Finally, 2006ன் சிறந்த பதிவருக்கான இறுதி கட்ட வாக்கெடுப்பு முடிவடைந்தது.
(ட்ரம்ஸ் sound effect இன் த பேக்கிரவுண்ட்.. டம் டம் டம் டம்..)
வாக்கில் வெற்றி பெற்று சர்வே-சனின் '2006 சிறந்த பதிவர் பதக்கம் பெறுபவர்':
1. வெட்டிப்பயல் (http://vettipaiyal.blogspot.com)
இவர் 28% வாக்குகள் பெற்றிருக்கிறார்.
வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் என்ற 'பாலாஜி மனோகரன்'.
பல க்ரூப்ஸ் அடங்கிய நம் பதிவுலகில், பல க்ரூப்புகளாலும் ரசிக்கப் படுவது ரொம்ப பெரிய விஷயம். You are being widely-read and widely-appreciated.
So, இன்றை போலே என்றும் பல்சுவையுடன், உங்கள் படைப்புகள் தொடரட்டும்.
2007ல் வெட்டியாக சிலவும், பிரயோஜனமாக பலவும் கொடுங்கள்.
பரிசுப் பணமான $100, வெட்டிப்பயல் பாலாஜி மனோகரனின் சம்மதத்துடன் உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பப் பட்டள்ளது.
தற்சமயம் இந்த 'virtual' பதக்கம் உங்களுக்காக:
இவருக்கு அடுத்த படியாக 24% வாக்குகள் பெற்று இருப்பவர்:
2. சந்தோஷ பக்கங்கள் (http://santhoshpakkangal.blogspot.com)
உங்களுக்கான பதக்கம் இதோ:
மூன்றாவதாக, 20% வாக்குகள் பெற்று இருப்பவர்:
3. செந்தழல் ரவி (http://tedujobs.blogspot.com)
உங்களுக்கான பதக்கம் இதோ:
வாழ்த்துக்கள் சந்தோஷ், ரவி.
டாப்-6ல் இடம் பெற்ற நண்பர்கள் WeThePeople, குமரன், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
வாக்களித்த நெஞ்சங்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் சீரியலில் நேர விரையம் செய்த அன்பர்களுக்கும் நன்றீஸ் :)
22 comments:
சர்வேசன்,
மிக்க நன்றி!!!
அதிகமாக யாரும் வாக்களிக்காத நிலையில், இதை நான் பெரிய சாதனையாக நினைக்கவில்லை.
இருப்பினும் உங்கள் அன்புக்காக நீங்கள் அளிக்கும் பரிசை ஏற்று கொள்கிறேன்.
நீங்கள் வரும் காலத்தில் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்!!!
நல்லா போய் தூங்குங்க......
ஆமா முதலில் செலக்ட் செய்த நடுவர்கள், மற்றும் உங்க தலைவர் பற்றிக் கொஞ்சம் சொல்லறது?....
வெட்டிப்பயல் பாலாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆறு பதிவர்களில் ஒருவனாக அடியேனைத் தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்களுக்கு நன்றிகள்.
//அதிகமாக யாரும் வாக்களிக்காத நிலையில், இதை நான் பெரிய சாதனையாக நினைக்கவில்லை.
இருப்பினும் உங்கள் அன்புக்காக நீங்கள் அளிக்கும் பரிசை ஏற்று கொள்கிறேன்.
//
இவ்வளவு பேர் புழங்கும் பதிவுலகில், ஒரு பெயர் பரிந்துரைக்கப்படுவதே பெரிய சாதனைதான்.
அதிகமாக யாரும் வாக்களிக்கவில்லையா? முதல் சுற்றில் 300+ வாக்குகளும், இரண்டாம் சுற்றில் 150+ வாக்குகளும் பதிவாயின. (I think the missing votes in the final round could be because of the 19 bloggers not present in the final round).
anyway, சும்மா ஒரு விளையாட்டாக தொடங்கிய சர்வே இங்கிருக்கும் க்ரூப்பிஸங்களையும், இன்னும் பல ஸங்களையும் புரிய வைத்தது.
2007ல் ஜாலியான சர்வே-க்களுடன் சந்திப்போம் :)
வாழ்த்துக்கள்.
(பரிசு அனுப்பி வைத்தவுடன், தனி மடலில் தெரியப்படுத்துகிறேன்)
அனானி,
//நல்லா போய் தூங்குங்க......
ஆமா முதலில் செலக்ட் செய்த நடுவர்கள், மற்றும் உங்க தலைவர் பற்றிக் கொஞ்சம் சொல்லறது?....
//
கண்டிப்பா நல்ல தூக்கம் இனி வரும் :)
செலக்ட் செய்த நடுவர்கள் பெயரை சொல்வது 'breach of contract' ஆயிடும். so, இந்த தடவ வேணாம். அடுத்த சர்வே எடுக்கும்போது, நடுவர் பெயரை அறிவித்து விடலாம்.
//உங்க தலைவர் பற்றிக் கொஞ்சம் சொல்லறது//
தலைவரையெல்லாம் டிஸ்மிஸ் பண்ணியாச்சுங்க. இனி தனி ராஜ்ஜியம்தேன் :)
குமரன்,
//ஆறு பதிவர்களில் ஒருவனாக அடியேனைத் தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்களுக்கு நன்றிகள். //
நீங்களும் வின்னர்தான் சார்.
வாழ்த்துக்கள் & Happy New Year!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
பாலாஜிக்கு தனி வாழ்த்துகள்!
வெட்டிப்பயல் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
சர்வேசா, இங்கிருக்கும் குழுக்களூக்கெல்லாம் நீயும் சாட்சியா?....உனக்கே இது அடுக்குமா?....இதனை நீக்க ஏதேனும் சர்வே உண்டா?....முயற்சியுங்களேன்....
அனானி,
//சர்வேசா, இங்கிருக்கும் குழுக்களூக்கெல்லாம் நீயும் சாட்சியா?....உனக்கே இது அடுக்குமா?....இதனை நீக்க ஏதேனும் சர்வே உண்டா?....முயற்சியுங்களேன்//
நான் என்னத பண்றதுங்க. ஒரு விதத்தில் குழுக்கள் இருப்பது நல்லதே. பல நல்ல விஷ்யங்கள் ஆரோக்கியமா முரண்பட்டு வாதிச்சா நல்லதுதான்.
சும்மா, இவா சொன்னா ரைட்டு. அவா சொன்னா தப்பு என்ற ரீதியில் தான் இன்றுள்ள குழுத்தன்மை இருக்கு. சரியல்ல அது.
நம் தொழில் சர்வே எடுப்பதே. நமக்கேன் வம்பு. தானா திருந்தட்டும் :)
//இவ்வளவு பேர் புழங்கும் பதிவுலகில், ஒரு பெயர் பரிந்துரைக்கப்படுவதே பெரிய சாதனைதான்.
//
சர்வேசன்,
நீங்கள் சொல்வதும் சரிதான்...
இதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் நான் இங்கு இருப்பவர்களின் உற்சாகத்தால் எழுத பழகி கொண்டவன். எழுத்து திறமையுடன் வந்தவனில்லை. என்னுடைய ஒவ்வொரு பதிவும் இங்கு இருப்பவர்கள் எனக்களித்த உற்சாகத்தால் தான்.
//
அதிகமாக யாரும் வாக்களிக்கவில்லையா? முதல் சுற்றில் 300+ வாக்குகளும், இரண்டாம் சுற்றில் 150+ வாக்குகளும் பதிவாயின. (I think the missing votes in the final round could be because of the 19 bloggers not present in the final round).
//
ஆயிரத்தி ஐனூறு பேருக்கு மேல் இருக்கும் இடத்தில் இது மிக குறைவே என்று கருதினேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் யாரும் அதிகமாக விளம்பரப்படுத்தாதும், ஒரு சில முக்கியமான வலைப்பதிவர்களை நீங்கள் எடுக்க தவறியதும்.
//anyway, சும்மா ஒரு விளையாட்டாக தொடங்கிய சர்வே இங்கிருக்கும் க்ரூப்பிஸங்களையும், இன்னும் பல ஸங்களையும் புரிய வைத்தது. //
புரிஞ்சிக்கிட்டீங்களா? இனிமே கஷ்டம்தான்...
வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்!!!
போட்டியை முன்னாடியே முடிச்சிடிங்களா? இரண்டாம் இடம் அளித்ததுக்கு நன்றி சர்வேசன்.
வெட்டிப்பயல்,
//ஆயிரத்தி ஐனூறு பேருக்கு மேல் இருக்கும் இடத்தில் இது மிக குறைவே என்று கருதினேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் யாரும் அதிகமாக விளம்பரப்படுத்தாதும், ஒரு சில முக்கியமான வலைப்பதிவர்களை நீங்கள் எடுக்க தவறியதும்.
//
உண்மைதான். ஒரு பதிவு போட்டால், 100 பேர் பார்ப்பார்கள், 10 பேர் பின்னூட்டம் இடுவார்கள். பின்னூட்டம் இடாத 90 பேர் போல, வாக்களிப்பை பார்த்தவர்கள் பலர் ( based on my page hit), but, வாக்களித்தவர்கள் சிலர்.
நீங்கள் சொல்வது போல் 'முக்கியமான' வலைப்பதிவர்கள் மிஸ்ஸிங்கானதால் கூட இருக்கலாம்.
I cant force anyone to vote - at the same time, I cannot include everyone in the polls either :)
well, its a nice and fun-filled learning experience.
I will do more of this with different variations in the future.
:)
சந்தோஷ்,
//போட்டியை முன்னாடியே முடிச்சிடிங்களா? இரண்டாம் இடம் அளித்ததுக்கு நன்றி சர்வேசன்//
முன்னாடியே இல்லியே, சொன்ன நாளிலேயே முடிவு அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்.
நன்றியை உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள்.
happy new year!
//இரண்டாம் இடம் அளித்ததுக்கு நன்றி சர்வேசன்.//
sorry slip of the tongue. போட்டியை நடத்தியதுக்கு உங்களுக்கு நன்றி ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி. :))
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
//ஆயிரத்தி ஐனூறு பேருக்கு மேல் இருக்கும் இடத்தில் இது மிக குறைவே என்று கருதினேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் யாரும் அதிகமாக விளம்பரப்படுத்தாதும், ஒரு சில முக்கியமான வலைப்பதிவர்களை நீங்கள் எடுக்க தவறியதும்.//
வெட்டிப்பயலாரின் தன்னடக்கம் பாராட்டுக்குரியது.
மெய்சிலிர்க்குதுப்பா!
ஆட்டத்தில் என்னுடையதையும் சேர்த்து + தேர்டு பிரைஸும் கொடுத்த சர்வேஸனுக்கும், நல்ல, கள்ள வாக்களித்து வெற்றிபெறச்செய்த அத்துனை அன்புநெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!!
என்னுடைய வாக்கை நான் செல்லமாக எங்கூரு பயலான வெட்டிப்பயலுக்கு போட்டு (பார்ரா இதை - ரஜினின்னு நெனப்பு) சந்தோஷ(உனக்கும் ஒரு கயமை வாக்கு போட்டேன்)மாக கொண்டாடிட்டேன்...
பூத் சிலிப் இல்லாமல், மை வைக்காமல் நீங்கள் தேர்தல் நடத்தினாலும், மையில் எலுமிச்சம்பழ சாறை தடவிய கூட்டத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வராமல் தேர்தலை முடிச்சுட்டீங்க...ஓட்டுப்போட்ட ஆயாவுக்கு இருவது ரூவா கொடுத்து தேர்தலை வழக்கமா நாங்க முடிப்போம். இரண்டாவது மூனாவது பரிசுக்கு ஒரு லோகோ தருமாறு கேட்டுக்கினு இந்த பின்னூட்டத்தை முட்ச்சுக்கிறேன்.
அன்புடன்
செந்தழல்.
சந்தோஷ்,
//sorry slip of the tongue. போட்டியை நடத்தியதுக்கு உங்களுக்கு நன்றி ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி. :)) //
thats Ok. தொடரட்டும் உங்கள் பல்சுவை எழுத்துக்கள்.
happy new year!
I have added a logo for 2nd place. Please post that to your template, if your template can accommodate it.
ரவி,
//இரண்டாவது மூனாவது பரிசுக்கு ஒரு லோகோ தருமாறு கேட்டுக்கினு இந்த பின்னூட்டத்தை முட்ச்சுக்கிறேன்.//
லோகோ போட்டுட்டேன். உங்கள் templateல் ஏத்திடுங்க. நன்றி!
ஆயா போட்ட கள்ள ஓட்டெல்லாம் கழிச்சுட்டுதான் result announce செய்யப்பட்டது. so, ஆயாவுக்கு 20 ரூவா கொடுக்காதீங்க :)
மிகவும் நல்ல முறையில் தேர்தலை நடத்திய உங்களுக்கும், வெற்றிபெற்ற பாலாஜிக்கும், மூவர் குழுவுக்கும் எனது நன்றிகள்.
உங்கள் சர்வேக்கள் பலவும் சுவாரசியமாக உள்ளன.நல்ல பணியை தொடரவும்.
நன்றி
செல்வன்
செல்வன்,
//உங்கள் சர்வேக்கள் பலவும் சுவாரசியமாக உள்ளன.நல்ல பணியை தொடரவும்//
நன்றி! கண்டிப்பாக சர்வே பணி தொடரும் :)
Happy new year!
Dhool matter.
அந்த நாள் ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு. அடேங்கப்பா, ஒரு வருஷம் ஓடியே போச்சு அதுக்குள்ள :)
Post a Comment