முந்தைய பதிவில் நான் எந்தளவுக்கு நல்ல பையன்னு எடுத்து விளம்பியிருந்தேன். அதே அளவுக்கு நானு வீர தீர பராக்ரமங்கள் புரிவதில் வல்லவனும் கூட. ( யாரோ, எங்கையோ, பதிவுகள் பலவும் சுய தம்பட்டங்களாத்தான் இருக்குன்னு புலம்பியது நினைவில் வந்து தொலைக்கிறது ).
அது இன்னா வீர தீர பராக்ரமங்கள்னு கேக்கரவங்க மேலப் படிங்க.
ஓடர எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏற்றது,
பல்லவன்ல தொங்கிக்கிட்டு போறது,
நண்பனுடன் சைக்கிள்ள டபுல்ஸ் போகும்போது பின் கேரியரில் ஓடிக்கினே இருக்கும்போது ஏறி அமர்வது,
பீச்சுக்கு போனா, மொழங்கால் நனையர அளவுக்கு உள்ள போயி தெகிரியமா நிக்கரது,
ரெண்டு கை விட்டு சைக்கிள் ஓட்டுவது,
ஏதாச்சும் கோயிலை கிராஸ் பண்ணும்போது புள்ளையாருக்கு ஃபளையிங் கிஸ் கொடுக்காம தாண்டிப் போரது,
லைஸென்ஸ் இல்லாம டூவீலர் ஓட்டரது,
எக்ஸட்ரா... எக்ஸட்ரா...
இப்படி டெரரா வாழ்க்கை வாழர நமக்கு, ரோலர் கோஸ்டரில் போவதெல்லாம், பச்சத் தண்ணி குடிக்கர மாதிரி. எல்லா விதமான ரோலர் கோஸ்டரிலும், ரோலி வந்திருக்கிறேன்.
தலைகீழ போரது, பொரண்டுகினு போரது, சர்ர்ர்னு போரது, ஜிவ்வ்வ்னு போரது, எல்லாமே.
இதைத் தவிர, லாஸ் வேகஸில் இருக்கும், Stratosphere என்ற காஸினோவின் மொட்டை மாடியில் இருக்கும், big shots என்னும் கேளிக்கை ரைடிலும் டமிலன் கொடி பறக்க விட்டு வந்திருக்கிறேன்.
இப்படி வீர தீர செயல்களைச் செய்து பழகிய எமக்கு ஒரு சூழ்நிலையில் இதுக்கு மேல என்னா பண்றதுங்கரதுன்னு தெரியாம பெரிய கொழப்பமாயிடுச்சு.
ரோலர் கோஸ்டர்களெல்லாம் போதையை தராமல், சாதா பஸ்ல போர மாதிரி இருந்துச்சு.
அடாடா, என்னடா இப்படி ஆயிடுச்சே, இனி ராக்கெட்ல ஏறி ஸ்பேஸுக்கு போனாதான் நமக்கு வேண்டிய கிக்கு கிடைக்குமோங்கர அளவுக்கு கவலை ஏறிடுச்சு.
இப்படி கவலையாய் யோசித்துக் கொண்டிரூந்த ஒரு சுபயோக சுபதினத்தில் தான் அந்த ஐடியா உதித்தது. Bunjie jumping பண்ணாலாமா இல்ல white water rafting போலாமான்னு.
நான் இருக்கர எடத்துக்கு பக்கத்துல இந்த ரெண்டுமே இல்லை. அப்படியே தேடிப் பாக்கும்போது, என் தவத்தின் பலனாக, இன்னொரு மேட்டர் கண்ணுல பட்டுது.
sky diving. ஆகாககாகா, இது நல்லாருக்கேன்னு மேல மேஞ்சு பாத்தேன்.
எங்க வீட்ட சுத்தி பல இடத்தில் இதப் பண்ணலாம்னு தெரிஞ்சுது. துட்டு ஜாஸ்தி, ஆனா, எமது பராக்ரமத்துக்கு சற்றும் குறைவில்லாமல் கிக்கூட்டக் கூடியதுன்னு தெரீஞ்சது.
குட்டி ப்ளேன்ல மேல கூட்டிக்கிட்டு போயி, 15,000 அடியிலிருந்து பேராஷூட் கட்டிக்கிட்டு கீழ குதிக்கலாம். படிக்கவே நச்னு இருந்தது.
இதிலும், பலவகை இருக்கு.
$400 குடுத்தா, தனியா குதிக்க விடுவாங்க. மூணு மணி நேரம் எல்லா வித்தையையும் சொல்லிக் கொடுத்து, டாடா சொல்லி குதிக்க விடுவாங்க. நல்ல ஸ்டூடண்ட்டா இருந்தா, சரியான நேரத்துல பேராஷுட்டை தொறந்துட்டு சமத்தா எறங்கலாம்.
கொஞ்சம் அரவேக்காடாயிருந்தா, எக்குதப்பா பேராஷுட்டை தொறந்து, கண்ட எடத்துல விழுந்து சுக்கு நூறு டேமேஜ் ஆகும் வாய்ப்பிருக்கு.
யோசிக்க வேண்டியதேயில்லை, நான் அரவேக்காடுதான். என்னை நம்பி நான் இதில் தனியா எறங்கரது, பதிவுலகத்துக்கு நல்லதில்லைன்னு முடிவு பண்ணேன்.
$200 குடுத்தா, நம்மளை இன்னொருத்தர் ஒடம்போடு கட்டிக்கினு, அவருகூட கீழ குதிக்கலாம். இதுல நம்ம மூளைக்கு வேலையில்லை. சர்ர்ர்ர்னு கீழ வர்ரதை அனுபவிக்கரது மட்டும்தான் நமக்கு வேலை. பேராஷூட் தொறக்கரது, ஸ்மூத்தா கீழ எறக்கரது எல்லாம் அவரு வேலை. சரி, நமக்கு தோதானது இதுதான். அடுத்த முறை பெரிய போதை தேவைப்பட்டா $400 பத்தி யோசிக்கலாம்னு, $200 இன்னொருத்தரை கட்டிக்கினு குதிக்கரதை சூஸ் பண்ணிக்கிட்டேன்.
பல இடங்களில் இது இருந்தாலும், பசிஃபிக் கடலுக்கு அருகாமையில், நல்ல சீனிக்கா இருக்கும் இடத்தை தேர்விக் கொண்டேன். எக்குத்தப்பா விழுந்தாலும், தண்ணியில விழலாமோன்னு ஒரு அல்ப்பாசைதான்.
காசு வாங்கிக்கிட்டு அம்மணி ஒரு பத்து பக்கத்துக்கு ஃபார்ம் கொடுத்தாங்க. முப்பது கையெழுத்து கேட்ட்டாங்க. என்ன ஆனாலும், கொம்பேனியார் பொறுப்பில்லை, சகலத்துக்கும் நானே பொறுப்புன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க.
ரெண்டு மணி நேரம் ஒக்கார வச்சு, வீடியோவெல்லாம் போட்டு காமிச்சாங்க. நல்ல த்ரில்லிங்கா இருந்தது. ஆனா, ஒண்ணுமே எனக்கு சொல்லிக் கொடுக்கல.
John வந்தாரு. இன்னாப்பா ஜானு, பேராஷூட்டை எப்படி தொறக்கணும், அது இதுன்னு கேள்வி கேட்டேன்.
அதுக்கு அவரு, "யோவ் நான் எல்லாத்தையும் பாத்துப்பேன், நீ கைய கட்டிக்கிட்டு சைலண்டா இருந்தா போதும். நான் உன் கைய தட்டும்போது, கைய விரிச்சு வச்சுக்கணும், பின்னாடி எட்டி ஒதைக்கும்போது, கைய மூடிக்கணும், அவ்வளவுதான் நீ பண்ணனும்னு" சொன்னாரு.
என்னதான், வீரனாயிருந்தாலும், புது விஷயங்கரதால, அவரு சொல்றதை கிளிப்புள்ளை மாதிரி கேட்டுக்கிட்டு தலையாட்டிட்டேன்.
பெரிய பெல்ட்டெல்லாம் கட்டி விட்டாரு. நானும் ஜானும், ஃபோட்டோ புடிக்கரவரும், குட்டி ப்ளேனுக்கு போணோம்.
ப்ளேன் டெரரா இருந்துச்சு. நம்ம ஊரு மாங்காட்டுக்கு போற 66ஆம் நம்பர் பஸ்ஸு கூட புச்சா இருக்கும். இந்தப் ப்ளேனு தகர டப்பா கணக்கா இருந்துச்சு. பைலட்டை தவிர நாலு பேரு தரைல ஒக்கார எடம் இருந்துச்சு. கைப் பிடி ஒண்ணும் இல்ல.
ஜான் ஒக்கார, நான் அவரு மடியில ஒக்காந்திக்கினேன்.
ஜான், என் பெல்ட் பட்டையை, அவரின் ஒடம்பில் இருந்த பிணைப்புடன் பிணைச்சுக்கிட்டாரு.
ப்ளேன் டரக் டரக் டரக்னு கெள்ம்பிச்சு.
செம சத்தம், செம ஆட்டம். மேல மேல போயிக்கினே இருந்துது.
ஜானு, எல்லாம் சரியா சொல்லிட்டியா என்கிட்ட, எதையும் மறக்கிலேயேன்னேன். இல்லன்னாரு. கைல தட்டினா கைய தொர, பேக்ல எட்டி ஒதச்சா கைய மூடுன்னாரு. மந்திரிச்சு விட்ட மாதிரி சரின்னேன்.
ஃபோட்டோகிராஃபர் ஹெல்மெட்டு மேல கேமரா/கேம்கார்டர் எல்லாம் வச்சுக்கிட்டு எதையோ பேட்டி எடுத்துக்கினே வந்தாரு. மந்திரிச்ச நெலமைல என்ன கேட்டாரு என்ன சொன்னேன்னு எனக்கு பெரிய நெனவெல்லாம் இல்ல.
5000 அடி, 10000 அடி, 12000 அடின்னு சர்ர்ர்ர்ர்னு மேல மேல அந்த குட்டிப் ப்ளேனு ஏறிக்கிட்டே இருந்துச்சு. மூஞ்சீல காத்து அடிக்குது. கீழ பாத்தா, காரெல்லாம் கடுகாத் தெரியுது, மேகத்துக்கு மேல வந்தாச்சு, கடல்லே கப்பல் தெரியுது, ரோட்டுல காரு தெரியுது.
ஜான், "இன்னும் 3000 அடிதான், 2 நிமிஷத்துல ரெடியாயிடலாம், கண்ணாடிய போட்டுக்கோ"ன்னாரு. ஃபோட்டோ காரரு. "ஆர் யூ ரெடி"ன்னாரு.
டிக்கெட் இல்லாம, டிடிஆர் கிட்ட மாட்டின கணக்கா, "யெஸ் ஸார்"னேன்.
"ஓ.கே வீ ஆர் அட் 15,000 ஃபீட், லெட்ஸ் ஜம்ப்"ன்னு ஃபோட்டோகிராஃபர் சொல்லிட்டு, கதவத் தொறந்து டகால்னு குதிச்சிட்டாரு.
150 மைல் வேகத்தில் ஓடிக்கினு இருக்கு அந்த தகர டப்பா ப்ளேனு, சகலமும் ஆடுது.
குதிச்சவரு, விஷ்ஷ்ஷ்ஷுனு மறஞ்சுட்டாரு. ஜான் மடியில நானு. ஜான் என்னையும் வலிச்சுக்கினு ப்ளேனின் ஓரத்தில் ஒக்காந்து காலை வெளியில போட்டுக்கிட்டாரு. அவரு மடியில இருக்கர நானு, ப்ளேனுக்கு வெளியில தொங்கிக்கினே ஒக்காந்துருக்கேன்.
"டேய்ய்ய்ய் இதெல்லாம் தேவையான்னு" மனசாட்சி கன்னாபின்னானு @#$#@$!$$#@$#$@#$@# திட்டிய கணங்கள் அவை.
ஜான் கட்டை விரலை உயர்த்தி "ரெடியா?"ன்னாரு. கட்டை விரலை தலைகீழா காமிச்சு இல்லன்னு சொல்லலாமான்னு ஒரு சபலம் வந்துச்சு. ஆனா, அதற்குப் பிறகு அதை நெனச்சு நெனச்சு புழுங்க வேண்டி வருமேன்னு தோணிச்சு. ஆனது ஆச்சு, எல்லாம் அவன் பாத்துப்பான்னு, நடுங்கிய கட்டை விரலை உயர்த்திக் காணிபிச்சேன். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு, அடுத்த 10 விநாடிகள் நினைவில் இல்லை.
ஜான், விஷ்ஷ்ஷ்ஷ்க்னு ப்ளேனை விட்டு கீழ குதிச்சிட்டாரு.
ஓடர சைக்கிள்ளருந்து எறங்கியிருக்கேன், ஓடர பஸ்ல இருந்து எறங்கியிருக்கேன், ஓடர ட்ரெயின்ல இருந்து கூட எறங்கியிருக்கேன். ஆனா, ஓடர ப்ளேன்லயிருந்து இப்பத்தான் மொத தடவ எறங்கறேன். அந்த திகிலை சொல்ல வார்த்தையே இல்லை.
குப்புர பறக்கறேன். சைடா பறக்கறேன். நேரா பறக்கறேன்.
10 விநாடி இப்படி போவுது, ஒன்னியும் புரியல.
திடீர்னு ஸ்ட்ரெயிட்டா கடப்பார நீச்சல் அடிக்கர மாதிரி பறக்கறேன். எனக்கு நேரா என் ஃபோட்டோகிராஃபர், எனக்கு முன்னாடி குதிச்சவரு, ஏதோ எதிர் நீச்சல் போட்டு என்னை தேடி வர மாதிரி, எனக்கு முன்னாடி மெதக்கறாரு. நானும், உள்ளூர இருக்கர கிலியெல்லாம் வெளீல காட்டாம, ஈன்னு பல்ல இளிச்சுக்கினு போஸ் கொடுத்தேன்.
ஜான், வலது கைய லேசா இப்படி ஆட்டினா, ரங்க ராட்டினம் கணக்கா சுத்தறோம். எடது கைய இப்படி மடிச்சா விஷ்ஷ்ஷுனு ஒரு பக்கமா திரும்பறோம். முப்பது விநாடிகள் இப்படி பிரமாதமா போச்சு.
அப்பாலிக்கா, ஜான் ஃபோட்டோகிராஃபைரை பாத்து திரும்ப கட்டை விரலை உயர்த்தினாரு.
ஏதோ விபரீதம் நடக்கப் போவுதுடோய்ன்னு நெனச்சுக்கிட்டே இருக்கும்போது, திடீர்னு ஒரு முப்பது அடி மேல யாரோ பிடிச்சு தூக்கி விட்ட மாதிரி இருந்துச்சு.
பாத்தா, ஜான், பாராஷூட்டை தொறந்து விட்டுட்டாரு. காத்துல அது சிலுப்பிக்கிட்டு எங்கள மேல இஸ்துக்கினு போச்சு. அப்பரம், ஜான், அதன் கயிறை புடிச்சு கட்டுப் படுத்தி, காத்தாடி மாதிரி எறக்கிக்கிட்டே வந்தாரு.
அடேங்கப்பா, அந்த மெதக்கும் அனுபவத்துக்கு, $200 தாராளமா கொடுத்திடலாம்.
இதற்கிடையில், ஃபோட்டோகிராஃபரும், பாராஷூட்டை தொறந்துக்கிட்டு வேகமா எறங்கிட்டாரு.
நாங்க தரைய தொடரதுக்குள்ள அவரு தரைய தொட்டு, போட்டொ புடிக்க ரெடியாயிட்டாரு.
வட்டம் அடிச்சு, ஆடி அசஞ்சு, ஜான் மெதுவா தரையில் எறங்கினாரு. லேசா குதிக்கர மாதிரி கூட ஒரு அதிர்வு இல்லை. பஞ்சு மேல எறங்கிர மாதிரி தரையில காலைப் பதிக்க எதம் பதமா எறக்கி விட்டாரு.
இறங்கியதும், வழக்கமான வீடியோக்காரரின் கேள்விகளுக்கு, திகில் காட்டாமல் பதிலளித்து, எனது வானத்துக் கரணத்தை (sky diving) இனிதே நிறைவு செய்தேன்.
சூப்பர் அனுபவம்.
செஞ்சு பாக்கர ப்ராப்தி இருக்கரவங்க, கண்டிப்பா செஞ்சு பாருங்க. ஜஸ்ட் $200 குதிக்க + $100 படம் புடிக்க + $ப்ரைஸ்லஸ் அனுபவம்.
அடுத்த டெரர் என்னா பண்ணலாம்னு ஒரே ரோசனை. எனி டிப்பு?
இது நானும் ஜானும் பாசப் பிணைப்புடன் குதித்த காட்சி. வாழ்க ஜான்! வாழ்க வாழ்க!
இது பாராஷூட் தொறக்கும் போது புடிச்ச படம்:
வாக்க மறவாதீர்கள். தமிழ்மணம் ரியல் எஸ்டேட் ரொம்ப காஸ்ட்லியாயிட்டே இருக்கு. நீங்க வாக்குனாதான் என் வீர தீர ப்ரதாபங்கள் அநேகம் டமில் நெஞ்சகளை சென்றடையும். வாக்கு வாக்கு! :)
25 comments:
வாவ்!அசத்திட்டீங்க சர்வேசன்.மயிர் கூச்செரியும் அனுபவமா இருந்திருக்கும் இல்லே?
சூப்ப்ர்ப்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்ங்க.. சர்வேசன்..
பாஸ் சொல்றப்பவே திக் திக்க்ன்னு இருக்குதே பட் நீங்க நொம்ப்ப்ப்ப தைரியசாலிதான் !
சூப்பரூ!
அந்த வீடியோவத்தான் போடலாம்ல:)))
PremG,
//வாவ்!அசத்திட்டீங்க சர்வேசன்.// danks!
//மயிர் கூச்செரியும் அனுபவமா இருந்திருக்கும் இல்லே?//
absolutely. கன்னா பின்னா அனுபவமா இருந்துச்சு ;)
Cable Sankar, நன்னி. எல்லாம் ஒரு குருட்டு தெகிரியம்தான் :)
ஆயில்யன்,
///சூப்பரூ!///
நன்றீஸ்!
/// அந்த வீடியோவத்தான் போடலாம்ல:))) ///
போடலாம்தான். எதுக்கு எல்லாரையும் ஓவரா டெரர் பண்ணணும்னுதான்ன் வுட்டுட்டேன் ;)
யப்பா படிக்கும் போதுதே செமயாக இருக்கு...ம்ம்ம்..கலக்குங்க தல ;)
நன்றி கோபிநாத்.
உங்கள் வருகையை நினைவு கூறும் வகையில் இன்னொரு படம் சேத்திருக்கேன் :)
என்ன ஸ்கைடைவிங் க்லோஸ் ஷாட்ச்லாம் இல்லயா! உங்களோட அந்த அழகான சிரிப்ப பாக்கனுமே!
இதெல்லாம் நெஜமா? இல்ல் அந்த எட்டு மாதிரியா?!
//////
அடுத்த டெரர் என்னா பண்ணலாம்னு ஒரே ரோசனை. எனி டிப்பு?
///////
டிப்பு 01:
’டோண்டு’ பதிவில்... ஒரு பின்னூட்டம் போடுங்களேன்! பாராசூட் இல்லாமலேயே குதிச்ச மாதிரியான அனுபவம் கிடைக்கலாம் (திரும்பவும்)! :) :) :)
வாழ்ந்துட்டீங்க பாஸ்
தலைவா பின்னி பெடல் எட்துடிங்க போங்க...செம வாழ்க்க
pappu,
///என்ன ஸ்கைடைவிங் க்லோஸ் ஷாட்ச்லாம் இல்லயா! உங்களோட அந்த அழகான சிரிப்ப பாக்கனுமே!//
kuttu velippattudume ;)
///இதெல்லாம் நெஜமா? இல்ல் அந்த எட்டு///
agmark nejam :)
ஹாலிவுட் பாலா,
////டிப்பு 01:
’டோண்டு’ பதிவில்... ஒரு பின்னூட்டம் போடுங்களேன்! பாராசூட் இல்லாமலேயே குதிச்ச மாதிரியான அனுபவம்///
andha anubavam ellaam pona varushame senju paathaachu. adhellaam pathaadhu. chappunu aayiduchu ippa ;)
Truth,Kiruthiga,
Danks!!! :)
sollave illa.. ippathaan parthen (padichen) !! edho naane kuthicha mathiri irundhudhu.. !! very nice narration !!
பாவக்காய், நன்னி!
சொன்னே. நீங்க தான் கண்டுக்கல. அதான், திரும்ப சொன்னேன் ;)
தில் தில் :)
ரிஸ்க் எடுப்பதென்பது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நிரூபிச்சுட்டீங்க:)!
பாசகி, டாங்க்ஸ்! :)
ராமலக்ஷ்மி, ofcourse ;)
ஆமா, ரொம்ப நாளா காணுமே? பிஜியா?
ஆமாம், ஒருமாதத்துக்கு மேலாக பதிவுலகம் பக்கம் அதிகம் வரவில்லை. விசாரிப்புக்கு நன்றி.
அட..!!! கலக்கிட்டீங்க.. வாசிக்கும் போதே சுவாரஸ்யமா இருந்துது..
இதுக்கு $200, கொஞ்சம் கம்மியா தெரியுது நிறைய பேர் இப்படி குதிக்கிறாங்களோ..
சரி, நானும் சொல்லிக்கிறேன், ரவுடி தான்னு. ஓடற பஸ் / ட்ரெயின் ல ஏறுவது, ஒன்வேயில் எதிர் சைடில் வண்டியில் வருவது, ப்ளேன்ல இருந்து குதிப்பது, ஸ்ட்ராடோஸ்ஃபியர் ரைட், வேகஸ்ல கம்பியக் கட்டிட்டு ஜம்ப்... எல்லாம் ஆச்சு, பத்து வருஷம். பிள்ளைங்க பொறந்திட்டாங்க, இனி நல்ல அம்மாவா இருக்கணும்னு முடிவு.
இதில செம குஷி என்னன்னா: நம்மூர்ல, ஓடற பஸ்ல ஏறத் தெரியாத "பசங்க", பெண்ணாகிய நான் ஏறுவது, இடம் பிடிக்கிறது பார்த்து கடுப்பானது. கண்டக்டர் / பாட்டியம்மாக்கள்லாம் திட்டுவாங்க. அது கனாக்காலம். ஹ்ம்.
நீங்க விடியோ போட்டிருந்திருக்கலாம். பாராசூட் மேல போகும் போது ஜிவ்வ்வ்வ்வ்.
கையேடு,
////இதுக்கு $200, கொஞ்சம் கம்மியா தெரியுது நிறைய பேர் இப்படி குதிக்கிறாங்களோ..//
$200 கம்மிதான். ஒரு நாளைக்க்கு எப்படியும் அம்பது பேரு கிட்ட குதிக்கறாங்க.
கெக்கே பிக்குணி,
////ஒன்வேயில் எதிர் சைடில் வண்டியில் வருவது///
இது ஓவரு. செலவும் ஜாஸ்தி. $400 தீட்டிடுவாரே மாம்ஸ்?
///நீங்க விடியோ போட்டிருந்திருக்கலாம். பாராசூட் மேல போகும் போது ஜிவ்வ்வ்வ்வ்.///
ஆசைதான். ஆனா, ஒவ்வொரு ஃப்ரேமிலும் என் சர்வேசன் மண்டையை நுழைத்து எடிட் பண்ணுவது நெம்பக் கஷ்டம். :)
Post a Comment