recent posts...
Tuesday, September 30, 2008
தசாவதாரம் - டிவிடி பார்வை
தசாவதாரத்தை இரண்டாம் முறையாக டிவிடியில் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது.
மொதல் தடவ பாக்கும்போது, ரொம்ப எதிர்பார்த்து போனதாலையோ, இல்ல, கமல் படத்தைப் பாக்கப் போனா, கமலே தெரியாம, எல்லா வேஷத்தலையும், excess make-up இருந்ததாலையோ, படம் ஆஹா ஓஹோன்னு சொல்ற அளவுக்கு பிடிக்காம இருந்தது.
ஆனா, என்னமோ தெரியல, என்ன மாயமோ புரீல, டிவிடில படத்தை பாக்கும்போது, அந்த excess make-up ஒரு மேட்டராவே தெரியல.
படம், விறுவிறுப்பான, ஒரு நல்ல பொழுது போக்கும் படமாவே, good feel தந்தது.
ஆரம்ப, ராமானுஜதாசனாகட்டும், அதைத் தொடர்ந்து, படத்தொடக்கத்தில், மெரீனாவில் ஒவ்வொரு கமலையும், மாத்தி மாத்தி காட்டுவதாகட்டும், அதைத் தொடரும், அமெரிக்க காட்சிகளாகட்டும், நிமிர்ந்து உட்கார வைத்த, நாயுடு, பூவராகனாகட்டும், எல்லாமே கச்சிதமா பண்ணியிருப்பதாகவே எனக்குப் பட்டது.
மேக்-அப் மொத தடவ ஏன் பிடிக்காம போச்சுன்னா, நாம எதிர்பாக்காம கிடைச்ச, ஷாக்னால இருக்கும். கமல், கொஞ்சம் விளம்பரப் படுத்தி நம்மை தயார் படுத்தியிருந்தா, இது ஒரு நெருடலாவே தெரிஞ்சிருக்காது.
ஃபெளெட்சர், மேக்கப் நல்லாவே இருக்குதுங்க.
மொத தடவ பாக்கும்போது, சுத்தமா பிடிக்காதது, ரெண்டாவது தடவ பாக்கும்போது பிடிக்குதுன்னா, இதுல ஏதோ மனோரீதியான நுண்ணிகழ்வு ஏதோ இருக்குது.
யாராச்சும், ஆராய்ச்சி பண்ணா நல்லது ;)
திரைக்கதை, ப்ரில்லியண்ட்னு மொதல்லையே சொன்னதுதான்.
ராமானுஜதாசனுக்கும், விஞ்ஞானிக்கும், சுனாமிக்கும், முடிச்சு போட்டதெல்லாம் அபாரம்.
மொத தடவை படம் பாத்து, எல்லோரும் புலம்பிய இன்னொரு விஷயம், ஊரே சுனாமியால் பாதிக்கப்பட்டு, பிணக்குவியலை லோடு லோடா மூடிக்கிட்டு இருப்பாங்க, அப்ப கமலும், அசினும், ஓரமா நின்னுக்கிட்டு, விஷ்ணு சிலை மேல் சாஞ்சுக்கிட்டு, ரொமான்ஸ் டையலாக்ஸ் பேசிக்கிட்டு இருப்பாங்களாம்.
எனக்கு அது, பெரிய நெருடலா தெரீல. எல்லா ஹாலிவுட் படத்திலையும் நடக்கர சங்கதிதான் இதெல்லாம்.
இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன், சுனாமி வந்து தாக்கிச்சின்னு, டி.வி.ல காட்டிக்கிட்டு இருந்தானே, அப்ப நீங்க என்னா சாப்பிடாம கொள்ளாம, ஒப்பாரியா வச்சுக்கிட்டு இருந்தீங்க?
இல்ல, ஷேவ் பண்ணாம தாடிவிட்டுக்கிட்டு திரிஞ்சீங்களா?
செய்தியப் பாத்தமா, நம்ம வேலையப் பாத்தமான்னு தான இருந்தோம்?
யதார்த்தம் அதுதானுங்கோ!
ஸோ, தசாவதாரம், அருமையாக எடுக்கப்பட்ட படம்.
ofcourse, சின்ன சின்ன குறைகள் இருக்கு. ஆனா, எதுவுமே, மிகைப் படுத்தி, படம் நல்லால்லன்னு சொல்லற லெவல்ல இல்லை.
வரலாறை திருத்தி எழுதவேண்டிய கடமை உந்தியதால், இந்தப் பதிவு ;)
வர்டா, நீங்க ரெண்டாவது பாத்தீங்களா? கருத்துல மாத்தம் இல்லியா?
:)
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
என்ன தல, பொணத்தை தோண்டி எடுத்து மறுபடியும் போஸ்மார்ட்டமா?
thenali,
பொழப்பு ஓடணும்ல :)
//வரலாறை திருத்தி எழுதவேண்டிய கடமை உந்தியதால், இந்தப் பதிவு ;)//
அடேங்கப்பா... :-)
என்ன சார் இது ?
வீட்டுக்கு எத்தனை ஆட்டோ வந்திச்சு? ;-)
உங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.எதிர்பார்த்து சென்றால் எதுவும் ஏமாற்றமே.முதல் தடவை பார்த்தபோது எதுவும் புரியவில்லை.இரண்டாவது தடவை பார்த்தபோது நன்றாக இருந்தது.ஆனந்த விகடனில் வந்த 'கியாஸ் தியரி' விளக்கமும் அதற்கு உதவியது.
சரவணகுமாரன்,
என்னங்க அடேங்கப்பா?
எங்க கடமைய நெனச்சா சிரிப்பு வருதா?
எங்கள நம்பிதானேங்க சரித்திரமே இருக்கு :)
இளைய கரிகாலன்,
ஆட்டோவெல்லாம் இல்லீங்க. நல்ல படைப்பை, உண்மை புரிஞ்சதும், பாராட்டிடணும்.
கமல் நம்மள கவுக்கல.
செல்வம்,
//.எதிர்பார்த்து சென்றால் எதுவும் ஏமாற்றமே//
மிகச் சரி. ஆனா, எதிர்பாக்க வெக்கரதும் நம்ம சினிமாக்காரங்கதானே.
ஓவர் பில்டப்பு கொடுக்கரதாலதான் இப்படி முடியுது. :)
எனக்கும் என் மனைவிக்கும் கூட இதே அனுபவம் ஏற்பட்டது.
முதல் முறை நாங்கள் திரை அரங்கில் போய் பார்த்தோம். இருவரும் தீவிர கமல் ரசிகர்கள் என்பதால் சற்று ஏமாற்றம்
1 maadham பின்பு DVD யில் பார்த்தோம் அப்பொழுது தான் வசனங்கள், கமலின் அமெரிக்கா உச்சரிப்பு ( சி தம் பரம் ), மல்லிகா ஷெராவத், ms பாஸ்கர், அசின், VAIYAAPURI, நடிப்பு கூட பார்ரடும் படி இருந்தது.
பின்பு DVD யில் 5 முரை பார்த்தும் படம் பிடிக்க தொடங்கி விட்டது.
இப்பொழுது எல்லாம் தினமும் 1 சீன் ஆவது த்வத் யில் பார்க்காமல் தூக்கம் வருவது இல்லை.
முன்பு இந்திரன் சந்திரன், சாணக்கியன் படமும் இதே போலதான் இருந்தது.
kuppan, thanks for the visit.
///இப்பொழுது எல்லாம் தினமும் 1 சீன் ஆவது த்வத் யில் பார்க்காமல் தூக்கம் வருவது இல்லை.
////
idhu konjam overaaaaaa irukke :)
//மொத தடவை படம் பாத்து, எல்லோரும் புலம்பிய இன்னொரு விஷயம், ஊரே சுனாமியால் பாதிக்கப்பட்டு, பிணக்குவியலை லோடு லோடா மூடிக்கிட்டு இருப்பாங்க, அப்ப கமலும், அசினும், ஓரமா நின்னுக்கிட்டு, விஷ்ணு சிலை மேல் சாஞ்சுக்கிட்டு, ரொமான்ஸ் டையலாக்ஸ் பேசிக்கிட்டு இருப்பாங்களாம்.
எனக்கு அது, பெரிய நெருடலா தெரீல. எல்லா ஹாலிவுட் படத்திலையும் நடக்கர சங்கதிதான் இதெல்லாம்.
இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன், சுனாமி வந்து தாக்கிச்சின்னு, டி.வி.ல காட்டிக்கிட்டு இருந்தானே, அப்ப நீங்க என்னா சாப்பிடாம கொள்ளாம, ஒப்பாரியா வச்சுக்கிட்டு இருந்தீங்க?
இல்ல, ஷேவ் பண்ணாம தாடிவிட்டுக்கிட்டு திரிஞ்சீங்களா?
செய்தியப் பாத்தமா, நம்ம வேலையப் பாத்தமான்னு தான இருந்தோம்?
யதார்த்தம் அதுதானுங்கோ!//
வழிமொழிகிறேன்.
முதல் முறை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும்போது மேக்கப் கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது பின்னர் 4 தடவை திரும்பத் திரும்பப் பார்த்ததில் உலக நாயகன் அழகாகத் தான் தெரிகிறார். அதிலும் ஃபிலெட்சர் அட்டகாசம்.
ஆச்சர்யம். நீங்கள் மட்டுமில்லை. இரண்டாம் முறை படம் பார்த்த / பார்க்க நேர்ந்த நிறைய பேர் இதே கருத்தைத் தான் சொன்னாங்க.. இப்போ நீங்களும் அதையே சொல்லுவது உண்மையிலேயே ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா இதுக்கு என்ன காரணமுன்னு புரியலை. இதுக்காகவே படத்தை இன்னொரு தடவை பார்க்கணும் போலிருக்கு....
When I watched it again @ Home: Dasavatharam - Minute details, questions, trivia, goofs, movie connections « Snap Judgment
//ஏதோ மனோரீதியான நுண்ணிகழ்வு ஏதோ இருக்குது.//
இதற்கும்
//பொழப்பு ஓடணும்ல :)//
இதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறாப்பல இருக்கே.
பாபா போட்டிருக்கிற பதிவுல பாருங்க...அந்த வீக்-எண்ட் மேட்டர் செம காட்ச். :-)
எப்பவும் படத்தை படமா பார்க்க பழகிட்டோம்னா பிடிக்குதா? இல்லையான்னு தெரிஞ்சுடும். நம்ம பதிவுகளில் தான் நுண்ணரசியல், அது இதுன்னு பேசி குழப்புறாங்க. எனக்கெல்லாம் பார்த்த முதல் நாளே பிடிச்சிருச்சு. என் நாலு வயசு பையன் ஓரு டிவிடிய பார்த்தே தேச்சிட்டான்..படத்தை தியேட்டரில் பார்த்திலிருந்தே.. தினம் ஓரு கேரக்டர் பேரில் தான் வலம் வருகிறான்.
நானும் பார்த்தேன்! வித்தியாசமான படம்.
நண்பர்காள்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்னி!
B.Bala, read & commented. amazing post, yours :)
sridhar, எல்லாரும் சொல்ரத பாத்தா, ஏதோ நுண்ணிகழ்வு இருக்கரமாதிரிதான் தெரியுது.
ரிசெர்ச்சணும் ;)
cable sankar, /////எனக்கெல்லாம் பார்த்த முதல் நாளே பிடிச்சிருச்சு. ////
hmm. strange. did you already see the different avathars? how can anyone not get shocked after seeing the 'big' masks? :)
நீங்க சொன்ன அதே எஃபெக்ட் தான். முத தடவ பாக்கும் போது எனக்கும் சரியா புடிக்கல. ரெண்டாவது முறை பாக்கும் போது தான் எனக்கு அதுல இருக்கர screenplay நல்லா புரிஞ்சுது. ச்சே என்ன மா எடுதிருக்காங்க னு மூனாவது முறையும் பாத்தேன். மூனு தடவையும் தியேடர் ல தாங்க பாத்தேன்
~உண்மை.
Post a Comment