recent posts...

Wednesday, November 26, 2008

Mumbai will survive

என்ன தான்டா வேணும் உங்களுக்குன்னு அலரணும் போல் தோணினாலும், சமீபத்தில் பார்த்த, மும்பை மேரி ஜான், ஆமிர், A wednesday, போன்ற படங்கள், இந்த குண்டு வெடிப்பை அணுகியிருந்த, மெச்சூர்ட் அப்ரோச்சினால், சத்தம் போடாம, மனசுக்குள்ளையே அந்த கேள்வியை கேட்டுக்கிட்டேன்.

2006ன் தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகு, மும்பை மக்கள் எப்படி, கொஞ்சம் கூட 'அசராமல்' தங்கள் நார்மல் வாழ்க்கையை நடத்தினார்கள்னு, மும்பை மேரி ஜான், சொல்லிச்சு.

ஆமிர், என்ற படம், ஒரு நல்ல இஸ்லாமியன் எப்படி, சில தீவிரவாதிகளிடம் சிக்கி, ஒரு பேருந்தில் வெடிகுண்டு வைக்க பணிக்கப்படுகிறான் என்று அலசியிருந்தது. இறுதியில், மனிதம் வென்றது. ஆமிர், பேருந்தில் குண்டு வைக்காமல், மனம் மாறி, குண்டை வெளியில் போட்டு, தானும் இறக்கிறான்.

A Wednesday, என்ற படத்தில் நஸ்ருதின் ஷா, ஒரு சாமான்யனுக்கு, நம்மைப் போல் வரும் எரிச்சலை வெளிப்படுத்துகிறார். என்ன மண்ணாங்கட்டி அரசாங்க, மிலிட்டரி, ரா, போலீஸு, லொட்டு லொசுக்கெல்லாம் இருந்து என்னாத்த கழட்டறாங்க. வேலை வாய்ப்பு, சாப்பாடு, அடிப்படை வசதி எல்லாம் செஞ்சுக் குடுக்கலன்னாலும் பரவால்ல, தலையெழுத்துன்னு விட்டுடலாம், ஆனா, குடிமகனின் உயிரை காப்பாத்த வக்கில்லாம இருந்தா என்ன பண்றது? கண்ட பரதேசியும், இந்த மாதிரி குண்டு வைத்து கொல்லவா, கனவுகளும், எதிர்பார்புகளுடனும் எல்லாரும் வளர்ராங்க? ஒவ்வொரூ நாளும், தன் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய், கணவனை அலுவலகத்துக்கு அனுப்பும் மனைவி, சென்றவர் திரும்பி வருவாரா என்ற நிச்சயம் இல்லாமல் வாழ்தல் கொடுமை இல்லியா?
சாமான்யன் எரிச்சலடைந்தால், என்னாகும்? நஸ்ருதின் ஷா, நச்னு சில விஷயங்கள் செஞ்சு அசத்துவாரு.

மும்பை, அருமையான நகரம்.
ஒரு மாசம் அங்க வேலை செஞ்சிருக்கேன். சில வங்கிகளில் வேலை. அருமையான ஒரு மாதம் அது. தினமும் ராத்திரி, Gateway அருகில் நடந்து, சோளமும், கடலையும் கொரித்தது, சிறுவர் முதல் பெரியவர் வரை, அங்கே ஜாகிங் வருவது, வேடிக்கை பார்த்தல், எல்லாம் ஜாலியான நாட்கள்.
சுறுசுறுப்பானவங்க பாம்பே காரங்க.
டிசிப்ளின் ஜாஸ்தி. மாநில பேருந்தில் பயணிக்க, எவ்ளோ கூட்டம் இருந்தாலும், க்யூல நிப்பாங்க. அதட்டி க்யூல நிக்க வைக்க போலீஸெல்லாம் இருக்க மாட்டாங்க, இவங்களே, தானா பெரிய க்யூல நிப்பாங்க. பஸ் வந்ததும், ஸ்கூல் பசங்க மாதிரி ஏறுவாங்க.
வங்கி சீஃப் மேனேஜர் முதல், ப்யூன் வரை, ரயிலை பயன் படுத்துவார்கள்.

மும்பையில் மீண்டும், விஷமிகளின் ஆட்டம் நடந்திருக்கிறது.
எப்பவுமே, குண்டு வச்சுட்டு, எஸ்கேப் ஆகர வீரர்கள், இம்முறை, ஏ.கே47 எல்லாம் தூக்கிக்கிட்டு பலரை சுட்டுருக்காங்க.

இதுக்கெல்லாம் அரசாங்கம் என்ன பண்ண முடியும்?

சில கழிசடைகள், ஏ.கே47 எல்லாம் வச்சுக்கிட்டு, மற கழண்டு இப்படி செய்தால், இதை எல்லாம் தடுக்க முடியுமா என்ன?

மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், தானே புத்தி வந்து, திருந்தினாதான் உண்டு.

ஆனா, எவ்வளவு விஷமிகள் வந்தாலும், குண்டுகளைப் போட்டாலும், மும்பை அசராது.
அது தன் வழியில், சென்று கொண்டேதான் இருக்கும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனிதச்சங்கிளியும், மௌன ஊர்வலங்களும், அவசியம்.

அப்பதான், வெளி உலகுக்கும், இந்த பேடிகளுக்கும், புரியும், we will surviveனு.

ஜெய்ஹிந்த்!



:(

28 comments:

சதங்கா (Sathanga) said...

என்னத்த சொல்ல ... :((( இங்க சி.என்.என் பார்த்திட்டு இருக்கோம். கட்டிடடம் பற்றி எறிவதையும், மக்களின் பதைபதைப்பையும் பார்த்து, அங்கமெல்லாம் பற்றி எறிகிறது ...

SurveySan said...

தீவிரவாதிகள் தொல்லை பாக்கிஸ்தானுக்கும் உண்டு. அங்கேயும், 16 பேர் சமீபத்தில் இறந்திருக்காங்க.

கேடுகெட்ட தாலீபான், இன்னும் அழியாதது, மிகக் கொடுமை.

அமெரிக்க மேதாவிகள், வேரோடு தாலிபானை பெயர்த்து எடுக்காமல், இராக்குக்கு போன முட்டாள்தனம், பல வருஷங்களுக்கு வாட்டப் போவுது.

http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080068325&ch=633633689333145000

SurveySan said...

Delhi குண்டு வெடிப்புக்கு, மன்மோகன் சொன்னது,

Condemning Saturday's Delhi blast, Prime Minister Manmohan Singh called for strengthening of intelligence and investigative processes to deal with such incidents.

"Delhi blasts have proved we must strengthen intelligence gathering and prosecution process. We cannot give up the war against terror; we have to fight it resolutely," he said.

இப்படியே சொல்லிக்கிட்டே இருங்கடா, வெளங்கிடும்.
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080067003&ch=633633691201738750

நண்பன் said...
This comment has been removed by the author.
SurveySan said...

//எத்தனை கோபம் என்றாலும், முன்னறிந்து தடுக்கத் தவறி விட்டார்கள் என்ற குற்றத்தை - இந்த வீரர்கள் மீது சுமத்துவது எந்த விதத்திலும் உடன்பாடற்ற ஒரு செயல். //

குற்றம் கமேண்டோஸ் மேல் இல்லை, நம் தலைவர்கள் மேல் தான் உள்ளது.

எல்லா சம்பவத்துக்கும், ரெடிமேட் மெசேஜ் சொல்லிட்டு, அடுத்த வேலைய பாக்க போயிடறாங்க. மாறணும்.

நண்பன் said...

மும்பை ஒரூ ஃபீனிக்ஸ் பறவை போல, ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னும் உயிர்த்தெழும்.

இரவு முழுக்க விழித்திருந்து பார்த்த பொழுது - போலிஸும், தீயணைப்பு வீரர்களும், ராணுவமும், கம்மோண்டோஸ், கடற்படையினரில் ஒரு பிரிவு என பெரும் படையினர் இறக்கி விடப்பட்டிருந்ததையும், அவர்கள் பணியில் ஈடுபட்ட விதத்தையும்,

எந்த ஒரு நேர்மையான யுத்தத்திற்கும் தயாரில்லாமல், காட்டுமிராண்டிகளைப் போல் சுட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளைப் பார்த்த பொழுது, மரணத்தை எதிர்நோக்கும் பாதுகாப்பு படையினரின் பணியை எண்ணி ஒரு நிமிடம் கண்களில் நீர் பனிக்கத் தான் செய்கிறது.

எத்தனை கோபம் என்றாலும், முன்னறிந்து தடுக்கத் தவறி விட்டார்கள் என்ற குற்றத்தை - இந்த வீரர்கள் மீது சுமத்துவது எந்த விதத்திலும் உடன்பாடற்ற ஒரு செயல்.

அவர்கள் பணியை நன்றியுடன் அனைத்து இந்தியர்களும் நோக்க வேண்டும்.

உங்களுடன் இணைந்து -

ஜெய் ஹிந்த்!

நண்பன் said...

சர்வேசன்,

சிறிய பிழை - அவர்களை, அவர்களை என்று இருதரப்பையும் பொதுவான வார்த்தைகளால் குறிப்பிட்டது.

திருத்தி எழுதி விட்டேன்.

கிரி said...

//எத்தனை கோபம் என்றாலும், முன்னறிந்து தடுக்கத் தவறி விட்டார்கள் என்ற குற்றத்தை - இந்த வீரர்கள் மீது சுமத்துவது எந்த விதத்திலும் உடன்பாடற்ற ஒரு செயல்//

உளவு துறை என்ற அமைப்பு அதற்காக தான் செயல்பட்டு வருகிறது.

//இதுக்கெல்லாம் அரசாங்கம் என்ன பண்ண முடியும்?//

மக்கள் மீது அக்கறை இல்லாமல் தங்கள் ஆட்சியை பற்றி கவலை பட்டு கொண்டு இருந்தால் இதை போல தான் நடக்கும். மக்களை காப்பாற்றுவது தானே அரசாங்கத்தின் வேலை, அரசாங்கம் என்ன பண்ண முடியும் என்று சொல்ல அரசாங்கம் தேவையில்லையே!

எப்படி கட்டுப்பாடுகள் இருந்தாலும் இதை போல நடக்கும் ஆனால் இதை போல நடப்பவைகளின் எண்ணிக்கையையாவது குறைக்கலாம் அல்லவா!

பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் வேலையை சரிவர செய்தாலே இதை போல குண்டுவெடிப்புகள் நடக்காது அல்லது குறையும்.

யாரை குறை கூறி என்ன பயன், பலர் இறந்து விட்டார்களே!

நீங்கள் கூறியது போல "எவ்வளவு விஷமிகள் வந்தாலும், குண்டுகளைப் போட்டாலும், மும்பை அசராது. அது தன் வழியில், சென்று கொண்டேதான் இருக்கும்"

ராமலக்ஷ்மி said...

எப்போ எங்கே என்ன அசம்பாவிதம் நடக்குமோ என்கிற மாதிரி ஆகிவிட்டது நாட்டின் நிலைமை.

//சில கழிசடைகள், ஏ.கே47 எல்லாம் வச்சுக்கிட்டு, மற கழண்டு இப்படி செய்தால், இதை எல்லாம் தடுக்க முடியுமா என்ன?//

சமீபத்தில்தான் ’ஹேராம்’ டிவியில் பார்க்க வாய்த்தது. அந்தப் படத்தை விட்டு விட்டீர்களே. அதில் கமல் மனம் மாறும் காட்சிகள் நல்ல மெசேஜ். அதையெல்லாம் இவர்கள் பார்ப்பார்களா என்ன?

நானும் இருந்திருக்கிறேன் மும்பைக்கு அடுத்த ‘தானே’யில் ஒன்றரை வருடம். வீக் என்டில் கேட்வே மாலை நேரங்கள் இதமானவை. மறக்க முடியாதவை.

ராமலக்ஷ்மி said...

//யாரை குறை கூறி என்ன பயன், பலர் இறந்து விட்டார்களே!//

கிரி சொல்வதும் சரி:(!

வல்லிசிம்ஹன் said...

இரவு படுக்கப் போகும்போது இந்தச் செய்தி. என்னடாவந்தது நம்ம ஊருக்கு. எந்தப் பாவி இப்படி அலைக்கழிக்கிறான் மக்களைனு தெரியலையேன்னு பத்றுகிறது.

எப்போதான் வீடியும்.???
ஜெய் ஹிந்த்.

SurveySan said...

நண்பன்,

////சிறிய பிழை - அவர்களை, அவர்களை என்று இருதரப்பையும் பொதுவான வார்த்தைகளால் குறிப்பிட்டது.
///

நன்றி!

SurveySan said...

கிரி,

///அரசாங்கம் என்ன பண்ண முடியும் என்று சொல்ல அரசாங்கம் தேவையில்லையே!///

மிகச் சரி. ஆனா, துப்பாக்கி உள்ள வரதையெல்லாம் தடுப்பது ரொம்ப சிரமம்.
இதை நிறுத்தணும்னா, தண்டனை அதிகமாக்கணும். தீவிரவாதிக்க மட்டுமல்ல (அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க), உடனிருப்பவர்களூக்கும் உதவுபவர்களுக்கும்.

SurveySan said...

///கமல் மனம் மாறும் காட்சிகள் நல்ல மெசேஜ். அதையெல்லாம் இவர்கள் பார்ப்பார்களா என்ன?///

கமல், காந்தியப் பாத்து மனம் மாறுனாரு.

மன்மோகன் சிங்க பாத்தா, மனமாற்றம் எல்லாம் வருமா என்ன? :(

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

//எப்போதான் வீடியும்.???//

இப்போதைக்கில்ல.

இங்கே, ஒபாமா, வந்து இராக்கில் ஆட்டத்தை நிறுத்தி, தாலிபான் மேல் அதிக கவனம் செலுத்தி, பாக்கியில் இருக்கும் சிலதுகளை பிடித்தால், மெதுவாய் விடிவு பிறக்கலாம்.

Radha Sriram said...

மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு.மும்பைல இருக்கற உறவுகள் கிட்டெல்லாம் ஃபோன் பேச்சியாச்சு.அந்த சிடியோட காரெக்டெரே கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டு வரத பத்தி ரொம்ப வருத்தப்பட்டாங்க.:-(
என்னவோ போங்க.........

SurveySan said...

ராதா,

///அந்த சிடியோட காரெக்டெரே கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டு வரத பத்தி ரொம்ப வருத்தப்பட்டாங்க.:-(
///

ஹ்ம். சோகம்தான். :(

SurveySan said...

அனைவருக்கும், 'நன்றி நவில்தல் வார' வாழ்த்துக்கள்.

என்ஸாய் மாடி. மூணு நாளைக்கு நான் எஸ்கேப்.


மும்பைல 100 பேர் காலி, ஊரே அல்லோலப் படுது, ஆனாலும், நம்ம தேவைகளை, நார்மலா, நிறைவேத்திக்கறோம், ஒண்ணுமே நடக்காத மாதிரி.

இதனால்தான், இந்த குற்றங்களெல்லாம், குறையாமல் தொடருதோ? :(

சீ யூ ஆன் மண்டே!

ராமலக்ஷ்மி said...

//கமல், காந்தியப் பாத்து மனம் மாறுனாரு.//

காந்தியைப் பார்க்கும் முன்னரே ஷாருக்கானுடனான காட்சிகளிலேயே மனமாற்றம் தொடங்கி விடுவதாகத்தான் ஞாபகம்.

//மன்மோகன் சிங்க பாத்தா, மனமாற்றம் எல்லாம் வருமா என்ன? :(//

அதென்னவோ உண்மை.

//அனைவருக்கும், 'நன்றி நவில்தல் வார' வாழ்த்துக்கள்.//

அப்போ நானும் நன்றி சொல்லிக்கறேன் இந்தப் பதிவின் முதல் வரிக்கு. மேல் விவரம்:
‘என்னதான் வேண்டும் உமக்கு?’
http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html

//மூணு நாளைக்கு நான் எஸ்கேப்.
சீ யூ ஆன் மண்டே!//

வந்துதான் பாருங்கள். அவசரமில்லை. அதற்குள் மாட்டியிருப்பவர்கள் நல்லபடியாக வெளிவருவார்கள் என நம்புவோம்.

Bleachingpowder said...

//என்ஸாய் மாடி. மூணு நாளைக்கு நான் எஸ்கேப்.//

Thanks giving day shopping ஆ.. என்ஜாய் :)) பத்து மணிக்குள்ள் பில் பண்ணினா 70 % தள்ளுபடினு போர்டை பார்த்து அடிச்சு புடிச்சு ஒரு ஜீன்ஸை தூக்கி தோள்ல போட்டுட்டு க்யுவில் நின்னா, எவனோ ஒருத்தன் தோள்ல இருந்த ஜீன்ஸை உருவிட்டு போயிட்டான் :((.

உங்களுக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் அமைய வாழ்த்துகள் :))

VANJOOR said...

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

EVEN IF THOSE BEASTS ARE MUSLIMS OR MUSLIM NAME CARRIERS OR FROM WHICHEVER RELIGION THEY BELONGS.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்

நானானி said...

என்னாத்த சொல்ல..?ஒவ்வொரு முறையும் கேக்கும் போதும் பாக்கும் போதும் மனம் வலிக்கத்தான் செய்கிறது.
துணிந்து இவர்களை அடக்க நமக்கொரு நல்ல, துணிச்சலான தலைவன் என்று கை காட்ட கைக்கெட்டிய தூரத்தில் (கைக்கெட்டாத தூரத்திலும்)யாருமில்லையே? இந்திராகாந்தியை நினைத்து மனம் ஏங்குகிறது.

குடுகுடுப்பை said...

மும்பை வாழும்.மாதா மாதாம் குண்டு வெடிச்சா என்ன பண்ரது.

SurveySan said...

ராமலக்ஷ்மி,

////அப்போ நானும் நன்றி சொல்லிக்கறேன் இந்தப் பதிவின் முதல் வரிக்கு. மேல் விவரம்:
‘என்னதான் வேண்டும் உமக்கு?’
http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html////

கவிதைக்கு வரி எடுத்துக் குடுத்துட்டனா? நன்றி :)
அருமையா பயன்படுத்தி சூப்பர் கவிதை தந்ததுக்கு.

SurveySan said...

bleachingpowder,

///உங்களுக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் அமைய வாழ்த்துகள் :))///

எக்கானமி போர நெலமைல, ஷாப்பிங் எல்லாம் ரொம்ப பண்னல. ஊர் சுத்தியதோட சரி ;)

SurveySan said...

வாஞ்சூர்,

/////EVEN IF THOSE BEASTS ARE MUSLIMS OR MUSLIM NAME CARRIERS OR FROM WHICHEVER RELIGION THEY BELONGS./////

atleast this time, there is no doubt that the terrorists operated out of pakistan. :(

SurveySan said...

நானானி,

////துணிந்து இவர்களை அடக்க நமக்கொரு நல்ல, துணிச்சலான தலைவன் என்று கை காட்ட கைக்கெட்டிய தூரத்தில் (கைக்கெட்டாத தூரத்திலும்)யாருமில்லையே? ////

மிகச் சரி. அதுதான் மிஸ்ஸிங்!

ஆனா, துணிச்சலானவங்களும், மதச்சார்பற்று கிடைப்பது மிக அரிதான காரியம்.

SurveySan said...

குடுகுடுப்பை,

///மும்பை வாழும்.மாதா மாதாம் குண்டு வெடிச்சா என்ன பண்ரது.////

அப்பவும் வாழும்.