நவம்பர் 2006ல் உண்டு களைத்திருந்த ஒரு மதிய வேளையில், நண்பர் ஒருவருடன் யாஹூவில் அளவளாவிக் கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு திரை விமர்சனத்தை அனுப்பி வைத்தார். என்ன படம்னு மறந்து போச்சு. அந்த மாசம் வந்த ஏதோ ஒரு படம் அது.
படிச்சுட்டு, "nallaa ezhudharaanuva"ன்னு ஒரு மெசேஜ் விட்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்துக்குப்பால, 'ezhudhanadhu naandhaan"ன்னு வந்துச்சு.
"adengappaa, pinnitteengale"ன்னேன்.
"thanks"ன்னாரு.
'tamil typing ellaam theriyumaa?'ன்னேன்.
'adhellaam ippa romba easy. search 4 ekalappai'ன்னாரு.
ekalappai தேடினா, தமிழ்மணம், தேன்கூடு, எக்ஸட்ரா எக்ஸட்ரா, கண்ணில் பட்டது.
நானும் ஒரு பதிவத் தொடங்கி, (நண்பனுக்குக் கூட தெரியாமல்) பதிவராயிட்டேன்.
எல்லாரும் என்னென்னமோ எழுதறாங்க. நம்ம டமில் பொலமை நெம்பக் கம்மி, அதனால, சர்வே எடுக்கறேன் பேர்வழின்னு, கட்டம் கட்டி, கடையத் தொறந்து வச்சேன்.
அதற்கப்பால நடந்ததெல்லாம், ஹிஸ்டரி. ;)
பதிவெழுத ஆரம்பித்த போது, ஆக்கியவன் அள்ள அளப்பவன்னு tag-line வச்சு, மங்களகரமா பொட்டி தட்டிட்டு இருந்தேன்.
நான், ரிலீஜியஸ் கிடையாது. ஆனா, ஓரளவுக்கு, கடவுள் ஈடுபாடு இருந்தது.
மாசத்துக்கு ஒரு தபாவாவது கோயிலுக்குப் போறதுண்டு.
ஆனா, சமீபத்தில் சில பல மாற்றம் உள்ளுக்குள்ள தெரியுது.
எல்லாம் மாயைன்னு ஒரு நிலை.
ஆனா, முற்றிலும், கடவுளைத் துறந்த நிலையும் இல்லை.
அட்லீஸ்ட், சாமியார்களையும், கோயில்களையும் துறந்த நிலைக்கு வந்துட்டேன்.
கடவுள் மீது பற்று இருக்கத்தான் செய்யுது.
அதை பல சமயங்களில் உணரவும் செய்திருக்கிறேன். சமீபத்தில், 15000 அடிக்கு மேலிருந்து ப்ளேனிலிருந்து குதித்த சில நொடிகளுக்கு முன், உள்ளூர, ஒரு ஸைலண்ட் கும்பிடு போட்டது நினைவுக்கு வருகிறது. இப்படி, 'பெரிய' கஷ்டங்கள் வரும்போதும், வேர வழியே இல்லாத கணங்களிலும், கடவுள் உள்ளிருந்து, நான் இருக்கேன் கலங்காதேன்னு சொல்ற மாதிரி ஒரு பீலிங் வரத்தான் செய்கிறது.
இந்த மாதிரி, தத்துனூண்டு பற்று இருக்கரதும் நல்லது தானே?
ஒண்ணுமே இல்லன்னா, மரக்கட்டை ஆயிட மாட்டோம்?
கடவுள்னு ஒருத்தர் இருக்காரோ இல்லியோ, நமக்கு மேல் ஒரு மகா சக்தி ஒண்ணு கண்டிப்பா இருக்கு. Men in Black படத்தில் கடைசியில் பெயர் போடும் போது, ஒரு அருமையான கிராஃபிக்ஸ் இதை உணர்த்தும்.
கேமரா கீழிருந்து சர்ர்ர்ர்ர்னு மேலப் போய், பூமிக்கு மேல போய், கோளங்களுக்கு மேலப் போய், நட்சந்திரங்களுக்கு மேலப் போய், பல காலக்ஸிகளுக்கு மேல போயிக்கிட்டே இருக்கும்.
அப்பாலிக்கா பாத்தா, ஒரு பெரிய ஏலியன் ஜந்து, பலப் பல காலக்ஸிகளை, கோலிகள் மாதிரி, இங்கேருந்து அங்க, அங்கேருந்து இங்கன்னு அடிச்சு விளையாடிக்கிட்டு ஒரு பெரிய பைல ஒவ்வொண்ணா எடுத்து போட்டுக்கிட்டு இருக்கும். (பாக்காதவங்க, must see)
ஏலியனோ, சிவனோ, காளியோ, பரமபிதாவோ, அல்லாஹ் வோ, ஏதோ ஒண்ணு, நம்ம எல்லாத்தையும் ஆட்டிப் படச்சுக்கிட்டுத்தான் இருக்கு.
இதில் பல விஷயங்கள் இன்னும், பெத்த பெத்த மேதாவிகளுக்கே புரியாத புதிராதான் இருக்கு.
உதாரணத்துக்கு, இயற்கையில் பரவலாய் இருக்கும் fibonacci seriesன் தாக்கம்.
சமீபத்தில் ஸ்டாக் மார்க்கெட்டில் ஜூதாடலாம்னு, சில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஸ்டாக் மார்க்கெட்டில் வாங்கி/விற்கும் பங்குகளின் விலையின் ஏற்ற இறக்கத்திலும் கூட, இந்த fibonacci ratioவின் தாக்கம் இருக்கு. நமக்குத் தெரியாமலேயே, நம் ஒட்டு மொத்த நடவடிக்கைகளும், ஏதோ ஒரு ஏற்ற இறக்க வரையரைக்குள் கட்டுப் படுது.
இந்த 'சக்தி'யெல்லாம் ஒரு பக்கம் திகைப்பை தந்தாலும், முன்னிருந்த, 'பய பக்தி' காணாம போயிடுச்சு. இது, ஒவ்வொரு வருஷமும் கடந்து செல்லும்போது வரும், 'பக்குவமா', இல்ல, ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் வந்து, கவலைகள் கலைந்ததும் வரும், 'திமிரா'ன்னு புரியல்ல.
எது எப்படியோ, பதிவின் தலைப்புக்கு வரேன். லெஸ் டென்ஷன் :)
இப்படி யோசிச்சுக்கினே இருக்கும்போது, சமீபத்தில் singainathan கிட்டயிருந்து ஒரு பின்னூட்டம்,
"
ரொம்ப நாளா சொல்லனும்னு (நெனச்சிருந்தேன்)
அழிப்பவன் அல்ல அளப்பவன் என்பதே பொருத்தமானது இல்லையா ?
அன்புடன்
சிங்கை நாதன்
"
ஆக்கியவனுக்கு பதிலா அழிப்பவன்.
ஹ்ம். யோசிச்சுப் பாத்தா, இது நியாயமாவே பட்டுது.
ஒரு விதத்தில், கடவுள் நம்பிக்கையை முழுசா விட்டுட்ட மாதிரியும் காட்டல.
இன்னொரு பக்கம், ஊரில் நிகழும், கஷ்டநஷ்டங்களை பரைசாற்றும் விதமாவும் இருக்கு.
50%க்கு மேல் பரம ஏழையாய் நம் மக்கள்...
நம்மைச் சுற்றிலும், பல இடங்களில், இனப் படுகொலைகள்...
ஏழைகள் மேலும் ஏழைகளாய்...
நல்லவர்களுக்கு தொடர் கஷ்டங்கள்...
எக்ஸட்ரா... எக்ஸட்ரா...
பில்டப்பு கொஞ்சம் ஓவரா ஆகர மாதிரி தெரியுது. அதனால, இத்தோட அடக்கி வாசிச்சுக்கறேன்.
அதாவது, பொது ஜனங்களே, எமது தளம், இன்று முதல்,
"சர்வேசன் - அழிப்பவன் அல்ல அளப்பவன்" என்ற தலைப்புடன் வலம் வரும்.
எமது கொள்கையாக,
"என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்..." என்பதும் பரை சாற்றப்படும்.
நோட் த பாயிண்ட் - "செய்வேன்"னு சொல்லல. "செய்வோம்"னு சொல்லியிருக்கேன்.
என்னால் முடிந்தவரையில் நான் பதிவு வழியாகவும் வாழ்வியல் வழியாகவும், உங்களால் முடிந்தவரையில் பின்னூட்டங்கள் வழியாகவும், உங்கள் வாழ்வியல் வழியாகவும்,
"என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்..."
சந்தோஷத்தை பரைசாற்ற, கலரும் மாற்றப்பட்டது. டெம்ப்ளேட்டும் மாற்றப் படலாம்.
SO GOD, GIVE US STRENGTH!
Amen!
32 comments:
MSV பெட்டிஷன் ரிமைண்டர். பதியாதவங்க பதியுங்க..
MSV petition
'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அருமை',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',
'பேங்க பேங்க முழிக்கறேன்',
'ஒன்னியும் தோணலப்பா',
'ஹ்ம்!'
:)
நீங்க தினமலர் 'அந்துமணி' கேரக்டர் போலவே ஊகமாகவே இருக்கிங்களே.
இதுவரை ஒரே ஒரு பதிவர் கூட 'சர்வேசன்' என்கிற பதிவரை சந்தித்தாக எழுதியதில்லையே.
இவராக இருக்கக் கூடுமோ என்று பாஸ்டன் பாலா போன்றோரை பலர் சந்தேகிக்கப்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா ? உங்களைப் பற்றிய தனிப் பாதுகாப்பில் பிறரைப் பற்றிய சந்தேகம் ஏற்கக் கூடியது என்கிறீர்களா ?
நீங்கள் மின் அஞ்சல் செய்யச் சொன்னத் தகவலைக் கூட நான் அனுப்பாமல் இருப்பதற்குக் காரணம், எனது புகைப்படத்தில் பட்டைப் போட்டு பதிவிட்ட உங்களால் எனக்கு உங்களைப் பற்றிய சிறு தகவல் கூட தெரியவில்லையே என்கிற எண்ணமே.
நீங்கள் யாராக எவராக இருந்தாலும் கவலை இல்லை, உங்களால் பிறருக்கு தொந்தரவு இல்லை என்பதே நான் உங்களைப் பற்றி நினைப்பது.
:)
////'பெரிய' கஷ்டங்கள் வரும்போதும், வேர வழியே இல்லாத கணங்களிலும், கடவுள் உள்ளிருந்து, நான் இருக்கேன் கலங்காதேன்னு சொல்ற மாதிரி ஒரு பீலிங் வரத்தான் செய்கிறது.
இந்த மாதிரி, தத்துனூண்டு பற்று இருக்கரதும் நல்லது தானே?
ஒண்ணுமே இல்லன்னா, மரக்கட்டை ஆயிட மாட்டோம்?/////
அருமை !
//'பெரிய' கஷ்டங்கள் வரும்போதும், வே’ற’ வழியே இல்லாத கணங்களிலும், கடவுள் உள்ளிருந்து, நான் இருக்கேன் கலங்காதேன்னு சொல்ற மாதிரி ஒரு பீலிங் வரத்தான் செய்கிறது.
இந்த மாதிரி, தத்துனூண்டு பற்று இருக்க’ற’தும் நல்லது தானே?
ஒண்ணுமே இல்லன்னா, மரக்கட்டை ஆயிட மாட்டோம்?//
ற - ராவா இருக்கே ஒய்? :))))))))
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
:) பயப்படாதீங்க. அதுக்குன்னு, ஓவரா யோசிச்செல்லாம் பின்னூட்டவேணாம்.
'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அருமை',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',
இவற்றை வெல்லும் சொற்கள், வேறில்லை ;)
இது எதுவும் வோணாமா?
அப்ப,
'பேங்க பேங்க முழிக்கறேன்',
'ஒன்னியும் தோணலப்பா',
'ஹ்ம்!'
:)))
இதுல எல்லாத்தையும் போட்டுக்கிடுங்க.
கோவியாரே, இந்த 'அனானி' வாழ்க்கை ரொம்பவே நல்லா வொர்கவுட் ஆகுது.
பதிவுலகக் கொடூரர்கள்கிட்ட ஆப்டாம இருக்க ரொம்பவே உதவியிருக்கு.
நான் கூட ஆரம்பிச்ச புதுசுல, கொஞ்ச 'ஆள் பலம்' தேத்தி, நமக்கும் எழுத வரும்னு ஒரு செட்டப் வந்ததும், சொந்தப் பெயருக்கு மாத்திடலாம்னுதான் இருந்தேன்.
ஆனா, அது தேவையில்லா வேலைன்னு, இப்படியே தொடருது ;)
///இவராக இருக்கக் கூடுமோ என்று பாஸ்டன் பாலா போன்றோரை பலர் சந்தேகிக்கப்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா///
என்னால யாருக்கும் ஒரு கஷ்ட நஷ்டமும் வரக்கூடாதுங்கரது என் வாழ்க்கையின் motto.
நான் அவரில்லை. யாரை எல்லாம் சந்தேகப் படறீங்களோ, ஒவ்வொண்ணா இங்கையோ, மடலிலோ கேட்டுடுங்க. உண்டா இல்லையான்னு சொல்லீட்டுப் போறேன் ;)
////உங்களால் பிறருக்கு தொந்தரவு இல்லை என்பதே நான் உங்களைப் பற்றி நினைப்பது////
:)
பாசகி, நன்னி :)
ஆயில்யன், 'ரா றா' வையெல்லாம் சாய்ஸ்ல விட்டுடுவேன். என் டமில் டீச்சர் சரியீல்லை :(
மதிபாலா, வருகைக்கு நன்னி :) எல்லாத்தையும் போட்டுக்கறேன்.
\\adhellaam ippa romba easy. search 4 ekalappai'ன்னாரு.//
இதையே நீங்க பதிவரானபின்னும் யாராச்சும் உங்களுக்கே சொல்லக்கூடிய நிலையில் தானே இருக்கீங்க...உங்களைத்தான் தெரியாதே அவங்களுக்கு..
இதுவரை உங்க் பதிவையே உங்களிடம் அனுப்பி படிக்க சொல்லலையா யாரும் :)
முத்துலெட்சுமி,
///இதுவரை உங்க் பதிவையே உங்களிடம் அனுப்பி படிக்க சொல்லலையா யாரும் :)
///
அந்த நாள் வந்ததுன்னா, அளுதுடுவேன்.
ஒரே ரத்தக் கண்ணீரும் ரணகளமாவும் ஆயிடும் ;)
நான் எழுதரதை, எனக்கே யாராச்சும், 'சூப்பர் மேட்டர்'ன்னு அனுப்பரத நெனச்சாலே புல்லரிக்குதேன். அதெல்லாம் நடக்குங்க்கறீங்க?
ஹ்ம்ம் :)
கோவி, சிங்கைநாதன், அவருதான் இவரான்னு எலிக்குட்டி பூனைக்குட்டியெல்லாம் வச்சு கண்டு பிடிக்க முடியலை.
பேசினீங்கன்னா, அவருகிட்ட, மெசேஜ் பாஸ் பண்ணிடுங்க. ;)
ஆல் த பாயிண்ட்ஸ் நோட்டட்.
சும்மா ‘டமில்’ டீச்சரை குத்தம் சொல்லப் படாது. அத்தனை வகுப்பிலுமா சரியில்லை:)? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், சரியா:))?
ராமலக்ஷ்மி, டமிலில் இருக்கும் வீக் பாயிண்ட் இந்த ர, ற, ன, ண வெல்லாம்.
englishல இந்த கொழப்பமில்லை :)
///இதுவரை ஒரே ஒரு பதிவர் கூட 'சர்வேசன்' என்கிற பதிவரை சந்தித்தாக எழுதியதில்லையே.//
அப்படி சொல்ற அளவுக்கு நான் பேர் பெற்ற பதிவர் இல்லைங்கரதால சொல்லாம விட்டிருக்கலாம்.
நான் சில பதிவர்களை நேர்ல பாத்து பேசியிருக்கேன். அவங்களும் என்னப் பாத்து பேசிரியிருக்காங்க.
infact, இம்முறை ஊருக்கு போக சிங்கை வழி வந்தால், உங்களையும் மீட் பண்ணிடலாம்.
ஆனா, அதுக்கு முன்னாடி எனக்கு சில உம்ம தெரிஞ்சாவணும் ;)
அண்ணே, ட்ரீட்டு!
சர்வேசன் பெயர் சர்வேசன்னு தான் இருக்கு...நான் கூட அதை தான் மாற்றி விட்டீர்களோ என்று நினைத்தேன். ;-)
நானும் கிரியைய்ப்போலவே உங்க பேரைத்தான் ( நான் பேர் மாத்திவிளையடறாப்ப்ல) மாத்திட்டீங்களோன்னு நினைச்சு வந்தேன்.. :))
\\எனக்கே யாராச்சும், 'சூப்பர் மேட்டர்'ன்னு அனுப்பரத நெனச்சாலே புல்லரிக்குதேன். // இது உங்க பின்னூட்டம்..
\\ உங்க் பதிவையே உங்களிடம் அனுப்பி படிக்க சொல்லலையா யாரும் :)//
இது என் பின்னூட்டம். நல்லா கவனிங்க எத்தனையோ வித்தியாசம் இருக்கு.. சூப்பர்ன்னு எல்லாம் ஏன் சேத்துக்கிறீங்க..
அட்லீஸ்ட் இது பாருப்பா இப்படி எல்லாம் கூட எழுதறாங்க ..வாயேன் நாமளும் எழுதலாம்ன்னு கேட்டிருக்கமாட்டாங்களான்னு கேட்டேன்.. :))
பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html
'பேங்க பேங்க முழிக்கறேன்',
'ஒன்னியும் தோணலப்பா',
'ஹ்ம்!'
மிஸ்டர் சர்"வேஷன்" உங்க நிஜப்பேரை ஒரு முறை எம்.எஸ்.வி தளத்தில் குறிப்பிட்டிருக்காங்க, எனவே நீங்க அனானி இல்ல, இ எ இருக்கு ;)
:)
நெஜமாவே மாத்திட்டீங்களா
நன்னி .
//கோவி, சிங்கைநாதன், அவருதான் இவரான்னு எலிக்குட்டி பூனைக்குட்டியெல்லாம் வச்சு கண்டு பிடிக்க முடியலை.
பேசினீங்கன்னா, அவருகிட்ட, மெசேஜ் பாஸ் பண்ணிடுங்க. ;)//
நான் நானே தான்
மருத்துவமனையில் இருந்து
அன்புடன்
சிங்கை நாதன்
//கானா பிரபா said...
மிஸ்டர் சர்"வேஷன்" உங்க நிஜப்பேரை ஒரு முறை எம்.எஸ்.வி தளத்தில் குறிப்பிட்டிருக்காங்க, எனவே நீங்க அனானி இல்ல, இ எ இருக்கு ;)//
தேடினேன் வந்தது.... :)
//சந்தோஷத்தை பரைசாற்ற,//
பறை சாற்ற
மத்தபடி...சாமியைப் பத்துன என் எண்ணங்களும் இப்படித்தான். ஒரு பெரிய சக்தி இருக்கு. அதை நான் கூப்பிடும் பெயர் பெருமாள். கோபாலுக்கு முருகன்.
கானா
///மிஸ்டர் சர்"வேஷன்" உங்க நிஜப்பேரை ஒரு முறை எம்.எஸ்.வி தளத்தில் குறிப்பிட்டிருக்காங்க, எனவே நீங்க அனானி இல்ல, இ எ இருக்கு ;)///
எனக்கேவா? இப்படியெல்லாம் வில்லங்கம் வரும்னு தெரிஞ்சுதான், அந்த பெட்டிஷனை என்னுடன் எட்டாங்கிளாச் படிச்ச, நண்பனின் பெயரில் பதிந்தது :))
pappu, danks.
கிரி, முத்துலெட்சுமி,,
///சர்வேசன் பெயர் சர்வேசன்னு தான் இருக்கு...நான் கூட அதை தான் மாற்றி விட்டீர்களோ என்று நினைத்தேன். ;-)//
ஹிஹி. இது பதிவுலக தலைப்பு பில்டப்பு. அப்படியெல்லாம் போட்டாதான் கல்லா கட்ட முடியும் :)
singai,
//நான் நானே தான்
மருத்துவமனையில் இருந்து
அன்புடன்
சிங்கை நாதன்//
welcome back :)
//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:)//
ரிப்பீட்டே :-)
துளசி,
/////மத்தபடி...சாமியைப் பத்துன என் எண்ணங்களும் இப்படித்தான். ஒரு பெரிய சக்தி இருக்கு. அதை நான் கூப்பிடும் பெயர் பெருமாள். கோபாலுக்கு முருகன்./////
அதே அதே!
////பறை சாற்ற///
ஹ்ம் :(
பாசகி, கானாக்கு போட்ட அதே பதீலுதான் உங்களுக்கும் ;)
பாலபாரதி, சென்ஷி,
:)
அப்போ தொப்பி எங்களுக்குதானா,ரைட்டு :)
பாசகி, ofcourse :)
Post a Comment