recent posts...

Monday, September 08, 2008

பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்


தூர்தர்ஷன் மட்டுமே இருந்த வசந்த காலங்களில் இசை அரங்கம்னு ஒரு நிகழ்ச்சி போடுவாங்க. தினமும் சாயங்காலம் 6 மணிக்கு வரும்.
எப்பப்பாத்தாலும், ஒரே மாதிரி இழுவையா இருக்கும்.

தாளம்: ஆதி, ராகம்: கல்யாணி, மிருதங்கம்: லக்ஷ்மணன், கடம்: சோமசுந்தர், கஞ்சிரா: ராமசுப்புன்னு ஒரே பெயர் அட்டையை போடுவாங்க. பெயர் அட்டையை காமெராக்கு நேரா காட்டி நகத்தரவரும் தூங்கிக்கிட்டே நகத்தரது மாதிரி இருக்கும்.
அதை படம் எடுக்கும் கேமராக்காரரை நெனச்சாலே பாவமா இருக்கும்.
எப்படிய்யா தெனம் தெனம் சகிச்சுக்கராங்கன்னு.

ஒரு குறிப்பிட்ட நேரம்னு இல்லாம, எப்பெல்லாம் ப்ரோக்ராம் தூர்தர்ஷனுக்கு கிடைக்கலியோ, அப்பெல்லாம் இசை அரங்கம் தான் வரும்.
இசை அரங்கம் அட்டையப் பாத்த உடனே, டேய் 'கில்லி' ஆடலாண்டான்னு பயலுவளோட தெருவுக்கு ஓடிடுவோம்.

சுத்தமா ஒரு ஜீவனே இல்லாம தூங்குமூஞ்சித்தனமா இருக்கும் அந்த நிகழ்ச்சியப் பாத்து, கர்நாடக சங்கீதம்னா சுத்த அறுவை மேட்டருன்னு நெனச்சிருந்த காலம்.
குறிப்பா, ஜொய் ஜொய்ன்னு இழுக்கும் வயலின் செம அறுவையா இருக்கும்.

அந்த மோல்டை தூக்கிப் போட்டு மிதிச்சவரு குன்னக்குடி வைத்யநாதன்.

ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது பாத்திருப்பேன்னு நெனைக்கறேன். இதே தூர்தர்ஷன்ல, பட்டையா நெத்தீல விபூதி, நடுவுல பெரிய குங்குமம் வாய் நிறைய பல்லுன்னு பளிச்னு இருப்பாரு மனுஷன்.
தலைய ஆட்டி ஆட்டி அவரு வாசிக்கர அழகு, ஒண்ணும் புரியலன்னாலும், ஒரு வசீகரம் தந்தது.
பாட்டுக்கு நடுவுல, திடீர்னு, வயலின் கம்பிய புடிச்சு டொய்ங் டொய்ங்னு வேர தாளம் போட்டாரு. அட, இது நல்லாருக்கேன்னு நினைக்க வச்சது.

அப்பரம், அக்கம் பக்க மாமாஸின் இலவச கேசட்டால், குன்னக்குடி மேலும் பரிச்சயம் ஆனார்.

ஆனா, எங்க மத்தியில அவரு பெரிய ஹிட்டானது, வயலினில் சினிமா பாட்டெல்லாம் ஒரு தீபாவளிக்கு வாசிச்ச போதுதான்.
பின்னிட்டாரு பின்னி. ராக்கம்மா கையத் தட்டுலேருந்து, சின்ன ராசாவே சிட்டெறும்பு கடிச்சுதாங்கரது வரைக்கும் வாசிச்சுத் தள்ளினாரு.

இப்பவும், ராத்திரி பல நாட்களில் தூங்கரது, அவரின் மெல்லிய வயலின் இசை கேட்டுத்தான்.

கர்நாடக சங்கீதம் எனக்கு சுத்தமா தெரியாது. ஆனால், சில பாடல்களை பாடினாலோ, கருவியில் வாசித்தாலோ மிகவும் விரும்பிக் கேட்பேன்.
இந்த ரசனை என் அக்கம் பக்க 'மாமாஸ்' கொடுத்த ஓ.சி கேசட்டின் பலன் தான் என்பது திண்ணம். அவர்களுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த ஜகதோதாரணா பாடல், பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் வாசிப்பத்தை கேட்டுப் பாருங்கள். கர்நாடக சங்கீதம் பரிச்சியம் இல்லாதவர்கள், அது அறுவை என்று நினைப்பவர்கள், headphoneல் இரண்டு மூன்று முறை கேட்டுப் பாருங்கள். லயித்துவிடுவீர்கள்.
பிடிச்சிருச்சா, இப்ப ஜகத்ஜனனியூம் கேட்டுப் பாருங்க.

அவரின் மறைவு, நமக்கு பெரிய இழப்பு.

செய்யும் வேலையை மிகவும் ரசித்து ஆத்மார்த்தமாய் செய்பவர்களை காண்பது மிக மிக அரிது.
குன்னக்குடி அந்த வகை.

குன்னக்குடி 'மூச்' விடாம வாசிச்ச மண்ணில் இந்த காதல் பாட்டு கீழே.

Great man, he was!


குன்னக்குடி சார், we will miss you!

6 comments:

Sridhar V said...

உண்மை. அவருடைய இறப்பு இசைக்கு நேர்ந்த பெரும் இழப்பு. :-(


//அக்கம் பக்க மாமாஸின் இலவச கேசட்டால், //

இலவசம் உங்களுக்கு கேசட் எல்லாம் கொடுத்தாரா? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அவரின் மறைவு, நமக்கு பெரிய இழப்பு.

செய்யும் வேலையை மிகவும் ரசித்து ஆத்மார்த்தமாய் செய்பவர்களை காண்பது மிக மிக அரிது.
குன்னக்குடி அந்த வகை.//

மிக உண்மை.

நானும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்திக்கறேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tech Shankar said...

அன்னாருக்கு இதயஞ்சலி.

இன்று (09/09/08) காலை, 9 மணிக்கு பொதிகை அலைவரிசையில் குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அய்யா அவர்களின் வயலின் இசையை ஒளிபரப்பினார்கள் அதைப் பார்த்துவிட்டுத்தான் அலுவலகம் வந்தேன்.

SurveySan said...

colorsனு ஒரு பழைய ஆல்பம், fusion type album.

excellent piece by kunnakudi, zakir husain, sivamani & co. Rahman Orchestrated,

click here to here to it -
http://video-thf.blogspot.com/2008/09/blog-post_09.html

SurveySan said...

somebody, please add more content to wikipedia page of kunnakudi.

Anonymous said...

கோவை பாடும் நிலா பாலு ரசிகர்கள் சார்பாக குன்னக்குடியாரின் மறைவு பெரும் இழப்பு. அவரின் இசை என்றும் வாழும்.