recent posts...

Wednesday, December 12, 2007

என் பூக்கள் சில...

'தமிழில் புகைப்படக் கலை'யின் டிசம்பர் மாதப் புகைப்பட போட்டியின் தலைப்பு 'பூக்கள்'.
அறிவிப்பும், இதுவரை வந்துள்ள படங்களும் இங்க பாருங்க. இதுவரை படங்களை அனுப்பாதவங்க அனுப்புங்க.
மக்கள்ஸ்,வழக்கம் போல கலக்கியிருக்காங்க!

இதுக்காக, நானும் சில பூக்கள 'சுடலாம்னு' (போட்டிக்கல்ல) வெளியில பொட்டியும் கையுமா அலஞ்சா, ஒரு பூவையும் சுத்துவட்டாரத்துல காணும். எல்லா மரமும், மொட்டையா போச்சு. இலையுதிர்காலத்தின் முழு வீச்சு நேத்துதான் இருந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த இலைகளும் கொட்டி மொட்டையாயிடுச்சு.

சரி, ஆத்திர அவசரத்துக்கு பாவமில்லன்னு, கைவசம் இருக்கும் சில படங்களை, படையலாக்குகிறேன் :)


இது என்ன பூன்னு எனக்கு தெரியல. உங்களுக்கு தெரியுமா?

இதுவும் என்ன பூன்னு தெரியல. சிம்பிளா இருந்தாலும், எனக்கு ரொம்பவே பிடிச்சது இது. நேர்லயும் அழகு, படத்துலயும் அந்த பச்சை எடுப்பா அழகு சேக்குதுன்னு நெனைக்கறேன்.

இது தெரியும். சூரியகாந்தி. தேனீ நெஜம். ஒட்டினது இல்ல ;)


இது கொஞ்சம் காயர நெலமைல இருந்தது. தண்ணி தெளிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோ?

அழகிகள்

இது சத்தியமா காஞ்ச மொளகா இல்ல!


படங்கள் நல்லாருக்கா?
குறை நிறைகளை சொல்லிட்டுப் போங்க நண்பர்களே!
நன்றி!

:)

பி.கு1: (வெற்றியின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கிலீஷில்லாம, சுத்த தமிழில் ஒரு பதிவு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, கை நடுங்குதுங்கோ சாமிகளா! :) ஆமா, டிசம்பர் தமிழ்ல எப்படி அடிக்கரது? மார்கழியா? :) )

பி.கு2: 'நச்'னு ஒரு கதைப் போட்டியில், 30 பேர் ஆட்டையில் இதுவரை. நீங்களும் கதை எழுதலாமே? முயற்சி பண்ணுங்க (நல்ல வேள, $25னு ஒரு உயர்-எல்லைய சொல்லியிருந்தேன், இல்லன்னா :) ) கதைகள் படிக்கவும், கலந்துக்கவும், இங்க க்ளிக்குங்கஅமுக்குங்க.

பி.கு3: ஒன்றுக்கு மேற்பட்ட கதையை இதுவரை எழுதியுள்ளவர்கள், எந்தக் கதை போட்டிக் கதை என்பதை, போட்டி கடைசி நாளான, டிசம்பர் 23க்குள் சொல்லிவிடவும். ஒரு பின்னூட்டமாக சொல்லலாம் அல்லது, கதைக்கு 'சர்வேசன் நச் போட்டிக் கதை'ன்னு 'tag' வச்சிடுங்க.

அனைவருக்கும் நன்றி!

8 comments:

குசும்பன் said...

படங்கள் நல்லாருக்கா?
குறை நிறைகளை சொல்லிட்டுப் போங்க நண்பர்களே!
நன்றி!///

இங்க நீங்க போட்டோவை அப்லோட் செய்து இருக்கும் வலைதளம் தடை செய்யபட்ட ஒன்று அதனால் அதில் இருந்து புகைபடம் எதுவும் வரவில்லை.

இருந்தாலும் அனைத்து புகைபடங்களும் அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கலக்கிட்டிங்க என்று வழக்கமான பின்னூட்டத்தோடு முடிச்சுக்கிறேன்.:)))

SurveySan said...

போட்டியில் நான் கலந்துக்குல. ஆசிரியர் குழுவில் இருப்பதால், நாங்கெல்லாம், மீசையில் மண் ஒட்டாம தப்பிக்க, ஒதுங்கியே இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம் ;)

flickr.com தட்டி செய்யப்பட்டிருக்கா? அடக் கடவுளே.
வேற எத விட்டு வச்சிருக்காங்க?

'உங்க படங்களை பாக்காமல் மனம் வெம்பினே'ன்னு ஏதாவது பின்னூட்டம் போட்டிருந்தீங்கன்னா, ஒரு சி.டில படம் எல்லாம் ஏத்தி, அனுப்பி வச்சிருப்பேன் ;) நீங்க கண்டுக்கர மாதிரியே தெரியலியே :)

குசும்பன் said...

'உங்க படங்களை பாக்காமல் மனம் வெம்பினே'ன்னு ஏதாவது பின்னூட்டம் போட்டிருந்தீங்கன்னா, ஒரு சி.டில படம் எல்லாம் ஏத்தி, அனுப்பி வச்சிருப்பேன் ;) நீங்க கண்டுக்கர மாதிரியே தெரியலியே :)///


அவ்வ்வ் என்னங்க சொன்னாதான் தெரியவேண்டுமா உங்களுக்கு என் மனம் வெம்பினதை. அப்படியா நம் நட்பு...ச்சே என்ன உலகம் இது!!!

சொல்லிட்டேன்...

சி.டியில் படத்தை ஏத்துங்க, அப்படியே போட்டு பார்க ஒரு லேப் டாப்பையும் அனுப்புங்க!!!:)))

இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு:)))

அப்படியே இங்க பல தளங்கள் தடை செய்ய பட்டு இருக்கு அதில் இருந்தும் சில படங்களை ஏத்தி அனுப்பினீங்கள் என்றால் நன்றி கடன் பட்டவன் ஆகிடுவேன்:))

SurveySan said...

//அப்படியே இங்க பல தளங்கள் தடை செய்ய பட்டு இருக்கு அதில் இருந்தும் சில படங்களை ஏத்தி அனுப்பினீங்கள் என்றால் நன்றி கடன் பட்டவன் ஆகிடுவேன்:))
//

thozhila maathiduveenga polarukku ;)

SurveySan said...

படத்த பாக்க முடியாத குசும்பன் மட்டும்தான் கருத்து சொல்லியிருக்காரு.

படம், அவ்ளோ மோசமா? :)

Anu said...

இல்லைங்க சர்வேசன். படம் பார்க்காத குசும்பன் மட்டுமில்லை படம் பார்த்த நானும் என்னோட கருத்துக்களை பதிவு செய்துடறேன்.

படங்கள் ரொம்ப நன்றாக வந்துள்ளது. நிறங்களின் கலவை மிகச் சரியாக உள்ளது. படங்கள் எடுக்கப்பட்ட angle (ஏங்க இதை தமிழ்-ல கோணம்-னு தானே சொல்வாங்க).

இன்னும் நிறைய படங்களை பதியுங்கள்.. வாழ்த்துக்கள்.

SurveySan said...

anu,

ரொம்ப நன்றிங்கோ! :)

Aruna said...

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
படங்கள் மனதைத் திறக்கின்றன.எனக்கும் பூக்களுக்கும் உள்ள உறவு பற்றி என் பதிவில் இருக்கிறது...அதுவும் இன்று பதிந்தது அதனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அருணா