recent posts...

Sunday, September 28, 2008

விடியலை அறிவிக்கிறான் சிலம்பரசன்

நம்ம இயலாமையோ என்னமோ தெரீல, இப்பெல்லாம் கொஞ்சம் சோகமான செய்தியெல்லாம் படிச்சா கண்ணுல தண்ணிவந்துடுது.
குங்குமத்தில், 44ஆம் பக்கத்தில், சென்னையின் அழகான ராத்திரி புகைப்படத்துடன் இப்படி ஆரம்பித்திருந்தது ஓர் சேதி.

"சென்னை குமாரராஜா முத்தையா பள்ளியில் 7-வது படிக்கிறான் சிலம்பரசன். அப்பா ஏழுமலை வாட்ச்மேன். அம்மா வீட்டு வேலை செய்கிறார். 3 சகோதரிகள். தூக்கம் விலகாத கண்களோடு , தன் உயரமே கொண்ட சைக்கிளில் செல்லும் சிலம்பரசன் தான் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விடியலை அறிவிக்கிறான்"

என்னடா சங்கதின்னு மேல படிச்சா, சிலம்பரசன், செய்தித்தாள் விநியோகம் செய்யும் சிறுவன்.
8 மணிக்கு எழுந்ததும், தந்தி வந்தாச்சா, ஹிந்து வந்தாச்சான்னு அலப்பரை பண்ணும் நமக்கு, அந்த பேப்பரை கொண்டு வந்து போடுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதர்க்கு இதுவரை நேரம் இருந்ததில்லை.

ஒவ்வொரு வீட்டுக்கும் செய்தித்தாளை, ஏழு மணிக்கு முன்னாடி போடணும்னா, சிலம்பரசன் மாதிரி ஆட்கள், மூணு மணிக்கு தினம் எழுந்து, பேப்பர்கள் வந்திறங்கும் டிஸ்ட்ரிப்யூஷன் ஏரியாவுக்கு காலங்காத்தால வந்திடணுமாம். அப்பரம், அங்கேருந்து, பேப்பர் கட்டை எடுத்துக்கிட்டு, வீதி வீதியா, வீடு வீடா போய் விநியோகம் பண்ணனும்.

ஏழாவது படிக்கும் சிலம்பரசன் தான் சென்னையின் இளவயது, 'லைன் பாய்'ஆம். இந்தத் தொழிலில், மூன்று வருட அனுபவமாம் இவனுக்கு. (அப்ப, இன்னும் சின்ன வயசுலயே வேலைக்கு வந்திருக்கான்). ஹ்ம்!

ஒரு மாசத்துக்கு 400ரூவா கிடைக்குமாம்.

முன்பெல்லாம், வீட்டுக்கு வெளியில் இருந்தபடி, பேப்பரை விர்ர்னு உள்ள விசிறி அடிப்பாங்களாம். இதை, மரியாதை குறைச்சலா சில கஸ்ட்டமர்ஸ் நெனைக்கறாங்களாம். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், இறங்கி, கிட்ட போய்தான் விநியோகிக்கணுமாம். அதுவில்லாமல், அடுக்குமாடி வீடுகளில், வாட்ச்மேன் கெடுபிடி ஜாஸ்தியாம். லிஃப்ட் உபயோகிக்க விடுவதில்லையாம். அதனால படிக்கெட்டு ஏறி ஒவ்வொரு வீடா பேப்பர் போடணுமாம். இந்த கெடுபிடிகளால், ஏழுமணிவரை பேப்பர் போட்டு, பள்ளிக்குச் செல்வது காலதாமதமாகுதாம்.

காலை மூணு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டியதால், ராத்திரியும் சரியா படிக்க முடிவதில்லையாம்.

"அக்காவெல்லாம் பள்ளிக்கொடம் போவையிலதான் நான் வீட்டுக்கே போவேன். அவசரமா குளிச்சிட்டு, இதே சைக்கிள்லதான் பள்ளிக்கொடம். நெறைய கடன் இருக்கறதால அப்பா, அம்மா, கூலியால சமாளிக்க முடியலண்ணா... அதுதான் பேப்பர் போட வந்துட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கிறதாலே நைட்டு ரொம்ப நேரம் படிக்க முடியாதுண்ணா. அதனால மார்க் கம்மியாத்தான் வரும். ஆனா பாரு, படிச்சு டாக்டராவேன்..."

இந்த மாதிரி நெறைய சிலம்பரசர்கள் சென்னைத் தெருவில் சுற்றித் திரிகிறார்கள்.

ப்ளடி 400ரூவாய்க்காக, அவன் இளமையைத் தொலைத்து, இப்படி அல்லல் படரான்னு நெனச்சா, ரொம்பவே சோகமாயிடுது.

கண்டிப்பா, இங்க ஒரு ஆயிரம் பேர் இருப்போம். கண்டிப்பா, மாசத்துக்கு 400ரூவாய் நமக்கு, ஒரு மேட்டரே இல்லாத தொகைதான். நாம மனசு வச்சா, 1000 சிலம்பரசர்கள், வாழ்க்கையை மீட்டுத் தரலாம். இதையெல்லாம், channelize செஞ்சு ஒழுங்குமுறையா செய்ய ஒரு நிறுவனமோ, தனியார் குழுவோ அமையணும். அட்லீஸ்ட் ஒரு நல்ல மனசுள்ள social workerஆவது அமையணும்.

We have to do something, friends!
ஏதாச்சும் செய்யணும் பாஸு!மூலம் குங்குமத்தில்: இங்கே

27 comments:

கோவி.கண்ணன் said...

//ப்ளடி 400ரூவாய்க்காக, அவன் இளமையைத் தொலைத்து, இப்படி அல்லல் படரான்னு நெனச்சா, ரொம்பவே சோகமாயிடுது.
//

அப்படியும் அவன் படித்து தேறினால், அவனுக்கு மார்க்கு அடிப்படையில் இடம் கிடைப்பது தான் 'ஞாயம்' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

Everything that I like said...

kandippaga udhava naanum thayar.. ivangala kandupidikradhum, namma panatha kondu poi sekradhum romba kashtam..
if all the like minded people join here.. we can do something for sure..

(sorry.. i dont know how to type in tamil)

Arun said...

//அப்படியும் அவன் படித்து தேறினால், அவனுக்கு மார்க்கு அடிப்படையில் இடம் கிடைப்பது தான் 'ஞாயம்' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.//

அக்கிரமம்க! என்னாங்க மார்க்கு பெரிய மார்க்கு! "மார்க்கு அடிப்படையில் இடம் கிடைப்பது தான் ஞாயம்" என்பது ரொம்பத் தப்புங்க! என்ன கொடுமைங்க இது! சாதி அடிப்படையில் இடம் கொடுப்பது தானேங்க ஞாயம் (அதைத் தானே சொல்ல வர்றீங்க!)

ஒருவேளை இந்தப் பையன் சாதி அடிப்படையில் சலுகை கிடைக்காத ஒரு சாதியில் பிறந்திருந்தான்னு வைங்க. அவன் ஒருவேளை நல்லா படிச்சு மார்க்கு வாங்கி, மார்க்கு அடிப்படையில் இடம் வாங்கிட்டா, அப்புறம் ரொம்பப் பிரச்சனையாப் போவும்! அதெல்லாம் கூடாதுங்க! சாதி அடிப்படையில் தாங்க இருக்கணும் எதுவுமே. அப்பத்தான் சாதி ஒழியும்!

("பொருளாதார அடிப்படையில் கொடுக்கலாமே" அப்புடீன்னு புத்திசாலித்தனமா கேக்குறதா நெனச்சிக்கிட்டு கேக்குறவங்கள ஒரு பொருட்டாவே நெனைக்காதீங்க. அவங்கெல்லாம் ஆரிய வெறியர்கள் அல்லது பார்ப்பன அடிவருடிகள்.)

ஆனா ஒரு விஷயம் ஒத்துக்கிட்டுத் தாங்க ஆகணும், நீங்க உண்மையிலேயே என்னைய வியக்க வைக்கிறீங்க! அது எப்படிங்க, எந்தத் தலைப்புல, யார், எத, எந்த நோக்கத்துல எழுதுனாலும், அதுல அழகாக் கொண்டாந்து சாதி அரசியலைக் கலக்குறீங்க? எல்லாம் ஒரு தெறம தான், இல்லீங்களா! நடத்துங்க நடத்துங்க!

கோவி.கண்ணன் said...

//("பொருளாதார அடிப்படையில் கொடுக்கலாமே" அப்புடீன்னு புத்திசாலித்தனமா கேக்குறதா நெனச்சிக்கிட்டு கேக்குறவங்கள ஒரு பொருட்டாவே நெனைக்காதீங்க. அவங்கெல்லாம் ஆரிய வெறியர்கள் அல்லது பார்ப்பன அடிவருடிகள்.)
//

நீங்கச் சொல்வதும் சரிதான், அப்பளம் போட்டு வடகம் போட்டு படிக்கவைத்து 92.1 மார்க் எடுக்கும் ஒரு அக்ரகாரத்து மாணவனை, ஒரு பேங்க் மேனேஜராக இருக்கும் ஸ்ரீனிவாச சாஸ்திரியின் 93 மார்க் எடுக்கும் மகன் கட் ஆப் மார்க்கில் வீழ்த்திவிடுகிறானே, ஸ்ரீனிவாச சாஸ்திரியின் மகன் ஏன் பெய்டு சீட்டுக்குச் சென்று அப்பளக்காரப் பையனுக்கு வழிவிடக் கூடாது ?

யோசிச்சுப் பாருங்கண்ணா, ஓப்பன் கோட்டாவிற்கும் ஏன் கிரிமி லேயர் வைக்கக் கூடாது ? வைப்பது ஞாயமா ? அனியாயமா ? சொல்லுங்கோ. அதாவது வசதி உள்ளவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் பெய்டு சீட்டுக்குத்தான் போகனும் என்கிற கட்டுப்பாடை அனைத்துப் பிரிவுகளுக்குமே ( SC/ST, MBC,BC and OC) வைக்கக் கூடாது.

கோவி.கண்ணன் said...

//ஆனா ஒரு விஷயம் ஒத்துக்கிட்டுத் தாங்க ஆகணும், நீங்க உண்மையிலேயே என்னைய வியக்க வைக்கிறீங்க! அது எப்படிங்க, எந்தத் தலைப்புல, யார், எத, எந்த நோக்கத்துல எழுதுனாலும், அதுல அழகாக் கொண்டாந்து சாதி அரசியலைக் கலக்குறீங்க? எல்லாம் ஒரு தெறம தான், இல்லீங்களா! நடத்துங்க நடத்துங்க!//

கண்ணீர் வடித்து 'உச்' கொட்ட எனக்கு வரவில்லையே, கற்றுக் கொள்கிறேன்.

:)

Raju said...

Once upon a time, i was a paper boy. Now i am a mechanical engineer and residing at UAE. Hope, these boys will get good jobs into their future.

SurveySan said...

Kovi,

///அப்படியும் அவன் படித்து தேறினால், அவனுக்கு மார்க்கு அடிப்படையில் இடம் கிடைப்பது தான் 'ஞாயம்' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.///

Totally absurd comment :)

SurveySan said...

கோவி,

//அப்படியும் அவன் படித்து தேறினால், அவனுக்கு மார்க்கு அடிப்படையில் இடம் கிடைப்பது தான் 'ஞாயம்' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.//

சில்ம்பரசனுக்கு அதுக்குள்ள சாதி சர்டிபிகேட் கொடுத்திட்டீங்களே கோவி. என்ன கொடூமைங்க இது?

டாக்டராகணும்னா, படிச்சு, மார்க் வாங்கித்தான் ஆகணும்னு, அவனுக்கே தெரியுது. இது ஏன் உங்களுக்கு புரியல? :)

கண்டிப்பா, பொருளாதார அடிப்படையில், சில்ம்பரசனுக்கு எல்லா சீட்டும் ரிசர்வ் செய்து கொடுத்து, ஃப்ரீயா அரசாங்கம் படிக்க வைக்கணும். அதைத் தவிர, அவன் சம்பாத்யத்தை நம்பி இருக்கும் அவன் குடும்பத்துக்கும், ஒரு சின்ன மானியம் கொடுக்கணும்.

SurveySan said...

everything that i like,

/////if all the like minded people join here.. we can do something for sure.. /////

ஏதாவது கண்டிப்பா செய்யணும். இதெல்லாம் யாராவது, கவனிச்சு தொண்டுகள் செஞ்சுட்டுதான் இருப்பாங்க. அந்த மாதிரி genuine ஆளுங்கள கண்டுபிடிச்சு, அவங்களுக்கு உதவினாலே போதுமானது.

SurveySan said...

Arun,

//ஆனா ஒரு விஷயம் ஒத்துக்கிட்டுத் தாங்க ஆகணும், நீங்க உண்மையிலேயே என்னைய வியக்க வைக்கிறீங்க! அது எப்படிங்க, எந்தத் தலைப்புல, யார், எத, எந்த நோக்கத்துல எழுதுனாலும், அதுல அழகாக் கொண்டாந்து சாதி அரசியலைக் கலக்குறீங்க? ////

:) இதே கேள்வி எனக்கும், நம்ம பதிவர்கள் பலபேரைப் பத்தி இருக்கு.
தனிப்பதிவே போட்டு கேள்வி கேக்கலாம்னு இருக்கேன்.

SurveySan said...

கோவி,

/////வசதி உள்ளவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் பெய்டு சீட்டுக்குத்தான் போகனும் என்கிற கட்டுப்பாடை அனைத்துப் பிரிவுகளுக்குமே ( SC/ST, MBC,BC and OC) வைக்கக் கூடாது.//////

என்ன சொல்ல வரேள்?

SurveySan said...

raju,

/////Once upon a time, i was a paper boy. Now i am a mechanical engineer and residing at UAE. Hope, these boys will get good jobs into their future./////

pls post and let us all know how you made it.
if you are not a blogger, pls email me or comment here and i will post it for you.

congrats!

SurveySan said...

கோவி,

///கண்ணீர் வடித்து 'உச்' கொட்ட எனக்கு வரவில்லையே, கற்றுக் கொள்கிறேன்.///


இயலாமையால், கண்ணீர் கொட்டி உச் விடரதுல தப்பில்லை.
ஆனா,, இந்த விஷயத்தையும் கூலிங்கிளாஸ் போட்டு பாக்கரது செம வில்லத்தனம் :(

ராமலக்ஷ்மி said...

நமது வரிப்பணத்தில் நடக்கிறது அரசு. நீங்கள் சொல்லியிருப்பது யாவும் சரியே. விடியலை அறிவிக்கும் இவர்களுக்கு விடியலை எப்போது அறிவிக்கும் அரசு?

SurveySan said...

ராமலக்ஷ்மி,

//நமது வரிப்பணத்தில் நடக்கிறது //


நம்ம வரிப்பணம் தான், டி.வி, இலவச நெலமா மாறிடுச்சே. அவங்களக்கு, சிலம்பரசனெல்லாம் கண்ணுக்குத் தெரியமாட்டான்.

சிலம்பரசன், ஓட்டு போடும் வயசாச்சுன்னா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ, ஐநூறு ரூவா வேணா கொடுப்பாங்க.

இதெல்லாம், தன்னார்வமுள்ளவங்க யாராவது எறங்கி செஞ்சாதான் உண்டு.

ராமலக்ஷ்மி said...

//தன்னார்வமுள்ளவங்க யாராவது எறங்கி செஞ்சாதான் உண்டு.//

POINT!

அறிவன்#11802717200764379909 said...

சர்வேஸ்..
இதற்கெல்லாம் ஆள் தேடாதீங்க..
உங்களால் முடிஞ்சத பண்ணுங்க...

என் நண்பர்கள் அமைப்பு ஒண்ணு செய்வத இங்க பாருங்க..

இவங்க கல்லூரி அளவில் செய்றாங்க..
நான் தனிப்பட்ட முறையில் பள்ளி அளவில் நல்ல மதிப்பெண் எடுத்தும் படிக்க பொருளாதார வசதி அற்று இருக்கும் சில மாணவர்களுக்கு என்னுடைய ட்ரஸ்ட் மூலம் உதவி செய்துகிட்டு இருக்கேன்..

So..Dont' expect somebody to come & coordinate,do yourself..when there are lot of able individuals doing this,there will be visible impact in soceity.

SurveySan said...

அறிவன், நீங்க சொல்றது மிக்கச் சரி.

அடுத்தவங்களுக்காக காத்திருக்காம, நாமளே நமக்கு முடிஞ்சத அப்பப்ப செய்யணும்.

ஆனா, குழுவா செயல்பட்டாலே அதன் பலம் தனி.

உங்க நண்பரின் பக்கம் பார்த்தேன். அருமையான முயற்சி.

புகைப்படங்கள் , வெள்ளைக்காரர்களாய் இல்லாம, நம்மூர் படங்கள் போட்டால்,மேலும் சிறப்பாய் இருக்கும்.

கடைசி பக்கம் said...

ஹலோ சர்வேசன்,

google adsense எப்படி sponser செய்வது?

நான் அப்ளை பண்ணினால்

Issues:

- Unsupported language

அப்படின்னு சொல்றாங்க

SurveySan said...

கடைசி பக்கம்,

கூகிள் ஆட்ஸென்ஸ் தமிழ் பக்கங்களுக்கு இன்னும் வேலை செய்யரதில்லை.
நீங்க ஒரு குட்டி ஆங்கில பக்கம் தொடங்கி, அதன் உரலை காட்டி, கணக்கு தொடங்கலாம்.
அப்பரம், அந்த கணக்கின் ஸ்க்ரிப்டை உங்க தமிழ் பதிவுல போடலாம்.

ஆனா, என்ன பண்ணாலும், விளம்பரங்கள், தமிழ் பக்கங்களுக்கு இன்னும் கூகிளால் வழங்கப்படுவதில்லை.

:)

ஜோசப் பால்ராஜ் said...

இது ஒரு ஏழை மாணவன் காசுக்காக படும் சிரமங்களைக் குறித்தப் பதிவு.இதில் எதற்கு இட ஒதுக்கீட்டை பற்றிப் பேச வேண்டும்? அவனுக்கு உதவ ஏதாவது செய்யலாம்னு சொல்லி சர்வேசன் பதிவு போட்ட அதுல எதுக்குண்ணே இட ஒதுக்கீட்ட நுழைக்கிறீங்க? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.

இப்போது தேவை அந்த சிறுவனுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதா வேண்டாம என்பதல்ல, அவன் தினமும் படும் சிரமங்களில் இருந்து அவனுக்கு விடுதலை அளித்து அவனது படிப்பில் மட்டும் அவன் கவனம் செலுத்தும் அளவுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது தான். இட ஒதுக்கீட்டைப் பற்றி அப்போது பேசிக் கொள்வோம்.

அந்த பையனை தொடர்பு கொள்ள முகவரி இருப்பின் எனக்கு அனுப்புங்கள். எங்கள் VSHARE அமைப்பு மூலமாக கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்கிறோம்.

Anonymous said...

:( எங்கும் எம்மவர்க்கு இந்த கதிதானா

கோவி.கண்ணன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
இது ஒரு ஏழை மாணவன் காசுக்காக படும் சிரமங்களைக் குறித்தப் பதிவு.இதில் எதற்கு இட ஒதுக்கீட்டை பற்றிப் பேச வேண்டும்? அவனுக்கு உதவ ஏதாவது செய்யலாம்னு சொல்லி சர்வேசன் பதிவு போட்ட அதுல எதுக்குண்ணே இட ஒதுக்கீட்ட நுழைக்கிறீங்க? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.
//

ஏழ்மையைப் பார்த்து பரிதாபப்படுவது நல் உள்ளங்களின் செயல், அவர்கள் நிலையை மாற்றவேண்டும் என்று நினைப்பது தொண்டுள்ளங்களின் செயல். செய்திகளைப் பார்த்து பரிதாபம் என்பதைவிட அவை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு எதாவது செய்ய வேண்டும். நீங்கள் தாரளமாக கண்டியுங்கள். :)

SurveySan said...

joseph balraj,

////அந்த பையனை தொடர்பு கொள்ள முகவரி இருப்பின் எனக்கு அனுப்புங்கள். எங்கள் VSHARE அமைப்பு மூலமாக கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்கிறோம்.
//////

i will contact kungumam and try to find out.
thanks.

ராமலக்ஷ்மி said...

இப்பதிவோடு தொடர்பு உடையது என்பதால் வைத்துச் செல்கிறேன் ஒரு அழைப்பு:
http://tamilamudam.blogspot.com/2008/09/blog-post_18.html

SurveySan said...

நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

அறியத் தந்தமைக்கு நன்னி.

இனி, தானா வந்துடுவேன், உங்கள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்..

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.............................................................................................................
..................