recent posts...

Wednesday, January 31, 2007

நேயர் விருப்பம் சர்வே3 - ஐயர், தேவர், நாயக்கர், குயவர், கள்வர், டர், புர், சர்

நேயர் விருப்ப சர்வேக்களின் பாப்புலாரிட்டி, பிச்சிக்கிட்டு போவுது.

இதோ அடுத்த தலை போகும் சந்தேகத்தை தீர்க்க ஒரு சர்வே. ( அனுப்பிய நேயர் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், அவர் பெயர் இரகசியமாக வைக்கப்படும் ).

அதாவது, இணையத்தில் இப்பொழுதைய சூடான டாபிக், சாதீயம்/மதம் சம்பந்தப்பட்டது.
ஒரு கூட்டம் சாதி வேண்டும், இருக்கட்டும் என்று பிளிறுகிறது, இன்னொரு கூட்டம் சாதி பேசரவன உலக்கையால் அடி என்கிறது.

நேயர் என்ன சொல்றார்னா "மக்களுக்குள் ஏற்றத் தாழ்வை எற்படுத்தி விட்ட இந்த சாதீய அடையாளம் வழக்கத்திலிருந்து ஒழியணும்.
கொஞ்சம் கொஞ்சமா, நான் ஐயர், ஐயங்கார், தேவர், நாடார், நாயக்கர், டர், புர், சர் என்றெல்லாம் சொல்லும் வழக்கம் ஒழிந்தால் தான், நம்மில் இருக்கும் இந்த GAP குறைந்து நல்லிணக்கம் உருவாக வழி அமையும்.
அதுக்காக, பூநூல் போடாதே, நாமம் போடாதே, பொட்டு வைக்காதே என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். கலாச்சார அடையாளங்கள் போக வேண்டாமே?"


(என்னது? போகணுமா? நான் பார்ப்பானா? அடப்பாவமே, நான் நல்லா 'பாப்பேன்' ஆனால், பார்ப்பான் இல்ல ப்ரதர்ஸ், என்ன வுட்ருங்க)

நீங்க என்ன நெனைக்கறீங்க? வாக்கைப் பதியுங்க!



விளம்பரம்: சிறந்த புகைப்பட வித்தவர் - போட்டி - விண்ணப்பிக்க கடைசி நாள் Feb 3rd 2007

.

Tuesday, January 30, 2007

Windows Vista launch & demonstration - Bill Gates

 
Windows vista launch - includes speech by Bill Gates, Steve Ballmer, a nice demo by Mike Seivert and more...

Vista does look impressive!




பி.கு: சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி

.

சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி

(பாரதிராஜா குரலில் படிக்கவும்)
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
என் அன்பு தமிழ் மக்களே, வணக்கம்!

அமெரிக்காவில் ஓடித்திருந்து வாழ்ந்து கொண்டிருந்த இந்த சர்வேசன், தன் காமிரா பார்வையில் க்ளிக்கி படம் பிடித்ததை உங்கள் பார்வைக்கு படையலாக்கினான்.
படங்களை பார்த்து திக்குமுக்காடிப்போன அன்பு உள்ளங்கள் சிலர், தங்களுக்கும் காமிரா கண் இருப்பதை சர்வேசனிடம் நவின்றார்கள்.
அந்த அன்பு உள்ளங்களின் கலைப் படையல்களை வைத்து காவியம் படைக்க வருகிறது, 'சர்வேசனின் - சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி'.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
:)

அதாகப்பட்டது, மேட்டர் இதாங்க.

நம் பதிவர்கள் மத்தியில் இருக்கும் கலைத் திறனை தட்டி எழுப்ப ஒரு போட்டி வைக்கலாம்னு இருக்கேன்.

போட்டி: சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி (for amateurs)
தலைப்பு: வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு.

rule1: இந்த மூணையும் வச்சு ஒரு அழகான போடோ எடுக்கோணும். படத்துல மூணு ஐட்டமும் கண்டிப்பா இருக்கணும். வேறு எந்த ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது. எந்த ஜாதி/கலர்ல வேணா காய choose பண்ணிக்கலாம். காய் கட் பண்ணியும் இருக்கலாம், முழுசாவும் இருக்கலாம்.

rule2: மூன்று காய்களும் ஒன்றாக assemble செய்து, ஒரே frameல் க்ளிக்கி இருக்க வேண்டும். நிஜக் காய்கறிகள் உபயோகிக்கணும். (download செய்ததாய் இருக்கக் கூடாது). Adobe போன்றதை உபயோகித்து stitching செய்திருக்கக் கூடாது. Adobe போன்ற editing software உபயோகித்து சின்ன சின்ன டச்சிங் ( Originality போகாத அளவில்) செய்யலாம்.

rule3: உங்க பெயர் படத்தில் தெரியக் கூடாது. please don't add borders, if possible.

rule4: ஒருவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.

rule5: போட்டிக்கு அனுப்பும் படத்தை போட்டி வாக்கெடுப்பு முடியும் வரை வேறு எங்கும் வெளியிடக்கூடாது (no vote campaigning allowed :) ). Use your imagination. No other limitations.

பெயர் பதிவு செய்து கொள்ள கடைசி நாள்: Feb 3, 2007. (முதல் 25 விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்). போட்டியில் பங்கு பெற விரும்புவோர் பின்னூட்டம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். No anonys, sorry.
புகைப்படம் அனுப்ப கடைசி நாள்: Feb 11, 2007. படத்தை zip செய்து surveysan2005@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
வாக்கெடுப்பு: Feb 12 to Feb 19, 2007.
பரிசு: பின்னர் அறிவிக்கப்படும். based on number of participants (If anybody wants to sponsor a prize, let me know :) ). இம்முறையும், ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பணம் செலவு செய்ய முயற்ச்சிக்கலாம்.

இதுக்கு மூவர்/நடுவர் குழுவெல்லாம் கிடையாது. மக்கள்ஸே வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும் புகைப்படமே வெற்றி பெறும். எந்த புகைபடம் யார் அனுப்பியது என்பது போட்டியின் முடிவில் மட்டுமே அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்றவர், அவர் சொந்தமாக எடுத்த புகைப்படம் என்பதை prove செய்ய வேண்டும். பதிவர்களில் மூவர் குழு ஒன்று, அவர் இல்லத்திர்க்கு flying visit அடித்து, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு படத்தில் இருப்பது போல் இருக்கிறதா என்று verify செய்ய வேண்டும். Flying-visit verification தினம் வரை, காய்களை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, புகைப்பட வித்தகரின் பொறுப்பு - ஹி ஹி ஹி. சும்மா, just kidding. அதெல்லாம் வேணாம். நம்பிக்கையே வாழ்க்கை!!! :)

ஓ.கே தானே?

ஏன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு? சும்மா, அதான் எல்லாருக்கும் ஈசியா கெடைக்கும். வேற ஐடியா இருந்தா சொல்லுங்க அடுத்த தடவ தூள் கெளப்பிடலாம்.

உங்கள் கணவன்/மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து மண்டையை குடைந்து ஒரு நல்ல படம் க்ளிக்கி அனுப்புங்க பாக்கலாம். ஜமாய்ங்க!

இதோ சும்மா ஒரு சேம்பிள்:



என்ன நெனைக்கறீங்க இந்த போட்டியப் பத்தி?




பொன்ஸ் மாதிரி நல்லுள்ளங்கள், வழக்கம் போல் ஒரு இலவச வெளம்பரம் கொடுத்தா நன்னாருக்கும்!!!

:)

கோதாவில் இறங்கி இருப்பவர்கள்:
1. anamika
2. செந்தழல் ரவி
3. நெல்லை சிவா
4. A n&
5. வெற்றி
6. k4karthik
7. Prince Ennares Periyar.S
8. பெருசு
9. சிறில் அலெக்ஸ்
10. Boston Bala
11. பிருந்தன்
12. சோத்துக்கட்சி
13. மாதங்கி
14. Radha Sriram
15. பொன்ஸ்
16. Appaavi
17. லட்சுமி
18. சு.கிருபா ஷங்கர்
19. Jeeves
20. காஞ்சி பிலிம்ஸ்
21. Aparnaa
22. ஒப்பாரி
23. Kohilavani Karthikeyan
24. ராமச்சந்திரன் உஷா
25. Shakthi

Sponsors:
1. Surveysan
2. கடலோடி Baranee

.

Monday, January 29, 2007

சர்வே-சன் - புகைப்பட ஆல்பம்...

A few pictures taken during my vacation trips. Taken using a cheap digital camera 'Canon S410'.
Hope you ensoy the padams!

ஆரம்பத்தில் digital camera மீது ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தது.

என்ன இருந்தாலும், 35mm film போட்டு lense சொழட்டி சொழட்டி Nikon ல எடுக்கர மாதிரி ஒரு திருப்தி இல்ல. ஆனால், இப்ப வேற வழி தெரியல.

அவசர யுகத்தில், இப்பெல்லாம் ( செலவைக் குறைக்கும் ) digital camera தான் அதிகம் உபயோகப் படுது.

Nikon உபயோகப் படுத்தாமல் மெல்ல துரு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

(கருப்பு பொட்டியில் க்ளிக்கி, எலியை படத்தின் அடியில் கொண்டுபோனால், படங்களின் index தெரியும்)

பி.கு: சில low resolution camera phone ல் எடுத்த படங்களும் சேத்தாச்சு.


அடிக்கடி வாங்க, இன்னும் நெறைய இருக்கு. தூசு தட்டி எடுத்து போடறேன்.

சிறந்த புகைப்படப் போட்டி வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு.. ஒழுங்கா நடத்த முடியுமா நம்ம கோஷ்டீஸ் கிட்ட?

.

Sunday, January 28, 2007

நேயர் விருப்பம் சர்வே2 - சாய் பாபாவும், கருணாநிதியும், நீங்களும், நானும்..

முதல் நேயர் விருப்ப சர்வேயின் அமோக வெற்றியைக் கண்டு, "ஆஹா நம் சந்தேகத்தை போக்க இப்படி ஒரு வழி இருக்கா", என்று துள்ளிக் குதித்து ஒடி வந்த பதிவர் ஒருவர் தனக்காக ஒரு சர்வே போட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

சர்வே கமிட்டில form fiல் அp பண்ணிக் குடுத்து, அப்ரூவல் வாங்கியாச்சு.

அதாகப்பட்டது, நமது மதிப்புக்குரிய முதல்வர் கருணாநிதி அவர்களை, பெரு மதிப்புர்க்கிரிய சாய் பாபா அவர்கள் சமீபத்தில் சந்தித்து 200 கோடியை கொடுத்ததும் அல்லாமல், மாய மோதிரம் எல்லாம் "அண்டாகாகசம், அபூகாகசம்" சொல்லி வரவழைத்துக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

நமது வலையுலகிலும், சாய் பாபா அவர்கள், மோதிரம், விபூதி, செயின், லிங்கம் எல்லாம் எப்படி manufacture பண்ணி, எப்படி distribute பண்ணி டிஸ்கி விடுகிறார் என்று விலாவாரியாக பல பதிவர்களும் பதிவிட்டார்கள்.
எதிர் அணித் தலைவரும், சற்றே மனம் தளராமல், தன் சார்பாக, முடவர்கள் நடக்கும், கண் பார்வையற்றவர்கள் பார்வை பெறும் நாடக விழாவை தலைமை ஏற்று நடத்தும் திருவாளர்.தினகரனின் டிஸ்கியையும் விலாவாரியாக பதிவிட்டார்.

அதெல்லாம் சரிதான். இப்ப கேள்வி என்னன்னா, சாய்பாபா ~ கருணாநிதி மீட்டிங்/கோடி/டிஸ்கி/mrs.கருணாநிதி காலில் விழுந்தது/துரைமுருகன் மோதிரம்/தயாநிதி மோதிரம்2, இதெல்லாம் நடந்த பிறகு, நம் பதிவுலக வாசகர்களின் மனநிலை என்ன?

யோசிச்சு வாக்குங்க:

நன்றி. ( யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. புண்பட்டால், burnol போடவும். oops, i mean, மன்னிக்கவும்)




பி.கு1: என் தனிப்பட்ட அபிப்ராயம். சாய் பாபாவை பொறுத்த வரையில், அவர் நிறுவி இருக்கும் அரக்கட்டளையின் சார்பாக பலருக்கு நன்மை விளைவதாகவே தெரிகிறது. சிலருக்கு அப்பப்போ தீமை விளைவதாகவும் செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய ஸ்தாபனத்தில் சின்ன சின்ன cracks இருக்கத்தான் செய்யும். விபூதி, மோதிரம், லிங்கம் எல்லாம் 25 வருடத்திர்க்கு முன் கூட்டம் சேர்க்க செய்திருக்கலாம்.
அதை இந்த விஞ்ஞான உலகில் slow-motion camera முன்னிலையில் தொடரத்தான் வேண்டுமா? அதை தவிர்க்கலாம். சிறு பிள்ளைத்தனம். இல்ல, உண்மையாவே மக்களை ஏமாற்றும் எண்ணமா?

உண்மையான 'சாய் டிவோடி' யாராவது இந்த டிஸ்கி விடுவதர்க்கு என்ன காரணம் என்று, சீரியஸாக எடுத்து சொன்னால் நன்றாயிருக்கும்.

எனக்குத் தெரிந்த காரணம், ஆரம்பித்தில் கும்பல்/பக்தர் சேர்க்க செய்ததாயிருக்கும். ஏசு பிரானும், தண்ணீரின் மேல் நடந்ததாக படித்திருக்கிறேன் - Is that to prove a point? தெரிஞ்சா சொல்லுங்க.

பி.கு2: request அனுப்பிய பதிவர் அவர்களே, $200 மணி ஆர்டர் அனுப்பி வச்சுடுங்க agreement படி :)

Tuesday, January 23, 2007

நேயர் விருப்பம் சர்வே - கடவுளா? பகுத்தறிவா?.. வந்து குத்துங்க சாமிகளா!!

ரொம்ப பில்டப் ( அதாவது, வர வர ரொம்ப பொறுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. ஊர் மக்களுக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் தீத்து வைக்கலன்னா தூக்கம் வர மாட்ரது. நம்ம சர்வேய நம்பி லைப் சேஞ்சிங்க் டெஸிஷன் எல்லாம் எடுக்கராங்க்ய. டோட்டலா உலகமே மாறுது போங்க... சரி சரி பில்டப் ஸ்டாப் ) எல்லாம் கொடுக்காம நேரா மேட்டருக்கு வரேன் :)

இன்றைய தினங்களில் பதிவுலகில் நாம் காணும் பெரும் சர்ச்சை சாதீயக் குழுக்களும், பகுத்தறிவுப் பட்டரைகளும், ஆன்மீக வாதிகளும், நடுநிலை பித்தர்களும் போட்டுக் கொள்ளும் தீராச் சண்டை.

மேலே உள்ள கோஷ்டிகள் இப்படி அடித்துக் கொள்வதால், நல்ல பல கருத்துக்களும் சுவையான பதிவுகளும் வெளியில் வராமல் தினம் ஒரு தாக்கு ரேஞ்சுக்கு எழுதி டைம் வேஸ்ட் பண்றாங்க என்று நம் நேயர் ஆதங்கப்பட்டு நம்ம கிட்ட வந்தார்.

"சர்வேசா எல்லாரும் இப்படி அடிச்சுக்கராங்களே, இந்த கோஷ்டிகளுக்குள்ள இருக்கர ஒவ்வொரு பதிவரின் உண்மையான மனநிலை என்ன - உண்மையாகவே இவர்கள் கொள்கையில் பிடிப்புள்ளவர்களா, இல்ல சும்மா டைம் பாஸா. படிக்க வர மத்த ஜனங்கள் எல்லாம் எந்த கோஷ்டியை சேர்ந்தவர்கள். இதை கண்டுபிடித்து கூறு" என்று கேட்டுக்கொண்டு ஒற்றைக் காலில் தவமிருக்கிறார் நண்பர்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்கி, என் பிஸி ஸ்கெட்யூலிலும் ஒரு சர்வே. யோசித்து மண்டைய கொடஞ்சு, நிதானமா உங்க வாக்க கீழ குத்துங்க டியர் கோஷ்டீஸ் :)



பி.கு1: அந்த நேயர் யாரா? ரொம்ப பிரபலமான ஆளு.
தல, உங்க பேர சொல்லிடலாமா? வேணாம்னா சஸ்பென்ஸாவே இருக்கும். உங்க இஷ்டம்!

பி.கு2: அப்படியே, அடுத்த சர்வேக்கு ஐடியா சொல்லிட்டு போங்களேன். தேங்க்ஸ்!

பி.கு3: அப்படியே, இதுக்கு ஒரு ஓ.சி வெளம்பரம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்! ஆண்டவன் அருள் கிட்டும்! :)

Sunday, January 21, 2007

அமெரிக்காவை கலக்கி வரும் ice storm புகைப்படங்கள் சில...

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாய் பனிப்புயல் (winter/ice storm) வீசி வருகிறது.

சில மாநிலங்களில் இந்த பனிப்புயல் பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஆரஞ்சு (citrus) பழங்கள் எல்லாம் பனியில் உறைந்து போய் விட்டன. இதனால் பல விவசாயிகள் பெறும் இன்னலுக்கு ஆளாயிருக்கின்றார்களாம்.

என்னமோ போங்க. எப்படிங்க இந்த குளிர்ல எல்லாம் வாழ முடியுது?

கோடி $ கொட்டிக் குடுத்தாலும் இந்த மாதிரி எடத்துல போய் இருப்பீங்களா என்ன? :)

ஐயோ பாவம்! படத்த பாத்தாலே வெட வெடன்னு குளிருது.

(யாருய்யா அங்க சூடா ஒரு டீ சொல்லு.)













(க்ளிக் த படம் டு சீ மோர் படம்ஸ் இன் சி.என்.என்)
(Click the picture to see more pictures in CNN.com)

(survey இல்லாம இன்னொரு பதிவும் போட்டாச்சு.. அப்பாடி.. உள்ளங்கை தான் பர பரன்னு அரிக்குது.. ஒண்ணு போட்ரவமா? ஷில்பா ஷெட்டிய வச்சு ஒண்ணு போடலாம்.. உம். வேணாம்ல? :) )

பி.கு: திருட்டு CD / VCD / DVD / MP3 Songs / Survey ல வாக்கு போட்டாச்சா? அதுல சில பேர் 'சாமி/மம்மி சத்தியமா இது வரைக்கும் திருட்டு CD வாங்கியதே இல்ல'ன்னு அடிச்சு சொல்லி இருக்காங்க. அவங்கள பத்தி தகவல் தெரிஞ்சவங்க சொன்னீங்கன்னா,ஆந்த கணவான்களுக்கு ஏதாவது அவார்ட் தரலாம்னு இருக்கேன் :) -- வாக்களிக்க/முடிவுகள் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

-SurveySan

Thursday, January 18, 2007

திருட்டு CD/VCD/DVD/MP3 வியாதியும், நமது மூதாதையரும்.




© © ©

இன்று நாளிதழில் படித்த செய்தி - சென்னையில் "Moser Baer" என்ற நிறுவனம், 34 ரூபாய்க்கு DVDக்களும், 28 ருபாய்க்கு CDக்களும் விற்பனை செய்கிறார்களாம்.

இப்படி குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம், கள்ளச் சந்தையில் புழங்கும் திருட்டு CD/VCD/DVDக்களை மக்கள் வாங்காமல் Original copy வாங்குவார்களாம்.

என்னதான் சட்ட திட்டங்கள் ஏற்றி anti-piracy கெடுபிடி செய்தாலும், நம் மக்கள் ருசி கண்ட பூனைகள். சந்து பொந்தில் எல்லாம் புகுந்து அடி மாட்டு விலையில் கிடைக்கும் கள்ளச் சந்தை பொருளை வாங்காமல் இருந்ததில்லை.

தேவா முதல், ஸ்ரீகாந்த் தேவா வரை யார் இசை அமைத்தாலும் ஓடிச் சென்று MP3க்களை download செய்யும் கள்வர்கள் நம்மில் மிகையானவர்கள். (என்னது இல்லியா? நெஞ்சத் தொட்டு சொல்லு ராசா).

சரி, இப்படி அடி மாட்டு விலைக்கு இசைத் தட்டுக்கள், திரைப்பட DVDகள் கிடைத்தாலும், நாம் திருந்தி விடுவோமா என்ன?
28 ரூபாய்க்கு Original கிடைக்குது சரி. 10 ரூபாய்க்கு திருட்டு DVD கிடைத்தால் நம்மாளு அதை அல்லவா வாங்குவான்?

இந்த கயமை, ஊழல், திருட்டு வழி, சுலப வழி, நம் இரத்தத்தில் ஊறியல்லவா இருக்கு? அவ்வளவு சுலபத்தில் மாறுமா? மாறுவோமா? மாறவிடுவோமா?

அதுவே இன்றைய சர்வே. யோசித்து வாக்களியுங்கள்.

நல்லதா எதாவது கருத்தையும் பின்னூடுங்கள்.




Originalஐ ஆதிரிப்போம். Duplicateஐ ஒதுக்குவோம்! ஜெய்ஹிந்த்!

Saturday, January 13, 2007

Guru - Movie Review



குரு படம் நேற்றுதான் பார்த்தேன்.

படம் பற்றிய ஆங்கில விமர்சனம் இங்கே.

இது முதல் ரெவ்யூ முயற்சி,
குறை குற்றங்கள் இருந்தா சொல்லுங்க.



நன்றி!

சர்வே-சன்

Friday, January 12, 2007

ViVaதகளம் - ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் உதவிக்கு வரவும்.

வாங்க வாங்க. மனதை வாட்டும் ஒரு பெருத்த சந்தேகம் வந்தது. அதை நிவர்த்தி செய்து வைக்கவே அனைவருக்கும் இந்த அழைப்பு.

இதற்கு முந்தைய பதிவில் ( பாவம்யா பாவம் ) மனிதனால் மிருகங்கள் படும் அவஸ்தை பற்றி சொல்லி இருந்தேன்.

நானும் ஒழுங்கல்ல - அசைவ உணவிர்க்காக உயிரினங்கள் கொல்லப்படுவதர்க்கு காரணமாய் இருப்பவந்தான். அது தவிர leather shoe, leather belt என்றும் சில கொலைகளுக்கு காரணமாய் இருக்கிறேன்.

அசைவம் உண்ணப் படுவதால் விலங்கினங்கள் கொல்லப்பட்டு, அதன் மிச்சம் shoe செய்யப் பயன் படுகிறது என்று ஒருவரின் வாதம் இருந்தது.
( என் கணிப்பு, leather industry மற்றவர் உண்டதின் மிச்சத்தை கொண்டு செயல்படுவது அல்ல. அவர்களின் தேவையால்தான் அதிகப்படியான கொலைகள் நடக்கின்றதோ?)

1) so, if we are not directly driving the killings and only seek indirect benefits from the killing, is it Ok????

இந்துக் கடவுள்களும், சாமியார்களும் மிருகத்தின் தோலை அணிந்தும் அதன் மேல் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.
ஏசு பிரானும், முகமது நபியும் கூட ஆடுகளை உண்டதாக கதைகள் உண்டு.
இது தவிர இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் ஆடு மாடுகளை பலி இடுவது என்ற சம்பிரதாயம் ஆண்டாண்டு காலமாகவும் நடந்து வருகிறது.

2) கடவுளும் கடவுளின் தூதர்களும் இதை செய்யும் போது, சாமானியர்கள் நாம் செய்வதில் பிழை என்ன உள்ளது?


யாராவது மேலே உள்ள இரண்டு கேள்விக்கும் பின்னூடுங்களேன்.

நன்றி!

-சர்வே-சன்

Thursday, January 11, 2007

அடப்பாவமே, போதுங்கய்யா விட்டுடுங்க பாவம்யா பாவம்!



மனிதனின் பல தேவைகளுக்காக பறவைகள், மிருகங்களை கொன்று குவித்து வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஒரு பதிவில் (பெயர் குறிப்பிடலை. ஏன்னா பதிவு எல்லோரும் பார்த்து ஜீரணிக்கக் கூடிய ரகம் அல்ல) சொகுசு மேலாடை தயாரிக்க ஏதோ ஒரு பிராணியை தூக்கிப் பிடித்து, தரையில் அதன் தலையை அடித்து கொல்கிறார்கள். பாதி உயிர் பிரிந்த நிலையிலேயே அதன் தோலை ஆடை தயாரிப்பதர்க்காக உரித்து எடுக்கிறார்கள்.
மகா கொடுமையான காட்சிகள்.

பார்க்கும் போது மனது கனமாகிவிட்டது.

அடப்பாவிகளா, அப்படி என்னடா அந்த ஜாக்கெட்ட போட்டுக்கிட்டு கிழிக்கப் போறீங்கன்னு தோணிச்சு.

ஆனால், என் தேவைக்காகக் கூட சில மிருகங்கள் கொல்லப் பட்டுதான் வருகின்றன.

சிக்கன் பிரியாணிக்கு - கோழி
மட்டன் குர்மாக்கு - ஆடு
செருப்பு, (shoe)ஷூ தயாரிக்க - மாடு
fish fry - மீன்
purse - மாடு, பாம்பு, உடும்பு, மான் இன்னும் என்னென்ன பிராணிகளோ
இன்னும் எனக்கே தெரியாமல் பல.

அந்த படத்தை பார்த்து வருந்திய சில நிமிடங்களில் இனி பிராணிகளுக்கு நம்மாலான உபத்திரவம் வரக்கூடாது என்று தோன்றியது.
ஆனால், மேலே குறிப்பிட்ட கோழி, ஆடு, மீன் இதெல்லாம் 'மொத்தமாக' விட்டு விடுவேன் என்றும் தோணலை.

நீங்க எப்படி? (என்னது வீடியோ எங்கவா. அதெல்லாம் நீங்களே தேடிப் பாத்துக்கங்க. நம்ம பதிவுல அதை ஏற்றும் மனம் இல்லை - அதை பதித்த பதிவருக்கு நன்றி. அத பாத்து சில பேர் திருந்த வாய்ப்பிருக்கு)

இன்னிக்கு விஷயம் இதுதான்.
நம் சுயநல தேவைகளுக்காக இப்படி உயிரினங்கள் வதைக்கப் படுதே, இது சரியா?
இந்த வதைக்கப்படுதலுக்கு நீங்களும் காரணம்தான். atleast, ஒரு லெதர் ஷூவோ, ஒரு லெதர் பர்ஸோ உங்க கிட்ட இல்லாமலா இருக்கு?

இந்த புத்தாண்டில், உங்களால் எந்த விலங்கினத்துக்கும் பாதிப்பு வராது என்ற உத்திரவாதம் தர முடியுமா?

வோட்டு போடுங்க கீழ. அப்படியே ஒரு பின்னூட்டம் போட்டு உங்க கேரண்டியயோ (guaranty), மறுப்பையோ பதிவு பண்ணிடுங்க. நன்றி!

(நல்ல காரணங்களோட யாராவது சிக்கன், மீன் சாப்பிடறதெல்லாம் தவறில்லைன்னு போடுங்கப்பா. கொஞ்சம் ஆறுதலா இருக்கும் எனக்கு).

இனி லெதர் ஷூ, லெதர் பெல்ட், லெதர் பர்ஸ் வாங்குவதில்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். என்னாலானது இவ்வளவுதான் :)

Tuesday, January 09, 2007

இந்த பாட்டு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்க...

நண்பர் வீட்ல விருந்து போன வாரம்.

Channel மாத்திட்டே இருக்கும் போது சூர்யா டி.வி ல நேத்து எதேச்சயா இந்த பாட்டு வந்தது
ஒரு சிரி கண்டால் அது மதி, இது மதினு பாட்டு சூப்பரா இருந்தது.
(அதாவது, ஒரு smile இருந்தா போதுமாம்).

கேக்கும்போதே இது கண்டிப்பா நம்ம ராசா தான் போட்டிருக்கணும்னு தோணிச்சு.

நேரம் கிடைக்கும்போது தேடிப்பிடிச்சு அலசினா ராசாவேதான். படம் பேரு Ponmudipuzhayorathu (2005).

ஆனால் இதுல ராஜாவின் ஏதோ ஓரு தமிழ் பாடலின் தாக்கம் இருக்கர மாதிரி தோணுது.
என்ன பாட்டுன்னு தெரியல.

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

Monday, January 08, 2007

அழகான சர்வேசனின் இல்லம்... (recently shot)

கடந்த வருடத்தில் கண்ட ஒரு நல்ல திருத்தலம் உங்கள் பார்வைக்காக கீழே தொகுத்துள்ளேன்.

வழக்கம் போல இது எங்க கீதுனு யாராவது கரீட்டா தப்பா சொல்லுங்கோ பாக்கலாம்.
(டிப்ஸ்: இந்த ஊர்ல இருந்துதான் பிச்சுக்கினு போனவங்ககிட்ட பேசி தாஜாவா திரும்ப இட்டுக்கினு வருவாங்க. அப்பப்ப சொதப்பவும் செய்வாங்க. இங்க செய்றதெல்லாம் பீலானு ஒரு கும்பல் இன்னும் சொல்லிக்கினு கீதுபா. ஆனால், நான் பாத்த வரைக்கும் பீலா மாரி தெரீல).

(இதற்கு முன்னிட்ட பதிவில் இருந்தது ராமகிரிஷ்ணா மடம், தெ.கலிபோர்னியாவில் உள்ளது)

(ரியல்) சர்வேசன் வாழும் இல்லம் இது.
நம்ம வூடெல்லாம் படம் எடுத்து போட்டா, குண்டோடு காத்திருக்கும் அ.மு.க வினர் நாஸ்தி பண்ணிருவாங்கிய).

படம் பிடித்தல் எனக்குப் பிடிக்கும். நீங்க யாராவது expert இருந்தீங்கன்னா கீழே உள்ள படத்தை விமர்சனம் செய்யுங்களேன். அப்படியே கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க, எப்படி நல்லா எடுக்கணும்னு. நன்றி!

படங்கள் அனைத்தும் ஒரு cheap digital camera ல எடுத்ததுதான். ( canon s410 ).

படத்தின் மேல் க்ளிக்கினா பெருசா தெரியும்:











Sunday, January 07, 2007

எலே, திரும்ப வருவியா மாட்டியா ? (சர்வே)

நம்மில் பலர் மேற்படிப்புக்காக அயல் நாடுகளுக்குச் சென்று, கல்வி முடிந்தவுடன் அங்கேயே வேலைக்கும் சென்று 'செட்டில்' ஆனவர்கள்.
இன்னும் சிலர் வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு சென்று தங்கி விட்டவர்கள்.

மேலே உள்ள இரு தரப்பினரும் வெளிநாட்டைத் தேடிச்சென்ற நோக்கம் ஒன்று தான் - சொந்த ஊரில் சுலபத்தில் கிடைக்காத 'quality life' தேடிப்பிடித்து அடைவதே அது.

வெளிநாட்டுக்குச் செல்லும் option கிடைக்காத/விரும்பாத கூட்டமும் ஊரில் உண்டு. விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போதெல்லாம், இந்த கூட்டத்தினரும், சொந்த குடும்பத்தினரும் 'எப்படா மொத்தமா விட்டுட்டு வரப்போற. போறும்டா' என்று அங்கலாய்ப்பார்கள்.

முதல் முறை புறப்படும்போது, உயிர் நண்பர்களிடம், "மச்சி ரெண்டு வருஷம் ட்ரை பண்ணிட்டு திரும்பி வந்துடறேன்டா. வூட்ட பாத்துக்கோடா" என்று கண்ணீர் மல்க சொன்னவர்கள், இரண்டு வருடம் முடிந்ததும், "மச்சி அடுத்த வருஷம் வந்துடலாம்னு இருக்கேண்டா. project பாதில இருக்கு. வுட்டுட்டு வரமுடியாது" என்று டபாய்ப்பார்கள்.

இதைத்தான் X+1 syndrome என்று நாமகரணம் சூட்டி நம்மாட்கள் வருடா வருடம் கொண்டாடுகிறார்கள்.

வருடங்கள் கணக்கு வைத்து சிலர், லட்சங்கள் கணக்கு வைத்து சிலர்.
"10 லட்சம் சேத்துட்டு கெளம்பி வந்துடறேண்டா" என்று அரம்பித்து, பத்து இருபதாகி, இருபது ஐம்பதாகி, லட்சம் கோடியானாலும் திரும்ப மாட்டார்கள் இந்த சிலர்.

இந்தத் திரும்பா மனத்திர்க்கு முக்கிய காரணம் என்னவாயிருக்கும்? Its entirely based on the individual. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணங்கள்.

சொன்னபடி திரும்பி போனவர்களும் உண்டு (நெம்ப கம்மி ஆனால் :) )

திரும்பிப் போகாமல் இங்கேயே 'extensions' போடச் செய்வது எது?
எனக்குத் தெரிந்த பட்டியல்:
1) பணம் பணம் பணம்
2) Quality of life
3) சொந்த ஊரில் பணம் கிடைத்தாலும், இங்கிருப்பது போன்ற 'சுலப' வாழ்க்கை இல்லை.

பட்டியல் போட்டு காரணத்தை கண்டுபிடிக்கத் தான் நினைத்தேன். since its based on individual, I can possibly not include all options. அதனால், உங்கள் காரணங்களை பின்னூடுங்கள்.

சர்வே இல்லாமல் பதிவு போட முடியாது (police பிடிச்சிடும் :) ).
அதனால், இன்றைய சர்வே கீழே. நன்றாக யோசித்து வாக்களியுங்கள்:




நன்றி! அப்படியே, வெளம்பரம் போட்டு நண்பர்களையும் படிச்சு வாக்களிக்கச் சொல்லுங்க.


labels: return to india; more dollars; quality of life;

Thursday, January 04, 2007

ஒரு நிமிஷத்துக்கு 1 1/2 லட்சமா? யப்பா!

புது வருடத்தை வரவேற்று குத்தாட்டம் ஆட மல்லிகா ஷெராவத்துக்கு Marriott நிறுவனம் பல லகரங்களை வாரி இறைத்திருக்கிறதாம்.
வ்லை தளத்தில் கிடைத்த தகவலின் படி 75 லட்சங்கள், 45 நிமிட ஆட்டத்துக்கு அளிக்கப் பட்டதாம்.

ஆட்டத்தை கண்டு களிக்க நம் கணவான்கள், சில ஆயிரங்களை வாரி வழங்கினார்களாம்.

ஹ்ம். நல்லா இருந்தா சரி.

45 நிமிடம் வியர்வை சொட்ட சொட்ட உழைத்துத்தான் இந்த லகரங்களை பெற்றுள்ளார், அதனால் வவுத்தெரிச்சல் படத் தேவை இல்லை என்பதை சக பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியர்கள் உடன் ஆடினார் என்றும் செய்தி இருந்தது, ஆனால் வலையில் நான் கண்ட சக-ஆட்டக்காரர்கள், நம்மூர் கந்தசாமி, முனுசாமி போல் தான் இருந்தார்கள். :)

இது இப்படி இருக்க, நம்மூர் சிகாமணிகள், சன் தொலைக்காட்சியில், சின்னத்திரை serial-killers எல்லாரையும் சேர்த்து ஒரு குத்தாட்டம் அரங்கேற்றினார்கள்.

புது வருடத்தை கொண்டாடுவதில் தவறில்லை - ஆனால், நம் கலாச்சாரச் சின்னமான, பொங்கல் திருநாள், தீபாவளி போன்ற பண்டிகைகள் அன்று இந்த அளவு கொண்டாட்டம் காணப்படுவதில்லையே?

"என்னங்க தீபாவளிக்கு வெடி வெடிக்கலையா?" என்று கேட்டால் "யாரும் இப்பெல்லாம் வெடிக்கரது இல்ல தம்பி" என்று பதில்.

பொங்கலுக்கு கரும்பு வாங்குவது கூட பலர் வீட்டில் இல்லாமல் போனது.

கலாச்சாரச் சின்னங்கள் out-of-fashion ஆவதும், புதியன (குத்தாட்டம்) புகுவதும் உலக நியதியா?

சைனாவிலும், சிங்கப்பூரிலும் - Chinese new year, ஐரோப்பாவில் - Harvest festival, Christmas அமெரிக்காவில் - halloween, Christmas போன்ற அவரவர் கலாச்சார சின்னங்கள் கொண்டாடப் பட்டுதான் வருகின்றன.

நாம் தான் வழுக்குகிறோம்.

வழுவாமல் இருக்க என்ன செய்வது ?

என்னால் முடிந்தது ஒரு சர்வே போடுவது. போட்டுட்டன்.