எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு படம் பாக்கப் போனா, ஓரளவுக்கு திருப்திகரமா படம் முடிஞ்சு வெளீல வரலாம்.
இந்தப் படத்துக்கும், ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம தான் போனேன் -- ஹ்ம், இல்ல இல்ல, இளையராஜாவின் இசையை பற்றிய ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல், ரெசூல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு பத்தியும் ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது.
மத்தபடி, மம்முட்டி என்ன பண்ணுவாரு, சரத் என்ன பண்னுவாரு, கேரளா காட்டுக்குள்ள எடுக்கப்பட்ட படம் எப்படி விஷுவலா இருக்கும்னெல்லாம் ஒரு முன் முடிவு இருந்தது.
ஆனா, படத்தை பார்த்துட்டு வெளீல வரும்போது ஒரு திருப்திகரமான பீலிங் கிடைக்கல்ல.
* ஒரு சீனுக்கு அடுத்த சீன் ஒரு கோர்வையில்லாமல், துண்டு துண்டா ஓடின மாதிரி இருந்தது. உப்புக்கு கூட அடுத்த சீனைப் பற்றிய எதிர்பார்ப்பே இல்லாத மாதிரி ஒரு ஸ்க்ரீன் ப்ளே. பக்கத்து சீட்டு மாம்ஸ் பாதி படத்துல தூங்கி வழிஞ்சாரு.
* பழசிராஜா, திப்புசுல்தான் காலகட்டத்தில், கேரளாவிலிருந்து, ஆங்கிலேயனுக்கு டார்ச்சர் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரராம். முடிவு சுலபமாய் யூகிக்க முடிந்த கதை என்பதால், கூடுதல் வரட்சி.
* ரெசூல் பூக்குட்டி - ஸ்லம்டாக் மில்லியனரின் ஆஸ்கார் வின்னர். பழசியில், ஒவ்வொரு காட்சியிலும், ஒலி ஈட்டி மாதிரி பாஞ்சு காதுல ஏறுது. மழை சீன்ல, உங்க தலை மேலயே இடி இடிக்கர மாதிரி விழுது. குதிரை ஓடினா, நம்ம கால் மேல ஓடர மாதிரி ஃபீல் வருது. ஆனா, எல்லாமே கொஞ்சம் ஓவர்டோஸா தெரீது. பூனை ஒண்ணூ சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடைல போய் எல்லாத்தையும் உருட்டி விட்ட மாதிரி ஒரே சத்தம். கத்தி ஃபைட்டெல்லாம் வந்தா, காதுல பஞ்சு வெச்சுக்கத் தோணுது. குடுத்த காசுக்கு வேலை செஞ்சுட்டாருபோல.
* படத்துக்கு செலவே இல்ல. காட்டுக்குள்ளையே எல்லா காட்சிகளையும் முடிச்சுட்டாங்க. ஹீரோ, ஹீரொயினுக்கெல்லாம் வேட்டியாலேயே ட்ரெஸ்ஸு. ஆங்கிலேயர்கள், கிலொக்கு ரெண்டு ரூவான்னு எங்கேருந்தோ புடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க போல. யாருக்கும் நடிப்பு வரல. அதிலும், டங்கன் பிரபு, காமெராவ பாத்து நடிக்கறாரு.
* இளையராஜா - ராஜா இஸ் out-dated. சலிப்புதான் வருது இவரின் 'சிம்ப்ஃபொனி' பேக்ரவுண்ட் கேட்க. 'குரு' படத்தில், வித்யாசமா இருந்தது. தொடர்ந்து எல்லா படத்துலையும் ஒரே தீம் வச்சு போட்டா எரிச்சலே மிச்சம். அதுவும், சில டயலாக் பேசும்போது, அடக்கி வாசிக்கணும். அங்கையும், வயலினையோ, எத்தையோ போட்டு இழைக்கிறாரு. நம்ம கவனம் செதருது. பாடல்கள் ஒண்ணும் ஒட்டலை. அல்லா பாட்டு தாளம் போட வைத்தது. ராஜா சார், think outside the box, please. உங்களை எந்தளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு பிடிக்காம போயிடும் போலருக்கே. (ஜோதா அக்பரில், ரஹ்மான் போட்ட தீம்-மூஜிக் ரொம்ப பிரபலம், அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணியிருக்கலாம். நா.ண.. நா.ண..)
* சரத்குமார் - அமக்களப் படுத்தியிருக்காரு. எனக்குத் தெரிஞ்சு, இவருதான் ஹீரோ. உண்மையான, எதார்த்தமான நடிப்பு. எல்லா காட்சியிலும் மிளிர்கிறார். கத்தி எடுத்து சொழட்டினா, அந்த வீச்சின் கனம் நமக்கே தெரியுது. அபாரமான, அலட்டலில்லா நடிப்பு.
* மம்முட்டி - இவருக்கு, இந்த மாதிரி ரோலெல்லாம், அல்வா சாப்பிடர மாதிரி. அதனாலேயோ என்னவோ, எனக்கு ஒண்ணும் பெருசா தெரீல. இவரு செய்யவேண்டிய வேலையெல்லாம் சரத்தே செஞ்சு முடிச்சடறாரு. ஸோ, இவரு அங்கங்க டம்மி ஆயிடறாரு. ஒரே ஒரு காட்சியில் மட்டும், ஒரு பெல்ட்டு வாளை, சட்னு உருவி, படார்னு பத்து பேரை சாய்ப்பாரு, அபாரம். மத்தபடி, நடை , உடை, பாவனை எல்லாம் அம்சம். இவரு, இதுக்கு மேலையே இன்னும் பல படங்களில் பண்ணியிருக்காரு.
* ஹீரோயின்ஸ் - ஓ.கே. குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னியும் தோணலை.
* வில்லன்ஸ் - சுமன் ஒரு வில்லன். அவர் வேலைய செஞ்சிருக்காரு. மத்த ப்ரிட்டிஷ் வில்லர்கள் எல்லாம், ரொம்பவே அமெச்சூர் தனம். அதிலும், தேவையில்லா காட்சிகள் நெறைய வருது, இவங்கள வச்சு. படத்தின் நீளத்தை நீட்டிய கொடுமை இவர்களையே சேரும்.
* மத்தது எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா தோணலை. சண்டைப் பயிற்சி சிறப்பா வந்திருக்கு. மேற்கூறிய சரவணா ஸ்டோர்ஸ் தொல்லையால், மனதுக்குள் பெருசா ஒட்டாமல் போனது. சரத்தும் சுமனும் போடும் சண்டை அம்சம். ஒளிப்பதுவும் அழகா பண்ணியிருக்காரு.
Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதிலிருந்த ஈர்ப்பு ஏன் இதிலில்லாமல் போனதுன்னு புரியல்ல. இன்னொருமுறை B.H பாத்துட்டு ஒரு அலசல் பதிவு போடறேன். பாத்தவங்க சொல்லுங்க.
பி.கு: நச் போட்டிக் கதைகளின் விமர்சனங்களும், நடுவர்களின் டாப்20 பட்டியலும் நாளை வெளியாகும்.
16 comments:
விருமாண்டிக்கு அடுத்து, ராஜா படம் எதுவும் நினைவில் நிக்கலையே?
உ.ஓசை தவிர ஏதாவது இருந்துதா?
கலைஞர் பத்தியும், கமல் பத்தியும் ஸ்டேஜ்ல வந்து பாடினாரு. அதுவும், நல்லால்ல. என்னதான் ஆச்சு இவருக்கு? :(
நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தலைவா...
நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தலைவா...
என்னம்மோ தெரியலை. படத்தை பார்த்தாலும் தமாசு. படத்தை பத்தின பதிவ படிச்சாலும் தமாசு.
நாஞ்சில் பிரதாப்,
என்னதான் குவாலிட்டியா எடுத்தாலும், பக்கத்து சீட் ஆளு தூங்கியாச்சுன்னா, படம் மொக்கைதான் பாஸு :)
சரவணகுமாரன்,
படம் பாத்துட்டீங்கன்னா, என் 'அலசல்' சரியாயிருக்கா இல்லை சொதப்பிட்டேனா? :)
அப்ப தமிழ்ல படம் அம்பேல் தானா தலைவா!
//Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதிலிருந்த ஈர்ப்பு ஏன் இதிலில்லாமல் போனதுன்னு புரியல்ல.//
ஏனென்றால் நீங்கள் ராபர்ட் புருசையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மங்கள் பாண்டையையும் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள்
\\கலைஞர் பத்தியும், கமல் பத்தியும் ஸ்டேஜ்ல வந்து பாடினாரு. அதுவும், நல்லால்ல. என்னதான் ஆச்சு இவருக்கு? :(\\
என்ன கொடுமை தல இது...;)))
நிகழ்ச்சியில பாடுறது கூட உங்களுக்கு பிடிச்சிக்கிற மாதிரி பாடனும் போல!! ;))
படத்தை இங்கு மலையாளத்தில் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல துண்டு துண்டா ஓடியது மாதிரி தான் இருக்கு..படம் ரொம்ப நீளம் (ஜெயமோகன் பதிவுல படிச்சிங்களா அவரு எழுதியிருக்காரு. தமிழ்ல ஓடுவது ரொம்ப கஷ்டமுன்னு))
மலையாளத்தை விட தமிழில் இன்னும் சில சீன்களை எடுத்துட்டாங்களாம்.ஒரு பாட்டு கூட
இப்படி பல பிரச்சனைகளை கடந்து என்னை தியோட்டாரில் உட்கார வச்சது இசைஞானியின் இசை மட்டுமே!
குருவுக்கும் இதுவும் ஜோடி போடுவது சரியில்லைன்னு எனக்கு படுது.
மத்தபடி நீங்கள் கஷ்டம் படும் அளவுக்கு இசைஞானியின் இசை இல்லை என்பதே என்னோட விமர்சனம்.
தொடருபவர் சதம் ஆனதற்கு என் நல்வாழ்த்துக்களை முதலில் சொல்லிக்கறேன்:)!
பட விமர்சனம் வழக்கம்போலவே அருமை.
பாஸ்கர், அம்பேல்னுதான் தோணுது.
Bruno sir,
///ஏனென்றால் நீங்கள் ராபர்ட் புருசையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மங்கள் பாண்டையையும் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள்
//
ஹ்ம். இருக்கலாம். இதுக்கு முன்னாடி ஒரு மம்முட்டி படம் இதே களத்துடன் வந்துது. வடக்கன் வீர கதா. அது அம்சமா இருந்துச்சு.
ஒரு 'திரைப்படம்' போல் இருந்தது. இது, சீன் டு சீன் தொடர்பில்லாமல் சுவாரஸ்யம் குறைந்ததால் வந்த வினைன்னு நெனைக்கறேன்.
கோபிநாத்,
////நிகழ்ச்சியில பாடுறது கூட உங்களுக்கு பிடிச்சிக்கிற மாதிரி பாடனும் போல!! ;))////
அப்படியில்ல தல. அவரோட லெவலுக்கு, இப்படி அல்பத்தனமா இருக்கரது சுத்த சொதப்பல்.
எரிச்சல்தான் வருது, அதெல்லாம் பாத்தா.
////இப்படி பல பிரச்சனைகளை கடந்து என்னை தியோட்டாரில் உட்கார வச்சது இசைஞானியின் இசை மட்டுமே!
////
யோசிச்சு பாத்து சொல்லுங்க, எந்த சீன் மீஜிக் உங்களை ரசிக்க வச்சுதுன்னு?
பொடீர்னு நிக்கர மாதிரி ஒண்ணும் நினைவுக்கு வரலை.
விருமாண்டியில் எல்லாம் பின்னி பெடல எடுத்திருப்பாரு ராசா.
ராமலக்ஷ்மி, நன்னி :)
இந்த நன்னாளிலே, 100ஆவது ஃபாலோயருக்கும் அதர்கு முந்தைய 99 ஃபாலோயர்ஸ்களுக்கும் என் நன்றி கலந்த வணககத்தை சொல்லிக்கறேன் ;)
’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும் உங்களுக்கு ‘பழசி ராஜா’ மொக்கைப் படமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. மாற்றுப் பார்வை என்ற பெயரில், படத்தை கிழித்து தொங்கப் போடுவது என்னவோ பதிவர்களின் பொழுது போக்கு ஆகிவிட்டது. உங்களின் ‘நான் கடவுள்’ விமர்சனத்தைப் பார்த்தேன். அதற்கு எதிர்வினை ஆற்றவே எனக்கு ஒரு பதிவு தேவைப் படும். இந்த பதிவு உங்கள் கருத்து தான். அதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. ஆனாலும், குறையை நாசூக்காக சொல்லத் தெரியவில்லை எனில் எதற்கு விமர்சனம் எழுத வேண்டும்...
ப்ரசன்னா,
/////’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும் உங்களுக்கு ‘பழசி ராஜா’ மொக்கைப் படமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.///////
ப்ரேவ் ஹார்ட், காவியம்னெல்லாம் நான் சொல்லலையே. அதிலிருந்த ஒரு ஈர்ப்பு இதிலில்லாமல் போன குறையை மட்டுமே சொல்லியீருக்கிறேன். திரைப்படம் என்பது, காட்சி-டு-காட்சி ஒரு எதிர்பார்ப்போடு நகர வேண்டாமா?
////மாற்றுப் பார்வை என்ற பெயரில், படத்தை கிழித்து தொங்கப் போடுவது என்னவோ பதிவர்களின் பொழுது போக்கு ஆகிவிட்டது./////
கிழித்துத் தொங்கப் போடவேண்டும் என்று எண்ணி எழுதவில்லை இதை. உள்ளதை உள்ளப்படி, தோன்றியதை தோன்றியபடி எழுதுவதே என் வழக்கம்.
///////உங்களின் ‘நான் கடவுள்’ விமர்சனத்தைப் பார்த்தேன். அதற்கு எதிர்வினை ஆற்றவே எனக்கு ஒரு பதிவு தேவைப் படும்.////
:) பதிவைப் போடுங்க. அப்பதான், எல்லாரோட ரசனையும் விருப்பு வெறுப்புக்களும் தெரிய வரும். அடுத்த படம் எடுக்கும்போது, பாலாவும், இதையெல்லாம் இன்புட்டா வச்சுக்கிட்டு எடுப்பாரு.
/////இந்த பதிவு உங்கள் கருத்து தான். அதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. ஆனாலும், குறையை நாசூக்காக சொல்லத் தெரியவில்லை எனில் எதற்கு விமர்சனம் எழுத வேண்டும்.../////
யாரை திருப்தி படுத்த நாசூக்கா எழுதணும்னு நெனைக்கறீங்க? நல்ல விஷயமிருந்தால், அப்பட்டமா சொல்ற மாதிரி, குறைகளையும், உள்ளது உள்ளபடி சொல்றதுதானே சரி?
- உங்களுக்கு பழசிராஜா, போரடிக்காத நல்ல படமா இருந்துச்சா?
- காது கிழியர ஃபீலிங் வரலியா சில காட்சிகளில்?
- தேவையில்லாத இடங்களில், ராஜாவின் இசை இம்சை பண்ணலியா?
- 'சுந்தரி கண்னால் ஒரு சேதி' மற்றும் 'குரு', டைப் பப்பரபப்பா இசை எல்லா காட்சீயிலும் ஒரு அலுப்பை தரலியா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
Post a Comment