recent posts...

Sunday, March 09, 2008

அஞ்சாதே - திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களின் வரிசையில் 'அட' போட வைத்த இன்னொரு படம்.
ஒரு படம் நல்ல படமா கெட்ட படமாங்கரது, படத்தின் முதல் 15 நிமிஷத்துல தெரிஞ்சுடும்.

படத்தை, தொடர்ந்து கவனிச்சு பாக்கணுமா, இல்ல, லேப்-டாப்ல மத்த வேலைகள பாத்துக்கிட்டே மேலோட்டமா படம் பாக்கணுமா, இல்ல, ஓட்டி ஓட்டி 2 1/2 மணி நேர படத்தை 30 நிமிஷத்துல பாத்து முடிக்கணுமா - இந்த மாதிரி ஒண்ண தீர்மானிக்க முதல் 15 நிமிஷம் போதும்.

படம் ஆரம்பிச்சதும், ஹீரோ ஃப்ரெண்டு உடற்பயிற்சி செய்யும் காட்சி ஒரு வித்யாச கோணத்துல காட்ட ஆரம்பிச்சதும் (கீழிருந்து மேல், பின்னாடி ஆகாயம் தெரியர மாதிரி), 'அட ஏதோ மேட்டர் இருக்கு' படத்துலன்னு புரிஞ்சுது.
ரௌடி கும்பல வித்யாச கேமரா ஆங்கிள்ள காட்டிட்டு, அப்படியே ட்ராலி நகுந்து, ஹீரொ ஃப்ரெண்ட காட்டும். இந்த ட்ராலி ஆமை வேகத்துல நகுந்து ஹீரோ ஃப்ரெண்ட காட்டும். "அடடா, படம் ரொம்ப நீளம்னு" அந்த மெது ஷார்ட் புரிய வச்சுடுச்சு :).
இருந்தாலும், அடுத்தடுத்த சுவாரஸ்ய காட்சிகளின் அணிவகுப்பு, ஒரு சோர்வில்லாமல் படத்தை சட சடன்னு நகத்துது.

கதை ரொம்ப சின்னதுதான். உயிர் நண்பர்கள், ஒருத்தனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு குறிக்கோள்; இன்னொருத்தன் ஒதவாக்கரையா சுத்தரவன். ஒதவாக்கர சப்-இன்ஸ்பெக்டர் ஆயிடுவான்; சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு நெனச்சவன் ரௌடி ஆயிடுவான்; இவங்களுக்குள்ள நடக்கர நிகழ்வுகள்னு படம் நகருது.
நடுவுல, பணக்கார இளம் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் ஒரு கும்பல், படத்தின் வேகத்துக்கு மிகவும் உதவராங்க.
ப்ரசன்னாக்கு வில்லன் பாத்திரம், ஆரம்பத்தில் பொருந்தாத மாதிரி தெரிஞ்சாலும், அப்பரம் அந்த சைக்கோத்தனம் நல்லாவே செட் ஆயிடுது அவருக்கு.
பாண்டியராஜனுக்கும் ஒரு டீஸண்டான வில்லன் அடியாள் வேஷம். ஓ.கே. நல்லாவே பண்ணியிருக்காரு.
ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. திறமைசாலி.
ஹீரொ ஃப்ரெண்டு - புதுமுகம். கலக்கியிருக்காரு. நல்ல எதிர்காலம்.

நிறைய விஷயங்கள அலசலாம்னுதான் நெனச்சேன். ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்டு ஊரவச்சு அலசி தொயச்சு காயப் போட்டுட்டாரு. மொத்த டீட்டெயில்ஸ அங்க போய் படிச்சுக்கோங்க. (statutory warning: உ.தமிழனின் விமர்சனம் படிச்சு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்).

என்னப் பொறுத்த வரைக்கும், அஞ்சாதே, நல்ல படம்.
விருவிருப்பு, கொஞ்சம் காமெடி, சோகம், ஆட்டம், பாட்டம், பாசம் எல்லாமே இருக்கு.
பெண்கள் கடத்தல், கற்பழிப்பு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம், மூஞ்சி சுளிக்காமல் பாக்கர மாதிரி டீஸண்டா எடுத்திருக்காரு.

மிஷ்கின் ஒரு கலக்கல் இயக்குனரா உருவாகிக்கிட்டு இருக்காரு.

குறைன்னு பாத்தா, படத்தின் நீளம். கத்திரி போட்டிருக்கலாம்.

அந்த கரும்பு தோட்டத்துல எடுத்த க்ளைமாக்ஸ் கொஞ்சம் தலைவலியாப் போச்சு. ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடராங்க.
டாப்-ஆங்கிள்ள, யார் யாரு எந்த மூலைல ஓடிட்டு இருக்காங்கன்னு காட்டாம விட்டுட்டாரு கேமராமேன்.
அப்படி காட்டியிருந்தா, இன்னும் உயிர் வந்திருக்கும் காட்சிக்கு.
அது இல்லாம, யார் எங்க ஓடரா, வில்லன் ஓடரவங்கள புடிச்சுடுவானா மாட்டானான்னு புரியாம மண்ட காஞ்சு போச்சு.

மத்த விஷயங்களெல்லாம் உ.த அலசிட்டாரு, ஒரு நாள் லீவு போட்டு அவர் விமர்சனத்தை முழுசா படிக்கவும். படிச்சிட்டீங்கன்னா, படத்தை பாக்கணும்னு கூட அவசியம் இல்ல. மொத்த படத்தையும் பாத்த பீலிங் வந்திடும் :)

11 comments:

வடுவூர் குமார் said...

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.
பல ஓட்டைகள் அங்கெங்கு தெரிகிறது.
3 மணி நேரம் ஓடும் படம்.- கொஞ்சம் பொருமை தேவை.
புது முகங்கள் போட்டு வெற்றி அடையப்போகும் படம்.

உண்மைத்தமிழன் said...

//ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்டு ஊரவச்சு அலசி தொயச்சு காயப் போட்டுட்டாரு. மொத்த டீட்டெயில்ஸ அங்க போய் படிச்சுக்கோங்க. (statutory warning: உ.தமிழனின் விமர்சனம் படிச்சு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்).//

//மத்த விஷயங்களெல்லாம் உ.த அலசிட்டாரு, ஒரு நாள் லீவு போட்டு அவர் விமர்சனத்தை முழுசா படிக்கவும். படிச்சிட்டீங்கன்னா...//

சர்வேசன் ஸார்.. மேல் பத்தில ஒரு மணி நேரம்னு சொல்லிப்புட்டு, அடுத்தப் பத்தில லீவு போட்டாத்தான் படிக்க முடியும்னு சொல்லிட்டீங்களே..

இனிமே யார் என் வூட்டுப் பக்கம் வருவா..?

//படத்தை பாக்கணும்னுகூட அவசியம் இல்ல. மொத்த படத்தையும் பாத்த பீலிங் வந்திடும்:)//

அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம். பல ஓட்டைகள் ஆங்காங்கே தெரிகிறது. 3 மணி நேரம் ஓடும் படம்.- கொஞ்சம் பொறுமை தேவை. புது முகங்களை போட்டு வெற்றி அடையப்போகும் படம்.//

வடுவூர் ஸார்.. பல ஓட்டைகள் என்றாலும், அது இந்தளவுக்கு வீரியமான திரைக்கதையை அமைத்தமைக்காக ஒரு விட்டுக் கொடுத்தல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றியடையப் போகும் படம் என்பதல்ல.. வெற்றியடைந்துவிட்டத் திரைப்படம்.. மிகப் பெரிய வெற்றிதான்.. இப்போதே பல நடிகர்களும் இயக்குநர் மிஷ்கினுக்கு போன் போட்டு தங்களுக்காக ஒரு கதை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் என்ற முறையில் மிஷ்கின் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

நித்யன் said...

சர்வேசன்...

என்னுடைய இந்த பதிவில் (http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_27.html)உண்மைத்தமிழன் அவர்கள் “அஞ்சாதே” படம் குறித்த தன் கருத்தை பின்னூட்டமிட்டார். அந்த பின்னூட்டமே என் பதிவை விட நீளமானது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.

அன்பு நித்யகுமாரன்

SurveySan said...

உண்மைத் தமிழன் சார்,


///அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..///


ஹாஹா.. பாராட்டு தானுங்க. அசாத்திய ஞாபக சக்திங்க உங்களுக்கு. எல்லா சீனும் நெனவுல வச்சு எழுதியிருக்கீங்களே. படம் பாக்கும்போதே, குறிப்பு எழுதி வச்சுக்கிட்டீங்களா என்ன?

:)

SurveySan said...

நித்யகுமாரன்,

பார்த்தேன், ரசித்தேன் :)

கானா பிரபா said...

//ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. //திறமைசாளி.//

தல

நரேனை பெருச்சாளி ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களே ;-)
பதிவில் இருக்கும் இன்னும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்.

இப்படிக்கி
ஒன்லைன் வாத்தியார்

உண்மைத்தமிழன் said...

///SurveySan said...
உண்மைத் தமிழன் சார்,
//அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..//
ஹாஹா.. பாராட்டு தானுங்க. அசாத்திய ஞாபக சக்திங்க உங்களுக்கு. எல்லா சீனும் நெனவுல வச்சு எழுதியிருக்கீங்களே. படம் பாக்கும்போதே, குறிப்பு எழுதி வச்சுக்கிட்டீங்களா என்ன?///

குறிப்பெல்லாம் எழுதல ஸார்.. படத்தோட ஒன்றிப் போய் பார்த்துட்டனா.. அப்படியே சீன் பை சீனா மனசுல படமே ஓட ஆரம்பிச்சிருச்சு ஸார்..

எல்லா படமுமே அப்படித்தான்.. இதுலேயே நான் குறிப்பிட மறந்துவிட்ட காட்சிகளும் உண்டு. இப்ப போய் எழுதினா நல்லாயிருக்காதேன்னுட்டுத்தான் எழுதாம விட்டுட்டேன்..

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
சர்வேசன்...
என்னுடைய இந்த பதிவில் (http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_27.html)உண்மைத்தமிழன் அவர்கள் “அஞ்சாதே” படம் குறித்த தன் கருத்தை பின்னூட்டமிட்டார். அந்த பின்னூட்டமே என் பதிவை விட நீளமானது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.
அன்பு நித்யகுமாரன்//

என்னடா இது இன்னிக்கு எனக்கு வந்த சோதனை..? ஒரே பாசமழை பொழியுது..

நண்பர் நித்யகுமாரன்.. மிக்க மிக்க நன்றி..

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
நித்யகுமாரன்,
பார்த்தேன், ரசித்தேன் :)//

இதுக்கும் ஒரு தேங்க்ஸ் சர்வேஸன் ஸார்..

SurveySan said...

//பதிவில் இருக்கும் இன்னும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்//


wil do :)