மொதல்ல படம் பாத்தவங்க ஒரு விஷயம் சொல்லுங்க.
படத்தின் கடைசி சில நிமிடங்களில், ஆர்யாக்கும் வில்லனுக்கும் சண்டை நடக்கும். கோர்ட் சீனுக்கு அடுத்த சீன்ல, ஒரு கோர்வையே இல்லாமல், திடீர்னு ரெண்டு பேரும் பாத்து அடிச்சுப்பாங்க.
நீங்க பாக்கும்போதும் அப்படிதான் இருந்துச்சா? இல்ல என் தியேட்டர் காரன் அவன் இஷ்டத்துக்கு கத்திரி போட்டுட்டானா?
ஒரிஜனலே அப்படின்னா, ரொம்ப கொடுமைங்க பாலா சார் இது.
மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்துட்டு ஒரு படத்தை இப்படியா அமெச்சூர்தனமா முடிக்கரது?
ஆர்யாவின் கஷ்டமும், பூஜாவின் நம்பிக்கையும், அந்த உடல் ஊனமுற்றவர்களின் உழைப்பும், எங்களின் இத்தனை வருட எதிர்பார்ப்பும் புஸ்வாணமா போச்சு.
படம் முடிஞ்சு வெளீல வரும்போது, 100ரூபா கொடுத்து பிரியாணி வாங்கி, ஆசை ஆசையா சாப்பிட்டா, பிரியாணியில் சுவை குறைஞ்சா ஒரு வெறுமை வருமே, அப்படி இருந்துச்சு எனக்கு. சப்புன்னு!
ஆர்யா வரும் காட்சிகள் ரொம்பக் குறைவு. ஒரு தேர்ந்த டைரக்டர், ஆர்யா காட்சிகளை ஒரு மூணு மாசத்துல முடிச்சு, அவர வேர பொழப்ப பாக்க விட்டிருக்கலாம். மூணு வருஷம், அவரை லாக் பண்ணினது தேவையற்றது. பாவம் ஆர்யா! (அஜித் தப்பிச்சாரு. ஆனா, நா.க'வை தவிர்த்துவிட்டு ஏகன்ல நடிச்சதுக்கு, அவங்க ஊர்ல தபால்காரரா ரெண்டு வருஷம் வேல செஞ்சிருக்கலாம்).
பூஜா தத்ரூபமா நடிச்சிருக்காங்க. ஆனா, அவங்க பாடர பழைய பாட்டெல்லாம், அவங்க சொந்தக் கொரல்லையோ, இல்ல வேர யாராவது டப்பிங் ஆள வச்சோ, கொஞ்சூண்டு இசை மட்டும் சேத்து பாடியிருக்கணும். அத்த வுட்டுட்டு, பழைய பாட்டின் ஒரிஜினலையே, சுசீலா, ஜிக்கி குரலில் சேர்த்திருப்பது, ரொம்ப கேவலமா இருந்தது பாக்க. இந்த குளர்படியால், பூஜாவின் நடிப்பில் கவனமே செலுத்த முடியாமல் போனது.
ராஜாவுக்கு கூடவா இது தோணாம போயிடுச்சு? என்ன கொடுமைங்க இது?
'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே'
'சொந்தமில்லை பந்தமில்லை'
போன்ற பாட்டெல்லாம் வருது.
இதற்காக போடப்பட்ட 'மாதா உன் கோயிலில்' பாட்டையும் படத்துல காணும்.
நடூல எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, நயன் தாரா கெட்டப்பில் பாட்டெல்லாம் தேவையில்லா இடைச்செறுகல்.
ஸ்ஸ்ஸ். குறைகளைப் பாத்தாச்சு.
இனி கொஞ்சம் நிறைகளை பாக்கலாம்.
ஆர்யா. கொடுத்த வேலையை கச்சிதமா செஞ்சிருக்காரு.
'அகோரி' நடை கலக்கல். கஞ்சா அடிச்சவங்க குரல் மாதிரி, சூப்பர் டயலாக் டெலிவரி, கொஞ்சமே பேசியிருந்தாலும்.
ஒரே கொடுமை (மீண்டும் குறை :) ), இவரு பேசினதுல பாதி புரியல. இந்தியில் பேசறாரு. சில இடங்களில், அவரே ட்ரான்ஸ்லேஷன் பண்ணி சொல்லிடரதால பொழச்சோம்.
சினிமோட்டோகிராஃபி, அசத்தலோ அசத்தல்.
காசி அகோரி குருநாதரை காண்பித்த ஏங்கிள், லைட்டிங்கும், மலைக்கோயில் சாமியாரை காண்பித்த ஏங்கிள், லைட்டிங்கும் சிம்ப்ளீ சூப்பர்ப்.
இப்படி படம் புடிச்சு காமிச்சா, எந்த தாடி வச்ச ஆளும், சாமியாரா களத்தில் இறங்கிடலாம்.
அந்த காட்சிகளுக்கு அவ்ளோ அழகு இருந்தது. பின்னணியில் புகை, அவர்களின் உடையின் நிறம் என அந்த இரண்டு நிமிடங்கள் அட்டகாசமா இருந்தது.
பின்னணி இசை, அருமையா இருந்தது. ஆர்யா அறிமுகக் காட்சி உடுக்கை, ப்ரமிப்பு. ஆனா, ஒரு 'தீம்' மீஜிக் எதுவும், மனதில் பதியவில்லை.
க்ளைமாக்ஸில் பூஜா பேசும் நீண்ட வசனத்துக்கு, இசைக் கோர்வை செய்யாதது, நல்ல முடிவு.
டைட்டில் சாங் ஏனைய்யா இந்தியில் போட்டீங்க? காட்சியோடு ஒத்துப் போகணும்னா? அழகான ஒரு தமிழ் பஜனை பாடலை, டமில் சினிமா இழந்தது.
பிச்சைப்பாத்திரம் பாட்டை ராஜாவே பாடியிருந்தா ஒரு 'இது' இருந்திருக்கும். மது பாலகிருஷ்ணன் குரலில், கனம் இல்லாமல், ஒரு சாதா பக்திப் பாடல் போல் இருந்தது.
ராஜாவிடம் வைரமுத்து இல்லாததன் வெறுமை அப்பட்டமா தெரியுது.
பிச்சைப்பாத்திரம் பாட்டு அநேகமா ராஜாவே எழுதியிருக்கணும்.
'பிச்சைப் பாத்திரம் என் கையில், அதன் சூத்திரம் உன் கையில்' அது இதுன்னு ஏதோ சில்லரைத்தனமான வரிகள்.
எடிட்டிங் மகா சொதப்பல். இறுதிக் கட்ட காட்சி, கோர்க்கும்போது, லீவுல போயிட்டாரு போலருக்கு. பூஜா திடீர்னு இங்க இருக்காங்க. அடுத்த காட்சியில் திடீர்னு அங்க இருக்காங்க. அதற்கு அடுத்த காட்சியில் திடீர்னு மாதா கோயில்ல இருக்காங்க. திடீர்ன்னு வில்லனும் ஆர்யாவும் மீட் பண்ணி அடிச்சுக்கராங்க.
ஆர்யா அறிமுகப் பாடலில் இடையிடையே வரும் சண்டைகள். ஏன் ஆர்யா அடிக்கறாரு அவனுங்களையெல்லாம்? ட்ரெயிலரில் வந்த சில காட்சிகள் படத்தில் காணோம்.
ஸ்ஸ்ஸ்ஸ்.
( என் தியேட்டர்காரனின் சொதப்பலா என்று ஊர்ஜீதம் செய்யவும். அவன உண்டு இல்லன்னு பண்ணிடறேன்:) ).
படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட், பிச்சைக்காரர்களின் முதலாளியாய் வரும் மொட்டை பாஸும், அவரின் அடியாள் முருகனும்.
மொட்டை பாஸ் ஏற்கனவே பிதாமகனில், விக்ரமுடன் ஜெயிலில் சண்டை போட்ட்வர்.
இந்தப் படத்தில், பின்னியிருக்காரு பின்னி. அசாத்ய நடிப்பு. நமக்கே பயம் வருது அவர பாத்தா.
அதை விட பெரிய ப்ளஸ் பாயிண்ட், சில ஊனமுற்றவர்களின் நடிப்பு. நல்லா பண்ணியிருக்காங்க. இவங்கள நடிக்க வெக்கரதுக்கு, பாலாவின் உழைப்பை பாராட்டியே ஆகணும்.
ஜெயமோகனின் யதார்த்த வசனமும், பிச்சைக்காரர்களின் நையாண்டி வசனங்களும் நல்லா இருந்தது. க்ளைமாக்ஸில் பூஜாவின் நீண்ட வசனம் just white noise! இது எடிட்டிங்க் குளறுபடியால் திடீர் திடீர் என்று வந்த காட்சியால் கூட இருக்கலாம்.
படத்தில் நிறைய விஷயம் கையாண்ட பாலா எதையும் ஒரு அழுத்தமா பதிக்கலை.
நான் கடவுள் - நான் ஏமாந்தேன்!
நீங்க?
40 comments:
படத்தை பாத்தவங்களுக்கு ஒரு கேள்வி.
பிச்சைக்காரர்கள் மாஃபியா மேல் கோபப் படறீங்களா?
இந்த மாதிரி அநாதையா விட்ட ஆளுகளுக்கும், அரசாங்கம் ஒண்ணுமே செய்யாத பட்சத்தில், இந்த மாதிரி ஒரு மொட்ட பாஸ், அவங்கள ஒண்ணு சேத்து, பிசினஸ் பண்ணி, வேளா வேளைக்கு குளிப்பாட்டி சாப்பாடு பாடரது, சமூக சேவையோ?
படத்தில் உள்ள குறைகள் மட்டும்தான் உங்களுக்கு தெரியுமா? பிச்சைகாரர்களை வைத்து சோக கீதம் பாடாமல், அவர்களுக்குள் இருக்கும் நக்கல், நய்யாண்டி கலந்த வாழ்கையை காட்டியிருப்ப்பது பெரிய விசயமில்லையா? ஆரியா கொஞ்சநேரம் வருவதை ஏன் குறையாக பார்க்கிறீர்கள்? கதாநாயகனை சுற்றியே மொத்த படத்தையும் காட்டும் இயக்குனர்களுக்கு மத்தியில், தேவையான அளவே கதாநாயகனை காட்டுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். படம் நல்லாதானுங்க இருக்கு.
anbarasu,
ஆர்யா கொஞ்ச நேரம் வருவது குறைன்னு சொல்லலியே. கொஞ்ச நேரம் மட்டுமே வருவதால்,அவர் வரும் சீன்களை சீக்கிரம் முடிச்சுகுடுத்து பையன அனுப்பியிருக்க்லாம்னு சொன்னேன்.
பிச்சைக்காரர்களை வைத்து சோக கீதம் பாடாதது குறையா நிறையான்னு கணிக்க முடியல்லை?
அவங்க வாழ்க்கையை யோசிக்கணும், ஏதாவது மெசேஜ் எடுக்கணும்னு இருந்தா, சோக கீத எஃபெக்ட்டோட முடிஞ்சிருக்கணும்.
நையாண்டியும் கலந்ததால், இறுதியில் வெறுமை மட்டுமே கிட்டியது.
படம், நல்ல முயற்சி. ஆனா, சப்னு ஃபீலிங் தரல?
எடிட்டிங் பத்தி சொல்லலியே நீங்க?
படத்தில் வரும் ஒரு 'குருவி' என்ற பெண்ணைப் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை வாசிக்கவும். டச்சிங்.
http://jeyamohan.in/?p=1504
நேர்மையான பார்வை....!!!!
நான் நெட்டில் பார்ட்தேன், அதனால கட் ஆகிருச்ச்சு போல என்று நினைத்தேன்..
மூன்றுவருடம் இழுத்தால் இப்படித்தான் பிட்டு பிட்டாக காட்சிகள் வரும்..
ஆனால் இதை நம்ப மக்கள் பின்னவீனத்துவமாக பார்த்து புகழ்ந்தூ தாள்ளுகிறார்கள்....
விக்ரமின் கந்தசாமி எப்படி இருக்கப்ப்போவுதோ
ரவி, வெல்கம்!
same pincயிதர்க்கு நன்னி.
$10 கொடுத்து தியேட்டர் காரந்தான் அல்வா கொடுத்துட்டானோன்னு கலங்கி போயிருந்தேன் ;)
///ஆனால் இதை நம்ப மக்கள் பின்னவீனத்துவமாக பார்த்து புகழ்ந்தூ தாள்ளுகிறார்கள்....//
எனக்கும் இது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. எது இவங்கள அப்படி சொல்ல வைக்குதுன்னு. ஹ்ம்!
நான் தான் 'பின்நவீனத்துவ பார்வை' கிளாஸ் கட் அடிச்சுட்டேன் போல ;)
//ஜெயமோகனின் யதார்த்த வசனமும், பிச்சைக்காரர்களின் நையாண்டி வசனங்களும் நல்லா இருந்தது//
:))
வெட்டி,
நான் சொன்னதில் ஒரு உள்குத்தும் இல்லை.
உங்க ஸ்மைலிக்கும் உள்குத்து இல்லை என்றே நம்புகிறேன் ;)
படம் பாத்தவங்க யாராச்சும், படம் எம்மாம் பெருசுன்னு சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ்.
விக்கியில் 2 1/2 மணி நேரம்னு இருக்கு.
yahooல 135 mins னு இருக்கு.
exactஆ எம்புட்டு நேரம்னு சொல்லுங்க ப்ளீஸ்.
எனக்கு 6:05க்கு ஆரம்பிச்சு, 8:30க்கு முடிஞ்சுது. நடுவுல 10 நிமிஷம் இடைவேளை. ஸோ, 135mins இருந்துச்சு.
இன்னும் படம் பார்க்கலை
பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்
ஜமால், கண்டிப்பா சொல்லுங்க ;)
படம் நல்லா இருக்குற மதிரியும் தெரியுது...ஏதோ குறையுத மாதிரியும் தெரியுது..
அடிச்சு பிடிச்சு படம் பாத்துட்டு நீங்க பொலம்புறத பாத்து நான் மெதுவா பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
:)
நான்,
//படம் நல்லா இருக்குற மதிரியும் தெரியுது...ஏதோ குறையுத மாதிரியும் தெரியுது..//
ரெண்டுக்கும் நடுவுல இருக்கப் ப்டாது. யோசிச்சு ஒரு கருத்த பதிவா போட்டுடுங்க ;)
ஆ!இதழ்கள்,
//நீங்க பொலம்புறத பாத்து நான் மெதுவா பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.//
ஆ! அப்படி இருந்துடாதீங்க. என்ன இரூந்தாலும், மனுஷன் மெனக்கெட்டு இவ்ளோ வித்யாசமா எடுத்து நம்மளுக்குத் தரணுமேன்னு தந்திருக்காரு. அதுக்காகவாவது தியேட்டர்ல போயி உடனே பாத்துடுங்க.
கொடுத்த காசுக்கு பங்கம் வராது.
அதுக்கு ஆர்தர் வில்சனும், ராஜாவும் காரண்டி கொடுத்திடராங்க ;)
//பிச்சைப்பாத்திரம் பாட்டு அநேகமா ராஜாவே எழுதியிருக்கணும்.
'பிச்சைப் பாத்திரம் என் கையில், அதன் சூத்திரம் உன் கையில்' அது இதுன்னு ஏதோ சில்லரைத்தனமான வரிகள்.
//
படத்தை கடவுள் இன்னும் பாக்கலை, அதாவது நான் இன்னும் பார்க்கலை :) அதனால அதை பத்தி ஒன்னும் சொல்ல முடியாது. ஆனா இந்த பாடல் வரிகளைப் பத்தி சில புரிதல்கள் இருக்கு. அதை சொல்லிக்கலாம்னு நினைக்கிறேன்.
இந்த பாட்டு உண்மையில் இந்த படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இல்லை. 2003ஒ இல்லை 2004லியோ ராஜா இயற்றி இசையமைத்து வெளிவந்த "ராஜாவின் ரமணமாலை" அப்படீங்கற ஆல்பத்துல இருக்குற பாட்டை அப்படியே எடுத்து ஒரு ரெண்டு வரிகளை மட்டும் மாத்தி மது பாலகிருஷ்ணனைப் பாட வச்சி படத்துல சேர்த்துருக்காங்க.
"வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்" அப்படின்னு இந்த பாட்டுல வரும். இது ஒரு டோட்டல் சரெண்டர் பாடல். அதாவது பாடல் எழுதுன ராஜா ரமணரிடத்தில் டோட்டலா சரெண்டர் ஆகற மாதிரியான ஒரு பாடல். இதுக்கு முந்தின வரிகளோட சேர்த்து படிச்சீங்கன்னா மேல உள்ள வரிகளுக்கு அர்த்தம் புரியும்.
"பிண்டம் எனும் எலும்பொடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே" அப்படின்னு வரும்
எலும்பாலும் சதையாலும் நரம்பாலும் ரத்தத்தாலும் செய்யப்பட்ட உடம்பு என்னும் பிச்சைப் பாத்திரம் எடுத்துக் கொண்டு இந்த உலகில் வந்திருக்கிறேன். இந்த உடம்பை வைத்து என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அதாவது என் பிறப்பின் காரணத்தை நான் அறியேன். ஆனால் என் பிறவியின் பயன்/காரணம் அனைத்தும் நீ அறிவாய்...அதை தான் "அதன் சூத்திரம் உள்ளது உன்னிடத்தில்"னு சொல்லிருக்காரு.
"அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்" அப்படின்னு வரும்.
நான் வேண்டும் அனைத்து செல்வங்களும் உன்னிடத்தில் இருக்கிறது, ஆனால் இந்த உடம்பு என்னும் பிச்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு நான் பலவிடங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன் அப்படின்னும் சொல்லிருக்காரு.
இது முழுக்க முழுக்க என்னோட புரிதல் தான். அதனால் குற்றம் குறைகள் இருக்கலாம்.
"அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற" அப்படின்னு படத்தில் வரும் வரிகள்.
ரமணமாலையில்
"அருள் நிறையும் அருணையே ரமணர் என்னும் கருணையே
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற" அப்படின்னு வரும்.
ரமணமாலையில் இப்பாடலில் ராஜாவின் குரலில் "பிட்சை"ன்னு வரும். படத்தில் மது பாலகிருஷ்ணன் "பிச்சை"ன்னு பாடிருக்காரு.
கைப்புள்ள, நீங்க சொன்னதுக்கப்பரம், அந்த ஒரிஜினலின் மகத்துவம் புரீது.
ராஜா குரலில் நானும் அதை யூ.ட்யூப்ல கேட்ட ஞாபகம் இரூக்கு.
ஆனா, படத்துல, திருவோடு ஏந்திக்கிட்டு, உடல் ஊனமுற்றவர்கள் உண்மையாவே பிச்சை எடுக்கும்போது இந்தப் பாட்டு வரும்.
அந்த எடத்துல, பாத்திரம், சூத்திரம் எல்லாம் எடுபடலை என்பதே அடியேனின் கருத்து.
படத்தை பாத்துட்டு இதப் பத்தி கொஞ்சம் அலசி சொல்லுங்க.
பாடலின் மற்ற வரிகள் சூப்பர். குறிப்பா நீங்க சொன்ன இது
"பிண்டம் எனும் எலும்பொடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே"
ஆனாலும், ராஜா பெரிய பாடலாசிரியர் எல்லாம் இல்லை. தாளத்துக்கு ஏத்தமாதிரி எப்படியாவது கஷ்டப்பட்டு வார்த்தையை ரொப்பிடுவாரு. ஆனா, அவ்ளோ பன்ச் இருந்ததில்லை இதுவரை ;)
பாண்டித்துரை நன்றி!
பிச்சைப்பாத்திரம் பாட்டு இங்கே பாக்கலாம்.
நான் கடவுள் version - http://www.youtube.com/watch?v=-bwcOPGvwwA
original track - http://www.youtube.com/watch?v=jZtQirb1yIU
பாரா கிழிச்சு தோரணம் கட்டிட்டாரு,பாத்திங்களா?
ஏனோ,சில கருத்துக்கள் மேலும் சொன்னால் அவர் பக்கத்தில போகவே மாட்டேங்குது!
ஆர்யா தான் கடவுளாச்சே, அவர் எப்படி ரொம்ப நேரம் வருவாருண்ணு பாலா நினைச்சிருக்கலாம்
நான் இந்த படத்தை பாக்கும் போதும் க்ளைமேக்ஸ்ல ஏதோ கொஞ்சம் கட் ஆன மாதிரி இருந்திச்சு. அப்றொம் இண்டெர்னெட்ல பாக்கும் போது கட் ஆனதா நினைச்ச எல்லாமே இருந்திச்சு. எனக்கு ஒவ்வொரு frameமும் பிடித்திருந்தது.
ஆர்யா கொஞ்சம் நேரம் தான் வராரு, அதனால் சீக்கிரம் அவர ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணியிருக்கலாம்ன்னு சொல்றீங்க - இது ரொம்பச் சரி.
பூஜாவோட வெள்ளை லென்ஸ் மட்டும் தான் தனியா தெரிஞ்சிது.
அத தவிர படம் எனக்கு ரொம்பவே புடிச்சிருந்தது.
இன் ஃபேக்டு, முதல் தடவ பாக்கும் போது புடிக்காமல் போகலாம், மருபடியும் ஒரு முறை பாருங்க.
தசவதாரம் கூட உங்களுக்கு ரெண்டாவது முறை பாக்கும் போது தானே புடிச்சுது. மருபடியும் பாருங்க பாஸு.
நல்ல படம் தான். ரீசெண்டா வந்த atm, குருவி, பழனி, வில்லு, ஏகம் போன்ற குணச் சித்திர படங்கள விட இது ஆயிரம் மடங்க விட நல்லாத் தான் இருக்குங்க :-)
இது சென்சாரின் கத்திரியில் மாட்டிக்கொண்ட மற்றுமொரு திரைப்படம் என்று கேள்விப் பட்டேன்...
//ரொம்ப கொடுமைங்க பாலா சார் இது. மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்துட்டு ஒரு படத்தை இப்படியா அமெச்சூர்தனமா முடிக்கரது? //
உங்க வார்த்தைகள் தான் அமெச்சூர்தனமா இருக்கு... இவ்ளோ எடுத்தவர், அத கூடவா கவனிச்சிருக்க மாட்டாரு...அவசரப்பட்டு பேசிராதீங்க... சென்சாருக்கு முன்பு படம் எப்படி இருந்துச்சுன்னு ஜெயமோகன் சாரே சொன்னால் நல்லா இருக்கும்... பெரியவங்க யாரவது கேட்டு சொல்லுங்க...
karthick,
//உங்க வார்த்தைகள் தான் அமெச்சூர்தனமா இருக்கு... இவ்ளோ எடுத்தவர், அத கூடவா கவனிச்சிருக்க மாட்டாரு...அவசரப்பட்டு பேசிராதீங்க...//
I agree.
but, as a viewer, how will I know what the process is and who did what cuts?
The director is to be famed/blamed for the end product.
lets see if someone knows what really happened behind the scenes.
I still dont have a confirmation whether its my theater problem ;)
Truth,
///கொஞ்சம் கட் ஆன மாதிரி இருந்திச்சு. அப்றொம் இண்டெர்னெட்ல பாக்கும் போது கட் ஆனதா நினைச்ச எல்லாமே இருந்திச்சு. ///
Can you detail the scenes pls.
Danks!
;)
dear surveysan,
out of all the reviews , i read in internet yours coincided with my thoughts, like u rightly said there was no need for locking up arya for 3 yrs. most of the people are gogin with the crowd and praising this movie too much. i could even see one commenting that its good then kuruvi,atm,kuselan... its pity ppl are comparing naan kadavul with those movies and it shows their ignorance.
compare it with sethu and pithamagan .. and let them tell it was good than those two movies. u have pointed out the right mistakes in the movie. its a very prdinary movie from a good director. i dont want to say Bala a brilliant director because this is only 4th movie. there are thousand director who had given wonderful movie in quick span. "VEEDU" is one good example. what a movie from bala's guru Bala Mahendra. Bala has to go more...and the theme which he chose was good... but did the moral he said was good.. does he want to kill all those ppl...its not a big deal to just show poor peoples suffeirng... you have to come up with a decent solution oir accpetable solution for the people.he did not do anyhting. and one mroe thing... ppl are praising him as if he did this movie for free... infact he tries to exploit their suffering.... its a good attempt... but a very ordinary movie from a good director.
@survey
//but, as a viewer, how will I know what the process is and who did what cuts? //
if u r reviewing frm a ordinary individual's point of view, he or she may nt bother abt the cut or jump, they hardly notice... im not insulting an ordinary viewer but this remains the fact.... even after censor, c the amount of violence in the film, i hope in the climax it was more and hence the cut.. sometimes these problems are unavoidable ( tat too after the shoot)(but வாத்து close up போட்டு கரெக்ட் பண்ணிருக்கலாம்;)
//whether its my theater problem ;)//
in TN we hav an editor per theatre i.e. the operator or owner.. they use to chop off certain shots considering the length or from the audience response.. sadly, it happens without the director's concern.... ex: vaaranam aayiram..
Can one of you please enlighten me on the process behind censoring a movie?
if censor board cuts a few scenes, can the director re-shoot and get it re-censored?
or whatever comes out of the censor board is the final version of the movie?
either case, its pathetic, that some of the directors, cameraman, editors, music directors, etc.. etc... can't gauge what will get cut and what will not based on their experience.
We hav certain regulations based on "cinematograph act - 1952"
//if censor board cuts a few scenes, can the director re-shoot and get it re-censored? //
ya, can...
//what will get cut and what will not based on their experience.//
it depends on who is censoring the movie. hav u read sujatha's kanavu thozhirchalai?? even in that, ppl who r behind a certain film will ask for censors, like "konjam lightana officersa paarunga"... even, paruthi veeran got UA and on the first day, the climax scene was not much edited...
basically, censoring is kinda comedy here.
karthick,
so, if bala could have re-shooted the cut scenes and made the movie perfect, why didn't he?
so, i still blame him for sending us the amateurish cuts and the blunt ending ;)
mayavi,
i am glad we think alike ;)
எனக்கும் மத்தவங்க ஏன் இவ்ளோ ஏத்தறாங்கன்னு புரியவே இல்ல.
அவங்க, வேர எங்கையாவது uncut version பாத்திருப்பாங்களோன்னு சந்தேகம் வருது ;)
karthick, உங்கள நம்பி
பாலாவுக்கு ஒரு கடுதாசி போட்டாச்சு ;)
http://surveysan.blogspot.com/2009/02/blog-post_17.html
//why didn't he? //
ஏற்கனவே அங்க ஆர்யா கால்ஷீட் பிரச்சனை...
//உங்கள நம்பி
பாலாவுக்கு ஒரு கடுதாசி போட்டாச்சு ;)//
நான் எதுக்கும் பொறுப்பு இல்லை ;)
why did not he reshoot ? already he has screwed up ARYA .. he could not do more... and please tell the ppl who support the movie and music..was it the best from both the ppl... Illayaraja has given more masterclass music than this movie....i did not find something killing... in this music... you should see the scene in sethu where vikram sees the dead body of the heroine and ... he will walk..without answering anyone... and in illayaraja's voice u can hear the song...http://www.youtube.com/watch?v=75J1w-aE8HU
the BGM...and the song went very apt... it brings tears from ur eyes..without u knowing.. Illayaraja is a master in these situation.
I stand with your thoughts abt the movie, ppl who support.. just wanted to show themselves like intelectuals.
Request you to look at
my view @ http://naankadavul-sundar.blogspot.com
sundar, i did.
well written. but, you didnt touch the 'negatives' :)
சர்வே
வணக்கம் , தற்சமயம் இணையத்தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் பதிவுலகு பக்கம் வர முடிவதில்லை, விரைவில் ஆட்டத்துக்கு வருவேன்!நான் கடவுள் படம் எதிர்ப்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது சரியே.
கிட்டத்தட்ட பிதாமகன் சித்தனின் நீட்சியாகவே ஆர்யா பாத்திரம் அமைந்துள்ளது.நிலையாமை தத்துவத்தினை சொல்ல வந்து, பாதியில் அவரும் குழம்பி படம் பார்த்தவர்களையும் குழப்பி விட்டார் என்றே சொல்வேன்.மேலும் சொல்ல வந்த விஷயத்தில்தெளிவற்ற தன்மை உள்ளது.
காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள்வெகு சொற்பமே ஆனாலும் முழுக்க காசியில் எடுக்கப்பட்டதாக சொல்லி பில்ட் அப் கொடுத்தது ஏனோ? ஒரு வேளை தயாரிப்பு தரப்பிடம் அப்படி சொல்லி அதிகம் பணம் கறக்கவோ? இது போன்ற படத்திற்கு சுமார் 20 கோடி பட்ஜெட் மிக அதிகமே, படம் தயாரித்தவரும், வெளியிட்டவரும் வழக்கம் போல துண்டு/ஜமுக்காளம் தான் தலையில் போட்டுக்கொண்டார்கள்! பாலாவுக்கு பாராட்டுப்பத்திரம்!
பாலா பல கருத்துக்களை சப் டெக்ஸ்ட் ஆக இப்ப்படத்க்டில் சொல்லி இருப்பார்,
உ.ம்: அனுமன் வேடம் இட்ட பிச்சைக்காரருக்கு இரண்டு கால்களும் செயல் இழந்து இருக்கும், அனுமன் என்பவர் ஆற்றலின் குறியீடு, மலையையும் தூக்க வல்லவர், ஆனால் இயல்பு வாழ்க்கையில் பிச்சைக்காரருக்கு அவர் உடலை தூக்கவும் திராணி இல்லை! என்பதை குறியீடாக காட்டியிருப்பார்.
பூஜாவின் பாத்திரத்துக்கு கண் தெரியாது, கடைசிக்காட்சியில் இவ்வுலக துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை தரக்கோருவார்,மானிடர்கள் அகக்கண் மூடி இருப்பதால் மெய் அறிவு இல்லாமல் இவ்வுலகில் துன்பத்துக்கு ஆளாகிறார்கள், துன்பத்திலிருந்து மீட்சி என்பது மரணம் மட்டுமே என்பதனை சப் டெக்ஸ்ட் ஆகா கண் தெரியாத பிச்சைக்கார பாத்திரம் மூலம் காட்டியிருப்பார்.
குறைந்த செலவில் எடுத்திருந்தால் கையை சுடாமல் பேரும் கிடைத்திருக்கும்.
வவ்வால், நன்றி.
உங்க கருத்தும் என் கருத்தும் கிட்டத்தட்ட ஒத்துப்போவுது. மகிழ்ழ்ச்சி ;)
Unakkellam padam pakkiradikke thagudi illa......... adula Blog arambichu vimarchanam .......ngara perla kirukkaratha idoda niruthikkko........
Anbudan un nalam virumbi...........
praveen,
Nalla sonneenga.
ippavaavadhu enakku budhdhi varudhaannu paakkaren ;)
neenga vimarsanam pannaliyaa?
:)
Post a Comment