recent posts...

Wednesday, November 12, 2008

Mungaru Male ~ சலனசித்ர சர்ச்சே!

நமஸ்காரா. Baன்னி.
எங்கிதியா? சென்னாகித்தியா?

ஹிஹி. என் கன்னட அறிவு இத்தோட முடிஞ்சுடுது. 'சலனசித்ர சர்ச்சே'யெல்லாம் கூகிள் ஆண்டவரோட துணையில் பேத்தெடுத்தது. திரைப்பார்வையின் கன்னட ஆக்கமே அது.

என்னடா திடீர்னு கன்னடத்துக்கு தாவிட்டேனேன்னு பாக்கறீங்களா?
ஏற்கனவே சொன்ன, ஓசித் திரைப்பட வரிசையில், ஏகன், குசேலனைத் தொடர்ந்து நான் பார்த்த மூன்றாவது படம், முங்காரு மலே ( ழ இல்லியா கன்னடத்துல? என்ன கொடுமைங்க இது?) என்ற கன்னடிகா படம்.

திருவாளர்.Karthick Krishnaவின் பரிந்துரையால், அப்படி என்னதான் பெரிய தாக்கத்த உண்டு பண்ணிடுச்சு இந்த படம்னு பாக்க முடிவு பண்னி தியேட்டருக்கு போனேன்.

'முங்காரு மலே'ன்னா, monsoon rain, அதனால, படம் முழுக்க மழை கொட்டிக்கிட்டே இருக்கும். படம் எடுக்கப்பட்ட இடம், கர்நாடகாவில் உள்ள Malnad என்ற ஊராம்.
சும்மா, நச்சுனு இருக்கு ஊரு. பச்ச பசேல்னு, நீர்வீழ்ச்சியும், ஏரிகளும், மலைகளும் நிறைந்து கண்ணுக்கு குளிற்சியா இருக்கு. பாக்க வேண்டிய இடம்.

இந்த ஊர்லதான், ஹீரோவும் அவங்க அம்மாவும், ஹீரோ அம்மாவுடைய பழைய ஃப்ரெண்டின் பொண்ணு கல்யாணத்துக்கு வருவாங்க.
ஹீரோ, ஹீரொயின ஏற்கனவே பாத்திருப்பாரு. அப்பவே மனசுக்குள்ள அவருக்கு ஒரு இது வந்துடும்.
கல்யாண வீட்ல தங்கி, ஹீரோயின் மனசை மாத்தி காதலிக்க வெப்பாரு.
ஆனா, கடைசீல, இந்தக் கல்யாணம் நடக்கரது, ஹீரோயின் குடும்பத்துக்கு ரொம்ப அவசியம்னு புரிஞ்சதும், ஜகா வாங்கிட்டு போயிடூவாரு.
வழக்கமா நடக்கர Dilwale dulhaniya lejayenge முடிவு இல்லாமல், வித்யாசமான இந்த முடிவு பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

ரொம்ப சாதாரணமான படம். ஆனா, அருமையான ஒளிப்பதிவும், ரொம்பவே ரம்யமான இசை அமைப்பும், படத்தை தூக்கி நிறுத்துது.



ஹீரோ - கணேஷ். ஓஹோன்னெல்லாம் இல்லை. ஆனா, பரவால்லாம நடிச்சிருக்காரு. புரியாத பாஷையினாலான்னு தெரியலை. காமெடியெல்லாம் ரொம்ப சில்லியா இருக்கு. ஆனா, கன்னடர்கள், எல்லா சின்ன விஷயத்துக்கும் ரொம்பவே சிரிக்கராங்கய்யா.

ஹீரோயின் - செம டொக்கு. எனக்கு சுத்தமா பிடிக்கலை. படத்துக்கு மட்டும், S.M.Krishnaவின் பேத்திய (பொல்லாதவன் ஹீரோயின்) ஹீரோயினா போட்டிருந்தா, இன்னும் பெரிய ரவுண்டு வந்திருக்கும்.

ஹீரோயின் அப்பா - தெரிஞ்ச முகம். நிறைய கன்னட படத்துல பாத்திருக்கேன் இவர. பேரு, அனந்த் நாக். கச்சிதமா அடக்கமா நடிச்சிருந்தாரு.

தலைவலி தராத படத்தில் குட்டி குட்டி சிறப்பம்சங்கள் இருக்கு.
ஒரு வில்லன், ஹீரோயின் மேல இவருக்கும் ஒரு இது. அதனால, ஹீரோவையும், ஹீரோயினின் வருங்கால கணவனையும் அடிப்பாரு.
ஆனா, ஹீரோ, 'வில்லா, நீ என்ன அடிச்சது, ஹீரோயின் மேல் நீ வச்சிருக்கர காதல்னாலன்னு எனக்குத் தெரியும்'னு செண்ட்டி டயலாக் பேசியதும், வில்லனும் திரூந்திடுவாரு.
ரணகளம் இல்லாம, கதையை நம்பி எடுத்திருக்காங்க.
ஒரு முயலும், முக்கிய வேஷத்தில் நடிக்குது.

படத்துல, ஒரு அறுவி (jog falls) காட்டுவாங்க. யப்பா, கூடிய விரைவீல் பாக்க வேண்டிய சூப்பர் இடம் அது. கேமரா நல்லா படம் புடிச்சிருக்கு அந்த காட்சிகளை.

மொத்தத்தில், சாதாரணமான, நல்ல படம்.

கன்னடம் கொத்தினா, படத்தை நோடுங்க!

பர்லா!

Jog Falls! (Highest waterfall in India?)
படம் உதவி: metblogs.com

14 comments:

SurveySan said...

ஓசிப்படங்கள் முடிஞ்சுது.

இனி, வாரணம் ஆயிரத்துக்கு 12$ கொடுத்து போகலாமான்னு யாராவது பாத்துட்டு சொன்னா, போவேன் ;)

கோவி.கண்ணன் said...

//ஹீரோயின் - செம டொக்கு. எனக்கு சுத்தமா பிடிக்கலை. படத்துக்கு மட்டும், S.M.Krishnaவின் பேத்திய (பொல்லாதவன் ஹீரோயின்) ஹீரோயினா போட்டிருந்தா, இன்னும் பெரிய ரவுண்டு வந்திருக்கும்.//

குத்து ரம்யா என்றால் தெரியாதாக்கும் !
:)

SurveySan said...

கோவி, அவங்களுக்கு அப்படியொரு பேரு இருக்கா? ;)

வாரணம் ஆயிரத்துல அவிக தான் போலருக்கே? பாத்துடவேண்டியதுதான் ;)

கோவி.கண்ணன் said...

அவளு குத்து சலன சித்ரதள்ளி சிம்புத்தரம் ஜோடியாகி நடித்தவளு. அதே அவளன்ன பர்ஸ்டு முவி.

கொத்தாயித்தா ?

SurveySan said...

ஓஹோ.

ஆ, சிம்பு கொடுக்கா, பெத்த பெத்த மச்சகாரரூ.

காதுல பொக ஒச்சிந்தி ஹள்ளு ;)

Truth said...

//ழ இல்லியா கன்னடத்துல? என்ன கொடுமைங்க இது?

ஏங்க ழ தமிழ்ல மட்டும் தான் இருக்குனு தெரியாதா?
Mungaru Male இல்ல, அது முங்காரு மளே னு சொல்லலாம். தெலுகு படிக்கத் தெரியும்னால, கொஞ்சம் கன்னடமும் எனக்கு படிக்க தெரியும் :)

//Jog Falls! (Highest waterfall in India?)
Jog Falls, Karnataka (Gersoppa Falls )829 feet

Barehipani, Orissa 1308 feet around 400 mt

Courtesy - http://en.wikipedia.org/wiki/List_of_waterfalls_in_India


ஆக உருப்படியா ஒரு படமும் பாக்கல :)

கா.கி said...

//குத்து ரம்யா என்றால் தெரியாதாக்கும்//
அவுங்கள ரொம்ப குத்த வேணாம்னுதான் தன் பேர "திவ்யா ஸ்பந்தனா"னு மாத்தி ... வெச்சிகிட்டாங்க... அண்ட் அதான் her ஒரிஜினல் name :)

திவாண்ணா said...

//படத்துல, ஒரு *அறுவி* (jog falls) காட்டுவாங்க. யப்பா, கூடிய *விரைவீல்*//

என்ன கொடுமை சர்வே இது? கன்னட படம் பாத்தா தமிழ் மறந்து போகணுமா?

:-))))))))

தென்றல் said...

/ஓசிப்படங்கள் முடிஞ்சுது./

(புது)தியேட்டர் எப்படி இருக்கு?

SurveySan said...

truth,
//ஏங்க ழ தமிழ்ல மட்டும் தான் இருக்குனு தெரியாதா?///

appadiyaa? malayalam has it.

///ஆக உருப்படியா ஒரு படமும் பாக்கல :)////

:))), adhu inidhaan. either varanam aayiram or 007.

SurveySan said...

karthick,

///தன் பேர "திவ்யா ஸ்பந்தனா"னு மாத்தி ... வெச்சிகிட்டாங்க.../////

thanks for the education ;)

SurveySan said...

Diva,

///என்ன கொடுமை சர்வே இது? கன்னட படம் பாத்தா தமிழ் மறந்து போகணுமா?
////

in case if you havent noticed, i am, eppavum ippadidhaan ;)

SurveySan said...

thendral,


////(புது)தியேட்டர் எப்படி இருக்கு?////


pudhusu illa adhu. renovated old theater. but, it is good, comparatively.

திவாண்ணா said...

//in case if you havent noticed, i am, eppavum ippadidhaan ;)//

oh! sorry!
இது வரை சர்வேசன் பதிவுகள்லே இப்படி படிக்கலே!
அப்ப சரி! கருத்துக்கள் முக்கியம். என்ன இலக்கண தேர்வா எழுதறோம்?