recent posts...

Friday, September 26, 2008

Tamilish விட்ட அறை!! தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்!

ஜூடாக்கறோம் ஜூடாக்கறோம்னு, எத்தையாவது குண்டக்க மண்டக்கா எழுதரது.
பல சமயம், ஓரளவுக்கு, ஒழுங்கா எழுதரதுக்கும், குண்டக்க மண்டக்கா தலைப்பு வெக்கரதுன்னு பொழப்பு ஓடுது.

அதுவும், புலி வருது புலி வருது கதையா, இப்பெல்லாம் என்ன மாதிரி குண்டக்கா மண்டக்கா தலைப்பு வச்சாலும், ஜூடாவ மாட்ரது ;)

சமீபத்தில், எழுதிய,
அனானிகளும், முகமூடிகளும் ஜாக்கிரதை - ஜூடாகல
ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க தேவை - ஜூடாகல
சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல - ஜூடாகல
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், போட்டி - ஜூடாகல

இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

ஜூடாக்கணும் என்ற மோகம் இருந்தால், தலைப்பும் சரி, மேட்டரும் சரி, மொக்கையாவே அமஞ்சுடுது.

எப்பயாச்சும், ஒருதடவ, கொஞ்சூண்டு யோசிச்சு எழுதும் பதிவுக்கும், ஜூடாக்க யத்தினித்து மொக்கைத் தலைப்பு வச்சா, அதுவும், பிசு பிசுத்து போயிடுது.

economic times எல்லாம் படிச்சு, ஓரளவுக்கு சரக்குடன், ஒரு வருஷத்துக்கு அப்பரம், ஒரு பதிவ போட்டு, அதுக்கும், ஒரு மொக்கை தலைப்பா, 'ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க தேவை'ன்னு வச்சா, அதுவும் பிசு பிசுத்து போயிடுச்சு.

ஆனா, இந்தப் பதிவை தமிழிஷ்ஷில் பதிஞ்சா, எந்த தமிலிஷ் புண்ணியவானோ, இதே பதிவுக்கு, தலைப்பை ஸலைட்டா மாத்தி, 'சைவம் vs அசைவம் - ஒரு அலசல்'னு பதிஞ்சுட்டாங்க.

யோசிச்சு பாத்தா, சொல்ல வந்த விஷயத்துக்கு கரெக்டான தலைப்பு அதுதான்.

ஜூடு மாயத்தில் மாட்டிக் கொண்ட, பலரும், இந்த மொக்கை சூராவளியில் சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழ்மணம், இவர்களைக் காத்து நம்ம எழுத்து, அடுத்த கட்டத்துக்கு மேம்பட, செந்தழல் ரவி சொல்லும் உபாயத்தை கூடிய விரைவில் செய்வது, இன்றியமையாத தேவையாகும்.
இல்லன்னா, மொக்கைச் சாகரத்தில் சிக்கித் தவித்து மீள முடியாத ஆழத்துக்கு த.ம செல்லும் வாய்ப்பிருக்கிறது.

செய்வார்களா?

விளம்பரம்: மறந்து விடாதீர்கள்.



;)

6 comments:

ILA (a) இளா said...

தமிலிஷ், தமிழ்மணத்துக்கு போட்டிதான்.

பாபு said...

மிக சரியாக சொல்லியுருக்கிறீர்கள்
தலைப்பை வைத்து அது எப்படிப்பட்ட பதிவு என்று முடிவு செய்ய இயலவில்லை.
எல்லோரையும் இழுக்க வேண்டும் என்பதுதான் தலைப்பின் நோக்கமாக இருக்கிறது.
அதற்கு நாமும் தெரிந்தோ தெரியாமலோ அடிமையாகி இருக்கிறோம்

SurveySan said...

இளா,,

போட்டியெல்லாம் இல்லீங்க.
தமிழிஷ், வேறு வழியில் இயங்குது, DIGG மாதிரி.
தமிழ்மணம், எல்லாத்தையும் திரட்டுது.

ஆனா, சில வருஷத்துக்கு அப்பரம், தமிழ்மணமும் வடிகட்ட ஆரம்பிச்சாதான் நிலைக்க முடியும். கூட்டம் ஜாஸ்தியாயி, மொக்கை ஜாஸ்தியாயிட்டா, நிலைப்பது கஷ்டம்.

இப்பவே, ஜூடு, மாதிரி விஷயங்களை கொஞ்சம், ஒழுங்கு படுத்தி, பெருங்கூட்டத்துக்கு தயாராகணும், தமிழ்மணம்.

செய்வாங்க..

SurveySan said...

பாபு,

நீங்களும், மிகச்சரியா சொல்லியிருக்கீங்க. :)

ஜூடாக்கர நோக்கத்துல, நாமளும், வெத்துப் பதிவா போட்டுத் தாக்கறோம்.

நம்ம நேரமும் விரையம், படிக்கரவங்க நேரமும் விரையம்.

ரவி said...

தமிழ்ஷ்ல நான் போட்ட எல்லா பதிவுகளும் சூடாச்சு...வரும் காலத்தில்ல் எப்படியோ ? (நல்ல பதிவுகள் வரும்போது போட்டி அதிகமாகுமே ?)

நீங்க பளார்னு சொல்லியிருக்கீங்க, நான் கொஞ்சம் ரீஜண்டா சொல்லியிருக்கேன்...

இந்த வீக் எண்ட்ல கொஞ்சம் வேலை பார்த்தாலே நாம சொல்ற சேஞ்ஜ் கொண்டு வந்திடலாம்னு நினைக்கிறேன்...

அதுக்குள்ள தமிழ்ஷ் ரேட்டிங்ல் பிரிச்சு மேயுது...

மாற்றங்களை எதிர்கொள்ள தமிழ்மணம் தயாரில்லை எனில் ஆமை முயல் கதையாயிரும்...

கவனிப்பார்களா நிர்வாகிகள் ?

SurveySan said...

செந்தழல் ரவி,

////தமிழ்ஷ்ல நான் போட்ட எல்லா பதிவுகளும் சூடாச்சு...வரும் காலத்தில்ல் எப்படியோ ? ///

அங்கையுமா? :)

///கவனிப்பார்களா நிர்வாகிகள் ?//

கவனிப்பார்கள்னே தோணுது.

தமிழிஷ்ல கூட,, சூடாக்கும் வோட்டு வாங்குதல், அவங்க் பக்கத்துலதான் இருக்கு.

ஆனா, தமிழ்மணத்துல, கருவிப்பட்டை ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டு ( மைனஸ் பாயிண்ட்டும் கூட ) அதை மேம்படுத்தி, வாசகர் பரிந்துரைக்கு மேலும் வெளிச்சம் காட்டலாம்.