recent posts...

Friday, December 10, 2010

அதிகாலை படம்

PiTன் "அதிகாலை" போட்டிக்கு எல்லாரும் படம் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. நாட்டாமை வேலை செய்யும் என்னிடம் ஒரு படம் கூட பத்து மணிக்கு முன்னாடி எடுத்தது இல்லை. நானெல்லாம் அதிகாலை பாத்து பல வருஷம் ஆச்சு. அதுவும் அடிக்கற குளிர்ல இழுத்து போத்தி அலாரத்தை இடது காலால் எட்டி உதைத்து எட்டரைக்கு கொறஞ்சு எழுந்துக்கறதே இல்லை.
ஒரு நாலஞ்சு நாளா ஆறு மணிக்கு அலாரம் வச்சு பிரம்மப் பிரயத்தனம் பண்ணிப் பாத்தும் முடியல்ல.
வடிகட்டின சோம்பேறியாச்சே.
ஒரு வழியா ஏழு மணிக்கு எழுந்து அவசரவசரமா என்னால முடிஞ்ச "அதிகாலை" படம் புடிச்சிருக்கேன், உங்க பார்வைக்கு.



PiTன் சக குடும்ப நண்பர்களுக்கும், போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும், கொள்ளப் போகிறவர்களுக்கும், தூக்கத்தை கெடுத்ததுக்காக, ஐம் த சாரி! ;)

11 comments:

SurveySan said...

all pugazh should goto dynamic photo hdr.

this is a pseudo hdr pic.

ராமலக்ஷ்மி said...

ஏழரை மணியெல்லாம் அதிகாலையா என்று கேட்க முடியாதபடி செய்து விட்டது படத்தின் அழகு:)! அருமை.

துளசி கோபால் said...

சண்டிகர் நகரில் காலை பத்துவரை மசமசன்னு பனி மூட்டம். பத்தேகாலுக்குத்தான் சூரியனே எட்டிப் பார்க்கறான்.

அதுக்கு இந்த ஏழரை எவ்வளவோ தேவலை:-))))


படம் அழகா இருக்கு!

Mohamed Faaique said...

ஒ! கெளம்பியாச்சா..? இதோ நானும் வந்துர்றேன்... படம் சூப்பர் சார்.. நம்மளது ஒன்னும் இந்த அளவுக்கு கிடையாது.

Anonymous said...

Speechless =)

Let me know if there is any voting for PiT competition.

Prathap Kumar S. said...

//ஒரு வழியா ஏழு மணிக்கு எழுந்து அவசரவசரமா என்னால முடிஞ்ச "அதிகாலை" படம் புடிச்சிருக்கேன், //

நக்கலா.... காலைல தினமும் அஞ்சுமணிக்கு எந்திருக்கறேன்... நான் மட்டும் அந்தப்போட்டில நடுவரா இருந்தேன்................. :))

படம் நல்லாருக்கு... அதிகாலை என்றாலே மர இலைகளுக்கிடையே ஒளிரும் சூரியகதிர்கள்தான் மனதிற்கு வருகிறது... கான்ககிரிட் காடுகளில் இதைஎதிர்பார்ப்பது தவறுதான்.

SurveySan said...

@ராமலக்ஷ்மி thank u :)

SurveySan said...

@துளசி கோபால் Nanri :)

SurveySan said...

@Mohamed Faaique thanks.

SurveySan said...

@அனாமிகா துவாரகன் thanks Anamika. PiT contests does not have voting. its based on a individual judges opinion.

SurveySan said...

@நாஞ்சில் பிரதாப்™ naanum romba try pannen kaattukku polaamnu. office campus is the only location i could get to before 8am :)