கேமரா வாங்கும் புதிதில் பார்ப்பதை எல்லாம் ( இலை, தழை, பூ, நாய், எருமை, மரம், செடி, கொடி, .... ) க்ளிக்கும் நோய் நம்மில் பலருக்கும் உண்டு என்று நினைக்கிறேன்.
Digital Camera எல்லாம் வருவதர்க்கு முன் 35mm Nikon கொண்டு க்ளிக்கித் தள்ளுவேன்.
24 படம் எடுத்தா ஒண்ணு ரெண்டு நல்லா வரும்.
Digital camera வந்த பிறகு ஒவ்வொரு க்ளிக்குக்கும் செலவு கம்மியாச்சு.
ஒரு இடத்துக்கு போனா குறைந்தது 500 க்ளிக்காவது க்ளிக்குவேன்.
500ல் ஐந்து படமாவது ஓரளவுக்கு பார்க்கும்படி தேறும்.
சமீபத்தில் சென்ற சுற்றுப் பயணத்தின் போது க்ளிக்கியவை.
எந்த இடம்னு யாருக்காவது தெரிஞ்சா கரீட்டா சொல்லுங்க பாப்போம்.
(எந்த போடோ நல்லாருக்குன்னு சர்வே போட்டிருக்கலாம். ஆனால், சர்வே என்றால் குண்டு எறியப்படும்னு மடல் வந்ததால், இப்போதைக்கு வேணாம் :) )
-------- + -------- + -------- + -------- + -------- + -------- +
அது சரி, 2006'ன் சிறந்த வாக்குப் பதிவர்க்கு ஓட்டு போட்டுட்டீங்களா? வாக்கை வீணாக்காதீர்கள்.
வாக்களிக்க கடைசி நாள் December 22 8.00 AM IST.
இங்கே க்ளிக்கி வாக்களித்து/முன்னணியில் யாரென்று பாருங்கள்
-------- + -------- + -------- + -------- + -------- + -------- +
(படத்தின் மேல் சொடுக்கினால் படம் பெரிசா தெரியும்)
15 comments:
சர்வே இல்லாமல் சர்வேசன் பதிவா?
இப்படியே தொடரலாமா என்று ஒரு சர்வே செய்வோமா?
:-)
(பாருங்கள்! ஸ்மைலி போட்டிருக்கிறேன்)
//இப்படியே தொடரலாமா என்று ஒரு சர்வே செய்வோமா?//
நானும் வழிமொழிகிறேன் :-) ;-)
(இரண்டு ஸ்மைலி)
வாங்க சிபி,
தங்கள் வரவு நல்வரவாகுக
:)
இதுக்கு சர்வேயே பண்ணியிருக்கலாம்.
சிபி, அப்படி ஒரு சர்வேவும் வேண்டும் சர்வேஷா
ஜி,
எத மனசுல வச்சுக்கிட்டு இப்படி பேசரீங்கன்னே புரியலியே :)
கார்மேகராஜா,
//இதுக்கு சர்வேயே பண்ணியிருக்கலாம். //
எங்க பண்ண விடராங்க்ய :)
கார்த்திகேயன்,
//சிபி, அப்படி ஒரு சர்வேவும் வேண்டும் சர்வேஷா //
you too ?
:)
இப்பதான் சிபி, பின்னூட்டத்தில் படம் போடுவது எப்படின்னு சொல்லியிருக்காரே..
பேசாம எல்லாரும், உங்க கிட்ட இருக்கர நீங்க க்ளிக்கின (சுட்ட படம் அல்ல) நல்ல படத்தை போட்டீங்கன்னா எல்லாத்தையும் சேத்து, 'சிறந்த புகைப்படக் கலைஞர் யார்'னு ஒரு சர்வே போட்டுடலாம் :)
ஏற்பாடு பண்ணவா? :)
//இப்பதான் சிபி, பின்னூட்டத்தில் படம் போடுவது எப்படின்னு சொல்லியிருக்காரே//
பின்னூட்டத்தில் படம் காட்டுவது எப்படி என்று பதிவிட்டவர் நாமக்கல் சிபியா அல்லது கோவி.கண்ணன் அவர்களா என்று ஒரு அவசரச் சர்வே நடத்தவும்.
//பின்னூட்டத்தில் படம் காட்டுவது எப்படி என்று பதிவிட்டவர் நாமக்கல் சிபியா அல்லது கோவி.கண்ணன் அவர்களா என்று ஒரு அவசரச் சர்வே நடத்தவும்.//
ok. ok. sorry about the mistake.
betaல அந்த மேட்டர் வேலை செய்யாதுங்கோ :(
இவை எங்கு எடுத்த படங்கள் ??
சபாபதி சரவணன்,
இன்னிக்குள்ள யாரும் கண்டு பிடிக்கலன்னா, உங்களுக்கு மடல் அனுப்பி சொல்றேன்.
:)
படங்கள் நல்லா இருக்கா இல்லியானு ஒரு சர்வே போட்டிருக்கணமோ? ஒருத்தரும் படத்த பத்தி ஒண்ணுமே சொல்லக் காணோம் :(
சபாபதி சரவணன்,
இந்த இடம் அமெரிக்காவில் உள்ள தெ.கலிபோர்னியாவில் இருக்கும் ராமகிரிஷ்ண மடம்.
300 ஏக்கர் பரப்பளவில் ரொம்ப ரம்யமான இடம். ராமகிரிஷ்ணர்/விவேகானந்தர் இவர்களினால் ஈர்க்கப்பட்டு, 60 வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், இந்த இடத்தை இனாமாக கொடுத்தாராம்.
நகரத்தின் ஓசை துளி கூட கேட்க்காத அமைதியான பார்க்க வேண்டிய இடம்.
Post a Comment