recent posts...

Wednesday, September 30, 2009

கலிஃபோர்னியாவில் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், மேடை நாடகமாக, எங்க ஊர் தமிழ் மன்றத்தார் நடத்த இருக்கிறார்கள்.

தெ.கலிஃபோர்னியாவில் உள்ள San Ramon என்ற நகரில் இது நவம்பர் 8ஆம் தேதி நடக்கப் போகிறது.

சமீபத்தில் தான் பொன்னியின் செல்வனை கரைத்து குடித்து முடித்திருந்தேன். சுடச் சுட அதை நாடகமாக பார்க்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

எப்போ?: Sunday, November 8, 2009 at 3:30 P.M.

எங்கே?: San Ramon Performing Arts Center
Dougherty Valley High School
10550 Albion Rd,
San Ramon, CA 94582

எம்புட்டு?: $100, $50, $20

மேல் விவரங்கள் இங்கே இருக்கு.

காணத் தவறாதீர்கள்!

பி.கு: சாக்ரடீஸ் நாடகத்துல, சாக்ரடீஸுக்கு வெஷம் கொடுக்கும் ஜெயில் வார்டனா நடிச்ச அனுபவம் இருக்கு சார். ஏதாவது நல்ல ஹீரோ ரோல் இருந்தா சொல்லுங்க. வந்தியத் தேவனா இல்லன்னாலும், ரா.ரா.சோழனா ரெண்டு சீன்ல தலை காட்ட வுட்டா, தன்யனாவேன். ஹீ ஹீ ஹீ ;)

Tuesday, September 29, 2009

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

அப்படி இப்படின்னு நம்ம எழுத்துப்பணி ஆரம்பிச்சு மூணு வருஷம் முடியப் போவுது.

இது ஐநூறாவது பதிவு.
ஐநூற்றில் நாணூத்தி எண்பதுக்கும் மேல், மொக்கை என்றாலும், எதையாவது கிறுக்குவதும், அதை சிலர் படிப்பதும், ஒரு வித்யாசமான மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.

'சாதா' ப்ரஜையான நானு, சபையில் அடக்கி வாசிக்கும் டைப்பு. இந்த 'அனானி' எழுது தளம், என்னுள் குமுறிக் கொண்டிருந்த சிந்தனையாளனுக்கு ஒரு நல்ல வடிகால். (அடங்கு அடங்கு! அடங்கறேன் அடங்கறேன்! :) ). இதுகாலம் வரையில் பாத்ரூம் சிங்கராக மட்டுமிருந்த நான், பாட்டுக்கு பாட்டின் மூலம் பாடல் அரங்கேற்றமும் செய்து முடித்திருக்கிறேன்.

இப்படி எமது பல பரிமாணங்களை எடுத்து வியம்ப வைக்க ஆதாரமாக இருந்த தமிழ் வலையுலகுக்கு நன்றீஸ்!

எமது எழுத்துப் பணியின், இந்த மைல் கல்லைக் கொண்டாடும் விதமாக, சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நடத்திய 'நச்' கதைப் போட்டி, நச்2007 போலவே, இந்த ஆண்டும் நச்2009 நடத்தி மகிழலாம் என்று அவா.

சென்ற முறை 57 கதைகள் போட்டியில் இறங்கி களை கட்ட வைத்தது. கதைகளுக்கு Srikanth விமர்சனங்கள் எல்லாம் எழுதி சிறப்பித்திருந்தார்.

மக்கள் வாக்கெடுப்பின் மூலம், சிறந்த 8 கதைகளை தேர்ந்தெடுத்து, அதை நடுவர் குழுவை வைத்து (CVR, தரூமி, ஆசீஃப் மீரான், வெட்டிப்பயல், பாஸ்டன் பாலா) மதிப்பெண் எல்லாம் போட வைத்து, சிறந்த நச் கதையாக அருட்பெருங்கோவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 'நச்'ன்னு போட்டிக் கதைகள் வந்தா நல்லாருக்கும்.

இனி, 'நச்! 2009' போட்டியின், விதிமுறைகள் பாக்கலாம்:

1) கதை, எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். 'சிறு'கதையா இருக்கணும். மிக முக்கியமா, கதை முடிகையில் 'நச்'னு ஒரு திடீர் திருப்பம் இருக்கணும். (O-Henry turn என்ற திடீர்-திருப்பம் கதையில் முக்கியம்.)

2) கதையை உங்கள் ப்ளாகில் எழுதி இங்கே பின்னூட்டணும். தலைப்பிலோ, லேபிளிலோ, 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' என்று வைத்தல் நலம்.

3) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.

4) கதையை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15 2009 11:59 pm IST.

5) நடுவர்கள்: எம்புட்டு கதைகள் போட்டிக்கு வருதுன்னு பாத்துட்டு முடிவு செய்யப்படும். நடந்து முடிந்த எல்லா போட்டிகளைப் போலவும், சீரான/பொறுப்பான முறையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

6) பரிசு: $20 முதல் பரிசு. $10 இரண்டாம் பரிசு.
முதல் பரிசு வென்றவரின் பெயரில் $70 "உதவும் கரங்களுக்கு" நன்கொடையும் வழங்கப்படும்.

7) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம். நிறைய கற்பனா வளம் உள்ளவர்கள் ரெண்டு மூணு கதைய உங்க பதிவுல எழுதி, எது நல்ல பின்னூட்டங்களை பெறுதோ, அதை இங்கே அனுப்பலாம். :)

போட்டி பற்றிய விவரங்களைப் பரப்பவும்.

நன்றீஸ்! :)


இதுவரை வந்த 'நச்' கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
24. ரெட் லைன் - வண்டிக்காரன்
25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
29. டிஸ்லெக்சியா - Vinitha
30. அவரு..அவரு..ஒரு - வருண்
31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
32. ஜனனி - படுக்காளி
33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
35. புகை - kalyanaraman raghavan
36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
39. காமம் கொல் - Cable Sankar
40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
47. காமம் வழிந்தோடும் உடல் - graham
48. லாரி விபத்து - MSV Muthu
49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
51. நானே நானா - சுப.தமிழினியன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
54. ஐ லவ் யூ - சுவாசிகா
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
57. முதல் காதல் - chelladhurai
58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
61. நடிகையின் கதை - சாணக்கியன்
62. Blackhole - இரா.வசந்த குமார்
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
65. திருடன் - Parameswerey Namebley
66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan


பி.கு0: இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)

பி.கு1: போட்டியில் பங்கு பெறலாம் என்று நினைப்பவர்கள், கீழ ஒரு attendance சொல்லிட்டுப் போயிடுங்க. கணக்கெடுக்க வசதியா இருக்கும். மத்தவங்களை ஊக்குவிக்கவும் இது உதவும் :)

பி.கு2:
இந்த பக்கத்துக்கு உங்க கதையிலோ, பதிவிலோ லிங்க் தர, கீழே உள்ள நிரலை வெட்டி ஒட்டவும்.

Monday, September 28, 2009

திரைப்பட விருதில் என்னை ஏமாற்றிய விஷயம்

கடந்த இரண்டு வருடங்களுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பட்டியலை பார்த்ததும், புருவம் உயர்ந்தது உண்மைதான்.
அப்பரம், அதற்கான, ஞாய தர்மங்களை யோசிச்சதும், ஓரளவுக்கு அதன் தன்மை புரிந்து மனம் சாந்தி அடைந்தது.

சிவாஜிக்கு ஏன் விருது, கமலுக்கு ஏன் விருதுன்னு கேக்கரவங்க கேள்வி ஞாயமானதுதான்.

ஆனா, மத்த எல்லா படங்களையும் விட, பல பேர்களின் பல மடங்கு உழைப்பு இந்த இரண்டு படங்களிலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பா, சிவாஜி படம் ஏற்படுத்திய ஒரு திருவிழா மயக்கம், நினைவுக்குத் தெரிஞ்சு இதுக்கு முன்னாடி எந்த படமும் ஏற்படுத்தியதில்லை. எதிர்பார்ப்பையும் பெரிய அளவில் ஏமாற்றாமல், ரஜினி படம் எப்படி இருக்கணுமோ (பாட்ஷா அளவுக்கு லேது) அப்படி இருந்து ஒரு பொழுது போக்கு அம்சமா இருந்தது சிவாஜி.

ஸோ, சீவாஜிக்கு ஒரு ஜே!

தசாவதாரம், கேக்கவே வேணாம். மைதா மாவு போட்டு மேக்கப் செஞ்ச மாதிரி, ஃபேஸ் உப்பலா தெரிஞ்சாலும், கமலின் பத்து பரிணாமங்களூம் அமக்களம். நம்ம டமில் படங்களுக்கு சொல்லிக்கர மாதிரி ஒரு மைல் கல். புத்திசாலித்தனமான கதையம்சமும், அது பத்து கேரக்டரை ஊடுருவிச் செல்வதும், அசாத்யமாய் செய்திருந்தார் கமலு.
அதுக்காக, தசாவதாரத்துக்கும், ஒரு ஜே!

சிறந்த நடிகர்களா, கமலும், ரஜினியும் ஏன் ஏன் ஏன்னு பெருசா கேள்வி எழாமல் இல்லை.

அஞ்சாதே படத்துல நடிச்ச, நரேனும், வாரணம் ஆயிரம் சூர்யாவெல்லாம், எந்த அளவுக்கு கொறஞ்சு போயிட்டாங்கன்னு தெரியல.

ஆனாலும், உ.த, சொன்ன மாதிரி, தலைவர் கருணாநிதி, வயசான காலத்துல, கமல் ரஜினி ரெண்டு பக்கமும் உக்கார வச்சு, ஈன்னு ஒரு ஃபோட்டோ புடிச்சுக்கலாம்னு ஆசை வந்திருக்கும்.

ஸோ, கமலுக்கு, ரஜினிக்கு ஒரு ஜே!

கடந்த ரெண்டு வருஷமாதான், டமில் படங்களில், புதுக் காத்து வீசுது. வித்யாசமாவும் யதார்த்தமாவும், படம் எடுத்துக்கிட்டு வராங்க. அவங்களையெல்லாம் தூக்கி வச்சு கொண்டாட வேண்டாம், ஆனா ஓரளவுக்காவது அங்கீகாரம் கொடுத்தாதான், அடுத்தடுத்து பட்டைய கெளப்பவாங்க?
இதிலும் பெருசா ஏமாத்தல, எல்லா நல்ல படத்துலையும், ஓரளவுக்கு எத்தையாவது ஒரு விருதை தூக்கிப் போட்டிருக்காங்க.

ஸோ, அவங்களுக்கும் ஒரு ஜே!

ஆனா, என்னால சுத்தமா தாங்கிக்க முடியாத விஷயம் இதுல ரெண்டு இருக்கு!

தலையாய தலைவலி தந்த மொத விருது. படிச்சதுமே கண்ணுல ஜலம் கட்டிண்டு நின்ன விருது.
சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

அடங்கொய்யால. இந்தப் படத்தை, படம் எடுத்தவரே தியேட்டர்ல போயி பாக்கலையாமேய்யா?
ஒரிஜினல் குவாலிட்டின்னு இணையத்தில் கிட்டியும், $10க்கு எங்க ஊரு நாட்டாரு கிட்ட காய்கறி வாங்கினா, ஃப்ரீயா டிவிடி குடுத்தும் கூட, இந்தப் படத்தை பாக்க முடியலையே, இந்தப் படத்துக்கு மாநில அரசின் விருதா? அதுவும் வசனத்துக்கா?
ஐயகோ, நான் கடவுள், தசாவதாரம், பூ, வா.ஆயிரம், சரோஜா இதையெல்லாம் தூக்கி போட்டு சாப்பிட்டுடுசா உளியின் ஓசை?
காத்தவராயன் கூட நல்லா இருந்துதேய்யா.
ஆண்டவா! ஆண்டவா! என்ன சோகம்யா இது?
வெளங்கிரும்!

ரெண்டாவது தலைவலி தந்த மேட்டரு:
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)

நான் ராசாவின் தீவிர விசிரிதான். ஆனா, இந்தப் படம் வந்ததே தெரியாதேய்யா எனக்கு? இப்பதான் தேடிப் பிடிச்சு கேட்டு பாத்தேன்.
விருது கொடுத்தவங்களுக்கு மனசாட்சியே லேதா?

வாரணம் ஆயிரத்துல, ஹாரிஸ், எழையா எழச்சிருக்காரு ஒவ்வொரு பாட்டையும்.
சந்தோஷ் சுப்ரமணியத்தில் உள்ள பாடல்களில், என்னாமா துள்ளல் இருந்தது.
தசாவாதாரம் கூட பாட்டு பரவால்லாம இருந்துச்சே.

ராசாவின், பெயர் தெரியா அஜந்தாவுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன?

என்ன கொடுமைங்க இது?

விருதுகளில், ஓரளவுக்கு சர்ச்சைகள் வரலாம்.

ஆனால், இந்த தடவை இத என்னான்னு சொல்றதுன்னே புரியல்ல.

நல்லாருக்கட்டும்!

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான், கலைமாமணி, பத்மஸ்ரீ விருதுகளில் எல்லாம் கூட இந்த மாதிரி, உப்பு சப்பில்லா ஆட்களுக்கு கொடுத்து, விருதின் பெருமையை எச்சையாக்கினாங்க.

இப்ப, இது.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
விருது பெற தகுதியிருந்தும், விருது பெறாதவர்களுக்கு - பாவங்க நீங்க!

Sunday, September 27, 2009

உ.போ.ஒ - கமலின் குசும்பும், பொது புத்தியும், நம் ரசனையும்!

'மும்பை மேரி ஜான்'னு ஒரு படத்தை பாத்து ரொம்பவே புளகாங்கிதம் அடஞ்சு விமர்சனம் எல்லாம் எழுதியிருந்தேன். தொடர்ந்து தாக்கும் தீவிரவாதம், தங்கள் இயல்பு வாழ்க்கையை கெடுத்து விடாமல், மும்பை வாசிகள் எப்படி அதை எதிர்கொண்டு வெற்றி அடைகிறார்கள்னு ஒரு பாசிட்டிவ் அப்ரோச் கொண்ட அற்புதமான படம் அது.
அந்தப் பதிவில், 'A Wednesday' பாத்தியான்னு, சில பலர் கேட்டதால், அதை தேடிப் பிடிச்சு பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆனா, மு.மே.ஜா அளவுக்கு, A Wednesday ஆஹா ஓஹோன்னு சொல்லும் படியா இல்லை.
லோ பட்ஜெட்டில், ஓரளவுக்கு, ஒக்காந்து பார்க்கும் படியான கதை அம்சம் பொருந்திய படமா இருந்தது. படத்தின் ப்ளஸ் பாயிண்ட், நஸ்ருதீன் ஷாவின், அலட்டாத நடிப்பும், கடைசி திருப்புமுனையும், படம் தந்த மெசேஜும்.

சில விஷயங்கள், சில மொழியில எடுத்தா மட்டும் தான் எடுபடும்.
ஓரு ஏழை விவசாயி கதை நம்மூர்ல எடுத்தா பாக்கலாம். ஆனா, அதே கதை, அமெரிக்க சூழலில், ஆங்கிலத்தில் எடுத்து விட்டா, அவங்களால அதை 'relate' பண்ணி பாக்க முடியாது. ஒட்டாது.

A wednesday, அல்கொய்தா/தோய்பா ரக தீவிரவாதிகள் பற்றிய படம். அதை அப்படியே டமிலில் ரீ-மேக்கியதால், எனக்கு அந்தளவுக்கு எடுபடலை.
என்னதான், டமில்நாட்டில் எப்பயாவது ஒரு தரம் தீவிரவாதிகளின் அல்லக்கைகள் அங்கங்க தாக்கினாலும், நம்ம மக்களுக்கு, அதன் தாக்கமெல்லாம் பெருசா தெரியாதுங்கரது என் கருத்து.

இந்த ஒரு விஷயமே, உ.போ.ஒ'க்கு பெரிய அடி.

அடுத்த அடி, கமல்ஹாசன். இந்த மாதிரி படமெல்லாம், ரீமேக்கினா, ஸ்லைட்டா உல்டா பண்ணி எடுக்கணும்னு, கமலுக்கு ஏன் தோணாம போச்சு? தீவிரவாதிகளுக்குப் பதிலா, கல்லூரிப் பெண்களை பஸ்ல கொளுத்தின களவாணிப் பசங்கள மையமா வச்சு எடுத்திருந்தா, என் பார்வையில் படம் எங்கேயோ போயிருக்கும். கமலுக்கு தில்லில்லாமப் போச்சா?
அதுவுமில்லாமல், நஸ்ருதீன்ஷா, அலட்டாம அழகா பண்ணின ரோலை, கமல் நல்லா பண்ணலை. இவரு நல்லவரு வல்லவரு, இவரு குண்டு வச்சா வெடிக்காதுன்னு, நேத்து பொறந்த கொழந்தைக்கு கூட தெரியும். படத்தில் இருந்த 'த்ரில்' எஃபெக்ட் புஸ்வாணமா போச்சு. கமலுக்கு பதிலா, பசுபதியோ, நாசரையோ நடிக்க வச்சிருக்கலாம். கமல், ஒரு கௌரவ வேஷத்துல வந்துட்டுப் போயிருந்திருக்கலாம், வியாபாரத்துக்காக.

எல்லாரும், தோட்டா தரணியின், ஆர்ட் டைரக்ஷனுக்கு ரொம்ப ஓவரா புகழாரம் சூட்டியிருந்தாங்க. தோட்டா பெரிய ஆளு. சந்தேகமே இல்லை. ஆனா, இந்த வெரி லோ பட்ஜெட் படத்துல, அவருக்கு துட்டே தரல போலருக்கு. போலீஸ் ஸ்டேஷன் கண்ட்ரோல் ரூமு நல்லாவே இல்லை. அதை விட கேவலம், போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூம் செட். எந்த பாத்ரூம்ல, முச்சா போர எடம் கண்ணாடிக்கு அவ்ளோ கிட்ட கொண்டு போயி வச்சிருக்கான்? வெள்ள பெயிண்ட் காயக் கூட இல்லையே அந்த பாத்ரூம்ல? என்ன கொடுமைங்க இது?
தீவிரவாதிகளை கூட்டிக் கொண்டு செல்லும் ட்ரக்கும் எடுபடலை. ஹ்ம்!

அடுத்தது, பொது புத்தி, சுய புத்தி, மட்ட புத்தி, சாதா புத்தி வகையராக்களின் விமர்சனங்கள். ஒரு விஷயத்தை பத்தி தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொன்னவங்க சொன்னதை படிச்சவங்க, அவங்களுக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்லவும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொல்லி, அதை படிச்சு, தனக்குப் பட்டத்தை பட்டது மாதிரி சொன்னதை, முதலில் சொன்னவங்க, அதைப் படிச்சு, திரும்ப தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்றதும், அதை ரெண்டாவதா எழுதினவங்க, திரும்ப படிச்சு, தன் மனதில் பட்டதை பட்டது மாதிரி சொல்றதும் தப்பில்லைதான். ஆனா, ஒரு கட்டத்துல இதையெல்லாம் முடிச்சுக்கணும். படிக்கரவங்கெல்லாம் பாவம் இல்லை?

இப்போ, உ.பொ.ஒ பத்தி என் பொது புத்திக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்றேன்.
அமெரிக்கா மீடியாக்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, இங்க இருக்கர மைனாரிட்டிகள் (கருப்பர், மெக்ஸிக்கன்ஸ், வகையரா) ரொம்ப கொடூரமானவங்கன்னு டெய்லி ப்ரெயின் வாஷ் பண்ணிக்கிட்டே இருப்பானுங்க. திருடரது, கொல்றது, கொள்ளை அடிக்கரதுன்னு எல்லாத்தையும் செய்திகளில் காட்ரப்ப, கருப்பனோ மெக்சிக்கனோ தான், விலங்கு பூட்டி இஸ்துக்கினு போவாங்க. இது என்ன பளான்னு தெரியல.

அதே மாதிரி நம்ம ஊடகங்கள், நம் மைனாரிட்டிக்களை, வில்லனாக்கும் செயலைச் செய்யுது.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா, வேற்று மதத்தவர்களை, நாம 'சமமா' பாவிக்கரதுக்கான ஏற்பாடு நம் சமுதாயத்தில் செய்யப்படலை. ஏதோ ஒரு ப்ரெயின் வாஷ், நம் மண்டையிலும் கூட திணிக்கப்பட்டிருக்கு. ஓ, அவனா, அவன் கிட்ட உஷாரா இரு. இவன் கிட்ட கராரா இரு. அவன் ஏமாளி, இவன் அழுக்கு. அவன் க்ரிமினல், இவன் டுபாங்கூர், இப்படி ப்ரெயின்வாஷின கூலிங்கிளாஸுடன் தான் நாம் மற்ற மதத்த வரை பார்த்து வருகிறோம்.

A Wednesdayயில், தீரிவாதிகள், இஸ்லாமியர்கள். இந்தியில் பாக்கும்போது, பெரிய நெருடலா ஒண்ணும் தெரியல. ஏன்னா, நஸ்ருதின் ஷாவுக்கும் நமக்கும் எந்த 'பந்தமும்' இல்லை. அவரு என்னா சொன்னாலும் செஞ்சாலும், 'சினிமாதான'ன்னு பாத்துட்டு கெளம்பிடுவோம்.

ஆனால், டமிலில், கமலின் ஓரக் குசும்பு பல இடங்களில் அசிங்கமா எட்டிப் பாத்துது. தேவையில்லாத இடைச் செறுகல்கள சில.

இந்தியில், கடைசி வரை, நஸ்ருதீன் ஷா, தான் எந்த மதத்தவர்னு தெரியாத மாதிரி காட்சி அமைப்பு.

டமிலில், முதல் சில காட்சிகளிலேயே, 'இன்ஷா அல்லாஹ்'வை கிண்டலடிக்கும் டயலாக்கில், நான் 'அவனில்லை'ன்னு கத்தி சொல்லிடறாரு.

அத்தோட நிறுத்தியிருந்திருக்கலாம் குசும்பை. மேலும், பல காட்சிகளில், ஒரு கிண்டலான தொணியில் இந்த 'ப்ரெயின் வாஷை', திருவாளர் கமலும் தொடர்ந்து செய்திருக்கிறார். ஏன் இப்படி செய்யறாருன்னு எனக்குப் புரியல்ல. இவருக்கு ஒரு மோட்டிவேஷனும் இருக்காதுன்னே தோணுது. டைரக்டர்/வசனகர்த்தா கேட்டுக் கொண்டதால், தன்னையே அறியாமல், இதை எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதா இவருக்கு?

ஐம்பது வருஷம், நடிச்சு கொடி நாட்டினவரு, இவ்ளோ அப்பட்டமா ஒரு, 'இந்துத்வா' மோட்டிவ் காட்சிகளில், சைலண்டா நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கு?

மோகன்லால் - இவரும் கூட, ஆஹா ஓஹோன்னு சொல்ற அளவுக்கு ஒண்ணும் நடிச்சுடல. இவர் 'நடிச்ச' பல படங்கள் பாத்திருக்கேன். அதிலெல்லாம் உண்மையிலேயே பின்னியிருப்பாரு. இதில் பெருசா ஒண்ணுமே இல்லை. 'வெயிட்' இல்லாத பாத்திரம் இது.

லஷ்மி, படத்தின் காமெடி.

கலைஞர் வாய்ஸ் - ஒரே ஆறுதல். கமல், தன் பெயர் வாக்காளர் பட்டியலில் வராத மெய் சம்பவத்தை இதில் சொறுகி, தன் எதிர்ப்பை பதிவு செஞ்சிருக்காரு. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் ஒரு குட்டி சபாஷ்.

இசை - ஓ.கே. ஆனா, ஒரு காட்சியில், கமலின் ஆலாபனை, ஏப்பம் விடும் ராகத்தில் அமைந்திருப்பது கொடுமை.

காமெரா - ஓ.கே.

மொத்தத்தில், வித்யாசமான கதை அம்சங்களை டமிலில் கொண்டு வருவது, நல்ல விஷயம்தான். ஆனால், வீண் குசும்பை குறைத்து, தரத்தை மட்டும் கூட்டி, இனி வரும் படங்களை அளிப்பதே அனைவருக்கும் நல்லது.

நம்ம பசங்க, 'சப்பு'ன்னு படம் பாத்து பாத்து, சுமாரா குத்தாட்டம்/தலைவலி இல்லாமல் ஒரு படம் வந்ததும், படத்தை ரொம்ப தூக்கி வச்சுட்டாங்க.

உன்னை போல் ஒருவன், நம் மத்தியில் வேண்டாம்!

Thursday, September 24, 2009

ஹாப்பி வெள்ளி - எஸ்.வி.சேகர்

இஸ்கோல் படிக்கர காலத்துல, 'முப்பத்தி ஆறு மொட்டைகளின் அட்டகாசங்கள்னு' ஜோக்கெல்லாம் சேத்து, ப்ரெசிடென்சி காலேஜ் பசங்க ஒரு கேசட் விட்டிருந்தாங்க. தமிழுக்கு அது புதுசு. ஜோக்கெல்லாம் புச்சு புச்சா இருக்கும். ரொம்ப வித்யாசமான முதல் முயற்சி அது.
ரொம்ப பிரபலம் அது அந்த காலத்துல.

கேசட்டில் ஜோக்கு வாங்கி கேக்கர பழக்கம் அப்ப ஆரம்பிச்சது. அந்த பழக்கத்துல, அப்பரமா, கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் நாடகங்களை எல்லாத்தையும் கேட்டு முடித்திருந்தேன்.
ஊர் விட்டு ஊர் சென்ற போதும், சில கேசட்டுகளை கைவசம் கொண்டு வந்து, லாங் ட்ரைவ் எங்கையாவது நண்பர்களுடன் ஊரு சுத்தரப்பெல்லாம் இந்த காமெடி நாடகங்களை போட்டு விட்டு, வயிறு குலுங்க சிரிச்சுக்கிட்டே போவோம். பாட்டு கேட்பதை விட சிறந்த பொழுது போக்கு இது.

பல நாடகங்களை கேட்டிருந்தாலும், எஸ்.வி.சேகரின் சில 'பன்ச்' வசனங்கள் மண்டைல பதிஞ்ச ரகம்.

எந்த நாடகம்னு பேரு ஞாபகம் இல்லை, ஆனா ஒரு காட்சி ஆழமா பதிஞ்சு, மனசை பல காலமா வாட்டி எடுத்துக்கிட்டிருக்க்கு. அந்தக் காட்சியை உங்களுடன் பகிர்வதில் பேருவகை அடைகிறேன்.

மத்த நாடகங்களைப் போலல்லாமல், இது கொஞ்சம் சோக ட்யூனோட ஆரம்பிக்கும். யாராவது மண்டைய போட்டா தூர்தர்ஷன்ல வாசிப்பாங்களே, அந்த ட்யூன்.
முதல் சீன்ல, ஒரு ஏழைக் குடும்பத்தில் நடக்கும் வசனங்கள்.

குடும்பத் தலைவி, ரெண்டு பொண்ணுங்க, புருஷன் இருப்பாரு.
தலைவி சொல்லுவாங்க, "என்னங்க,கடைசியா இருந்த ஒரு பிடி அரிசியும் தீந்து போச்சுங்க. காய்கறியும் காலி ஆயிடுச்சு. கடைக்காரர் பழைய பாக்கியை குடுக்காம இனி கடனுக்குத் தரமாட்டேன்னும் சொல்லிட்டான்"ன்னு ரொம்ப சோகமா அழுதுகிட்டே சொல்லுவாங்க.
ரெண்டு குட்டிப் பெண்களும், "அம்மா பயங்கரமா பசிக்குதும்மா. ரெண்டு நாளா தண்ணி மட்டும் குடிச்சு குடிச்சு, வயிறெல்லாம் எரியுதும்மா"ன்னு அழுவாங்க.

மனைவியும், குழந்தைகளும் பசியால் துடிக்கரத பாத்த குடும்பத் தலைவர், "ஐயோ லக்ஷ்மி, என்ன பண்ணுவேன்னே தெரியலையே. கம்பெனி ஸ்ட்ரைக்ல மூடி, ஆறு மாசமாச்சு, வேர வேலையும் கெடைக்க மாட்ரது. பிச்சை எடுத்தாவது பொழைக்கலாம்னா, தன்மானம் இடமும் கொடுக்க மாட்ரது"ன்னு அவரும், அழுவாரு.

லக்ஷ்மி மெதுவா புருஷன் கிட்ட வந்து, "என்னங்க, இனியும் இப்படி பசியோட குழந்தைகளை கஷ்டப் படுத்த முடியாதுங்க. என்னால அவங்க வலியை தாங்க முடியலை. பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்"னு சொல்வாங்க.

குடும்பத் தலைவரும், "ஆமாம். லக்ஷ்மி, நீ சொல்றது தான் சரி. என் கிட்ட இருக்கர ரெண்டு ரூபாய்க்கு, வெளீல போய் வெஷம் வாங்கிட்டு வரேன். எல்லாரும் குடிச்சு செத்துடலாம்"பாரு. தலைவியும், "சரிங்க"ன்னு அழுதுட்டே சொல்லுவாங்க.

விஷத்தை வாங்கிக்கிட்டு அவரு வந்ததும், லக்ஷ்மி, "என்னங்க, சாகரதுக்கு முன்னாடி, அம்பாளுக்கு ஒரு பட்டுபாவாடை சாத்திட்டு சாகலாங்க. அன்னிக்கு வாங்கி வச்ச துணி இருக்கு. பாவாடை தெச்சுட்டு, சாத்திட்டு, அப்பரமா விஷம் குடிக்கலாங்க. கொஞ்ச நேரம் இருங்க"ன்னு சொல்லிட்டு, பட்டுத் துணியை எடுத்து, ஒரு ஊசியையும் நூலையும் எடுப்பாங்க.

ஊசீல நூலை கோக்கப் பாப்பாங்க. ஆனா, ரொம்ப நேரம் முயற்சி பண்ணியும் முடியாது.
"என்னங்க, அம்பாள் நம்மள, இப்படி சோதிக்கறாளே. சாப்பாட்டுக்கும் வழியில்லை. சாகரதுக்கு முன்னாடி, ஒரு பட்டுப்பாவாடை பண்ணி சாத்தலாம்னா, அதுக்கும் முடியாம இப்படி தவிக்க விடறாளே. ஊசீல நூலக் கூட கோக்க முடியலையே"ன்னு பெருசா சத்தம் போட்டு தேம்பித் தேம்பி அழுவாங்க.

அவருடன் சேந்து, அவங்க புருஷரும், ரெண்டு பொண்ணும் அழுவாங்க.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்களும், இன்னாடா இது, கேசட்ட மாத்தி கீத்தி வாங்கிட்டு வந்துட்டமான்னு, கண்ணுல ஜலத்தோட சோகமாயிருந்தோம்.
எஸ்.வி.சேகர் நாடகம்தான இதுன்னு ஒரே டெரராயிட்டோம்.

திடீர்னு, கதவை டகால்னு தொரக்கர சத்தம் கேக்கும்.

எஸ்.வி.சேகர் வந்து, "மேடம், நீங்க மட்டும் இல்ல மேடம், வேர யாராலையும் இந்த ஊசீல நூல கோக்க முடியாது. ஏன்னா, இது குண்டூசி!"ம்பாரு. அழரவங்க சைலண்டா ஆயிடுவாங்க. கேக்கரவங்க, குபீர்னு விழுந்து விழுந்து சிரிச்சு வச்சோம்.

"அடச்சீ கஸ்மாலங்களா. காசு குடுத்து காமெடி நாடகம் பாக்க வந்திருக்காங்க. காமெடி பேசரத விட்டுட்டு, கூடி நின்னு ஒப்பாரியா வெக்கறீங்க"ன்னு சொல்லிட்டு, அவங்கள வெரட்டிட்டு, அப்பரம் தொடர்ந்து, ஒரே சரவெடி காமெடிதான்.

அப்ப வந்த மாதிரியெல்லாம், இப்ப 'பன்ச்' காமெடியுடன் நாடகங்கள் வரது இல்லையோ? எல்லாரும், பாலிடிக்ஸ் ரெட்டை வசனங்கள் பேசரதுல பிசி ஆயிட்டாங்க!

ஹாப்பி வெள்ளி!

Monday, September 21, 2009

சர்வேசன் - பெயர் மாற்றப்பட்டது

நவம்பர் 2006ல் உண்டு களைத்திருந்த ஒரு மதிய வேளையில், நண்பர் ஒருவருடன் யாஹூவில் அளவளாவிக் கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு திரை விமர்சனத்தை அனுப்பி வைத்தார். என்ன படம்னு மறந்து போச்சு. அந்த மாசம் வந்த ஏதோ ஒரு படம் அது.

படிச்சுட்டு, "nallaa ezhudharaanuva"ன்னு ஒரு மெசேஜ் விட்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்துக்குப்பால, 'ezhudhanadhu naandhaan"ன்னு வந்துச்சு.

"adengappaa, pinnitteengale"ன்னேன்.

"thanks"ன்னாரு.

'tamil typing ellaam theriyumaa?'ன்னேன்.

'adhellaam ippa romba easy. search 4 ekalappai'ன்னாரு.

ekalappai தேடினா, தமிழ்மணம், தேன்கூடு, எக்ஸட்ரா எக்ஸட்ரா, கண்ணில் பட்டது.

நானும் ஒரு பதிவத் தொடங்கி, (நண்பனுக்குக் கூட தெரியாமல்) பதிவராயிட்டேன்.

எல்லாரும் என்னென்னமோ எழுதறாங்க. நம்ம டமில் பொலமை நெம்பக் கம்மி, அதனால, சர்வே எடுக்கறேன் பேர்வழின்னு, கட்டம் கட்டி, கடையத் தொறந்து வச்சேன்.

அதற்கப்பால நடந்ததெல்லாம், ஹிஸ்டரி. ;)

பதிவெழுத ஆரம்பித்த போது, ஆக்கியவன் அள்ள அளப்பவன்னு tag-line வச்சு, மங்களகரமா பொட்டி தட்டிட்டு இருந்தேன்.

நான், ரிலீஜியஸ் கிடையாது. ஆனா, ஓரளவுக்கு, கடவுள் ஈடுபாடு இருந்தது.
மாசத்துக்கு ஒரு தபாவாவது கோயிலுக்குப் போறதுண்டு.
ஆனா, சமீபத்தில் சில பல மாற்றம் உள்ளுக்குள்ள தெரியுது.

எல்லாம் மாயைன்னு ஒரு நிலை.

ஆனா, முற்றிலும், கடவுளைத் துறந்த நிலையும் இல்லை.

அட்லீஸ்ட், சாமியார்களையும், கோயில்களையும் துறந்த நிலைக்கு வந்துட்டேன்.

கடவுள் மீது பற்று இருக்கத்தான் செய்யுது.

அதை பல சமயங்களில் உணரவும் செய்திருக்கிறேன். சமீபத்தில், 15000 அடிக்கு மேலிருந்து ப்ளேனிலிருந்து குதித்த சில நொடிகளுக்கு முன், உள்ளூர, ஒரு ஸைலண்ட் கும்பிடு போட்டது நினைவுக்கு வருகிறது. இப்படி, 'பெரிய' கஷ்டங்கள் வரும்போதும், வேர வழியே இல்லாத கணங்களிலும், கடவுள் உள்ளிருந்து, நான் இருக்கேன் கலங்காதேன்னு சொல்ற மாதிரி ஒரு பீலிங் வரத்தான் செய்கிறது.
இந்த மாதிரி, தத்துனூண்டு பற்று இருக்கரதும் நல்லது தானே?
ஒண்ணுமே இல்லன்னா, மரக்கட்டை ஆயிட மாட்டோம்?

கடவுள்னு ஒருத்தர் இருக்காரோ இல்லியோ, நமக்கு மேல் ஒரு மகா சக்தி ஒண்ணு கண்டிப்பா இருக்கு. Men in Black படத்தில் கடைசியில் பெயர் போடும் போது, ஒரு அருமையான கிராஃபிக்ஸ் இதை உணர்த்தும்.
கேமரா கீழிருந்து சர்ர்ர்ர்ர்னு மேலப் போய், பூமிக்கு மேல போய், கோளங்களுக்கு மேலப் போய், நட்சந்திரங்களுக்கு மேலப் போய், பல காலக்ஸிகளுக்கு மேல போயிக்கிட்டே இருக்கும்.
அப்பாலிக்கா பாத்தா, ஒரு பெரிய ஏலியன் ஜந்து, பலப் பல காலக்ஸிகளை, கோலிகள் மாதிரி, இங்கேருந்து அங்க, அங்கேருந்து இங்கன்னு அடிச்சு விளையாடிக்கிட்டு ஒரு பெரிய பைல ஒவ்வொண்ணா எடுத்து போட்டுக்கிட்டு இருக்கும். (பாக்காதவங்க, must see)

ஏலியனோ, சிவனோ, காளியோ, பரமபிதாவோ, அல்லாஹ் வோ, ஏதோ ஒண்ணு, நம்ம எல்லாத்தையும் ஆட்டிப் படச்சுக்கிட்டுத்தான் இருக்கு.

இதில் பல விஷயங்கள் இன்னும், பெத்த பெத்த மேதாவிகளுக்கே புரியாத புதிராதான் இருக்கு.
உதாரணத்துக்கு, இயற்கையில் பரவலாய் இருக்கும் fibonacci seriesன் தாக்கம்.
சமீபத்தில் ஸ்டாக் மார்க்கெட்டில் ஜூதாடலாம்னு, சில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஸ்டாக் மார்க்கெட்டில் வாங்கி/விற்கும் பங்குகளின் விலையின் ஏற்ற இறக்கத்திலும் கூட, இந்த fibonacci ratioவின் தாக்கம் இருக்கு. நமக்குத் தெரியாமலேயே, நம் ஒட்டு மொத்த நடவடிக்கைகளும், ஏதோ ஒரு ஏற்ற இறக்க வரையரைக்குள் கட்டுப் படுது.

இந்த 'சக்தி'யெல்லாம் ஒரு பக்கம் திகைப்பை தந்தாலும், முன்னிருந்த, 'பய பக்தி' காணாம போயிடுச்சு. இது, ஒவ்வொரு வருஷமும் கடந்து செல்லும்போது வரும், 'பக்குவமா', இல்ல, ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் வந்து, கவலைகள் கலைந்ததும் வரும், 'திமிரா'ன்னு புரியல்ல.

எது எப்படியோ, பதிவின் தலைப்புக்கு வரேன். லெஸ் டென்ஷன் :)

இப்படி யோசிச்சுக்கினே இருக்கும்போது, சமீபத்தில் singainathan கிட்டயிருந்து ஒரு பின்னூட்டம்,
"
ரொம்ப நாளா சொல்லனும்னு (நெனச்சிருந்தேன்)
அழிப்பவன் அல்ல அளப்பவன் என்பதே பொருத்தமானது இல்லையா ?
அன்புடன்
சிங்கை நாதன்

"

ஆக்கியவனுக்கு பதிலா அழிப்பவன்.
ஹ்ம். யோசிச்சுப் பாத்தா, இது நியாயமாவே பட்டுது.

ஒரு விதத்தில், கடவுள் நம்பிக்கையை முழுசா விட்டுட்ட மாதிரியும் காட்டல.
இன்னொரு பக்கம், ஊரில் நிகழும், கஷ்டநஷ்டங்களை பரைசாற்றும் விதமாவும் இருக்கு.

50%க்கு மேல் பரம ஏழையாய் நம் மக்கள்...
நம்மைச் சுற்றிலும், பல இடங்களில், இனப் படுகொலைகள்...
ஏழைகள் மேலும் ஏழைகளாய்...
நல்லவர்களுக்கு தொடர் கஷ்டங்கள்...
எக்ஸட்ரா... எக்ஸட்ரா...

பில்டப்பு கொஞ்சம் ஓவரா ஆகர மாதிரி தெரியுது. அதனால, இத்தோட அடக்கி வாசிச்சுக்கறேன்.

அதாவது, பொது ஜனங்களே, எமது தளம், இன்று முதல்,
"சர்வேசன் - அழிப்பவன் அல்ல அளப்பவன்" என்ற தலைப்புடன் வலம் வரும்.

எமது கொள்கையாக,
"என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்..." என்பதும் பரை சாற்றப்படும்.

நோட் த பாயிண்ட் - "செய்வேன்"னு சொல்லல. "செய்வோம்"னு சொல்லியிருக்கேன்.

என்னால் முடிந்தவரையில் நான் பதிவு வழியாகவும் வாழ்வியல் வழியாகவும், உங்களால் முடிந்தவரையில் பின்னூட்டங்கள் வழியாகவும், உங்கள் வாழ்வியல் வழியாகவும்,
"என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்..."

சந்தோஷத்தை பரைசாற்ற, கலரும் மாற்றப்பட்டது. டெம்ப்ளேட்டும் மாற்றப் படலாம்.

SO GOD, GIVE US STRENGTH!

Amen!

Sunday, September 20, 2009

நம்மில் ஒருவன் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க!

உண்மைத்தமிழன் எம்புட்டு தெகிரியமானவருன்னு நமக்கு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.
போலியை போளியாக பெரட்டிப் போட்டுட்டு, ரொம்பவே சிரமம் எடுத்துக்கிட்டு இன்னிவரைக்கும் மல்லுக்கட்டிக்கிட்டு, நம் மத்தியில் இருக்கும் பல கழிசடைகளை வெளிச்சம் போட்டு காட்டிக்கிட்டும் இருக்காரு.

நமக்கேன் வம்புன்னு ஒதுங்கியே பழக்கப்பட்டுப் போன நம்மிலிருந்து, இப்படி விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான், "ஏன்?"னு கேள்வி கேக்கறவங்க பொறப்பட்டு, சிரிய/பெரிய மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்வார்கள்.

உண்மைத்தமிழன் அவர்களுக்கு ரிஸ்க்கு எல்லாம் ரஸ்க்கு திங்கரதைப் போல. அவர் வல்லவர், நல்லவர், நாலும் தெரிஞ்சவர்.
(இப்படி ஏத்தி விட்டே ரணகளமாக்கிடுவோம்ல ;) )

இப்பேர்பட்ட உண்மைத்தமிழன் அண்ணாத்தையின் சமீபத்திய சாதனையை படிக்கத் தவறாதீர்கள்.

உன்னைப் போல் ஒருவன் - திரைப்படம் பார்த்த கதை..!

எனக்கு ஒரே வருத்தம், இவரு இன்னும் கொஞ்ச நேரம், தியேட்டர் காரனுக்கு டார்ச்சர் கொடுக்காம, உள்ளப் போனதுதான். உள்ளப் போனதும் இல்லாம, அதுக்கு ஒரு விமர்சனம் வேர எழுதி கொடுமப் படுத்தியிருக்காரு.

திருட்டு விசிடியும், ஆன்லைனில் கிட்டும் ஓசிப் படங்களும் வாள்க வாள்க! இதையெல்லாம் வளக்கரதுல, திரையரங்கத்துக்கு சென்று படம் பார்ப்பதை பெரிய சர்க்கஸ் மாதிரி ஆக்கி வைத்திருக்கும், அரங்க உரிமையாளர்களும், ப்ளாக்கில் விற்கும் ரவுடிகளும், மாமூல் வாங்கும் காவலதிகாரிகளுமே காரணம்.

அண்ணாத்தைக்கு ஏற்பட்ட கசப்பனுபவத்தை முன்னிட்டு, என் எதிர்ப்பை பதிவு செய்ய, நான் உன்னைப் போல் ஒருவனை தியேட்டரில் போய் பார்க்கப் போவதில்லை.

ஐ வில் வெயிட் ஃபார் டிவிடி!!!

உ.ஒ டிக்கெட்டை வழக்கமான $10ஐ விட, $12க்கு விற்பதை பார்த்த நான் ஏற்கனவே கடுப்பில் இருந்தேன். இப்போ உ.த விவகாரம் வேர சேந்துக்குச்சு.
என் $24 தப்பிச்சுது. அஞ்சப்பருக்கு போய் மட்டன் சுக்கா ரோஸ்ட் சாப்பிடலாம் ;)

Thursday, September 17, 2009

இன்னா தில்லுபா?

கராத்தே க்ளாஸ் முடிச்சுட்டு வர பசங்கள பாத்தீங்கன்னா, ஒரே பர பரன்னு இருப்பாங்க. மச்சி, இப்பதான் சூடு மணலை வறுத்துட்டு வரேன், யாரையாவது போட்டு அடிக்கணும் போலருக்கும்பானுங்க.

அதே மாதிரி தான் எனக்கு இருக்கு. ஸ்கை டைவிங் முதல் கட்ட குதித்தல் செஞ்சு முடிச்சதும், அடுத்தது என்னன்னு ஒரே பர பரன்னு இருக்கு.

கடந்த சில தினங்களாக ஸ்கை டைவிங் விஷயங்களா கண்ணுல படுது.
குறிப்பா, சில சாகசங்களைப் பாத்தா, ஒரே டெம்ப்ட்டிங்கா இருக்குது.

ஆனால், ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்கு சாப்பிடர மாதிரின்னாலும், வேறு சில வீடியோக்களைப் பாத்தா தில்லு போயி திகிலாயிடுது.

இந்த சாகசத்தைப் பாருங்க. மிஞ்ச முடியுமா இத்தை? (Amazing base jump)


இது திகில் வகை:


இது திகிலோ திகில்: எண்டே குருவாயூருப்பா!


இது டக்கரு. ஒரு ஏரோப்ளேனிலிருந்து இன்னொன்றுக்கு தாவறாரு. அடேங்கப்பா!


கூட்டி கழிச்சு பாத்தா, ஸ்கை டைவிங்கில் இருக்கும் விபத்துகளை விட, சாதா காரில் போகும் போது நடக்கும் விபத்துக்குத்தான் ப்ராபப்லிட்டி அதிகமாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

ஹாப்பி வெள்ளி!

Monday, September 14, 2009

60 விநாடிகள் டெரரான கதை...

முந்தைய பதிவில் நான் எந்தளவுக்கு நல்ல பையன்னு எடுத்து விளம்பியிருந்தேன். அதே அளவுக்கு நானு வீர தீர பராக்ரமங்கள் புரிவதில் வல்லவனும் கூட. ( யாரோ, எங்கையோ, பதிவுகள் பலவும் சுய தம்பட்டங்களாத்தான் இருக்குன்னு புலம்பியது நினைவில் வந்து தொலைக்கிறது ).
அது இன்னா வீர தீர பராக்ரமங்கள்னு கேக்கரவங்க மேலப் படிங்க.

ஓடர எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏற்றது,
பல்லவன்ல தொங்கிக்கிட்டு போறது,
நண்பனுடன் சைக்கிள்ள டபுல்ஸ் போகும்போது பின் கேரியரில் ஓடிக்கினே இருக்கும்போது ஏறி அமர்வது,
பீச்சுக்கு போனா, மொழங்கால் நனையர அளவுக்கு உள்ள போயி தெகிரியமா நிக்கரது,
ரெண்டு கை விட்டு சைக்கிள் ஓட்டுவது,
ஏதாச்சும் கோயிலை கிராஸ் பண்ணும்போது புள்ளையாருக்கு ஃபளையிங் கிஸ் கொடுக்காம தாண்டிப் போரது,
லைஸென்ஸ் இல்லாம டூவீலர் ஓட்டரது,
எக்ஸட்ரா... எக்ஸட்ரா...

இப்படி டெரரா வாழ்க்கை வாழர நமக்கு, ரோலர் கோஸ்டரில் போவதெல்லாம், பச்சத் தண்ணி குடிக்கர மாதிரி. எல்லா விதமான ரோலர் கோஸ்டரிலும், ரோலி வந்திருக்கிறேன்.
தலைகீழ போரது, பொரண்டுகினு போரது, சர்ர்ர்னு போரது, ஜிவ்வ்வ்னு போரது, எல்லாமே.
இதைத் தவிர, லாஸ் வேகஸில் இருக்கும், Stratosphere என்ற காஸினோவின் மொட்டை மாடியில் இருக்கும், big shots என்னும் கேளிக்கை ரைடிலும் டமிலன் கொடி பறக்க விட்டு வந்திருக்கிறேன்.

இப்படி வீர தீர செயல்களைச் செய்து பழகிய எமக்கு ஒரு சூழ்நிலையில் இதுக்கு மேல என்னா பண்றதுங்கரதுன்னு தெரியாம பெரிய கொழப்பமாயிடுச்சு.
ரோலர் கோஸ்டர்களெல்லாம் போதையை தராமல், சாதா பஸ்ல போர மாதிரி இருந்துச்சு.

அடாடா, என்னடா இப்படி ஆயிடுச்சே, இனி ராக்கெட்ல ஏறி ஸ்பேஸுக்கு போனாதான் நமக்கு வேண்டிய கிக்கு கிடைக்குமோங்கர அளவுக்கு கவலை ஏறிடுச்சு.

இப்படி கவலையாய் யோசித்துக் கொண்டிரூந்த ஒரு சுபயோக சுபதினத்தில் தான் அந்த ஐடியா உதித்தது. Bunjie jumping பண்ணாலாமா இல்ல white water rafting போலாமான்னு.
நான் இருக்கர எடத்துக்கு பக்கத்துல இந்த ரெண்டுமே இல்லை. அப்படியே தேடிப் பாக்கும்போது, என் தவத்தின் பலனாக, இன்னொரு மேட்டர் கண்ணுல பட்டுது.
sky diving. ஆகாககாகா, இது நல்லாருக்கேன்னு மேல மேஞ்சு பாத்தேன்.

எங்க வீட்ட சுத்தி பல இடத்தில் இதப் பண்ணலாம்னு தெரிஞ்சுது. துட்டு ஜாஸ்தி, ஆனா, எமது பராக்ரமத்துக்கு சற்றும் குறைவில்லாமல் கிக்கூட்டக் கூடியதுன்னு தெரீஞ்சது.

குட்டி ப்ளேன்ல மேல கூட்டிக்கிட்டு போயி, 15,000 அடியிலிருந்து பேராஷூட் கட்டிக்கிட்டு கீழ குதிக்கலாம். படிக்கவே நச்னு இருந்தது.

இதிலும், பலவகை இருக்கு.
$400 குடுத்தா, தனியா குதிக்க விடுவாங்க. மூணு மணி நேரம் எல்லா வித்தையையும் சொல்லிக் கொடுத்து, டாடா சொல்லி குதிக்க விடுவாங்க. நல்ல ஸ்டூடண்ட்டா இருந்தா, சரியான நேரத்துல பேராஷுட்டை தொறந்துட்டு சமத்தா எறங்கலாம்.
கொஞ்சம் அரவேக்காடாயிருந்தா, எக்குதப்பா பேராஷுட்டை தொறந்து, கண்ட எடத்துல விழுந்து சுக்கு நூறு டேமேஜ் ஆகும் வாய்ப்பிருக்கு.
யோசிக்க வேண்டியதேயில்லை, நான் அரவேக்காடுதான். என்னை நம்பி நான் இதில் தனியா எறங்கரது, பதிவுலகத்துக்கு நல்லதில்லைன்னு முடிவு பண்ணேன்.

$200 குடுத்தா, நம்மளை இன்னொருத்தர் ஒடம்போடு கட்டிக்கினு, அவருகூட கீழ குதிக்கலாம். இதுல நம்ம மூளைக்கு வேலையில்லை. சர்ர்ர்ர்னு கீழ வர்ரதை அனுபவிக்கரது மட்டும்தான் நமக்கு வேலை. பேராஷூட் தொறக்கரது, ஸ்மூத்தா கீழ எறக்கரது எல்லாம் அவரு வேலை. சரி, நமக்கு தோதானது இதுதான். அடுத்த முறை பெரிய போதை தேவைப்பட்டா $400 பத்தி யோசிக்கலாம்னு, $200 இன்னொருத்தரை கட்டிக்கினு குதிக்கரதை சூஸ் பண்ணிக்கிட்டேன்.

பல இடங்களில் இது இருந்தாலும், பசிஃபிக் கடலுக்கு அருகாமையில், நல்ல சீனிக்கா இருக்கும் இடத்தை தேர்விக் கொண்டேன். எக்குத்தப்பா விழுந்தாலும், தண்ணியில விழலாமோன்னு ஒரு அல்ப்பாசைதான்.

காசு வாங்கிக்கிட்டு அம்மணி ஒரு பத்து பக்கத்துக்கு ஃபார்ம் கொடுத்தாங்க. முப்பது கையெழுத்து கேட்ட்டாங்க. என்ன ஆனாலும், கொம்பேனியார் பொறுப்பில்லை, சகலத்துக்கும் நானே பொறுப்புன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க.

ரெண்டு மணி நேரம் ஒக்கார வச்சு, வீடியோவெல்லாம் போட்டு காமிச்சாங்க. நல்ல த்ரில்லிங்கா இருந்தது. ஆனா, ஒண்ணுமே எனக்கு சொல்லிக் கொடுக்கல.
John வந்தாரு. இன்னாப்பா ஜானு, பேராஷூட்டை எப்படி தொறக்கணும், அது இதுன்னு கேள்வி கேட்டேன்.
அதுக்கு அவரு, "யோவ் நான் எல்லாத்தையும் பாத்துப்பேன், நீ கைய கட்டிக்கிட்டு சைலண்டா இருந்தா போதும். நான் உன் கைய தட்டும்போது, கைய விரிச்சு வச்சுக்கணும், பின்னாடி எட்டி ஒதைக்கும்போது, கைய மூடிக்கணும், அவ்வளவுதான் நீ பண்ணனும்னு" சொன்னாரு.
என்னதான், வீரனாயிருந்தாலும், புது விஷயங்கரதால, அவரு சொல்றதை கிளிப்புள்ளை மாதிரி கேட்டுக்கிட்டு தலையாட்டிட்டேன்.

பெரிய பெல்ட்டெல்லாம் கட்டி விட்டாரு. நானும் ஜானும், ஃபோட்டோ புடிக்கரவரும், குட்டி ப்ளேனுக்கு போணோம்.
ப்ளேன் டெரரா இருந்துச்சு. நம்ம ஊரு மாங்காட்டுக்கு போற 66ஆம் நம்பர் பஸ்ஸு கூட புச்சா இருக்கும். இந்தப் ப்ளேனு தகர டப்பா கணக்கா இருந்துச்சு. பைலட்டை தவிர நாலு பேரு தரைல ஒக்கார எடம் இருந்துச்சு. கைப் பிடி ஒண்ணும் இல்ல.
ஜான் ஒக்கார, நான் அவரு மடியில ஒக்காந்திக்கினேன்.
ஜான், என் பெல்ட் பட்டையை, அவரின் ஒடம்பில் இருந்த பிணைப்புடன் பிணைச்சுக்கிட்டாரு.
ப்ளேன் டரக் டரக் டரக்னு கெள்ம்பிச்சு.
செம சத்தம், செம ஆட்டம். மேல மேல போயிக்கினே இருந்துது.

ஜானு, எல்லாம் சரியா சொல்லிட்டியா என்கிட்ட, எதையும் மறக்கிலேயேன்னேன். இல்லன்னாரு. கைல தட்டினா கைய தொர, பேக்ல எட்டி ஒதச்சா கைய மூடுன்னாரு. மந்திரிச்சு விட்ட மாதிரி சரின்னேன்.

ஃபோட்டோகிராஃபர் ஹெல்மெட்டு மேல கேமரா/கேம்கார்டர் எல்லாம் வச்சுக்கிட்டு எதையோ பேட்டி எடுத்துக்கினே வந்தாரு. மந்திரிச்ச நெலமைல என்ன கேட்டாரு என்ன சொன்னேன்னு எனக்கு பெரிய நெனவெல்லாம் இல்ல.

5000 அடி, 10000 அடி, 12000 அடின்னு சர்ர்ர்ர்ர்னு மேல மேல அந்த குட்டிப் ப்ளேனு ஏறிக்கிட்டே இருந்துச்சு. மூஞ்சீல காத்து அடிக்குது. கீழ பாத்தா, காரெல்லாம் கடுகாத் தெரியுது, மேகத்துக்கு மேல வந்தாச்சு, கடல்லே கப்பல் தெரியுது, ரோட்டுல காரு தெரியுது.

ஜான், "இன்னும் 3000 அடிதான், 2 நிமிஷத்துல ரெடியாயிடலாம், கண்ணாடிய போட்டுக்கோ"ன்னாரு. ஃபோட்டோ காரரு. "ஆர் யூ ரெடி"ன்னாரு.
டிக்கெட் இல்லாம, டிடிஆர் கிட்ட மாட்டின கணக்கா, "யெஸ் ஸார்"னேன்.

"ஓ.கே வீ ஆர் அட் 15,000 ஃபீட், லெட்ஸ் ஜம்ப்"ன்னு ஃபோட்டோகிராஃபர் சொல்லிட்டு, கதவத் தொறந்து டகால்னு குதிச்சிட்டாரு.
150 மைல் வேகத்தில் ஓடிக்கினு இருக்கு அந்த தகர டப்பா ப்ளேனு, சகலமும் ஆடுது.
குதிச்சவரு, விஷ்ஷ்ஷ்ஷுனு மறஞ்சுட்டாரு. ஜான் மடியில நானு. ஜான் என்னையும் வலிச்சுக்கினு ப்ளேனின் ஓரத்தில் ஒக்காந்து காலை வெளியில போட்டுக்கிட்டாரு. அவரு மடியில இருக்கர நானு, ப்ளேனுக்கு வெளியில தொங்கிக்கினே ஒக்காந்துருக்கேன்.

"டேய்ய்ய்ய் இதெல்லாம் தேவையான்னு" மனசாட்சி கன்னாபின்னானு @#$#@$!$$#@$#$@#$@# திட்டிய கணங்கள் அவை.
ஜான் கட்டை விரலை உயர்த்தி "ரெடியா?"ன்னாரு. கட்டை விரலை தலைகீழா காமிச்சு இல்லன்னு சொல்லலாமான்னு ஒரு சபலம் வந்துச்சு. ஆனா, அதற்குப் பிறகு அதை நெனச்சு நெனச்சு புழுங்க வேண்டி வருமேன்னு தோணிச்சு. ஆனது ஆச்சு, எல்லாம் அவன் பாத்துப்பான்னு, நடுங்கிய கட்டை விரலை உயர்த்திக் காணிபிச்சேன். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு, அடுத்த 10 விநாடிகள் நினைவில் இல்லை.

ஜான், விஷ்ஷ்ஷ்ஷ்க்னு ப்ளேனை விட்டு கீழ குதிச்சிட்டாரு.

ஓடர சைக்கிள்ளருந்து எறங்கியிருக்கேன், ஓடர பஸ்ல இருந்து எறங்கியிருக்கேன், ஓடர ட்ரெயின்ல இருந்து கூட எறங்கியிருக்கேன். ஆனா, ஓடர ப்ளேன்லயிருந்து இப்பத்தான் மொத தடவ எறங்கறேன். அந்த திகிலை சொல்ல வார்த்தையே இல்லை.
குப்புர பறக்கறேன். சைடா பறக்கறேன். நேரா பறக்கறேன்.
10 விநாடி இப்படி போவுது, ஒன்னியும் புரியல.

திடீர்னு ஸ்ட்ரெயிட்டா கடப்பார நீச்சல் அடிக்கர மாதிரி பறக்கறேன். எனக்கு நேரா என் ஃபோட்டோகிராஃபர், எனக்கு முன்னாடி குதிச்சவரு, ஏதோ எதிர் நீச்சல் போட்டு என்னை தேடி வர மாதிரி, எனக்கு முன்னாடி மெதக்கறாரு. நானும், உள்ளூர இருக்கர கிலியெல்லாம் வெளீல காட்டாம, ஈன்னு பல்ல இளிச்சுக்கினு போஸ் கொடுத்தேன்.

ஜான், வலது கைய லேசா இப்படி ஆட்டினா, ரங்க ராட்டினம் கணக்கா சுத்தறோம். எடது கைய இப்படி மடிச்சா விஷ்ஷ்ஷுனு ஒரு பக்கமா திரும்பறோம். முப்பது விநாடிகள் இப்படி பிரமாதமா போச்சு.
அப்பாலிக்கா, ஜான் ஃபோட்டோகிராஃபைரை பாத்து திரும்ப கட்டை விரலை உயர்த்தினாரு.
ஏதோ விபரீதம் நடக்கப் போவுதுடோய்ன்னு நெனச்சுக்கிட்டே இருக்கும்போது, திடீர்னு ஒரு முப்பது அடி மேல யாரோ பிடிச்சு தூக்கி விட்ட மாதிரி இருந்துச்சு.
பாத்தா, ஜான், பாராஷூட்டை தொறந்து விட்டுட்டாரு. காத்துல அது சிலுப்பிக்கிட்டு எங்கள மேல இஸ்துக்கினு போச்சு. அப்பரம், ஜான், அதன் கயிறை புடிச்சு கட்டுப் படுத்தி, காத்தாடி மாதிரி எறக்கிக்கிட்டே வந்தாரு.
அடேங்கப்பா, அந்த மெதக்கும் அனுபவத்துக்கு, $200 தாராளமா கொடுத்திடலாம்.
இதற்கிடையில், ஃபோட்டோகிராஃபரும், பாராஷூட்டை தொறந்துக்கிட்டு வேகமா எறங்கிட்டாரு.
நாங்க தரைய தொடரதுக்குள்ள அவரு தரைய தொட்டு, போட்டொ புடிக்க ரெடியாயிட்டாரு.

வட்டம் அடிச்சு, ஆடி அசஞ்சு, ஜான் மெதுவா தரையில் எறங்கினாரு. லேசா குதிக்கர மாதிரி கூட ஒரு அதிர்வு இல்லை. பஞ்சு மேல எறங்கிர மாதிரி தரையில காலைப் பதிக்க எதம் பதமா எறக்கி விட்டாரு.

இறங்கியதும், வழக்கமான வீடியோக்காரரின் கேள்விகளுக்கு, திகில் காட்டாமல் பதிலளித்து, எனது வானத்துக் கரணத்தை (sky diving) இனிதே நிறைவு செய்தேன்.

சூப்பர் அனுபவம்.

செஞ்சு பாக்கர ப்ராப்தி இருக்கரவங்க, கண்டிப்பா செஞ்சு பாருங்க. ஜஸ்ட் $200 குதிக்க + $100 படம் புடிக்க + $ப்ரைஸ்லஸ் அனுபவம்.

அடுத்த டெரர் என்னா பண்ணலாம்னு ஒரே ரோசனை. எனி டிப்பு?

இது நானும் ஜானும் பாசப் பிணைப்புடன் குதித்த காட்சி. வாழ்க ஜான்! வாழ்க வாழ்க!


இது பாராஷூட் தொறக்கும் போது புடிச்ச படம்:


வாக்க மறவாதீர்கள். தமிழ்மணம் ரியல் எஸ்டேட் ரொம்ப காஸ்ட்லியாயிட்டே இருக்கு. நீங்க வாக்குனாதான் என் வீர தீர ப்ரதாபங்கள் அநேகம் டமில் நெஞ்சகளை சென்றடையும். வாக்கு வாக்கு! :)

Monday, September 07, 2009

Guess what படம் இது?

படத்தை க்ளிக்கி பெருசா பாத்துட்டு கெஸ்ஸுங்க.





பி.கு: new scientist போட்டி நடத்தறாங்க. இதுவரைக்கும் எதை படம் புடிக்கரதுன்னு ஒரு ஐடியாவும் தோணலை. ஐடியாஸ் இருந்தா அள்ளி வீசுங்க.

Sunday, September 06, 2009

களவும் கற்று மற...

நான் நேச்சுரலாவே ரொம்ப நல்ல பையன் (நம்புங்க).
சூது வாது தெரியாத அப்ராணி (இதையும் நம்புங்க).
கள்ளம் கபடமில்லா வாயில் விரல் வச்சா கடிக்கத் தெரியா பச்சிளம் பாலகன் (இத நம்பரது உங்க இஷ்டம்).

ரொம்ப கால்குலேஷன் எல்லாம் பண்ணி, வாழ்க்கையை குழப்பிக்கரது இல்லை. ரொம்ப சிம்பிளா சீரா, மேலோட்டமா எல்லாத்தையும் பாத்து பண்ணியே பழக்கப்பட்டுப் போச்சு.
யாரையும் இதுவரை ஏமாத்தினது இல்லை.

கிரிக்கெட் விளையாடும் போது கூட, பந்தை தூக்கி சர்ர்ர்னு அடிச்சு, ஃபீல்டிங் நிக்கரவனுக்கு கைக்கு மேல கேட்ச் கொடுத்துத்தான் பழக்கம். ஆள் இல்லாத எடத்துல பந்தை அடிச்சு எதிராளியை கூட ஏமாத்தினது கிடையாது.
இதே, மேலோட்ட, சீரான வாழ்வியல் முறை தான், வாலிபால் விளையாடும் போதும், பேட்மிண்டன் விளையாடும் போதும், ஃபுட் பால் விளையாடும் போதும்.
ஓ.கே, ஓ.கே நான் அப்பாவின்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.

இப்பேர் பட்ட எனக்கு, ஆரம்ப காலத்தில், கல்லூரி காலங்களில் சகவாசம் சரியா இருந்ததில்லை.
கொஞ்சம், 'பொறுக்கிப் பசங்க' ( மச்சீஸ், சாரி ) சகவாசம் இருக்கும்.
இவனுங்க போர எடத்துலையெல்லாம் அலம்பல் பண்ணாம வெளீல வரமாட்டாங்க. பஸ் டிக்கெட், எந்த காலத்துலையும் எடுத்ததே இல்லை. லாண்ட் மார்க் மாதிரி கடைகளுக்குப் போனா, க்ரீட்டிங் கார்ட்ஸ் மாதிரி ஐட்டங்களை சுடுவானுங்க.
ஸ்பென்ஸர்ஸ் எல்லாம் போனா, ஜீன்ஸ் மேலையே பூது ஜீன்ஸ் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகும் கைங்கரியர்கள்.

இவனுங்க கூட சுத்தும் போதும், நான் இப்படியெல்லாம் பண்ணினதில்லை. இயன்றவரை, குட் சிட்டிசனாவே இருந்திருக்கேன்.

ஆனா, இவங்க சவகாசம் உள்ளூர செய்த மாற்றமோ என்னமோ தெரீல, அப்பப்ப ஒரு வில்லத்தனமா ஐடியா எட்டிப் பாத்துக்கிட்டே இருந்துச்சு.

இங்க (கலிஃபோர்னியா), சினிமா தியேட்டர்கள் எல்லாமே, மல்டி-ப்ளெக்ஸ். அதாவது, குறைஞ்சது, பன்னிரெண்டு குட்டி குட்டி தியேட்டர் இருக்கும். உள்ளே நுழைய மெயின் எண்ட்ரென்ஸில் மட்டும் டிக்கெட் பரிசோதனை இருக்கும். உள்ள போனப்பரம் கண்டுக்க மாட்டாங்க்ய.

ஆனா, பாருங்க, இந்த ஊர்ல இருக்கரவங்க, நேர்மை நாணயம் கட்டுப்பாடு இதெல்லாம் ரத்தத்துலையே ஊரினவங்க. நம்மள மாதிரி நேர்மை கிலோ என்னா விலைன்னு கேக்க மாட்டாங்க.
சில கடைகளில், புதிய செய்தித் தாளெல்லாம் வாங்கணும்னா, நமக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு, சரியான காசை அங்க இருக்கர டப்பால போட்டுட்டா போதும். சரியான தொகையை போடரமான்னு சரிபார்க்க ஆள் கூட இருக்க மாட்டாங்க. அம்புட்டு நெம்பிக்கை இவனுங்களுக்கு.

இப்படி நேர்மை ஓவரா இருக்கரதால, சினிமா தியேட்டர்களில், பொத்தாம் பொதுவா வாசலில் மட்டும் டிக்கெட்டை பாத்துட்டு உள்ள விட்டுடுவாங்க.

ரொமப நாளாவே, உள்ளிருக்கும் மிருகம், தியேட்டருக்குள்ள நுழைஞ்சு ஒரு படம் பார்த்ததும், அப்படியே அடுத்த படம், அதற்கடுத்தப் படம்னு, முடிஞ்சவரை ஓசியில நிறைய படம் பார்க்கணும்னு, சொல்லிக்கிட்டே இருந்துச்சு.

ஒவ்வொரு தடவை இப்படி படம் பாக்க போகும்போதும், அடுத்த தியேட்டருக்குள்ள நைஸா போகலாமான்னு தோணும். ஆனா, அந்த நேரம் பாத்து, செக்யூரிட்டி நம்மளையே பாக்கர மாதிரி ஒரு மனப்பிராந்தி இருக்கும். அதனால, சமத்தா வெளீல வந்துடுவேன்.

ஆனா, சமீபத்தில், நாள் கெழமையெல்லாம் சரியா அமஞ்சிடுச்சு. ஹாரி பாட்டர் பாக்க போயிருந்தேன். கூட கஸினும் வந்திருந்தான்.
ஹாரி பாட்டர் எனக்கு சுத்தமா புடிக்கலை. குடுத்த காசுக்கு, திருப்திகரமா இல்லை.
உள்ளிருக்கும் மிருகம், "சர்வேசா, பக்கத்து தியேட்டர்ல UP ஓடுது. குடுத்த காசுக்கு அத்த ஓசில பாத்தாதான் கணக்கு சரியா வரும், தயங்காமல் நைசா உள்ள போ"ன்னு சொல்லிச்சு.
அடாடா, UP நல்ல படமாச்சே, பிக்ஸார் எடுத்ததாச்சேன்னு ஒரு சபலம் வந்துச்சு.

கூட வந்த கசின் கிட்ட, பிட்டப் போட்டேன். அவனோ, "இந்த திருட்டு வேலைக்கு நான் கூட்டு சேர முடியாது"ன்னு எஸ்கேப் ஆயிட்டான்.

இந்த தடவையும் ஒரு செக்யூரிட்டி என்னையே பாக்கரமாதிரி இருந்துச்சு. ஆனா, விட்டுட்டு போகவும் மனசு வரலை. ஒரு தடவையாவது, இந்தத் திருட்டுத்தனத்தை பண்ணிப் பாக்கலன்னா, ஆய கலைகள் அறுபத்தி நாலுல ஒண்ணு பண்ண முடியாத பாவி ஆயிட்டேன்னா இன்னா பண்றதுன்னு ஒரே கவலையாயிடுச்சு.

செக்யூரிட்டி டபாய்கலாம்னு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடக்க ஆரம்பிச்சேன். ரிஸ்க் எடுத்து பாக்கரதுதான் பாக்கரோம், UPஐ விட நல்ல படம் வேர இருக்கான்னு தேடிப் பாத்தேன். மத்தது எதுவும், ப்ரகாசமா தெரீல. திரும்ப UP வாசலுக்கே வந்து, செக்கூரிட்டி அந்தப் பக்கம் திரும்பியதும், நான் இந்தப் பக்கமாய் கதவுக்குள்ள பூந்துட்டேன்.
படம் இன்னும் ஆரம்பிக்கலை. ஆனா, இருட்டு. ரெண்டாவது வரிசைல போய் ஒக்காந்துட்டேன்.
இங்க சீட் நம்பர் எல்லாம் கிடையாது. ஸோ, யாரும் வந்து எழுப்ப மாட்டாங்கன்னு தெகிரியம். ஆனா, UP புது படம். ஹவுஸ் ஃபுல்லாயிடுச்சுன்னா, ப்ரச்சனையாயிடுமேன்னு தோணிச்சு. பின்னாடி திரும்பி பாத்தேன். காலியாதான் இருந்துச்சு. ஸோ, அந்தப் ப்ரச்சனை இருக்காதுன்னு மனசுக்குள்ள முடிவு பண்ணிக்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சுது.

ஒவ்வொருத்தர் உள்ள வரும்போதும், உள்ளுக்குள்ள ஒரு பகீர் சின்னதா அடிக்கத்தான் செஞ்சுது. பிசாத்து, $10க்கு இவ்ளோ டென்ஷன் எல்லாம் படரது அனாவஸ்யம்னு அப்ப தோணிச்சு.
வெல், ஆனது ஆச்சு, ஒரு கை பாத்துடுவோம்னு முடிவு பண்ணி, கொஞ்சம் ரிலாக்ஸானேன்.

இவ்ளோ ரிஸ்க் எடுத்து பாத்திருந்தாலும், படம் பல்புதான். நல்லாவே இல்லை.
இதப் பாத்ததுக்கு, பக்கத்துல இருந்த இந்திப் படம் பாத்திருக்கலாமோன்னு தோணிச்சு.

ஆனது ஆச்சு, அதையும் பாத்துட்டுப் போயிடலாமான்னு ஒரு தோணல் வந்துது.

ஆனா, திரும்ப செக்யூரிட்டியை டபாய்ச்சு, இவ்ளோ தில்லாலங்கடியெல்லாம் பண்ணி, கவரிமான் முடியை அடமானம் வச்சுப் பாக்கரதெல்லாம் தேவையில்லா வேலைன்னு தோணிச்சு.
மிருகம், "சர்வேசா, பக்கத்துல தான் Star Trek ஓடுது, கமான் யூ கேன் டூ இட்"னு திரும்ப கத்திச்சு. ஓங்கி தலைல ஒரு சுய குட்டு குட்டிக்கிட்டு, எஸ்ஸாயிட்டேன்.

விரு விரு விருன்னு வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்கும்போது, "எக்ஸ்க்யூஸ் மீ"ன்னு ஒருத்தரு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. கபாளம் கலங்கிருச்சு.

திரும்பிப் பாத்தேன்.

யாரும் கண்ணுல ஆப்புடலை. திரும்ப "எக்ஸ்க்யூஸ் மீ"ன்னு கொரல் கேட்டுச்சு. திரும்ப கபாளம் கலன்க்சிருச்சு. திரும்பி பாத்தா, ஒரு வெள்ளக்காரரு, ஒரு வெள்ளக்காரம்மாவை பாத்து ஏதோ கேட்டுக்கிட்டிருந்தாரு. ஸ்ஸ்ஸ்ஸ்!

களவும் கற்று மற... ஆனா, கல்லாத மத்த விஷயமெல்லாம் கத்துக்கிட்டு, கடைசியா இதுக்கு வாங்க. அதிப் ப்ரசிங்கத்தனமா இதெல்லாம் பண்ணாதீங்க.
என் தெறமை உங்களுக்கு இருக்கணும்னு அவசியம் இல்லை, மாட்னீங்கன்னா, மானம் போயிந்தி. உஷாரு ;)


பி.கு: PiTன் இம்மாத தலைப்பு silhoutte சில்லுவெட்டு (கீழே, என் சில்லுவெட்டு. நான் எடுக்கலை. ஆனா, நான் இருக்கர சில்லுவெட்டு. இதன் விவரங்கள் கூடிய விரைவில் ;) )

Thursday, September 03, 2009

பழைய சாக்கடை...

எல்லாரும் கெளற்றாங்க்ய.. நானும்..
ஆனா, நோக்கம் நல்லதாம். அதாவது, லாங் லாங் அகோ, இப்படியெல்லாம் நடந்துச்சு.
யாரும், புச்சா மிஸ் அட்வென்ச்சர் பண்ணனும்னெல்லாம் நெனச்சு லைஃபை தொலைக்காதீங்க.
எழுதவும் படிக்கவும் எம்புட்டோ மேட்டரு கெடைக்கும்.
ப்ளாக் ரெஸ்பான்ஸிப்ளி! :)

டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

அனானி சைகோக்கு வேலி போட வாங்க‌...

டோண்டு ராகவன் - ஒரு அவசர அலசல் சர்வே!

PSYCHO Analysis - சர்வே

நேயர் விருப்பம்4 - போலிக்கு வேலி vs போலி ஜாலி...

Wednesday, September 02, 2009

சோனியா வாழ்க, காங்கிரஸ் வாழ்க வாழ்க!

ராய் பரேலி - அரசியல் விஷயங்கள் ஃபாலோ பண்ணாதவங்களுக்கும் இந்த பேரு தெரிஞ்சிருக்கும். உத்தர் பிரதேஷத்தில் இருக்கும் ஒரு நகரம்.

இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ், இந்தத் தொகுதில நின்னுதான் எம்பியானாரு.
1960ல் அவரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி, இதே தொகுதியில் நின்னு எம்பியானாங்க.
இதே தொகுதியில் நின்னு கெலிச்சுதான், ப்ரதமராகவும் ஆனாங்க. பிற்காலத்தில் தகராறெல்லாம் ஆனபோது, எமெர்ஜென்ஸி போட்ட ஆட்டியதும், இந்தத் தொகுதி கைவசம் இருந்த காலத்தில்தான் அரங்கேறியது.
இம்மாம் விஷயம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கர மாதிரி எடுத்து வுடறேனே, எல்லாம் தெரிஞ்ச ஏகாமபரம் நான்னு நெனச்சுக்காதீங்க. எல்லாம் விக்கியாரின் துணைதான்..

ராய் பரேலியில் பலப் பல எலெக்ஷணில் ஜெயிச்ச இந்திரா அம்மையாருக்குப் பிறகு 2004ல் இந்த இடத்தில் போட்டியிடுவதை சோனியா அம்மையார் தொடர்ந்தார். இப்ப கடைசியாக கடந்த தேர்தலிலும், சோனியா ராய் பரேலியில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி, பல்லாண்டு பல்லாண்டு பலப்பல பல்லாண்டு, காங்கிரஸ் ஆட்சி புரிந்த ராய் பரேலி, அமோகமான ஊரா மாறியிருக்கணும். 1967லிருந்து ஒவ்வொரு தேர்தல் வெற்றியின் போதும், பத்து தெருவுக்கு ரோடும், ஏதாச்சும் ஒரு தொழிற்சாலையையும் தொடங்கியிருந்தாலே, ஊரு இந்நேரத்துக்கு சொர்கபுரியாயிருக்கும், மக்களும் சுபிட்சமாயிருந்திருப்பாங்க. பத்தா குறைக்கு, ப்ரதம மந்திரியின் தொகுதி வேற இது. குறைந்தது 20 ரோடு, ரெண்டு தொழிற்சாலையாவது வந்திருக்கணுமே.

இவ்ளோ காலமா, இப்படி மாத்தி மாத்தி ஆட்சி புரிஞ்சும், அந்த ஊருக்கு ஒன்னியும் நடந்த மாதிரி தெரியல.

கடந்த வாரத்தில், சோனியா அம்மையார், ராய் பரேலி தொகுதிக்கு டூர் போனாங்களாம் (இத்தையாவது பண்றாங்களே), அப்ப அங்க இருக்கும் குடிமக்களை பாத்து அவங்க நிறை குறைகளைக் கேட்டு ஸ்பாட்டுலையே ஒரு-நாள் முதல்வர் கணக்கா நிவர்த்தி பண்ணினாங்களாம்.
எங்க வீட்டுக்கு வந்து என் நெலைமைய பாருங்கன்னு ஒரு பொம்பள சோனியாவை கைய புடிச்சு இஸ்துக்கினு போய் காட்டினாங்களாம். அவங்க வீட்ல கூரையே இல்லியாம். ஒக்கார பாய் கூட இல்லியாம். ஒடஞ்சு போன அடுப்பும், சட்டை போடாத அஞ்சு பசங்களும் இருந்தாங்களாம். தனக்கு ஒதவி பண்ணுங்கன்னு அந்த பொண்ணு கேட்டதும், சோனியா ஒடனே, தன் அடிபொடிகள் கிட்ட, 'ஆவன செய்'னு உத்தரவு போட்டாங்களாம்.

அங்கேருந்து அப்படியே, அடுத்த தெருவுக்கு, போனாங்களாம். தார் பாக்காத பொடி பறக்கும் ரோடாம். அங்கருந்த பொம்பள, இங்க ரொம்ப ஊழலும், அரிசி கூட கெடைக்க மாட்ரதுன்னாங்களாம். அதுக்கும், 'ஆவன செய்'னு ஸ்பட்லையே உத்தரவு போட்டாங்களாம்.

அப்பாலிக்கா, அடுத்த தெருவுக்கு போனாங்களாம், அங்கே ஏதோ, கொளம் வெட்ரதுல ஊழல்னு மக்கள்ஸ் பொலம்புனாங்களாம். அங்கனையும், 'ஆவன செய்'ன்னாங்களாம்.

இப்படியே, பலப் பல, 'ஆவன செய்' சொன்னாங்களாம்.

நல்லாத்தான் இருக்கு கேக்க.

ஆனா,
இம்பூட்டு வருஷமா, மாத்தி மாத்தி ஆட்சி செஞ்சும், தார் போடாத சாலையும், அரிசி கிடைக்காத கிராமமும், கூரையில்லா வீடும், சட்டையில்லா பிள்ளைகளும், எழுதப் படிக்க தெரியா குடும்ப அரசிகளும், குளம் குட்டையிலும் ஊழல் செய்யும் நாதாரிகளும், மிகுந்து இருக்கும் ராய் பரேலியின் நிலைக்கு யார் காரணம்?

ராய் பரேலியே இப்படீன்னா, மத்த தொகுதியெல்லாம், என்னிக்கு சரியாகரது?
கழுத்த அறுக்கறானுவளே இப்படி?
கஷ்டம்டா சாமி!

பொலம்ப மட்டுமே தெரிந்த,
-சர்வேசன்

source: hindu.com