'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன்.
கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான்.
பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள்.
பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர்.
கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல்லுடைக்கும் ஒரு தந்தை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இப்படிப்பட்ட குடும்ப சூழல்.
சின்ன வயசிலேருந்தே இவங்கள்ளாம் நண்பர்கள் என்பதும், இவங்களுக்குள் ரொம்ப இருக்கமான நட்பு இருக்கு என்பதும், இதுக்குள்ள காதல் கீதல் எல்லாம் பத்திக்காது என்பதும், படம் ஆரம்பித்த 10 நிமிஷத்துலயே அழகா புரிய வைக்கறாரு டைரக்டர்.
இவங்ளுக்குள்ள இருக்கர ஆழமான நட்ப பாக்கும்போது, பெரிய ஏக்கம், நம்ம மனசுக்குள்ள உருவாகுது. நம்மளும் படிச்சோம், நண்பர்கள் எல்லாம் இருந்தாங்க, ஆனா இந்த மாதிரி 'உயிர்' தோழமை இல்லன்னே நெனைக்கறேன்.
எல்லாம் புதுமுக இளசுகள். என்னமா நடிச்சிருக்காங்க.
அதுவும், 'கயல்' என்ற பெயரில் வரும் அந்த பெண், அப்படியே வாழ்ந்திருக்காங்க.
மதுரை 'ஸ்லாங்' பேசும், காமெடியினும் (ரமேஷ்), நல்லா கலக்கியிருக்காரு. ஆனா, அவரு அப்படி வேணும்னே பேசர மாதிரி ஒரு நெருடல். நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு.
ஹீரோ-முத்து. நல்ல யதார்த்த நடிப்பு. ஓட்டப்பந்தைய வீரரா வராரு.
இந்த கிராமத்து நண்பர்களின் இடையில், வெள்ளை-வெளேர் பெங்களூரு பைங்கிளி(ஷோபனா) ஒண்ணும் புதுசா சேராங்க. ஆரம்பத்தில் தனியா இருந்தாலும், இவர்களின் நட்பு வளையத்துக்குள் அந்த பொண்ணும் ஐக்கியமாகும்.
சும்மா சொல்லக் கூடாது. சில முகங்கள் பார்த்தவுடன் நமக்கு ரொம்பவே பிடிச்சுப் போகும். அந்த வகை முகம் நம்ம ஹீரோயினுக்கு. விரசமில்லா அழகு முகம்.
அப்பரம் என்ன, ஹீரோக்கும் இந்த பொண்ண புடிக்கும். பொண்ணுக்கும் ஹீரோவ பிடிக்கும். ஆனா, நண்பர்களுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்கன்னு ரெண்டு பேரும் குழப்பத்தில் இருப்பாங்க.
இடையில், ஹீரோயின், ஹீரோவ பாக்க, கல் குவாரி இருக்கும் ஒரு எடத்துக்கு போற மாதிரி சீன்.
அந்த எடம் பாக்கும்போதும், அங்க வேலை செய்யர மக்கள பாக்கும்போதும், ஒரு நிமிஷம், நம்ம மனசு கனமாயிடுது. எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு, ஒரு வேள சாப்பாட்டுக்கு?
ஹீரோவோட தங்கச்சியா வர பொண்ணு, ரெண்டு நிமிஷம்தான் வராங்க. அடேங்கப்பா, என்ன யதார்த்தமா பேசராங்க.
"நானும் படிச்சேன். ஆனா, அண்ணன படிக்க வெக்கணும்னு என்ன நிறுத்திட்டாரு எங்கப்பா".
"லாரியில போக சொல்லோ கீழ வீந்து எங்கம்மா செத்து போச்சு"ன்னு சொல்லும்.
படத்தோட ரொம்ப ஒன்றிப்போயிட்டீங்கன்னா, மனச அறுத்துடும் காட்சியமைப்பு.
எந்த காட்சியும் ஒரு தொய்வில்லாமல் அழகா நகருது.
பாடல்கள்? இசை ஜோஷ்வா ஸ்ரீதர். காதல் அளவுக்கு பாடல்களில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
ஜூலைப் பாட்டு முணுமுணுக்க வைத்தது.
ஹீரோ ஹீரோயின் காதல், வெளியில் தெரியும் தருணம், ஆஹா அழகா முடியப் போகுதுடா படம்னு, ஜாலியானா, ஒரு நினைச்சே பாக்காத திருப்பத்த உள்ள கொண்டுவராரு கதையில.
அதுக்கப்பரம் என்ன?
இந்த நட்பு வளையத்தில் பின்னிப் பிணைந்து, பயணமாகும் நாம், இந்த திடீர் திருப்பத்தால் திக்குமுக்காடி போய், படம் முடிந்தும் எழுந்து வெளியில் நகர முடியாமல், பெயர் போட்டு முடியும் வரை அமைதியா ஒக்காந்து ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருக்கோம்.
கல்லூரி - அருமையான படம். குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ஒரு நெளிவு சுளிவில்லாமல் பார்க்கக்கூடிய அற்புதப் படம்.
'காதல்' அளவுக்கு இருக்கா?
அது வேறு கதைக் களம், இது வேறு கதைக் களம்.
அது அருமை. இதுவும் அருமை!
கண்டிப்பா பாருங்க!
பாலாஜி ஷக்திவேல், இதே மாதிரி, மனதைத் தொடும் படங்களைத் தொடர்ந்து கொடுங்கள்.
செலவும் கம்மி, உங்க பேரும் நெலச்சு நிக்கும்.
:)
20 comments:
சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.
வெளங்கிடும்.
இந்த படம் நல்லா ஓடுதா? தெரிஞ்சவங்க சொல்லுங்க.
நான் பார்த்த வரையில் படம் மிக யதார்த்தமாக நன்றாகவே இருந்தது. கிளைமேக்ஸ் கொஞ்சம் தொய்வுதான். காட்சியமைப்புகளிலும், யதார்த்தமான அனுகுமுறையிலும் கவனம் செலுத்திய இயக்குநர், ஆங்காங்கே சிறுகதைகள் போல் திரைக்கதையை அமைத்திருக்கிற மாதிரி ஒரு உணர்வு. எல்லாம் சேர்ந்து ஒரு வெற்றிகரமான திரைக்கதையாக பரிமளிக்கவில்லையோ என்று ஒரு சின்ன நெருடல்.
மற்றபடி நடிக நடிகையரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது.
//SurveySan said...
சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.
வெளங்கிடும்.//
தல
எதுக்கு டென்ஷன்? சன்டீவிக்கு பிடிக்காதவங்க படமே அதுல வராது தெரியும்ல?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
சர்வேசன்
கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. :)
//சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.
வெளங்கிடும்.//
அழகிய தமிழ் மகன் முதல் இடத்துல இல்லையா?? சன் டிவிக்கு என்னாச்சு? :)))
Sridhar Venkat,
///காட்சியமைப்புகளிலும், யதார்த்தமான அனுகுமுறையிலும் கவனம் செலுத்திய இயக்குநர், ஆங்காங்கே சிறுகதைகள் போல் திரைக்கதையை அமைத்திருக்கிற மாதிரி ஒரு உணர்வு. எல்லாம் சேர்ந்து ஒரு வெற்றிகரமான திரைக்கதையாக பரிமளிக்கவில்லையோ என்று ஒரு சின்ன நெருடல்.///
எனக்கு கதை போரடிக்காம நகர்ந்த மாதிரி உணர்வு.
ரொம்ப இன்வால்வ் ஆனதால கூட இருக்கலாம். :)
ஸ்ரீதர் வெங்கட் சொன்னது போல இடையில் சிறுகதை இருந்தால் என்ன தவறு?
கதைக்கே சம்பந்தமில்லாத ஒட்டுக் காமெடிகளையும், சண்டைக் காட்சிகளையும், வெளிநாட்டு பாடல் காட்சிகளையும் சகித்துக் கொள்ளும் போது இதை ரசித்தால் என்ன தப்பு?
புதுவிதமா முயற்சி பண்னக் கூட விடமாட்டாங்களே!
:)
கானா பிரபா,
//எதுக்கு டென்ஷன்? சன்டீவிக்கு பிடிக்காதவங்க படமே அதுல வராது தெரியும்ல?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//
என்னங்க பண்றது. அ.த.ம எல்லாம் 10க்குள்ள விடறதே தப்பு. அப்பவாவது, அந்த மாதிரி படங்கள் வரது குறையும்.
ஆனா, சிலருக்கு அ.த.மனும் பிடிக்கும் போல. என்னத்த சொல்ல.
ஒவ்வொண்ணும் ஒரு விதம் :)
கப்பி,
//காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை//
அப்படியா சொல்றீங்க?
அந்த கதை களம் எடுத்துக்கிட்டு தைரியமா களத்தில் இறங்கினதுக்கே அவருக்கு அவார்டு கொடுக்கலாம்.
அந்த நிகழ்ச்சிக்கு, இவ்வளவு அழுத்தமா ஒரு கதை பின்னி, பாதிக்கப்பட்டவர்களின் வலிய நல்லாவே உணர்த்தியிருக்காரு என்பது என் எண்ணம்.
ய்தார்த்தம் தான் அவர் பலம். அந்த விதத்தில் என்னை ஏமாற்றவில்லை ;)
VSK,
//கதைக்கே சம்பந்தமில்லாத ஒட்டுக் காமெடிகளையும், சண்டைக் காட்சிகளையும், வெளிநாட்டு பாடல் காட்சிகளையும் சகித்துக் கொள்ளும் போது இதை ரசித்தால் என்ன தப்பு?//
தப்பே இல்ல.
அவர், சிறுகதை மாதிரின்னு எதை சொல்றாருன்னு எனக்கு புரியல.
எனக்குத் தெரின்ஞ்சு, எல்லாமே படத்துக்கு தேவையானதா இருந்தமாதிரிதான் தோணிச்சு.
அப்படியே இருந்தாலும், தொய்வில்லாம, இருந்தன, சிறுகதைகள் எல்லாமே.
ரசனைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
:)
ultimate movie...
anony,
//ultimate movie...//
I agree!
மாதவன் படம் கூடத்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்க!
அதையும் பார்த்திட்டு எழுதுங்களேன்!
:))
VSK,
//அதையும் பார்த்திட்டு எழுதுங்களேன்!
:))//
அதையும் பாத்தாச்சு. ஆனா, கல்லூரி பாத்ததும், எழுதணும்னு தோணிச்சு, எ.ஒருவன் பாத்ததும் அப்படி தோணல.
எவனோ ஒருவனும், சிம்பிளா எடுக்கறேன்னு எடுக்கப்பட்ட படம்.
ஆனா, அந்தக் கதைக் கருக்கு கொஞ்சமாவது செலவு பண்ணியிருக்கணும். 'ய்தார்த்தமெல்லாம்' எடுபடல.
படம் முழுக்க ஒரே வரட்சி.
கொஞ்சம் இழுவையாவும் இருந்தது.
ஒரு தரம் பாக்கலாம்.
1. கல்லூரி
2. பொல்லாதவன்
3. எ.ஒருவன்
..
..
998. வேல் (பாக்கல)
999. அ.த.ம
:)
அனானி, படத்தின் சஸ்பென்ஸை உடைக்கும் பின்னூட்டத்த தூக்கிட்டேன். சாரி! :)
ultimate movie NOT
good movie YES
//ultimate movie NOT
good movie YES//
I agree.
சஸ்பென்ஸ் ஒடைக்க வேணாம்னு ஒரு விஷயம் சொல்லாம விட்டிருந்தேன்.
பாத்தா, மத்த விமர்சகர்கள் எல்லாரும் டமால் டமால்னு ஒடச்சிட்டாங்க.
அடாவது, அந்த க்ளைமாக்ஸ் விஷயம், பஸ் எரிப்பு. அத தருமபுரியில் நடந்ததாய் காட்டாமல், எங்கோஆந்திராவில் நடந்ததாய் காட்டியிருப்பது, சுத்தா கோழைத்தனம்.
அதனாலயே, அது ரொம்ப, சப்னு இருந்துது.
ஷேம் ஆன் யூ, பாலாஜி ஷக்திவேல் & ஷங்கர்!
கல்லூரி படத்தை சன் டிவியில் பார்த்தேன். சர்வேஸ். உங்களுக்குச் சிரிப்பா இருக்கலா, 2007 படத்தை 2009ல பார்த்ததா நான் சொல்றது. என் டைம் அப்படி:)
எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஆண்திராவில அமைச்சா என்ன, தமிழ்நாடில அமைச்சா என்ன கொடுமை கொடுமைதானே. பெண் குழந்தைகள் கருகினது உண்மை. அந்தப் படம் எடுத்துட்டு, அது சென்சார்ல இந்த ஒரு காட்சிக்காக மாட்டிக் கொண்டால் நமக்குப் படமே வந்திருக்காதும்மா.
வல்லி மேடம், எப்ப பாத்தா என்ன?
நல்ல படத்தை மிஸ் பண்ணா இருந்தீங்களே, அதுவே சந்தோஷம் ;)
Post a Comment