பெரிய எதிர்பார்ப்பு இல்லாம ஒரு படம் பாக்க போணோம்னா, படம் எவ்ளோ சொதப்பலா இருந்தாலும், எரிச்சல் வராம, பி.பி ஏறாம தப்பிச்சுடலாம்.
இது என்னுடைய சமீப காலத்திய அனுபவம்.
என்னதான் தரணி இயக்கியிருந்தாலும், த்ரிஷா டேன்ஸ் ஆடியிருந்தாலும், விவேக் கிச்சிலிக்கா மூட்டியிருந்தாலும், வித்யாசாகர் மேளம் அடித்திருந்தாலும், சுமன்/ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா சீனிலும் டென்ஷனாகியிருந்தாலும், மாளவிகாவும் நாசரும் சும்மா வந்து போனாலும், விஜய் படமாச்சே என்ற ஒரே காரணத்தால், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமதான் படம் பாக்க ஆரம்பிச்சேன். ( அ.த.ம பாத்த எஃபெக்ட்டு இன்னும் குறையாததால் இப்படி ஒரு முன்னேற்பாடு.)
படம் ஒண்ணும் பெருசா மோசமில்லை.
மணிவண்ணன், விஜயின் அப்பா, சுமன்/ஆஷிஷ் கிட்ட, கடப்பா/ஆந்திராவில் வைரத்தை ஜல்லட பண்ணி எடுக்கும் கொத்தடிமைகளில் ஒருவரா இருக்காராம்.
(கடப்பால வைரமாம், அத தண்ணீல ஜல்லிச்சு ஜல்லிச்சு எடுக்கராங்களாமாம்...)
வைர வயலில் ஏகப்பட்ட செக்யூரிட்டி, யாரும் எஸ்கேப் ஆகாமல் இருக்க, கரெண்ட்டு வேலி, கொண்டா ரெட்டியின் ரௌடி, கடப்பார, கோச்சான்னு காவல் டைட்டு.
வைர வயல் காட்சிகள் நல்லாவே இருந்தது. கலரும், அந்த செட்டிங்கும், அங்கிருக்கும் கடப்பா ரௌடிகளும் நல்லாவே இருந்துச்சு.
மணிவண்ணன், எல்லா படம் மாதிரியும், "டேய் எம் பையன் வந்து எங்கள காப்பாத்துவாண்டா"ன்னு சூளுரைச்சிடறாரு.
அப்பாலிக்கா என்ன?
ட்ராலி ஷாட், விஜய், விவேக்னு படம் ஜாலியா ஓடுது கொஞ்ச நேரம்.
கடனில் இருக்கும் வீட்டை மீட்க, ஒரு துட்டு வசூலுக்காக, 'குருவியாய்' மலேஷியா பொறப்படறாரு.
(குருவி => மலேஷியாவிலிருந்து எலெக்ட்ரானிக்ஸ் சாமானெல்லாம் கொண்டுவர, ஓ.சி டிக்கெட்டில் அனுப்பப்படும் ஒரு மெஸெஞ்சர் மாதிரி).
இப்படியே ஜாலியா ஓடர படம், விஜய் வில்லன பாத்ததும், அவுத்து விட்ட பலூனாட்டம், ட்ராக் மாறுது.
இவரு டயலாக் விடரதும், பறந்து பறந்து அடிக்கரதும் (Crouching Tiger, Hidden dragonனு ஒரு படம் வந்தாலும் வந்துது, இந்த கயிறுல பறந்து அடிக்கர கொடுமை தாங்கலடா சாமி) நம்மை ஸோஃபாவின் நுனிக்கே பலமுறை கொண்டு வருகின்றன. எஸ்கேப் ஆகத்தான்.
சில சேம்ப்பிள் டயலாக்ஸ்:
1) திரும்பிப் போறவன் இல்லடா, திருப்பி குடுக்கரவன்
2) ஆம்பளன்னா யாரு தெரியுமாடா? blah blah blah
3) நாங்க அப்பன் பேச்ச கேக்க மாட்டோம், அது வயசு. ஆனா, அப்பனுக்கு ஒண்ணுன்னா எவன் பேச்சையும் கேக்க மாட்டோம்.
4) காடுன்னா நான் சிங்கம், வானம்னா இடி, கடல்னா சுரா, காத்துன்னா சூறாவளி. சும்மா சுத்தீதீதீதீ சுத்தீ அடிக்கும். (இந்த டயலாக் சொல்லிக்கிட்டே நடந்து வரது ஜூப்பர்..ஸ்ஸ்ஸ்ஸ்)
வில்லன் சுமன் கிட்டேயிருந்து ஒரு வைரத்தை லவுட்டிக்கிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகும் விஜய், அவரைத் தேடித் துரத்தும் சுமன் & கோ., இப்படி நகரது பிற்பாதி.
இடயில், திரிஷா (வில்லனின் தங்கை), விஜயின் பின்னால் சுற்றுவதும், சம்பிரதாயப்படி நடக்குது.
சண்டை காட்சிகள் நல்லாவே எடுத்திருக்காங்க, சில சண்டைக் காட்சிகளின் நீளம் டூ.மச்சு.
குறிப்பா, விஜய் ஒரு சீன்ல, மொட்டை மாடிலேருந்து ஓடர ட்ரெயின புடிக்க குதிப்பாரு.
செம ஷாட்.
ஷாட்1) மாடியிலிருந்து ட்ரெயினைப் பார்க்கும் விஜய்
ஷாட்2) வேகமா வந்து கொண்டிருக்கும் ட்ரெயின்
ஷாட்3) விஜய் ஆகாசத்தைப் பாப்பாரு
ஷாட்4) ஆகாசத்துல ஒரு பருந்து பறக்குது
ஷாட்5) மொட்டை மாடிலேருந்து ஸ்லோ மோஷனில் ரயிலை நோக்கிப் பறக்கும் விஜய்
ஷாட்6) ரயில் மேல் லேண்ட் ஆகாமல், அதுக்குப் பக்கத்துல லேண்டாகராரு விஜய்
ஷாட்7) ரயிலுடன் 60 கி.மீ வேகத்தில் ஓடும் விஜய்
ஷாட்8) அப்படியே ஜம்ப் அடிச்சு ரயிலுக்குள்ள ஏறிடறாரு விஜய்
ஷாட்9) நடு விரலை வில்லனுக்கு காட்டறாரு விஜய்
ஷாட்10) ஸ்ஸ்ஸ்ஸ் நமக்கு பெருமூச். சீன் முடிஞ்சுடுச்சு. ( தரணி சார்? என்னாச்சுங்க உங்களுக்கு? )
இப்படி அப்பப்ப வரும் அபத்தங்கள் இருந்தாலும், விறுவிறுப்புக்கு குறைச்சலில்லாம போயிட்டிருக்குது படம்.
எங்கையும் பாட்டு வைக்க அனுமதிக்காத விறு விறு திரைக்கதையில், அனைத்து பாடல்களும், கனவுப் பாட்டாக ஒரு இடைச் செறுகல்.
வித்யாசாகர் ஏமாத்தல. பலானது பலானது, தேன் தேன், மொழ மொழன்னு வரிசையா கலக்கிட்டாரு.
இப்படியாக நகரும் கதையில், கடைசியில், வில்லனை தொம்சம் பண்ணி, வைரத்தை வடிகட்டும் கொத்தடிமைகளை காப்பாத்தறாரா, த்ரிஷாவை கைபுடிக்கறாரா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
விஜய் ரசிகர்களுக்கு, நல்ல தரமான விருந்து.
(மேலே சொன்ன ஷாட்1 டு ஷாட்10 விருந்தான்னு யாராச்சும் விஜய் ரசிகர் வந்தீங்கன்னா சொல்லிட்டுப் போங்க).
த்ரிஷா, அழகு. எல்லா சீனிலயும் ஓடிட்டே இருக்கர வேலை. வயசாவுது, ஜிவ், மிஸ்ஸிங். காமெடி முயற்சி பண்ணியிருக்காங்க.
கடப்பா, ஆந்திரா வைர வயல், நல்லா ஆங்கிலப் பட கலரில் அம்சமா எடுத்திருக்காங்க.
பாட்டெல்லாம் கச்சிதமா பொறுந்திச்சு.
விவேக், ஓ.கே.
விஜய், அவரு வேலைய கச்சிதமா செஞ்சிட்டாரு.
தரணி, ஹ்ம்.
லெஸ் டென்ஷன், எஞ்சாய் லைஃப்!
பி.கு: (latest addition)
இந்த கொடுமையெல்லாம் போதாதுன்னு, இப்ப லேட்டஸ்டா தெரிஞ்சுகிட்ட விஷயம். படத்தின் 20 நிமிட காட்சிகள், ஒரு தெலுங்கு படத்திலிருந்து, சீன்-பை-சீன் காப்பியாம்.
என்ன கொடுமைங்க இது?
17 comments:
மேலிருக்கும், 'குருவி' புகைப்படத்தில், குருவி கடுப்பாகி என்னா சொல்லுதுன்னு ஒரு டயலாக் சொல்லிட்டுப் போங்க ;)
படம் பாத்துட்டு ஒரே ரத்தக்களறில நெறையப் பேரு திருயிறாங்கன்னு ஊரெல்லாம் பேச்சாயிருக்க,ஐயா-படம் பரவாயில்லை ஒரு தபா பாக்கலாம்கிறீங்க,என்ன ரசிகர் மன்றத்தில சேந்தட்டீங்களாப்பு????
அறிவன்,
படம் ஒரு தபா பாக்கலாங்க. சில அலுப்பூட்டும்/எரிச்சலூட்டும்/டென்ஷனூட்டும்/தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும்/சீட்டு நுனிக்கே கொண்டு வந்து வெளியே தள்ளும்/ சீன்ஸ் இருந்தாலும், ஒரு தபா பாக்கர மாதிரிதான் இருக்கு.
சாவடிச்சுடுவேண்டி
(படம் பார்க்க நினைப்பவரைப் பார்த்து சித்திரம் பேசுதடி பாணியில் குருவி சொல்லுது)
கானா பிரபா, :)
"என்னா தில்லிருந்தா என் படம் பாத்திருப்ப"ன்னு குருவி சொல்லுது :)
அந்த பத்து ஷாட்டும் சூப்பர்! படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் போல;)
"த்ரிஷா, அழகு. எல்லா சீனிலயும் ஓடிட்டே இருக்கர வேலை. வயசாவுது, ஜிவ், மிஸ்ஸிங்." த்ரிஷா கிட்ட எப்போ நீங்க ஜிவ்வ பார்த்தீங்க?
புகை படத்தில் குருவி சொல்லுவது, "போடாங்ங்ங்ங்கோகோகோ..."
குருவி பஞ்டைலாக்
சீதபேதி வந்தா
அலோபதி இல்ல ஓமியோபதில
குணபடுத்தலாம் ஆன இந்த
இளைய தளபதி அ( ந)டிச்சா
இந்தியாவுலே மருந்தே இல்ல....;
சிவா
பாண்டி.
அந்தக் கொடுமைக்கு ஒரு முழுப்பதிவு போட்டு ஒரு விமர்சனமா? வர வர ஆ.வி.யப் போல மோசமாகிட்டீங்க.ஆமா இப்படி நல்லா எழுதுனீங்கன்னா எவ்வளவு தர்றோம்னு சொன்னாங்க? :P
நம்ம 'கில்லி' டீமாச்சே...நல்லாப் பார்க்குற மாதிரி இருக்கும்னு பார்த்தா அது நம்மளப் பேக்குற மாதிரி ஒரு படம்.லொஜிக்னா என்னன்னு கேக்குற மாதிரி ஒரு படம்.
அதுலயும் அந்த சண்டைக் காட்சிகள்..அடாடா..
உண்மையில் அதுதான் சரியான காமெடி படத்துல..
சமீபத்துல வந்த படங்கள்லயே நான் ரொம்பவும் பார்த்து நொந்த படமுங்க இது... :(
இருந்தாலும் நல்லாவே எழுதியிருக்கீங்க :)
//நம்மை ஸோஃபாவின் நுனிக்கே பலமுறை கொண்டு வருகின்றன. எஸ்கேப் ஆகத்தான்.//
:-)))))))))))))))
குருவி என்ன சொல்லும்?
டாய்!!!!
இது இல்லாம படமும் இல்லை சீரியலும் இல்லை!
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பர்காள்.
ENNA KODUMAI (KURUVI) SIR ITHU...
anony,
avlo periya kodumaiyellaam illla.
:)
LATEST ADDITION GOOD
குருவி படம் வந்த பின் சில விளம்பரங்கள் மற்றும்.. ஜோக் குகள்..
"இப்போது ஒரு 50 பைசா கிளினிக் பிளஸ் ஷாம்பூ வாங்கினால், குருவி பட டிக்கெட் முற்றிலும் இலவசம்.. முந்துங்கள்...!! இந்த சலுகை படம் தியேட்டரில் ஓடும் வரை மட்டுமே !"
-------------------------
"கலைஞர் டிவி ல் .. பெப்சி உமாவுக்கு கால்..."
"ஹலோ..!! பெப்சி உமாவா !! எனக்கு குருவி படத்துலேந்து ஒரு பாட்டு போடுங்க !!!!
சார், இன்னும் 2 நாள்லே குருவி படமே போட்டுடுவோம் ! அவசரப்படாதீங்க !!"
-------------------------
2 நண்பர்கள்...
"என்ன மாப்ளே !! அந்த தியேட்டர்ல அவ்வளவு கூட்டம்...
ஒண்ணும் இல்லடா மச்சான்!! எவனோ ஒரு இளிச்ச வாய குருவி படத்துக்கு 30 டிக்கெட் வாங்கி இருக்கானாம்!! அவன பாக்க ஜனம் எல்லாம் நிக்குது !!"
இந்த விமர்சனத்த படிங்க முதல்ல
http://tamil.in.msn.com/entertainment/filmreview/article.aspx?cp-documentid=1370654
படிச்சிட்டு விமர்சனம் எழுதிய ஆளை வலைவீசி தேடவும்
ரிஷான்,
///அந்தக் கொடுமைக்கு ஒரு முழுப்பதிவு போட்டு ஒரு விமர்சனமா? வர வர ஆ.வி.யப் போல மோசமாகிட்டீங்க///
:)) என்னங்க பண்றது. சரக்கு தீந்து போச்சு :)
தர்மா,, என்னா கொடுமைங்க இது :)
Post a Comment