பெயர்: இளையராஜா
இயற்பெயர்: Daniel ராசையா
வயது: 65
வேலை: இசை அமைப்பாளர். எழுபதுகளில் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களிடம் கிட்டார் வாசிப்பவராகவும், இணை-இசை அமைப்பாளராகவும் பணி புரிந்து, அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் 1976ல் மக்களுக்கு அறிமுகமானார்.
80களில் இவர் வசியம் செய்யாத தமிழனே இருந்திருக்க முடியாது. இவர் இசை அமைத்த ஒரே காரணத்துக்காக, சகலத்தையும் சகித்துக் கொண்டு, பல திராபைப் படங்களை, இவரின் ரசிகர்கள் நூறு நாட்கள் ஓட வைத்துள்ளனர் என்பது இவரது இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டு. திரை இசை தந்த வெற்றியின் காரணமோ என்னமோ, திரை இசையைத் தவிர்த்து மற்ற இசை உருவாக்கங்களை இவர் பெரிதாக வெளிக் கொணரவில்லை.
இவர் காண்பதர்க்கு எளிமையாக ஞானி போல் காட்சி அளித்தாலும், மக்கள்-தொடர்பு விஷயத்தில் பெரிதாகக் கோட்டை விட்டவர்.
மிகவும் தன்னடக்கம் உள்ளவர் போன்று தோன்றினாலும், இவர் பல சமயம் 'தான்' என்ற மமதையை பேட்டிகளில் வெளிக்காட்டியவர்.
பல, சக படைப்பாளிகளுடன் சில பல காரணங்களால் அனுசரித்துப் போக முடியா சூழலை உருவாக்கி வைத்துள்ளவர். இந்த உட்பூசல்களால், பல நல்ல படைப்புகள் ரசிகனுக்குக் கிடைக்காமல் போகும் நிலைக்கு வித்திட்டவர்.
90களிலும் இவரின் ஆளுமை தொடர்ந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெகு சில படங்களில் மட்டுமே இவரின் பழைய ஆளூமை தெரிந்தது.
காணாமல் போன நாள்: ஜூலை 1, 2005. (திருவாசகம் ரிலீஸ் ஆன நாள்)
அடையாளங்கள்: காணாமல் போன அன்று இவர் வழக்கமாகப் போடும் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பாவுடன் காணப்பட்டார்.
மேலும் விவரங்கள்: பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பழைய முத்திரையை மீண்டும் பதித்த திருவாசகம் ரிலீஸ் ஆனது. இவரின் ஆட்டம் முடிந்தது என்று நினைத்து மற்ற இசை அமைப்பாளர்களுக்குத் தாவிய ரசிகர்களெல்லாம், மீண்டும் ராஜா பக்கம் தாவியிருந்த நாள் அன்று. இனி தொடர்ந்து கலக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ராஜா காணாமல் போனது பெரும் வருத்தத்தைத் தந்தது.
நிழல்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நினைவெல்லாம் நித்யா, மூன்றாம் பிறை, நாயகன், சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற பெரும் படைப்புகள் இனி வராவிட்டாலும், அதில் 50% தாக்கத்தையாவது ராஜா திரும்பக் கிடைத்ததும் தருவார் என்ற ஏக்கத்தில் அவரின் ரசிகர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
சக படைப்பாளிகளிடம், விரோதம் பாராட்டாமல், சகஜ நிலைக்குத் திரும்புவார் என்றும் இந்த ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.
ராஜா திரும்பக் கிடைப்பாரா? விவரம் அறிந்தவர்கள் உடனே தெரியப் படுத்தவும்.
மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன்,
-ரசிகன்
பி.கு1: கானா பிரபாவின் குணா பதிவு பார்த்ததும் வந்த ஆற்றாமையால் வந்த பதிவு இது :)
பி.கு2: நான் தீவிர ராசா ரசிகன். :(
பி.கு3: ராஜா சவுக்கியமா இருக்காருங்க. காணாமலெல்லாம் போகலை. தலைப்பை மட்டும் படித்து விட்டு, கடைசி வரி படிக்கும் வாசகர்களுக்கு, இந்த பி.கு :)
ராஜா, மீண்டும் அடித்து ஆடுவார் என்ற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து
-சர்வேசன் :)
43 comments:
சர்வே!
//ராஜா, மீண்டும் அடித்து ஆடுவார் என்ற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து //
ராஜா மறுபடியும் அடிச்சு ஆடுவாரா இல்லையோ, எனக்கென்னவோ இங்க போட்டிருக்கற சில கருத்துக்களுக்காக (அவை என்னென்னென்னு உங்களுக்கே தெரியும்!) நீங்க செமத்தியா அடிபடப் போறீங்கன்னு நினைக்கிறேன்!
வெங்கட்ரமணன்!
வெங்கட்ரமணன்,
//நீங்க செமத்தியா அடிபடப் போறீங்கன்னு நினைக்கிறேன்!
//
என்னன்ங்க இப்படி வில்லங்கமா ஆரம்பிச்சிட்டீங்க?
கருத்தை கருத்தால எதிர்கணும். நம்மாளுங்க அப்படிதான் செய்வாங்க :)
உளியின் ஓசையில் ராஜா ருவெண்டி ருவெண்டி சதமே அடித்திருக்கிறார். குறிப்பாக இரண்டு பாடல்கள். ராஜா என்றைக்கும் ராஜாதான். அவரின் நாற்காலியில் அமரும் தகுதி யாருக்கும் கிடையாது,.
enna boss solreenga....Raja innum thannoda aalumai koraikala....makkalahiya nammaaloda rasippu thanmaithaan maariduchu......Yellarum paatula irukura tham thoom nu adikira beat-a mattum thaan paakuraanga...athe mathiri entha oru kalaignanume vyabara reethiya thaan rate panreenga....Uliyin osai kettu paathengala....Raja eppavumey oru padathoda paata antha padathoda kadhayoda thaan potriuppar....kadahikku sambatham illama paadal irukurathu remba kammi...matha MD-s ellarum makkala kavarukiren pervalinnu...kanda paatellam poduvaanga....I think because of this mentality it looks like Raaja is out of race...Try to read the reviews of his albums....even Uliyin Osai...you'll know what he's upto....Thannoda karapani thirana oru thiraikadhaikku use panra ore Piravi Raajavathan irukkum....
வந்தியத்தேவன்,
//உளியின் ஓசையில் ராஜா ருவெண்டி ருவெண்டி சதமே அடித்திருக்கிறார். குறிப்பாக இரண்டு பாடல்கள்.//
எந்தப் பாட்டுங்க? பிதாமகன் அளவுக்குக் கூட என்னை எந்தப் பாட்டும் ஈர்க்கவில்லை. சோழவளநாடு பாட்டா? டி.வி. சீரியல் பாட்டு மாதிரி இருந்தது அது.
கல்லாய் இருந்தேன், புலர்கால பாட்டெல்லாம் ஓ.கே, ஆனா ஒரு ஹிஸ்டாரிக் படத்துக்கு இன்னும் எதிர்பார்த்தேன். :((
/// ராஜா என்றைக்கும் ராஜாதான். அவரின் நாற்காலியில் அமரும் தகுதி யாருக்கும் கிடையாது,.///
இது முழுதும் உண்மை. உடன்படுகிறேன்.
அவரின் இடத்தை அவரே கூட ரொப்ப மூடியாமல் போனதில்தான் எனக்கு வருத்தம் :(
ஜொஜிம்போ,
///makkalahiya nammaaloda rasippu thanmaithaan maariduchu////
இது யாரோ கெளப்பிவிட்ட புரளி.
இத்த நம்பிதான், பல மூஜிக் டைரக்டர்ஸ் சொதப்பிக்கிட்டு இருக்காங்க.
இவர் கொஞ்சம் அனுசரித்து போய்யிருந்தால் இன்று மணிரத்தினம்,பாரதிராஜா,பாலசந்தர் போன்ற தேர்ந்த இயக்குனர்கள் இன்று ராஜாவை தவிர்த்திருக்க மாட்டார்கள்.
இதனால் ராஜாவிற்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை என்றாலும், ரசிகர்களுக்கு பெரிய இழப்புதான்.
bleachingpowder, (சூப்பரா இருக்கு உங்க பேரு :) ),
////இவர் கொஞ்சம் அனுசரித்து போய்யிருந்தால் இன்று மணிரத்தினம்,...///
ஹ்ம். behind the scenes என்ன நடந்ததுன்னு தெரியல. ஆனா, அனுசரித்து போகவேண்டிய அவசியம் ராசாவுக்கு கண்டிப்பா இல்லை. கலைஞன் என்றாலே ஒரு சின்ன 'திமிர்' இருக்கும்தான். ஆனா, தொடர்சியா பலர் கிட்ட இது ஏற்பட்டதுதான் நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பு.
:(
//காணாமல் போன நாள்: ஜூலை 1, 2005. (திருவாசகம் ரிலீஸ் ஆன நாள்)//
உண்மையில் ரோஜா படம் வெளிவந்த நாள் என்று நினைக்கிறேன்.. அதன் பிறகு அதிசயமாகவே அவருடைய திறமை பளிச்சிடுகிறது :-(
கிரி,
ரோஜா வந்தப்பரம் எல்லாம் நெறைய போட்டுட்டாரேங்க.
பாரதி, அழகி, அவதாரமெல்லாம் அதுக்கப்பரம் வந்ததுதானே.
ஆனா, 80களின் வீச்சு அப்பரம் இல்லாமல் போனது உண்மையோ?
//SurveySan said...
கிரி,
ரோஜா வந்தப்பரம் எல்லாம் நெறைய போட்டுட்டாரேங்க.
பாரதி, அழகி, அவதாரமெல்லாம் அதுக்கப்பரம் வந்ததுதானே.//
பிதாமகன் காதலுக்கு மரியாதை ஹேராம் விருமாண்டி சேது னு பல படங்கள் இருக்கு
//ஆனா, 80களின் வீச்சு அப்பரம் இல்லாமல் போனது உண்மையோ?//
உண்மை தான். அதை தான் நானும் கூறுகிறேன். எனக்கு உளியின் ஓசை இவருடையது என்று இப்போது தான் தெரியும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம்.
நானும் ராஜாவுடைய மிகப்பெரிய விசிறி. பொதுவாக ஆம்பிளை அழ மாட்டான்னு சொல்லுவாங்க. ஆனா ஒருவன் சோகமா இருக்கறப்போ இளயராஜாவின் சோக கீதங்களை கேட்டா போதும், தாரை தாரையா கண்ணீர் வரும்.
அவரின் இசையின் மகத்துவத்துக்கு ஒரு சான்று இங்கே:
http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-03/ilayaraja-17-07-08.html
நீங்க சொல்வது போல் எண்பதுகளில் இருந்த அவருடைய அந்த வீச்சு இப்போது இல்லை தான். இப்போதுள்ள டைரக்டர்களும் இவரை அணுகுவதில்லை.
செல்வராகவன்,அமீர்,ராம் போன்ற இயக்குனர்கள் போன்ற இயக்குனர்கள் ராஜாவுடன் சேர்ந்து பணிபுரிந்தால் சிறப்பாக இருக்கும்.
ஏனோ தெரியவில்லை சேரனை, ராஜா எப்போதுமே பழிவாங்கிவிடுகிறார் :(. தேசிய கீதமும் சரி, மாயக்கண்ணாடியும் சரி
சர்வேசன்.. என்ன இது? தலைவரை போயி..
உங்க ஆதங்கம் புரியுது.. அதுக்காக காணவில்லை, அது இதுன்னு.. கஷ்டமா இருக்கு நண்பா..
இப்போதான் தனம் இசை வெளியீடு"ன்னு தினத்தந்தில விளம்பரம் பாத்துட்டு வர்றேன். இசைஞானி இளையராஜா சுவாமிகளின் இசையில் என்று போட்டிருந்தார்கள்..
அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அவரது "இளம்காத்து வீசுதே" எப்படி?
அழகியில் நந்திதாதாசை சந்தித்து, மழையில் பார்த்திபன் நடக்கும் போது "உன் குத்தமா" ன்னு ஆரம்பிக்குமே அப்போ அழுதிருக்கீங்களா?
சேதுவுல அபிதாவோட சடலத்தைப் பார்த்துட்டு விக்ரம் திரும்பும் போது "வார்த்தை தவறி விட்டாய்"ன்னு ராஜாவோட குரல் ஆரம்பிக்கறத இப்போ நெனச்சாலும் அழுக வரலியா?
தளபதி- காட்டுக்குயிலு" பாட்டு இசையக் கேட்டால் இப்பவும் ஆடத் தோணலியா?
இப்படி எத்தனை எத்தனை...
ஒரு சிகரம் நோக்கி நடக்கும் நீங்கள், அதன் உயரத்தை அடைந்தபின், என்ன செய்வீர்கள்? இறங்க முடியாது.. எண்ணிப்பார்க்கவே முடியாத உயரம்! அங்கிருந்து கீழே பார்த்து ஆனந்தப் பட்டுக் கொள்வீர்கள் தானே? அப்படித்தான் ஆகிவிட்டார் தலைவரும் என நினைக்கிறேன்!
//இவர் இசை அமைத்த ஒரே காரணத்துக்காக, சகலத்தையும் சகித்துக் கொண்டு, பல திராபைப் படங்களை, இவரின் ரசிகர்கள் நூறு நாட்கள் ஓட வைத்துள்ளனர் என்பது இவரது இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டு//
:) :)
;-)
ராஜா எப்பவும் ராஜா தான், ஆனால் நானும் பரம ரசிகன் என்ற வகையில் ராஜா பற்றிய என் ஆதங்கம்.
1. புதுப்பாடகர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுதலுக்காக திப்பு, பவதாரணி வகையறாக்களை போடாமல், ஹரிஷ் ராகவேந்திரா, சிறீராம் பார்த்தசாரதி வகையறாக்களைப் போடலாம்.
2. ராஜாவின் இசையின் மகத்துவத்தைப் புரிந்து இன்றுவரை சிறப்பாகப் பாடும் எஸ்.பி.பி, மனோ, ஜேசுதாஸ், சித்ரா, உமாரமணன், ஜானகியை ஆதரிக்கணும். ஜானகியை மேடைக்கே ஏத்துறதில்லையே?
3. பின்னணி இசையில் ரகுமானின் பேரன் வந்தாலும் இப்போதும் ராஜா ராஜா தான்.
4. வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை.
கொசுறு: வைரமுத்துவை கழற்றி விட்ட ரகுமான் இப்போது அவ்வளவு எடுபடுவதில்லை.
4. மற்றப்படி அவரின் ஈகோ தான் சரிவுக்கு முழுப்பொறுப்பு என்பதை ஏற்கமாட்டேன், 80 களில் இருந்த முக்கிய ஏழு நட்சத்திர நடிகர்களில் தப்பியது ரஜினியும், அவ்வப்போது கமலும் தான். மாற்றம் என்பதே மாறாதது.
பதிவு மட்டும் படிச்சிட்டுப் பின்னூட்டத்துக்கு இடைவெளிக்குப்பின்னால வரலாமுன்னு இருக்கேன்.
1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்.
2.டி.எம்.எஸ் ஸின் குரல்வலத்தையும் பயன்படுத்தியிருக்கலாம்.அதுவும் நமக்கெல்லாம் இழப்பு.
//வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை.//
கதவ சாத்தலாமுன்னு போனா மேற்கொண்ட வாசகங்கள் கண்ணுல பட்டுது.கானாபிரபாவே சொல்லிட்ட பிறகு நான் என்னத்தச் சொல்ல.வர்றேன்.
What is the contribution of V.S. Narashiman to Raja's success?
தலைவரைக் காணவில்லையா?
நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டேன். மாயக்கண்ணாடியில்கூட பின்னணியில் தூள் பரத்தி இருக்கார். உளியின் ஓசை கூட பாட்டுகள் நல்லாவே இருக்கு. (பின்னணி இசையைக் கேக்கறதுக்கு படம் பாக்கணுமாமே.. அந்த ரிஸ்க்கை எடுக்கறதுக்கு ரஸ்க்கே சாப்பிடலாம் :-))
நான் கடவுள் வேற வரப்போகுது!
வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏத்துக்கற கட்டத்தை அவர் எப்பவோ தாண்டிட்டார். கிடைக்கிற படங்கள் - பாடல்கள் பேசப்படாத அளவுக்கே இருக்கு. இதெல்லாம் வச்சு ஆளாளுக்கு தலைவரையே கலாய்க்கிறீங்களே!
bleachingpowder,
////ஏனோ தெரியவில்லை சேரனை, ராஜா எப்போதுமே பழிவாங்கிவிடுகிறார் :(. தேசிய கீதமும் சரி, மாயக்கண்ணாடியும் சரி////
:) கானா பிரபாவின் குணா பதிவில், கடைசி ஆடியோ கேட்டுப் பாருங்க.
கமல்/சந்தானபாரதி கோஷ்டி ராஜாகிட்ட எப்படி பாட்டு வாங்குவாங்கன்னு கத்துக்கலாம்.
பரிசல்காரன்,
///உங்க ஆதங்கம் புரியுது.. அதுக்காக காணவில்லை, அது இதுன்னு.. கஷ்டமா இருக்கு நண்பா..////
எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. இப்படி ஏதாவது அடிச்சு ஆடினா, யார் கண்ணிலையாவது பட்டு, நல்லது நடக்காதான்னு ஒரு இதுதான் :(
/////அவரது "இளம்காத்து வீசுதே" எப்படி?
அழகியில் நந்திதாதாசை சந்தித்து, மழையில் பார்த்திபன் நடக்கும் போது "உன் குத்தமா" ன்னு ஆரம்பிக்குமே அப்போ அழுதிருக்கீங்களா?
////
இப்படி கண்டிப்பா சிலதை அடிக்கிக்கிட்டு போகலாம். நிஜமாவே ஏ கிளாஸ் தான்..
ஆனா, பத்தாது இதெல்லாம். இன்னும் பழைய வீச்சு வேணும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதேயெல்லாம் பண்ணவரு எங்கங்க போயிட்டாரு? :(
பரிசில்காரன்,
////ஒரு சிகரம் நோக்கி நடக்கும் நீங்கள், அதன் உயரத்தை அடைந்தபின், என்ன செய்வீர்கள்? இறங்க முடியாது.. எண்ணிப்பார்க்கவே முடியாத உயரம்! அங்கிருந்து கீழே பார்த்து ஆனந்தப் பட்டுக் கொள்வீர்கள் தானே? அப்படித்தான் ஆகிவிட்டார் தலைவரும் என நினைக்கிறேன்!
////
ஹ்ம். இன்னும் நிறைய அடிச்சு ஆட வயசு இருக்கு.
மொஜார்டுகளும், பீத்தோவன்களும் பட்ட கஷ்டமெல்லாம் இவருக்கு இப்ப இல்லியே. ஆதரிக்க லட்சோபலட்சம் பேரு இருக்கோமே?
கொஞ்சம் மெனக்கெட்டு அனுசரிச்சா ஆயிரமாயிரம் இசை அவதாரங்கள் கிடைக்குமே. :)
பிரபா,
#1 & #2 OK.
///3. பின்னணி இசையில் ரகுமானின் பேரன் வந்தாலும் இப்போதும் ராஜா ராஜா தான்.///
உண்மைதான். ஆனா, மத்தவங்களும் இவர் உயரத்துக்கு வந்துட்டாங்க்க. ரஹ்மான் பின்ன ஆரம்பிச்சிட்டார்ரு, நெறைய காசு கொடுத்தா ;)
ரெண்டு #4 போட்ட நுண்ணரசியல் என்ன? :)
///4. மற்றப்படி அவரின் ஈகோ தான் சரிவுக்கு முழுப்பொறுப்பு என்பதை ஏற்கமாட்டேன், 80 களில் இருந்த முக்கிய ஏழு நட்சத்திர நடிகர்களில் தப்பியது ரஜினியும், அவ்வப்போது கமலும் தான். மாற்றம் என்பதே மாறாதது.///
வேறென்ன இருக்க முடியும்? இப்பவும் நல்ல படம், கும்பிடும் டைரக்டர் கிடைச்சா, பூந்து வெளையாடறாரே தலைவர்.
பினாத்தல் சுரேஷ்,
////வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏத்துக்கற கட்டத்தை அவர் எப்பவோ தாண்டிட்டார். கிடைக்கிற படங்கள் - பாடல்கள் பேசப்படாத அளவுக்கே இருக்கு. இதெல்லாம் வச்சு ஆளாளுக்கு தலைவரையே கலாய்க்கிறீங்களே///
அது சரிதான். ஆனால், ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பெல்லாம் முத்து முத்தா வந்த காலம் மலையேறிப் போச்சே?
நான் கடவுளுக்காக நானும் வெயிட்டிங். கண்டிப்பா அடிச்சு ஆடியிருப்பாருன்னு நம்பறேன்.
வருஷத்துக்கு ஒரு தடவ இந்த மாதிரி வந்தா பத்தாது. ஒரு நாலஞ்சாவது வந்தாதானே mp3 ப்ளேயரை ரொப்ப முடியும்? :(
இளையராஜாவிடமிருந்து கங்கை அமரனும் ஏ.ஆர்.ரகுமானும் வெளிவந்த பின் அவர் (சிறைச்சாலை தவிர்த்து) எந்த படத்திலும் மிரட்ட வில்லை என்பது கசப்பான உண்மை.
இளையராஜா ஒரு சிறந்த composer ஆனால் orchestrationல் அவருக்கு உதவியது கங்கை அமரனும் ஏ.ஆர்.ஆரும் தான் என்று இசைத்துறையில் சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.
இருவரும் வெளிவந்த பின் வந்த ராஜாவின் படங்கள் வெறும் மெலடி மட்டுமே இருந்தது. தளபதி போலவோ, புது புது அர்த்தங்கள் போலவோ, வருஷம் 16 போலவோ, புன்னகை மன்னன் போலவோ இசைக்கோர்ப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் வெளியேறியது தான் என்கிறார்கள்
--
ராஜா ரசிகர்கள் இதை கண்டிப்பாக மறுப்பார்கள். ஆனால் திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் என்ன தோன்றுகிறது
Bruno,
///இளையராஜாவிடமிருந்து கங்கை அமரனும் ஏ.ஆர்.ரகுமானும் வெளிவந்த பின் அவர் (சிறைச்சாலை தவிர்த்து) எந்த படத்திலும் மிரட்ட வில்லை என்பது கசப்பான உண்மை.
//
இது என்ன புதுக் கதை? ஏ.ஆர்.ஆர் ஆர்கெஸ்ட்ரேஷன் பண்ணாரா? கீ-போர்டு வாசிச்சிருக்காருன்னு தெரியும்.
ராஜா கூடவே, கண்ணாடி போட்டுக்கிட்டு எப்பவும் ஒருத்தர் இருப்பாரே, அவருதான ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாம் பாத்துப்பாரு?
V.S. நரசிம்ஹனும் ராஜா டீமில் இருக்காருன்னு நான் நினைக்கிறேன்.
ஆனா, இந்தத் தொய்வுக்கு என்ன காரணமுன்னு கண்டுபிடிச்சு யாராச்சும் சரி செஞ்சா நல்லது.
சிறைச்சாலைக்குப் பிறகு, ரீசண்டா வந்த பிதாமகன், அழகியிலெல்லாம் பழைய மிரட்டல் ஓரளவுக்கு இருக்குமே.
மாயக்கண்ணாடி, உளியின் ஓசையெல்லாம் ரொம்ப டைல்யூட்டட்!
புருனோ,
///ராஜா ரசிகர்கள் இதை கண்டிப்பாக மறுப்பார்கள். ஆனால் திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் என்ன தோன்றுகிறது///
இந்த எதிர்பார்ப்பில் போட்ட பதிவுதான் இது :)
VSK has been in touch with Raja for sometime while he visited the US for thiruvasagam. hope he has some inputs here.
//கிரி said...
//காணாமல் போன நாள்: ஜூலை 1, 2005. (திருவாசகம் ரிலீஸ் ஆன நாள்)//
உண்மையில் ரோஜா படம் வெளிவந்த நாள் என்று நினைக்கிறேன்.. அதன் பிறகு அதிசயமாகவே அவருடைய திறமை பளிச்சிடுகிறது :-(//
கிரி,
சேது பாட்டு எல்லாமே பட்டையை கிளப்புச்சே. அழகிக்கு உயிர் கொடுத்ததே ராஜாவோட இசை தான்.
ராஜா எப்பவுமே ராஜா தான்...
இந்தப் பதிவையும், அதன்பின் வந்த பின்னூட்டங்களையும் படித்தேன்!
மகிழ்ந்தேன்.
நான் ஒரு ராஜா ரசிகன்! பலமுறை அவரைச் சந்தித்துப் பழகி இருக்கிறேன்! எனக்குப் பிடித்த இசையமைப்பாளரும் அவரே!
அதே சமயம் நல்ல இசை எவரிடமிருந்து வந்தாலும் ரசிப்பவன்.
என்னுடைய கருத்து இதுதான்!
ஆண்டவன் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு பத்து ட்யூன்களைக் கொடுத்து அனுப்புகிறார்.
அதில் எத்தனை மாற்றங்களை உண்டாக்குவது என்பது அவரவர் சம்பந்தப்பட்ட திறமை.
அதில் ராஅஜா ஒரு 30 ஆண்டுகள் கோலோச்சினார்! இப்போது அவரிடம் சரக்கு தீர்ந்தாயிற்று!
ராஜாவின் எல்லாப்பாடல்களையும் அதேபோல,மற்ற எல்லாருடைய இசையையும் இப்படி ஒரு பத்து ட்யூன்களுக்குள் அடக்கிவிடலாம்.
இனி அவரால் செய்ய ஒன்றுமில்லை.... செய்யவும் முடியாது!
எம்மெஸ்வி இப்படித்தான் ஒடுங்கினார்.
இப்போது ராஜா!
அவரை விட்டுவிடுங்கள்.
ஏஆர்ஆரும் இப்படியே மங்கிக் கொண்டிருக்கிறார்.
மற்றவர்களும் இப்படியே!
அப்போதுதான் புதியன பிறக்கும்!
லெட் ராஜா லிவ் இன் பீஸ்! அண்ட் நாட் இன் பீஸெஸ்!
:)))))))))
உளிஓசை படப் பாடல்கள் அத்தனையிலும் என்னால் ஒரு பழைய ட்யூனைப் பார்க்க முடிந்தது!
அவரால் அதைத் தாண்டி வர முடியாது!
அவரால் மட்டுமல்ல!
எவராலுமே!
இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவர் மட்டுமே மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கானா பிரபா சொன்னது போல மாற்றம் என்பது மாறாத தத்துவம். இளையராஜா வந்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சோபிக்கவில்லையே. நடுநடுவில் கன்னே கனியமுதே, ஜனனி, ராஜநடை என்று நல்ல பாட்டுகள் உள்ள படங்களும் வந்தன. சிறை மாதிரி உண்மையிலேயே மெல்லிசைப் பாடல்கள் கொண்ட படமும் வந்தன. ஆனால் முடிந்தது முடிந்ததுதான். அது போலத்தான் இங்கும்.
இளையராஜா நம்மைக் கூட்டிச் சென்ற உயரங்களைக் காண்கையில் அழகியெல்லாம் ஒன்றுமேயில்லை. உளியின் ஓசை பாட்டெல்லாம் உண்மையிலே மிகச் சுமார்தான். கல்லாய் நின்றேன் பாடல் மட்டும் தேவலை. ஆனால் அது கூட காதல் வானிலே பாட்டை நினைவு படுத்துகிறது. ஒரு சரித்திரப் படத்துக்குத் தேவையான அழுத்தம் சிறிதும் இல்லை என்பதே உண்மை.
இளையராஜாவின் வரவினால் மற்றவர்களுக்கு விளைந்தவைகளே இளையராஜாவிற்கு இப்பொழுது விளைந்திருக்கிறது. மாற்றம் என்பது மாறாத தத்துவம்.
வெட்டி,
////கிரி,
சேது பாட்டு எல்லாமே பட்டையை கிளப்புச்சே. அழகிக்கு உயிர் கொடுத்ததே ராஜாவோட இசை தான்.///
சேது, பாட்டு சுமார் தான். பின்னணி ஈசை அமக்களப்படுத்திடுச்சு.
அழகி, பாட்டும் பின்னணியும் அருமை.
///ராஜா எப்பவுமே ராஜா தான்...////
ஹ்ம். இங்க தான் இடிக்குது. இப்பெல்லாம், பழைய ராஜாவ பாக்க்க முடியல.
VSK,
//அதில் ராஅஜா ஒரு 30 ஆண்டுகள் கோலோச்சினார்! இப்போது அவரிடம் சரக்கு தீர்ந்தாயிற்று!///
சரக்கு தீர்ந்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனா, ஒரு motivation missing. அது ஏன்னுதான் புரியல.
இப்ப பாருங்க, நான் கடவுள், கேரண்டீடா கலக்கியிருப்பாரு.
மத்த படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?
VSK,
//லெட் ராஜா லிவ் இன் பீஸ்! அண்ட் நாட் இன் பீஸெஸ்!//
;) நாட் எட்!
அவரால், இன்னும் சில காலம் ப்ரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருவாசகம் எல்லாம் அதற்குச் சான்று.
நான் கடவுள், அதை நிரூபிக்கும்.
(நிரூபிக்கலன்ன்னா, கஷ்டம்தேன் ;) )
ஜி.ரா,
//இளையராஜாவின் வரவினால் மற்றவர்களுக்கு விளைந்தவைகளே இளையராஜாவிற்கு இப்பொழுது விளைந்திருக்கிறது. மாற்றம் என்பது மாறாத தத்துவம்.//
மாற்றம் வரும்தான். இப்பவே வரணுமா?
எம்.எஸ்.வி டு ராஜா, ஒரு புதிய ட்ரெண்டு மாற்றம் இருந்தது, இசையில்.
ஆனா, ராஜா இந்த ட்ரெண்டுக்கும், அடிச்சு ஆடின படங்கள் உண்டே?
ஹ்ம். பொறுத்திருந்து பாக்கணும்.
என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஈகோக்கு மருந்து கொடுத்தா, எல்லாம் சரியா போகும்.
// Blogger SurveySan said...
ஜி.ரா,
மாற்றம் வரும்தான். இப்பவே வரணுமா? //
வரணுமாவா? வந்து வருசம் பதினஞ்சு க்கும் மேல ஆகப் போகுது. :-)
// எம்.எஸ்.வி டு ராஜா, ஒரு புதிய ட்ரெண்டு மாற்றம் இருந்தது, இசையில்.//
ராஜா டூ ரகுமான் மாற்றத்துலயும் டிரெண்டு மாற்றம் இருந்தது. அதுக்கு சாட்சி... யுவன் சங்கர்ராஜாவே ரகுமான் டிரெண்டைப் பின்பற்றுவது. அவருடைய அப்பாவைப் போல சிறந்த இசைமேதையாக இல்லாத காரணத்தினால்தான் யுவனால் புது டிரெண்டை உருவாக்காமல்..டிரெண்டைப் பின்பற்றுகிறவராகப் போய்விட்டார். ஒவ்வொரு டிரெண்டு மாற்றத்துலயும் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் மாறுனது மாறுனதுதான்னு தோணுது.
// ஆனா, ராஜா இந்த ட்ரெண்டுக்கும், அடிச்சு ஆடின படங்கள் உண்டே? //
எம்.எஸ்.வி கொண்டு வந்த டிரெண்டுக்கும் அடிச்சு ஆடுன படங்கள் உண்டே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம். ஆனா நல்லாப் பாத்தீங்கன்னா.. இந்த டிரெண்டு மாற்றம் வரும் ஆண்டு இடைவெளி குறைஞ்சிருக்கு. 50ல வந்த எம்.எஸ்.வியை 76ல் வந்த இளையராஜா டிரெண்டு மாத்தினாலும் 82 வரைக்கும் எம்.எஸ்.வியும் பிரபலமாவும்...80களின் கடைசியில் நானும் இருக்கிறேன் வகையாகவும் (நீதிக்குத் தண்டனை மாதிரி படங்கள்) இருந்தார். ஆக 25 வருடம் முதல்நிலை. ஐந்து வருடம் சறுக்கல் எம்.எஸ்.விக்கு. 76ல் இருந்து 93 வரைக்கும்...அதாவது 17 வருடங்கள் முதலிடமாகவும் பிறகு ஐந்து வருடங்கள் சறுக்கல். இதே நிலைதான் ரகுமானுக்கும். அடுத்த டிரெண்டு மாற்றுனருக்காகத் தமிழ்த்திரையுலகம் தயாராக இருக்கிறது என்பதே உண்மை.
// ஹ்ம். பொறுத்திருந்து பாக்கணும்.//
உண்மைதான். ஆனாலும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்த முடிவுதான்.
// என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஈகோக்கு மருந்து கொடுத்தா, எல்லாம் சரியா போகும். //
ஈகோவுக்கு மருந்து தேவைதான். ஆனால் அது எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே கேள்விக்குறிதான். அத்தோடு திரைப்படத்தையும் தாண்டி இளையராஜா நிறைய செய்ய முடியும். செய்தால் நல்லது.
ஜி.ரா,
உங்க 'ஏற்ற/இறக்கம்' வருட அலசல் அருமை.
ராஜாவுக்கு இறங்குமுகம்தான் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா ஃபுள்ளா இறங்குவதுக்கு முன்னாடி, ஒரு சின்ன ஏத்தம் ஏறி இறங்க மாட்டாரான்னு ஒரு ஏக்கம் வருது.
//ஈகோவுக்கு மருந்து தேவைதான். ஆனால் அது எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே கேள்விக்குறிதான். அத்தோடு திரைப்படத்தையும் தாண்டி இளையராஜா நிறைய செய்ய முடியும். செய்தால் நல்லது.//
திரைப்படத்தை தாண்டி நிறைய செய்தல் அவசியமும் கூட. இல்லண்ணா, காலப் போக்கில் மறந்துடுவாங்க.
பாகவதர், ம்காலிங்கம் எல்லாம் எவ்ளோ பேரு நியாபகம் வச்சிருக்காங்க?
திருவாசகம் மாதிரி, ஒரு அஞ்சு மடங்கு, பன்ச் கூட்டி ஏதாச்சும் பண்ணா, சில நூறு வருடங்கள் நிலைத்து நிற்கலாம்.
மொஸார்ட், பீதோவன் மாதிரி நம்ம ராஜா நிலைத்து நிக்கணும்னு ஆசையா இருக்கு.
நடக்குமான்னு தெரியல.
அவங்களுக்கும், ஈகோ எல்லாம் இருந்துது. அப்படியும், நின்னுட்டாங்க.
பெருமூச்!
முதலில் எழுதணும் என்று நினைத்து விடுபட்டதையும் சேர்த்துக்கிறேன்.
ஆரம்பத்தில் ரோஜா வந்த காலத்தில் ரகுமான் அலையை எதிர்க்கவோ என்னவோ சில படங்களுக்கு அதீத வெஸ்டர்ன் இசையில் (உ-ம்: கலைஞன், பாண்டியன்) கொடுத்ததும் என்னால் ஏற்கமுடியவில்லை. ராஜா ராஜாவாக இருந்திருந்தாலே அந்த ரகுமான் அலையை கொஞ்சம் சமாளித்திருக்கமுடியும். அந்த சைக்கிள் கேப்பில் ராஜாவின் டியூனை வச்சே தேவா 10 வருஷம் ஓட்டிட்டார்.
//ரகுமான் அலையை எதிர்க்கவோ என்னவோ சில படங்களுக்கு அதீத வெஸ்டர்ன் இசையில் (உ-ம்: கலைஞன், பாண்டியன்) கொடுத்ததும் என்னால் ஏற்கமுடியவில்லை///
must be someone fanning his Ego, causing all this :)
SORRY FOR POSTING IN ENGLISH BECAUSE I DONT HAVE TAMIL FONT. DEAR FRIENDS, RAJA IS MUSICAL GOD, HE IS LIKE ATSAYA PATHIRAM, THATS WHY BALU MAHENDRA, FAZIL, BALA PREFER RAJA SIR. WHEN THE STORY DEMANDS HE GIVES EXTRAORDINARY MUSIC. BALA REMARKED IN A RECENT INTERVIEW IN ANANDA VIKATAN, THAT DURING THE SHOOTING OF THE FILM NAAN KADAVUL A HINDI SAINT WAS IN TEARS AFTER LISTENING TO RAJA'S MUSIC. THAT IS THE POWER OF RAJA AND HIS LANGUAGE KNOWS NO BARRIERS. IN MALAYALAM HE IS GIVING HIT AFTER HIT WITH SATHYAN ANTHIKAD. IN TAMIL MANY DIRECTORS ARE INTERESTED IN COMMERCIAL ASPECTS AND THATS THE PROBLEM.
i mean ilaiyaraja music knows no language barriers
Logesh, I agree fully!
but, i believe, statements like these makes Raja happy and motivates him to make good music
///DURING THE SHOOTING OF THE FILM NAAN KADAVUL A HINDI SAINT WAS IN TEARS AFTER LISTENING TO RAJA'S MUSIC.////
but, he should do his best and not expect someone to fan his ego all the time ;)
hope you understand what i mean.
Post a Comment