recent posts...
Thursday, December 21, 2006
2006'ன் சிறந்த பதிவர் - இறுதி கட்ட சர்வே ( Tamil Blogger of the year FINALS )
நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த "2006'ன் சிறந்த பதிவர்" சர்வேயின், இறுதி கட்ட வாக்கெடுப்பு (FINALE) விவரங்கள் கீழே.
முதல் கட்ட வாக்கெடுப்பு விவரங்கள் காண இங்கே சொடுக்கலாம்: சர்வே - I
ஐந்து பிரிவாக பிரித்து வாக்கெடுப்பு நடத்தியதில், ஒவ்வொரு பிரிவிலும் ஏறத்தாழ 350 வாக்குகள் பதிவாயின.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த பதிவர்களை, சூஸி, கீழே FINALs சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. (அடைப்புகுறியில் இருப்பது அந்த பிரிவில் அவர்கள் பெற்ற வாக்கின் % )
அ. வெட்டிப்பயல், சந்தோஷ பக்கம் ( தலா 32% )
ஆ. பெனாத்தல் சுரேஷ் (37%)
இ. குமரன் (30%)
ஈ. செந்தழல் ரவி (39%)
உ. WeThePeople (33%)
மேலே உள்ள top-6 பதிவர்களுக்கும், முதல் கட்ட பதிவில் இடம்பெற்ற மற்ற பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள். கள்ள ஓட்டு போட்ட ரசிகர் படைக்கும் நன்றிகள். (தேர்தல் அதிகாரி 60+ கள்ள ஒட்டுக்களை களை எடுத்ததாகச் சொன்னார் :) ). முதல் கட்ட வாக்கெடுப்பு நடத்த உதவிய மூவர் குழுவுக்கும் நன்றி!
வாக்கெடுப்பு பற்றி விளம்பரம் கொடுத்து பாப்புலர் ஆக்கிய பொன்ஸ், புலிகேஸி, அ.மு.க விர்க்கும் நன்றீஸ் :)
2006'ன் சிறந்த பதிவரை தேர்ந்தெடுக்க கீழே சொடுக்கி உங்கள் வாக்கை பதியுங்கள்.
Happy Christmas and a very prosperous New Year every one!
இந்த புத்தாண்டு நீங்கள் விரும்பியதை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஆமென்!
//வாக்கெடுப்பு முடிந்தது - விவரங்கள் இங்கே - Click here//
[ மேல் கட்டத்தில் இல்லாத ஒரு பதிவர்தான் சிறந்த பதிவர் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அந்த பதிவரின் பெயரை பின்னூடுங்கள். மக்கள்-ஸ் choice அவார்ட், தனியா ஒண்ணு கொடுத்திடலாம் :) ]
Top-6'ல் உள்ள வெட்டிப் பயல், சந்தோஷ பக்கம், பெனாத்தல் சுரேஷ், குமரன், செந்தழல் ரவி, Wethepeople கீழே உள்ள பதக்கத்தையும், இந்த பக்கத்திர்க்கான லிங்கையும் உங்கள் template'ல் ஏற்றிக் கொண்டு ( template இடமளித்தால் ) இந்த சர்வேக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் எழுத்துப் பணி இந்த வருடம் போல் இனி வரும் வருடங்களிலும் தொடர வாழ்த்துக்கள்!!!
Top-25ல் இடம் பெற்ற நண்பர்கள் கீழே உள்ள பதக்கத்தை அவர்கள் பதிவில் போடுங்கள் (மனமிருந்தால், இடமிருந்தால்).
பி.கு:
உயிருக்கு போராடும் குட்டிச் சிறுமிக்கு உதவ இங்கே க்ளிக்குங்கள். புத்தாண்டை ஒரு நல்ல காரியம் செய்து இனிதே துவக்குங்கள். Make a Difference!!!
Click here to read சர்வேஸனின் குறும்பிய காலங்கள்
Click here to read ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடித்தது?
அப்பாடா, ஒரு பெரிய பொறுப்பு முடிந்த மாதிரி இருக்கு. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் 28-Dec-06 8.00 AM IST அன்று அறிவிக்கப்படும்.
Happy Clicking!!!
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
அட ராமா, ஏனய்யா இப்பிடி பண்ணிட்டீங்க.....
முதல் ரவுண்ட்-ல பண்ணி இருந்தபடி விட்டிருக்கலாமோ?...அதாவது, ஆன்மிகம், பல்சுவை ஆகியவற்றில் தனி, தனியாக பெஸ்ட் கண்ணா, பெஸ்ட் சொல்லி விட்டுவிடலாமே.
தற்போதைய கலப்பின்படி பார்த்தால், ஆன்மிகம் மட்டும் எழுதுபவர்களுக்கு வாய்ப்பு கம்மி....அதே போல, சமூக அக்கரை, மற்றும் அரசியலுக்கும் இது பொருந்தும்....பல்சுவை மட்டுமே இரு குழுக்கள் இருந்ததால் அதனை சேர்த்து ஒரு பெஸ்ட் எடுக்க வேண்டியிருந்திருக்கும்....
கடைசில குழப்பிட்டியே பாண்டியா!
இது பேருதான் பின்னூட்ட கயமையா?
:)
நன்றி நன்றி நன்றி! நான கேட்டுக் கொண்டப்படி எனக்கு ரீஜண்டான தோல்வியைத் (நல்ல வேளை)தந்த ஆருயீர் நட்புகளுக்கு நன்றி
அனானி,
//அட ராமா, ஏனய்யா இப்பிடி பண்ணிட்டீங்க.....
முதல் ரவுண்ட்-ல பண்ணி இருந்தபடி விட்டிருக்கலாமோ?...அதாவது, ஆன்மிகம், பல்சுவை ஆகியவற்றில் தனி, தனியாக பெஸ்ட் கண்ணா, பெஸ்ட் சொல்லி விட்டுவிடலாமே.
//
அந்தந்த பிரிவில் டாப்பு யாருன்னு சொல்லியாச்சே சாமி.
அப்படியே வுட்டுட முடியுமா.. சூப்பர்-ஸ்டார் யாருன்னு பாக்கணுமில்ல. அதேன் இப்படி. :)
(ஆறு பேருக்கும் ப்ரைசு குடுக்க budget இல்லீங்கோ )
ஆறும் சேத்து ஒரு சர்வே போட்டது தெய்வ குத்தம் ஆயிடுமோ? :)
அடிச்சு வெளையாடராங்க நம்ம பசங்க.
ஒரு ஸ்டார் ப்ளேயர் 2006க்கு கண்டு பிடிச்சு சொல்லிட்டா என் பாரம் கொரஞ்சுடும் :)
உஷா, வருக வருக.
//நன்றி நன்றி நன்றி! நான கேட்டுக் கொண்டப்படி எனக்கு ரீஜண்டான தோல்வியைத் (நல்ல வேளை)தந்த ஆருயீர் நட்புகளுக்கு நன்றி //
ரீஜண்டான தோல்வியா? 123 பேர்ல டாப்-25 வரது லேசு பட்ட காரியமா?
மூவர் குழுல ஒருத்தர் நீங்க தான் சர்வேயில் ஜெயிப்பீங்கன்னு 'பெட்'டே கட்டினாங்க :)
ரசிகர் கூட்டம் vacation'ல இருப்பாங்கன்னு நெனைக்கரேன் :)
(செந்தழலார் ரசிகர் கூட்டத்துக்கு லீவு விட மாட்டாரு போல இருக்கு :) )
//ஒரு ஸ்டார் ப்ளேயர் 2006க்கு கண்டு பிடிச்சு சொல்லிட்டா என் பாரம் கொரஞ்சுடும் //
யாரோ இவரை கூப்பிட்டு கேட்ட மாதிரியும், இவருக்கு விருப்பமில்லாதத செய்ய வேண்டிய கட்டாயம் மாதிரியும்....பாரம் கொரஞ்சுடுமாமில்ல...விளையாடு ராசா, நீ விளையாடு.
அனானி,
//யாரோ இவரை கூப்பிட்டு கேட்ட மாதிரியும், இவருக்கு விருப்பமில்லாதத செய்ய வேண்டிய கட்டாயம் மாதிரியும்....பாரம் கொரஞ்சுடுமாமில்ல...விளையாடு ராசா, நீ விளையாடு. //
வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா..
சர்வே எடுக்க மட்டும் பதிவு தொடங்கினது வேற எதுக்குன்னு நெனச்சீங்க? பெரிய GAP இருக்கு அத FILL பண்ணனும்னு 'மேலிடத்து' உத்தரவு.
கரீட்டா செய்றோம்ல.. :)
( ராத்திரி தூக்கமில்ல இத நெனச்சு. அடுத்த பொதன் கெழம சூப்பர்-பதிவர் அறிவிச்ச பெறவு தான், இந்த கண்ணு மூடும். சொல்லிபுட்டேன் :) )
உயிருக்கு போராடும் குட்டி சிறுமிக்கு உதவ இங்கே க்ளிக்குங்க
என்னை முதல் கட்டத்தில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.
ஆனால், அனானி சொல்வதை வழிமொழிகிறேன். வேலைவாய்ப்புக்கு வகை செய்யும் பதிவுகளையும், வீடுபேறுக்கு வழிசொல்லும் ஆன்மீகமும், வேற வேலையில்லாம பினாத்துபவர்களையும் ஒரு கட்டத்துக்குள் போட்டியிட வைப்பது சரியல்ல.
இரண்டாவது, கள்ள ஓட்டுகளை தவிர்த்தே விட்டாலும், நீங்களே சொல்வதுபோல் "என் நண்பர்கள் வெகேஷன் போயிருந்தால்" நானும் காலிதான்;-)
ஆக, இந்த வாக்குப்பதிவு யாருடைய நண்பர்கள் இணையம் பார்க்கிறார்கள், யாருடைய நண்பர்கள் வெகேஷனில் உள்ளார்கள் என்ற சர்வேயாக முடிய வாய்ப்புகள் அதிகம்.
எனக்கு வாக்களிக்க நினைக்கும் நண்பர்கள் 2006ல் நான் எழுதியா எல்லாவற்றையும்படித்துப் பார்த்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னடா இவன் இவ்வ்ளோ எழுதறானே, நம்மளைத் திட்டறானோன்னு நினைக்காதீங்க சர்வேசன் - உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள், ஆனால் அந்த முயற்சி முழுக்க முழுக்க சரியானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன், எப்படி இருப்பினும் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடரவேண்டும், trial and error மூலமாக முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
//பெரிய GAP இருக்கு அத FILL பண்ணனும்னு 'மேலிடத்து' உத்தரவு.
கரீட்டா செய்றோம்ல.. //
என்னய்யா, ஏதோ திமுக, அதிமுக மாதிரி பேசரீங்க....நீங்களே யாருன்னு இன்னும் சொல்லல்ல, இதுல மேலிடம் வேறயா....ஏதோ போங்க....
என்னையை மாதிரி அனானி வாழ்கை வாழ்ந்துட்டு இருக்கறதுக்கு இது பெட்டரா இருக்கும்ன்னு நெனைக்கறேன்.....என்ஜாய் தங்கமணி...என்ஜாய்
-வணக்கம் சர்வேசன்
இதுவரை பொறுமை காத்தேன், இப்போது சொல்கிறேன்.
உங்கள் சர்வேயில் என் பெயரும் வந்ததும் அதற்கு வோட்டு விழுந்ததும் மகிழ்ச்சி. ஏனென்றால் நாம் யாராலோ எம் எழுத்துக்களால் கவனிக்கப்படுகின்றோம் என்பதால். எனவே ஓட்டுப்போட்ட அன்பர்களுக்கு நன்றி. கலர் டீ.வி.கிடையாது ஏனெனில் இறுதிச் சுற்றில் வரவில்லை:-)
இந்த கணக்கெடுப்பு எடுத்த முறை குறித்த ஆரோக்கியமான முறைப்பாடுகளோடு நானும் உடன் படுகின்றேன். "அந்த மூவர்" அணியோடு அடுத்த ஆண்டு கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்ய என் வாழ்த்துக்கள்.
வணக்கம் பெனாத்தல் சுரேஷ்,
//தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.
ஆனால், அனானி சொல்வதை வழிமொழிகிறேன். வேலைவாய்ப்புக்கு வகை செய்யும் பதிவுகளையும், வீடுபேறுக்கு வழிசொல்லும் ஆன்மீகமும், வேற வேலையில்லாம பினாத்துபவர்களையும் ஒரு கட்டத்துக்குள் போட்டியிட வைப்பது சரியல்ல.//
பல வகை பதிவர் இருந்ததால்தான் ஐந்து பிரிவுகளாக முதல் கட்ட வாக்கெடுப்பு வைக்கப்பட்டது. இறுதி கட்டமாக எல்லா பிரிவையும் சேர்த்து, இந்த வருடத்தின், most-appreciated பதிவர் யாரென்று பார்ப்பதில் தவறொன்றுமில்லை என்பதே 'பலரின்' கருத்தாக இருந்தது.
TOP-25ல் இருந்த அனைவரும் மிக நல்ல எழுத்தாற்றல் மிக்கவர்கள். TOP-6ல் இருப்பவர்கள் widely-read பதிவர்கள் (வந்த வாக்குகளை வைத்து சொல்கிறேன்).
//ஆக, இந்த வாக்குப்பதிவு யாருடைய நண்பர்கள் இணையம் பார்க்கிறார்கள், யாருடைய நண்பர்கள் வெகேஷனில் உள்ளார்கள் என்ற சர்வேயாக முடிய வாய்ப்புகள் அதிகம்.//
நண்பர்கள் என்று சொல்வதை விட, ரசிகர்கள் என்று சொல்லலாம். எல்லார் வெகேஷன் schedule எல்லாம் பார்த்து சர்வே வைக்க முடிந்தால் நல்லாதான் இருக்கும் :)
வெகேஷனிில் இருப்பவர்களும் வாக்களிக்கலாம் (இமய மலைக்கா போராங்க ? :) )
anyway, கருத்துக்கு ரொம்ப நன்றி. TOP-6ல் தேர்வு பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்.
(நானெல்லாம் TOP-6ல வரணும்னா இன்னும் 60 வருஷம் ஆகும் :) )
(மக்கள்ஸே, சர்வே ஏன், எதர்க்கு, எப்படி என்று ரொம்ப ஆராயாம, அனுபவிங்கோ. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை வீசுங்கோ :) )
சுரேஷ், அடுத்த வருடம், சிறப்பாக சர்வே செய்ய என் வெகேஷன் டைமில் யோசிக்கிறேன். நீங்களும் யோசிங்கோ :)
நன்றி! Happy Holidays!
அனானி,
//என்னய்யா, ஏதோ திமுக, அதிமுக மாதிரி பேசரீங்க....நீங்களே யாருன்னு இன்னும் சொல்லல்ல, இதுல மேலிடம் வேறயா....ஏதோ போங்க....
என்னையை மாதிரி அனானி வாழ்கை வாழ்ந்துட்டு இருக்கறதுக்கு இது பெட்டரா இருக்கும்ன்னு நெனைக்கறேன்.....என்ஜாய் தங்கமணி...என்ஜாய்//
என்ஜாய்கிறேன் தங்கமணி :)
நான் யாருன்னு சொல்லாமலேயே இவ்ளோ பிரச்சனை. யாருன்னு சொல்லிட்டா அப்பறம், ஓ, இவருக்கு வேண்டியவர் இவரு, அப்படி இப்படின்னு இன்னும் பிரச்சனை அதிகம் தான் ஆகும்.
so, நான் 'சர்வேச'னாவே இருந்துட்டு போறேன்.
ஆனா ஒண்ணு, அனானி வாழ்க்கையை விட, சர்வேசன் வாழ்க்கை மேல் :)
என்ன ஒண்ணு, எனக்கு மு.க தான் இல்ல.
என்ஜாய்!!!
கானா பிரபா,
TOP-25ல் இடம் பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்.
(கலர் டீ.வி குடுப்பீங்கன்னு முன்னாடியே ஒரு வாக்குறுதி சொல்லி இருந்தீங்கன்னா, நம்ம கூலிப்படைய உசுப்பி விட்டிருக்கலாமே சார் :). இப்ப டூ லேட் :) )
//இந்த கணக்கெடுப்பு எடுத்த முறை குறித்த ஆரோக்கியமான முறைப்பாடுகளோடு நானும் உடன் படுகின்றேன். "அந்த மூவர்" அணியோடு அடுத்த ஆண்டு கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்ய என் வாழ்த்துக்கள்.//
ஆரோக்கியமான முரண்பாடுகளில் பல நியாயமான நல்ல கருத்துக்கள்.
First round தான, இனி அடுத்த வருடத்துக்குள் நடை பழகிடலாம்.
Happy Holidays! தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. இன்னும் சுவையாக்குங்கள் 2007ல். ( நெறைய பேர் படிக்கராங்க, அதனால ஜாக்கிரதயா எழுதுங்க, இன்னும் சுவையுடன் :) )
நன்றி!
// நண்பர்கள் என்று சொல்வதை விட, ரசிகர்கள் என்று சொல்லலாம் //
சர்வேசன் சொல்வது சரிதான். என்ன ஒவ்வொருவருக்கும் போட்டோ ஐடியா கொடுக்க முடியும். இணையத்தில் ஓட்டெடுப்பு என்றால் இவ்வளவு தான் முடியும்.
சுப்பு,
//சர்வேசன் சொல்வது சரிதான். என்ன ஒவ்வொருவருக்கும் போட்டோ ஐடியா கொடுக்க முடியும். இணையத்தில் ஓட்டெடுப்பு என்றால் இவ்வளவு தான் முடியும். //
Thanks for the support.
( போடோ ID எல்லாம் கொடுத்து நடத்தும் தேர்தல்களிலேயே எவ்வளவோ குளறுபடிகள் :). நம்ம சிஸ்டம் எவ்வளவோ பரவால்ல )
செந்தழலார் வாழ்க!
அவர் கொற்றம் வாழ்க!
அனானி,
//செந்தழலார் வாழ்க!
அவர் கொற்றம் வாழ்க!//
அதே, அதே!
ஏம்பா, யாராவது லிங்க் போட்டு கொஞ்சம் வெளிச்சம்/வெளம்பரம் காட்டுங்களேம்பா.
(எவ்ளோ நேரம்தான் பின்னூட்ட கயம்ஸ் பண்ணுவது :))
ஏம்பா, யாராவது லிங்க் போட்டு கொஞ்சம் வெளிச்சம்/வெளம்பரம் காட்டுங்களேம்பா.
(எவ்ளோ நேரம்தான் பின்னூட்ட கயம்ஸ் பண்ணுவது :))
சற்று முன் கிடைத்த நிலவரப்படி, இதுவரை 60+ வாக்குகள் பதிவாகி உள்ளன.
Satru mun kidaiththa thagaval padi, idhuvarai 80+ vottugal padhivaagi irukku.
Maravaadheer Kanmanigale, vaakkalikka kadaisi naal, 28-Dec-06 8.00 am IST.
வெட்டிப்பயல் @ 29%
செந்தழல் ரவி @ 22%
சந்தோஷ பக்கம் @ 19%
//என்ன ஒண்ணு, எனக்கு மு.க தான் இல்ல.
//
நல்லபடியா முடிங்க....உங்களுக்கு ச.மு.க நான் ஆரம்பிக்கிறேன்....
அனானி,
//நல்லபடியா முடிங்க....உங்களுக்கு ச.மு.க நான் ஆரம்பிக்கிறேன்//
அன்புக்கு நன்றி!
பி.கு: கள்ள ஓட்டு கணக்கு இன்னும் வரல. தேர்தல் அதிகாரிக்கு மடல் அனுப்பியதர்க்கு இன்னும் பதில் வரவில்லை.
வந்தவுடன், கணக்கு சரி பார்த்து, அதிகாரபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படும்.
Post a Comment