கல்லூரிப் படிப்பின்போது, என் கணக்கு வாத்தி ஒரு நாள் எல்லார் கிட்டையும், எதிர்கால திட்டம் பத்தி கேட்டுக்கிட்டு இருந்தாரு.
குறிக்கோளின்றிக் கெட்டுக் கொண்டிருக்கும் பலரில், நான் முதலாமவன்.
காட்டாற்றில் மிதக்கும் காஞ்ச கட்டை மாதிரி, ஆறு செல்லும் வழியில், எந்த ஒரு குறிக்கோளும் கோட்பாடும் சட்ட திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் மிதந்து கொண்டு, (சந்தோஷமுடன்) going with the flowவாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
இப்பேர்பட்ட எனக்கு, எதிர்காலத் திட்டம்னு ஒண்ணும் சொல்லத் தெரியலை அன்னிக்கு. மனசளவில் ஒரு ஸ்பார்க் இருந்தது, எப்படியாவது பாப்புலர் ஆயிடணும்னு. கடின உழைப்பு செய்யாம, பாப்புலர் மட்டும் எப்படி ஆக முடியும்? கசப்பான உண்மையாக, இதை வாசிக்கும் ஐநூத்தி சொச்சம் பேர்களுக்கு மட்டும், புனைப்பெயருடன் பாப்புலர் ஆனதோடு சரி. இனி வரும் காலங்களிலும், எந்த ஒரு பாப்புலாரிட்டுக்கும் வழி வகை இருப்பதாய் தெரியவில்லை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட ஈர்ப்பில்லை.
எனிவே, எல்லாரும், ராஜீவ் காந்தி ஆகமுடியுமா என்ன? எல்லாரும், ஏதோ ஒரு காரண காரியத்துக்காக அந்தந்த இடத்தில் அந்தந்த நேரத்தில் அந்தந்த விஷயங்களைச் செய்யரதுக்கு வரோம். ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம, இருக்கும் நேரத்தில், நிம்மதியாய், இயன்றதைச் செய்து, சுற்றத்துக்கும் நட்புக்கும், தொல்லை தராமல், வாழ விட்டு, நாமும் வாழ்வோம்.
நாம் இருந்துட்டுப் போனோம்னு சொல்லிக்கரதுக்கு, தாஜ்மஹாலையோ, திருவள்ளுவர் சிலையையோ, கட்டிட்டுப் போகணும்னு இல்லை. அட்லீஸ்ட், கெடுதலா எதையும் செய்யாம இருந்தாலே போதும்.
சுற்றப்புறச் சூழல், க்ளோபல் வார்மிங்னு டங்கு டங்குன்னு கூவிக்கிட்டு இருக்கர காலம் இது. எல்லாருக்கும், தண்ணீர் பற்றாக்குறை, ப்ளாஸ்டிக் தரும் தொல்லை, பூச்சிக் கொல்லி மருந்தின் பின்விளைவுகள், செயற்கை வழி விவசாய முறைகள், இதெல்லாம் ஏற்படுத்தும் பின்னடைவு நன்றாகவே தெரிந்திருக்கும்.
என்னை போன்ற சாமான்யன், இதுக்கெல்லாம் என்ன பண்ணிட முடியும்? குறைந்த பட்ச காரண்டியாக, ப்ளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது குறைக்கலாம்; தண்ணீர் வீணடிப்பதையும் குறைக்க முயலலாம்; இறக்கும்பதி செய்யப்படும் உணவுகளை வாங்குவதை தவிர்க்கலாம்; இயன்றவரை உள்ளூர் உற்பத்திப் பொருளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்;
இதையெல்லாம் தவிர, நல்லது செய்யும் ஒரு சிலருக்கு, நம் ஓய்வு நேரத்தில், நம்மால் இயன்ற உதவியை தன்னார்வலராக செய்ய முயற்சிக்கலாம்.
நல்லது செய்யரவங்க, உலகம் முழுவதும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது நல்ல விஷயங்களை செஞ்சுக்கிட்டுத்தான் வராங்க.
IndiaTeam.orgனு ஒரு குழுமம் எங்க ஊர்ல இருந்து செயல்படுது. மாசத்துக்கு $10 கட்டினா, வருஷத்துக்கு ஒரு தபா சீட்டுக் குலுக்கி, மெம்பர்களில் ஒருவருக்கு பெரிய தொகை தந்து, அவங்க ஊர் பள்ளிக் கூடத்துக்கோ, வேறு நல்ல விஷயங்களுக்கோ, இயன்றதைச் செய்ய வழி பண்றாங்க.
இப்படி பலர் இருக்காங்க.
மக்களின் மேம்பாட்டுக்கு, இந்த மாதிரி குழுக்கள், இப்படி இயங்கும்போது, பூமியின் மேம்பாட்டுக்கு PointReturn.Org DV Sridhar, Karpagam, Sriram கோஷ்டியினர் தம்பட்டம் அடிக்காம இயங்கிக்கிட்டு வராங்க.
நம்ம சொந்த நேரத்தில், இந்த மாதிரி இயக்கங்களுக்கு சொற்ப நேரத்தை செலவிடுவது, திருப்திகரமான பொழுது போக்காய் அமைவதோடு மட்டும் அல்லாமல், சொந்த வாழ்க்கையில், நம்மை அறியாமல் ஒரு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும்.
ஸோ, சாமன்யரே, உங்கள் சுற்றத்தில் உள்ள, ஏதாவது ஒரு, 'நல்ல' குழுவுடன், இணைந்து, உங்களால் இயன்ற உழைப்பில், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த சிறிய பங்களிப்பை அளியுங்கள்.
Become a volunteer!
இந்த கற்பகமும், ஸ்ரீராமும், சமீபத்தில் GoodNewsIndia.comன் PointReturn.Orgல் இணைந்து, ஜமீன் எண்டதூரில் இருக்கும் பண்ணையில், முழு நேர volunteersஆக சேர்ந்தபோது, எவ்ளோ நாள் தேறுவாங்கன்னு உள்ளூர ஒரு கேள்வி இருந்தது.
ஆனா, அவர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் செய்யும் வேலைகளைப் பார்க்கும்போது, இவங்க, 'சாமான்யர்கள்' அல்லன்னு தெளிவாப் புரியுது.
ஒரு முடிவோடதான் கோதால எறங்கியிருக்காங்க.
100 நாட்கள், கடந்து வெற்றிகரமாய் போயிக்கிட்டு இருக்காங்க; இயற்கை விவசாயம்;
எண்ணை உற்பத்தி;
ராகி பயிரிட்டு;
குளம் வெட்டி அல்லி வளர்த்து,
வீடு கட்டி,
மனிதக் கழிவையும் புனிதமாக்கி,
இவங்க பயணம், சூப்பரா போயிக்கிட்டே இருக்கு; இப்படியே தொடர்ந்து போயிக்கொண்டு இருக்கும் இவர்கள் ப்யணம், இவர்கள் இருக்கும் 15 ஏக்கருக்கு மட்டுமல்ல, இவர்கள் கதையை படிக்கும், மேலும் பலப் பல 'சாமான்யர்'களுக்கும் ஒரு உந்து கோலாக அமைந்து, மேலும் பல ஆயிரம் ஏக்கர்களை உருப்படியாக்க வழிவகை செய்யலாம்.
pls become a volunteer! somewhere, and contribute, atleast to a small good cause.
together, we can all make, a much needed, big difference.
சென்னை/செங்கல்பட்டு வாசிகள், DV ஸ்ரீதரனை தொடர்புகொண்டு, தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தால், இருகரம் நீட்டி ஆரத் தழுவி வரவேற்பார்.
வாழ்க வளர்க!
பி.கு: இந்த வருட விடுமுறையில், ஓரிரு நாட்களாவது, PointReturnல் செலவிட அவா.
13 comments:
ரொம்ப யோசிக்காம, வள வளன்னு கையில் வந்ததை தட்டச்சியாச்சு. பிழைகளை மன்னிக்க.
நன்றீஸ் ஃபார் த விசிட்.
'Become a volunteer'ன்னு கவுஜ போட்டி வைக்கலாமா?
DVன் report கண்டிப்பாய் வாசிக்கவும் http://goodnewsindia.com/pointreturn/online/beginning-to-grow/
கற்பகமும் ஸ்ரீராமும், pointreturnல் தன்னார்வலராய் சேர்ந்த கதை http://goodnewsindia.com/pointreturn/online/home/2010/01/karpagam-and-sriram/
எ.கொ.இ? ஒன்னியும் தோணலியா? :)
பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
நல்ல பதிவு. அருமையான சேவை. பகிர்ந்ததுக்கு நன்றி.
மதுரை சரவணன், ச்சின்னப் பையன்,
நன்றீஸ்.
vanakkam ayya.
csm அண்ணாச்சி வணக்கம்.
வருகைக்கு மிக்க நன்னி :)
நல்ல பகிர்வு.
இன்றைய வலைச்சரத்திலும் , முத்துச்சரத்திலும் இவர்கள். நன்றி.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி. :)
Post a Comment