recent posts...

Sunday, September 20, 2009

நம்மில் ஒருவன் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க!

உண்மைத்தமிழன் எம்புட்டு தெகிரியமானவருன்னு நமக்கு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.
போலியை போளியாக பெரட்டிப் போட்டுட்டு, ரொம்பவே சிரமம் எடுத்துக்கிட்டு இன்னிவரைக்கும் மல்லுக்கட்டிக்கிட்டு, நம் மத்தியில் இருக்கும் பல கழிசடைகளை வெளிச்சம் போட்டு காட்டிக்கிட்டும் இருக்காரு.

நமக்கேன் வம்புன்னு ஒதுங்கியே பழக்கப்பட்டுப் போன நம்மிலிருந்து, இப்படி விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான், "ஏன்?"னு கேள்வி கேக்கறவங்க பொறப்பட்டு, சிரிய/பெரிய மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்வார்கள்.

உண்மைத்தமிழன் அவர்களுக்கு ரிஸ்க்கு எல்லாம் ரஸ்க்கு திங்கரதைப் போல. அவர் வல்லவர், நல்லவர், நாலும் தெரிஞ்சவர்.
(இப்படி ஏத்தி விட்டே ரணகளமாக்கிடுவோம்ல ;) )

இப்பேர்பட்ட உண்மைத்தமிழன் அண்ணாத்தையின் சமீபத்திய சாதனையை படிக்கத் தவறாதீர்கள்.

உன்னைப் போல் ஒருவன் - திரைப்படம் பார்த்த கதை..!

எனக்கு ஒரே வருத்தம், இவரு இன்னும் கொஞ்ச நேரம், தியேட்டர் காரனுக்கு டார்ச்சர் கொடுக்காம, உள்ளப் போனதுதான். உள்ளப் போனதும் இல்லாம, அதுக்கு ஒரு விமர்சனம் வேர எழுதி கொடுமப் படுத்தியிருக்காரு.

திருட்டு விசிடியும், ஆன்லைனில் கிட்டும் ஓசிப் படங்களும் வாள்க வாள்க! இதையெல்லாம் வளக்கரதுல, திரையரங்கத்துக்கு சென்று படம் பார்ப்பதை பெரிய சர்க்கஸ் மாதிரி ஆக்கி வைத்திருக்கும், அரங்க உரிமையாளர்களும், ப்ளாக்கில் விற்கும் ரவுடிகளும், மாமூல் வாங்கும் காவலதிகாரிகளுமே காரணம்.

அண்ணாத்தைக்கு ஏற்பட்ட கசப்பனுபவத்தை முன்னிட்டு, என் எதிர்ப்பை பதிவு செய்ய, நான் உன்னைப் போல் ஒருவனை தியேட்டரில் போய் பார்க்கப் போவதில்லை.

ஐ வில் வெயிட் ஃபார் டிவிடி!!!

உ.ஒ டிக்கெட்டை வழக்கமான $10ஐ விட, $12க்கு விற்பதை பார்த்த நான் ஏற்கனவே கடுப்பில் இருந்தேன். இப்போ உ.த விவகாரம் வேர சேந்துக்குச்சு.
என் $24 தப்பிச்சுது. அஞ்சப்பருக்கு போய் மட்டன் சுக்கா ரோஸ்ட் சாப்பிடலாம் ;)

8 comments:

ஹாலிவுட் பாலா said...
This comment has been removed by the author.
SurveySan said...

டிவிடி கண்டிப்பா பெட்டர், இந்த மாதிரி ஓவரா ஆசப்படர விநியோகஸ்தர்களுக்கு.

அஞ்சப்பர் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் வந்துது. அமக்களம் ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அந்த 12 டாலரை அப்படியே சேர்த்து வைங்க..

நேர்ல பார்க்கும்போது எனக்கு மொய்யா வைச்சிரணும்.. சொல்லிட்டேன்..!

SurveySan said...

உண்மைத் தமிழன்,

$12ல, மட்டன் சுக்கா ரோஸ்ட் போக மீதிய, மொய் வச்சுடறேன் ;)

K.R.அதியமான் said...

////திருட்டு விசிடியும், ஆன்லைனில் கிட்டும் ஓசிப் படங்களும் வாள்க வாள்க! இதையெல்லாம் வளக்கரதுல, திரையரங்கத்துக்கு சென்று படம் பார்ப்பதை பெரிய சர்க்கஸ் மாதிரி ஆக்கி வைத்திருக்கும், அரங்க உரிமையாளர்களும், ப்ளாக்கில் விற்கும் ரவுடிகளும், மாமூல் வாங்கும் காவலதிகாரிகளுமே காரணம்/////

wrong. it is the reverse. the film industry and cinemas loose their much earned profits due to thiruttu VCDs and DVDs. hence they try to make up by illegal means. We are all party to this illegality ny using thiruttu DVDs.

SurveySan said...

K.R.A, Egg or Chicken ? :)

pappu said...

திருட்டு டிவிடில படம் பாக்க இப்படி ஒரு சாக்கா? நல்ல பொழப்பு சாமி!

SurveySan said...

pappu, பதிவ படிச்சா அனுபவிக்கணும். ஆராயப்டாது ;)