நம் பதிவர் ஒருவர் வாழ்க்கையின் அடுத்த அத்யாயத்திற்க்கு தயாராகிறார்.
திருமணம் எனும் இன்றியமையாத வாழ்வியல் தளத்தில் காலெடுத்து வைக்க இருக்கிறார்.
ஏற்கனவே காலெடுத்து வச்சு, கால் வலிக்க நடக்கும் பெருந்தகைகள் பலபேரு இருப்பீங்க. எல்லாரும் ஆளுக்கொரு ஃப்ரீ அட்வைஸு எடுத்து வுட்டீங்கன்னா, கபால்னு பிடிச்சு நம் பதிவரும், தன் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவாரு.
[ அவர் யாருங்கர விஷயம், நான் சொல்லலாமான்னு தெரியல்ல.
யார் யாரையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்காருங்கர விஷயம் தெரியாததால், அடக்கி வாசிக்கறேன். யாராவது, பின்னூட்டத்தில் லீக் பண்ணா, கொம்பேனி பொறுப்பில்லை :) ]
ஃப்ரீ அட்வைஸை நானே ஆரம்பிச்சு வைக்கறேன்.
எனக்கும் இப்படி ஒரு விஷயம் சில பல வருஷங்களுக்கு முன் நடந்தேறிய போது, அந்த பொன்னான நாளிலே, என் நண்பன் எனக்கு ஒரு அருள் வாக்கு சொன்னான்.
பெரிய தில்லாலங்கடி அவன். பிஸினஸு மாக்னெட்டு, சர்ச்சு ஃபாதர், குடும்பஸ்தன், எக்ஸட்ரா, எக்ஸட்ரா...
அவன் சொன்னான், "மச்சி, நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.
கல்யாணம் ஆனதும், மொதல் ஆறு மாசம், பொண்டாட்டி சொல்றதை அப்படியே கேட்டு, அவளை ராணி மாதிரி வச்சுக்கோ. அப்படி செஞ்சீன்னியாக்கா, அடுத்த அறுவது வருஷம், உன்ன ராஜா மாதிரி பாத்துப்பா.
மொத ஆறு மாசத்துல, எத்தையாவது சொதப்புனா, அடுத்த அறுவது வருஷம், சிரமம்தேனப்பு." அப்டீன்னான்.
நான் சொன்னேன், "டேய், போடா சும்மா அளக்காத. வாழ்க்கைன்னா அப்டீ இப்டீ இருக்கணும்டா, அதுதான் லைவா இருக்கும்னு".
அவனும், 'பிதாசுதன் பரிசுத்த ஆவி கூட ஒன்ன இனி காப்பாத்த முடியாது'ன்னு தண்ணி தெளிச்சுட்டு போயிட்டான்.
அப்படியே, அவன் சொன்ன ஆறு மாச டெக்னிக்கை, லூசுல விட்டுட்டேன்.
அதுக்கு இன்னும் அனுபவிச்சுக்கினு இருக்கேன்.. ( ஹிஹி.. சும்மா டமாசு தங்க்ஸ், கைல கெடைக்கறதெல்லாம் தூக்கி என் மேல போடாதப்பா. என் ஒடம்பு தாங்குமா?..ஓ ப்ளீஸ்...யம்மா... )
திருமண நாள் காணவிருக்கும், இணைய இளவலே, இதனால் நான் கொடுக்கும் அட்வைஸு என்னவென்றால், ஆறு மாசமோ, ஒரு வருஷமோ, ஒம்போது வருஷமோ, ராணியார் திருப்திப் படும் வரை, 'ராணி' மாதிரி பாத்துக்கப்பூ. அப்ப மீச்சம் மீதியிருக்கர, அறுபது வருஷமோ, எழுபது வருஷமோ, நீ ராஜா மாதிரி இல்லன்னாலும், அட்லீஸ்ட் ஒரு கணக்குப்பிள்ளை ரேஞ்சுக்காவது மருவாதையுடன் வாழலாம் ;)
ராஜாமார்களும், ராணிமார்களும், கணக்குப்பிள்ளைகளும், கைப்பிள்ளைகளும், எடுத்து விடுங்க, ஃப்ரீ அட்வைஸு. டாங்க்ஸு!
ஹாப்பி வெள்ளி!
8 comments:
real mokkai post..there is nothing.
நம்ம அட்வைஸ்:
என்ன ஆனாலும் பரவாயில்லே.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க.
:)))) அவுக வருங்கால மனைவிக்கு ஹஸ்பண்டாலஜி லிங்கை மட்டும் அனுப்பி வெக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.
ஏதோ என்னால முடிஞ்சது.
நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. [இதை என் மனைவியின் அனுமதியோடுதான் சொல்கிறேன்.......:))))]
மாறுதலுக்கு சற்று சீரியஸாக கூற விரும்புகிறேன்.
என் அனுபவத்திலிருந்து ஒன்றைச் சொல்கிறேன்.
எனக்கு திருமணமானதும், என் மனைவி என்னிடம் கேட்ட முதல் கேள்வி :"உங்கள் சம்பளம் என்ன?"
என் பதில் (கேள்வி): "எவ்வளவு இருந்தால் செலவைச் சமாளிப்பாய்?"
மனைவி : ஐந்தாயிரம் (இது 1999 ல்)
என் பதில் : "வரும்"
ஏன் இப்படி சொன்னேன் என்றால், (உண்மை சம்பளம் பத்தாயிரம் என்றாலும்), என் மனைவி எவ்வளவு எதிர் பார்கிறார் என்பதை வைத்து அவர் செலவழிப்ப்பவரா, சிக்கனவாதியா என்பதை அறிய ஓர் ஆவல்.
அந்த மாதத்து சம்பள கவரை என் மனைவியிடம் தான் கொடுத்தேன் என்பது கொசுறு தகவல்.
இது போக,
முதல் ஆறு மாதத்தில் எந்த அளவுக்கு நம்முடைய கொள்கை இதுதான், நாம் இப்படித்தான் இருப்போம் என்பதை உணர்த்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நமது இல்லத்துணையும் உதவியாக இருப்பார்கள் என்பது எனது கருத்து.
நம்மால் முடிந்தவரை, நமது வீட்டாரை அரவணைப்பது போல், அவர்களது வீட்டாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
இன்று வரை மகிழ்ச்சியான இல்வாழ்க்கை நடத்தி வருகிறேன் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
(நினைவுகளை அசை போட உதவியதற்கு நன்றி.)
பெ.சொ.வி,
///இன்று வரை மகிழ்ச்சியான இல்வாழ்க்கை நடத்தி வருகிறேன் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.///
மெத்த மகிழ்ச்சி :)
நன்றீஸ்!
செ.ரவி,
////real mokkai post..there is nothing.///
இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ;)
இளா,
///கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க.///
:) வை ப்ளட்? ஸேம் ப்ளட்!
புதுகை தென்றல்,
லிங்கை கொடுங்க, பலருக்கும் உதவியா இருக்கும் :)
//ஹஸ்பண்டாலஜி லிங்கை மட்டும் அனுப்பி வெக்கலாம்னு ///
Post a Comment