recent posts...

Sunday, July 25, 2010

Inception - திரைப் பார்வை


Memento, Dark Knight எல்லாம் தந்த christopher nolanன் படம் என்பதால், Inception பார்க்கவா வேண்டாமா என்ற கேள்வியே எழவில்லை.
ரூம் போட்டு யோசிக்கரதுக்கு பெயர் போனவர் இந்த நோலன். Memento படத்தின் reverse sequenceங், பல நாள் உச்சு கொட்டி படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.

இதிலும், புத்திசாலித்தனமா எத்தையாவது சொல்லியிருப்பாரு, நம்ம குட்டி மூளையுடன், படத்தை பாத்துட்டு புரியாம போயிடுச்சுன்னா பல்பு ஆயிடுமே என்ற எண்ணங்களினால், ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன்தான் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

எதிர்பார்த்தது போல, முதல் அஞ்சாறு நிமிஷம், பரீட்சை ஹாலில், க்வொஸ்டியன் பேப்பர் வந்ததும், பேங்க பேங்க முழிக்கும் பத்தாங்கிளாஸ் ஞாபகம் வந்தது. பணத்தை குடுத்துட்டு இந்த பீதியக் கெளப்புர ஃபீலிங் எதுக்கு வாங்கிக்கணும்னு தோணிச்சு. ஆனா, அதுக்கப்பரம், படத்தின் கரு புரிந்ததும், படம் அருமையா நகர ஆரம்பிக்குது.

Leonardo dicarpio, ஒரு களவாணி. சாதாரண பொருளை ஆட்டையை போடும் களவாணி அல்ல. ஒரு மனுஷனின், கனவுக்குள் புகுந்து, அவருடன் பேசி கலந்துரையாடி அவர் மனதில் இருக்கும் ஏதாவது ரகசியத்தை களவாண்டு வருவதில், Leonardo வல்லவர். இதற்காக ஒரு குழுவும் அமைத்து வைத்திருக்கிறார்.

கனவுலகுக்குள் புக சிம்பிளான ஏற்பாடுதான். ( Matrix படத்தில் வருவது போல், ஹெல்மெட்டெல்லாம் மாட்டிக்கிட்டு பின் மண்டையில் ஊசியெல்லாம் போடவேண்டாம் ). யார் ரகசியங்களை திருடவேண்டுமோ, அவரை மயங்க வைக்கிறார்கள். ஒரு சூட்கேஸிலிருந்து, குளுகோஸ் ஏற்றுவதுபோல், அவருக்கு மயக்க மருந்து ஏற்றுகிறார்கள். அதே சூட்கேஸிலிருந்து, இன்னொரு மருந்துக் குழாய் Leonardo உடம்பிலும் அவரின் மற்ற குழுவினரின் உடம்பிலும் ஏற்றுகிறார்கள். உடனே, அனைவரும் கனவுலகில் சந்தித்துக் கொள்வார்கள்.

குழுவில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலை. ஒருத்தர், கனவுக்குள் புகுந்ததும், அந்த கனவுலகை வடிவமைக்கும் வேலை, இன்னொருத்தர் மயக்கத்தில் இருக்கும் குழுவை பார்த்துக் கொள்ளும் வேலை.
கனவு கலையணும்னா, மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பவதும் இவரின் வேலை.
கனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்.
நிஜ உலகில், மயக்கத்தில் இருக்கும்போது நிகழும் விஷயங்கள் கனவுலகில் வேறு விதமாய் ப்ரதிபலிக்குமாம். இங்க தண்ணியில முங்கினா, அங்க நாலா பக்கமும் நீர் பீச்சுக்கிட்டு அடிக்கும். இங்க உருண்டு பெரண்டு ஓடினா, அங்கையும் இதன் தாக்கம் தெரியும்.
நிஜ வாழ்வின் அஞ்சு நிமிஷம், கனவுலகில் சில மணி நேரங்கள்.
நிஜத்தையும் கனவுலகையும் பிரித்தரிய, லியானார்டோ கோஷ்டி, ஆளுக்கு ஒரு அடையாளச் சின்னம் வச்சிருப்பாங்களாம்.
சில சமயம், கனவுக்குள் இருப்பவர்களுக்கு, இன்னோரு கனவு வந்து, அதுக்குள்ளே இன்னொரு கனவு வந்து, உள்ள உள்ள டீப்பா போயிக்கிட்டே இருப்பாங்க. சில விஷயங்களை களவாட, இப்படி டீப்ப்பா போனாதான் முடியுமாம்.

லியானார்டோவின் மனைவியும் இப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர். கனவில் சென்று களவு செய்வது போல், கனவுக்குள் சென்று, ஒரு மனிதனின் மூளையில் புதியதாய் ஏதாவது ஒரு ஐடியாவை விதைக்க வைக்க முடியுமான்னு லியானார்டோவுக்கு தோணும். அதை தன் மனைவியிடமே பரீட்சை செய்வார். கனவுலகில் இருவரும் இருக்கும்போது, இதுதான் நிஜ உலகம், நிஜ உலகம்தான் கனவுன்னு சொல்லிடுவாராம். ரெண்டு பேரும், பல வருஷங்கள் கனவுலகில் செலவிட்டு, கடைசியாய் தற்கொலை பண்ணிக்கிட்டு நிஜ உலகுக்கு வந்துடுவாங்க. (கனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்). இங்க வந்ததும், மனைவிக்கு, திரும்ப கனவுலகுக்கே போகணும்னு ஆசை (ஏன்னா, அதுதான் நிஜம்னு இவங்க நம்பிக்கிட்டு இருக்காங்களாம்). கொழப்பத்தில் தற்கொலை பண்ணி செத்துடுவாங்க. இவரை கொண்ணது லியானார்டோதான்னு ஒரு புகாரும்.

தன் குழந்தைகளை விட்டு ஊரை விட்டு வந்த லியானார்டோ, ஒரு பெரும்புள்ளியிடம் ஒரு புதிய வேலையை முடிக்க ஒப்புக்கொள்கிறார். வேலையை கச்சிதமா முடிச்சா, இவரின் பெயரில் இருக்கும் கொலைக் குற்றத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்றும், தன் குழந்தைகளிடம் மீண்டும் சேரலாம் என்றும் காண்ட்ராக்ட். வேலை என்னன்னா, பெரும்புள்ளியின், பிசினஸ் எதிரி ஒருத்தரின் மகனின் கனவுக்குள் புகுந்து, அவரின் மண்டையில், தன் பிசினஸை புதிய விதமாய் மாற்றி அமைக்கணும்னு ஐடியாவை ஏற்படுத்தணுமாம். அப்பத்தான், இவருக்கு போட்டியாக அவர்களால் இருக்கமுடியாதாம்.
விடுவாரா ஹீரோ? தன் குழுவுடன், அட்டகாசமாய் கனவுக்குள் புகுந்து, கனவின் கனவுக்குள் புகுந்து, அதன் கனவுக்குள் மீண்டும் புகுந்து, அந்த ஐடியாவை விதைக்கிறாரா, மீண்டும் குழைந்தைகளுடன் இணைகிறாரா என்பதையே வெள்ளித்திரை காட்டும்.

ஸ்ஸ்ஸ். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தக்கறேன்.

புரிஞ்சுருக்குமே? எம்புட்டு வில்லங்கமான வளைவுகளுடன் கூடிய கதைன்னு? மேலே சொன்னது போல், முதல் ஐந்து நிமிஷம் பேங்க பேங்க முழிக்க வைக்குது. ஆனா, அதுக்கப்பரம் இத்யாதி இத்யாதின்னு கதைக் களம் புரிஞ்சதும், நம்மை அலுங்காமல் குலுங்காமல் அட்டகாசமாய் 2 1/2 மணி நேரம் இன்வால்வ் பண்ணிடறார் டைரக்டர் நோலன்.
ஒரே குறை, சண்டைக் காட்சியெல்லாம் சலிப்பாய் இருந்தன. குறிப்பா கடைசி பதினைந்து நிமிடங்கள். ஆனா, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் இழுவையாக இல்லாமல் இருக்க உதவின.

கடைசியில், தொழில் முடித்து தன் குழந்தைகளை பார்க்க வருவார் Leonardo. தன் கொலைக் குற்றம் நீக்கப்பட்டிருக்கும். இமிக்ரேஷனெல்லாம் முடிச்சு, வீட்டுக்குள் வந்ததும், தன் மகளும் மகனும் அப்பான்னு வருவாங்க. இது நிஜமா, கனவான்னு நமக்கும் அவருக்கும் குழப்பம் வரும். தன் கையில் இருக்கும் அடையாளச் சின்னத்தை எடுத்து பாப்பாரு. அதன் முடிவு தெரியரத்துக்குள்ளையே படம் முடிஞ்சுரும். சுபமா இல்லையாங்கர குழப்பத்துல நம்மள வெளீல வரச் சொல்லிடறாங்க.
எனக்குத் தெரிஞ்சு, கனவுலதான் அலையறாருங்கர மாதிரி இருக்கு. குழந்தைகளை பிரிஞ்சு சில வருஷமாச்சுங்கர மாதிரி கதையமைப்பு. ஆனா, கடைசியில் சேரும்போது, குழந்தைகள் அதே வயதில் அப்படியே இருப்பது இடிக்குது. ஹ்ம்.


இருக்கும் பல கதைகளையே திரும்ப திரும்ப உல்டா பண்ணும் டைரக்டர்கள் மத்தியில், நோலன் பெரும் பாராட்டுக்குறியவர்.
அந்த ஒரிஜினாலிட்டிக்காகவே , இந்த படத்தை பாக்கலாம்.

ஆனா, அவதார் கடந்து வந்த பாதையில், விஷுவலாக ஆகா ஓஹோன்னெல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை இந்த படத்தில்.
DVD/Blu-rayக்கு வெயிட்டிப் பார்க்கலாம். ஏனனா, ரெண்டு மூணு தபா பாத்தாதான், படத்தை முழுசாய் என்சாய் பண்ண முடியும், Memento போல.

34 comments:

SurveySan said...

படத்தில் இருக்கும் ஓட்டைகளை பட்டியல் போட்டு இங்க வச்சிருக்காங்க. டைரக்டர் ரூம் போட்டு யோசிச்சா, இன்னொரு கும்பல் ஹோட்டல் போட்டே யொசிக்கறாங்க்ய..

http://www.imdb.com/title/tt1375666/goofs

ஆ! இதழ்கள் said...

shabbaaa.... kaetta enakkae ippudi thala suthuthae, paatha ongalukku eppudi irukkum? different layers of kanava? kolambalaiyaa?

Prabhu said...

செம படம்ல... கிச்சுன்னு இருந்துச்சு!

Bala K A said...

The kids shown at first are different from the kids shown at the end. Look at the cast details. There are two sets of kids with an age diff of 2 years. Hence, its true that the hero came back to reality. Also the totem is not shown as falling down but it wobbles. That means there is gravity and hence its reality.

Bala K A said...

// படத்தில் இருக்கும் ஓட்டைகளை பட்டியல் போட்டு இங்க வச்சிருக்காங்க. டைரக்டர் ரூம் போட்டு யோசிச்சா, இன்னொரு கும்பல் ஹோட்டல் போட்டே யொசிக்கறாங்க்ய..

http://www.imdb.com/title/tt1375666/goofs

//

But these are just filming errors. They had listed only one conceptual error at the end of the list which is really a blunder. Good catch.

Thanks for sharing.

ஜெய் said...

சர்வேசன்,
அருமையா எழுதி இருக்கீங்க.. ரொம்ப கோர்வையா கதையை சொல்லியிருக்கீங்க...

ஹீரோவோட மனைவி சாகறது கொஞ்சம் வேற காரணத்தினாலன்னு நினைக்கிறேன்... கனவுலகில் இருக்கறப்போ, தான் இருக்கறது நிஜம்னு ஹீரோயின் நினைக்கிறாங்க... அதை மாற்ற, அவங்களோட ஆழ்மனதில் “இது கனவுதான்”னு ஒரு எண்ணத்தை ஹீரோ ஏற்படுத்தறாரு... ரெண்டு பேரும் நிஜ உலகிற்கு வந்தப்பறமும், ஹீரோயினோட ஆழ்மனதில் இருக்கற எண்ணம் காரணமாக, இன்னும் கனவுலதான் இருக்கோம்னு அவங்க உறுதியா நம்பறாங்க... அதுனாலதான் தற்கொலை பண்ணிக்கறாங்க...

// ஆனா, கடைசியில் சேரும்போது, குழந்தைகள் அதே வயதில் அப்படியே இருப்பது இடிக்குது. ஹ்ம். //
(கமெண்ட்ல Mahilan சொன்னதுபோல), அங்கதான் தல நோலன் நிக்கறாரு... படத்துல மொத்தம் நாலு குழந்தைகள் நடிச்சு இருக்காங்க... (film cast பாருங்க).. படம் முழுக்க வர்றது 1.5 வயசு பையனும், மூணு வயசு பாப்பாவும்... கடைசி காட்சியில வர்றது 3 வயசு பையனும், 5 வயசு பாப்பாவும்... ரெண்டாவது வாட்டி படம் பார்க்கறப்போ, இதை கவனிக்கணும்னே இருந்ததுல, நல்லா வித்தியாசம் தெரிஞ்சது.. கடைசி காட்சியில் வர்ற பொண்ணு உயரமாவே இருப்பா... இதை வச்சு நீங்க க்ளைமாக்ஸ் நிஜம்னு நினைக்கலாம்.. இல்லன்னா, குழந்தைகள் அதே இடத்துல அதே ட்ரெஸ்ல இருக்கதுனால கனவுன்னு நினைக்கலாம்... இப்படி படம் முழுக்க க்ளுக்களை ஒளிச்சு வச்சுருக்காரு... மூணு தடவை பத்தாதுன்னுதான் நினைக்கிறேன்.. :)

ஜெய் said...

@ Mahilan,
அந்த ஓட்டைகள் எல்லாம் படிச்சதுல IMDB மேல இருந்த மரியாதையே போச்சு... கன்டின்யூவிடி தப்புகள் உலகத்தில் எல்லா படத்துலேயும் இருக்கதான் செய்யுது... அதை விடுவோம்... அந்த கடைசி தப்பு தப்பே இல்ல... அங்க பெரிய கான்செப்ட்டே இருக்கும்... அவங்க எங்க 50 வருஷம் வாழ்ந்தாங்க... அங்க செத்து, அதுக்கப்பறம் லிம்போக்கு போனாங்களா? அங்கதான் தற்கொலை பண்ணிகிட்டாங்களான்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு... அது சின்ன தப்பு இல்ல... மெகா மெகா சைஸ் ஓட்டை... அதுனால அதை நாம்தான் இன்னும் புரிஞ்சுக்கலையா இருக்கும்... ஹாலிவுட்டின் புத்திசாலியான இயக்குனர் 9 வருஷம் உட்கார்ந்து கதை எழுதி இருக்காருங்க... நாம படம் வந்து 9 நாள்ல இப்படி எல்லாம் முடிவு பண்ண முடியுமா? அவ்ரு 10 வருஷம் முன்னாடி எடுத்த மெமெண்டோ படத்துலேயே இப்ப வரைக்கும் ஒரு லாஜிகல் தப்பு கண்டுபிடிக்க முடியல... முதல்ல தப்புன்னு நினைச்சதெல்லாம் பின்னாடி கதையின் ஒரு ட்விஸ்ட்டுன்னு புரிஞ்சது... :)

SurveySan said...

ஆ!, கொழப்பம் இருக்கரமாதிரி இருக்கும். ஆனா, படம் முடிஞ்சப்பரம், நாமும் ரூம் போட்டு யோசிக்கரதுல இருக்கர சுகம் தனி :)

SurveySan said...

pappu, memento அளவுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்தல இன்னும். ஆனா, ரெண்டு மூணு தபா பாத்தப்பரம், மத்த விஷயங்களெல்லாம் புரிஞ்சப்பரம், இது mementoவை முந்தும் சாத்யங்கள் இருக்கலாம்.

SurveySan said...

Mahilan,

//The kids shown at first are different from the kids shown at the end. Look at the cast details.//

good point. but, kids can grow in dream world too, but rather slowly.

the top wobbles a bit in the end, that could be indication that its reality. but, then, it didnt stop and fall down, so, anything can be interpreted.

the interesting thing would be if Leonardos wife was correct and Leonardo was still living in the dream world. the more i think, the better the movie gets ;)

SurveySan said...

ஜெய், நீங்ல சொல்றது சரின்னு தோணுது. நாந்தான் ரொம்ப டீபபா திங்க் பண்ணிட்டனோ?

//ஏதாவது ஒரு ஐடியாவை விதைக்க வைக்க முடியுமான்னு லியானார்டோவுக்கு தோணும். அதை தன் மனைவியிடமே பரீட்சை செய்வார்.//
:)

SurveySan said...

http://www.bomann.org/

**The very end of the movie is so significant and really brings Inception full circle. Not only does Christopher Nolan leave it open-ended so the audience must create their own reality for Cobb, but he performs Inception on the audience. He plants an idea in all of us. That idea is the long considered (hints of the Matrix) question of what is reality? How do we know what we see is real and we're not in a dream?**

SurveySan said...

http://answers.yahoo.com/question/index?qid=20100720215458AAdcfyT

***n the movie Inception, is there anything that refutes that when the movie ends, Cobb (DiCaprio) is still dreaming and Mal is back in reality (or just 1 level above Cobb) -- having (appropriately) killed herself to awaken?

When Cobb spins the totem in the safe, it was implied that he put it in her mind (inception) that she was dreaming -- but that doesn't automatically mean she was only 1 level below reality right? if she were multiple levels below -- then killing herself would indeed have just raised her a level back toward reality and Cobb would still be dreaming when the movie ends.
******

Anonymous said...

nalla review na.. :)

Neenga sonna mathiri summa naamalum etho sothava edothom nu illama.. ovvoru padathayum kalakala edukkuraru Nolan.. Summava Warner bros Noala-ah Superman padathuku Creative head maathiri pottu irukanga..

Enna porutha varaikkum kanavula than avar Cobb irukkar nu namburen.. apdiye vittuten :)

SurveySan said...

Vow! answers to all questions here:

http://www.cinemablend.com/new/Inception-Explained-Unraveling-The-Dream-Within-The-Dream-19615.html

ஜெய் said...

// When Cobb spins the totem in the safe, it was implied that he put it in her mind (inception) that she was dreaming -- but that doesn't automatically mean she was only 1 level below reality right? if she were multiple levels below -- then killing herself would indeed have just raised her a level back toward reality and Cobb would still be dreaming when the movie ends. //

I thought of this first.. even the question from an old man in indian's place is meaningful... (he will ask Cobb, "The old people believe that the dream is theor real world... Who are you to say othersie?") Good question... But, that would raise other questions like why couldn't she come back to dream to save bring Cobb out of dream?

// http://www.cinemablend.com/new/Inception-Explained-Unraveling-The-Dream-Within-The-Dream-19615.html //
// http://www.cinematical.com/2010/07/19/dissecting-inception-six-interpretations-and-five-plot-holes/ //
இன்னும் பல லின்க்கள் படம் வந்த நாள்ல இருந்து பார்த்துகிட்டுதான் இருக்கேன்... யாராச்சும் முழுமையா ஒத்துக்கற மாதிரி கருத்து சொல்லுவாங்களானு... ஆனா, பலது அரைகுறை புரிதலோடும், தப்பாவும் இருக்குதுங்க... இரண்டு வெவ்வேறு பதிலகளுக்குள்ள கருத்து வேறுபாடும் இருக்குது..
அடிப்படையிலேயே கோட்டை விட்டுருக்காங்க பாருங்க... //So Arthur blew up the elevator to wake them up from the snow fortress dream// இது தப்புதானே... ஆர்தர் லிஃப்டை கீழே விழ வைக்கறது, 2ம் நிலையிலிருந்து 1ம் நிலைக்குப்போக... அதாவது லிஃப்டிலிருந்து வேனுக்குப்போக... பனிமலையை கட்டிடத்தை வெடிக்க வைக்கறதுதான் பனிமலையிலிருந்து லிஃப்ட்டுக்கு வரவைக்க... இல்லையா?

ஜெய் said...

1) நான்காம் நிலை கனவு லிம்போவா இல்லையா? எப்படி அங்கே ஃபிஷர் இருக்கிறான்? எப்படி மீண்டு வரமுடியும்? குண்டடி பட்டது என்ன ஆச்சு?

2) ஹீரோவும் அவன் மனைவியும் 50 வருடம் வாழ்வதாக சொல்லும்போது வயதான தோற்றத்தோடு கைகள் காட்டப்படுகின்றன... பின் எப்ப்டி இளமையானார்கள்?

இது இரண்டும்தான் இப்போதைக்கு என் மில்லியன் டாலர் கேள்விகள்... இதுக்கு assumption இல்லாத பதில் தெரிஞ்சாதான் அடுத்த நிலையான க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா டிஸ்கஸனுக்கு போக முடியும்...

SurveySan said...

///இது தப்புதானே... ஆர்தர் லிஃப்டை கீழே விழ வைக்கறது, 2ம் நிலையிலிருந்து 1ம் நிலைக்குப்போக... அதாவது லிஃப்டிலிருந்து வேனுக்குப்போக...////

அப்டியா? நானும் 'கிக்' கொடுக்கத்தான்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். 1st floorக்கு போக, படிக்கட்டு வழியா மெதந்துக்கிட்டே போயிருக்கலாமே ;)

ஜெய் said...

ஆஹா... நானும் அதைத்தான் சொல்லறேன்.. ரொம்ப தமிழ்ல பேசிட்டேனோ... floor பத்தியெல்லாம் நான் சொல்லவேயில்லை... நிலைன்னு நான் சொல்லறது level of dream..

Ok... Simple question... A kick is given in by blasting and making the lift fall down... So what does this kick do?

Option 1: Bring the people from 3rd (snow level) to 2nd( lift)

Option 2: Bring the people from 2nd(lift) to 1st (van) level...

SurveySan said...

a kick always brings the dreamer from the dream state to the prior state. so,it is #1 :)

that whole symphony of van, lift, snow sequence was very nicely done. the slow motion and editing was fabulous. only drag was the snow fight sequence. thala vali.

SurveySan said...

all said and done, i think i failed miserably in grasping all the content of the movie. a 2nd watch should be planned :)

SurveySan said...

interesting read from jackisekar - http://jackiesekar.blogspot.com/2010/07/blog-post_16.html

SurveySan said...

negative review. can't disagree with this one too :)

http://eclipsemagazine.com/Movies/18641/

ஜெய் said...

// a kick always brings the dreamer from the dream state to the prior state. so,it is #1 :) //

@ Surveysan,
if the lift fall would bring them from snow to lift, then why is the blast in snow required?? already araidne, fischer, eames are in snow... so, option #2 is correct..
that is, snow is blasted and falls down to bring them from snow to lift, lift is blasted and falls down to bring them from lift to van, and van falls down to bring them from van to flight... But, before they reach van, it fell down so they didn't feel the kick there and didn't come back to flight... Later, somehow they create a kick in van level or wait till sedative gets over and come back to flight... (which is not shown in the movie)

SurveySan said...

ஜெய், i doubt it.
blasting lift would only wake them and not kill them.
so, i doubt, blasting lift is for taking them from lift to van. it is for snow to lift.

the real question then would be, why the heck they blow up the snow place? may be a backup, just in case if lift thing wouldn't work? well ;)

SurveySan said...

another, interesting read.
http://boards.ign.com/inception/b24732/193970072/r194099356/

********
Ok so in conclusion I see three possible endings, one being clearly the best.

1. Michael Cane uses Ellen page to orchestrate inception on his son to let go of his lost wife and be content. This ending is interesting and kind of cool, but has the least evidence supporting it.
2. After going into limbo to find Saito, they were unable to leave limbo by killing themselves. And he is stuck in his own limbo forever.
3. The simplest answer is actually the best! He is awake! (cheers!) I feel like a lot of people are missing the overall point of the movie unfortunately. Ask yourself, what is the overall theme of inception? What is the ultimate realization of the protagonist? What is the climax of the movie? The climax scene is where leo realizes the Mol he is dealing with is only a shade, “the best he can do”, but he cannot recreate the perfection of his wife. That is when leo tells us that the way to tell the difference between dreams and reality has nothing to do with a spinning top, but by the depth of the people. That is why at the end of the movie he does not need to look at the top. He already knows what is real. He has overcome his problem of paranoia and totem dependency. The audience is now the paranoid and dependant one!! This forum only proves that. Despite the overwhelming evidence (the wife is gone but the dream doesn’t collapse. Older kids. No wedding ring. The top wobbles. He can actually see the children’s faces) the audience cannot fully have faith it’s true until they see the top stop spinning, and he cuts away just before we get that satisfaction. We are now in the fragile state leo only recently broke out of. This is Nolan’s ultimate trick. The ending is not to be a question, but a taunt. A statement of “haha now you are the one who needs to see the top fall in order to know what is real”. We are forced to feel what Leo had to feel the whole movie. That terrible limbo of not knowing for sure what is real without seeing a stupid top fall. Leo is free from that finally…we are not.
******

ஜெய் said...

// blasting lift would only wake them and not kill them. //
ya ya... that I also agree... because if they are killed, they will go to limbo and not to previous level.. only fall will take them to previous level...

// i doubt, blasting lift is for taking them from lift to van. it is for snow to lift. //
ok... if you are saying that lift fall is to bring them from snow to lift, then there are three things that are conflicting
1) Why should the snow be blasted and fall down? Its clear that it was a part of the plan?
2) As you say, if van fall was meant to bring them from lift to van, what was the plan to come from van level to flight? When van starts falling, Cobb and others are in snow level, that time they say that "we missed the first level kick".. Do u remember?
3) How does Ariadne come from fourth to third(snow)? She falls in fourth and comes to third... Right?
So, a kick can happen either in dream or in real, but in these four stages the kick was planned in dream levels... (except Fischer being double kicked by fall in fourth and defibriallaotr in third)

SurveySan said...

ஜெய்,

Snow is blasted either as a fall back mechanism, in case if kick doesnt work in the elevator. OR to destroy Fischers 'safe' once the inception is made ( hee hee )

going from van to flight was left out purposely, i guess. but obviously, it would have happened when the sedations effect is lost and the flight hit a turbulence :)

i forgot what happened to adriane between 4th and 3rd.
must watch it again, this time with a pen and paper :)

SurveySan said...

here is what, my friend thinks why the snow had to be blasted

****palace is blasted because that was the kick for Fischer to come back****

but, i thought Fischer was also tied up in the elevator.. well well well :L)

பாலா said...

வொய்... டூ மச் இங்கிலிபீஜு??

SurveySan said...

பாலா, பின்னூட்டங்கள், mostly, copy/pasted from other sites.

ஸாரி அபவுட் தட் :)

உங்க இன்செப்ஷனுக்காக வெயிட்டிங்.

SurveySan said...

சாருவுக்கும் அடி சறுக்கியிருக்கு:
http://charuonline.com/blog/?p=858

அதை எடுத்துச் சொன்ன ஜெய்க்கும் அடி சறுக்கியிருக்கு:
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html

ஹாலிவுட் பாலா ரெவ்யூ எழுதினாதான் பதிவுலக இன்செப்ஷனுக்கு விமோசனம் கிட்டும் போலருக்கே :)
அவரென்னடான்னா jeejix swetaவுக்கு லவ்ஸ் லெட்டர் எழுதிக்கினு கீறாரு
http://www.hollywoodbala.com/2010/08/blog-post.html

ஜெய் said...

கிலோமீட்டரையும், அடியையும் ஒப்பிட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்... நெக்ஸ்ட் மீட் பண்றேன்... :-)

Unknown said...

//தன் கையில் இருக்கும் அடையாளச் சின்னத்தை எடுத்து பாப்பாரு. அதன் முடிவு தெரியரத்துக்குள்ளையே படம் முடிஞ்சுரும். சுபமா இல்லையாங்கர குழப்பத்துல நம்மள வெளீல வரச் சொல்லிடறாங்க.//

குழப்பமே இல்லை பாஸு. .. நிஜவுலகம் தான். அந்த பம்பரம் கடைசி வரைக்கும் சுத்தினால் கனவு.. இது படத்தில் ஹீரோ சொல்லும் வசனம். படத்தின் கடைசி நொடி , அந்த பம்பரம் கீழே விழும். அது தான் நோலன் டச்