recent posts...

Tuesday, September 16, 2008

ரொம்ப ரம்யமான மலையாளப் பாட்டு

இளையராஜாதான் ஜனரஞ்சகமா ஒருகாலத்துல பாட்டெல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாரு.
பாட்டக் கேட்டாலே, மனசு லேசா ஆகிடும்.
கண்ணே கலைமானே பாட்டு எங்க கேட்டாலும், இதமா இருக்குல்ல? அந்த மாதிரியெல்லாம் போட இப்ப ஆளில்லாம போயிட்டாங்க.
ராஜா காணாம போன பிறகு அந்த இடத்தை ஒரு பயலும் நெறப்ப முடியல.
ரஹ்மான், ஓரளவுக்கு கிட்ட வந்தது, 'பச்சைக் கிளிகள் தோளோடு' பாட்டுலதான்.
பம்பாய் தீம் ம்யூசிக், டச்சிங்கா இருக்கும், வேர ஒண்ணும் நெனவுக்கு வரமாட்ரது.

சரி, இக்கரைதான் இப்படி ஆயிடுச்சு, மத்த கரைகளெல்லாம் எப்படி இருக்கோ?

மலையாளத்தில், மானச மைனே வரூன்னு, மன்னாடே செம்மீன் படத்துல பாடி வசியம் பண்ணினாரு.
AsiaNetன், star singer யூட்யூப்ல பாத்தா, அங்க ஜட்ஜா வர மூஜிக் டைரக்டர்ஸ், விஷய ஞானம் இருக்கர ஆளுங்க மாதிரிதான் தெரியுது. மெலடிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கராங்க.
ஜெயசந்திரன்னு ஒருத்தர் இருக்காரு. அம்சமா பாட்டு போடறாரு. இவரு இசை அமைத்த பெருமழைக்காலம்னு ஒரு படம், அம்சமான படம். அதில கூட ஒரு பாட்டு சுண்டி இழுக்கும் வகை.

இந்த ஜெயச்சந்திரன், மோகன்லால் படமான 'பாலேட்டன்'ல போட்ட ஒரு பாட்டு சமீபத்தில் கண்ணில் பட்டது. மகனுக்கும், தந்தைக்கும் இருக்கும் பாசத்தை ப்ரதிபலிக்கும் பாடல்.

சுண்டி இழுத்துடுச்சு என்னை.

ரெண்டு மூணு தடவை கண்ணை மூடிக்கிட்டு கேட்டுப் பாருங்க. சுவய்ங்க்னு இழுத்திடும்.
பாடரது, கான கந்தர்வன் ஆச்சே.

இன்னலே என்டே நெஞ்சிலே....


ராஜா சார், மலையாளத்தில் ஜெயச்சந்திரன் போடர மாதிரி, ஜனரஞ்சகமா இந்த மாதிரியெல்லாம் நெறைய போட்டுக் கொடுங்க சார். ஒரே வறட்சியா இருக்கு சார், நம்ம தமிழ் சினிமா பாட்டெல்லாம். எனக்குத் தான் வயசாவுதான்னு தெரியல சார். சமீபத்தில் என்ன பாட்டு சார் சாந்தமா கேக்கர மாதிரி இருக்கு? எல்லாமே, அலரல் டைப்பு சார்.

சமீபத்தில் வந்த, தனம் படத்தில், நீங்க போட்ட, கண்ணனுக்கு என்ன வேண்டும் பாட்டு நல்லாயிருந்தது சார். என்னதான் உங்க குடும்பப் பாடகிய பாட வச்சிருந்தாலும், அந்தப் பாட்டு நல்லாவே இருந்துச்சு சார்.
ஆனா, உங்க லெவலுக்கு அதெல்லாம் ஒண்ணுமே இல்ல சார். நெறைய எதிர்பாக்கறோம் சார். மத்த பாட்டெல்லாம் அந்த படத்துல (கூத்து ஒண்ணு, கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள) ரொம்ப கேவலம் சார். ஆனா, படத்துக்கு ஏத்த லெவலுக்கு பாட்டு இருந்துச்சு சார்.

பாத்து செய்யுங்க சார், தயவு செஞ்சு! ரொம்பவே காஞ்சு போயிருக்கோம் சார் :(


எனி நியூ ஜனரஞ்சக பாட்டூஸ் யூ ரெக்கமெண்ட்?
லெட் மீ நோ!

;)

2 comments:

கா.கி said...

raja sir மலையாளத்துல நெறைய நல்ல பாட்டு போட்ருக்காரு... உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன், அந்த "சங்கத்தில் படாத கவிதை" பாட்டு originala மலையாளத்துல போட்டதுதான்... linka கிளிக்கி இருக்குற பாட்ட கேளுங்க... இது ஜெயராம் நடிச்ச 'மனசின்அக்கரே' (2004) படத்துல வந்த பாட்டு... பாட்டு சூப்பர் ஹிட்... படம் எப்படின்னு தெரியல... நம்ம நயன்தாரா அறிமுகம் இந்த படத்துலதான்... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...

http://www.esnips.com/doc/18ef0abd-fe97-4142-812a-3c89bd6deb3b/Marakkudayal

SurveySan said...

karthick, நல்ல பாட்டு.

ஆனா, கான கந்தர்வன் கொரல் இல்லாம, கேக்க என்னவோ போலயிருக்கு ;)