recent posts...

Wednesday, July 23, 2008

ஏ ஃபார் ஏப்பிள் - ச ஃபார் சர்வேசன் இல்லை - tagging continues

A for Apple என்ற தொடர் வண்டியை ரவிஷங்கர் ஆரம்பிச்சு வச்சு, பா.பாலா கிட்ட இழுக்க சொல்லியிருந்தாரு.

பாலாவும் இழுத்து முடிச்சு இப்ப என் கிட்ட இழுக்க சொல்லியிருக்காரு.

மத்த வெளையாட்டு மாதிரி இல்லாமல், இது உடனே அடித்து ஆடக் கூடிய வகையில் உள்ளதால், உடனே கோதால குதிச்சாச்சு.
அதாவது, ஆங்கில எழுத்தில் ஒவ்வொன்றுக்கும், நாம் அன்றாடம் புழங்கும் இணையப் பக்கம் என்னன்னு சொல்லணுமாம்.
(சில விஷயங்கள் வெளீல சொல்ல முடியாதுன்னா, அது மூடி மறச்சிடலாம் என்று அஸம்ப்ஷனுடன், என் லிஸ்ட் இங்கே ;) )

A meritrade.com - Stocks வர்த்தகம் நடக்குமிடம். ஒரெ நாளில் சில பல டாலர்களை என் சொத்தில், டகால்னு கீழே கொண்டு போய் வயித்தெரிச்சல் கொட்டிக் கொள்ளும் இடம். ஆண்டவனை நினைவில் கொண்டு வரும் திறமை அதிகம் இதுக்கு. ரொம்ப வேர்த்துக் கொட்டும், சில நாட்களில் ;)

B harat Movies - இல்லீகல் ஸைட் என்று தெரிந்தே செல்லும் பக்கம் இது. பழைய படங்களெல்லாம் வலையேத்தி வச்சிருக்காங்க. க்ளிக்காதீங்க. தெய்வ குத்தம்.

C NN.com - எப்பயாச்சும், இங்க ஏதாவது ஜூடான் ஜெய்தி வந்தா மட்டும்.

D inakaran.com - காமெடிக்காக.

F lickr.com - இதப் பாக்காத நாளேயில்ல. வேலை நேரத்தில் 10% இங்க தான் போவுது. Great Site! ;)

G oogle - ofcourse! கூகிளின் ஆரம்ப நாட்களில் (garage days) இருந்து இங்கணதான் எல்லாம்.

H otmail.com - ofcourse again! ஈ.மெயில் வந்த புதிதில், இந்த பக்கத்தைப் பார்ப்பது ஒரு அடிக்ஷனாவே இருந்தது.
H ousing.org - அமெரிக்காவில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமா இருக்கும் தளம். சமீப ப்ரச்சனை ஒண்ணுக்கு ரொம்பவே உதவினாங்க. என் லிஸ்ட்டில் உபயோகமான ஒரே தளம் இதுதான். உபயோகிங்க!
H induonNet.com

I cicibank.com

K umudam.com - ஹி ஹி, கண்டனங்கள் தெரிவிக்கத்தான்.

M ail.yahoo.com - சர்வேசனுக்காக, அடிக்கடி.

N ewsndeals.com/technews.html - டெக்னாலஜி டைஜஸ்ட்.
N ews.Google.com

O verstock.com - சீப்பா வாங்க. (வெளம்பரந்தேன்.)

S - amen!

T hamizmanam.com
T amilCinema.com

W ikipedia.org - டைரக்டா இங்க போய் அறிவ வளத்துக்கலன்னாலும், இணையத்தில் எதை தேடினாலும், முதலில் வந்து நிக்கரது இதாதான் இருக்கு.

Y ouTube.com

யப்பாடா முடிச்சாச்சு.

இனி மூணு பேர கூப்பிடணுமாம். சட்டுனு நினைவுக்கு வருபவர்கள், தற்போது தமிழ்மண முகப்பில் உலாவரும்,
1. சந்தனமுல்லை
2. டோண்டு ராகவன்
3. TBCD

வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.


ஸ்டார்ட்!

11 comments:

SurveySan said...

நல்ல தளங்கள் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க. நன்னி.

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

அழைப்புக்கு நன்றி சர்வேசன். எனது வலைத் தேடல்கள் அத்தனை விசாலமானதல்லவே. அத்தனை எழுத்துக்களுக்கும் என்றில்லாமல் சிலவற்றை விட்டு சிலவற்றுக்கு amen கூறி:) இருக்கிறீர்கள். நான் அதை பலவற்றுக்கு கூறிட நேர்ந்திடுமே:(! மேலும் மற்றவர்களுக்குத் தொடர் அழைப்பு விடுவதில் இன்னும் தயக்கம் நீங்கியபாடில்லை. என் பெயர் தவிர்த்து வேறு யாரையேனும் (வலைத் தேடலில் வல்லுநராய்) அழைத்திட்டால் பலருக்கும் பயனுள்ள தகவல்கள் கிடைத்திடலாம் இல்லையா? செய்வீர்களா ப்ளீஸ்?

SurveySan said...

ராமலக்ஷ்மி,நோ ப்ராப்ள, வேற யாரையாவது கேட்டுட்டா போச்சு. :)

SurveySan said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

புரிதலுக்கு மிக்க நன்றி சர்வேசன்!

SurveySan said...

ராமலக்ஷ்மி, உங்க இடத்துல டோண்டுவ போட்டாச்சு.

C for CyberCrime.orgனு அடிச்சு ஆடுவாரு பாருங்க ;)

ராமலக்ஷ்மி said...

//ராமலக்ஷ்மி, உங்க இடத்துல டோண்டுவ போட்டாச்சு.//

பார்த்தேன்.

//C for CyberCrime.orgனு அடிச்சு ஆடுவாரு பாருங்க ;)//

கண்டிப்பா:))! ஒரு ரவுண்ட் எல்லார் தேடல்களையும் பார்த்திட வேண்டியதுதான்!

Boston Bala said...

கேட்டதும் கொடுத்த சர்வேசனுக்கு நன்றிகள் :)

சந்தனமுல்லை said...

என்னுடைய இடுகை http://sandanamullai.blogspot.com/2008/07/alibaba-babycenter-chetana-sil-esnips.html

SurveySan said...

Sandhanamullai,

thanks :)