recent posts...

Wednesday, December 22, 2010

2010 சிறந்த தமிழ் படங்கள் - சின்ன amendment

டாப் பத்து போட்டதுமில்லாம amendment வேரயான்னு தலைல அடிச்சரவங்களுக்கு வணக்கம் :)

2010 தமிழ் திரைப்படத்துறையின் அற்புத வருஷம்னு தோணுது. வெட்டியா பன்ச் டயலாக் பேசிக்கிட்டு அடிவயத்துலேருந்து எல்லா ஹீரோப் ப்யலும் ஒரே மாதிரி கத்தி டார்ச் பண்ணிக்கிட்டிருந்த காலத்துல, வித விதமான அணிவகுப்பில், நினைவில் நிற்கும் பலப் படங்கள் வந்த வருடம்.

டாப்10 படம்ஸ் டிசம்பரிலேயே போட்டதால் சிலப் பல படங்கள் கணக்கில் சேராமல் விட்டுப் போனது.
ஈசன் - சுப்ரமணியபுரம் சசிகுமாரின் இயக்கத்தில் வந்த படம். சும்மா சொல்லக் கூடாது, விறு விறு விறுன்னு போரடிக்காமல் இருந்த படம். வழக்கமான அரசியல்வியாதி, அவன் பிள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கல் டைப்பு கதைன்னாலும், நம்ம வயத்துல ஒரு கிலி இருந்துக்கிட்டே இருக்கு. குறிப்பா, அந்த சொட்டை மினிஸ்ட்டர் செம கலக்கல். Assistant commissionerஆக நடித்த சமுத்திரக்கனியும் அலட்டாமல் நடித்திருக்கிறார். ஈசனாக நடித்த பயல் நல்லா நடிச்சிருக்கான். நல்ல படம்.

Amendment இன்னான்னா, எனது டாப்10ல், இந்த படத்துக்கு ஆறாவது இடம் வழங்கப்படுகிறது.
பத்தாம் இடத்தில் இருக்கும் அங்காடித் தெரு, டாப்10ஐ விட்டு விலகுகிறது.
அம்புடுதேன்.



இன்னும் விடுபட்ட ஏதாவது படத்தை பார்த்துத் தொலைத்தால், மேலும் amendmentஸ் வரலாம்...
;)

9 comments:

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு.. நன்றி..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ரிஷபன்Meena said...

உலகமே இந்த படம் ஊத்திக்கிச்சுன்னு சொல்றாங்க!

ரிஷபன்Meena said...

உலகமே இந்த படம் ஊத்திக்கிச்சுன்னு சொல்றாங்க!

Prathap Kumar S. said...

//உலகமே இந்த படம் ஊத்திக்கிச்சுன்னு சொல்றாங்க!//

ஹஹஹ..எந்த விமர்சனமும்... படம் நல்லாருக்குன்னு சொல்லலை....
சர்வேஸ்.... உங்க ரசிப்புதன்மை மெயசிலிலிக்க வைக்குது....:)))

SurveySan said...

@ம.தி.சுதா thanks :)

SurveySan said...

@ரிஷபன்Meena
என் வழி தனீனீனீனீ வழீ :)

SurveySan said...

@நாஞ்சில் பிரதாப்™
நாஞ்சில், பார்க்கும்படிதான் இருக்கு. குட் பொழுதுபோக்குப் படம். படம் முழுக்க வயித்தில ஒரு கிலி இருன்துக்கிட்டே இருக்கு.

Sakthi said...

Boss...Last year best film is ANGADITHERU...Atleast you should give one place for it....

SurveySan said...

@Sharing Thoughts thala, angaditheru was overdose of sorrow. nothing artistic other than the usuals, imho.

i would trade with boss engira bhaskaran, but, b.e.b was a good comic relief.