Monday, December 04, 2006

சர்வேசனின் சர்வே - 2006 ன் சிறந்த நடிகை யார்?

-------------- -------------- -------------- --------------
2006 ன் சிறந்த நடிகை சர்வேயில் வெற்றி பெற்றது: நடிகை ஜோதிகா.
சர்வே முடிவுற்றது.
-------------- -------------- -------------- --------------

வழக்கம் போல் மூளையை கசக்கிப் பிழிந்து 2006ல் வந்த படங்களின் நாயகிகள் ஐந்து பேரை லிஸ்ட் போட்டாச்சு.
(நமீதா பேர் போடலன்னா, வீட்டுக்குள் குண்டு வீசப்படும், என்ற அனானி மிரட்டலுக்கெல்லாம் பயந்து நமீதா பேர் போடவில்லை. சாவித்ரிக்கு பிறகு, நமீதாதான் நடிகையர் திலகம் என்று சிலர் பச்சைக்குதிரை படம் பார்த்து உணர்சிவசப் பட்டதாலேயே அவங்களுக்கு பட்டியலில் இடம்).

என் ஓட்டு எப்பவும் ஜோதிகாவுக்குத்தான். ( தற்போதைய நிலவரப்படி சிறந்த நடிகருக்கான வரிசையில் சூர்யா பின் தங்கி உள்ளார். இங்கயாவது இவங்க வராங்களானு பாப்போம் ).

அடிச்சு ஆடுங்க. வெற்றி பெறும் நடிகைக்கு குழு சார்பா 'பாஸ்கர்' அவார்ட் அனுப்பி வைக்கப்படும்.



பி.கு: பின்னூட்டம் போட்டா மட்டும் பத்தாது. மேலே உள்ள பேரை க்ளிக்கி, அனுப்பு பொத்தானையும் க்ளிக்கணும்.

நன்றி!..

4 comments:

Anonymous said...

கஜினி 2006 படமல்ல!

SurveySan said...

அனானி, தகவலுக்கு நன்றி.
அசினுக்கு பதில் கோபிகாவ போட்டாச்சு. :)

சர்வே செல்லாதோ? அதுக்கு ஒரு தனி சர்வே போட்டுருவம் :)

Ranganathan. R said...

நல்ல முயற்சி... என் ஓட்டு மீரா ஜாஸ்மினுக்குத்தான்...

மீண்டும் சந்திப்போம்...

SurveySan said...

ranganathan.r,

வாங்க வாங்க.

மீரா ஜாஸ்மீனா? ஜோதிகாவ அடிச்சுக்க முடியாதுங்க. லீடிங் எங்காளுதான் :)