recent posts...

Monday, July 14, 2008

புடவை கட்டுவது எப்படி? குமுதத்துக்கு என் கன்னா பின்னா கண்டனங்கள்!

என்ன கொடுமைங்க இது? நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கலாம்னு எப்பயாச்சும் குமுதம் இணையதளப் பக்கம் போரது உண்டு.

("யோவ், நாட்டு நடப்புக்கு ஏன்யா குமுதம்?"னு நீங்க கேக்கரது எனக்கு கேக்கல)

யூ.ட்யூப் ஹிட்டானாலும் ஆச்சு, இப்ப ஆளாளுக்கு வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க்ய.

குமுதத்துக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட வீடியோ, "புடவை கட்டுவது எப்படி?"

அடப்பாவிகளா, விட்டா *** **** எப்படி? *** **** எப்படி ன்னெல்லாம், நமது பதிவுலகில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை வச்சு வீடியோ போட்டுடுவாங்க போலயிருக்கே.

ஹ்ம். குமுதத்துக்கே இந்த நெலமைன்னா, நாம ****, *** ன்னெல்லாம் கதை எழுதி ஆள் புடிக்கரதுல தப்பில்லைன்னு தோணுது.

இருந்தாலும், இந்த மாதிரி விஷமத்தனமெல்லாம் கொஞ்சம் ஓவரு குமுதத்துக்கு. அதனால, என் கடுமையான கண்டனங்களை பதிகிறேன் ;)

வர்டா.

பி.கு: உரல் எல்லாம் கேக்காதீங்க. நோவாம நோம்பு கும்பிடமுடியுமா?

;)

34 comments:

Unknown said...

இதுல கன்னா, பின்னான்னு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு என்ன தப்பு இருக்கு சர்வேசன்?

SurveySan said...

செல்வன், என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?

கலாச்சார சீர்கேடில்லயா இது? ;)

தெளிவாதான் இருக்கீங்களா?
கண்ட மயக்கத்துல இருக்கீங்களா?

Unknown said...

கலாசார சீர்கேடா?:-)

சமீபத்தில் 1964ல் பாசமலருக்கு பிறகு ரிலீசான தமிழ் சினிமா எதுவும் பார்க்கலையா சர்வேசன்?:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

//அடப்பாவிகளா, விட்டா *** **** எப்படி? *** **** எப்படி ன்னெல்லாம், நமது பதிவுலகில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை வச்சு வீடியோ போட்டுடுவாங்க போலயிருக்கே.//

ச்சீ ச்சீ என்ன பழக்கங்க இது... இப்படியா பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசுறது. தலைப்பில் 18sxனு போடுறதில்லையா.... :)

ஜோ/Joe said...

//கலாச்சார சீர்கேடில்லயா இது? ;)//

என்னது ? புடவை கட்டினா கலாச்சார சீர்கேடா ?

SurveySan said...

//சமீபத்தில் 1964ல் பாசமலருக்கு பிறகு ரிலீசான தமிழ் சினிமா எதுவும் பார்க்கலையா சர்வேசன்?:-)//

என்ன கொடுமைங்க இது?
அங்கயிருந்து இங்க வந்த போது, ஒரே கல்சர் ஷாக்.

இப்ப, இங்கயிருந்து அங்க போகும்போதும், அதே ஷாக்.

எங்க போறோம்னே புரீல ;)

SurveySan said...

vikneshwaran,

//ச்சீ ச்சீ என்ன பழக்கங்க இது... இப்படியா பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசுறது. தலைப்பில் 18sxனு போடுறதில்லையா.... :)//

;) எவ்வளவு கண்ணியமா, நமது இன்றைய standards follow பண்ணி **** போட்டுதானங்க எழுதியிருக்கேன்;)

SurveySan said...

Joe,

//என்னது ? புடவை கட்டினா கலாச்சார சீர்கேடா ?//

நெறைய விஷயங்கள் பண்றது கலாச்சார சீர்கேடு இல்லீங்க. ஆனா, சில விஷயங்கள் நாலு சுவத்துக்குள்ள இல்ல இருக்கோணும்?

அப்படி, சொல்லியே தருவேன்னு அடம்பிடிச்சா, ஒரு பொம்மைக்கு கட்டி காமிச்சிருக்கலாம் என்பது அடியேனின் கருத்ஸ் ;)

SurveySan said...

எனக்கு ஆதரவா யாருமில்லியா?

நல்லவங்களெல்லாம் எங்கய்யா போனீங்க? ;)

VIKNESHWARAN ADAKKALAM said...

//SurveySan said...
எனக்கு ஆதரவா யாருமில்லியா?

நல்லவங்களெல்லாம் எங்கய்யா போனீங்க? ;)//

இதோ ஆள் அனுப்பி வைக்கிறேன்... கவலை படாதிங்க

Unknown said...

நல்லவங்கல்லாம் புடவை விடியோவை பாக்க போயிருக்காங்க.உங்க புண்ணியத்துல அந்த புடவை விடியோவுக்கு இன்னைக்கு ஒரு ஐநூறு ஹிட்ஸ் தேரும்

அது சரி...இந்த பதிவை போட சொல்லி உங்ககிட்ட குமுதம் ஒரு ரகசிய டீலிங் போட்டதா காத்துவாக்குல ஒரு சேதி உலா வருதே?உண்மையா?:-)

SurveySan said...

செல்வன்,

விட்டா அந்த குறும்படம் இயக்கியதே நானுன்னு சொல்லிடுவாங்க போலருக்கே. ;)

நல்லவங்கயெல்லாம், 'கண்ட' மயக்கத்துல கருத்ஸ் சொல்லாம, கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்கய்யா. நன்னி!

VIKNESHWARAN ADAKKALAM said...

மக்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க... அனானி பின்னூட்ட சன்னலை கொஞ்சம் திறந்துவிடுங்க....

SurveySan said...

//மக்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க... அனானி பின்னூட்ட சன்னலை கொஞ்சம் திறந்துவிடுங்க....//

ஓஹோ, அதுதான் தடுக்குதா நல்லவங்கள?

கெட்டவங்களையே தடுக்கல, நல்லவங்கள அதுயேங்க தடுக்கணும்? ;)

மங்களூர் சிவா said...

/
பி.கு: உரல் எல்லாம் கேக்காதீங்க. நோவாம நோம்பு கும்பிடமுடியுமா?
/

கடும் கண்டனங்கள்

SurveySan said...

மங்களூர் சிவா,

ஸ்டாரா இருந்துகிட்டு நீங்க தட்டி கேக்காததை நான் கேட்டா, எனக்கே கண்டனங்களா?

ஹ்ம். கொடுமைய்யா கொடுமை.

மங்களூர் சிவா said...

http://www.kumudam.com/webtv_streaming.php?catid=83&strid=2622&leftid=20&type=Ladies%20Corner

VIKNESHWARAN ADAKKALAM said...

//கெட்டவங்களையே தடுக்கல, நல்லவங்கள அதுயேங்க தடுக்கணும்? ;)//

இந்த வார்த்தையில் ஏதோ ஒரு வித உள் குத்து இருப்பதால், இக்கண்டன பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்...

Unknown said...

10% க்ளிவேஜ் கூட தெரியலை.போதாகுறைக்கு அந்த மாடல் தொந்தியும், தொப்பையுமா இருக்காங்க..ஆசையோடு ஓடிப்போய் விடியோ பார்த்த என் போன்ற அப்பாவி வாசகர்களை குமுதம் இப்படி ஏமாற்றுவது மிகவும் தவறு.என் கடுமையான கண்டனங்கள்.

அடுத்த முறை ஒழுங்கா விடியோ போடு குமுதமே.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சர்வேஸ்,இதைப் பாக்க இவ்வளவு நாள் ஆச்சா?
அது கெடக்குது குமுதத்தில ஒரு 3 மாசமா...

ரொம்ப லே(வேஸ்)ட்டுய்யா நீ..

Iyappan Krishnan said...

http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=20&catid=94&type=Ladies%20Corner

இதைப் பற்றி உம்மோட கவனம் செல்லாததேன் ? :( வருத்தம் சர்வேஷன்

SurveySan said...

செல்வன்,

//என் போன்ற அப்பாவி வாசகர்களை குமுதம் இப்படி ஏமாற்றுவது மிகவும் தவறு//

போடறதும் போடறாங்க, நல்லதா போட்டுத் தொலஞ்சா நல்லாருக்கும், என்ற உங்கள் ஏக்கம் புரிந்தாலும் இதையெல்லாம் கண்டனம் தெரிவிக்காமல் பார்க்கக் கூடாது என்ற என் நிலைப்பாடு அப்படியேதான் இருக்கு.

SurveySan said...

அறிவன்,
என்ன கொடுமைங்க இது? 3 மாசமா இருக்கரத, பதிவெழுதி சொன்னாதானங்க தெரியும்.
அதைப்பத்தி எழுதாம நீங்க என்ன செஞ்சீங்க இந்த 3 மாசமா.
ஹ்ம். வெறும் பதிவுகளை நம்பி இருந்தா வேகாதுன்னு நெனைக்கறேன். :)

SurveySan said...

jeeves,

//இதைப் பற்றி உம்மோட கவனம் செல்லாததேன் ? //

அதை மொத பக்கத்தில் இத மாதிரி போட்டிருந்தா கவன் சென்றிருக்கும். ;)

Sundar Padmanaban said...

லங்கோடு கட்டுவது எப்படின்னு அடுத்து வீடியோ போடுவாங்களா? ஜட்டி Vs லங்கோடு எது சிறந்ததுன்னு சர்(உவ்)வே ஒண்ணு எடுத்தா என்ன? :))

Unknown said...

இன்னொரு வீடியோ add பண்ணியிருக்காங்க. யாரொ தொந்தி பிகர்னு சொன்னததால swethaனு ஒரு பிகரை போட்டிருக்காங்க.

இதையும் பார்த்திடுங்க!!!

SurveySan said...

//ஜட்டி Vs லங்கோடு எது சிறந்ததுன்னு சர்(உவ்)வே ஒண்ணு எடுத்தா என்ன? :))//

;)

SurveySan said...

babu,

//இதையும் பார்த்திடுங்க!!!//

sure ;)

கோவி.கண்ணன் said...

//புடவை கட்டுவது எப்படி? குமுதத்துக்கு என் கன்னா பின்னா கண்டனங்கள்! //

கட்டுவது எப்படி என்று தானே போட்டு இருக்கிறார்கள். இதற்கு எதற்கு கண்டனம் ?
:)

கோவி.கண்ணன் said...

//புடவை கட்டுவது எப்படி? குமுதத்துக்கு என் கன்னா பின்னா கண்டனங்கள்! //

கட்டுவது எப்படி என்று தானே போட்டு இருக்கிறார்கள். இதற்கு எதற்கு கண்டனம் ?
:)

சந்தர் said...

முன்பெல்லாம் குமுதத்தில் "புடவை கட்டுவது எப்படி?" என்று தொடர் புகைப்படங்கள் போடுவார்கள். (அதுவும் நடுபக்கத்தில்) இப்போது நாடு டெக்னிகலாக முன்னேறிவிட்டதா அதுதான் சினிமா 'காட்டுகிறார்கள்'. பார்த்துவிட்டுப்போங்களேன்.குமுதமும் திருந்தப்போவதில்லை...

SurveySan said...

கோவி, நல்ல கேள்வி, ஆனா மெதுவா கேளுங்க.
குமுதம் காதுல விழுந்தா, அதையும் படம் எடுத்டு போட்டுவாங்க.

"புடவையை அவிழ்த்து மடக்கி வைப்பது எப்படி"ன்னு ;)

SurveySan said...

சந்தர்,

அப்படியா, அடடா நான் பாத்ததில்லையே.
பாத்திருந்தா, அப்பவே என் கன்னாபின்னா கண்டனத்தை தெரிவித்து இருப்பேன்;)

Several tips said...

நல்ல பதிவு
மிகவும் அருமை