recent posts...

Thursday, July 10, 2008

நல்ல‌ படம் பிடிச்சா பணம் பண்ணலாம்!

நம்மாளுங்க பல பேரு, நல்லாவே படம் புடிக்கராங்க.

PITன் குழுமத்தில் உள்ள நண்பர்களின் படங்களை பாத்தீங்கன்னா நான் சொல்றது புரியும்.

மேலும் மேலும் மெருகேத்தி மேலப் போயிக்கிட்டே இருக்காங்க.

வெறும் பொழுது போக்குக்காக படம் புடிச்சு Flickrல போடரவங்களுக்கு ஒரு நல்ல சேதி வந்திருக்கு.

இணையத்தில் படங்களை விநியோகம் செய்யும் மிகப் பெரிய ஸ்தாபனம், Getty Images. இப்ப, இவங்க Flickr படங்களில் சிறந்த படங்களை, வெளீல வித்து, அதில் வரும் பணத்தில் ஒரு விகிதத்தை படம் புடிச்சவங்களுக்கு தராங்களாம்.
சராசரியா, $250 வரை ஒரு நல்ல படத்தின் விலை இருக்குமாம். 20% தந்தாகூட $50 ஆச்சு.

நல்ல விஷயம்தான?

இனி, சும்மா, க்ளிக்காம, யோசிச்சு, பளிச்னு க்ளிக்கி Flickrல ஏத்தி வுடுங்க.

ஒரு க்ளிக்குக்கு $50 கெடச்சா கசக்குமா?

மண்டபத்துல குடுத்த படத்தை எல்லாம், துட்டுக்கு ஆசப்பட்டு வலையேத்திப்புடாதீங்க. உள்ள தள்ளிருவாங்க்ய! ;)

ஜமாய்ங்க!

பி.கு: Flickr பக்கத்தில் என் சமீபத்திய சிற்றுலா படங்களைக் காண இங்கே க்ளிக்கவும் இங்கே.

5 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:)பயனான தகவல்

Sathiya said...

ரொம்ப உபயோகமான தகவல்! நன்றி! முயற்சி செய்து பார்க்கலாம் போல! பணத்தை விட நம்ம படத்தையும் வாங்க ஒரு ஆள் இருந்தா, அதை விட படம் எடுத்தவருக்கு வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்;)

SurveySan said...

thanks vikneshwaran.

Sathiya, very true. but, we have miles to go ;)

CVR said...

Interesting!! ;)

SurveySan said...

CVR,

yes! :)

a neat pic like this will fetch money
http://www.dbtechno.com/images/Medicare_doctors_pay_cut_veto.jpg