starனு தேடினா Clint East Wood பற்றிய பக்கங்களையும், அமெரிக்கா அல்லாத மற்ற எந்த நாட்டுக்காரன் தேடினாலும், தலீவரு பற்றிய பக்கங்களையும் கட்டம் கட்டி காட்ட ஏதுவாய் இருக்கும். அதை தவிற, அந்தந்த ஊரின், மொழிகள், கலரு காம்பினேஷன்களெல்லாம் போட்டு பக்கத்தை காட்டலாம்.

ஆனா, blogspot.com ஏன் அப்படி உறுமாற்றப்படணும்? surveysan.blogspot.com எந்த ஊரிலிருந்து பாத்தாலும், நான் சொல்ல நினைப்பது ஒரே செய்திதானே? நான் காட்டும் கலரும், மொழியும், டிசைனும் தானே என் வாசகர்கள் பாக்கணும்னு நான் முடிவு பண்ணியிருக்கேன்?
அப்படி இருக்க, blogspot.com ஏன் blogspot.in, blogspot.sg என்று ஊருக்கு ஏத்த மாதிரி, ஒரே விஷயத்தை காட்டணும்?

இது எதுல போயி முடியும்?
அந்தந்த ஊரின் பக்கங்களில், அந்தந்த அரசாங்கத்துக்கு வேண்டாத contentஐ சுலபமா சென்ஸார் செஞ்சிட முடியும்னு தோணுது.

சோனியா, மன்மோகர்களின் விருப்பம் நிறைவேற்ற முதல் படி போலருக்கே?

அட நாராயணா!

.com, .in ஆனால், பதிவு எழுதும் நல்லுலகத்துக்கு பெரிய தொல்லைகள் உருவாகும். திரட்டிகளில் இணைத்தலும் சிக்கலாகும்..

.inக்கு மாறாமல் இருக்க, இதை முயன்று பாருங்கள். உங்களின் பக்க உரலுக்கு கடைசியில் /ncr என்று சேர்த்துப் பாருங்கள்.

இப்படி: http://surveysan.blogspot.com/ncr

மேல் விவரம் அறிந்தவர்கள் பகிருங்கள். நன்றீஸ்.


Monday, January 30, 2012

அப்பாடக்கர் - குறும்படம்

இளா இயக்கத்தில்,   தேவ்  வசனத்தில்,  பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன் நடிப்பில் அட்டகாசமாய் வந்திருக்கிறான் அப்பாடக்கர்.

நேர்த்தியான மேக்கிங். காட்சிக்கேற்ற இசை. விறுவிறுப்பு குறையாத திரைக்கதை. மொத்தத்தில் அருமை.



இளையராஜா ரசிகர்களுக்காக

ஜெயா டிவியில் இளையராஜாவின் 'என்றென்றும் ராஜா' பார்த்ததிலிருந்து, தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் சிலுப்பி எழுந்த கதையா, ராஜா ராஜா ராஜான்னு, அவரின் பாடல்களையும், அவரைப் பற்றிய செய்திகளையும் அசை போட்டபடி இருந்தேன்.

அப்பொழுது கண்ணில் பட்ட இந்த பதிவுகள், இளையராஜாவின் ரசிகர்கள் கண்டிப்பாய் படித்து, பார்த்து, இன்புற வேண்டியவை என்று இங்கு லிங்க்குகிறேன்.

படித்து இன்புறுங்கள்.
source: DG Arts

1) கோபிநாத்தின் - என்றென்றும் ராஜா - ஆசீர்வதிக்கப்பட்டவன்
ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து சிலாகித்து எழுதியிருக்கும் விதம் ரொம்ப அழகு.

2) இளா பதிவில் - "தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !
நாசருக்கு, அவதாரம் படத்தில் வரும் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை ராஜா இசை அமைத்து கொடுத்த கதை. சிம்ப்ளீ சூப்பர்ப். ராஜா ரசிகனுக்கு, புல்லரிக்கும், கண்ணில் நீர் சுரக்கும். ஸ்ஸ்ஸ்ஸ். அடேங்கப்பா. ராஜா ராஜாதான்!!!!

அவரின் தனிப் பட்ட குணம், குறை, நிறைகளை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், இளையராஜா நம் சமூகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்ப்ரசாதம்.
வாழ்க வளர்க. What a Genius he is!

Sunday, January 29, 2012

சென்னையில் இளையராஜா

அநேகம் மேடைக் கச்சேரிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்தில் சென்னையில் அரங்கேறிய இளையராஜாவின் இசை ராஜாங்கம் போல் எதுவும் கண்டதில்லை.

source: DG's Art Gallery
நேரில் பார்க்கமுடியாவிட்டாலும், ஜெயாடிவியில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியை யூ.ட்யூபில் பலப்பல முறை பார்த்து அனுபவித்து சிலாகித்து மெய்சிலிர்த்து உடல் பூரித்து ஆனந்தத்தில் திளைத்து பிறந்த பயன் அடைந்த ஃபீலிங்கில் உறைந்து போய் கிடக்கிறேன் சில நாட்களாய்.

பள்ளிக் கல்லூரிக் காலங்களில் வாழ்வின் ஒவ்வொரு அத்யாயத்திலும் உடன் பயணித்ததாலோ என்னமோ, ராஜா பாட்டைக் கேட்டால் மனதில் எழும் ஒரு துள்ளல் வேறு பாடல்களில் கிடைப்பதில்லை.

கிட்டார் படிக்க விரும்பிய நாட்களில், 'Zen Guitar' என்று ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. கிட்டார் எப்படி வாசிப்பது என்றெல்லாம் அதில் சொல்லித் தரவில்லை. ஆனால், ஒரு கலையை கற்றுக் கொள்ள எப்படி அணுகுமுறை இருக்கவேண்டும்னு அழகா சொல்லியிருந்தாங்க அந்த புக்குல. கண்ட கிட்டாரையும் 'சீப்பா' கிடைக்குதேன்னு வாங்கக் கூடாதாம். ஓரளவுக்கு விலை  கொடுத்தாலும், சிறந்த நேர்த்தியான படைப்பாளியின் கையால் செய்யப்பட்ட தரமான கிட்டாரையே வாங்க வேண்டுமாம். ஏன்னா, அநத கிட்டாரை செய்கையில் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி அந்த உன்னதமான படைப்பாளியின் அக்கரையான உருவாக்கத்தில் உருவாகி, அந்த கிட்டாரின் உடனேயே பயணிக்குமாம். அப்பேர்பட்ட கிட்டாரை கையில் எடுத்து வாசித்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரியாம்..

ராஜாவின் ஒவ்வொரு படைப்பிலும், அவரின் இசைத் திறமையை விட இசையின் மேல் அவருக்கு இருக்கும் பற்று, பாஸிட்டிவ் எனர்ஜியை பாய்ச்சி பாய்ச்சி நம்மை இன்றளவிலும் கேட்கும்போது கிறங்க அடிக்கிறது.

ராஜாவின் சமீபத்திய மேடை நிகழ்ச்சியை பாக்காதவங்க, காலம் தாமதம் செய்யாமல், உடனே பாருங்க. ஜென்ம சாபல்யம் கிட்டும்.

இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய பலம், பாடல்களின் தேர்வு.

ரசிகனை குஷியாக்கறேன் என்ற பெயரில், 'சொர்கமே என்றாலும்..' போன்ற டான்ஸு நம்பரை நம்பாமல், ஒவ்வொரு ரசிகனும் ஏன் இன்னும் ராஜாவை தலையில் வைத்துத் தாங்குகிறான் என்ற பல்ஸை உணர்ந்த பாடல்களின் வரிசை.

ஐம்பது வயலனிஸ்ட்டுகள், அஞ்சு செலோ, ரெண்டு மூணு ட்ரம்மர்ஸ், மூணு நாலு பியானோ, ஃப்ளூட்டுடன் அருள்மொழி, கண்டக்டர் புருஷோத்தமன், டாப் க்ளாஸ் கோரஸ் பாடகர்கள், ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என மேடை வியக்க வைத்தது.
தொகுப்பாளராக ப்ரகாஷ்ராஜ்.
பார்வையாளர்கள் வரிசையில் பாலுமகேந்திரா, பால முரளி கிருஷ்ணா போன்ற மகானுபாவுலுக்கள்.

இசை நிகழ்ச்சியை பாத்து ரசிச்சு புளகாங்கிதம் அடஞ்சுக்கோங்க. கிட்டத்தட்ட நாலு மணி நேர நிகழ்ச்சி. ரெண்டு மூணு தபா பார்க்கத் தூண்டும்.

ஆணி பிடுங்குவதில் பிசியாக இருப்பவராயின், உங்களுக்காக,, சில டிட்.பிட்ஸை கீழே அடுக்கியுள்ளேன். கண்டிப்பாய் காண்க.

- ஆரம்ப ஜனனி ஜனனி
- அம்மா பாட்டுடன் யேசுதாஸ் துவங்கினாலும், SPBயின் அம்மா பாட்டு டாப்பு.
- புத்தம் புதுக் காலையின் இசைக் கோர்வையை கேளுங்கள்
- பருவமே பாடல் பிறந்த கதையும் பாடலும்
-  Zupertனு ஏதோ ஒரு பெருந்தகையின் சிம்ஃபொனி இசையை வாசித்து அதன் தாக்கம் 'இதயம் போகுதே' பாடலில் வந்த கதை
- ஏதோ மோகம் ஏதோ தாகம், இசைக் கோர்வை
- பூங்கதவே தாழ்திறவாய் வயலின் பிட்டு
- எளங்காத்து வீசுதேயில் அருள்மொழியின் ஃப்ளூட்டு
- பூவே செம்பூவே இசை
- நான் தேடும் செவ்வந்தைப் பூவிது
- யேசுதாஸ், SPB medley
- evergreen இளமை இதோ இதோ

ராஜா, எப்பவும் அவரு ராஜா!

Scintillating show! Salute!




Friday, January 27, 2012

நண்பன் - திரைப்பார்வை

மிஷன் இம்பாஸிபிள், பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 'நண்பன்' படத்திற்க்கு காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு போலாம்னு போனது வீண் போகலை.
காதலுக்கு மரியாதை காலங்களில் இருந்தே விஜய் ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த விஜய் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, நண்பனில். கூடவே, நம்ம ஊரு ஸ்ரீகாந்தும், ஜீவாவும்.

இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா), அவர்களின் கல்லூரி முதல்வரும் (சத்யராஜ்), முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (சத்யன்) சேர்ந்து கலக்கும் படம் நண்பன்.

இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, நண்பன் பார்க்கும்போதும். நண்பன் நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.

கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், விஜய் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, விஜய் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.

ஜென்ட்டில்மேன் புகழ் ஷங்கரின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.

அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?

மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?

படத்துக்கு வருவோம்.

திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.

படத்தில், விஜய் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், விஜய் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் சத்யராஜ் கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.

இலியானா, பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க. ஸ்ரீகாந்த், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, சத்யன். ஸைலன்ஸர் என்ற மாணவனாக வராரு இவரு. தமிழ் படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். விஜய்'யை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை விஜய் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.

விஜய் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, இலியானாவின் அக்காவுக்கு, விஜய் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், விஜய் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. விஜயின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.

ஊட்டியில் படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.

படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.

பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.

டிஸ்கி: 2009ல் எழுதிய 3 Idiots விமர்சனததை, நடிகர்கள் பெயர் மட்டும் மாற்றி, அப்படியே எழுதியது. படமும் அச்சு அசலா அப்படியே எடுத்திருக்காரு ஷங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  ஆனா, கூட்டாம குறைக்காம, அழகா கொடுத்திருக்காரு படத்தை. இதை எடுத்ததுக்கே அவருக்கு ராஜமரியாதை கொடுக்கணும்.
விஜய்யை வைத்து எடுக்கலாம் என்று 2009லேயே நான் ஆருடம் சொன்னதை எண்ணி ரொம்பவே புல்லரிக்குது போங்க. ஷங்கருக்கே ஐடியா கொடுக்குமளவுக்கு யாம் வளர்ந்திருப்பது மெத்த மகிழிச்சியாய் இருக்கிறது. ஹீ ஹீ ஹீ. அடிக்க வராதீங்க, மீ த எஸ்கேப் ;)
ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கலாம்.

Wednesday, January 25, 2012

டமில்சினிமா ஆர்.எஸ்.அந்தணன் அவர்களுக்கு...

இணையத்தில் புழங்கும் உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான இணைய தளங்களில் ஒன்று tamilcinema.com.

ஊரை விட்டு வந்த பிறகு, சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கும், ஆரம்ப காலங்களில், குமுதம்களும், விகடன்களும், தினகரன்களும் கை கொடுத்து வந்தன.. ஆனால், சில பல வருடங்களில், குமுதமும், விகடனும், சந்தா வசூலிக்க ஆரம்பித்து எமது பொழுது போக்கில் மண்ணை வாரிப் போட்டிருந்தார்கள்.

ஓசியில் கொடுத்தால்  ஃபினாயிலையும் குடிப்போம். 
ஆனா, ஒத்த ரூவா கேட்டா கூட, அமிர்தத்தையும் 'ஐயே கசக்கும்'னு ஓரம் கட்டும் வீரப் பாரம்பர்யம் நம்முளுது.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் tamilcinema.com தான் சகலரின் பொழுதுபோக்காக இருந்தது. google.com போறோமோ இல்லியோ, மத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு கண்ணு சொறுகி மந்தமாகும் போது, tamilcinema.com பக்கத்துக்கு போயி, கிசு கிசு படிச்சு, ப்ரேக் ரூமில் போய் அலசி ஆராஞ்சாதான் அன்னிக்கு நாள் நகந்த மாதிரி இருக்கும்.

யாரு, யாரு படத்துல நடிக்கப்போறா, யாருக்கு யாரோட லடாய், சுட சுட விமர்சனங்கள்னு பக்கங்கள் களை கட்டும்.
களை கட்டுவதோடு இல்லாமல், தளமும், கூகிள் கணக்கா, சிம்பிளா கண்ணை உறுத்தாம, அழகா இருக்கும்.
ஆணி புடுங்கர நேரத்துல கிசு கிசு படிச்சாலும், தூர நின்னு பாக்கரவனுக்கு, பசங்க ஏதோ முக்கியமான டாக்குமெண்ட்டுதான் படிக்கராங்கன்னு ஒரு பிரமையை ஏற்படுத்தும்.

அப்படி இருந்த டமில்சினிமா.கோம், சமீப காலத்தில், காணச் சகிக்கலை. கசா முசான்னு விளம்பரங்கள், பாப்-அப்பு, பாப்-சைடு, பாப்பு-டௌனுன்னு சுத்தி சுத்தி அடிக்குது அந்த பக்கத்துக்கு போனாவே. 
அதுவும், சில விளம்பரங்கள் முக்கிய செய்திக்கு மேல ஒக்காந்துக்கிட்டு போறதுக்கே அடம் பிடிக்குது.
லேப்டாப்பிலேயே இப்படி அடம்புடிக்குதுன்னா, ஸ்மார்ட் ஃபோனில் சுத்தமா உபயோகிக்கவே முடியாத அளவுக்கு விளம்பரங்கள் அழிச்சாட்டியம் பண்ணுது. 

இப்பெல்லாம், இணையத்தை அலசுவதற்கு, லேப்-டாப்புகளை விட,, ஸ்மார்ட் ஃபோன் தான் எல்லாரும் அதிகமா பயன் படுத்தறாங்கங்கரது, உபரித் தகவல்.

ஆர்.எஸ்.அந்தணன் அண்ணே, காசு முக்கியம் தான். ஆனால், தங்க முட்டை இடற வாத்தை, அறுத்துட்டா, வாத்து செத்துடும்ணே.  

உசாரு. டமில்சினிமா.கோமை, பழைய படி, மேன்மையான, சினிமா தகவல் சுரங்கமாகவும், எளிமையானதாகவும் மாற்றும் படி, மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

-ஆணி பிடுங்குபவர் சங்கம்

நம்ம விளம்பரம் :) பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா? Mile Sur video




Sunday, January 08, 2012

2011 சிறந்த தமிழ் படங்கள்

2010ஐப் போல் 2011ல் வந்த திரைப்படங்கள் மிளிரவில்லை என்பது என் எண்ணம்.

மைனா, நந்தலாலா, விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன் என சுவாரஸ்யமான ஆண்டாக 2010 அமைந்திருந்தது. 2011ல என்னை தியேட்டருக்குச் சென்று பார்க்க இஸ்தந்து ஒரே படம் மட்டுமே. அவையாவன, மயக்கம் என்ன.

அவன் இவன், ஏழாம் அறிவு, தெய்வத் திருமகள் எல்லாம் தியேட்டரில் பார்த்திருக்க வாய்ப்பிருந்தும், கேபிளார் மாதிரி நல்லவங்க டக்குனு எழுதும் விமர்சனங்களை பார்த்து சுதாரித்து, $10 டாலர்களை பல முறை சேமிக்க வாய்ப்பு கிட்டியிருந்தது. அவங்களுக்கு ஒரு பெரிய கும்புடு ஃபர்ஸ்ட்டு.

நாங்களும் ரவுடிதான்னு சொல்லிக்கர அளவுக்கு, நானும் ஒரு 'படத்தை' சென்ற ஆண்டில் இயக்கி முடித்திருந்ததால் (வலது மூலையில் காண்க),

இப்பெல்லாம் ஒவ்வொரு படத்தையும் ரொம்பவே ரசிச்சு ரசிச்சு பாக்க முடியுது. ஒவ்வொரு காட்சிக்காகவும் பின்னணியில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு புரியுது. ஒரு தவம் மாதிரி ஒரு முழுப்படம் எடுப்பது. ரொம்பவே மொக்கையான படமாக இருந்தாலும் கூட, அதிலும் கூட பெரிய அளவில் உழைப்பு கொட்டப்படுகிறது என்பதே உண்மை.

ரொம்ப நீட்டி முழக்காம, சொல்ல வந்ததை சொல்லிட்டு எஸ்கேப்பிடறேன்.அதாகப்பட்டது, நான் சென்ற ஆண்டில் தியேட்டரிலும்,இணையத்திலும், டிவிடியிலும் பார்த்த வரையில் என் மனதுக்கு பிடித்திருந்த படங்கள்.




டாப்பு1: மயக்கம் என்ன?
டாப்பு2: ஆடுகளம்
டாப்பு3: கோ
டாப்பு4: பயணம்
டாப்பு5: காஞ்சனா
டாப்பு6: ஏழாம் அறிவு
டாப்பு7: சிறுத்தை
டாப்பு8: தெய்வத் திருமகள்
டாப்பு9: வேலாயுதம்
டாப்பு10: மங்காத்தா

நல்ல படம் எடுங்க பாஸு. தியேட்டருக்கு வர வைங்க.

நன்றீஸ்!.

tags: மொக்கை, திரைப்படம், 2011 சிறந்த தமிழ் படங்கள் ;)