recent posts...

Tuesday, September 30, 2008

தசாவதாரம் - டிவிடி பார்வை



தசாவதாரத்தை இரண்டாம் முறையாக டிவிடியில் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது.
மொதல் தடவ பாக்கும்போது, ரொம்ப எதிர்பார்த்து போனதாலையோ, இல்ல, கமல் படத்தைப் பாக்கப் போனா, கமலே தெரியாம, எல்லா வேஷத்தலையும், excess make-up இருந்ததாலையோ, படம் ஆஹா ஓஹோன்னு சொல்ற அளவுக்கு பிடிக்காம இருந்தது.

ஆனா, என்னமோ தெரியல, என்ன மாயமோ புரீல, டிவிடில படத்தை பாக்கும்போது, அந்த excess make-up ஒரு மேட்டராவே தெரியல.
படம், விறுவிறுப்பான, ஒரு நல்ல பொழுது போக்கும் படமாவே, good feel தந்தது.

ஆரம்ப, ராமானுஜதாசனாகட்டும், அதைத் தொடர்ந்து, படத்தொடக்கத்தில், மெரீனாவில் ஒவ்வொரு கமலையும், மாத்தி மாத்தி காட்டுவதாகட்டும், அதைத் தொடரும், அமெரிக்க காட்சிகளாகட்டும், நிமிர்ந்து உட்கார வைத்த, நாயுடு, பூவராகனாகட்டும், எல்லாமே கச்சிதமா பண்ணியிருப்பதாகவே எனக்குப் பட்டது.

மேக்-அப் மொத தடவ ஏன் பிடிக்காம போச்சுன்னா, நாம எதிர்பாக்காம கிடைச்ச, ஷாக்னால இருக்கும். கமல், கொஞ்சம் விளம்பரப் படுத்தி நம்மை தயார் படுத்தியிருந்தா, இது ஒரு நெருடலாவே தெரிஞ்சிருக்காது.
ஃபெளெட்சர், மேக்கப் நல்லாவே இருக்குதுங்க.
மொத தடவ பாக்கும்போது, சுத்தமா பிடிக்காதது, ரெண்டாவது தடவ பாக்கும்போது பிடிக்குதுன்னா, இதுல ஏதோ மனோரீதியான நுண்ணிகழ்வு ஏதோ இருக்குது.
யாராச்சும், ஆராய்ச்சி பண்ணா நல்லது ;)

திரைக்கதை, ப்ரில்லியண்ட்னு மொதல்லையே சொன்னதுதான்.

ராமானுஜதாசனுக்கும், விஞ்ஞானிக்கும், சுனாமிக்கும், முடிச்சு போட்டதெல்லாம் அபாரம்.

மொத தடவை படம் பாத்து, எல்லோரும் புலம்பிய இன்னொரு விஷயம், ஊரே சுனாமியால் பாதிக்கப்பட்டு, பிணக்குவியலை லோடு லோடா மூடிக்கிட்டு இருப்பாங்க, அப்ப கமலும், அசினும், ஓரமா நின்னுக்கிட்டு, விஷ்ணு சிலை மேல் சாஞ்சுக்கிட்டு, ரொமான்ஸ் டையலாக்ஸ் பேசிக்கிட்டு இருப்பாங்களாம்.

எனக்கு அது, பெரிய நெருடலா தெரீல. எல்லா ஹாலிவுட் படத்திலையும் நடக்கர சங்கதிதான் இதெல்லாம்.

இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன், சுனாமி வந்து தாக்கிச்சின்னு, டி.வி.ல காட்டிக்கிட்டு இருந்தானே, அப்ப நீங்க என்னா சாப்பிடாம கொள்ளாம, ஒப்பாரியா வச்சுக்கிட்டு இருந்தீங்க?
இல்ல, ஷேவ் பண்ணாம தாடிவிட்டுக்கிட்டு திரிஞ்சீங்களா?
செய்தியப் பாத்தமா, நம்ம வேலையப் பாத்தமான்னு தான இருந்தோம்?

யதார்த்தம் அதுதானுங்கோ!

ஸோ, தசாவதாரம், அருமையாக எடுக்கப்பட்ட படம்.

ofcourse, சின்ன சின்ன குறைகள் இருக்கு. ஆனா, எதுவுமே, மிகைப் படுத்தி, படம் நல்லால்லன்னு சொல்லற லெவல்ல இல்லை.

வரலாறை திருத்தி எழுதவேண்டிய கடமை உந்தியதால், இந்தப் பதிவு ;)

வர்டா, நீங்க ரெண்டாவது பாத்தீங்களா? கருத்துல மாத்தம் இல்லியா?

:)

Monday, September 29, 2008

'குறும் போட்டி'க்கு ஒரு ஒத்திகை

நண்பர்களே, வாங்க வாங்க.

சௌக்யமா?

'குறும் போட்டி' பத்தி தெரியும்ல? தெரியலண்ணா, வலது பக்கம், பச்சையா பட்டை போட்டிருக்கேன் பாருங்க. க்ளிக்கித் தெரிஞ்சுட்டு வாங்க.

என்னது? ஏற்கனவே, சர்வேல க்ளிக்கிட்டீங்களா? போட்டீல கலந்துக்குவேன்னு, இதுவரை வாக்களித்த 22 நல்லவங்கள்ள நீங்களும் ஒருத்தரா? நீங்க யாருன்னு, பின்னூட்டத்துல சொல்லிடுங்க. கூடியவிரைவில், உங்ககிட்டயெல்லாம், கலந்தாலோசிச்சுதான், அடுத்த கட்டத்தை பத்தி திட்டம் தீட்டி செயல் படுத்தணும்.

முழுசா, கதை எழுதி, அதுக்கு, வ்சனம், திரைக்கதை எல்லாம் அமச்சு, படமாவும் எடுத்து, எடிட்டிங்கும் பண்ணி, முடிஞ்சா, பின்னிசையும் சேத்து ஒரு கலக்கு கலக்கணும்னு நெனைக்கும்போதே த்ரில்லிங்கா இருக்குல்ல? நடிகர்களுக்கு ஏற்பாடு பண்றதும் ஈசிதான். அலுவலகத்தில், கண்டிப்பா, யாராச்சும் மாட்டுவாங்க.

போட்டி ஒருபக்கம், மெதுவா உருவாகிக் கொண்டு வரும்போது, நேத்து ஆஃபீஸ்ல ஒரு கனவு வந்துது. ஒரு குறும்படத்துக்கான ஐடியா அது.

அந்த ஐடியாவை இங்க சொல்றேன்.
வீடியோ காமெராவிலோ, செல்ஃபோனிலோ, வீடியோ எடுக்க முடிந்தவங்கள், இதை செயல் படுத்த முனையலாம்.

'குறும் போட்டி'க்கு ஒரு ரிஹர்ஸல் மாதிரி இத வச்சிக்கலாம்.

செஞ்சுடலாம்ல?

தலைப்பு: தானம்

கதைக் கரு: சமீபத்தில் அதிகமாய் பேசப்படும், உடல் உறுப்பு தானத்துக்கான விழிப்புணர்வை, நம் இந்திய மக்களுக்கு ஊட்டுதல்.

தயாரிப்பு செலவு: ரெண்டு குழந்தைகளுக்கு சப்பு மிட்டாய், ரெண்டு சைனா பீங்கான் குழந்தை பொம்மை.

ஸ்க்ரீன் ப்ளே:
காட்சி1:
அனுவுக்கும், நஸ்ரீனுக்கும் (ஸ்+ரீ போட்டா ஸ்ரீ ஆயிடுதே? ஆஹா, ஈ.கலப்பையின் மத-ஒப்புமை, ஜூப்பர்:) ) நாலு வயசு. ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுல வசிக்கும் க்யூட் குழந்தைகள்.
ரெண்டு பேரும் ரூமுக்குள்ள, பொம்மைகளை வச்சுக்கிட்டு வெளையாடராங்க.
அனு கைல ஒரு அழகான பெண் குழந்தை பொம்மை.
நஸ்ரீன் கையிலையும், அதே மாதிரி, ஒரு அழகான பெண் குழந்தை பொம்மை.

காட்சி2:
வீட்டுக்குள்ள, ஹால்ல, ரெண்டு குடும்பமும் சிரிச்சு பேசிக்கிட்டு, அக்கடான்னு கதை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. டி.வி, ஓடிக்கிட்டு இருக்கு.
திடீர்னு, படால்னு சத்தம்.
தொடர்ந்து ரெண்டு குழந்தைகளும் அழும் சத்தம்.
ரெண்டு அம்மாக்களும் ரூமுக்குள்ள "அனு/நஸ்ரீன் என்னம்மா ஆச்சு"ன்னு ஓடறாங்க.

காட்சி3:
ரூமுக்குள்ள, ரெண்டு பொம்மைகளும், கீழ விழுந்து, ஒடஞ்சு கெடக்குது.
அனுவும், நஸ்ரீனும் அழுதுக்கிட்டு இருக்காங்க.
நஸ்ரீனோட அம்மா, அழாதம்மான்னு சமாதானம் பண்றாங்க.
அனுவின் பொம்மை முழுசா ஒடையல, கை மட்டும் ஒடஞ்சிருக்கரத பாக்கராங்க.
நஸ்ரீனின் பொம்மை முழுசா ஒடஞ்சு போச்சு, ஆனா, கை ஒடையாம கீழ இருக்குது.
நஸ்ரீனின் அம்மா, தனியா இருக்கும் கையை எடுத்து, அனுவின் உடைந்த பொம்மையில் ஒட்டி வைக்கிறாங்க.
அனுவின் பொம்மை முழுசாயிடுது.
அதை, அனுகிட்ட கொடுக்கராங்க. பொம்மையை வாங்கிக்கிட்டு அனு சிரிக்கராள்.
ஆனா, நஸ்ரீன் தொடர்ந்து அழரா, தன் பொம்மை ஒட்ட முடியலையேன்னு.

அனு, நஸ்ரீன் கிட்ட மெதுவா போய், என் பொம்மைய நீயே வச்சுக்கோன்னு கொடுக்கரா,
நஸ்ரீன் அழுகைய நிறுத்தி சிரிக்கரா.
அனுவை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தா கொடுக்கரா.
சீன், அப்படியே ஃப்ரீஸ் பண்றோம்.

காட்சி4:
"உடல் உறுப்பு தானம்
உயிரைக் காக்கும்
உறவுகளை மகிழ்விக்கும்
இன்றே செய்யுங்கள்"
இந்த மாதிரி ஏதாவது கவிதைய டைட்டில் கார்டுல போட்டுடுங்க.

காட்சி5:
(ஆப்ஷனல்)
கதைக் கரு: சர்வேசன் ( ஹி ஹி )
'குறும்' போட்டிக்கான ஒத்திகை ன்னு டைட்டில் கார்டுல கடைசில போடரதும், போடாததும் உங்க விருப்பம்

;)


சீக்கிரம், இத முயற்சி பண்ணி, யூ-ட்யூப்ல ஏத்துங்க.

அனு, நஸ்ரீனுக்கு அம்மாவாக நடிக்க, ஆள் கிடைக்கலன்னா, குழந்தைகளை மட்டும் வைத்துக் கொண்டே, திரைக் கதையை உல்டா செய்யலாம். அந்த மாதிரி எடுக்க ஆசைப் படுபவர்கள், பின்னூட்டத்தில் தெரிவித்தால், நமது பதிவுலக, ஸ்க்ரீன் ப்ளே வித்தகர்கள் ஒதவுவாங்க.

முயற்சி பண்ணுவீங்கல்ல? ( அஞ்சு நிமிஷத்துக்கு மேல வராம பாத்துக்கங்க. உ.த, கவனிக்க ;) )

பி.கு: இந்தக் கதை/திரைக்கதை, என் சொந்த சரக்கு. இதுக்கு முன்னாடி எந்த குறும்படமோ, படமோ, கதையோ, இந்த கருவுடன் நான் பார்த்த ஞாபகம் இல்லை. இது, இன்னொரு கதையுடன் ஒத்துப் போயிருந்தால், it is just a mere coincidence. so, தைரியமா கோதால எறங்குங்க ;)


Sunday, September 28, 2008

விடியலை அறிவிக்கிறான் சிலம்பரசன்

நம்ம இயலாமையோ என்னமோ தெரீல, இப்பெல்லாம் கொஞ்சம் சோகமான செய்தியெல்லாம் படிச்சா கண்ணுல தண்ணிவந்துடுது.
குங்குமத்தில், 44ஆம் பக்கத்தில், சென்னையின் அழகான ராத்திரி புகைப்படத்துடன் இப்படி ஆரம்பித்திருந்தது ஓர் சேதி.

"சென்னை குமாரராஜா முத்தையா பள்ளியில் 7-வது படிக்கிறான் சிலம்பரசன். அப்பா ஏழுமலை வாட்ச்மேன். அம்மா வீட்டு வேலை செய்கிறார். 3 சகோதரிகள். தூக்கம் விலகாத கண்களோடு , தன் உயரமே கொண்ட சைக்கிளில் செல்லும் சிலம்பரசன் தான் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விடியலை அறிவிக்கிறான்"

என்னடா சங்கதின்னு மேல படிச்சா, சிலம்பரசன், செய்தித்தாள் விநியோகம் செய்யும் சிறுவன்.
8 மணிக்கு எழுந்ததும், தந்தி வந்தாச்சா, ஹிந்து வந்தாச்சான்னு அலப்பரை பண்ணும் நமக்கு, அந்த பேப்பரை கொண்டு வந்து போடுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதர்க்கு இதுவரை நேரம் இருந்ததில்லை.

ஒவ்வொரு வீட்டுக்கும் செய்தித்தாளை, ஏழு மணிக்கு முன்னாடி போடணும்னா, சிலம்பரசன் மாதிரி ஆட்கள், மூணு மணிக்கு தினம் எழுந்து, பேப்பர்கள் வந்திறங்கும் டிஸ்ட்ரிப்யூஷன் ஏரியாவுக்கு காலங்காத்தால வந்திடணுமாம். அப்பரம், அங்கேருந்து, பேப்பர் கட்டை எடுத்துக்கிட்டு, வீதி வீதியா, வீடு வீடா போய் விநியோகம் பண்ணனும்.

ஏழாவது படிக்கும் சிலம்பரசன் தான் சென்னையின் இளவயது, 'லைன் பாய்'ஆம். இந்தத் தொழிலில், மூன்று வருட அனுபவமாம் இவனுக்கு. (அப்ப, இன்னும் சின்ன வயசுலயே வேலைக்கு வந்திருக்கான்). ஹ்ம்!

ஒரு மாசத்துக்கு 400ரூவா கிடைக்குமாம்.

முன்பெல்லாம், வீட்டுக்கு வெளியில் இருந்தபடி, பேப்பரை விர்ர்னு உள்ள விசிறி அடிப்பாங்களாம். இதை, மரியாதை குறைச்சலா சில கஸ்ட்டமர்ஸ் நெனைக்கறாங்களாம். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், இறங்கி, கிட்ட போய்தான் விநியோகிக்கணுமாம். அதுவில்லாமல், அடுக்குமாடி வீடுகளில், வாட்ச்மேன் கெடுபிடி ஜாஸ்தியாம். லிஃப்ட் உபயோகிக்க விடுவதில்லையாம். அதனால படிக்கெட்டு ஏறி ஒவ்வொரு வீடா பேப்பர் போடணுமாம். இந்த கெடுபிடிகளால், ஏழுமணிவரை பேப்பர் போட்டு, பள்ளிக்குச் செல்வது காலதாமதமாகுதாம்.

காலை மூணு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டியதால், ராத்திரியும் சரியா படிக்க முடிவதில்லையாம்.

"அக்காவெல்லாம் பள்ளிக்கொடம் போவையிலதான் நான் வீட்டுக்கே போவேன். அவசரமா குளிச்சிட்டு, இதே சைக்கிள்லதான் பள்ளிக்கொடம். நெறைய கடன் இருக்கறதால அப்பா, அம்மா, கூலியால சமாளிக்க முடியலண்ணா... அதுதான் பேப்பர் போட வந்துட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கிறதாலே நைட்டு ரொம்ப நேரம் படிக்க முடியாதுண்ணா. அதனால மார்க் கம்மியாத்தான் வரும். ஆனா பாரு, படிச்சு டாக்டராவேன்..."

இந்த மாதிரி நெறைய சிலம்பரசர்கள் சென்னைத் தெருவில் சுற்றித் திரிகிறார்கள்.

ப்ளடி 400ரூவாய்க்காக, அவன் இளமையைத் தொலைத்து, இப்படி அல்லல் படரான்னு நெனச்சா, ரொம்பவே சோகமாயிடுது.

கண்டிப்பா, இங்க ஒரு ஆயிரம் பேர் இருப்போம். கண்டிப்பா, மாசத்துக்கு 400ரூவாய் நமக்கு, ஒரு மேட்டரே இல்லாத தொகைதான். நாம மனசு வச்சா, 1000 சிலம்பரசர்கள், வாழ்க்கையை மீட்டுத் தரலாம். இதையெல்லாம், channelize செஞ்சு ஒழுங்குமுறையா செய்ய ஒரு நிறுவனமோ, தனியார் குழுவோ அமையணும். அட்லீஸ்ட் ஒரு நல்ல மனசுள்ள social workerஆவது அமையணும்.

We have to do something, friends!
ஏதாச்சும் செய்யணும் பாஸு!



மூலம் குங்குமத்தில்: இங்கே

ஆண்களை கையாள்வது எப்படி?

எங்கையோ போயி எத்தையோ க்ளிக்கி (வால்பையனின் புலம்பல் -> Dr. Rudhranன் பதிவு -> Dr. Shaliniயின் பதிவு) கண்டதையெல்லாம் படிச்சிட்டே இருந்தனா, திடீர்னு வில்லங்கமா ஒரு தலைப்பு கண்ணுல பட்டுது.

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?"ன்னு டாக்டர்.ஷாலினின்னு ஒருத்தர் பதிவு போட்டிருக்காங்க. விஜய் டி.வில வந்து ஓ.சி அட்வைஸ் நெறைய கொடுக்கரவங்க அவங்க.

மேலாக்க மேஞ்சா, இன்னொரு பதிவு, 'சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்'.

இதுல என்னா சொல்றாங்கன்னா, எல்லா குழந்தைகளும், முதல் 8 வாரம் கருவில் இருக்கும்போது, பெண்ணாகத்தான் இருக்காங்களாம், அதுக்கப்பால, டெஸ்டோஸ்ட்ரோன், வந்து, பெண்ணாக இருக்கும் கருவை, ஆணாக மாத்திடுமாம்.
முதல் 8 வாரத்தில், எல்லாரும் பெண்ணாக இருந்ததால் தான், ஆண்களுக்கும் மார்பெல்லாம் இருக்குதாம்.
ஓ.கே. நம்பும்படியாதான் இருக்கு.

இப்படி, ஊருக்கு தேவையான விஷயங்களை மட்டும், சொல்லிட்டு, ஸைலண்ட்டா போயிருந்தா பரவால்ல.

அப்பரம்தான் வில்லங்கமே ஆரம்பிக்குது. டாக்டர் ஷாலினிக்கு, ஆண்களை சரியாக கையாண்டு, அவர்களை நாய்குட்டிகள் போல் வசியம் செய்ய, நம் ஆயாக்கள் காலத்திலிருந்து, தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும், சில டெக்னீக்ஸ் எல்லாம் தெரியுமாம்.

அத்த ஒவ்வொண்ணா நம்ம பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போறாங்களாம். எல்லாம் இலவச அட்வைஸாம்.

என்ன கொடுமைங்க இது?

இப்படி ரூம் போட்டு சதி பண்றாங்களே இதுக்கு நாம இப்ப் இருந்தே தயாரானாதான், இந்த பாடத்தை கமுக்கமா படித்துவிட்டுவரும் பெண்களின் ஆதிக்கத்திலிருந்து நாம் பிழைப்போம்.

ஆண் டாக்டர்ஸ்(Dr. Rudhran Dr. Bruno Dr.VSK), பெண்களை கையாள்வது எப்படீன்னு யாராச்சும் பதிவு எழுதுங்கய்யா.
சீக்கிரம், காலம் தாமதிக்காம, உடனே நம்ம வர்கத்தை காப்பாற்றவும்.

ஸ்ஸ்ஸ்ஸ் .

;)

பி.கு: ஆண்களை கையாள்வது எப்படி என்ற ஷாலினியின் பதிவுக்கு, ஸைலண்டா போயி படிங்க மக்களே. பின்னூட்டம் போட்டீங்கன்னா, உஷாராயிடுவாங்க, அப்பரம், அவங்க பேசிக்கர ரகசியம் தெரியாம போயிடும், சாக்குரத!

Friday, September 26, 2008

Tamilish விட்ட அறை!! தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்!

ஜூடாக்கறோம் ஜூடாக்கறோம்னு, எத்தையாவது குண்டக்க மண்டக்கா எழுதரது.
பல சமயம், ஓரளவுக்கு, ஒழுங்கா எழுதரதுக்கும், குண்டக்க மண்டக்கா தலைப்பு வெக்கரதுன்னு பொழப்பு ஓடுது.

அதுவும், புலி வருது புலி வருது கதையா, இப்பெல்லாம் என்ன மாதிரி குண்டக்கா மண்டக்கா தலைப்பு வச்சாலும், ஜூடாவ மாட்ரது ;)

சமீபத்தில், எழுதிய,
அனானிகளும், முகமூடிகளும் ஜாக்கிரதை - ஜூடாகல
ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க தேவை - ஜூடாகல
சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல - ஜூடாகல
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், போட்டி - ஜூடாகல

இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

ஜூடாக்கணும் என்ற மோகம் இருந்தால், தலைப்பும் சரி, மேட்டரும் சரி, மொக்கையாவே அமஞ்சுடுது.

எப்பயாச்சும், ஒருதடவ, கொஞ்சூண்டு யோசிச்சு எழுதும் பதிவுக்கும், ஜூடாக்க யத்தினித்து மொக்கைத் தலைப்பு வச்சா, அதுவும், பிசு பிசுத்து போயிடுது.

economic times எல்லாம் படிச்சு, ஓரளவுக்கு சரக்குடன், ஒரு வருஷத்துக்கு அப்பரம், ஒரு பதிவ போட்டு, அதுக்கும், ஒரு மொக்கை தலைப்பா, 'ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க தேவை'ன்னு வச்சா, அதுவும் பிசு பிசுத்து போயிடுச்சு.

ஆனா, இந்தப் பதிவை தமிழிஷ்ஷில் பதிஞ்சா, எந்த தமிலிஷ் புண்ணியவானோ, இதே பதிவுக்கு, தலைப்பை ஸலைட்டா மாத்தி, 'சைவம் vs அசைவம் - ஒரு அலசல்'னு பதிஞ்சுட்டாங்க.

யோசிச்சு பாத்தா, சொல்ல வந்த விஷயத்துக்கு கரெக்டான தலைப்பு அதுதான்.

ஜூடு மாயத்தில் மாட்டிக் கொண்ட, பலரும், இந்த மொக்கை சூராவளியில் சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழ்மணம், இவர்களைக் காத்து நம்ம எழுத்து, அடுத்த கட்டத்துக்கு மேம்பட, செந்தழல் ரவி சொல்லும் உபாயத்தை கூடிய விரைவில் செய்வது, இன்றியமையாத தேவையாகும்.
இல்லன்னா, மொக்கைச் சாகரத்தில் சிக்கித் தவித்து மீள முடியாத ஆழத்துக்கு த.ம செல்லும் வாய்ப்பிருக்கிறது.

செய்வார்களா?

விளம்பரம்: மறந்து விடாதீர்கள்.



;)

Thursday, September 25, 2008

ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க, எதிர்காலத் தேவை!


உணவு தானியங்களின் விலையெல்லாம் கூரைய பிச்சுக்கிட்டு மேலப் போவுது. விலை மட்டும் ஏறினாக்கூட தாங்கிடலாம், ஆனா, உற்பத்திக்கும், தேவைக்கும் ஏணி வச்சா கூட எட்டாத நிலை உருவாகிக் கொண்டு வருகிறது.
தானியங்களைப் ப்ரதான உணவாகக் கொள்ளும், இந்திய ஆசிய மக்களுக்குத்தான் இது பெரும் தலைவலியாய் தெரியும்.

அமெரிக்காவில், தானியங்களை அதிகமாய், உட்கொள்வதில்லை. பெரும்பான்மையானவர்கள் மாமிசம் உண்பவர்கள்.
குறிப்பா, மாடு, பன்றி வகையராக்கள்.

அமெரிக்காவில் உற்பத்திசெய்யப்படும், தானியங்களில், 70% ஆடு,மாடு,கோழி,பன்றிகளுக்குத் தீனியாக கொடுக்க மட்டுமே செலவு செய்யப்படுகிறது.

ஒரு மாடு, 16 கிலோ தானியங்களை உண்டால்தான், ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி பண்ணும்.
பயங்கரமான ரேஷியோவா இருக்குல்ல இது?
ஒரு கிலோ மாட்டிரைச்சி என்பது, ஒரு ஆசாமி ஒரே நாள் கபளீகரம் செய்துவிடும் அளவு.

இதே ஆசாமி, இந்தத் தானியங்களை மட்டுமே, டைரக்டா, சமத்தா சாப்டான்னா, 16 கிலோ அரிசி, ஒரு மாசத்துக்கும் மேல வச்சுக்கிட்டு சாப்பிடலாம்.

ஒரு அமெரிக்கன், சராசரியா, ஒரு வருஷத்துக்கு 125கிலோ இறைச்சி சாப்பிடுவானாம்.
அப்ப, அவன் ஒடம்ப வளக்க, 2000 கிலோ தானியங்கள் செலவிடப் படுகிறது.

அடேங்கப்பா, 2000 கிலோ அரிசி/கோதுமை எல்லாம் இருந்தா, நம்மூர்ல ஒரு ஊரே சாப்பிடலாமே?

எல்லா அமெரிக்கர்களும் சேந்து, ஒட்டு மொத்தமா 560,000,000,000 கிலோ தானியங்களை indirectஆ விழுங்கரானுங்க.

இவங்க எல்லாருமே, சைவ உணவு மட்டும் சாப்பிடரவங்களா இருந்திருந்தா, இவர்களின் உணவு உட்கொள்ளல், பலப் பல மடங்கு கீழே இறங்கி விடும்.

அது சரி, இந்த மிருகங்களுக்கெல்லாம் ஏன் தானிய உணவு தரணும்? புல்லை மேய விடலாமேன்னு நீங்க யோசிக்கலாம்.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் மிருகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000,000,000. இது உலக மனிதர்களின் எண்ணிக்கையை விட எட்டு மடங்கு அதிகம்.
இவ்ளோ மிருகங்களை காட்ல மேய விட, பூமியில் இடம் இல்லை. அதனால், இவைகளை ரூமில் அடைத்துவைத்து, தானியங்களை வழங்குவதுதான் ஒரே வழி.

சரி, அமெரிக்கா எப்படியோ போவுது, நமக்கென்னன்னு நெனைக்கறீங்களா?

இந்தியா, சைனாவில், அமெரிக்கா அளவுக்கு இல்லன்னாலும், இறைச்சி உட்கொள்ளுதல், சமீபகாலத்தில் கூடிக் கொண்டே வருகிறது. மிக விரைவில், மிடில் கிளாஸ்கள் வளர வளர, இறைச்சி உட்கொள்ளுதல் அதிகமாகிக் கொண்டே வரும்.

இந்த டிமாண்டை சரி செய்து லாபம் பார்க்க, உலக இறைச்சிக் கம்பேனிகள், இந்தியாவுக்குள் புகுந்து, மிருகங்களை வளர்த்து, இறைச்சியை விற்கத் தொடங்கும்.

இந்த மிருகத்துக்கெல்லாம் சாப்பாடு போடணும்ல? அப்போ, இந்திய தானியங்களில், பெரும்பான்மை ஆடு,மாடு, பன்னிய வளக்க செலவு செய்யப்படும்.
மனுஷன் தேவைக்கு, தானியங்கள் கிடைக்காமல், அதன் விலையெல்லாம் சடால் சடால்னு எகிரும்.

வருங்காலத்தில், சாமான்யனின் நெலம ரொம்பவே திண்டாட்டம் தான்.
(அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ மட்டும், எலெக்ஷன் ஆண்டுக்கு முன்னால், ரூ.1க்கு அரிசி கிடைக்கும். இதை அமல்படுத்த, இந்தியா முழுக்க மு.க மாதிரி யாராச்சும் ஆட்சியில் இருக்கணும். ஆனா, அதையும், சொரண்டித் தின்ன நரிக்கூட்டம் ரெடியா நிக்கும். - அது தனிக் கதை . ஹிஹி தலைப்பை தொட்டாச்சுல்ல ;) )

தானியங்களின் நிலமை இப்படின்னா, குடி தண்ணீர் நெலம என்னாகும்?

ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்தி செய்ய, 10,000 லிட்டர் தண்ணி செலவாகுது.
ஆயிரமாயிரம் கிலோக்கு எவ்ளோ தண்ணி தேவைப்படும்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.

இந்தக் கணக்கில், இறைச்சியை வெட்டி பேக்கிங் செய்து, குளிர் பதனம் செய்து, லாரிகளில் எல்லா ஊர்களுக்கும் அனுப்ப செலவு செய்யப்படும், பெட்ரோல் விஷயங்களை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டா, கூடிய விரைவில், Marsக்கோ, சனிக்கோ இடம் பெயர வேண்டி வரும்னே தோணுது!

இப்பவே குடிதண்ணிக்கு வருஷத்துல நாலு மாசம் செம திண்டாட்டம். ஆடு,மாடு,பன்னிகளின் தேவை அதிகரிக்கும் வருங்காலத்தில், தண்ணி விலை, பெட்ரோலை விட எகிரும் வாய்ப்பு கண்டிப்பா இருக்கு.

இதெல்லாம் இப்படி இருக்க, இன்னொரு பக்கம், விளை நிலங்கள் ஃபேக்டரியாய் மாறிக் கொண்டு வருகிறது. சோளம் உற்பத்தி செய்யும் ஆட்கள், சோளத்தை மனிதனுக்கு உணவாக விற்காமல், ethanol தயாரிக்க அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.

நம்ம ஆயுள் இன்னும் முப்பதோ, நாப்பதோ, இல்ல மிஞ்சி மிஞ்சி போனா, அம்பது இருக்கும். நாம கிட்டத்தட்ட தப்பிச்சிடலாம், ஆனா, வருங்கால சந்ததி நிலமை, ரொம்பவே திண்டாட்டம்தான்.

ஹ்ம். காய்கறியை சாப்பிட ஆரம்பிக்கணுமா இனி? (உவ்வே :) )


மூலம்: Arun Firodia, Economic Times. மூலத்தில், மு.க மேட்டரெல்லாம் இல்லை. ;)
உல்டா: சர்வேசன்

Wednesday, September 24, 2008

சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல


டாடா நேனோ என்ற ஒரு லட்ச ரூபாய் கார் வருதுன்னதும், ஒரு குழப்பமான மனநிலை இருந்தது.
ஒரு பக்கம், நமது கண்டுபிடிப்பு பிரமிப்பைத் தந்தாலும், அதனால் நிகழப்போகும் தொடர் ப்ரச்சனைகள் குழப்பத்தையே தந்தன.

எல்லா மிடில்-கிளாஸ் வீட்டிலும் ஒரு காரை கொண்டு நிறுத்தப் போகும் இந்தத் திட்டத்தை தாங்கும் infrastructure வசதிகள் இந்தியாவின் எந்த நகரத்திலும் இன்னும் வரவில்லை.
பெட்ரோல் விலை, பெட்ரோல் தீர்ந்துவிடும் அபாயம், க்ளோபல் வார்மிங், ஓஸோன் ஓட்டை, இத்யாதி இத்யாதி விஷயங்கள் நடந்து வரும் வேளையில், மற்ற நாடுகளெல்லாம், பெட்ரோல் கார்களிலிருந்து, வேறு வகயான எரிபோருள் உபயோகிக்கும் ஹைப்ரிட் கார்களை உருவாக்க எத்தனித்திருக்கும் இந்த வேளையில், நாம் இன்னும் ஆதி கட்டத்தில் துவங்குவது எந்த அளவுக்கு சரின்னு தெரியல்ல.

நானிருக்கும் தெ.கலிபோர்னியாவில், கார்களின் உபயோகத்தைக் குறைத்து, சைக்கிள், பஸ் உபயோகத்தைப் பெறுக்க, உள்ளூர் சாலைகளில், இரண்டு லேன்களை அழித்து, ஒரே லேனாக மாற்றி வருகிறார்கள்.
இவங்க இப்படி, இந்தப் பக்கம் பயணப்பட்டு, வருங்காலப் ப்ரச்சனைக்கு இப்பவே தயாராகிட்டு வரும்போது, நாம், எதிர் பக்கம் செல்வது, கொஞ்சம் முட்டாள்தனமாகவே படுகிறது.

டாடா தொழிற்சாலை அமைக்கவிருந்த சிங்கூரைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் அந்த ஊர் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும்.

ஆனா, அங்கையும், நில அபகரிப்பு, விவசாயிகள் நிலங்களை வலுக்கட்டாயமாக டாடா பெற்று வருகிறது, அப்படி இப்படீன்னு செய்திகள் வந்த வண்ணம் இருக்கு.
அதைத் தவிர, நிலங்களுக்கான பணப் பட்டுவாடாவில் பல தில்லு முள்ளுக்கள் நடந்திருப்பதாகவும், இதில் விசாரணைகள் தொடங்கப்படவேண்டும் என்றும் அரசியல் தலைகள் அலறி வருகின்றன.

விவசாயிகள் தாங்களாய் விருப்பப்பட்டு தங்கள் நிலத்தை டாடாவுக்கு விற்றதும் நடந்திருக்கிறது.

நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும், கண்டிப்பா, எவனும், பொது நல அக்கரையிலோ, விவசாயிகள் நலனுக்காகவோ அலறுவதில்லை.

எங்கையோ, பணப் பை, இன்னும் சரியா கைமாறாததால், இந்த அரை கூவலெல்லாம் நடக்குது.

எல்லா, பை மாற்றமும் சரி வர நடந்ததும், விவசாயியாவது மண்ணாவதுன்னு அவனவன், அவன் வேலையப் பாக்கப் போயிடுவான்.

இந்தக் குழப்பங்களால், சிங்கூரை விட்டு தாங்கள் வெளியேறப் போவதாக, டாடா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் சாமான்யனின் தலைதான் உருளப்போவது.

எனக்குப் புரியாத பல விஷயங்களில் சில:

* விவசாய நிலத்தை தரை மட்டமாக்கிதான் ஒரு கார் தொழிற்சாலை தொடங்கணுமா? ஏன் நம்மூர்ல பொட்டல் நிலங்கள் ஒண்ணுமே எங்கையும் இல்லியா?
* கொஞ்சம் கொஞ்சமா இப்படி விவசாயத்தை அழித்தொழிக்கும் வேலையை செஞ்சுட்டு வந்தா, நாளைக்கு அரிசி பருப்பெல்லாம் எப்படிய்யா கெடைக்கும்?
* இவ்ளோ கோடிகள் புரளும் திட்டத்தை வகுப்பவர்கள், இன்னும் சில கோடிகள் சேத்து, ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு புது நகரை உருவாக்கி, தொழிற்சாலையையும், தொழிலாளர்களுக்கு மற்ற வசதிகளையும் ஒருங்கே உருவாக்க வழி செய்யலாமே?
* ஓவ்வொரு எழவெடுத்த ப்ரச்சனைக்குப் பின்னாலும் யாரோ ஒரு தலைவனது 'political agenda' நாத்தமடிக்கர அளவுக்கு தலைவிரிச்சு ஆடுதே. என்னாதான்யா உங்க பொலிட்டிக்கல் அஜெண்ட்டா? அடங்கவே அடங்கமாட்டீங்களா?
* தூக்கம் வராம நம்ம இங்க பொலம்பி ஒரு எழவும் ஆகப் போரதில்லைன்னு தெரிஞ்சும், ஏன் தேவையில்லாம ரத்தக் கொதிப்பு வருது இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது? நாமுண்டு நமது வேலையுண்டுன்னு நம்ம பொழப்ப பாத்தா மட்டும் போதாது?

டாடா நேனோ ஊருக்கு நல்லதா கெட்டதா?
தேவையா தேவையில்லியா?
யார் மேல தப்பு?
ஒரு எழவும் புரியல!

Tuesday, September 23, 2008

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் போட்டி

ரொம்ப நாளா ஒரு ஆசையிருக்கு.

செய்யர கணிப்பொரி வேலை, job satisfaction தருவது நின்னு, சிலப் பல வருஷம் ஆயிடுச்சு.
ஏதோ, காலேல எழுந்தோமா, பாதித் தூக்கத்துலயே, ஆஃபீஸுக்குப் போனமா, பெஞ்ச தேச்சமா, எல்லா மீட்டுங்குக்கும் போய் மண்டைய ஆட்டினமா, வேண்டா வெறுப்பா, வேலைய முடிச்சமா, அஞ்சு மணிக்கு டான்னு வீட்டுக்கு வந்தமான்னு பொழப்பு போவுது.

பள்ளி பயிலும் காலத்துல, நானும் என் க்ளோஸ் ஃப்ரெண்டும், மச்சி ஒரு மூஜிக் கடை வெச்சு, எல்லாருக்கும், பாட்டு ரெக்கார்ட் பண்ணிக் கொடுக்கணும்னு பேசிக்கட்டோம்.
அப்பெல்லாம், அஞ்சோ பத்தோ கொடுத்தா, TDK/Maxell கேசட்ல, ராசா பாட்டு எல்லாம், vinyl தட்டுலேருந்து ரெக்கார்ட் பண்ணித் தருவாங்க. பொழுதன்னிக்கும் அந்த ரெக்கார்டிங் கடையிலயே பொழுத ஓட்டலாம்.

அந்த பெரிய ஸ்பீக்கர்ல வர static சத்தம் ஆகட்டும், அதைத் தொடர்ந்து வரும் SPB ஜானகி குரல்களாகட்டும், யப்பாடா, பொழுதன்னிக்கும் இத செய்யலாம்டா, அதான் வாழ்க்கைன்னு நெனைக்க வச்சுது.

அப்பாலிக்கா, மெத்தப்(?) படிச்சு, எங்கெங்கயோ திரும்பி, 'பொரி'யில் மாட்டியாச்சு.

விடுபட்டுப் போன சந்தோஷங்களை, கொஞ்சம் கொஞ்சமா தேடிப் பிடிச்சு அடைய வேண்டியிருக்கு. இப்ப கொஞ்ச நாளா அடிக்கடி உதிக்கும் ஒரு ஆசை, எப்படியாவது ஒரு குறும்படம் எடுத்து வெளியிடணும்னு.

இப்பதான், எல்லா வசதியும் சுலபமா கெடைக்குதே. camcorder இல்லாதவங்க, செல்பேசியிலையே வீடியோ எடுக்க முடியுது. என்ன குப்பை எடுத்தாலும், வலையேத்த யூ.ட்யூப் காரன் கடைய விரிச்சு ஒக்காந்திருக்கான். முக்கால் வாசி, software ஓ.சியில் கிடைக்குது.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், ஒரு உந்துதல் இல்லன்னா, ஒண்ணும் நடக்காதுல்ல?

இப்ப தலைப்புக்கு வரேன்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், குறும்படப் போட்டி வச்சா, எவ்ளோ பேரு கலந்துக்குவீங்க?

யோசிச்சு சொல்லுங்க.

எப்படி நடத்தலாம்னு, எல்லோரும் கலந்துரையாடி, இதை ஜூப்பரா செய்யலாம்.

நான் ஒருங்கிணைத்தாலும், நானும் ஆட்டையில் குதிக்க ஐடியா இருக்கு. ;) (atleast, பினாமி பேர்லயாவது )

இத ஒருத்தர் தனியா செய்வதை விட, அந்தந்த ஊரில் இருக்கும் சக பதிவர்கள், நண்பர்களுடன், கூட்டு முயற்சியா செஞ்சா, மிகச் சிறப்பா வரும் வாய்ப்புண்டு.
எப்படியும், நடிக்கரதுக்கும், கேமரா இயக்கவும், ஆளைத் தேடியாகணுமே?
சக பதிவர்கள், நண்பர்கள் அருகாமையில் இல்லாதவர்கள், குடும்ப மக்களையும், அலுவலக சகாக்களையும் கூட உதவிக்கு அழைக்கலாம்?

அடுத்த மாசம் ஆரம்பிச்சு, ஒரு மூணு நாலு மாசம், நேரம் எடுத்துக்கிட்டு நடத்தலாம்.

முதல் கட்டமா கதைய அனுப்பச் சொல்லலாம்.
கதையில், சிறந்த 10 கதைளை தேர்ந்தெடுக்கலாம்.
10 கதைகளுக்கு, எல்லோரும், அவரவர் ஸ்டைலில், திரைக்கதை/வசனம் எழுதி, படமாய் எடுத்து அனுப்பும் படி சொல்லலாம்.

தயாரிப்பாளர்கள்/ஸ்பான்ஸர்ஸும் தேடிப் பிடிக்கலாம் (anyone? தயாரிப்பளர்கள் பேர் குறும்படத்தில் வரணும்னு ஒரு ரூல் போட்டிடலாம் ;) ).

மொதல்ல, எவ்ளோ பேரு, ஆட்டையில் குதிப்பீங்கன்னு சொல்லுங்க.
பின்னூட்டத்தில், குறும்படம் எடுக்க, உங்களுக்கு நண்பர்கள்/குடும்பம்ஸ்/சகாக்கள் உதவியெல்லாம் கிட்டுமா? practically possibleஆ? இதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்க.

அப்படியே கேமராவ மேலிருந்து கீழ் நகத்தி, க்ரேன் ஷாட்ல ஜூம் பண்ணீங்கன்னா, கீழ ஒரு பொட்டி தெரியும்.
ஸ்லோ மோஷன்ல அதுக்கிட்ட ஓடி, ஏதாவது ஒரு ஆப்ஷனை, க்ளிக்கி, 'ஏக்ஷன்' க்ளிக்கினீங்கன்னா, உங்க வாக்கு பதிவாயிடும் ;)

(பொட்டி தெரியாதவங்க, இங்கண க்ளிக்கவும்)


ஒரு நூறு பேராவது (கள்ள ஓட்டு சேர்காமல்), சரின்னாங்கன்னா, அடுத்த கட்டம் பத்தி யோசிக்கறேன் :)

இதற்கு, "குறும் போட்டி"© என்று நாமகரணம் சூட்டுகிறேன் ;)

இந்த ஸ்கிரிப்டை உங்க பக்கத்துல வெளம்பரம் கொடுக்கரவங்களுக்கு, குறும்பட டைட்டில்ல, விளம்பர உதவின்னு உங்க பேரை போடச் சொல்லுவேன் ;)

Monday, September 22, 2008

Time to Say Good Bye!

வணக்கம்!

இட்லிவடை யாருன்னு கண்டு பிடிச்சுக் கொடுக்க நான் எடுத்துக்கிட்ட தலையாய பணி, விடை கிடைத்துவிடும் அருகாமையில் இருக்கு. Y.A.Blaக்கு யாரு இ.வ இல்லைன்னு, உறுதியா தெரிஞ்சிருக்கு. இன்னும் பல பேருக்கு, ஒரு கும்பல் தான், இ.வடைன்னு நிச்சயமா தெரிஞ்சிருக்கு. கூட்டிக் கழிச்சு பாத்ததுல, இ.வடை நானில்லைன்னு முடிவாயிடுச்சு. அப்படியே, மாயவரத்தானும் இல்லைன்னு குறி சொல்லிடுச்சு.
உ.த நான் தான், பா.பாலான்னு கற்பூரம் அடிச்சு சொல்றாரு. பா.பாலா அவ்ளோ மோசமாவா எழுதறாரு? மனுஷன் ஒவ்வொரு பதிவையும் எவ்வளவு ரிசர்ச் பண்ணி, 1008 உரல் சேகரிச்சு, நச் நச்னு போடறாரு, அவரப் போய் நானுன்னு சொல்லி, அவர கேவலப்படுத்திக்கிட்டு?.. அவரின் 2008 அமெரிக்க எலெக்ஷன் பதிவெல்லாம் பாக்கறீங்கல்ல? அதிரல?
இன்னும் கொஞ்ச நாளைக்கு வாக்குகள் திரட்டப்படும். அப்பாலிக்கா, யாரு இ.வடைன்னு ஒரு முடிவுக்கு வரலாம் ;)

இட்லிவடை ஒரு பக்கம் இருக்கட்டும். மிகப் பெரிய அளவில், பேரும் புகழும் அடையக் கூடிய அனைத்து லட்சணங்களூம் அந்தப் பதிவர்(ஸ்)கிட்ட இருக்குது.
தொடர்ந்து கலக்குங்க இட்லிவடை.

இப்ப டைட்டிலுக்கு வருவோம்.

இங்க PBSனு ஒரு சேனல் வரும். Public Broadcasting Service என்பது அதன் விரிவாக்கம்.
தன்னார்வ நிறுவனம் ஒண்ணு, பொதுமக்களின் பணத்தில் நடத்தும் சேனல் இது.
விளம்பரங்கள் எல்லாம் வராது. செய்தியில் 'சார்பு' இருக்காது, ஒட்டு மொத்தத்தில் ஒரு க்ளீன் சேனல்.
ஆனா, நொடிக்கு ஒரு தடவ, ஐயா சாமி, டொனேட் பண்ணுங்க, டொனேட் பண்ணுங்கன்னு உயிர வாங்குவாங்க.
அருமையான ஒரு இசை நிகழ்ச்சி காட்டிட்டு, நடு நடுவுல, டொனேட் பண்ணுங்க, இந்த நிகழ்ச்சியின் டிவிடி உங்க வீட்டுக்கு அனுப்பறோம்னு அன்புத் தொல்லை பண்ணுவாங்க.
ஆனா, இந்த டொனேஷனாலதான், அந்த சேனல், இன்னும் இலவசமாவும், நல்ல தரத்துடனும் தொடர்ந்துகிட்டு வருது.
இந்த ஊரு,சன் டிவி (NBC), ஜெயாடிவி (ABC), கலைஞர் டிவி (Fox) எல்லாம், எப்பத் திருப்பினாலும், விளம்பரமும், பரபரப்பும் தான் இருக்கும்.

அப்படிப்பட்ட PBSல் அடிக்கடி காட்டுவது, ஏதாவது சிம்ப்ஃபொனி இசை நிகழ்ச்சி.

நேத்து எதேச்சையா திருப்பும்போது, Sarah Brightmanனு ஒரு பாடகி, Viennaவில் ஒரு சிம்ப்ஃபொனி கச்சேரியில் ரம்யமா ஒரு பாட்ட பாடிக்கிட்டு இருந்தாங்க. புரியாத பாஷை. ஆனா, நடுவுல, Time to Say Good Byeனு பாடி, அப்படியே லயிச்சு போக வச்சிட்டாங்க.
பாக்கரவங்க, பல பேரு கண்ணுல தண்ணி.
அப்படியே, சொக்க வைக்கும், லைட்டிங்கும், இசையும், ரொம்ப அழகான நிகழ்ச்சி.

யூ.ட்யூப் இருக்கவே இருக்கேன்னு, அந்தப் பாட்ட தேடினா, இதே Sarah Brightman, Andrea Bocelliயுடன் இந்தப் பாட்டப் பாடினது கண்ணுல பட்டுது.
Andrea Bocelli ஒரு கண்பார்வையற்ற சிறந்த பாடகர். இதுக்கு முன்னாடி, இவரின் நிறைய பாட்டு அடிக்கடி PBSல போட்டுப் பாத்திருக்கேன்.
(கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா, அவரின் குரல் Andrea குரல் மாதிரிதான் இருக்கும்னு, Titanic புகழ் Celine Dion சொன்னாங்களாம்).

நீங்களும் அந்தப் பாட்ட கேக்க வேணாமா? அதுக்குதான் இந்தப் பதிவு.
கீழே, யூ.ட்யூப் வீடியோவும், அதுக்குக் கீழே பாடல் வரிகளின் அர்த்தமும்.


Time to say goodbye
----------------------
When Im alone
I dream on the horizon
And words fail;
Yes, I know there is no light
In a room
Where the sun is not there
If you are not with me.
At the windows
Show everyone my heart
Which you set alight;
Enclose within me
The light you
Encountered on the street.

Time to say goodbye,
To countries I never
Saw and shared with you,
Now, yes, I shall experience them,
Ill go with you
On ships across seas
Which, I know,
No, no, exist no longer;
With you I shall experience them.

When you are far away
I dream on the horizon
And words fail,
And yes, I know
That you are with me;
You, my moon, are here with me,
My sun, you are here with me.
With me, with me, with me,



பரவசமாயிட்டீங்களா? ஆரம்ப இசையே அசத்தல?

;)

பி.கு: MSVக்காக போட்ட பெட்டிஷனில் 489 கையெழுத்துகள் வந்திருக்கு. பதியாதவர்கள் இங்கே சென்று பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்னி!

Sunday, September 21, 2008

நமது புதிய தேசிய கீதம்



நல்லா எடுக்கறாங்க்ய!

தும் சலோ.. ஹிந்துச்தானு சலே..
அப்படீன்னா என்னாங்க? யாராச்சும் வெளக்கமா எழுதுங்களேன்.

ஆப்பரேஷன் இட்லிவடை

எல்லாருக்கும் ரொம்ப நாளா இந்த கேள்வி மனசுல இருக்குது.
ஆளாளுக்கு ஒவ்வொரு பேரை சொல்லிக்கிட்டு ரொம்பவே கொழம்பி போயிருக்காங்க.

கொழம்புனா உனக்கென்ன? நீயே ஒரு அனாமதேயம்னு நெனைக்கறது எனக்குக் கேக்குது.
ஆனா, உண்மைகளை கண்டுபிடித்துக் கூறவே இந்த அவதாரம் எடுத்துள்ள எனக்கு, இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டிய பொறுப்பு ரொம்பவே அதிகம்.

ஆனா, அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்கர விஷயமா அது?

இவர்தான் இட்லிவடை, அவருதான் இட்லிவடைன்னு பலப் பல ஊகங்களும் பேச்சுகளும், நான் இணையத்தில் இணைந்த ஒருவருஷத்துல (ரெண்டு வருஷம் ஆகப்போவுதா? அடக் கொடுமையே) நெறைய பாத்துட்டேன்.

சரி, இதுக்கு முடிவு கட்டலாம்னு, நான் முடிவு பண்ணதன் விளைவே இந்தப் பதிவு.

கண்டிப்பா இந்தப் பதிவின் மூலம், பெரும்பான்மையான மக்களின் ஊகங்கள் புரிந்துவிடும்.
பலரின் எண்ணங்கள் தவிடு பொடியாகும் நிலமையும் ஏற்படலாம்.

ஸோ, எல்லாத்துக்கும் தயாராகிடுங்க.

Brace YourSelf!

இட்லிவடை, இஸ், நன் அதர் தன்...






ஹிஹி. எனக்குத் தெரிஞ்சா நேரா சொல்லிடமாட்டேனா?
யோசிச்சு வாக்குங்க. பொட்டி தெரியாதவங்க இங்கண க்ளிக்கியும் வாக்கலாம்

உங்களுக்கு யாருன்னு தெரிஞ்சு, அந்தப் பேரு மேல இல்லன்னா, இலை மறைவு காயா, அந்த பேரை பின்னூட்டுங்க ;)

அடடா, பொட்டீல, கோ.அண்ணன் பேர் சேக்க மறந்துட்டேன்.

எனிவே, பொட்டி போட்டாச்சு, இனி, வடைய கண்டுபிடிச்சுட்டுத்தான் அடுத்த சோலி :)

பி.கு: சும்மா டமாசுக்கு, இட்லிவடையார், சப்ளை நிறுத்தவேண்டாம், கெட்டி சட்னியுடன், தொடரட்டும் பணி ;)

Friday, September 19, 2008

சென்னைக்கு Metro வருதாமே?

சென்னை திருசூலம் ஏர்ப்போர்ட்டிலிருந்து, ஆலந்தூர், K.K. Nagar, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், கீழ்பாக்கம், வழியாக சென்ட்ரலும்,

சென்ட்ரலிலிருந்து, எழும்பூர், LIC, ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, பரங்கிமலை (ஜோதி) வழியாக திருசூலமும் சென்னை மெட்ரோ ரயில் கவர் பண்ணுமாம்.

2014ல் முடிவடையும், இந்த திட்டத்துக்கு, 10,000 கோடி வரை செலவு ஆகும் (இப்போதைய எஸ்டிமேட் படி. 2004 எஸ்டிமேட் படி 5040 கோடி ;) ).
40% இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் செலவு செய்யுமாம், மிச்சம் ஜப்பான் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும்.

பல இடங்களில், பூமிக்கு அடியிலும், சில இடங்களில், பூமிக்கு மேல் பாலங்களிலும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுமாம்.

தில்லியில் சிறப்பாய் மெட்ரோ ரயில் அமைத்த DMRC (Delhi Metro Rail corp) சென்னையிலும் திட்டத்தை அமுல் படுத்தப் போகிறார்களாம்.

முதல் கட்ட திட்டங்களும், நிலம் அகப்படுத்த பேச்சு வார்த்தைகளும் துவங்கி விட்டார்களாம்.

சென்னைக்கு நல்ல காலம்தான்.

(தண்ணிப் ப்ரச்சனையாமே சென்னைல? மழை இல்லியாம், ரொம்பக் கஷ்டமாம்.
அப்படியே, கடல்நீர் சுத்திகரிப்புக்கு எதையாச்சும் யாராச்சும், ஜப்பான்லயோ, கொரியாலயோ, கடன் வாங்கி அமல் படுத்தினா நல்லாருக்கும்.
இல்லன்னா, அட்லீஸ்ட் பெரிய பெரிய பூங்காக்கள், காடுகள் சென்னை சுத்தி உள்ள இடங்களில் அமைக்க ஏதாச்சும் ஏற்பாடு பண்ணா 2014க்குள் தானாய் மழை வரலாம்).

மெட்ரோ திட்டத்தின் வரை படம்:


ப்ராஜக்ட் ஸ்டேட்டஸ் இங்கே காணக் கிட்டும்.

Thursday, September 18, 2008

and I'll be there - Kaitlyn Meher

Top10க்கு முன்னேறியுள்ள Kaitlynன் இந்த வாரப் பாட்டு, 'Just call my name & I'll be there'.

மைக்கேல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரத்தில் பாடியிருப்பாரு. ஒரு மயக்கத்தை கொடுக்கும் பாட்டு அது. Mariah Carey பாடிய பாட்டு இங்கே பாக்கலாம்.

Kaitlyn நிறைய பிசிறுடன் பாடினாலும், 4 வயதில், தைரியமா இவ்வளவு பேருக்கு மத்தியில் சிரிச்சிட்டே பாடியது, ஜஸ்ட் மேஜிக்கல்!

பாடி முடிச்சதும், ஜட்ஜுகளின் கமெண்ட்டுக்கு, 'very well thank you'ன்னு சொல்றதுக்கே பரிசைக் கொடுக்கலாம். :)




-சர்வேசன்
-கலக்கல் கேட்லின் மன்றம்
-கலிஃபோர்னியா

(Kappi, ஃபைனல்ஸுக்கு Kaitlyn போகணும்னா, ஜட்ஜு யாரையாச்சும் கடத்தி கறுப்பு மெயில் பண்ணாதான் உண்டு. ;( . வீக்-எண்ட் ஃப்ரீயா? கமுக்கமா முடிச்சுருவோம்? )

Tuesday, September 16, 2008

ரொம்ப ரம்யமான மலையாளப் பாட்டு

இளையராஜாதான் ஜனரஞ்சகமா ஒருகாலத்துல பாட்டெல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாரு.
பாட்டக் கேட்டாலே, மனசு லேசா ஆகிடும்.
கண்ணே கலைமானே பாட்டு எங்க கேட்டாலும், இதமா இருக்குல்ல? அந்த மாதிரியெல்லாம் போட இப்ப ஆளில்லாம போயிட்டாங்க.
ராஜா காணாம போன பிறகு அந்த இடத்தை ஒரு பயலும் நெறப்ப முடியல.
ரஹ்மான், ஓரளவுக்கு கிட்ட வந்தது, 'பச்சைக் கிளிகள் தோளோடு' பாட்டுலதான்.
பம்பாய் தீம் ம்யூசிக், டச்சிங்கா இருக்கும், வேர ஒண்ணும் நெனவுக்கு வரமாட்ரது.

சரி, இக்கரைதான் இப்படி ஆயிடுச்சு, மத்த கரைகளெல்லாம் எப்படி இருக்கோ?

மலையாளத்தில், மானச மைனே வரூன்னு, மன்னாடே செம்மீன் படத்துல பாடி வசியம் பண்ணினாரு.
AsiaNetன், star singer யூட்யூப்ல பாத்தா, அங்க ஜட்ஜா வர மூஜிக் டைரக்டர்ஸ், விஷய ஞானம் இருக்கர ஆளுங்க மாதிரிதான் தெரியுது. மெலடிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கராங்க.
ஜெயசந்திரன்னு ஒருத்தர் இருக்காரு. அம்சமா பாட்டு போடறாரு. இவரு இசை அமைத்த பெருமழைக்காலம்னு ஒரு படம், அம்சமான படம். அதில கூட ஒரு பாட்டு சுண்டி இழுக்கும் வகை.

இந்த ஜெயச்சந்திரன், மோகன்லால் படமான 'பாலேட்டன்'ல போட்ட ஒரு பாட்டு சமீபத்தில் கண்ணில் பட்டது. மகனுக்கும், தந்தைக்கும் இருக்கும் பாசத்தை ப்ரதிபலிக்கும் பாடல்.

சுண்டி இழுத்துடுச்சு என்னை.

ரெண்டு மூணு தடவை கண்ணை மூடிக்கிட்டு கேட்டுப் பாருங்க. சுவய்ங்க்னு இழுத்திடும்.
பாடரது, கான கந்தர்வன் ஆச்சே.

இன்னலே என்டே நெஞ்சிலே....


ராஜா சார், மலையாளத்தில் ஜெயச்சந்திரன் போடர மாதிரி, ஜனரஞ்சகமா இந்த மாதிரியெல்லாம் நெறைய போட்டுக் கொடுங்க சார். ஒரே வறட்சியா இருக்கு சார், நம்ம தமிழ் சினிமா பாட்டெல்லாம். எனக்குத் தான் வயசாவுதான்னு தெரியல சார். சமீபத்தில் என்ன பாட்டு சார் சாந்தமா கேக்கர மாதிரி இருக்கு? எல்லாமே, அலரல் டைப்பு சார்.

சமீபத்தில் வந்த, தனம் படத்தில், நீங்க போட்ட, கண்ணனுக்கு என்ன வேண்டும் பாட்டு நல்லாயிருந்தது சார். என்னதான் உங்க குடும்பப் பாடகிய பாட வச்சிருந்தாலும், அந்தப் பாட்டு நல்லாவே இருந்துச்சு சார்.
ஆனா, உங்க லெவலுக்கு அதெல்லாம் ஒண்ணுமே இல்ல சார். நெறைய எதிர்பாக்கறோம் சார். மத்த பாட்டெல்லாம் அந்த படத்துல (கூத்து ஒண்ணு, கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள) ரொம்ப கேவலம் சார். ஆனா, படத்துக்கு ஏத்த லெவலுக்கு பாட்டு இருந்துச்சு சார்.

பாத்து செய்யுங்க சார், தயவு செஞ்சு! ரொம்பவே காஞ்சு போயிருக்கோம் சார் :(


எனி நியூ ஜனரஞ்சக பாட்டூஸ் யூ ரெக்கமெண்ட்?
லெட் மீ நோ!

;)

Monday, September 15, 2008

சின்னபுள்ளத்தனம் - Tagged

Karthick Krishna CSனு ஒருத்தரு, taggedனு சொல்லி சின்னபுள்ளத்தனமா வெளையாட கூப்பிட்டாரு. கேள்விகள்ள செலது சுவாரஸ்யமா இருந்ததால ஆட்டையில் குதிச்சாச்சு.
என்ன இருந்தாலும், நம்மள பத்தி சில விஷயங்கள் வரலாற்றில் பதியவேண்டியது, வரலாற்று அவசியம்தானே?
அதான், குதிச்சுட்டேன் :)

1) LAST MOVIE U SAW IN A THEATRE?
சரோஜா. Ben Stillerன் - ட்ராப்பிக்கல் தண்டர். நெஜமாவே சிரிக்க வைத்த காமெடிப் படங்கள்.

2) WHAT BOOK ARE U READING??
படிப்பா? அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். national geographic புக் வாங்கரேன், படம் பாக்க :)

3) FAVOURITE BOARD GAME?
Carom Board. கணக்குல வரும்ல? :)

4) FAVOURITE MAGAZINE?
தமிழ்மணம் - tamilmanam.net

5) FAVOURITE SMELLS?
சோத்துக் கை, சிக்கன் பிரியாணி சாப்பிட்டப்பரம்.

6)FAVORITE SOUNDS?
இப்பெல்லாம் எலெக்ட்ரிக் வயலின் ரொம்ப பிடிக்குது.

7) WORST FEELING IN THE WORLD?
காலையில் தூக்கம் கலையாமல் எழுந்திருப்பது.

8) WHAT IS THE FIRST THING YOU THINK OF WHEN U WAKE?
கிர்ர்ர்ர். வேலைக்குப் போவணுமா? (படிக்கும்போது, கிர்ர்ர் ஸ்கூலுக்குப் போகணுமா?)

9) FAVOURITE FASTFOOD PLACE?
தாம்பரம் பட்ஸ், அப்பெல்லாம். இப்பெல்லாம் மெட்ராஸ் காஃபே.

10) FUTURE CHILDS NAME?
நம்ம முடிவு பண்ற விஷயமா இது?

11) FINISH THIS STATEMENT---'IF I HAD A LOT OF MONEY I'D'
தூங்கியே மிச்ச வாழ்க்கையை கழிப்பேன்.

12) DO U DRIVE FAST?
அக்கம் பக்கத்துல யாருமில்லீன்னா, யெஸ்.

13)DO U SLEEP WITH A STUFFED ANIMAL?
இன்னாது?

14)STORMS--COOL OR SCARY?
கூல். அதுக்குன்னு வூட்ட தண்ணியெல்லாம் சூழ கூடாது.

15)WHAT WAS YOUR FIRST CAR?
என்னமோ, வருஷத்துக்கு ஒண்ணு வாங்கர மாதிரியில்ல இருக்கு கேள்வி. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நிஸான். அங்க மாருதி ஸ்விஃப்ட்!

16) FAVOURITE DRINK?
எதம் பதமா மோர்!

17)FINISH THIS STATEMENT-IF I HAD THE TIME I WOULD...
நல்லா தூங்குவேன்.

18)DO YOU EAT THE STEMS ON BROCCOLI?
எதையும் மிச்ச வைக்கப் பிடிக்காது. தட்டுல போட்டுட்டா, வயித்துக்கு போயாகணும்.

19)IF YOU COULD DYE YOUR HAIR ANY OTHER COLOUR, WHAT WOULD BE YOUR CHOICE?
நெவர்!

20)NAME ALL THE DIFFERENT CITIES/TOWNS U HAVE LIVED IN?
சென்னை, எல்.ஏ, சன்னிவேல், மும்பாய், டில்லி, நோய்டா, சிங்கை, நியூயார்க், இன்னும் நிறைய, எல்லாத்தையும் சொல்லணுமா?

21) FAVOURITE SPORTS TO WATCH?
100m ஒலிம்ப்பிக் ஃபைனல்ஸ். வேர எதையும் ஸ்ரத்தயா ஒக்காந்து பாக்கரது இல்ல.

22)ONE NICE THING ABOUT THE PERSON WHO SENT THIS TO YOU?
யாருன்னே தெரியல. இன்னும் சின்னபுள்ளத் தனம் மாறாதவரு ;)

23)WHATS UNDER YOUR BED?
பூமாதேவி.

24)WOULD U LIKE TO BE BORN AS YOURSELF AGAIN??
ஹ்ம். இன்னொருதடவ இதே வாழ்க்கையா? ஹ்ம். நோ. எ பெட்டர் ஒன் வில் பீ குட்!

25)MORNING PERSON OR NIGHT OWL?
ராத்திரி நேரத்து ஆளிது.

26)OVER EASY OR SUNNY SIDE UP?
ரெண்டுமாதிரியும் பிடிக்கும். முதலிது 80%, ரெண்டாவது 20%.

27) FAVOURITE PLACE TO RELAX?
வூடுதான்.

28)FAVOURITE PIE?
ஒண்ணுமில்லை.

29)FAVOURITE ICECREAM FLAVOUR?
O.Cல கெடச்சா எல்லாமே ஃபேவரைட் தான். பிஸ்தா எல்லாம் போட்டு இங்க ஒண்ணு விக்கராங்க. நம்ம ஊரு குல்ஃபி டேஸ்ட்.

30)OF ALL THE PEOPLE U HAVE TAGGED, WHO IS THE MOST LIKELY TO RESPOND FIRST?
அவரதான் தேடறேன்.


இத்த மொதல்ல படிக்கர புண்ணியவான் பின்னூட்டுங்க, 'மீ த பர்ஸ்ட்னு'.
நீங்கதான், அடுத்து tagged எழுதியாகணும்.

இத்த மொத ஆளா படிச்சுட்டு ஃபர்ஸ்ட்டு புண்ணூட்டம் போடாம எஸ்கேப்பினீங்கன்னா, இந்த வாரம் முழுக்க உங்களது பதிவுகளுக்கு வாசகர்கள் ஹிட் கிட்டாமப் போவது என்று ஜாபம் இடுகிறேன் ;)

டாகிய கார்த்திக்குக்கு நன்னி!

யூ ஆர் டாக்ட்!

பி.கு: என் ORKUT அனுபவங்கள்

Sunday, September 14, 2008

ORKUT - கிண்டி விட்ட பள்ளிப் பருவ நினைவுகள்!

ORKUT இணையதளம் நண்பர்களை இணைக்கும் ஒரு தளம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நான் அதில் அக்கவுண்ட் தொடங்கி சில வருடங்கள் ஆயிருந்தாலும், அவ்ளோ ஏக்டிவ்வா அங்கப் போய் எட்டிப் பாக்கரதெல்லாம் இல்லை.
நேத்து வழக்கம் போல வெட்டியா பொழுத கழிக்கும்போது, நண்பன் தன் புகைப்படங்கள் சிலதை ஆர்க்குட்டில் ஏற்றியிருப்பதாகவும், போய் பாருடா என்றும் மெசேஜியிருந்தான்.

சரின்னு போய் எட்டிப் பாத்தேன்.

ஆர்க்குட்டில் நுழைந்ததும், 'இவர் உங்களை நண்பராக சேர்த்துக் கொள்ள சம்மதமா?'ன்னு ஒரு கேள்வி, என் நண்பன் பெயரைப் போட்டு.
சரின்னு க்ளிக்கி, அவன் பக்கத்தைப் போய் பாத்தா, என் பள்ளியின் பெயரில் ஒரு குழுமத்தில் அவன் இணைந்துள்ள விவரம் தெரிந்தது. சரி, காசா பணமா, நாமளும் கோதால எறங்கலாம்னு என் பள்ளியின் ஆர்க்குட் க்ரூப்பில் இணைந்தேன்.

அப்படியே மெதுவா, நண்பனின் நண்பர்கள் பட்டியல் பாத்தா, பரிச்சயமான பல பேர்கள் கண்ணில் பட்டது. அடங்கொக்கமக்கா கூட படிச்ச பல 'நாய்களும்' ஆர்க்குட்ல வாலாட்டிக்கிட்டு திருயரானுங்கன்னு தெரிஞ்சது.
ஒவ்வொருத்தர் பக்கமும் பாக்க பாக்க ஒரு பரவசம் வந்துடுச்சு.

என் வாழ்க்கையில் பள்ளிப் பருவம்தான் சிறந்தது. ஒரு கவலையும் இல்லாமல், வாலுடன் திரிந்த பல நாய்களோடு நாயாக ஊர் சுற்றித் திருந்து, மாங்காய் அடித்து, டயர் ஓட்டி, கில்லி, கபடி, ஃபுட்பால், கிரிக்கெட், கோ, காத்தாடி, சைக்கிள்னு ஆடாத ஆட்டமெல்லாம்ம் ஆடிய காலமாச்சே.
Co-Edல் படித்திருந்தாலும், பெண்களை கலாட்ட செய்வதைத் தவிர வேறு வம்பு தும்புக்கெல்லாம் சென்றதில்லை. (ஆமாங்க, நம்புங்க, ரெம்ப நல்லவன் நானு).

என் நெருங்கிய வட்ட நண்பர்களில், இன்னும் சில பேர் ஆர்க்குட்டில் வரலை. ஆனா, மூக்காவாசி பேரு இருக்கானுங்க.

எல்லாரும், ரொம்ப நல்ல நிலையில் இருக்காங்க. பாக்கவே ரொம்ப சந்தோஷமா, பறக்கர மாதிரி இருந்துச்சு. அதிலும், ஒரு சிலர் ரொம்பவே நல்ல நிலையில் இருக்காங்க.

குறிப்பா, ஒருத்தன் ஒரு பெரிய கம்பேனியின் சி.இ.ஓ, இன்னொருவன், இந்திய டாப்5 ஐ.டி. கம்பெனியில், சி.இ.ஓ,க்கு ஒரு படி கீழ இருக்கான். சின்ன வயசுலயே பெரிய பெரிய சாதனையெல்லாம் பண்ணிட்டாங்க. படிக்கர காலத்துல, இவனுங்களும், நாயோடு நாயாகத்தான் சுத்திட்டு இருந்தானுங்க, ஆனா யாருக்கும் தெரியாம, படிக்கவும் செஞ்சிருக்காங்க. ப்ளடி டாக்ஸ் ;)

இதில் சில விஷயங்கள் ஏற்கனவே தெரியும்னாலும், புது விஷயங்கள் ஆர்க்குட்டிலிருந்து தான் தெரிஞ்சது.

> பள்ளி 'அழகன்' இப்பவும் ஸ்மார்டாதான் இருக்கான்;

> 'சோ'வில் ஆரம்பித்து, 'னா'வில் முடியும் எங்கள் வகுப்பு 'அழகி'யும் பெரிய ஆளாயிட்டா. மோஸ்ட் பாப்புலர் ஸ்கூல் கேர்ள்னு பட்டம் இருந்தா இவளுக்குத்தான் கொடுக்கணும். நாங்கெல்லாம், எங்களை அடையாளப் படுத்திக்க, நாங்க 'சோXYZனா'வின் வகுப்புன்னு சொல்லிக்கிட்டா, மத்த செக்ஷன் பயலுவ, நான் 'சோXyZனா'ன் பக்கத்து செக்ஷன்னுதான் அடையாளப் படுத்திக்குவாங்க. இவ்வளவு ஏன், எங்களின் ஜுனியரும், சீனியரும் கூட, நான் 'சோXyZனா'வின் முன் வகுப்பு, பின் வகுப்புன்னுதான் சொல்லிக்குவாங்க. மிகைப் படுத்திச் சொல்லலை, உள்ளதுதான் இது, நம்புங்க.
நான் அவளுக்கு பின் பென்சில் இருந்ததே, பெரிய சாதனையாக எண்ணிய காலங்களும் உண்டு. பின் பெஞ்சில் இருந்து கொண்டு, அவள் துப்பட்டாவில், நானும், ஸ்கூல் தாதாவும், இங்க் அடித்தது, இன்னும் பச்சக்னு ஞாபகம் இருக்கு ;)

> ஸ்கூல் தாதா, பொறுப்பா குடும்ப பிசினஸை (டைல்ஸ்) செவ்வனே நடத்தி, இன்னிக்கு அவன் துறையில் பெரிய தடம் பதித்திருக்கிறான்.

> பைலட் ஆகணும்னு சொன்னவன், ஹெலிக்காப்டர் பைலட் ஆகி, ஏர் ஃபோர்ஸில் இருக்கான்.

> லாபுக்குச் சென்றவர்கள், திரும்பி வருமுன், எல்லா சாப்பாட்டு பாக்ஸையும் அபேஸ் செய்ய உதவிய நண்பன்; என் முதல் alba வாட்ச்சை உடைத்த நண்பன்; திருட்டுக் கையெழுத்து வாக்கிய நண்பன்; பாடும் நண்பன்; ஸ்டைல் நண்பன்; பணக்கார நண்பன்; நாமம் போட்ட நண்பன்; சிக் நண்பீஸ்; ......

> இன்னும் பல பேர், எங்கெங்கயோ, வளந்து, நல்லாவே ஆயிட்டாங்க. யாரும், சோடை போகலை.

எங்க பள்ளி, சிட்டியில் உள்ள 'பெரிய' பள்ளியில் ஒண்ணெல்லாம் கிடையாது. நாங்க படிக்கும்போது சாதாரணமாதான் இருந்துச்சு. ஆனா, ஆசிரியர்கள் எல்லாம் நல்லா அமஞ்சாங்க. பள்ளியை நடத்திய மேடமும், எங்களுக்கெல்லாம் ஒரு உதாரணமா இருந்தாங்க. கணவனை இழந்த அவர், மூன்று பெண்களுடன், தைரியமாய் துவங்கிய பள்ளி இது. நாங்க வளந்தோம், எங்களுடன் சேர்ந்து பள்ளியும் வளர்ந்தது. இன்னிக்கு, ஒரு ஆலமரமா இருக்கு. அமோகமா நிக்குது.

நண்பர்கள், இந்த உலகில் இருக்கும் பல விஷயங்களில், முதன்மையான ஒன்று. நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால், வாழ்க்கையில் முக்கால்வாசி வெற்றி அடைந்த மாதிரிதான். அதே சமயம், நல்ல நண்பர்கள் அமையாவிட்டால், கால ஓட்டம், மிகுந்த சிரமம் தான். சிரமம் மட்டுமில்லாது, எதுக்காக இந்த ஓட்டம்னே புரியாம ஒரு கேள்விக்குறியான அயற்சியை தரும்.

ஆர்க்குட்டில் கண்ணில் பட்ட, டச்சில் இல்லாத பழைய நண்பர்களுடன், மீண்டும் பரிச்சயம் புதுப்பிக்கப்பட்டது. இனி, பழைய 'நாய்' பேச்சு பேசி, இந்த உறவு முறியாத வண்னம், ஆர்க்குட் காப்பாற்றும். இந்த நட்பு புதுப்பித்தல் ஒரு டானிக் மாதிரி இருக்குது.
சோம்பேரித்தனமா, சில விஷயங்கள் தள்ளிப் போட்டிருந்தேன், இன்று பள்ளிப் பருவ துள்ளலுடன், அதையெல்லாம் எடுத்து செஞ்சு முடிச்சாச்சு.

தூரத்தில் இருக்கும் நட்பை இணையத்தில் பார்க்கும்போதே இவ்வளவு உற்சாகம் வருதே, கூடவே எல்லாரும் இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? ஹ்ம். :(

ஆர்க்குட் வாழ்க!
ஆர்க்குட்டை பற்றி சில டிட்-பிட்ஸ் (உண்மையான்னு தெரியல)

* ஆர்க்குட் என்ற 20 வயசுப் பையன் தன் இரயில்-சிநேகிதியை தேட துவங்கப்பட்ட தளம், பின்னால், கூகிளால் வாங்கப்பட்டதாம்.
* ஒரு புதிய உருப்பினர் சேர்ந்தா, Mr.ஆர்க்குட்டுக்கு, $10 டாலர் கிட்ட கிடைக்குமாம்
* அதே மாதிரி, ஆர்க்குட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும், கூகிள் ஒரு சின்ன தொகையை அவருக்கு குடுக்குமாம். அப்படிதான் contract போட்டிருக்காராம், இந்த பலே கில்லாடி.
* தொலைந்த சிநேகிதியைத் தேடினா, இப்படி பில்லியன்களில் சம்பாதிக்கலாம்னா நல்ல விஷயம்தான்.
* நண்பீஸ், யாராச்சும் கொஞ்சம் தொலைஞ்சு போங்களேன் ;)


மக்களே, ஆர்க்குட்டில் இணையுங்கள், உங்க Flashback அங்க உங்களுக்குக்காக வெயிட்டிங்.

பி.கு: "S Karthikeyan" from around Pammal. நல்ல செவப்பா இருப்பான் - Tendulkar வயசிருக்கும்; யாருக்காவது தெரியுமா இவனை?
சர்வேட் ஆரம்பிச்சிடவா? ;)

Friday, September 12, 2008

Mixture - சென்னைவாசிக்கு வேண்டுகோள், முரளி, பெஸ்ட் பகுத்தறிவாளர், தனம், அப்போகாலிப்டோ, ஓணம்

2006ல் சிறந்த பதிவர் போட்டி நடத்தியபோது, நம்ம வெட்டிப்பயலுக்கான $100 பரிசை அவர் விருப்பத்தின் பேரில் உதவும் கரங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் கூட உ.கரங்களுக்கு அப்பப்ப இயன்றதை நண்பர் குழாமுடன் இணைந்து அனுப்புவது வழக்கம் (ரொம்ப எல்லாம் கிடையாதுங்க. சும்மா, கொஞ்சம்தான். வாழ்க்கைல அடுத்தவருக்காக பண்ற ஒரே நல்ல காரியம் இதுதான்).
அவர்களிடம் உள்ள சில நூறு குழந்தைகள், பெரியவர்களைப் பேணிக் காப்பது சுலபமான வேலை இல்லை. கடல்ல போடர பெருங்காயம் தான் நாம் கொடுக்கர பணமெல்லாம்.
ஆனா, சிறுதுளி பெருவெள்ளம் தானே?

பணத்தை விட மிகப் பெரிய விஷயம், அங்குள்ள குழந்தைகளை நேரில் சென்று பார்த்து அவர்களுடன் சில மணி நேரம் செலவிடுவதாம்.
உ.கரங்கள் வருடாந்திரம் அனுப்பும், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில், கடைசி வரி, 'நீங்கள் நேரில் வந்து எங்கள் குழந்தைகளிடம் நேரம் செலவழித்தால், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், மனநலத்துக்கும் நல்லவிதமாக அமையும்'னு எழுதியிருப்பாங்க.
தூரதேசத்துல இருக்கர என்னால இதெல்லாம் செய்யமுடியாது.

வருஷத்துக்கு ஒருதடவ சென்னைக்கு வரும்போது கிடைக்கும் மூணு நாலு வாரத்துலயும், என் சோம்பேரித்தனம் உ.கரங்களுக்கு நேரில் போக இசைந்து கொடுக்கவில்லை.

ஆகையால், நீங்கள் சென்னை வாசியாக இருந்தால், தயை கூர்ந்து உதவும் கரங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும், சில நேரம் செலவு செய்து, உங்களால் இயன்றதை செய்யுமாறு கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த, சென்னைப் பதிவர் சந்திப்பை, உதவும் கரங்கள் வளாகத்தில் வைத்தால், சாலச் சிறந்தது. செய்வீங்களா, செய்வீங்களா? ;)

!------! !*****! !------! !*****! !------! !*****!

flickrல் முரளின்னு ஒருத்தர் கண்ணுல மாட்டினாரு. அருமையான பல படங்களுக்குச் சொந்தக்காரர்.
இவர் நல்ல பென்சில் ஆர்டிஸ்ட் கூட.கலக்கலா படங்கள் வரஞ்சு வச்சிருக்காரு பாருங்க.
பென்சில் ஆர்ட்ஸ், மட்டும் அல்லாமல் ரங்கோலி டைப் ஆர்ட்டும் அநாயாசமா பண்ணிவச்சிருக்காரு, அதையும் பாருங்க.

!------! !*****! !------! !*****! !------! !*****!

பகுத்தறிவாளிப் பட்டம் வாங்க இப்பெல்லாம் பேங்கரப் போட்டி நடக்குது நம்ம பதிவுலகில். ஆனா கண்ணுல படரவங்களெல்லாம், வீட்ல ஆன்மீகவாதியாவும், வெளீல பகுத்தறிவாளியாகவும், இருக்கும் டைப்பாதான் இருக்காங்க.
அவங்க கொழம்பிக்கரதும் தவிர, வாசிக்கரவனையும் போட்டுக் கவுக்கராங்க.
மொத்தத்தில், இந்தப் பகுத்தறிவாளர்கள் தொல்லை தாங்க முடியலீங்க.

பெஸ்ட் பகுத்தறிவாளர் யாரா?

இதில் ஐரனி என்னென்னா, சிறந்த பகுத்தறிவாளர்தான், சிறந்த ஆன்மீகவாதியும் கூட.
சிந்திக்க உண்மைகள்னு ஒருத்தரு எழுதராரு. டெய்லி, டாலு டப்பா டோலு மாமி ரேஞ்சுக்கு அடிச்சு வெளையாடராரு.
ஆனா, கொடுமை என்னென்னா, பல புராணக் கதைகளும், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல புதிய விஷயங்களையும் இவரு மூலமா தெரிஞ்சுக்க முடியுது.
ஸோ, சிறந்த ஆன்மீகவாதி + சிறந்த பகுத்தறிவாளர் - சிந்திக்க உண்மைகள் பதிவர்தான். ;)

!------! !*****! !------! !*****! !------! !*****!

'தனம்'னு ஒரு படம் ஓ.சியில் பாக்கக் கெடச்சுது. டி.வி.சீரியல் ரேஞ்சுக்கு இருக்குது.
இளைராஜா மூஜிக். ஹ்ம். ஒரு பாட்டு நல்லாருக்கு. கண்ணன் பாட்டு.
அப்பாலிக்கா, 'கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பளன்னு' ஒரு பாட்டு. மத்தபடி, உஸ்ஸ்ஸ்.
போலிச்சாமியாரின் பித்தலாட்டம் காட்டுவதும் அவனை கொல்வதும் நல்ல மெசேஜு.

ஒருவழியா Mel Gibsonன் Apocalpyto பாத்தாச்சு, பொறுமையா திரைப்பார்வை எழுதறேன்.
Mayan வம்சாவளிகளின் கோரத் தாண்டவம் படம் முழுதும். ஆனா, படம் முடியரதுக்கு முன்னாடி கடைசி காட்சியில், Mayanஐ மிஞ்ச வரும் நாகரீக ஆசாமிகள் பெரிய கப்பல்களில் கரை சேருவார்கள். Mayanகள் செய்த காட்டுமிராண்டித்தனத்தை விட, வெளியாட்கள் வந்து அவர்களுக்கு செய்த கொடுமைகள் ரொம்ப பெருசோ? - ஏன்னா, ஒட்டு மொத்த மாயர்களையும் அடிச்சு ஒழிச்சுட்டாங்களே. :(

!------! !*****! !------! !*****! !------! !*****!

இன்னும் நெரைய சொல்லிக்கினே போலாம்... ஆனா, இப்போதைக்கு இது போதும்.

பிலேட்டட் ஹாப்பி ஓணம்!

Thursday, September 11, 2008

Kaitlyn Maher - Top 20 ல் - Beauty & the Beast

போன வாரம் What a wonderful world பாடின Kaitlyn முன்னேறி டாப்20க்கு வந்திருக்கா.

இந்த வாரமும் பட்டைய கெளப்பிட்டா. Beauty & the beast பாட்டை அழகா பாடி கலக்கியாச்சு.

அசகாயசூரர்கள் எல்லாம் போட்டி போடர இந்த 'America got talent' நிகழ்ச்சி அருமை.
இந்தக் கட்டத்தை தாண்டி டாப்10க்கு Kaitlyn போவாளான்னு பொறுத்திரூந்து தான் பாக்கணும்.

ஜட்ஜஸ் கணிப்புப் படி, அடுத்த கட்டம் போரது கஷ்டம்னு தான் தோணுது.

முன்னேறலன்னா, kaitlynன் க்யூட் பாடல்கள் இனி இந்த வருஷம் கேட்க்க முடியாம போயிடும் :(

Kaitlyன் beauty and the beast பாருங்க/கேளுங்க:


-கலக்கல் kaitlyn மன்றம்
-கலிஃபோர்னியா கிளை
-சர்வேசன்

TRP Rating - SUN, Vijay, Kalaignar, Jaya, Raj TVக்களின் மதிப்பு

டி.ஆர்.பி ரேட்டிங்க்னு ஒண்ணு இருக்கு. Television Rating Points இதன் விரிவாக்கம்.
நம்மூரில் இருக்கும் ஒரு நிறுவனம், நம் மக்களில் சிலர் எந்த சேனலை அதிகம் விரும்பிப் பாக்கராங்கன்னு கணக்கெடுக்கும் மூறை இது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் ஒரு மீட்டரை பொறுத்தி, அந்த வீட்டுக்காரங்க, எந்த சேனல் எப்பெப்ப எவ்ளோ நேரம் பாக்கராங்கன்னு கணக்கெடுத்து, குத்து மதிப்பா, இந்த டி.விதான், 8மணிக்கு பாப்புலர், மதியான நிகழ்ச்சிகள் இந்த டிவிலதான் அதிகம் பாக்கப்படுது அப்படி இப்படின்னு கதைய அவுத்து விடுவாங்க.

எவ்ளோ ரேட்டிங் இருக்குதோ, அதன் அடிப்படையில்தான், விளம்பரதாரர்கள் எவ்ளோ துட்டு எந்த சேனலுக்கு குடுத்து எப்பெப்ப விளம்பரம் போடலாம்னு முடிவு பண்ணுவாங்க.

இந்த ரேட்டிங் முறையில் பல விஷயம் மங்கலாதான் இருக்கு. எவ்ளோ பேர் வீட்ல மீட்டர் போடுவாங்க, ரேட்டிங் முடிவுகள் எல்லாம் 'நேர்மையான' முறையில் தான் நடக்குதா,இப்படி.

சில சானல்கள், மற்ற சில சானல்களை விட சிறந்ததுன்னு நியூஸ் பாக்கும்போது, வியப்பா இருக்கு.

சரி, அவங்க ஒரு பக்கம் மீட்டர் வச்சு டி.ஆர்.பி கூட்டிக் கழிக்கட்டும், ஆனா, இணைய வாசிகளான நாம் எந்தச் சேனலை அதிகம் விரும்பிப் பாக்கறோம்னு பாக்கதான் இந்த சர்வே.

வாக்குங்க. வாக்குப் பொட்டி கண்ணுக்குத் தெரியலன்னா இங்க க்ளிக்கி பொட்டீல வாக்க போடுங்க.



(சேனல்காரர்களே, ரேட்டிங் அதிகம் வேணும்னா, ஒரு $10,000த்தை எனக்கு மணி ட்ரான்ஸ்ஃபர் செய்யவும் ஸ்விஸ் அக்கவுண்ட் நெம்பர்: 1010101)

;)

பி.கு: லக்கி இதப் பத்தி பதிவு எழுதியிருந்தாரு, அவரின் பதிவில் உள்ள 'வெக்கப்படாதீங்க சார்' படம், அடல்ட்ஸ் ஒன்லீ என்பதால், அந்த பக்கத்துக்கு லிங்க் குடுக்கல. ஹி ஹி!

Wednesday, September 10, 2008

OMG ~ ஜஸ்ட்டு மிஸ்டு! செத்துப் பிழைத்தல்!

எட்டு மணிக்கு எழுந்தோமா, ப்ரெட்டத் தின்னோமா, காஃபியக் குடிச்சோமா, 10 நிமிஷ தூரத்துல இருக்கர ஆஃபீஸுக்குப் போனோமா, இல்லாத ஆணியத் தேடித் தேடி 3 மணி நேரம் பிடிங்குனோமா, 1 மணி நேரம் அரட்டை அடிச்சுக்கிட்டு கும்பலா குந்திக்கினு மதிய உணவு தின்னோமா, அடுத்த 4 மணி நேரம் திரும்ப இல்லாத ஆணியத் தேடினோமா, 5 மணிக்கு டான்னு வீடு போய் சேந்தோமா, 6 மணிக்கு கிளம்பி வாலிபாலோ, கிரிக்கட்டோ வெளையாடினோமா, 8 மணிக்கு ப்ளாகரத் தொறந்தமா, ஒரு பதிவும், பத்து பின்னூட்டங்கள் போட்டமா, மூக்குப் பிடிக்கத் தின்னமா, ஓ.சி டிவிடிப் படம் பாத்தமா, கட்டைய சாச்சமான்னு தெனம் தெனம் ரொட்டீன் லைஃபா போயிக்கிட்டே இருக்குது.

ஆனா, முந்தாநேத்து (திங்கள்) ஒரு திடுக் திடுக் மேட்டர் நடந்தது.

வழக்கம் போல 6 மணிக்கு வெளையாட போயிட்டு, வேர்க்க விருவிருக்க வூட்டப் பாத்து வண்டிய ஓட்டினேன்.

எப்பவும் 8 மணிக்குதான் வெளையாட்டு முடியும். திங்கக்கிழமை மட்டும் 7:45க்கு பொட்டிய கட்டிட்டோம். இப்பெல்லாம் சீக்கிரமே குளிர ஆரம்பிச்சுடுது.

வெளையாட்டு மைதானத்துக்கும் எங்க வீட்டுக்கும் போர வழியில நம்மூரு காய்கறிக் கடை இருக்கு. ஓ.சி டிவிடியெல்லாம் அங்கனதான் கெடைக்கும்.

சனிக்கெழம எடுத்திருந்த தசாவதாரம் டிவிடியப் திரும்பப் போட்டிடலாம்னு கடைக்குள்ளப் போய் டிவிடிய கொடுத்திட்டு கெளம்பி வீட்டுக்குப் போயிட்டு, 8 மணிலேருந்து மத்த ரொட்டீன் விஷயங்கள செஞ்சு முடிச்சேன்.

எப்பவும், கடைக்குள்ள போனா, முறுக்கு வகையராக்கள அள்ரது வழக்கம், ஆனா திங்கக் கெழம, அது தோணல, டிவிடிய கொடுத்துட்டு, விருக்குன்னு கெளம்பிட்டேன்.

நேத்து லோக்கல் ந்யூஸ் பாத்தா திடுக் திடுக் நியூஸ்.

நான் போர அந்தக் கடைக்கு, சரியா 8:00 மணிக்கு ரெண்டு திருடர்கள் துப்பாக்கியோட வந்திருக்கானுவ. கடைல கல்லால இருக்கர பொண்ண மெரட்டி மொத்தக் காசையும் லவுட்டிட்டாங்க. அதைத் தவிர, கடையில் இருந்த மத்தவங்ககிட்டையும் மெரட்டி பணத்த புடுங்கிக்கிட்டாங்களாம்.

நான் கடைக்குள்ள 7:55 மணிக்கு இருந்திருக்கேன். முறுக்கு, காய்கறி வகையராக்கள் வாங்கியிருந்தா, நானும் இந்த திருட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருப்பேன்.

அமெரிக்கால, துப்பாக்கி வாங்கரது, முட்டாய் வாங்கர மாதிரி சுலபமான விஷயம், கண்ட கண்ட நாய்களும் துப்பாக்கி வச்சிருக்கும்.
மிக்காரும், எல்லாரும் வீட்ல துப்பாக்கி வெச்சிருப்பாங்களாம். இது கலிஃபோர்னியால கம்மி, மத்த சில மாநிலங்களில் மிக அதிகம்.

'Bowling for Columbine' டாக்குமெண்டரி பாத்து நொந்தே போயிட்டேன். அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்தை சாடும் படம் அது. ஏதோ ஒரு வங்கியில, சேமிப்புக் கணக்குத் தொடங்கினா, பெரிய துப்பாக்கி இனாம்னு, ஸ்கீமெல்லாம் இருக்குன்னா பாத்துக்கங்க, இங்க துப்பாக்கி கலாச்சாரம் எப்படி இருக்குன்னு.

எல்லார் கிட்டையும் துப்பாக்கி இருக்கரதால, துப்பாக்கியில் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக மிக அதிகம்.

நான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடியே அந்த கடையிலிருந்து எஸ்கேப் ஆகலன்னா, கீழ இருக்கரதுல ஏதாச்சும் ஒண்ணு ஆயிருக்கும்:

1) கை கால் நடுங்கி, வேர்த்து கொட்டி, மிஸ்டர்.திருடர் கேட்டதை எடுத்துக் கொடுத்திருப்பேன். பர்ஸ்ல, $115 இருந்துச்சு. வாச்செல்லாம் கட்டல, கப்படிக்கர ஷார்ட்ஸ், டி.ஷர்ட், பழைய ஷூவெல்லாம் தப்பிச்சிருக்கும்.

2) "யூ ப்ளடி இந்டியன். கிவ் மீ யுவர் வேலட்!"னு திருடன் எங்கிட்ட சொல்லியிருப்பான். நான் பி.பி ஏறி, நாட்டுப் பற்று தலைக்கேறி, யாரடா சொன்னன்னு, கடைல இருந்த தேங்காவ, விஜய்காந்தை மனசுல வேண்டிக்கிட்டு, கட்ட வெரல்ல சுண்டி பாதியா ஒடச்சு, வலது கைலேருந்து விருக்னு ஒரு மூடி, எடது கைலேருந்து விருக்னு இன்னொரு மூடி ரெண்டு திருடனுங்க துப்பாக்கிலயும் அடிச்சு எகிர வெச்சு, சொய்ங்க்னு மேல எகிறி, விருக் விருக்னு சொழண்டு, அலமாரி மேல இருக்கர தூசு படர்ந்த தம்ஸ்-அப் பாட்டிலை காலால அடிச்சு, அது பறந்து திருடனுங்க மண்டைல அடிச்சு அவங்க கீழ விழ, கடைல இருக்கர பொண்ணுங்க கிட்ட, "கிவ் மீ எ ரோப்"னு கேட்டு, கயிறு வாங்கி, ரெண்டு பேரின் காலையும் கையையும் விஷ்க் விஷ்க்னு கட்டி, "கால் த போலீஸ் நவ்"னு சொல்லிட்டு, கடையிலிருந்து கெளம்பி வெளீல வரும்போது, கடையின் உள்ளிலும் வெளியிலும் இருக்கரவங்க எல்லாம் "சர்வேசா, சர்வேசா, சர்வேசா"ன்னு பாஷா ஸ்டைல்ல கத்தியிருப்பாங்க. இன்னிக்கு, கவர்னர் தல.சுவாட்சநேகர் கையால, 'good samaritan' அவார்டெல்லாம் வாங்கியிருப்பேன்.

3) "அடப்பாவிகளா, மீ த எஸ்கேப்"னு திருடர் கிட்டயிருந்து நழுவி ஓடப் பாத்திருப்பேன். டுமீல்னு அவன் பின்னாடியே சுட்டிருப்பான். இன்னிக்கு எங்காவது ஒரு அழகான நர்சு என்னப் பாத்துக்க,அக்கடான்னு ஆஸ்பத்திரி கட்டில்ல படுத்துக்கினு இருப்பேன். என்ன, ஒரே கஷ்டம், பெரிய கட்டு கட்டியிருப்பாங்க "பின்னால".

ஸோ, இந்த மூணும் நடக்காம, ஜஸ்ட் மிஸ்ஸாகி, நான் சிராய்ப்பே இல்லாம பொழச்சதுக்கு யார் காரணம்?

1) கடவுள் / விதி
2) nothing. its just coincidence.

உங்களுக்கு இந்த மாதிரி "ஜஸ்ட்டு மிஸ்டு" நிகழ்ச்சி ஏதாச்சும் நடந்திருக்கா? யார் காப்பாத்தினான்னு நெனைக்கறீங்க?
கருத்து இல்லாதவங்க இங்க க்ளிக்கி வாக்கலாம்.

கருத்து இருக்கரவங்க விலாவாரியா என்ன மாதிரி 1,2,3 போட்டு அளந்து சொல்லுங்க.

;)

Tuesday, September 09, 2008

தசா, குசே, சரோ - வா.பொட்டி

சரோஜா படம் பத்தி ஏற்கனவே அலசியாச்சு இங்கே.
நண்பர் ஒருவரு, சரோஜாக்கு, சர்வே எடுக்கலியான்னு கேட்ட்டாரு.
காசா பணமா? எடுத்துட்டாப் போச்சு, அதுதான் இந்தப் பதிவு. சரோ சர்வே பாக்கரதுக்கு முன்னாடி.
இதுக்கு முன்னாடி வெளிவந்த, தசாவதாரம், குசேலன் சர்வே முடிவுகள் பாக்கவேணாம்?

தசாவதாரம்: 500பேர் கிட்ட வாக்களிச்ச சர்வே இது. 292 பேர் படத்தை தூள்னு சொல்லியிருந்தாங்க.


குசேலன்: 157 பேர் வாக்களிச்சிருக்காங்க. 101 பேர் நல்லால்லன்னு சொல்லிருக்காங்க. ofcourse, ;)


இனி சரோஜா பாத்தவங்க (மட்டும்) வாக்குங்க!

Monday, September 08, 2008

பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்


தூர்தர்ஷன் மட்டுமே இருந்த வசந்த காலங்களில் இசை அரங்கம்னு ஒரு நிகழ்ச்சி போடுவாங்க. தினமும் சாயங்காலம் 6 மணிக்கு வரும்.
எப்பப்பாத்தாலும், ஒரே மாதிரி இழுவையா இருக்கும்.

தாளம்: ஆதி, ராகம்: கல்யாணி, மிருதங்கம்: லக்ஷ்மணன், கடம்: சோமசுந்தர், கஞ்சிரா: ராமசுப்புன்னு ஒரே பெயர் அட்டையை போடுவாங்க. பெயர் அட்டையை காமெராக்கு நேரா காட்டி நகத்தரவரும் தூங்கிக்கிட்டே நகத்தரது மாதிரி இருக்கும்.
அதை படம் எடுக்கும் கேமராக்காரரை நெனச்சாலே பாவமா இருக்கும்.
எப்படிய்யா தெனம் தெனம் சகிச்சுக்கராங்கன்னு.

ஒரு குறிப்பிட்ட நேரம்னு இல்லாம, எப்பெல்லாம் ப்ரோக்ராம் தூர்தர்ஷனுக்கு கிடைக்கலியோ, அப்பெல்லாம் இசை அரங்கம் தான் வரும்.
இசை அரங்கம் அட்டையப் பாத்த உடனே, டேய் 'கில்லி' ஆடலாண்டான்னு பயலுவளோட தெருவுக்கு ஓடிடுவோம்.

சுத்தமா ஒரு ஜீவனே இல்லாம தூங்குமூஞ்சித்தனமா இருக்கும் அந்த நிகழ்ச்சியப் பாத்து, கர்நாடக சங்கீதம்னா சுத்த அறுவை மேட்டருன்னு நெனச்சிருந்த காலம்.
குறிப்பா, ஜொய் ஜொய்ன்னு இழுக்கும் வயலின் செம அறுவையா இருக்கும்.

அந்த மோல்டை தூக்கிப் போட்டு மிதிச்சவரு குன்னக்குடி வைத்யநாதன்.

ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது பாத்திருப்பேன்னு நெனைக்கறேன். இதே தூர்தர்ஷன்ல, பட்டையா நெத்தீல விபூதி, நடுவுல பெரிய குங்குமம் வாய் நிறைய பல்லுன்னு பளிச்னு இருப்பாரு மனுஷன்.
தலைய ஆட்டி ஆட்டி அவரு வாசிக்கர அழகு, ஒண்ணும் புரியலன்னாலும், ஒரு வசீகரம் தந்தது.
பாட்டுக்கு நடுவுல, திடீர்னு, வயலின் கம்பிய புடிச்சு டொய்ங் டொய்ங்னு வேர தாளம் போட்டாரு. அட, இது நல்லாருக்கேன்னு நினைக்க வச்சது.

அப்பரம், அக்கம் பக்க மாமாஸின் இலவச கேசட்டால், குன்னக்குடி மேலும் பரிச்சயம் ஆனார்.

ஆனா, எங்க மத்தியில அவரு பெரிய ஹிட்டானது, வயலினில் சினிமா பாட்டெல்லாம் ஒரு தீபாவளிக்கு வாசிச்ச போதுதான்.
பின்னிட்டாரு பின்னி. ராக்கம்மா கையத் தட்டுலேருந்து, சின்ன ராசாவே சிட்டெறும்பு கடிச்சுதாங்கரது வரைக்கும் வாசிச்சுத் தள்ளினாரு.

இப்பவும், ராத்திரி பல நாட்களில் தூங்கரது, அவரின் மெல்லிய வயலின் இசை கேட்டுத்தான்.

கர்நாடக சங்கீதம் எனக்கு சுத்தமா தெரியாது. ஆனால், சில பாடல்களை பாடினாலோ, கருவியில் வாசித்தாலோ மிகவும் விரும்பிக் கேட்பேன்.
இந்த ரசனை என் அக்கம் பக்க 'மாமாஸ்' கொடுத்த ஓ.சி கேசட்டின் பலன் தான் என்பது திண்ணம். அவர்களுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த ஜகதோதாரணா பாடல், பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் வாசிப்பத்தை கேட்டுப் பாருங்கள். கர்நாடக சங்கீதம் பரிச்சியம் இல்லாதவர்கள், அது அறுவை என்று நினைப்பவர்கள், headphoneல் இரண்டு மூன்று முறை கேட்டுப் பாருங்கள். லயித்துவிடுவீர்கள்.
பிடிச்சிருச்சா, இப்ப ஜகத்ஜனனியூம் கேட்டுப் பாருங்க.

அவரின் மறைவு, நமக்கு பெரிய இழப்பு.

செய்யும் வேலையை மிகவும் ரசித்து ஆத்மார்த்தமாய் செய்பவர்களை காண்பது மிக மிக அரிது.
குன்னக்குடி அந்த வகை.

குன்னக்குடி 'மூச்' விடாம வாசிச்ச மண்ணில் இந்த காதல் பாட்டு கீழே.

Great man, he was!


குன்னக்குடி சார், we will miss you!

Sunday, September 07, 2008

சிங்கை/மலேஷியப் பதிவர்களுக்கு ஓம்காரின் அருளாசி - முடிவுரை


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீண்டும் சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நம் பதிவுலகில் அலசி ஆராயப்பட்டு தொவைச்சு காயப்போடப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.
(நினைவில்லன்னா, டாக்டர பாருங்க ;))

இதில் முக்கியப் ப்ரச்சனையாக என் கண்ணில் பட்டது, வி.சதுர்த்தியை கிண்டலடித்த பதிவுகள்.
டிபிசிடியார் கிண்டலாய் எழுதிய பதிவில், விநாயகனை மட்டும் கிண்டறீங்களே, ரம்ஜானைக் கிண்டலியான்னு கேட்டேன்.
இதைக் கேட்டது, ரம்ஜானைப் போய் கிண்டல் பண்ணுங்க என்ற நோக்கத்தில் அல்ல. கடவுள் நம்பிக்கையை பழிப்பவர்கள், ஒரு கடவுளை மட்டும் பழிக்கும் ஓரவஞ்சனைக்கு ஏதாவது சிறப்புக் காரணம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்.
இதே டிபிசிடி ரம்ஜானை மட்டும் கிண்டியிருந்தா, அவருகிட்ட போய், வி.சதுர்த்தி கிண்டலியான்னு கண்டிப்பா கேட்டிருப்பேன்.
(மேலே சொன்னதில் இம்மியளவும் உண்மையில்லன்னா, இதுவரைக்கும் நான் பக்ரிதுக்கும் ரம்ஜான் முடிஞ்சதும் என் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட பிரியாணியெல்லாம் ஜீரணமாகாமல் என் நெஞ்சில் அடைச்சு வெடிச்சு சிதறட்டும்).

டிபிசிடியாரும் நான் கேட்ட கேள்விக்கு சுத்தி வளச்சு பல பதில் சொல்லியிருக்காரு. எல்லாம் எனக்குத் தெரிஞ்சு சப்பைக் கட்டு. எனக்குத் தெரிஞ்சு, டிபிசிடியாருக்கு விநாயகரைப் பிடிக்காமல் போனதுக்கு காரணம், அவரு வடநாட்டுக் கடவுள் என்பது போலவே தெரிகிறது.
அவரு ஏன் வடநாட்டுக் கடவுள் ஆனாருன்னு எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரமில்லை.
(என் தியரிப்படி கடவுள்கள் எல்லாம் வேறு கிரகத்தவர்கள். அது இப்ப வேணாம், லூஸ்ல விடுங்க :) ).
எல்லாம், ஆரிய/திராவிட பெத்தட்டின் ஃபார்முலாவின் பாதிப்பு இது. பத்த வச்ச பரட்டை நல்லாவே பத்த வச்சிருக்காரு.

கடவுளைப் பிடிக்காதவங்க, ஜாலியா இருங்க. ஆனா, கடவுள் இருக்காருன்னு நம்பரவங்களோட நம்பிக்கையில் குச்சியை விட்டு நோண்டுவது ஏன்?

கேட்டா இந்த நம்பிக்கை மனித குலத்தை அழிச்சு அகல பாதாளத்துக்கு தள்ளிடும் அதனால அட்லாஸ் மாதிரி தூக்கி நிறுத்தறோம்பீங்க. கடவுள் நம்பிக்கை குரங்கிலிருந்து மனுஷன் ஆனதும் ஆரம்பிச்சது. இவ்ளோ ஆயிரம் காலம், மனுஷன் நாசமாத்தான் போயிட்டானா?

வடநாட்டுக் கடவுள் உள்நாட்டு கடவுளை ஓரங்கட்டறாருன்னு நெனைக்கறவங்க, நாலு உள்நாட்டுக் கடவுளைப் பத்தி எழுதுங்க, இல்லன்னா அவர்களுக்கு சதுர்த்தி நடத்துங்க.
அத்த வுட்டுபோட்டு....?

முதலில், தங்கள் வீடுகளில் சுண்டல் சமைப்பதை தடுக்க முடிஞ்சா தடுங்க, அப்பாலிக்கா ஊர் மக்களுக்கு நல்ல சேதி சொல்லலாம். இது பலருக்கும் பொருந்தும்னு நெனைக்கறேன் ;)

கோவிலுக்கு போரது நிம்மதியைத் தருது பல பேருக்கு - அவங்களுக்கு நிம்மதி கிடைக்க வேறென்ன செய்யச் சொல்றீங்க?

அனுராதா மேடம் பதிவுல, தினமும் கடவுளின் படத்தைப் பாத்து தன் நிலையை எண்ணி பல கேள்விகள் கேப்பாங்கன்னு எழுதியிருக்காங்க. அது அவங்களுக்கு ஒரு வடிகாலா இருந்திருக்கு. இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒரு வடிகால் கடவுள்.
இன்னிக்குத் தேதில, வெறும் பக்தியை மட்டும் நம்பி யாரும், தன்நம்பிக்கையெல்லாம் விட்டுடரது இல்லை. ஸோ, பக்தியால் யாரும் கெடப் போவதில்லை.

நம்பிக்கை, வாழ்க்கையில் பிடிப்பைத் தரும்; தன்நம்பிக்கை துடுப்பாய் இருக்கும்; (© -சர்வேசன், 2008)


நம்ம ஊர்ல, பொடி நடையா நடந்து, பழைய நண்பர்களுடன் அக்கடான்னு ஒக்கார கோயில் படிக்கட்டை விட்டா, என்னா பொது இடம் இருக்குங்க சாரே? ஏதாவது ஒரு எடத்த சொல்லுங்க, நாளைக்கே கோயிலுக்குப் போரத விட்டுடறேன்.

நீங்க எதையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டீங்கன்னு தெரியும். உங்க பகுத்தறிவு அதுக்கெல்லாம் இடம் தராதுன்னு நேக்குத் தெரியும். இத்தோட நிறுத்திக்கறேன் ;)

இனி, கோவிக் கண்ணன் சாருக்குப் போவோம்.
கோவி, நியாயமான கேள்விகள் கேட்டீங்க. ப்ளாஸ்ட்டர் பாரிஸ்ல பண்ண விநாயகரை கடலில் கரைத்து, விநாயகரை துண்டு துண்டு உடைத்து சின்னா பின்னமாக்குவது சரியா? இயற்கைக்குத் தீங்கில்லியான்னெல்லாம் கேட்டீங்க.
எனக்கும், இது பிடிக்காத விஷயம்தான்.
எனக்குத் தெரிஞ்ச விநாயக சதுர்த்தியில், மாட்டுவண்டியில் விநாயகர் ஜம்னு வருவாரு, லட்டு மாலை போட்டுக்கிட்டு. ராத்திரி பத்து பதினோரு மணிக்கு ஒவ்வொரு வீடா வண்டிய ஓட்டிக்கிட்டு வருவாங்க. ஒவ்வொரு வீட்டிலும், தேங்கா, கற்பூரம் எடுத்துட்டு வந்து காட்டி, லட்டு வாங்கிப்போம்.

இந்த வெயிட்டிங் டைமில், மொத்த தெருமக்களும் டி.வியெல்லாம் மறந்து தெருவில் கூடி, ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. சில்னு ராத்திரி வெளியில் நின்னு, அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் ஊர் கதை பேசும் பெருசுகளும், ஓடிப்பிடிச்சு விளையாடிய பொடிசுகளும், தெருவோரம் குவித்த மணலில் கை விட்டு விளையாடிய பெண்-பொடிசுகளும், இப்ப நெனச்சாலும் இனிப்பா இருக்கு.

இந்த மாதிரி, ஊர்-கூடும், விஷயங்கள் நம்ம ஊர்ல வேறென்னங்க இருக்கு?
பகுத்தறிவுப் பொதுக்கூட்டங்களா? மனுஷன் போய் கேக்க முடியுமா அந்த கூட்டத்தையெல்லாம்?

உங்க பதிவுல, விநாயகர் சதுர்த்தி ஏன் பண்ண ஆரம்பிச்சாங்கன்னு, யாரோ ஒரு ஆன்மீகர் ஸ்வாமி ஓம்கார் வந்து அழகா சொல்லியிருக்காரு பாத்திருப்பீங்க.
அவரு என்னா சொன்னாருன்னு சொல்றதுக்கு முன்னாடி ஓம்காரைப் பத்தி சில பாயிண்ட்டு:
ஓம்கார் சார், உங்களை நீங்களே 'ஸ்வாமின்னு' சொல்லிகரது எனக்குப் பிடிக்கல.
அப்பாலிக்கா, சிலை டு சிலை சக்தி மாத்தலாம்னு சொல்றதும் ஏற்பாய் இல்லை.
உங்களுக்கு 108 வயசுன்னு போட்டிருக்கு?
நீங்க மாறு வேஷத்துல வந்த பழைய பதிவர் யாருமில்லியே? ;)


இனி விஷயத்துக்கு வரேன்.

அதாவது, திரு.ஓம்கார் சொல்வது என்னவென்றால் வி.சதுர்த்தி வெள்ளையன் காலத்தில், பொதுக்கூட்டங்கள் நடைபெற தடை போட்டிருந்த காலகட்டத்தில், பொதுமக்களை ஒன்று திரட்ட திலக் உருவாக்கிய மத யுக்திதான் இந்த விநாயகர் ஊர்வலமாம்.
மக்கள் ஒன்று திரண்டு, அப்பரம் என்னாச்சுன்னு உங்களுக்கு நான் சொல்லணும்னு இல்லை.

இன்னைக்கு, கொஞ்சம் இந்த வி.சதுர்த்தி ஊர்வலத்தை பலரும் பல விதமா 'யூஸ்' பண்ணிக்கராங்க.
புள்ளையாரை கடலில் கரைப்பதால், மாசுப் ப்ரச்சனைகள், etc... etc..

இதைத் தடுக்க ஓம்கார் என்னா சொல்றாருன்னா, எல்லா புள்ளையாரையும் கொண்டு வந்து கடல் கரையில வச்சிட்டு, எல்லாத்துக்கும் பொதுவா ஒரு குட்டிப் புள்ளையாரை செஞ்சுட்டு, அந்தப் புள்ளையாரை மட்டும் கடலில் கரைக்கலாம். மத்த புள்ளையாரையெல்லாம், ரீ-யூஸ் செய்யலாங்கராரு.

நல்ல புத்திமதி இல்ல இது? இன்னிக்குத் தான் கவனிச்சேன், இங்கே அமெரிக்கக் கோயில் ஒன்றில் அப்படித்தான் பண்ணினாங்க இன்னிக்கு. பஸ்ல கொண்டு போய், ஒரு பெரிய புள்ளையாரை கடலில் போட்டு, மத்த பிள்ளையாரெல்லம் கோயில்லையேதான் வச்சிடறாங்க.

இதை 2009ல் கண்டிபா செய்யணும்.

இதை உடனே ரூலா போட உள்ளூர்-கோர்ட்டு/சுப்ரீம்-கோர்ட்டு பெரியவா ஏற்பாடு செய்யணும்.

இந்த மாதிரி பல புள்ளையார்கள் இருக்கும்போது, ஒரே ஒரு புள்ளையாரை மட்டும் கரைக்காமல், எல்லாத்தையும் கரைக்கரவங்களுக்கு, புள்ளையார் ஒரு நன்மையும் தரக்கூடாதுன்னு புள்ளையாரைக் கேட்டுக்கறேன்.

கருத்ஸ்?

நன்னி!

பி.கு1: சென்ற பதிவின் சர்வேயில் 19 மதத் தீவிரவாதிகள் வாக்கிருக்காங்க. ரொம்பக் கேவலம் சார்.

பி.கு2: அடுத்த பண்டிகை தீபாவளிக்கு, இப்பவே ஒரு பதிவை ரெடி பண்ண வேண்டி வருமோ? அதுவும் வடநாட்டுப் பண்டிகையோ? டிபிசிடியார் தீவளி கொண்டாடுவீங்களா? இல்லியா? வூட்ல பட்டாசெல்லாம் வெடிப்பாங்களா?

Friday, September 05, 2008

சரோஜா - செம ஜோரா! திரைப் பார்வை.

வாங்க சார். சவுக்கியமா சார்.
சரோஜா பாத்தாச்சா சார்? ஓ, பாத்தாச்சா?
எங்க சார் பாத்தீங்க?
ஓ, கலிபோர்னியால, அலமேடா தியேட்டர்தானா?
அட, மொத ஷோ, மொத காட்சியா?
அட அட அட, நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க?
அட நீங்கதானா சார் அது குண்டா, தங்கமணியோட கெக்கபெக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தது?
கொஞ்சம் மொகத்த காட்டுங்க சார்.
போடாங், உன் மூஞ்சீல என் பீச்சாங்கைய்ய வெக்க!!!

சார், $10 கொடுத்து படம் பாக்க வந்தா, நீங்களும் ஒங்க பொண்டாட்டியும் சீனுக்கு சீனு தொண தொணன்னு பேசரத கேக்கவா சார் வரோம்?
கொஞ்சம் கூட காமென் சென்ஸே இல்லியா சார் உங்களுக்கெல்லாம்?

"ஐயோ, எஸ்.பி.பி சரணா அது?" "ஐயோ, நளினியப் பாரேன், எவ்ளோ குண்டாய்ட்டா?"
"ஹா ஹா ஹா, ஹே இது பழைய பாரதிராஜா படம் பாட்டுல்ல? என்ன படம் அது? செம்பருத்தியா? இல்லப்பா, டிக் டிக் டிக், இல்லப்பா கிழக்கே போகும் ரயில். இல்லப்பா"
"ஹே உன் ஃப்ரெண்ட்ஸ் பின்னாடிதான் இருக்காங்க, பாக்காம போறான் பாரேன்"
"@#$@#$$#@$#@$$(*%&^%&&##$%@@#$$#@#@$"

இப்படி போட்டு, படம் ஆரம்பிச்சதிலிருந்து, முடியரவரைக்கும் ஏன் சார் டார்ச்சர் பண்ணீங்க?
சார், இனி படம் பாக்கப் போனீங்கன்னா, வாய்ல, கர்ச்சீப கட்டிக்கிட்டு, பொத்திக்கிட்டு பாருங்க சார்.
இல்லன்னா, வெயிட் ஃபார் டிவிடி -- மவனே, இனி உன்ன ஏதாவது தியேட்டர்ல, வாய்ல கர்சீப் இல்லாம பாத்தேன்னா டென்ஷன் ஆயிடுவேன் சார், சொல்லிப்புட்டேன். @#$#@$#@$!

முச்சா/பாப்கார்ன் இடைவேளையின் போது, முக்கா ட்ரவுஸரு போட்டுக்கிட்டு குறுந்தாடியுடன் ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிஞ்சவராம் அவரு. ராஸ்கோல்! என்ன கொடுமை குறுந்தாடி சார் இது?

~~~~~ ~~~~~~ ~~~~~~~~

வணக்கம் நண்பர்களே! இனி நம்ம திரைப் பார்வையப் பாக்கலாம்.

சரோ'ஜா', தமிழ் பெயரா? இருந்துட்டுப் போவட்டும்.
படம் ஆரம்பிச்சதும், ஒரு வரியும் புரியாத மாதிரி, ஒரு ஆங்கில குத்துப் பாட்டு (cheeky cheeky), அது முடிஞ்சதும் கொஞ்ச நேரத்துல ஒரு ஹிந்திப் பாட்டு (ஓ ஸோனியே?).
கொஞ்சம் இழுவையான சில சேஸிங் சீன்!
இத்த விட்டா, கொறை சொல்ல முடியாத, செம செம செம ஜாலியான படம்.

புள்ளையார்க்கு தேங்கா ஒடச்சா தேங்கா எல்லா பக்கமும் செதருமே, அப்படி செதர விட்டிருக்காங்க, விருவிருப்பையும், காமெடியையும்.
நல்லா, டைமிங் ஜோக்ஸ் நிறைய இடத்துல.

SPB சரண் - SPB மாதிரி குண்டாயிட்டே போறாரு- தல, exercise please. நடிப்புல பின்னிட்டீங்க சார் :)

ப்ரேம்ஜி --உங்களப் பாத்தா கண்டிப்பா சிரிப்பு வருது சார். ஆனா, உங்கண்ணன் மாதிரி இந்டெலிஜெண்ட்டா உங்களை வச்சு காமெடி பண்ணாதான் உண்டு. சரக்கில்லாத ஆளுங்க கிட்ட மாட்னீங்கன்னா, ஊத்திக்குவீங்க சார். சாக்கிரத.

வெங்கட் பிரபு - சார், கையக் குடுங்க சார். நல்ல ஃபார்முலா கலந்து, கலக்கலா படம் எடுக்கறீங்க. ஆனா, அந்த சேஸிங், இருட்டுல, ரொம்ப நேரம் பாக்கர மாதிரி, கொஞ்சம் அமெர்ச்சூரிஷ்ஷா இருந்திச்சு சார். எப்படியும், தப்பிச்சிடுவாங்கன்னு உள் மனசுக்கு புரிஞ்சதால, சரி சரி, அடுத்து என்னான்னு தேடல் வந்துடுச்சு. நடூல அப்பப்ப ப்ரகாஷ்ராஜ காமிச்சிருந்தாலும், இன்னும் வேர எதையாச்சும் மிக்ஸ் பண்ணியிரூக்கலாம் சார்.

யுவன் ஷங்கர் ராஜா - சார், டோட்டல் டேமேஜ் சார் நீங்க. ஒரு மைக்கேல் மதன காமராஜனுக்கு பாட்டு கை கொடுத்த மாதிரி, ஒரு பாட்டும் இந்தப் படத்துக்கு கை கொடுக்கல. அந்த வில்லன் வில்லி டான்ஸ் பீட்டு ஓ.கே. பின்னணி இசை நல்லாருந்தது. ஆனா, அங்கையும், எனக்குத் தெரிஞ்சு, வெங்கட் பிரபுவின், புத்திசாலித்தனமான சாய்ஸ்தான் கைதூக்கலா இருந்துச்சு. குறிப்பா, அந்த வேன் தலை குப்புர விழும்போது, ஒரு சிம்ஃபொனி இசை ஜூப்பர். பெட்டர் வர்க் நெக்ஸ்ட் டைம். குறிப்பா அந்த மொத பாட்டுல வந்து ஓ.யே, ஓ.யேன்னு கத்துனீங்களே, உவ்வே உவ்வே!

காமெரா/எடிட்டிங் - சக்தி சரவணன் சார், ப்ரவீன் ஸ்ரீகாந்த் சார், அமக்களம் சார். ஆனா, சில தொடர் இருட்டு காட்சிகள் எரிச்சல் சார். அந்த ஹைவே பாட்டு அமக்களம் சார். வித்யாசமான கேமரா/எடிட்டிங் சார். கீப்-இட்-அப் சார்.

மத்தவங்க - சீரியல் நடிகரா வரவர் கலக்கல் சார், அந்த சீரியல் காட்சிகள் எல்லாம் குபீர் சிரிப்பு; வில்லன் சம்பத் அட்டகாசமா இருக்காரு, அவங்க வில்லி ஜூப்பர் சார் ;) ப்ரகாஷ்ராஜ் டிபிக்கல் நடிப்பு, ஜெயராமுக்கு மேக்கம் கொஞ்சம் தூக்கலோ? லேசா கெழடு தட்டுது, சுப்ரமணியபுரம் ஹீரோ ஒரு சீன்ல வந்தாலும் குபீர் சிரிப்பு, ஃபாத்திமா பாபு - நோம்மா, ப்ளீஸ், நோமோர் மா.

கதை - பெருசா ஒண்ணும் இல்ல, ஒரு கடத்தல், நாலு ஃப்ரெண்ட்ஸ் டூர் போராங்க, ரெண்டும் மிக்ஸ் ஆயிடுது, being in the wrong place at the wrong time - பல படங்களில் பார்த்த விஷயம்தான், ஆனா, அதை விருவிருன்னு சொல்லியிருக்கர விதமும், காமெடி சிதர விட்டிருப்பதும், படத்தை ஜாலியான பொழுதுபோக்குப் படமா ஆக்கிடுது.

இதன் வெற்றியைப் பார்த்து, இன்னும் ஜாலிப் படங்கள் சில வந்தால், ரொம்ப நல்லாருக்கும்.

ஒரு தடவ, கண்டிப்பா பாருங்க சார்ஸ் & மேடம்ஸ்!

பி.கு: ஒரு தொழிற்சாலை படத்துல வருது. பக்கத்து சீட்டு நொய் நொய் சார், அதை 'பின்னி மில்டீ இது'ன்னு சொல்லிட்டு இருந்தாரு. மீனம்பாக்கத்துல இருக்கர பின்னி மீல்லா அது?அவ்வளவு பெரிய தொழிற்சாலையையா, கர்ம வீரர்கள் ஸ்ட்ரைக் பண்ணி இழுத்து மூடிட்டாங்க? அடப்பாவிகளா? எவ்ளோ உழைப்பு, கனவெல்லாம் சிதறடிச்சிருக்கும் இந்த ஸ்ட்ரைக்? நல்லாருங்க!

வெளம்பரம்: திருட்டுக் குறும்படம்? கேபிள் ஷங்கர் சார், பதில் ப்ளீஸ்!

நன்றி!

Thursday, September 04, 2008

Kaitlyn Maher - VOW! What a wonderful world?

Kaitlyn Maher பத்தி ஏற்கனவே புளகாங்கிதம் அடஞ்சு ஒரு பதிவு போட்டிருந்தேன். பாத்திருப்பீங்க.
என்னா அழகு? என்னமா பாடரா?

நேற்று இவள் பங்கு பெரும் அடுத்த கட்ட போட்டி நடந்தது.

What a wondeful worldனு ஒரு பாட்டு இருக்கு. கேட்டிருக்கீங்களா?
இந்தப் பாட்டு பல பாடகர்கள் பாடியிருக்காங்க. என் பர்ஸனல் ஃபேவரைட் கம்பீரக் குரலோன் Louis Armstrong பாடரது. இதுவரை அவர் பாடி கேக்காதவங்க, மொதல்ல இங்க க்ளிக்கி அந்தப் பாட்டக் கேளுங்க. லயிச்சிடுவீங்க.

நேத்து Kaitlyn இந்தப் பாட்ட பாடினது அமக்களம்.

குறிப்பா பாடி முடிச்சதும், ஜட்ஜஸ் எல்லாம் வரிசையா புகழும்போது, அழகா thank youன்னு பல முறை சொல்வது ரொம்ப அழகு.

Kaitlyn Maher - ஒரு குட்டித் தேவதை தான்.

பாருங்க.



Kaitlyn ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டியதுதான்னு நெனைக்கறேன். :)

ஹாப்பி ஃப்ரைடே.

முந்தைய பதிவு, கொஞ்சம் காரமாயிடுத்து, அதனால, இப்படி போட்டு, வீக்-எண்ட ஆரம்பிக்கலாம்னு முடிவு ;)

ரம்ஜானும் விநாயக சதுர்த்தியும் நெக்குலும் நையாண்டியும்

எல்லா வருஷம் போலவும் இந்த வருஷமும் ரம்ஜானும் விநாயக சதுர்த்தியும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளது.

எல்லா வருஷம் போலவும் இந்துக்களும் நமது இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டோம்.

எல்லா வருஷம் போலவும் இஸ்லாமியர்களும் நமக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டார்கள்.

எல்லா வருஷம் போலவும் 'சில' விஷமிகள் விநாயக சதுர்த்தி கொண்டாடப் படுவதை கிண்டல் அடித்து அகமகிழ்ந்து கொண்டார்கள்.

இல்ல தெரியாமத் தான் கேக்கறேன், வருஷா வருஷம் தொடர்ந்து வரும் இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் ஏன்? இதிலிருந்து உங்களுக்கு என்னா கெடைக்குது?

இஷ்ட தெய்வத்துக்கு பொறந்த நாள் கொண்டாடரதுல உங்களுக்கு எங்க குத்துது?
இஷ்ட தலைவர்களுக்கு நீங்க பொறந்த நாள் கொண்டாடரதுல்லையா?
இஷ்ட நண்பர்கள்/வீட்டவர்களுக்கு பொறந்த நாள் கொண்டாட மாட்டீங்களா?
வாழ்க்கைல சாப்பிடரத தவர மத்ததெல்லாம் வேஸ்ட்டுன்னு நெனைக்கறவங்களா நீங்க?

இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் வெறும் புள்ளையாரை மட்டும் குறிவைக்கும் biased நிலை ஏன்?

ரம்ஜான் முடிந்ததும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில், தயங்காமல் பிரியாணி தின்னச் செல்லும் நீங்கள், விநாயக சதுர்த்திக்கு சுண்டல் தின்பதை ஏன் கிண்டல் பண்றீங்க?

இந்த சொறிதல் எதுக்காக?

என்னாத்த சாதிக்கறீங்க இதனால?

எல்லாரின் உணர்வுக்கும் மரியாதை கொடுக்கப் பழகுங்கள். மனிதம் தழைக்க உதவுங்கள்!

மதத்தின் பெயரால் ஏற்றத்தாழ்வு பல இடங்களில் உண்டுன்னு எனக்கும் தெரியும்.
அதர்க்கு தீர்வு, இந்த குத்தல் நையாண்டிகள் கிடையாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
Bridge the Gap, dont blast it - Write Responsibly!

ஸ்ஸ்ஸ். ஹாப்பி வெள்ளி. :)

கருத்த சொல்லுங்க்க, சர்வெலயும் ஒரு வாக்கு வாக்குங்க!



Wednesday, September 03, 2008

DOWNFALL ~ திரைப் பார்வை

எங்க ஊரு லைப்ரரி பத்தியும், அதில் கிடைக்கும் ஓசிப் படங்கள் பத்தியும் ஏற்கனவே பலமுறை வாய்கிழிய சொல்லிட்டதால, இம்முறை அடக்கி வாசிக்கிறேன்.
சுருக்கச் சொல்லணும்னா -- சிம்ப்ளி சூப்பர்ப். அமக்களமான படங்கள அடுக்கி வச்சிருக்காங்க, அத்தனையும் இலவசம்.

போன வாரம் கண்ணுல பட்டது தல ஹிட்லரு.
படம் பேரு DownFall. அட்டையில ஹிட்லரு கொஞ்சம் சோகமா கீழப் பாத்துக்கிட்டு இருக்காரு.
டிவிடி பின் பக்கம் படிச்சு பாத்தா, ஹிட்லரின் கடைசி சில நாட்களைப் பற்றிய அலசல்தான் படம்னு போட்டிருந்தது.

எமக்கு வரலாற்று அறிவு கொஞ்சம் கெம்மிதான்.
மேலோட்டமா எல்லா விஷயங்களும் தெரியும்னாலும், அதுனுள்ள ஞாய அநியாயங்கள் டீப்பா தெரியாது.
வயசிருக்கு பொறுமையாப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு விட்டுட்டேன்.
அப்பப்ப, இந்த மாதிரி படங்களைப் பாத்துதான் வரலாறு கத்துக்கரது. ( ராஜீவ ஏன் சாகடிச்சாங்கன்னு ஒரு படத்தை பாத்து கேள்வி கேட்டதுக்கு சுந்தரவடிவேல் வந்து கொமட்லயே குத்திட்டுப் போனது தனி கதை. இருந்தாலும், வரலாற்று அறிவ வளத்துக்கரதுக்காக, டிவிடியை நோக்கிச் செல்லும் பழக்கம் மாறவில்லை )

ஹிட்லர் ஒரு கொலைவெரி பிடிச்ச மிருகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. தனிப்பட்ட மத விருப்பு வெறுப்புக்களுக்காக பல கோடி மக்களை கொன்று குவித்த சண்டாளன்.

ஹிட்லரின் வெறி ஆட்டம் தொடர்ந்து, போலந்தை கைப்பற்றிய போது, அன்றைய USSRம், அமெரிக்காவும், ப்ரிட்டனும் இணைந்து ஹிட்லருக்கு எதிராக கைகோர்த்தனர்.
உலகப் போராக மூண்ட இந்த எதிர்ப்பு 1939லிருந்து 45 வரை தொடர்ந்தது.

ஜெர்மனி, சின்னாபின்னமாக தாக்கப்பட்டது.
தோல்வி உறுதி ஆனதும், ஹிட்லரின் கடைசி சில நாட்கள், ரொம்பவே டென்ஷன் மிகுந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

ஹிட்லருடன் கூடயிருந்த அவரது செக்ரட்டரி இப்பதான் 2002ல் மறைந்தார். அவர் நேரில் பார்த்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தை எடுத்திருந்தாங்க.

தோல்வியின் கடைசி நாள் வரை, மனுஷன் விடாப்பிடியா இருந்திருக்காரு.

படத்தில், நெஞ்சை அடைக்கும் பல காட்சிகள்.

+ சரெண்டர் அடையவே கூடாது, தோல்வி நிச்சயமானால், தற்கொலை செய்து கொள்வேன், நீங்களும் அப்படியே செய்யணும்னு தன் சகாக்களுக்குச் சொல்லிடறாரு.

+ ஒரு சில பேரு கட்சி மாறுவாங்க, அவங்களையெல்லாம், அப்பப்ப டுமீல் பண்ணிடறாங்க.

+ முடிவு நெருங்கப் போவது தெரிஞ்சதும், தன் 15 வருட நண்பியை திருமணம் செஞ்சுக்கராரு.

+ ஹிட்லரின் மந்திரியின் 6 குட்டிப் பசங்க போர் முடியரதுக்கு முன்னாடி விஷம் வைத்து அவர்கள் தாயாலேயே கொல்லப் படுகிறார்கள். முதலில் தூக்க மாத்திரையை கொடுத்து தூங்க வைக்கறாங்க. அப்பரம், தூங்கும்போது, சயனைடு குப்பியை அவங்க ஒவ்வொருத்தர் வாய்லையும் வச்சு வாயை சடக்னு மூடராங்க. குழந்தைகள் வலியில்லாமல் சாகராங்க. ஸ்ஸ். பக் பக் காட்சிகள் இவை.

+ ஹிட்லரின் நாய்க்கும், விஷம் வெச்சு கொல்றாங்க

+ இவரின் கூட இருக்கும் சில மந்திரிகள், தாங்களே விருப்பப்பட்டு, துப்பாக்கியால் தங்களை
சுடச் சொல்லி இறக்கிறார்கள். இறந்தவுடன், பெட்ரோல் ஊற்றி உருத்தெரியாமல் எரிக்கவும் சொல்கிறார்கள்

+ ஹிட்லர் கடைசி ரெண்டு மூணு நாள்ள, சில பேரு சரெண்டர் அடஞ்சுடலாம்னு சொல்றதை சுத்தமா ஏத்துக்க மாட்றாரு. ஜெர்மனியில் மிஞ்சி இருக்கும், ரோடு, ப்ரிட்ஜு, எண்ணைக் கிணறு, எல்லாத்தையும் தரமட்டம் ஆக்கணும்னு சொல்றாரு. ரஷ்யர்கள் வெற்றி பெற்றால் அவங்க கைக்கு ஒண்ணும் கிடைக்கக் கூடாதுன்னு எண்றாரு. ஆனா, கூட இருக்கும் சகாக்கள் அப்படிச் செய்யரது தப்பு, அப்படிப் பண்ணா போரில் பிழைக்கும் நம்ம ஆளுங்களுக்கே ஒண்ணும் இல்லாம போயிடும்னு ஹிட்லர் சொல்றத கேக்காம விட்டுடராங்க.

+ ஹிட்லர் ரஷ்யர்கள் நெருங்கிய தருணத்தில், தான் தன்னை சுட்டுக் கொண்டு இறக்கப் போவதாக சொல்றாரு. தன்னுடன் தன் புது மனைவியும் தற்கொலை செஞ்சுப்பாங்கன்னு சொல்றாரு. மருத்துவர் ஒருத்தர் கிட்ட, எப்படி சாகரதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கறாரு. மருத்துவரும், விஷ மாத்திரை ஒண்ணக் கொடுத்து, மொதல்ல இத வாய்ல போட்டுக்கங்க, அப்பரம் துப்பாக்கியால் வாயில் சுட்டுக்கங்க, மரணம் நிச்சயம்னு சொல்றாரு. தான் சுட்டுக் கொண்டவுடன், தன்னை உறுத்தெரியாமல் எரித்து விடணும்னும் ஆணையிடறாரு. ரஷ்யர்களின் காட்சியகத்தில் வைக்க தன் உடமைகள் எதுவும் மாட்டக் கூடாதுன்னு தன்னுடன் இருக்கரவங்களுக்கு கட்டளையிடறாரு.

+ ரஷ்யர்கள் வருகதற்குள், ஹிட்லரும் அவங்க மனைவியும் சுட்டுக்கராங்க, அவங்கள சகாக்கள் எரிச்சிடறாங்க. அதைத் தொடர்ந்து, பல சகாக்களும், அதே முடிவை எடுத்துக்கராங்க

+ சாகரதுக்கு முன்னாடி எதுக்கும் யார்கிட்டையும் மன்னிப்பு கேக்கல ஹிட்லரு.

+ போர் முடிந்து சமாதானம் அறிவிக்கப்பட்ட பின்னும், பலர் தற்கொலை செஞ்சுக்கராங்க

+ ஹிட்லரின் செக்ரட்டரி தப்பிச்சிடறாங்க

படம் ரொம்ப கனமா இருந்தது. குறிப்பா கடைசி 20 நிமிடங்கள். ஹிட்லரா நடிச்சவரு வாழ்ந்திருக்காரு. அபார நடிப்பு. infact, யாரையுமே நடிப்புல குறை சொல்ல முடியாது.

படம் முடிஞ்சதும், சில statistics போட்டுக் காமிச்சாங்க.

அதாகப்பட்டது, ஹிட்லரின் கையால் மாண்டவர்கள் 6 மில்லியன் மக்கள்.

உலகப் போர் இரண்டின் போது மாண்டவர்கள் ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன்.

உயிர் பிழைத்த பல ஹிட்லரின் சகாக்கள் ரஷ்ய ஜெயிலில் இறந்துவிட்டிருக்கிறார்கள்.

சிலர் விடுதலை அடைந்து நிறைய வருஷம் உயிர் வாழ்ந்திருக்காங்க.

ஹிட்லரின் செக்ரட்டரி 2002ல் போய் சேந்திருக்காங்க.

அவங்க சொல்றது, ஹிட்லர் ஒரு gentleman, அவரின் 'வில்லன்' பக்கம் அவங்க பாத்ததே இல்லையாம். ஹிட்லர், இவங்களுக்குத் தெரியாமதான் 6 million மக்களை ஸ்வாகா பண்ணியிருக்காராம்.

படத்தைப் பாத்ததும் ஒரு விஷயம் ரொம்பவே புரிஞ்சுது!

பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்டுக்குவான்.
அன்றிலிருந்து இன்றுவரை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை இது.

ஆனா, இது புரியாம பலரும் ஆடறாங்க.

ஹிட்லரே கூட கொஞ்சம் முன்னோக்கிப் பாத்து, தன் கடைசி காலம் இவ்ளோ டென்ஷன் நிறைஞ்சதா இருக்கும், துப்பாக்கியால் வாயில் சுட்டுதான் சாகப்போறோம்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் ஒழுங்கா இருந்திருப்பாரோ என்னமோ.

ஹிட்லர்ஸ், beware!

ஓ, சொல்ல மறந்துட்டனே, இது ஜெர்மானிய மொழிப்படம், ஆங்கில subtitles இருந்தது.

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

கண்டிப்பா, ஒரு முறை பாக்கலாம். பாருங்க!

உலகப் போர் பற்றிய வேறு விஷயங்கள் இருந்தா சொல்லுங்க.
தெரிஞ்சுக்கலாம்.
வரலாறு மிக்க அவசியம் மக்களே ;)

Interesting reads:

Hitlers last will - செக்ரட்டரிக்கு சாகரதுக்கு முன்னாடி வாசிச்சதாம்.

World War II in a nutshell - விக்கிப் பக்கம்

Adolf hitler, the Führer - விக்கிப் பக்கம்

Tuesday, September 02, 2008

My dear friend Ganesh

சமீபகாலமா டச் விட்டுப் போனாலும், சின்ன வயசுல ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு.

அதுவும், படிப்பு முடியர காலத்துல, ரொம்பவே க்ளோஸ்.

அப்பரம்,வேலை, ஊரு விட்டு ஊரு பாயரது எல்லாம் ஆனப்பரம், கணேஷைப் பாக்கரது ரொம்பவே கொறஞ்சு போச்சு.

இப்பெல்லாம், கோயிலுக்குப் போறதே, அங்க ஓ.சியில கிடைக்கர புளியோதரை, தயிர் சாதத்துக்குத்தாங்கர அளவுக்கு, பயபக்தி கரைய ஆரம்பிச்சிடுச்சு.

ஆனா, எப்ப கோயிலுக்குப் போனாலும், மொதல்ல கணேஷைப் பாத்து ஒரு சல்யூட் போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பாக்கரது. அந்த விபூதி வாசனை ஒரு வசிய மருந்துதான்.

படிக்கர காலத்துல, எங்க வீட்டுக்கிட்ட ஒரு பெரிய மரத்துக்குக் கீழ ஒரு குட்டி கணேஷ் இருப்பாரு. நின்னு மத்தவங்கள மாதிரி கன்னத்துல போட்டுக்கிட்டு, தலைல குட்டிக்கிட்டு, தோப்புகரணம் போட்டுக்கிட்டு, நின்ன எடத்துலயே செருப்ப கழட்டி வச்சிக்கிட்டு சர்னு சுத்தரதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கூச்சமா இருந்ததா கூட இருக்கலாம்.

கணேஷை, பாத்துட்டும் பாக்காம போரதுதான் என் பழக்கம்.

அந்த மரத்தடி கணேஷ், வருஷம் ஆக ஆக, புது சொக்கா, புது உண்டியலு, புது பூசாரி, புது சுத்துச் சுவரு, புது ஆறடி சுவரு, புது கோயிலு, புது கோபுரம், புது ஸ்பீக்கரு, புது மேனேஜ்மண்ட்டுன்னு வளந்த வளர்ச்சி அபாரம்.

ஆனா, குட்டி கணேஷ் மட்டும், மாத்தாம அப்படியே வச்சிருக்கிரது ஒரு ஆறுதல்.

இப்ப ஊருக்குப் போனாலும், போய் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு வந்துடரது.

வேலை கெடைச்சதும், மொத மாச சம்பளம் கொண்டு வந்து கொடுக்கரதா கணேஷ் கிட்ட சொன்ன மாதிரி ஞாபகம், இன்னும் செய்யல.
உண்டியல்ல போட்டா, வீணாக்கிடுவாங்களோன்னு ஒரு பயம்.
வருஷம் ஓடிப்போச்சு.

ஹ்ம்!

கணேஷ், ஐ லைக் யூ. ஐ மிஸ் யூ.
ப்ளீஸ் டேக் கேர் அஸ் ஆல்!

எல்லாருக்கும், கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்.

கீழ இருக்கரது, சுடச் சுட, இப்ப க்ளிக்கினது ;)

வால்-பேப்பரா போட்டுக்கிட்டா, சகல நன்மைகளும் உண்டாகும்னு, கணேஷ் சொல்றாரு. போட்டுக்கங்க! :)




என் flickrலும் பாக்கலாம்.

Google Chrome - ஏமாற்றவில்லை

ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு இப்ப மனுஷனையே கடிக்க வந்த மாதிரி கூகிள் இப்போ புது browserம் பண்ணிட்டாங்க.

எல்லாத்தையும் ஒரு நேர்த்தியா பண்ற பசங்க, இவர்களின் search engine, adsenseக்கு அப்பரம், எதையும் பெருசா சொல்லிக்கர அளவுக்கு பண்ணலை என்பது என் கணிப்பு.
Google Finance ஆகட்டும், ஜி.மெயில் ஆகட்டும், ஜி.டாக் ஆகட்டும் ஆஹா ஓஹோன்னு பெருசா ஒண்ணும் கண்ணுல படல.
google docsம், picasaவும் கூட அந்த வகைதான்.

இப்ப, Browser ஒண்ணு விட்டிருக்காங்க.

Google Chromeனு பேரு.
நெருப்பு நரி (firefox) மாதிரி, இதுவும் open sourceஆக கிடைக்குமாம்.

இப்பதான் தரவிரக்கம் பண்ணி கொஞ்சம் வெளையாடிப் பாத்தேன். சில விஷயங்கள் பிடிச்சிருந்தது.

நல்ல விஷயங்கள்:
+ ரொம்ப சிம்ப்பிள் interface. menu கூட கிடையாது. மேலே வெறும் உரல் அடிக்க ஒரு இடம் அதுக்குப் பக்கத்துல, குட்டி பட்டன்ஸ் அம்புடுதேன். ப்ரவுஸரை விட, அதை உபயோகித்து பாக்கர பக்கங்கள்தான் ப்ரதானம் என்பதால், ப்ரவுஸரில், மிகத் தேவையானதை மட்டுமே வைத்திருக்கிறார்களாம். நல்லது.
+ உரல் அடிக்கும் இடத்திலேயே, தேடும் வசதியும் உள்ளது. அடிக்க அடிக்க, நாம் அடிக்க நினைக்கும் முழு வார்த்தையை காட்டிக்கிட்டே வராங்க. நல்லது.
+ வேகம் ஓ.கே.
+ டமில் எல்லாம் நல்லாவே தெரியுது
+ பெருசா ஒரு குற்றமும் முதல் ப்ரயோகத்தில் கண்ணுல படல
+ படங்களின் மேல் right-clickஇனால் வரும் 'copy image url' நல்ல வசதி. IEல இது இல்ல. நெருப்பு நரீல இருக்கு.

கெட்ட விஷங்கள்:
- most visited பக்கங்களை ப்ரவுஸர் முதல் பக்கத்தில் திறந்ததும் படம் போட்டு குட்டி குட்டி பொட்டீல காட்டராங்க. இது கொஞ்சம் வில்லங்கமான விஷயம். நல்லால்ல சொல்லிப்புட்ட்டேன். :)
- அடிக்கடி உபயோகிக்கும் சில விஷயங்கள் எல்லாம் எப்படி பண்றதுன்னு கண்டுபிடிக்கரதுக்குள்ள தாவு தீந்திடுச்சு. save, print இந்த மாதிரி.
- தினகரன் பக்கம் போனா, ஜாங்கிரியா தெரியுது. font எல்லாம் எப்படி எடுத்துப் போடணும்னு பாக்கணும்
- ஈ.கலப்பை ஏதோ ப்ரச்சனை பண்ணுது. மேலே, 'ஏமாற்றவில்லை'ன்னு அடிக்கரதுக்குள்ள தாவு தீந்ததால, IEக்கு மாறிதான் இந்தப் பதிவே போட்டேன்
- microsoftஐ போட்டு பாடாய் படுத்தினார்கள். அவர்களின் IEல் எல்லா தேடு இஞ்சின்களையும் சேர்க்க வேணும்னு. chromeல எப்படி மத்த தேடு இஞ்சின்களை இணைக்கரதுன்னு தெரியல. நேரா கூகிளுக்குப் போவுது :(

ஸோ? தீர்ப்பு?

wait for DVD.. சீ. I mean, wait for a few more months. Nothing big to rave about in Google Chrome. so, stay with FireFox or IE. :)


Interesting Reads:

1) Five reasons why Chrome will crash and burn

2) Five reasons Chrome will take over the world


Monday, September 01, 2008

ஈரமான ரோஜா...

பொக்கேயாக வந்த ரோஜாவை
தக்கையாக கிடந்த டப்பாவில்
சொருகி நிற்க வைத்து
முக்காலி எடுத்து விரித்து
லென்ஸை திருப்பிப் போட்டு
தண்ணீர் பீய்ச்சி அடிச்சு
ஈரமாக்கிய பூவை க்ளிக்கி
ப்ளாகரில் படத்தை ஏற்றி
வைத்தேன் உங்கள் ஸைட்டுக்கு
நல்லா பாத்து ஆராஞ்சு
டக்கரா? சுமாரா? கலீஜா?ன்னு
மறைக்காம சொல்லுங்க கருத்துக்களை!

-சர்வேசன்



;)