recent posts...

Monday, December 29, 2008

கஜினி (இந்தி) - திரைப் பார்வை

கஜினி 2005ல், தமிழில் பெருவாரியாக வெற்றி பெற்ற படம். சூர்யாவின் அசத்தல் நடிப்பும், ஹாரிஸின் பாடல்களும் படத்துக்கு பயங்கரமான கெட்டப் கொடுத்திருந்தது.
என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல்ல நான், தமிழில் இந்தப் படத்தை போன வாரம் வரைக்கும் பாக்கவே இல்லை.
கண்ட காளையெல்லாம் பாத்து புளகாங்கிதம் அடைந்த எனக்கு, கஜினி பார்க்கும் வாய்ப்பு அமையவே இல்லை.

அதுவும் ஒரு விதத்தில் நல்லதாவே போச்சு. அதே படத்தை, அச்சு அசலா, இந்தியில் அமீர்கானுடன் இணைந்து கொடுத்திருக்காரு, கஜினியின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அச்சு அசல்னு எனக்கு எப்படித் தெரியும்? நாந்தான் தமிழ்ல வந்த படத்தை பாக்கலையேன்னு கேக்கறீங்களா? பாத்துட்டனே, இந்தியில் படத்தை பாத்ததும், தமிழில் பாத்தே ஆகணும்னு தேடிப் பிடிச்சு பாத்துட்டேன்.

தமிழுக்கும் இந்திக்கும் இரண்டு வித்யாசங்கள் தான்.

1) தமிழில் சூர்யா. இந்தியில் அமீர்கான்.
2) தமிழில் க்ளைமாக்ஸ் சொதப்பல். இந்தியில் டாப்-டக்கர்.

ஒற்றுமைகள் ஏராளம்.

1) காட்சிக்கு காட்சி அப்படியே அச்சு அசலா திரும்ப எடுத்திருக்காரு. படத்தின் துணை நடிகர்கள் முதல், வில்லன், ஹீரோயின் வரை எல்லாரும் கிட்டத்தட்ட அப்படியே இருக்காங்க. அவங்க போட்டிருந்த உடையும் அதுவேதானான்னு நான் கவனிக்கலை. பேசாம, தமிழ் படத்தை எடுத்து, சூர்யா தலைக்கு பதிலா அமீர்கான் தலையை கிராஃபிக்ஸில் பொறுத்தி, க்ளைமாக்ஸ் மட்டும் ஒரு வாரத்தில் ரீ-ஷூட் பண்ணீ, இந்தியில் டப் பண்ணியிருக்கலாம். ரெண்டு வருஷம் எடுத்த படம், ரெண்டு வாரத்துல முடிஞ்சிருக்கும்.

2) தமிழில் ஹாரிஸின் துள்ளல் இசை அமக்களமா இருந்துச்சு. ஹிந்தியில் ஏ.ஆர்.ரஹ்மானும் பின்னி பெடலெடுத்திருக்காரு. குறிப்பா கேசே முஜே பாட்டும், பேக்கா பாட்டும், மேரீ அதூரி பாட்டும்.
எனக்கு இதுவரைக்கும் ரஹ்மான் பாட்டு முதல் முறை கேட்டதும் பிடிச்சதே இல்லை. ஜென்டில்மேனில் வந்த சிக்கு புக்கு ரயிலே ஃபர்ஸ்ட் டைம் கேட்டதும், என்னடா இது சிக்கு புக்குன்னு பொலம்பிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் முறை கேட்டதும் தான், ரஹ்மான் பாட்டின் மேல் அடிக்ஷன் வரும்.
ஆனா, இந்தப் படத்தில், மூணு பாட்டு முதல் முறை கேட்கும்போதே துள்ளலா இருந்தது.

பின்னணி இசையும் ரெண்டு படத்துலேயும் அமக்களமா இருந்தது. தியேட்டரில் பாத்ததால் இருக்கலாம், இந்தியில் ரஹ்மான், மிரட்டியிருக்காரு. பல திக்-திக் சீன்களுக்கு, ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு, இசைக் கோர்வை இருக்கு. சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துடறாங்க. hats off Rahman!

3) சூர்யாவும் பின்னியிருக்காரு. அமீர்கானும் பின்னியிருக்காரு. ஃப்ளேஷ்பேக் காட்சிகளில், சூர்யாவின் வசீகரம், அமீர்கானிடம் இல்லை. அதே சமயம், மொட்டை அடித்து six packs கொண்டு மிரட்டும் அமீர்கானின் நடிப்பில் இருந்த மிரட்டல், சூர்யாவை விட தத்துனூண்டு ஜாஸ்தியா இருந்தது.

4) இந்தியில் ரவி.கே.சந்திரனின் கேமராவில் எனக்கு 'புதிதாய்' ஒன்றும் பெருசா தெரியவில்லை. தமிழில் R.D.ராஜசேகரின் கேமரா கொடுத்திருந்த, அதே ஏங்கிள், அதே டெக்னிக் அப்படியே இந்தியிலும் இருந்தது. இப்படி எடுக்கரதுக்கு எதுக்கு ரவி.கே.சந்திரன்னு எனக்கு புரியல்ல.

5) அசீன் - சான்ஸே இல்லை. அறிமுகப் பாட்டு மட்டும் எரிச்சல். மத்த காட்சிகளிலெல்லாம் அமக்களமா அசத்தியிருக்காங்க. தமிழை விட, இந்தியில் நல்லா அசத்தியிருக்காங்க. அந்த பப்ளீ வேடத்துக்கு சரியா பொறுந்தியிருக்காங்க. ( தசாவதாரம் ட்ரெயினிங்கினால் கூடிய மெருகான்னு தெரியல்ல ;) )

நயன்தாரா நடித்திருந்த வேடத்தில், ஜியா கான் நடிச்சிருந்தாங்க. ஜியாவை பாத்துட்டு, நயன்தாராவை பார்த்தால், நயனின் நடிப்பு சகிக்கலை.

தமிழில் இருந்த சில அபத்தங்களை, அமீர் கூட்டணி சரி செஞ்சிருக்கு. கீழே நான் நோட்டீஸ் பண்ண சில.
* தமிழில் அசீனின் அறிமுகப் பாட்டு, முந்தைய பிந்தைய காட்சியோடு ஒட்டாமல், 'பிட்டு' பாட்டு மாதிரி திடீர்னு வந்து திடீர்னு போகும். இந்தியில் பாட்டின் முடிவில், அசீன் கனவு காண்ற மாதிரி ஒரு சீன் சேத்திருக்காங்க.
* தமிழில் கஜினின்னு ஏன் பேர் வச்சிருக்காங்கன்னு தெளிவா இல்லை. இந்தியில், வில்லனின் பெயரை கஜினியாக்கியது நல்லா இருந்தது.
* தமிழில் வில்லனை டபுள் ஆக்க்ஷனாக்கி மழையுடன் கூடிய சண்டைக் காட்சியில் அடிச்சு கொல்றது. இந்தியில், டபுள் ஆக்ஷன் இல்லாமல், நீட்டான க்ளைமாக்ஸ் காட்சிகள்.
* சூர்யாவுக்கும் அசினிக்கும் இடையே நடக்கும் ஒரு அருமையான பாசக் காட்சியில், தமிழில் ஒரு அழகான பாட்டு வைக்காதது பயங்கர மைனஸ். அதே இடத்தில், இந்தியில் ரஹ்மான் பட்டைய கிளப்பிட்டாரு. Very touching sequence இது.

இப்படியாக, ரொம்ப நாளைக்கப்பரம், மனசுக்கு நிறைவான ஒரு பட்ம் பார்த்தது திருப்திகரமா இருக்கு.

படத்தின் ஒரே குறை, படத்தின் முக்கால் வாசி கரு, Mementoவில் இருந்து உருவியும், அதற்கான ஒரு 'inspired by' கூட டைட்டிலில் போடாதது.

பாலிவுட் படங்கள் எல்லாம், இப்போ இங்கே அனைவராலும் விரும்பிப் பார்த்து அலசப் படும்போது, இனி வரும் காலங்களில், உஷாரா இருக்கணும் முருகதாஸ் சாரே ;)



கஜினி - கண்டிப்பா பார்க்கக் கூடிய படம்.

25 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல விமர்சனம்

anujanya said...

நல்ல ஒப்பீட்டு விமர்சனம் சர்வ். நானும் ஞாயிறு தான் பார்த்தேன். தமிழில் மூன்றாந்தர VCD இல் பார்த்திருந்தேன். தமிழ் கிளைமாக்ஸ் மறந்தே போய்விட்டது. காதல், துள்ளல் காட்சிகளில் சூர்யா ஒரு படிமேல் தான். You cant substitute youth. மற்றபடி ஆமிர் அசத்தியிருக்கிறார், சூர்யா போலவே. அசின் அட்டகாசம். பாடல்கள் தமிழில் தமிழ்ர்கள் ரசனைகேற்ப; இந்தியில் அவர்கள் ரசனைகேற்ப ARR. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. ஒரு காட்சியில் அசின் ஆமிரை உடனடியாக விளம்பரத்தில் நடிக்க அழைத்து, விலாசம் கூறுவர். ஆமிரின் வெள்ளைக்கார உதவியாளர் மடிக்கணினியில் அதை டைப் செய்ய கஷ்டப்படுவார். ஹிந்தியில் அந்த விலாசம் - சின்ச்போகிலி என்னும் சிக்கலான இடம். தமிழில் அது - "தண்டு மாரியம்மன் கோயில் தெரு" என்று நினைக்கிறேன். அந்த வெள்ளைக்காரர், "தண்டு?" என்று சொல்லிவிட்டு முழிக்கும் இடம், ஹிந்தியிலும் இருந்தாலும், தமிழில் simply super. முதல் வார நிலைமை வைத்துப் பார்த்தல், ஹிந்தியிலும் இந்தப் படம் பெரிய சக்சஸ் என்று தோன்றுகிறது.

அனுஜன்யா

கோவி.கண்ணன் said...

படம் பார்க்கலாம்னு இருந்தேன் கதையைச் சொல்லிட்டிகளே

Cable சங்கர் said...

தலைவா அந்தோணி படத்தோட எடிட்டர், தமிழ்லேயும்,ஹிந்திலேயும், தமிழ் கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர், ஹிந்தி ரவி.கே.சந்திரன்.

SurveySan said...

அதிரை, நன்றி. :)

SurveySan said...

அனுஜன்யா,

சின்சிபோக்லி நானும் கவனித்தேன்.
ஹிந்தியில் வரட்சியாதான் இருந்தது அந்த காட்சி.
ஆனால், அசினின், விளம்பர பட ஷூட்டிங்கி காட்சிகள், ஹிந்தியில் பட்டையை கிளப்பியது. தமிழில் எரிச்சல் தந்தது ;)

தமிழில் க்ளைமாக்ஸ், மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 2 வில்லன்ஸ், மழைல கட்டிப் பொறளுவாங்க ;)

SurveySan said...

கோவி,
கதைய சொல்லிட்டனா?
என்ன கொடுமைங்க இது? சில காட்சிகளை ஒப்பீடுதானே செஞ்சேன் :)

ஓ, நீங்களும் டமில்ல படம் பாக்கலியா?

SurveySan said...

Cable சங்கர், நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

நான் விக்கியிலிருந்து உருவினேன்.

இங்கே சரி பண்ணிடுங்க:
http://en.wikipedia.org/wiki/Ghajini_(2005_film)

SurveySan said...

சங்கர், என் பதிவில் ராஜசேகர் பேரை சேர்த்துவிட்டேன்.

திருத்தலுக்கு நன்றி.

விக்கியில், IMDBயிலிருந்து எடுத்து காட்ராங்க. IMDBயில் ராஜசேகர் பேர் சரியா இருக்கு. ஆனா, விக்கியில் தவறா காட்டுது. cacheஆகியிருக்கும், கொஞ்ச நாள்ள தானா சரியாகுமோ என்னமோ.

ஆளவந்தான் said...

நல்ல விமர்சனம்.சரியான ஒப்பீடு.

ஆ! இதழ்கள் said...

நான் இந்திகாரங்கிய பக்கத்துல தான் குப்ப கொட்டிக்கிட்டுருக்கேன். மனுஷங்கிய இத்தன தமிழ் ஆளுக வேலை பாத்துருக்காங்யனு நினைக்கவே மாட்றாங்ய. அமீர் அமீர்னு கொல்ராங்ய. என்னதான் இருந்தாலும் i think south indian technicians will not be recognized by bollywood. Its a waste working for them other than money. புரிஞ்சுகிட்ட ஒருத்தரு கமல்.

Santhosh said...

//நயன்தாரா நடித்திருந்த வேடத்தில், ஜியா கான் நடிச்சிருந்தாங்க. ஜியாவை பாத்துட்டு, நயன்தாராவை பார்த்தால், நயனின் நடிப்பு சகிக்கலை.//
தல,
இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.. தலைவியோட அழகுக்கு முன்னாடி நடிப்பா என்ன கொடுமை சர்வேசா இதெல்லாம்..

இது குறித்தான பிற போராட்டங்களை பற்றிய அறிவிப்பை தலைவியின் அண்ணன் தல சிபியார் அறிவிப்பார்.

Truth said...

actually, enakku tamil padama thaanga pudichi irundichi. Surya nadippu aamir-oda nadippoda nalla irundichi.
climax kooda tamil thaan enakku pudichi irundichi, hindi-la ennamo javvu maadhiri izhutha feeling irundhichi.
matha padi oru project-a remake pannum podu, first time mistakes-a second time rectify panradhu sulabam thaane, andha rectifications thaan hindi la irukku. ennoda vote surya ghajini-kke :)

ஷாஜி said...

நல்ல ஒப்பீட்டு விமர்சனம்.

அமுதா said...

நல்ல ஒப்பீட்டு விமர்சனம்.


/*தமிழுக்கும் இந்திக்கும் இரண்டு வித்யாசங்கள் தான்.

1) தமிழில் சூர்யா. இந்தியில் அமீர்கான்.
2) தமிழில் க்ளைமாக்ஸ் சொதப்பல். இந்தியில் டாப்-டக்கர். */

அதே...

suvanappiriyan said...

நல்ல விமர்சனம்.சரியான ஒப்பீடு.

கிரி said...

பார்த்துட வேண்டியது தான்

//SurveySan said...
கோவி,
கதைய சொல்லிட்டனா?
என்ன கொடுமைங்க இது? சில காட்சிகளை ஒப்பீடுதானே செஞ்சேன் :)//

அவரு வேற எங்காவது கதைய படித்து விட்டு இங்க வந்து பின்னூட்டம் போட்டுட்டாரு போல ஹி ஹி ஹி

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் எடுத்து இரண்டு வருடம் கழித்து தான எடுத்திருக்காங்க அதனால எப்படியும் சில மெருகேற்றம் இருக்கத்தான் செய்யும்...

அக்னி பார்வை said...

அப்படியே ஒரு எட்டு போய் Memonto வையும் பார்த்துவிட்டு ஒப்பீட்டை விரிவாக்கியிருக்கலாமே?

நாடோடி இலக்கியன் said...

அருமையான விமர்சனம்.

//அப்படியே ஒரு எட்டு போய் Memonto வையும் பார்த்துவிட்டு ஒப்பீட்டை விரிவாக்கியிருக்கலாமே?//


ரிப்பீட்டே...!

SurveySan said...

//அப்படியே ஒரு எட்டு போய் Memonto வையும் பார்த்துவிட்டு ஒப்பீட்டை விரிவாக்கியிருக்கலாமே?//

thedikkitte irukken, innum kannula padala. :)

மாறன் said...

நல்ல விமர்சனம்.

நிஜமா நல்லவன் said...

/அக்னி பார்வை said...

அப்படியே ஒரு எட்டு போய் Memonto வையும் பார்த்துவிட்டு ஒப்பீட்டை விரிவாக்கியிருக்கலாமே?/

ரிப்பீட்டேய்..!

Senthuran said...

http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html

SurveySan said...

Memento review here

http://surveysan.blogspot.com/2009/03/memento.html