2006ல் சிறந்த பதிவர் போட்டி நடத்தியபோது, நம்ம வெட்டிப்பயலுக்கான $100 பரிசை அவர் விருப்பத்தின் பேரில் உதவும் கரங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் கூட உ.கரங்களுக்கு அப்பப்ப இயன்றதை நண்பர் குழாமுடன் இணைந்து அனுப்புவது வழக்கம் (ரொம்ப எல்லாம் கிடையாதுங்க. சும்மா, கொஞ்சம்தான். வாழ்க்கைல அடுத்தவருக்காக பண்ற ஒரே நல்ல காரியம் இதுதான்).
அவர்களிடம் உள்ள சில நூறு குழந்தைகள், பெரியவர்களைப் பேணிக் காப்பது சுலபமான வேலை இல்லை. கடல்ல போடர பெருங்காயம் தான் நாம் கொடுக்கர பணமெல்லாம்.
ஆனா, சிறுதுளி பெருவெள்ளம் தானே?
பணத்தை விட மிகப் பெரிய விஷயம், அங்குள்ள குழந்தைகளை நேரில் சென்று பார்த்து அவர்களுடன் சில மணி நேரம் செலவிடுவதாம்.
உ.கரங்கள் வருடாந்திரம் அனுப்பும், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில், கடைசி வரி, 'நீங்கள் நேரில் வந்து எங்கள் குழந்தைகளிடம் நேரம் செலவழித்தால், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், மனநலத்துக்கும் நல்லவிதமாக அமையும்'னு எழுதியிருப்பாங்க.
தூரதேசத்துல இருக்கர என்னால இதெல்லாம் செய்யமுடியாது.
வருஷத்துக்கு ஒருதடவ சென்னைக்கு வரும்போது கிடைக்கும் மூணு நாலு வாரத்துலயும், என் சோம்பேரித்தனம் உ.கரங்களுக்கு நேரில் போக இசைந்து கொடுக்கவில்லை.
ஆகையால், நீங்கள் சென்னை வாசியாக இருந்தால், தயை கூர்ந்து உதவும் கரங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும், சில நேரம் செலவு செய்து, உங்களால் இயன்றதை செய்யுமாறு கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த, சென்னைப் பதிவர் சந்திப்பை, உதவும் கரங்கள் வளாகத்தில் வைத்தால், சாலச் சிறந்தது. செய்வீங்களா, செய்வீங்களா? ;)
!------! !*****! !------! !*****! !------! !*****!
flickrல் முரளின்னு ஒருத்தர் கண்ணுல மாட்டினாரு. அருமையான பல படங்களுக்குச் சொந்தக்காரர்.
இவர் நல்ல பென்சில் ஆர்டிஸ்ட் கூட.கலக்கலா படங்கள் வரஞ்சு வச்சிருக்காரு பாருங்க.
பென்சில் ஆர்ட்ஸ், மட்டும் அல்லாமல் ரங்கோலி டைப் ஆர்ட்டும் அநாயாசமா பண்ணிவச்சிருக்காரு, அதையும் பாருங்க.
!------! !*****! !------! !*****! !------! !*****!
பகுத்தறிவாளிப் பட்டம் வாங்க இப்பெல்லாம் பேங்கரப் போட்டி நடக்குது நம்ம பதிவுலகில். ஆனா கண்ணுல படரவங்களெல்லாம், வீட்ல ஆன்மீகவாதியாவும், வெளீல பகுத்தறிவாளியாகவும், இருக்கும் டைப்பாதான் இருக்காங்க.
அவங்க கொழம்பிக்கரதும் தவிர, வாசிக்கரவனையும் போட்டுக் கவுக்கராங்க.
மொத்தத்தில், இந்தப் பகுத்தறிவாளர்கள் தொல்லை தாங்க முடியலீங்க.
பெஸ்ட் பகுத்தறிவாளர் யாரா?
இதில் ஐரனி என்னென்னா, சிறந்த பகுத்தறிவாளர்தான், சிறந்த ஆன்மீகவாதியும் கூட.
சிந்திக்க உண்மைகள்னு ஒருத்தரு எழுதராரு. டெய்லி, டாலு டப்பா டோலு மாமி ரேஞ்சுக்கு அடிச்சு வெளையாடராரு.
ஆனா, கொடுமை என்னென்னா, பல புராணக் கதைகளும், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல புதிய விஷயங்களையும் இவரு மூலமா தெரிஞ்சுக்க முடியுது.
ஸோ, சிறந்த ஆன்மீகவாதி + சிறந்த பகுத்தறிவாளர் - சிந்திக்க உண்மைகள் பதிவர்தான். ;)
!------! !*****! !------! !*****! !------! !*****!
'தனம்'னு ஒரு படம் ஓ.சியில் பாக்கக் கெடச்சுது. டி.வி.சீரியல் ரேஞ்சுக்கு இருக்குது.
இளைராஜா மூஜிக். ஹ்ம். ஒரு பாட்டு நல்லாருக்கு. கண்ணன் பாட்டு.
அப்பாலிக்கா, 'கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பளன்னு' ஒரு பாட்டு. மத்தபடி, உஸ்ஸ்ஸ்.
போலிச்சாமியாரின் பித்தலாட்டம் காட்டுவதும் அவனை கொல்வதும் நல்ல மெசேஜு.
ஒருவழியா Mel Gibsonன் Apocalpyto பாத்தாச்சு, பொறுமையா திரைப்பார்வை எழுதறேன்.
Mayan வம்சாவளிகளின் கோரத் தாண்டவம் படம் முழுதும். ஆனா, படம் முடியரதுக்கு முன்னாடி கடைசி காட்சியில், Mayanஐ மிஞ்ச வரும் நாகரீக ஆசாமிகள் பெரிய கப்பல்களில் கரை சேருவார்கள். Mayanகள் செய்த காட்டுமிராண்டித்தனத்தை விட, வெளியாட்கள் வந்து அவர்களுக்கு செய்த கொடுமைகள் ரொம்ப பெருசோ? - ஏன்னா, ஒட்டு மொத்த மாயர்களையும் அடிச்சு ஒழிச்சுட்டாங்களே. :(
!------! !*****! !------! !*****! !------! !*****!
இன்னும் நெரைய சொல்லிக்கினே போலாம்... ஆனா, இப்போதைக்கு இது போதும்.
பிலேட்டட் ஹாப்பி ஓணம்!
6 comments:
karthick CS, tagged பதிவுதான் அடுத்து. வெயிட்டீஸ் :)
ம்ம்ம் அபோகலிப்டோ பாத்தீங்களா?
ஆமா அந்த பௌர்ணமி சந்திரன் வெளிச்சத்துல ஓடு ஓடுன்னு ஓடுவாரே அப்ப ஏதாச்சும் தோணிச்சா?
:-))
//ஆமா அந்த பௌர்ணமி சந்திரன் வெளிச்சத்துல ஓடு ஓடுன்னு ஓடுவாரே அப்ப ஏதாச்சும் தோணிச்சா?
//
pireeliye? enna thonirukkanum?
;)
ம்ம்ம்ம்ம்ம்ம்...
பலி கொடுக்கிறப்ப சூரிய கிரகணம் வருது. அப்ப அன்னிக்கு அமாவாசை. அன்னிக்கு ராத்திரி தப்பிச்சு ஓடறார். பௌர்ணமி சந்திரன் ஒளியிலே!
hm. after a solar eclipse, moon will be visible that night.
wouldn't it?
anyway, naan avlo unnippaa ellaam padathin science aspects ellaam gavanikka maatten :)
////பலி கொடுக்கிறப்ப சூரிய கிரகணம் வருது. அப்ப அன்னிக்கு அமாவாசை////
அப்படியா?
என் மூளையில் கிரகணம் ;)
Post a Comment