recent posts...

Sunday, December 14, 2008

புஷ் - ஸீரோ டு ஹீரோ?

அமெரிக்கா ரொம்ப நல்ல ஊருண்ணேன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். இங்க நடந்து முடிஞ்ச தேர்தலைப் பத்தியும் மத்த நல்ல விஷயங்களைப் பத்தியும் குட்டியா ஒரு பதிவு அது.

அதுல, நம்ம டாக்டர் VSK, புஷ் ரொம்ப நல்லவரு, அவரோட அதிரடி நடவடிக்கைகளால் தான், 9/11க்கு பிறகு, அமெரிக்காவில் மற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டதுங்கர ரீதியில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு.

புஷ் இங்கிருக்கும் ஊடகங்களால் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்படுபவர். எனக்கு அவரு மேல பெரிய அபிப்ராயம் எல்லாம் இருந்ததில்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக, ஒரூ நாட்டின் மேல் தேவை இல்லாமல் போரிட்டு, பல லட்சம் சாமான்யர்களை கொன்று குவித்த கொழுப்பெடுத்தவர் என்பது போல்தான் என் அபிப்ராயம்.

உங்களில் பலருக்கும் அப்படிதான் இருந்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனா, டாக்டர் சார் மாதிரி, புஷ்ஷுக்கு ஆதரவு தரவங்களும் இருப்பீங்கங்கரதுல சந்தேகமில்லை.

ஆனா பாரூங்க, புஷ், மிக மிக மிக தைரியமா, பாக்தாத்துக்கு போயிட்டு வந்திருக்காரு, பை பை சொல்ல.
அங்கே ஒரு எகிப்து நிருபர், ஷூவை கழற்றி அடித்ததும், டகால்னு குநிஞ்சு சூப்பர் எஸ்கேப் ஆகியிருக்காரு.
இந்த வயசிலும், இந்த அலார்ட்டா இருப்பது, ஆச்சரியம்.
இந்த சம்பவம் முடிந்ததும், அவரின் வழக்கமான, ஹாஸ்யம் கலந்த, பேட்டியும் சூப்பர்.

என்ன எரிச்சல் இருந்தாலும், இந்தச் சம்பவத்தைப் பார்த்த பின், அவரு ஒரு 'ஹீரோ' மாதிரி மாறிட்டாரோ?

உங்களுக்கு புஷ் பிடிக்குமா? வாக்குங்க!
( புஷ்ஷின் farewell partyக்கு முன் வாக்கின் முடிவுகள் கிடைக்கவேண்டும். அமெரிக்காவே இதை ரொம்ப எதிர்பாக்குது. யோசிச்சு உடனே வாக்குங்க ;) )




13 comments:

ராஜ நடராஜன் said...

ஜீரோ போடறதுக்கு முன்னாலே நான் தான் முதல் இடம் காலியாயிருக்கு.அதப் போட்டுட்டு ஜீரோவுக்கு ஓட்டுப் போடுறேன்.

Thamiz Priyan said...

அணையப் போகும் விளக்கு பிரகாசமா எரியுமாம்... ஹா ஹா ஹா

SurveySan said...

//ஜீரோ போடறதுக்கு முன்னாலே நான் தான் முதல் இடம் காலியாயிருக்கு.அதப் போட்டுட்டு ஜீரோவுக்கு ஓட்டுப் போடுறேன்.//

pireeliye? :)

///அணையப் போகும் விளக்கு பிரகாசமா எரியுமாம்... ஹா ஹா ஹா///

;)

Anandha Loganathan said...
This comment has been removed by the author.
Anandha Loganathan said...
This comment has been removed by the author.
Anandha Loganathan said...

in front of media, he didn't show his anger and frustration but in case if it were in India , we wouldn't expect the same.

பத்மா அர்விந்த் said...

புஷ் சீரோவும் இல்லை, ஹீரோவும் இல்லை.மும்பை தாக்குதலுக்கு பிறகு எப்படி சில பதிவர்கள் பாகிச்தான் மீது போர்தொடுத்தே ஆக வேண்டும் என்று சொன்னார்களோ, அதேபோல 8/11 க்கு பிறகு இங்கேயும் உணர்ச்சி அதிகம் இருந்தது. அதை தன் சுயநல காரணங்களுக்காக பயன் படுத்திய வகையில் சீரோ. நல்ல திட்டமிடலும் இல்லை.
ஆனால் FQHC medicare Victim assistance போன்ற திட்டங்களுக்கும், ஏழைப்பள்ளிகளுக்கும் நிதி அதிகமாக்கியதில் ஹீரோ. மற்றபடி ஒரு சராசரி தலைவர் அவ்வளவே.

பத்மா அர்விந்த் said...

9/11 என்றிருந்திருக்க வேண்டும். மத்திய வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதை தடுக்க ஆண்டிற்கு ஒருமுறை screening செய்ய, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.பெரும்பாலான திட்டங்கள் (காரீய பெயிண்ட் உள்ள வீடுகளிலிருந்து மற்ற HUD க்கு குடிபெயர்க்கும் திட்டங்கள் கூட அதிக ஆதரவு பெற்றது.போர் என்று செய்த மிக பெரிய தவறு, தேர்தலில் செய்வித்த ஊழல் போன்றவை மற்றவற்றை பரவலாக தெரியாமல் மறைத்து விட்டன.

SurveySan said...

Anandha,

///if it were in India , we wouldn't expect the same./////

Aaappudhaan ;)

SurveySan said...

Padma,

////மற்றபடி ஒரு சராசரி தலைவர் அவ்வளவே.////

If he was an ordinary leader, things would have been much better.

He was vicious and dumb when it came to Iraq handling.

Many many lives and $s and livelihoods were lost because of his actions. It may have saved a few incidents in the US, but... still..:(

ராஜ நடராஜன் said...

//pireeliye? :) //

பிரியலின்னா இன்னொரு 10 ஓடு 11.

ராமலக்ஷ்மி said...

நேற்று அந்த நிருபர் ஷூவை வீசியதும் புஷ் குனிந்து தப்பியதும் நல்ல காமடியா இருந்தது:)!

by the way 'zero'-வுக்கே என் பொன்னான வாக்கு:)!

Unknown said...

// தமிழ் பிரியன் said...
அணையப் போகும் விளக்கு பிரகாசமா எரியுமாம்... ஹா ஹா ஹா

//

ரிப்பிட்டேய்.....