என்னத்த சொல்ல?
ஆரம்பத்துல சூடாதான் போச்சு. விஷயத்தை அனுப்பின உடனே, டக்குனு ஒரு நெம்பரு குடுத்தாங்க. அதுக்கப்பரம் கொஞ்ச நாள்ளையே, அத சேர வேண்டிய எடத்துக்கு அனுப்பியும் வச்சாக.
அப்பரம்தான் வழக்கமான இழுவை ஆரம்பிச்சுது.
போக வேண்டிய எடத்துக்கு போச்சா? பாக்க வேண்டியவங்க பாத்தாங்களா? ஏதாவது செய்வாங்களா?
ஒண்ணுமே புரியல. ஒரு ஈ.மடல் அனுப்பி, இப்படி இப்படி சங்கதின்னு சொன்னாக்கூட ஓரளவுக்கு ஆறுதலா இருக்கும்.
ஹ்ம். என்னத்த சொல்ல?
இதுவரைக்கும் அனுப்பினது எல்லாமே இந்த மாதிரி தான் நிக்குது.
வேற ஒண்ணுமில்லீங்க, நம்ம சென்னையில், ஒரு ரோடு போடறதுக்கு முன்னாடி, ஏற்கனவே இருக்கர பழைய ரோட சொரண்டி எடுத்துட்டு ஒழுங்கா போடாம, பழைய ரோட்டு மேலேயே ஜல்லிய கொட்டி, தார ஊத்தி ரோடு போடறாங்க.
அட, இதில என்னங்க பெரிய விஷயம் இருக்கு? எப்படியோ ஒண்ணு ரோடு போட்டா நல்லதுதானேன்னு நெனப்பீங்க. ஆனா, பல எடங்கள்ள, இப்படி பொறுப்பில்லாம ரோடு போடறதால, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் இருக்கர வீடுகள், கீழ கீழ போயிக்கிட்டே இருக்கு.
மழை நேரத்தில் செம டார்ச்சர் இதனால்.
ஓரடி போனா பரவால்ல, திருவொற்றியூர் மாதிரி இடங்களில், பாதி வீடே மண்ணுக்குள்ளதான் இருக்கு.
இதைப் பத்தி ஒரு பெட்டிஷன் நம்ம கவருமெண்டுக்கு அனுப்பி ஒண்ணும் பெரிய பதில் வராததால், வந்த பொலம்பல் தான் மேலே சொன்னது.
பெட்டிஷன், இப்ப இவங்க கிட்ட இருக்காம், மூணு மாசமா.
Dr.S. Swarna, IAS
Spl Officer to C M Spl Cell
Fort St. George, Secretariat
Chennai
ஆனா, ஒரு வெவரமும் இல்ல.
உள்ளூர்ல இருக்கரவங்க, ரெண்டு ரூவா செலவு பண்ணி, பெட்டிஷன்ல இருக்கர மேட்டர ப்ரிண்ட் பண்ணி இந்த முகவரிக்கு அனுப்பினீங்கன்னா நல்லாருக்கும். நானும் அனுப்பி வைக்கறேன். உதவுங்க ப்ளீஸ். வீடெல்லாம் மெதுவா, விட்டலாச்சாரியார் படம் மாதிரி பூமிக்குள்ள போயிக்கிட்டே இருக்கு. இப்படியே போனா, பாதாள உலகம், பல இடங்களில் காணக் கிட்டும்.
இதைப் பத்தி ஏற்கனவே பொலம்பியது இங்கே.
ஹ்ம்!
5 comments:
டெஸ்ட்.
இப்படி செஞ்சாத்தானே சாலையில் தண்ணீர் இல்லாமல் இருக்கவைக்க முடியும்.
எவ்வளவு வருடமாக மண்டையை குடைந்து செயல்படுத்தும் வேளையில் இப்படி சொன்ன எப்படி??
ஆமாம் வீடு கட்டுவதற்கு முன்பு நகராட்சியிடம் அனுமதி வாங்கினீங்களா?அப்படி வாங்கிருந்தால் அதில் சாலையின் உயரத்தை ஏற்ற மாட்டோம் என்றா வாக்குறுதி எதுவும் கொடுத்திருக்கா என்ன??
:-((
தலைப்பு, சூப்பர், சிரிப்பு.
எங்க வீடு, கட்டுமானம், ஆறடி மேலே, பத்து வருஷம், வீடு கீழே...
வடுவூர்,
பொதுநல வழக்கு ஏதாச்சும் போட முடியுமான்னு பாக்கறேன். :(
வேர என்னத்த பண்றது?
ச்சின்னப் பையன்,
//எங்க வீடு, கட்டுமானம், ஆறடி மேலே, பத்து வருஷம், வீடு கீழே...//
ஹ்ம். லெட்டர் எழுதி அனுப்புங்க கலெக்டருக்கு, உடனே :)
Post a Comment