இஸ்கோல் படிக்கர காலத்துல, 'முப்பத்தி ஆறு மொட்டைகளின் அட்டகாசங்கள்னு' ஜோக்கெல்லாம் சேத்து, ப்ரெசிடென்சி காலேஜ் பசங்க ஒரு கேசட் விட்டிருந்தாங்க. தமிழுக்கு அது புதுசு. ஜோக்கெல்லாம் புச்சு புச்சா இருக்கும். ரொம்ப வித்யாசமான முதல் முயற்சி அது.
ரொம்ப பிரபலம் அது அந்த காலத்துல.
கேசட்டில் ஜோக்கு வாங்கி கேக்கர பழக்கம் அப்ப ஆரம்பிச்சது. அந்த பழக்கத்துல, அப்பரமா, கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் நாடகங்களை எல்லாத்தையும் கேட்டு முடித்திருந்தேன்.
ஊர் விட்டு ஊர் சென்ற போதும், சில கேசட்டுகளை கைவசம் கொண்டு வந்து, லாங் ட்ரைவ் எங்கையாவது நண்பர்களுடன் ஊரு சுத்தரப்பெல்லாம் இந்த காமெடி நாடகங்களை போட்டு விட்டு, வயிறு குலுங்க சிரிச்சுக்கிட்டே போவோம். பாட்டு கேட்பதை விட சிறந்த பொழுது போக்கு இது.
பல நாடகங்களை கேட்டிருந்தாலும், எஸ்.வி.சேகரின் சில 'பன்ச்' வசனங்கள் மண்டைல பதிஞ்ச ரகம்.
எந்த நாடகம்னு பேரு ஞாபகம் இல்லை, ஆனா ஒரு காட்சி ஆழமா பதிஞ்சு, மனசை பல காலமா வாட்டி எடுத்துக்கிட்டிருக்க்கு. அந்தக் காட்சியை உங்களுடன் பகிர்வதில் பேருவகை அடைகிறேன்.
மத்த நாடகங்களைப் போலல்லாமல், இது கொஞ்சம் சோக ட்யூனோட ஆரம்பிக்கும். யாராவது மண்டைய போட்டா தூர்தர்ஷன்ல வாசிப்பாங்களே, அந்த ட்யூன்.
முதல் சீன்ல, ஒரு ஏழைக் குடும்பத்தில் நடக்கும் வசனங்கள்.
குடும்பத் தலைவி, ரெண்டு பொண்ணுங்க, புருஷன் இருப்பாரு.
தலைவி சொல்லுவாங்க, "என்னங்க,கடைசியா இருந்த ஒரு பிடி அரிசியும் தீந்து போச்சுங்க. காய்கறியும் காலி ஆயிடுச்சு. கடைக்காரர் பழைய பாக்கியை குடுக்காம இனி கடனுக்குத் தரமாட்டேன்னும் சொல்லிட்டான்"ன்னு ரொம்ப சோகமா அழுதுகிட்டே சொல்லுவாங்க.
ரெண்டு குட்டிப் பெண்களும், "அம்மா பயங்கரமா பசிக்குதும்மா. ரெண்டு நாளா தண்ணி மட்டும் குடிச்சு குடிச்சு, வயிறெல்லாம் எரியுதும்மா"ன்னு அழுவாங்க.
மனைவியும், குழந்தைகளும் பசியால் துடிக்கரத பாத்த குடும்பத் தலைவர், "ஐயோ லக்ஷ்மி, என்ன பண்ணுவேன்னே தெரியலையே. கம்பெனி ஸ்ட்ரைக்ல மூடி, ஆறு மாசமாச்சு, வேர வேலையும் கெடைக்க மாட்ரது. பிச்சை எடுத்தாவது பொழைக்கலாம்னா, தன்மானம் இடமும் கொடுக்க மாட்ரது"ன்னு அவரும், அழுவாரு.
லக்ஷ்மி மெதுவா புருஷன் கிட்ட வந்து, "என்னங்க, இனியும் இப்படி பசியோட குழந்தைகளை கஷ்டப் படுத்த முடியாதுங்க. என்னால அவங்க வலியை தாங்க முடியலை. பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்"னு சொல்வாங்க.
குடும்பத் தலைவரும், "ஆமாம். லக்ஷ்மி, நீ சொல்றது தான் சரி. என் கிட்ட இருக்கர ரெண்டு ரூபாய்க்கு, வெளீல போய் வெஷம் வாங்கிட்டு வரேன். எல்லாரும் குடிச்சு செத்துடலாம்"பாரு. தலைவியும், "சரிங்க"ன்னு அழுதுட்டே சொல்லுவாங்க.
விஷத்தை வாங்கிக்கிட்டு அவரு வந்ததும், லக்ஷ்மி, "என்னங்க, சாகரதுக்கு முன்னாடி, அம்பாளுக்கு ஒரு பட்டுபாவாடை சாத்திட்டு சாகலாங்க. அன்னிக்கு வாங்கி வச்ச துணி இருக்கு. பாவாடை தெச்சுட்டு, சாத்திட்டு, அப்பரமா விஷம் குடிக்கலாங்க. கொஞ்ச நேரம் இருங்க"ன்னு சொல்லிட்டு, பட்டுத் துணியை எடுத்து, ஒரு ஊசியையும் நூலையும் எடுப்பாங்க.
ஊசீல நூலை கோக்கப் பாப்பாங்க. ஆனா, ரொம்ப நேரம் முயற்சி பண்ணியும் முடியாது.
"என்னங்க, அம்பாள் நம்மள, இப்படி சோதிக்கறாளே. சாப்பாட்டுக்கும் வழியில்லை. சாகரதுக்கு முன்னாடி, ஒரு பட்டுப்பாவாடை பண்ணி சாத்தலாம்னா, அதுக்கும் முடியாம இப்படி தவிக்க விடறாளே. ஊசீல நூலக் கூட கோக்க முடியலையே"ன்னு பெருசா சத்தம் போட்டு தேம்பித் தேம்பி அழுவாங்க.
அவருடன் சேந்து, அவங்க புருஷரும், ரெண்டு பொண்ணும் அழுவாங்க.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்களும், இன்னாடா இது, கேசட்ட மாத்தி கீத்தி வாங்கிட்டு வந்துட்டமான்னு, கண்ணுல ஜலத்தோட சோகமாயிருந்தோம்.
எஸ்.வி.சேகர் நாடகம்தான இதுன்னு ஒரே டெரராயிட்டோம்.
திடீர்னு, கதவை டகால்னு தொரக்கர சத்தம் கேக்கும்.
எஸ்.வி.சேகர் வந்து, "மேடம், நீங்க மட்டும் இல்ல மேடம், வேர யாராலையும் இந்த ஊசீல நூல கோக்க முடியாது. ஏன்னா, இது குண்டூசி!"ம்பாரு. அழரவங்க சைலண்டா ஆயிடுவாங்க. கேக்கரவங்க, குபீர்னு விழுந்து விழுந்து சிரிச்சு வச்சோம்.
"அடச்சீ கஸ்மாலங்களா. காசு குடுத்து காமெடி நாடகம் பாக்க வந்திருக்காங்க. காமெடி பேசரத விட்டுட்டு, கூடி நின்னு ஒப்பாரியா வெக்கறீங்க"ன்னு சொல்லிட்டு, அவங்கள வெரட்டிட்டு, அப்பரம் தொடர்ந்து, ஒரே சரவெடி காமெடிதான்.
அப்ப வந்த மாதிரியெல்லாம், இப்ப 'பன்ச்' காமெடியுடன் நாடகங்கள் வரது இல்லையோ? எல்லாரும், பாலிடிக்ஸ் ரெட்டை வசனங்கள் பேசரதுல பிசி ஆயிட்டாங்க!
ஹாப்பி வெள்ளி!
13 comments:
//எந்த நாடகம்னு பேரு ஞாபகம் இல்லை, ஆனா ஒரு காட்சி ஆழமா பதிஞ்சு, மனசை பல காலமா வாட்டி எடுத்துக்கிட்டிருக்க்கு.///
பாஸ் நான் கேட்டதே இல்ல :(
எல்லா நாடகங்களும் கேட்டிருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் ம்ம் இன்னொரு தேடல் ஆரம்பிக்கணும் :)
எஸ்.வி சேகர் நாடக கேசட்டுக்குன்னு ஒரு ரசிகர் கூட்டமே இருந்துச்சு எங்க ஏரியாவுல கேசட் கடனுக்கு கொடுக்கறது அப்புறம் புதுசா ரீலிசு ஆகற கேசட் யாரு ஃபர்ஸ்ட்டு வாங்கறதுன்னு அமர்க்களப்படும் :)
அப்படி ஒரு தடவை நான் அலைஞ்சு திரிஞ்சு பர்ஸ்ட்டு வாங்குன கேசட்டு “பெரியதம்பி”
அம்மாஅ:- முட்டையும் பாலும் தாரேன் குடிச்சுட்டு....
எஸ்.வி.சேகர்:- புத்துல போய் படுத்துக்கிறேன்ம்மா :)
இன்னும் நிறைய வசனங்கள் நல்லா பதிஞ்சு நிக்கிது :)))
நீங்கள் குறிப்பிட்ட காட்சி அவரது “ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி” மேடை நாடகத்தில் வருகிறது. இந்த முதல் காட்சி டேப்பில் நேரம் கருதி போடப்படுவதில்லை.
நான் மேடையிலேயே அதைப் பார்த்தவ்ன். பிறகு 1999-ல் ராஜ் டி.வி.யில் போட்ட வெர்ஷனில் குண்டூசிக் காட்சியும் இருந்தது.
நூலைக் கூட கோக்க முடியவில்லை என்று கூறும்போது சேகர் முதல் எண்ட்ரி கொடுப்பார். “ஏம்ப்பா, எவனோ ஒருத்தன் வேலையில்லாம நம்ம நாடகங்களிலே மெசேஜ் இல்லைன்னு சொன்னதுக்காக இப்படியா நாடகம் போடறது? ஆடியன்சை பார், அவனவன் இடிந்து போய் உட்கார்ந்திருக்கான்” என்பார்.
உடனேயே நாடகம் ஆரம்பிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
:-))))
ஆயில்யன், பெரியதம்பி அட்டகாசமா இருக்கும். மேடையில், திடீர்னு,ஸ்க்ரிப்ட்ல இல்லாத ஜோக்கெல்லாம் அடிப்பாராம் எஸ்.வி.
டோண்டு, 1000 சிகாமணியேதான்.
மேடைல ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தினுசா மாத்தி அடிப்பாரு போலருக்கு. நல்ல டைமிங் அவருக்கு.
தேவையில்லாம, அரசியலுக்கு வந்து, காமெடியும் போச்சு, பொழப்பும் நாறுது.
நன்மனம், :))
செமயா இருந்தது...
எனக்கென்னமோ இந்த பதிவுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரியே தோணுது .. :)
danks pappu :)
Sampath, even i thought of planting some 'ulkuthu'. but, nothing came to mind while writing.
so, idhu 100% agmark, saadha post :)
எஸ். வி. சேகர் அவர்களை மிகவும் கிட்டத்தில் பார்த்தவன் நான் (பாத்ரூமில் இல்லீங்க, மேடையில் தான்). அவருடைய டைமிங் சென்சுக்கு ஈடு இணையே கிடையாது. ஒரு முறை, மாம்பலம் முப்பாத்தம்மன் கோயில் திருவிழாவில் அவர் ஒரு நாடகம் போட்டார். அப்போது, இடையில் சில குடிகாரர்கள் சத்தம் போட்டு இடையூறு செய்து கொண்டே இருந்தார்கள்.
அப்போது, நாடகத்தில் ஒருவர் வந்து வம்பு செய்வார், அவரிடம் சேகர் சொன்னார்:
"இதோ பாருங்க, ஏற்கெனெவே, இங்க நாலு பேர் சத்தம் போட்டுக்கிட்டு இருக்காங்க, நீங்களும் சத்தம் போட்டிங்கன்னா, நான் யாருக்கு பதில் சொல்லுறது?" கீழே சத்தம் போட்டுக் கொண்டிருந்தவங்க கப்சிப்.
Yes Mr Dondu is right.உதை வாங்கிய அபூர்வ சிகாமணி தான் இது.
ACtually this appeared in the video form of Aayiram udhai. It dint come in the audio version dunno why. அந்த வீடியோ formல சூப்பர் சூப்பர் காமெடி எல்லாம் இருக்கும் first few scenesல - கார்கோடகன் டிராமா போடுவாங்க, கிரீடத்துல பொங்கல் சட்னி எல்லாம் pack பண்ணி வெச்சு இருப்பாங்க, அது மேடைல தலயில இருந்து ஒழுகும், டயலாக் சொல்லாம, சட்னில உப்பு தூக்கல் நு எல்லாம் உளறிக்கொட்டுவாங்க. Hilarious. Also, மேனேஜர் சீனா சேவகன் வேஷத்துல வருவார். யாரங்கேன்னு கூப்பிட்ட ஒடனே வரணும்.அவர் வரமாட்டார் காது கேக்கலைன்னு சொல்லுவார்.இன்னும் கொஞ்ச நாள் போன கால் நொண்டும், வாய் திக்கும், இந்த அழகுல கலைமாமணிப்பட்டம் வேற குடுக்கறாங்களான்னு எல்லாம் போட்டு அவரை கலாசுவான் அந்த செக்மென்ட் ல.ஏன் இந்த காட்சிகள் எல்லாம் ஆடியோவுல இடம் பெறலைன்னு தெரியல.யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.
Post a Comment