recent posts...

Wednesday, December 03, 2008

Quit India 2008 - Go MUMBAI Go!

இந்தியாவில், மும்பையில் மட்டுமே இது சாத்தியப்படும்.
அடிமேல் அடிமேல் வாங்கினாலும், ஃபினிக்ஸ் பறவை மாதிரி, தூசு தட்டி, இன்னும் பல மடங்கு சக்தியுடன், அதிர்ந்தெழுகிறது மும்பை.

God forbid, சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ, இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்தால், இந்த ஒரு ஒற்றுமையும், மக்களின் பங்களிப்பையும் கண்டிப்பா பார்க்கமுடியாது.
சமீபத்தில் நடந்த, இலங்கைப் ப்ரச்சனைக்கான, மனிதச் சங்கிலியின் போது கூட, 'மழைடா மச்சி, அதான் போவல' வகையராக்கள் தான், நம்மூரில் மிகுதி.
மேக்ஸிமம், பேப்பரிலும், டிவியிலும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு, உச்சு கொட்டி, யாரையாவது திட்டிட்டு, ஜாலியாயிடுவோம்.

ஆனால், மும்பையில், ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகும், மக்கள்,மனிதச் சங்கிலிகளையும், மௌன ஊர்வலங்களையும், உருவாக்கி, தங்களை தாக்கும் தீவிரவாதத்தை, தாங்கள் கொசுவைப் போல் கருதுவதை வெளிப்படையாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.

இம்முறையும், தங்கள் ஒருமைப்பாட்டையும், தீவிரவாதத்தின் மேல் உள்ள வெறுப்பையும், அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தையும், மும்பை வாசிகள் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
வேலை நேரம் முடிந்ததும், மாலை 6 மணி அளவில், மும்பை gateway of Indiaவுக்கு அருகே, சுமார் 5000 பேர் ஒன்று கூடி, மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

rediffல் saisuresh sivaswamy எழுதியுள்ள கட்டுரையில், இந்த நிகழ்வை,Quit India, Mumbai says againனு, நச்னு எழுதியிருக்காரு.

அவர் எழுதியுள்ள செய்தியிலிருந்து ஒரு அழகான பகுதி:
* Today was the beginning; a humble beginning if you want to call it that, but one that will rock the foundations of many hard-held beliefs, one that will show the rest of the country what committed citizens can do if they only step out of their comfort zone.

Hinduவில் இது தொடர்பாக வந்த செய்தியிலியிருந்து சில பத்திகள்:

* Instead of taking the train home we all came here. We have to show our support and we have to protest. We must not sit back and take this drivel by politicians,” said Mukesh Mehta, an accountant with a firm in the Fort area.

* I got into the crowd and as we began to walk I felt a great sense of nationalism. We are a democracy. Our so called leaders have to listen to us. We have to protest this terrible act on humankind,” said Usha Sathe, a housewife from Dadar.

* I have come on work from Delhi, but I thought I had to do my bit for my country when such a terrible tragedy hits us. Participating in this is my contribution. It is a way of us showing our anger but in a peaceful way,” said Ajay Ahuja, a lawyer.

* Terrorism has no religion. People should unite in the fight against terror,” said Sandeep Mishra, an engineer, at Jantar Mantar in Delhi.

Hinduல் வந்த இந்த செய்தியைப் பாருங்கள். போலீஸ் காரர்கள் வெறும் லட்டியைக் கொண்டு, ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்த கதை.

* “This is the first time in world history that a terrorist has been captured alive,” claimed Sawant.“இதில் உயிர்நீத்த assistant police inspector Tukaram Gopal Ombale, போன்றவர்களை நினைத்தால், என்னுள் எழும் உணர்சிகளை, விவரிக்க வார்த்தை கிட்டவில்லை.
இந்த மாதிரி போலீஸ்காரங்க இருக்கரவைக்கும், மும்பைவாசிகளெல்லாம், எந்த சொறிநாய்க்கும் பயப்பட வேண்டியதில்லை.

இதில் நாம் அனைவரும், நம் மனதில், ஆணி அடித்து, ஃப்ரேம் போட்டு மாட்டிக் கொள்ள வேண்டிய வாக்கியங்கள் இவைதான்:
..will show the rest of the country what committed citizens can do if they only step out of their comfort zone...

நண்பர்களே, உள்ளுக்குள்ள, கொஞ்சமாவது 'தீ'யை எரிய விட்டுக்கிட்டே இருங்க.

I am not exaggerating.. if we continue like this, in a few more years, we will be left with a chaotic community!

வீதியில் இறங்கினால்தான், விடிவு பிறக்கும்!!!

9 comments:

SurveySan said...

ஜெய்ஹிந்த்!

Danks :)

kayams!

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

//இதில் உயிர்நீத்த assistant police inspector Tukaram Gopal Ombale, போன்றவர்களை நினைத்தால், என்னுள் எழும் உணர்சிகளை, விவரிக்க வார்த்தை கிட்டவில்லை.//

கடமையை ஆற்றுகையில் காலமான காவலர்களின் தியாகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை. இதையெல்லாம் மறந்து நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்க் கொண்டேயிருந்தால்
நீங்கள் சொன்ன மாதிரி // in a few more years, we will be left with a chaotic community!//

விடிவுக்காக வீதியில் நடந்த பெண்மணி சொன்னது மனதில் நிற்கிறது:
//* I got into the crowd and as we began to walk I felt a great sense of nationalism. //

பதிவைப் படிக்கையிலும் அதை உணர முடிகிறது. நன்றி சர்வேசன்.

ஜெய்ஹிந்த்.

அதிரை ஜமால் said...

\\வீதியில் இறங்கினால்தான், விடிவு பிறக்கும்!!!\\

உண்மை.

எனக்கென்ன என்று இருத்தலே, இப்படிப்பட்ட விளைவுகளுக்கு காரணம்.

நமக்கும் ஒரு நாள் அந்த நிளை நேரலாம் என்ற அச்சமாவது இருக்கனும்.

சுவனப்பிரியன் said...

\\வீதியில் இறங்கினால்தான், விடிவு பிறக்கும்!!!\\

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சர்வேஷன். பாராட்டுக்கள்.

Karthick Krishna CS said...

//சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ, இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்தால், இந்த ஒரு ஒற்றுமையும், மக்களின் பங்களிப்பையும் கண்டிப்பா பார்க்கமுடியாது//
//மனிதச் சங்கிலியின் போது கூட...//

ஆட்சேபிக்கிறேன். நடந்த மனித சங்கிலி ஒரு அரசியல் நாடகமே தவிர மக்களின் முயற்சி அல்ல. அன்று போக்குவரத்தினாலும் மழையினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கே தனியாக ஓர் மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும்..

இது போன்ற (மும்பை தாக்குதல்) சம்பவங்கள் நம் ஒற்றுமையை காண்பிக்க நமக்கு கிடைத்த ஒரு தருணமே.. அதே போல சென்னையிலும் சில இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது... இது எந்த மாநிலத்தில், நகரத்தில் நடந்திருந்தாலும் மக்கள் தமது ஒற்றுமையை காண்பித்திருப்பார்கள் என்பதே எனது கருத்து..

எந்த மாநில மக்களையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்.. எவரையும் பிரித்துப் பார்க்கவேண்டாம்...

ராஜ நடராஜன் said...

Good one Survey.

SurveySan said...

thanks Ramalakshmi, Jamal, Suvanapriyan.

SurveySan said...

Karthick,

//// இது எந்த மாநிலத்தில், நகரத்தில் நடந்திருந்தாலும் மக்கள் தமது ஒற்றுமையை காண்பித்திருப்பார்கள் என்பதே எனது கருத்து..////

I seriously doubt that. especially, TN will get 0% on this.