recent posts...

Thursday, September 11, 2008

TRP Rating - SUN, Vijay, Kalaignar, Jaya, Raj TVக்களின் மதிப்பு

டி.ஆர்.பி ரேட்டிங்க்னு ஒண்ணு இருக்கு. Television Rating Points இதன் விரிவாக்கம்.
நம்மூரில் இருக்கும் ஒரு நிறுவனம், நம் மக்களில் சிலர் எந்த சேனலை அதிகம் விரும்பிப் பாக்கராங்கன்னு கணக்கெடுக்கும் மூறை இது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் ஒரு மீட்டரை பொறுத்தி, அந்த வீட்டுக்காரங்க, எந்த சேனல் எப்பெப்ப எவ்ளோ நேரம் பாக்கராங்கன்னு கணக்கெடுத்து, குத்து மதிப்பா, இந்த டி.விதான், 8மணிக்கு பாப்புலர், மதியான நிகழ்ச்சிகள் இந்த டிவிலதான் அதிகம் பாக்கப்படுது அப்படி இப்படின்னு கதைய அவுத்து விடுவாங்க.

எவ்ளோ ரேட்டிங் இருக்குதோ, அதன் அடிப்படையில்தான், விளம்பரதாரர்கள் எவ்ளோ துட்டு எந்த சேனலுக்கு குடுத்து எப்பெப்ப விளம்பரம் போடலாம்னு முடிவு பண்ணுவாங்க.

இந்த ரேட்டிங் முறையில் பல விஷயம் மங்கலாதான் இருக்கு. எவ்ளோ பேர் வீட்ல மீட்டர் போடுவாங்க, ரேட்டிங் முடிவுகள் எல்லாம் 'நேர்மையான' முறையில் தான் நடக்குதா,இப்படி.

சில சானல்கள், மற்ற சில சானல்களை விட சிறந்ததுன்னு நியூஸ் பாக்கும்போது, வியப்பா இருக்கு.

சரி, அவங்க ஒரு பக்கம் மீட்டர் வச்சு டி.ஆர்.பி கூட்டிக் கழிக்கட்டும், ஆனா, இணைய வாசிகளான நாம் எந்தச் சேனலை அதிகம் விரும்பிப் பாக்கறோம்னு பாக்கதான் இந்த சர்வே.

வாக்குங்க. வாக்குப் பொட்டி கண்ணுக்குத் தெரியலன்னா இங்க க்ளிக்கி பொட்டீல வாக்க போடுங்க.(சேனல்காரர்களே, ரேட்டிங் அதிகம் வேணும்னா, ஒரு $10,000த்தை எனக்கு மணி ட்ரான்ஸ்ஃபர் செய்யவும் ஸ்விஸ் அக்கவுண்ட் நெம்பர்: 1010101)

;)

பி.கு: லக்கி இதப் பத்தி பதிவு எழுதியிருந்தாரு, அவரின் பதிவில் உள்ள 'வெக்கப்படாதீங்க சார்' படம், அடல்ட்ஸ் ஒன்லீ என்பதால், அந்த பக்கத்துக்கு லிங்க் குடுக்கல. ஹி ஹி!

9 comments:

SurveySan said...

புதிய லேபில் சேர்க்கப்பட்டது - 'மொக்கை'

லக்கிலுக் said...

சர்வேசன்,

உங்கள் சர்வேயை விட எந்த மொக்கை டி.ஆர்.பி. ரேட்டிங்கையும் நம்பிவிடலாம். காரணம் உங்கள் சர்வேயில் பங்கெடுப்பவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு Segmentல் இருப்பவர்கள்.

டி.ஆர்.பி. ரேட்டிங் எடுப்பவர்கள் எல்லாத்தரப்பு Segmentஐயும் சரியான விகிதத்தில் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் :-)

SurveySan said...

லக்கி,

நீங்க என்ன segmentஅ சொல்றீங்கன்னு பிரீலியே. NRI segmentஆ? :)

அதுக்கு தனி சர்வே தான் வைக்கணும்.

டி.ஆர்.பி எடுக்கரவங்க, குத்துமதீப்பா சில வீடுகள்ள வச்சுட்டு, அந்த வீட்ல என்னா பாக்கராங்கன்னு கண்டு பிடிக்கராங்களாம். லட்சம் பேர் பாக்கர டிவியில், சும்மா சில நூறு பேர் பழக்கத்தை வைத்து, 'கருத்ஸ்' சொல்ரது எப்படி சரியாவரும்னு தெரியல.

லக்கிலுக் said...

//SurveySan said...
லக்கி,

நீங்க என்ன segmentஅ சொல்றீங்கன்னு பிரீலியே. NRI segmentஆ? :)
//

கிளிஞ்சது. Segmentனா என்னன்னு தெரியாம தான் இவ்ளோ நாளா சர்வே நடத்திக்கிட்டிருக்கீங்களா?

ஆட்டோவில் பயணிப்பவர்கள் இத்தனை பேர் தினமலர் படிக்கிறார்கள். விமானத்தில் பயணிப்பவர்கள் இத்தனை பேர் தினமலர் படிக்கிறார்கள் என்றெல்லாம் சர்வே வருமே பார்த்ததில்லையா?

எந்தவொரு சர்வேயிலும் துல்லியமான கணிப்புகளை கொண்டுவர முடியாதென்றாலும் துல்லியத்தை நெருங்கவாவது முடியும். அதற்கு Segment பிரிப்பது தான் அடிப்படை.

ஆண்கள் - பெண்கள் என்பது அடிப்படை Segment. அதன் பின்னர் வயது, தொழில், பொருளாதாரம், கல்வி என்று நூற்றுக்கணக்கான Segment இருக்கிறது. இத்தனை Segment ஆட்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை பிரித்துக்கொண்டு, அதன்பிறகே Sampling போகவேண்டும். Samplingல் ஏதாவது சின்ன கோளாறு ஏற்பட்டாலும் சர்வே சொதப்பிவிடும். சர்வே எடுப்பதெல்லாம் நீங்கள் இங்கே செய்வது மாதிரி அவ்வளவு சுலபமான வேலையில்லை.

'நீங்கள் பிடிக்கும் சிகரெட் என்ன?' என்று ஒரு காலத்தில் சென்னையில் சர்வே எடுத்தேன். சர்வேக்கு தேவையான Pre-survey வேலைகளுக்கு மட்டும் 3 மாதம் இரவுபகலாக வேலை பார்க்க வேண்டியிருந்தது.

SurveySan said...

லக்கி,

ஓ, அந்த செக்மெண்ட்டா. நீங்க வேர ஏதோ வில்லங்கமா, கொண்டை குடுமின்னு நெனச்சிருப்பீங்களோன்னு பாத்தேன்.

நீங்க சொல்ர செக்மெண்ட் பிரிச்சு, sample தேர்ந்தெடுத்து சர்வே எடுப்பது எனக்கும் தெரிந்த சங்கதிதான்.
ஆனா, அங்க எதுக்காக, செக்மெண்ட், சேம்பிள்னா, அந்த சேம்பிளின் அடிப்படையில் மொத்த ஜனத்தொகையின் கணிப்பென்னன்னு குத்து மதிப்பா சொல்ரதுக்கு.

நம்ம ஆன்லைன் சர்வேயில், உலக மக்களின் மொத்த கணிப்பெல்லாம் சொல்ல முற்படலை.

நம்ம பதிவுல கும்மர கும்பலின் விருப்ப வெறுப்புகள் மட்டுமே தெரியும்.
ஏன்னா, எவ்வளவு ஆண்கள் வராங்க, எவ்ளோ பெண்கள் வராங்கங்கர சங்கதீயெல்லாம் சேகரிக்கலையே நானு.

இருந்தாலும், உங்க டீட்டெயில் விளக்காத்துக்கு நன்னி.

எந்த சிகரெட் அதிகமா பிடிக்கராங்க?
சிஸர்ஸ்?

RATHNESH said...

நானும் ஓட்டுப் போட்டேன்; பரவாயில்லை; சரியாகத் தான் ரசனை கொண்டிருக்கிறேன்.

லக்கிலுக் said...

//எந்த சிகரெட் அதிகமா பிடிக்கராங்க?
சிஸர்ஸ்?//

சென்னையில் கிங்கு கோல்ட் ஃபில்டர் தான். அப்புறம் வில்ஸ் ஃபில்டர். மக்களுக்கு கேன்சர் விழீப்புணர்ச்சி நல்லா வந்திருக்கு. எல்லாம் இப்போ ஃபில்டர் வெச்ச சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஆனா இந்த ரெண்டு வருஷத்துலே கிங்ஸ் முன்னேறியிருக்கும்னு நெனைக்கிறேன்.

SurveySan said...

லக்கி,

///மக்களுக்கு கேன்சர் விழீப்புணர்ச்சி நல்லா வந்திருக்கு///

;)

ஃபில்டர் தம் அடிக்கரவங்களுக்கு ஓரளவுக்கு நிக்கோட்டின், தார் எல்லாம் கம்மியா உடலுக்குள் போகும்.
ஆனா, இந்த ஃபில்ட்டர் 'பட்' தூர வீசப் படுவதால், நிலத்தடி நீர் எல்லாம் பாதிக்கப் படுமாம்.

கடலில் ஒதுங்கும் குப்பையில், 25% இந்த 'பட்' தானாம்.

மக்களுக்கு விழிப்புணர்சி எல்லாம் இருக்கு, ஆனா, 'சல்தா ஹேய்' ஆட்டிட்யூட் தம்மை பொறுத்தவரை.

SurveySan said...

82 பேர்ல 37% விஜய் டிவி தான் புடிச்சிருக்குங்கராங்க்ய.

பாப்போம், நம்ம செக்மெண்டு எங்க வந்து நிக்குதுன்னு ;)