recent posts...

Showing posts with label anjathe movie review அஞ்சாதே திரை விமர்சனம். Show all posts
Showing posts with label anjathe movie review அஞ்சாதே திரை விமர்சனம். Show all posts

Sunday, March 09, 2008

அஞ்சாதே - திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களின் வரிசையில் 'அட' போட வைத்த இன்னொரு படம்.
ஒரு படம் நல்ல படமா கெட்ட படமாங்கரது, படத்தின் முதல் 15 நிமிஷத்துல தெரிஞ்சுடும்.

படத்தை, தொடர்ந்து கவனிச்சு பாக்கணுமா, இல்ல, லேப்-டாப்ல மத்த வேலைகள பாத்துக்கிட்டே மேலோட்டமா படம் பாக்கணுமா, இல்ல, ஓட்டி ஓட்டி 2 1/2 மணி நேர படத்தை 30 நிமிஷத்துல பாத்து முடிக்கணுமா - இந்த மாதிரி ஒண்ண தீர்மானிக்க முதல் 15 நிமிஷம் போதும்.

படம் ஆரம்பிச்சதும், ஹீரோ ஃப்ரெண்டு உடற்பயிற்சி செய்யும் காட்சி ஒரு வித்யாச கோணத்துல காட்ட ஆரம்பிச்சதும் (கீழிருந்து மேல், பின்னாடி ஆகாயம் தெரியர மாதிரி), 'அட ஏதோ மேட்டர் இருக்கு' படத்துலன்னு புரிஞ்சுது.
ரௌடி கும்பல வித்யாச கேமரா ஆங்கிள்ள காட்டிட்டு, அப்படியே ட்ராலி நகுந்து, ஹீரொ ஃப்ரெண்ட காட்டும். இந்த ட்ராலி ஆமை வேகத்துல நகுந்து ஹீரோ ஃப்ரெண்ட காட்டும். "அடடா, படம் ரொம்ப நீளம்னு" அந்த மெது ஷார்ட் புரிய வச்சுடுச்சு :).
இருந்தாலும், அடுத்தடுத்த சுவாரஸ்ய காட்சிகளின் அணிவகுப்பு, ஒரு சோர்வில்லாமல் படத்தை சட சடன்னு நகத்துது.

கதை ரொம்ப சின்னதுதான். உயிர் நண்பர்கள், ஒருத்தனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு குறிக்கோள்; இன்னொருத்தன் ஒதவாக்கரையா சுத்தரவன். ஒதவாக்கர சப்-இன்ஸ்பெக்டர் ஆயிடுவான்; சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு நெனச்சவன் ரௌடி ஆயிடுவான்; இவங்களுக்குள்ள நடக்கர நிகழ்வுகள்னு படம் நகருது.
நடுவுல, பணக்கார இளம் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் ஒரு கும்பல், படத்தின் வேகத்துக்கு மிகவும் உதவராங்க.
ப்ரசன்னாக்கு வில்லன் பாத்திரம், ஆரம்பத்தில் பொருந்தாத மாதிரி தெரிஞ்சாலும், அப்பரம் அந்த சைக்கோத்தனம் நல்லாவே செட் ஆயிடுது அவருக்கு.
பாண்டியராஜனுக்கும் ஒரு டீஸண்டான வில்லன் அடியாள் வேஷம். ஓ.கே. நல்லாவே பண்ணியிருக்காரு.
ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. திறமைசாலி.
ஹீரொ ஃப்ரெண்டு - புதுமுகம். கலக்கியிருக்காரு. நல்ல எதிர்காலம்.

நிறைய விஷயங்கள அலசலாம்னுதான் நெனச்சேன். ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்டு ஊரவச்சு அலசி தொயச்சு காயப் போட்டுட்டாரு. மொத்த டீட்டெயில்ஸ அங்க போய் படிச்சுக்கோங்க. (statutory warning: உ.தமிழனின் விமர்சனம் படிச்சு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்).

என்னப் பொறுத்த வரைக்கும், அஞ்சாதே, நல்ல படம்.
விருவிருப்பு, கொஞ்சம் காமெடி, சோகம், ஆட்டம், பாட்டம், பாசம் எல்லாமே இருக்கு.
பெண்கள் கடத்தல், கற்பழிப்பு இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம், மூஞ்சி சுளிக்காமல் பாக்கர மாதிரி டீஸண்டா எடுத்திருக்காரு.

மிஷ்கின் ஒரு கலக்கல் இயக்குனரா உருவாகிக்கிட்டு இருக்காரு.

குறைன்னு பாத்தா, படத்தின் நீளம். கத்திரி போட்டிருக்கலாம்.

அந்த கரும்பு தோட்டத்துல எடுத்த க்ளைமாக்ஸ் கொஞ்சம் தலைவலியாப் போச்சு. ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடராங்க.
டாப்-ஆங்கிள்ள, யார் யாரு எந்த மூலைல ஓடிட்டு இருக்காங்கன்னு காட்டாம விட்டுட்டாரு கேமராமேன்.
அப்படி காட்டியிருந்தா, இன்னும் உயிர் வந்திருக்கும் காட்சிக்கு.
அது இல்லாம, யார் எங்க ஓடரா, வில்லன் ஓடரவங்கள புடிச்சுடுவானா மாட்டானான்னு புரியாம மண்ட காஞ்சு போச்சு.

மத்த விஷயங்களெல்லாம் உ.த அலசிட்டாரு, ஒரு நாள் லீவு போட்டு அவர் விமர்சனத்தை முழுசா படிக்கவும். படிச்சிட்டீங்கன்னா, படத்தை பாக்கணும்னு கூட அவசியம் இல்ல. மொத்த படத்தையும் பாத்த பீலிங் வந்திடும் :)