recent posts...

Tuesday, January 31, 2012

GOOGLE செய்யும் சதி?

இந்திய அரசாங்கம், கூகிளாரையும், முகபுத்தகத்தாரையும், யாஹூவர்களையும் கூப்பிட்டு மிரட்டி அனுப்பியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நம் ஊருக்கு ஒவ்வாத contentஐ சென்ஸார் செய்ய வேண்டும் என்ற மிரட்டல் அது.

ஓ.சில கெடைக்குது, அனானி பெயரும் இருக்குன்னு, பலரும் ஃப்ரீயா, பலப் பல கருத்துக்களை அள்ளி வீசிக்கிட்டு வரோம். சில, அரசாங்கத்துக்கும், கட்சி நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வாத விஷயமாய் அமைந்துவிடுகிறது.

Google.com போனால், உங்க ஊருக்கு ஏத்த மாதிரி, Google.in, Google.sg போன்ற தளங்களுக்கு தானாய் ரீ-டைரக்ட்டு ஆகும். அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி personalized content கொடுப்பதற்க்கு ஏதுவாய் இருந்தது இம்முறை.

ஆனா, blogspot.com சமீபத்தில் blogspot.inக்கு ரீ-டைரக்ட்டு செய்யப்படுவதாய் செவிவழி செய்தி வந்தது.

google.com, google.inக்கு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அமெரிக்காகாரன் super starனு தேடினா Clint East Wood பற்றிய பக்கங்களையும், அமெரிக்கா அல்லாத மற்ற எந்த நாட்டுக்காரன் தேடினாலும், தலீவரு பற்றிய பக்கங்களையும் கட்டம் கட்டி காட்ட ஏதுவாய் இருக்கும். அதை தவிற, அந்தந்த ஊரின், மொழிகள், கலரு காம்பினேஷன்களெல்லாம் போட்டு பக்கத்தை காட்டலாம்.

ஆனா, blogspot.com ஏன் அப்படி உறுமாற்றப்படணும்? surveysan.blogspot.com எந்த ஊரிலிருந்து பாத்தாலும், நான் சொல்ல நினைப்பது ஒரே செய்திதானே? நான் காட்டும் கலரும், மொழியும், டிசைனும் தானே என் வாசகர்கள் பாக்கணும்னு நான் முடிவு பண்ணியிருக்கேன்?
அப்படி இருக்க, blogspot.com ஏன் blogspot.in, blogspot.sg என்று ஊருக்கு ஏத்த மாதிரி, ஒரே விஷயத்தை காட்டணும்?

இது எதுல போயி முடியும்?
அந்தந்த ஊரின் பக்கங்களில், அந்தந்த அரசாங்கத்துக்கு வேண்டாத contentஐ சுலபமா சென்ஸார் செஞ்சிட முடியும்னு தோணுது.

சோனியா, மன்மோகர்களின் விருப்பம் நிறைவேற்ற முதல் படி போலருக்கே?

அட நாராயணா!

.com, .in ஆனால், பதிவு எழுதும் நல்லுலகத்துக்கு பெரிய தொல்லைகள் உருவாகும். திரட்டிகளில் இணைத்தலும் சிக்கலாகும்..

.inக்கு மாறாமல் இருக்க, இதை முயன்று பாருங்கள். உங்களின் பக்க உரலுக்கு கடைசியில் /ncr என்று சேர்த்துப் பாருங்கள்.

இப்படி: http://surveysan.blogspot.com/ncr

மேல் விவரம் அறிந்தவர்கள் பகிருங்கள். நன்றீஸ்.


8 comments:

SurveySan said...

ரொம்ப உ.வசப்படறேனோ?

ராமலக்ஷ்மி said...

/ /ncr என்று சேர்த்துப் பாருங்கள்./

அட ஆமா, மறுபடி .காம் ஆகிவிடுகிறது:)!

வவ்வால் said...

சர்வே,

நம்ம பதிவர்கள் எல்லாம் .காம், .இன் ஆகிடுச்சுனு பொலம்பினாங்களே நமக்கு என்ன ஆச்சுனு பார்த்தேன் ஒன்னும் ஆகலை, ஆனால் எல்லாம் ஏன் சொல்றாங்கனு நெட்ல தேடி
/ncr=no country redirect கண்டுப்பிடிச்சுட்டு வந்தேன். நீங்க பதிவுல ஒன்னுமே சொல்லாம போட்டு இருக்கிங்க. விலாவாரியா சொல்லலாமே. கூகிளே அந்த வசதிய கொடுத்து இருக்கு.(வழக்கம் போல இத பதிவு போடனும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன் )

அப்புறம் ஒன்னும் சொல்லாம கூகிள் மாத்திடுச்சுனு சொல்லுறாங்க எல்லாம். ஆனால் நான் லாக் இன் ஆகும் போது எனக்கு இந்த புதிய கொள்கை பத்தி வட்டார அடிப்படையில் வரப்போகுதுனு ஒரு நோடிபிகேஷன் காட்டி ஒத்துக்கிறிங்களானு கூகிள் கேட்டுச்சு நான் எதுக்கு ஒத்து இருக்கேன்ன் , கேன்சல் கொடுத்தேன். :-))


எனக்கு என்னமோ சிலர் சரினு அமுக்கி இருப்பாங்க தோனுது, நிறைய பேருக்கு .காம்னு தான் இன்னும் இருக்கு.

-----------

//ஆனா, blogspot.com ஏன் அப்படி உறுமாற்றப்படணும்? surveysan.blogspot.com எந்த ஊரிலிருந்து பாத்தாலும், நான் சொல்ல நினைப்பது ஒரே செய்திதானே?//

செர்வெர் எந்த நாட்டில் இருக்குனு முக்கியம். . இன் என்றால் இந்திய செர்வெர் , சர்வதேச இணைய தொடர்பு பயன்ப்பாடு வெகுவாக குறையும்.

நீங்க தொழில்நுட்ப புலி , இணையம் பத்தி தெரியுமே , கேட்வே, பேக் போன் நெட்வொர்க், கடல் வழி கேபில்கள், எப்படி டேட்டா மற்றும் கட்டணம்னு.

124 கேபி பேண்ட் விட்த் க்கு ஆண்டுக்கு 3 லட்சமோ என்னமோ வாடகையா ஒவ்வொரு ஐஎஸ்பியும் கட்டணும், சர்வதேச இணைய முகமைக்கு, அப்புறம் எவ்லோ டேட்டானும் ஒரு கணக்கு இருக்கு.அப்புறம் உள்நாட்டு நெட் வொர்க் , சர்வதேச எல்லாம் இருக்கு.கடலில் சும்மா யாரோ கேபிள் போட்டால் ஒரு நாட்டுக்காரன் சும்மா பயன்ப்படுத்திக்க முடியுமா?

.இன் ஆனால் இந்திய வலைப்பதிவுகளை இந்தியர்கள் படித்தால் அது டொமெஸ்டிக் டிராபிக், வெளிநாட்டுக்காரங்க படிச்சா அது சர்வதேச டிராபிக்.

இந்திய பதிவுகளை இந்தியாவுக்குள்ள இருந்து படிப்பவர்கள் அதிகம் என்பதால் உள்நாட்டு டிராபிக் தான் அதிகம், வெளிநாட்டை விட. இதனால் நாமக்கு இணையம் வழங்கும் ஐஎஸ்பிக்கு சர்வதேச பேண்ட் விட்த், மற்றும் டேட்டா வால்யும்கு கட்டும் கட்டணம் குறையும். அதாவது ஐஎஸ்பிக்கு லாபம்.

.இன் ஆனால் இன்னும் விரைவாக இந்தியாவில் வலைப்பதிவுகள் திறக்கும்னு நினைக்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

டாட் காம் மாத்த வழி இருக்கா?

pudugaithendral said...

சரிதான்!!!

SurveySan said...

Danks all.

SurveySan said...

Vavvaal,

this is more for content censorship.

http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=2402711

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ நடக்குது ! மர்மமா இருக்குது !